Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு ´இராணுவ மேதை´- எரிக் சொல்ஹேம்

Featured Replies

இலங்கையில் 2002ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் சமாதான

உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன் இந்திய அரசாங்கத்தின் முக்கிய தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு காலத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஏற்பட நோர்வே மத்தியஸ்த்தம் வகித்ததோடு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது.

1992ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து சுமார் 9 வருடங்களின் பின் இந்திய அரச அதிகாரிகள் விடுதலைப் புலிகளுடன் இரகசிய சந்திப்பு நடத்தியதாக எரிக் சொல்ஹேம் கூறியுள்ளார்.

ஆனால் குறித்த சந்திப்பு எங்கு நடந்து இந்திய தரப்பில் இருந்தும் புலிகள் தரப்பில் இருந்தும் யார் யார் பங்குபற்றினர் போன்ற விடயங்களை எரிக் சொல்ஹேம் வெளியிடவில்லை.

இலங்கையில் சமாதான உடன்படிக்கை ஏற்படவிருந்த காலத்தில் இந்தியா இரட்டை வேடம் பூண்டு செயற்பட்டதாக சொல்ஹேம் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

சமாதான உடன்படிக்கை காலப்பகுதியில் அப்போதைய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ரோ பிரிவு ஆகியன தன்னை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் 10 தடவைகள் சந்தித்துள்ளதாகவும் அவர் ஒரு ´இராணுவ மேதை´ எனவும் குறிப்பிட்டுள்ள எரிக் சொல்ஹேம், ரஜிவ் காந்தி கொலை வழங்கிற்கும் பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் என்டன் பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் 10 தடவைகள் சந்தித்துள்ளதாகவும் அவர் ஒரு ´இராணுவ மேதை´ எனவும் குறிப்பிட்டுள்ள எரிக் சொல்ஹேம், ரஜிவ் காந்தி கொலை வழங்கிற்கும் பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் என்டன் பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

போதிதர்மரைப் பற்றி இப்போது அறிந்துகொண்டுள்ளோம்..! தலைவருக்கு அவ்வளவு காலம் எடுக்காது..! :rolleyes:

டிஸ்கி: ராஜீவ் கொலைக்கும் தமக்கும் தொடர்பில்லை புலிகளே சொன்னார்களே.. நாம்தான் நம்பவில்லை..! :rolleyes:

ஆங்கிலத்தில் வேறுமாதிரி உள்ளதே ? தயவு செய்து இரண்டையும் இணைக்கவும்.

போர்நிறுத்தத்திற்கு முன்னர் இந்தியாவும், புலிகளும் இரகசியமாக சந்திப்பு! - எரிக் சொல்ஹெய்ம் செவ்வி!!

2002ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை இந்திய அதிகாரிகள் இரகசியமாக சந்தித்திருந்ததாக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும், அந்நாட்டின் சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து IANS ஊடகந்த்திற்கு செவ்வி வழங்கிய எரிக் சொல்ஹெய்ம், ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இவ்விரு தரப்பினருக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதில் இந்தியா முக்கிய பாத்திரம் வகித்ததாகக் கூறியுள்ளார்.

நோர்வேயால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை கடந்த 11ஆம் திகதி நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வைத்து வெளியிடப்பட்ட பின்னரே அவர் தனது அலுவலகத்தில் வைத்து IANS ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இவ்விரு தரப்பினருக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர், இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை இரகசியமாக சந்தித்ததாக குறிப்பிட்ட எரிக் சொல்ஹெய்ம், இச்சந்திப்புக் குறித்து மேலதிக விபரங்களை வெளியிட மறுத்து விட்டார்.

இத்தகவல் உண்மையாக இருந்தால், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டு, விடுதலைப் புலிகள் மீது 1992ஆம் ஆண்டு புதுடில்லி தடைவிதித்த பின்னர், இவ்விரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பாக இது இருக்கும் என IANS ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, இவ்விரு தரப்பினருக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் வரைபை வரைவதில் இந்தியாவில் அப்போது ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் பின்னணியில் முக்கிய பங்கு வகித்ததாகவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இவ்விரு தரப்பினரையும் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்க வைப்பது குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் RAW அதிகாரிகளுடன் தான் பலமுறை சந்தித்துப் பேசியதாகவும் குறிப்பிட்ட அவர், RAW அதிகாரிகளுடனான பெரும்பாலான சந்திப்புகள் புதுடில்லி விமான நிலையத்தில் இடம்பெற்றதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை, இவ்விரு தரப்பினருக்கும் இடையில் போரிநிறுத்த உடன்பாட்டினை ஏற்படுத்துவதில் RAWவின் தலையீடு தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டாம் என வேண்டப்பட்டால், இருதரப்பினருக்கும் இடையிலான இப்போர்நிறுத்த ஒப்பந்தம் நோர்வேயின் குழந்தையாகவே கருதப்பட்டது.

2001 - 2002ஆம் ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடியதாக கூறியுள்ள எரிக் சொல்ஹெய்ம், இவ்விகாரம் தொடர்பிலான ஒவ்வொரு நகர்வும் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் இந்தியா ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

அதேவளை, இலங்கையின் சமாதான முயற்சிகளில் வேறு பிரதான சர்வதேச சக்திகள் தொடர்புபடுவதை இந்தியா விரும்பவில்லை எனக் கூறியுள்ள எரிக் சொல்ஹெய்ம், இலங்கையின் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் எந்தெந்த நாடுகள் இடம்பெற வேண்டும் என்பதையும் இந்தியாவே பரிந்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை இரண்டாகப் பிளவுபடுத்தப்படுவதை கடுமையாக எதிர்த்த இந்தியா, தமிழீழத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்பதிலும் உறுதியாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2006ஆம் ஆண்டில் புற்றுநோயால் சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும் தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம், தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருந்ததுடன், அந்நாட்டின் நலன்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது எனக் கருதியிருந்ததாக எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 2001ஆம் ஆண்டு முதல் பத்துத் தடவைகளுக்கு மேல் தான் சந்தித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு படைத்துறை சார்ந்த நிபுணராக இருந்த போதிலும், சர்வதேச அரசியல் விவகாரங்களில் முழுமையான அனுபவங்களைக் கொண்டிருக்கவில்லை என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலைச் சம்பவத்துடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை என பிரபாகரனும், புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் தன்னிடம் வலியுறுத்தியதாக அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்டதாக எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார். ஆனால், அவர்களின் கூற்றை தான் நம்பவில்லை என்றும், அதன் பின்னர் தன்னிடம் பொய் சொல்வதை அவர்கள் நிறுத்திக் கொண்டதாகவும் அன்ரன் பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார் என IANS ஊடகம் தெரிவித்துள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=a9fc2f9f-0cdb-4ddf-b6fa-1dfde4d7f9cc

  • கருத்துக்கள உறவுகள்

சொல்கைமுக்கு ஞானம் பிறந்திருக்கு போல!!!.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்கைமுக்கு ஞானம் பிறந்திருக்கு போல!!!.

சுடலை ஞனம் பிறந்திருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்ஹெய்ம்

இவனுக்கு அப்போ பகல்லியே பசுமாடு தெரியல்ல.. இப்போ ராத்திரியில் எருமை மாடு தேடுறான் <_< <_<

  • கருத்துக்கள உறவுகள்

வீரன் என்று தெரிந்ததால்தான் கையைக்கட்டிப்போட்டுவிட்டு 10 பேரைச்சேர்ந்து அடிக்க வைத்தாரோ????

ஆங்கிலத்தில் வேறுமாதிரி உள்ளதே ? தயவு செய்து இரண்டையும் இணைக்கவும்.

India, LTTE met 'secretly' before Sri Lanka truce: Eric Solheim

Indian officials met in 'secret' with the LTTEahead of Sri Lanka's 2002 truce although New Delhi considered the Tamil Tigers a terrorist group, Norwegian cabinet minister Erik Solheim has revealed.

The former envoy to Sri Lanka also said - confirming for the first time ever an IANS report of 2008 - that India played a covert role in events that led to the Tamil Tigers and Colombo signing a ceasefire agreement (CFA) nine years ago.

The repository of tremendous information related to the Tamil Tigers, Solheim spoke at length to IANS at his office here after addressing a meeting over the weekend where a report was released on Norway's role in Sri Lanka's peace process.

According to Solheim, the minister for environment and international development, Indian officials held a 'secret meeting' with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) before the CFA was signed in February 2002.

Solheim declined to say where the meeting took place or who participated in the meeting from the two sides.

If true, this would be the first known meeting between Indian officials and the LTTE since New Delhi banned it in 1992 for assassinating former prime minister Rajiv Gandhi a year earlier.

Solheim also added that contrary to public knowledge, the Indian government, then led by the Bharatiya Janata Party (BJP), played a key behind-the-scenes role in the framing of the Norwegian-sponsored CFA.

He said he himself held several meetings with India's national security adviser and officials of the Indian intelligence agency Research and Analysis Wing (RAW) as Colombo and the LTTE inched towards the CFA.

He said some meetings with RAW officials took place at the New Delhi airport.

IANS had reported the Indian covert role but without naming RAW due to a request from sources who gave details of the intelligence agency's involvement in the CFA - which until then was seen as an exclusive Norwegian baby.

The CFA ushered in months of peace in Sri Lanka before falling apart. The LTTE and the Sri Lankan regime went to war again in 2006, leading to the decimation of the Tigers in May 2009.

Solheim told IANS that as Sri Lanka's and LTTE leaders quietly discussed the CFA in 2001-02, New Delhi was kept informed of each and every development. India, he said, gave 'sound advice' and 'constantly good and refreshing inputs'.

He said India did not want any 'major international player' to get involved in the peace process and even suggested which countries should be part of the Sri Lanka Monitoring Mission (SLMM), a Nordic body meant to oversee the CFA.

Indian officials made it clear to Solheim, he said, that they were bitterly opposed to any break up of Sri Lanka and that 'Tamil Eelam would never be acceptable'.

Solheim added that LTTE ideologue Anton Balasingham, who died of cancer in 2006, understood India's importance in the region and maintained that 'nothing done contrary to Indian interests will ever work'.

But LTTE chief Velupillai Prabhakaran, who met Solheim about 10 times in all, starting in 2001, was an 'absolute amateur' in international politics even though he was a 'military genius', the minister said.

Balasingham also complained to Solheim that both Prabhakaran and LTTE intelligence chief Pottu Amman insisted for months that their group had no role to play in Rajiv Gandhi's killing.

'They tried to convince Balasingham that they had nothing to do with it,' Solheim recalled. He quoted Balasingham as saying: 'I did not believe the story, and they eventually stopped lying to me.'

http://in.news.yahoo...-094245952.html

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கிலத்தில் வேறுமாதிரி உள்ளதே ? தயவு செய்து இரண்டையும் இணைக்கவும்.

அண்ணா லங்காசிறியிலை பார்த்திங்களோ???? :rolleyes::icon_idea:

பிரபாகரன் இராணுவ மேதையானாலும் சர்வதேச அரசியலில் கற்றுக்குட்டி! எரிக் சொல்ஹேய்ம்

பிரபாகரன் இராணுவ மேதையானாலும் சர்வதேச அரசியலில் கற்றுக்குட்டி! எரிக் சொல்ஹேய்ம்

[ ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011, 02:22.47 PM GMT ]

prapa-erik_001.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இராணுவ மேதையாக விளங்கிய போதிலும் சர்வதேச அரசியல் விவகாரத்தில் கற்றுக்குட்டி(அமெச்சூர்) என சொல்ஹேய்ம் தெரிவித்துள்ளார்.

அதே வேளை இந்தியப்பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை 2006ஆம் ஆண்டில் மறைந்த, தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் புரிந்து கொண்டிருந்ததாகவும் இந்தியாவுக்கெதிராக எதனையும் செய்ய முடியாது எனவும் செய்தால் அது பலனளிக்காது எனவும் அவர் கூறிச் சென்றதாகவும் சொல்ஹேய்ம் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ்கொலையில் தமக்கு பங்கில்லை என விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் பல மாதங்களாக கூறி வந்ததாக தன்னிடம் அன்டன் பாலசிங்கம் புகாரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இதில் தமக்குப் பங்கில்லை என அன்டன் பாலசிங்கத்தை அவர்கள் நம்பவைக்க முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன் அன்டன் பாலசிங்கம் அதனை நம்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எரிக் சொல்ஹேய்ம் பிரபாகரனை 2001ஆம் ஆண்டு முதல் 10 தடவைகள் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/view.php?232Z22DG3eCQlc2BI2dIL5b3jC24ap2029E2

இந்திய அமெரிக்க அரசுகள் பின்னால் இருந்து நோர்வே மூலம் நிகழ்த்திய சமாதானம் என்னும் சர்வதேசச் சதியை பிரபாகரன் உண்மை என்று நம்பியது அவரது தவறு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சகல நரிகளும், தாங்கள் நினைத்ததை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டபின், எதற்காக காலம் கடந்து இந்த உண்மைகளை வெளியில் விடுகின்றார்கள்?

இவர்களின் மனச்சாட்சி உறுத்தலாக இருக்காது! ஏனெனில் இவர்களிடம் அப்படி ஒன்று இருந்திருந்தால், இவ்வளவும் நடக்காது தவிர்த்திருக்கலாம்!

காலம் கடந்த நீதி கூட, எமக்குக் கிடைப்பதில் இவர்களுக்கு இன்னும் உடன்பாடு இல்லை!

இந்த உண்மைகள் வெளிப்படுத்தப் படுவதில், ஏதோ ஒரு உள் -நோக்கம் புதைந்து கிடக்கின்றது என்று தெளிவாகத் தெரிகின்றது!

அது தான் என்ன என்பது புரியவில்லை!

கொலைகாரர்களே மாவீரர்களுக்கு, மரியாதை செலுத்துகின்ற கலிகாலம் இது!

பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழனுக்கு வேறு எந்த வழியும், இப்போதைக்கு இருப்பதாகத் திரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமெரிக்க அரசுகள் பின்னால் இருந்து நோர்வே மூலம் நிகழ்த்திய சமாதானம் என்னும் சர்வதேசச் சதியை பிரபாகரன் உண்மை என்று நம்பியது அவரது தவறு தான்.

நந்தவனத்தில் இருந்தவர்களே அதை நம்பி இருக்கவில்லை.

பெரிய போர் ஒன்று வருகிறது என்றும் ........ எல்லாம் இடிந்து போகும் என்றும் சொன்னார்கள்.

நான் ஒரு ப்ராஜெக்ட் உடன் போய் இருந்தேன். கனடாவில் இருந்து ஒரு மருத்துவரும் அவர்களோடு கதைத்துகொண்டிருந்தார் ..........

அவர் சில மில்லியன் டாலர் ப்ராஜெக்ட் பற்றி பேசிகொண்டிருந்தார் ..... அதில் புலிகள் பங்கு கொள்ள கூடாது என்றும் அது ஒரு சாரிட்டி போல இருக்கவேண்டும் என்றும் கேட்டுகொண்டார் கனடாவில் புலிகளுக்கு இருக்கும் தடை தன்னையும் சிறையில் அடைக்கலம் ஆகவே அது ஒரு மக்களுக்கானதன ஒரு தோற்றம் நிச்சயம் வேண்டும் என்று கேட்டார்.

அப்போதுதான் அவர்கள் சொன்னார்கள் ...............

போரின் பின்பு வரும் அழிவில் இருந்து மீள பல கோடி தேவை. உங்களுடைய ப்ராஜெக்ட் இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னார்கள்.

அப்போ அவர் கேட்டார் ஏன் எழுந்த மாத்திரத்தில் எல்லாம் கட்ட படுகின்றது என்று?

அது எல்லாம் வெளிநாடு நிறுவனங்களும் தனியாரும் செய்கிறார்கள் அவையும் இப்போது தேவைதான் ............. என்றார்கள்.

அக மேலிடம் அதை நம்பியிருக்கும் என்று நான் நம்பவில்லை.

முள்ளிவாய்க்கால் இப்போதுதான் வந்தது ................... அனால் புலிகள் எத்தனையோ முள்ளிவைக்காலை கடந்தே வந்துள்ளார்கள். மாவீரரின் உயரிய தியாகம் அதை சமாளித்தது என்பதே உண்மை.

லிபெரசன் ஒபெறேசன் காலத்தில் புலிகள் மீண்டது எதிர்பார்க்காத ஒன்று அந்த காலத்தில் புலிகளில் இருந்த சாத்திரி இடம் கேட்டுபாருங்கள் அவர்களுடைய தியாகம் பற்றி சொல்லலாம்.

இதிய இராணுவம்........

இரண்டாம் கட்ட ஈழப்போர்...

எல்லாம் இப்படிதான்

பின்பு துரோகம் அளவின்றி போக எதிரி உண்மையை புரிந்து கொண்டான்.

எந்த இராணுவ வெற்றியையும் இறுதியில் அரசியல் வெற்றியாக்க வேண்டும், அதுவே இராணுவ நடவடிக்கையின் நோக்கம்.

அந்த வகையில் 2002 இல் புலிகள் தமது அன்றைய இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக்க புதுடெல்லியுடன் கூட பேசியுள்ளனர். ஆகவே அவர்கள் அரசியலை தெரிந்துதான் நடந்துள்ளனர். ஆனால் இந்தியா உட்பட்ட சர்வதேசம், சீனா / பாகிஸ்தானை தவிர்த்து, புலிகளை ஏமாற்றி, இன்று தாமே ஏமாந்துள்ளனர்.

இன்று மகிந்த கூட்டமும் 2009இல் பெற்ற இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக்க முடியாமல் உள்ளது. அதுவே அவர்களின் தோல்விக்கு வழிசமைக்கும். அதிலேயே எமது கவனமும் இருக்கவேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இராணுவ மேதையானாலும் சர்வதேச அரசியலில் கற்றுக்குட்டி! எரிக் சொல்ஹேய்ம்

சரி தலைவர் சர்வதேச அரசியலில் கற்றுக்குட்டி.. எல்லாம் தெரிந்த எரிக் இலங்கை, பாலஸ்தீன விவகாரங்களில் சறுக்கியது ஏனாம்? :rolleyes:

உண்மையில் தலைவர் தங்கள் எல்லோரையும் நட்டாற்றில் விட்டுவிட்டாரே என்கிற ஆதங்கம்தான் இவர்களை இப்படிப் பேச வைக்குது..! சீனாவுக்கு எதிரான leverage இல்லாமல் திண்டாடுகிறார்கள்..! :wub:

அமெரிக்கர்கள் தலைமையிலான மேற்குலகமும் கூட ஈராக் / அப்கானிஸ்தானில் பல த்ரிலியங்கள் டாலர்கள் பல இலட்சம் உயிர்களை இழந்து/அழித்து இராணுவ வெற்றியை பெற்றனர். ஆனால், மொத்தத்தில் தோல்வியில் முடிந்தது அவர்கள் முயற்சி. காரணம், அரசியல் வெற்றியாக்க முடியாத காரணமே.

ஒரு நியாயமான அரசியைக் தீர்வு கிடைக்கும்வரை இலங்கையிலும் சிங்களம் வென்றதாக கருதமுடியாது.

எந்த இராணுவ வெற்றியையும் இறுதியில் அரசியல் வெற்றியாக்க வேண்டும், அதுவே இராணுவ நடவடிக்கையின் நோக்கம்.

"War is the continuation politics by other means" என்று இதை தான் சொல்வார்கள்.

அண்ணா லங்காசிறியிலை பார்த்திங்களோ???? :rolleyes::icon_idea:

பிரபாகரன் இராணுவ மேதையானாலும் சர்வதேச அரசியலில் கற்றுக்குட்டி! எரிக் சொல்ஹேய்ம்

எல்லோரும் எல்லாவற்றிலும் சிறப்புத்தேர்ச்சி பெறமுடியாது. அந்த கட்டுரையின் இறுதிப் பகுதிதான் சற்று இடித்தது.

உலகமே திரண்டு (பல நாடுகள் வாழாவிருப்பதன் மூலம் )அழிப்பது என்று திட்டமிட்ட பிறகு சிறிய நிலப்பரப்பு கொண்ட எம்மை அழிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்.

லிபியா ஏழு மாதத்திற்குள் சுருண்டது.

இவ்வாறு நடக்கும் என்று தெரிந்து இருந்தால் அதற்குத் தகுந்தவாறு ஏன் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை?

அனைத்து வளங்களும் ஒரு முகப்படுத்தப்பட்டு எதிரியின் கையில் ஏன் ஒப்படைக்கப்பட்டன?

எதிரி ஓரளவு பரந்து இருந்த நிலையில் இருக்கும் போதே ஏன் முற்றுகையை உடைத்து வெளியேறவில்லை?

கடைசித் தருணம் வரை ஏன் வெளியில் இருந்து கப்பல் வந்து காப்பாற்றப்படுவோம் என்று கூறப்பட்டது?

இவை எதைச் சொல்ன்றன? வெளியார் பல உறுதி மொழிகளை வழங்கி, போராட்ட வளங்கள் சிதறடிக்கப்படாமால் ஒரு முகப்படுத்தப் பட்டு எதிரியின் வலைக்குள் வீழ்த்தப்பட்டதைச் சொல்லவிலையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள், தங்கள் தேசநலம் என்ற கண்ணாடிகளினூடு போராடங்களை பயங்கரவாதமாகவும், பயங்கரவாதங்களை போராட்டங்களாகவும் பார்த்து மகிழ்ந்த இவர்கள் போராளித் தலைமைகளின் திறமைக்கைகளுக்கு வேறு, சான்றிதழ்கள் கொகுக்கப்போகின்றார்களா? அதுமட்டும்தான் மனசாட்சி என்ற கண்ணாடினூடு நோக்கப் போகின்றார்களா?

வெறுங்கை பிசையும் மேற்குலக கவனான்கள் தம் மீசை மண்ணைத் தட்டிக் கொள்கின்றார்கள் என்றே இவற்றை நாம் கருத வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு நடக்கும் என்று தெரிந்து இருந்தால் அதற்குத் தகுந்தவாறு ஏன் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை?

அனைத்து வளங்களும் ஒரு முகப்படுத்தப்பட்டு எதிரியின் கையில் ஏன் ஒப்படைக்கப்பட்டன?

எதிரி ஓரளவு பரந்து இருந்த நிலையில் இருக்கும் போதே ஏன் முற்றுகையை உடைத்து வெளியேறவில்லை?

கடைசித் தருணம் வரை ஏன் வெளியில் இருந்து கப்பல் வந்து காப்பாற்றப்படுவோம் என்று கூறப்பட்டது?

இவை எதைச் சொல்ன்றன? வெளியார் பல உறுதி மொழிகளை வழங்கி, போராட்ட வளங்கள் சிதறடிக்கப்படாமால் ஒரு முகப்படுத்தப் பட்டு எதிரியின் வலைக்குள் வீழ்த்தப்பட்டதைச் சொல்லவிலையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமரிக்காவிற்காக வேலை செய்த நோர்வே ஏஜண்ட் தான் தோற்ற கதையை இந்தியாவின் தலையில் சுமத்த தூக்கத்தில் இருந்து விழித்து இருக்கிறார்.

அமெரிக்க கூட்டமைப்பு சந்திப்பு, நோர்வே இந்தியா மீது சாடல், கூட்டமைப்பு இந்தியா மீது சாடல், ஒரூ தொடர்பு நூலாக இணைகிறது, எந்த அரசியல் ஆரய்வாளர் கையில் இது மாட்டு பட போகிறதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு நடக்கும் என்று தெரிந்து இருந்தால் அதற்குத் தகுந்தவாறு ஏன் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை?

அனைத்து வளங்களும் ஒரு முகப்படுத்தப்பட்டு எதிரியின் கையில் ஏன் ஒப்படைக்கப்பட்டன?

எதிரி ஓரளவு பரந்து இருந்த நிலையில் இருக்கும் போதே ஏன் முற்றுகையை உடைத்து வெளியேறவில்லை?

கடைசித் தருணம் வரை ஏன் வெளியில் இருந்து கப்பல் வந்து காப்பாற்றப்படுவோம் என்று கூறப்பட்டது?

இவை எதைச் சொல்ன்றன? வெளியார் பல உறுதி மொழிகளை வழங்கி, போராட்ட வளங்கள் சிதறடிக்கப்படாமால் ஒரு முகப்படுத்தப் பட்டு எதிரியின் வலைக்குள் வீழ்த்தப்பட்டதைச் சொல்லவிலையா?

போர் தொடங்கும் முன்பே இதுதான் இறுதிப்போர் என்று புலிகளால் எவ்வாறு சொல்ல முடிந்தது? :rolleyes:

ஆயுதப்போராட்டத்திற்கு என்று ஒரு வீச்செல்லை இருக்கிறது. அதை 2002 ஆம் ஆண்டிலேயே அடைந்தாகிவிட்டது.

இன்றும் புலிகள் போராடிக்கொண்டிருப்பார்களானால் அதே பயங்கரவாதப் பல்லவி பலமட்டங்களிலும் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்..! இன்று அந்த இழை இல்லாததால் பலரும் திண்டாடுகிறார்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமரிக்காவிற்காக வேலை செய்த நோர்வே ஏஜண்ட் தான் தோற்ற கதையை இந்தியாவின் தலையில் சுமத்த தூக்கத்தில் இருந்து விழித்து இருக்கிறார்.

அமெரிக்க கூட்டமைப்பு சந்திப்பு, நோர்வே இந்தியா மீது சாடல், கூட்டமைப்பு இந்தியா மீது சாடல், ஒரூ தொடர்பு நூலாக இணைகிறது, எந்த அரசியல் ஆரய்வாளர் கையில் இது மாட்டு பட போகிறதோ தெரியவில்லை.

கூட்டமைப்பு எந்தப் பேய்க்குப் பின்னால் போனல் கூட மக்கள் பொறுமை காப்பார்கள் ஒரு வேளை சொர்கத்திற்கு தாம் அளைத்தும் செல்லப்படலாம் என்று. ஆனால் இந்தியாவுக்கு பின்னால் போனால் அது நரகத்தின் பாதை என்பது உடனே உறுதியாகிவிடும்! கூட்டமைப்பும் அடுத்த நொடியே தோத்த-அமைப்பு ஆகிவிடும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.