Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படிக்கும் அனுபவ பாட‌ங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரியவும் ஒரு கார்காரர் இருந்தவர், அவருக்கு பிறேமதாசவோ/ பண்டாவோ என்று பெயர். ஒரு பழைய A40 கார் வைத்திருந்தவர், அதில் அவர் குறைந்தது 10 / 15 பிள்ளைகளை ஆவது ஏற்றுவார். என்ன அப்படி போறவர்களும், டாக்டர், உத்தியோகத்தர்மாரின் பிள்ளைகள்தான், நாங்கள் பாட்டா செருப்போடு நடை ராசாதான். அவர் ஒவ்வொரு பிள்ளைகையும் காரில் ஏறுவது ஒருகலை. சிலவேளைகளில் அடியும் விழும். அப்ப சூட்கேசில் புத்தம் கொண்டுதியும் காலம், கார் டிக்கி முழுக்க புத்தகம்தான். பிறகு சில காலத்தில் மினிவான் காலம் வந்து விட்டது. அவருக்கு என்ன நடந்ததும் என்றும் நினைவில்லை.

ரதி தனது கதைகளை பகிந்து கொண்டது பழைய நினைவுகளை தட்டி சென்றது.

மணியனின் இலங்கை பயணம் வாசித்தவர்களுக்கு தெரியும் அந்த காலத்தில் கார் என்றால் என்ன? -அது A40 தான். அதன் வேறு வேறு பயன்கள் என்ன? அவர்ரிகுரிய சிறப்பு பெயர்கள் என்னவென்ன என, திருவிழாகார் சந்தைகார், கலியான கார்,மேளக்கார், ...... ஒரு தொகையான கார்கள், மறந்து போய்விட்டது, ஆனால் அவற்றில் நம்மாளின் பாடசாலைக்கார் இருந்ததாக ஞாபகம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பதிவை பதிந்து விட்டு, திரும்ப வாசிக்கும் போதுதான், என்னைபற்றிய சுயவிம்பம் தெரிகிறது, - வேறு ஆட்கள் சொல்லும் முன் முந்துவேமோ என்கிற பயமோ தெரியவில்லை.

முதல் வரியிலேயே, முரண்பாடுகள் தொடக்கி விட்டது, "பழையகார்" ஏன் அந்த சொல்லை பாவித்தேன் என்று யோசிக்கிறேன். என்னக்கு அந்த காலத்தில் அது ஒரு எட்டாத விடயம், இருந்தும் ஏன் அப்படி சொன்னேன் என்று பார்த்தல்- வெட்கத்தை விட்டால்- எட்டாபழம் புளிக்கும் நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

வல்கனோ மனச்சாட்சியோடு பேசுமு; பழக்கம் அதிகம் போல்இருக்கிறது... அதையும் இப்படி வெளிப்படையாக காட்டிக் கொள்வது எல்லோராலும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவை பதிந்து விட்டு, திரும்ப வாசிக்கும் போதுதான், என்னைபற்றிய சுயவிம்பம் தெரிகிறது, - வேறு ஆட்கள் சொல்லும் முன் முந்துவேமோ என்கிற பயமோ தெரியவில்லை.

முதல் வரியிலேயே, முரண்பாடுகள் தொடக்கி விட்டது, "பழையகார்" ஏன் அந்த சொல்லை பாவித்தேன் என்று யோசிக்கிறேன். என்னக்கு அந்த காலத்தில் அது ஒரு எட்டாத விடயம், இருந்தும் ஏன் அப்படி சொன்னேன் என்று பார்த்தல்- வெட்கத்தை விட்டால்- எட்டாபழம் புளிக்கும் நிலைதான்.

A40 அப்பவே பழைய கார்தானே..! :rolleyes: அப்ப 404, 504 தானே பிரபலமா இருந்தது?? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

A40 அப்பவே பழைய கார்தானே..! :rolleyes: அப்ப 404, 504 தானே பிரபலமா இருந்தது?? :wub:

எனக்கு பெரிதாக A404 , A504 , வித்தியாசம் தெரியாது. -எனது தாய்வழி/அம்மம்மா வழி (பெயர் போன) மெக்கானிக் குடும்பமாக இருந்தும், சிறியவயதிலேயே அந்த சுழலில் இருந்து விடுபட்டு விட்டோம். அம்மாவிற்கு என்னைவிட இவற்றை பற்றி தெரியும். ஆனால் நான் இருந்த இடத்தில்-அது ஒரு நகரமும் அல்ல கிராமமும் அல்ல, இரண்டும் கலந்த ஊர், A40 கனக்க இருந்தது.

பிறகு கொஞ்சம் வளந்த பிறகும், oxford க்கும் Farina க்கும் வித்தியாசமும் கொஞ்சம் மட்டு மட்டுத்தான். இப்ப இங்கே இருந்து நண்பர்களுடன் கதைக்கும் போது Camry luxuary இல்லை என்று சொன்னால், என்னை கேனையனா பார்க்கிறார்கள்.

என்னை பொறுத்த வரையில், பெரும்பாலான அடிப்படை விடயங்கள் அந்தக்கால கார்களிலும் உண்டு என்று சொல்லுவேன். இது பற்றி அறிந்தவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.

"மனச்சாட்சியோடு பேசுமு; பழக்கம் அதிகம் போல்இருக்கிறது"

இது ஒரு வகையான "sick role " எல்லோருக்கும் இருக்கு, பலரும் அதில் குளிர் காய்வது உண்டு. அதில் ஆழமாக செல்ல விருப்பமும் இல்லை, வசதியும் இல்லை. மன சாந்திக்காக புட்டபர்த்தி போவதோ, அல்லது ஓய்வு நேரத்தில் போராட்டம் பற்றி பேசுவது போன்றது. யாரையும் குறையாக சொல்லவில்லை. இதை கௌரவமாக பல பேர் கொண்டு அழைக்கலாம். அண்மையில் ஒருவர் , தான் வளர்த்த செல்லப்பிராணி இறந்தது மாற்றி, பல பேரிடம் சொல்லி திரிந்தார், எனக்கு என்னவோ "அவுட் ஒப் ப்ரோபோசானாய் ரியாக்ட்" பண்ணுவது போல இருந்தது. ஆனால், அது அவவை அந்தளவு தூரதிர்ற்கு பாதித்தும் இருக்கலாம்தானே? அவவுக்கு, எலியோ மூன்சூரோ, ஒரு பொழுதுபோக்கு/ ஒரு இளகிய மனம். அதை வைத்துகொண்டு எப்படி அவாவை ஒரு மிருக கானுன்யன் என்று அழைப்பது சரியோ/ பிழையோ அதே போலத்தான் என் நிலையும் இங்கே. எல்லோருக்கும் இருக்கு, அதை சொல்லும் விதமும், அதை வெளிகாட்ட கிடைக்கும் சந்தர்பங்கள் ஆளுக்கு ஆள் வேறுபாடும், அதை வைத்து நாங்கள் முடிவு செய்ய முடியாது.

ரதி அக்காவை காணவில்லை, லண்டனினும் வேற ஏதும் பக்கத்தாலே ஏறிப்போட்டாவே தெரியவில்லை. ;)

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்க்கையை மாற்றிய பயணத்தை பார்க்கும் முன்னர் சின்ன வயதில் நான் படித்த அனுபவ பாடத்தை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறேன்.

எங்கள் சின்ன வயசில அப்பாவுக்கு அனுராதபுரத்தில் வேலை.சிங்கள இடம் என்ட படியாலும்,தனிய இருந்தால் அப்பா காசை குடித்தே அழித்து விடுவார் என்பதாலும் நாங்கள் யாழ்ப்பாணத்தில் பிரபல்ய பாடசாலையில் படித்துக் கொண்டு இருந்ததாலும் என்னையும்,தம்பியையும் அம்மம்மாவுடன் விட்டு,விட்டு அம்மா அப்பாவோடயும்,மற்றத் தம்பியோடயும் அனுராதபுரம் போய் விட்டார்.

அந்த நேரம் நான் நடந்து தான் பள்ளிக் கூடம் போறது அம்மம்மாவின் வீட்டில் இருந்து போறது அவ்வளவு பெரிசாய் தூர‌மில்லை.சில நேரம் தனியாக போறது,சில நேரம் நண்பர்களுடன் பம்பலாய் கதைத்து கொண்டு போறது...எங்கள் பாட‌சாலை பழைய பூங்காவை[ஒல்ட் பார்க்] கட‌ந்து தான் போக வேண்டும் காலையில் பார்க்கில புலி அண்ணாமார் பயிற்சி செய்து கொண்டு இருப்பினம்.அந்த நேர‌ம் அது எங்களுக்கு அதிச‌யமாகவும்,கண் கொள்ளா காட்சியாகவும் இருக்கும் ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கிறதிற்காகவே காலையில் நேர‌த்தோடு எழும்பி பாட‌சாலைக்குப் போறது.

பாட‌சாலை விட்டு நண்பர்களோடு வீட்டை போகும் போது இல்லாத குளப்படி எல்லாம் செய்கிறது...சில வீடுகளில ஸ்டைலுக்காக கட்டையாக மதிலையும் கட்டி அதோடு சேர்த்து குரோட்டன் வளர்த்து வைத்திருப்பார்கள் எங்களுக்கு வேலை அதை முறிக்கிறது வீட்டுக்கார‌ர் கண்டு துர‌த்திச்சினம் என்டால் நாயை விட‌ விரைவாக ஓடுவது :lol: ,கள்ள மாங்காய் புடுங்குவது,றோட்டில புளிய மர‌த்தில புளியம்பழம்,நாவல் பழம் புடுங்குவது,பள்ளி விட்டால் றோட்டால நட‌ந்து போவதை விட‌ தண்ட வாளத்தில் நட‌ந்து போனதே அதிகம்...ம் அது ஒரு கனாக் காலம் அது திரும்பி வர‌ப் போவதில்லை :)

ஒரு தடவைஅம்மா விடு முறைக்கு வந்திட்டு போகைக்குள்ள எனக்கு கொஞ்ச‌ காசு தந்திட்டு போனவ[அம்மம்மா சரியான ஸ்ரிக்ட் காசே தர மாட்டார்] நான் அதைக் கொண்டு பள்ளிக்கூட‌ம் போற வழியில் உள்ள‌ சொக்லேட் வேண்டுவம் என்டுட்டு போய் நின்டால் கடை துறந்து கிட‌க்குது கடைக்கார‌ரைக் காணவில்லை எவ்வளவு நேர‌ம் தான் நிற்கிறது அவரைப் பார்த்துக் கொண்டு நின்டால் எனக்கு கால் நோகாது :D நான் பின்ன என்ன செய்தன் என்டால் ஒரு சொக்கிலேட்டை தூக்கிக் கொண்டு ஓட்டம் எடுத்தன்...எனக்கு நினைவு தெரிஞ்சு நான் வெளியில் செய்த முதல் களவு இது தான்.அதுக்கு பிறகு கொஞ்ச‌ நாள் கடைக்கார ஆள் வீட்டை வந்திடுவார் என்ட‌ பயம் இருந்து கொண்டே இருந்தது இத்தனைக்கும் அவர் என்னைக் காணவே இல்லை...நீங்களே சொல்லுங்கள் கடையே திறந்து போட்டு பின்னுக்கு போய் நின்ட‌து ஆற்றை பிழை :lol:

என்னோட‌ படிக்கும் பிள்ளைகள் அநேகமானோர் பாட‌சாலை கன்டினின் தான் பற்றீஸ்,கட்லட் என வேண்டி சாப்பிடுவினம் ஆனால் அம்மம்மா வீட்டை இருந்து சாப்பாடு கட்டி தந்து விடுவா எனக்கு அது பிடிக்கிறதேயில்லை...எனக்கும் கன்டினில் இது எல்லாம் வேண்டி சாப்பிட‌ வேண்டும் என ஆசையாய் இருந்தது ஒரு நாள் என்ன செய்தன் லாட்சிய திறந்து கண்ணை மூடிக் கொண்டு ஒரு காசை தூக்கிட்டன்...கன்டினில் நின்டு கொண்டு காசைப் பார்த்தால் 5 ரூபா குத்தி...நான் நினைக்கவில்லை 5 ரூபா களவெடுத்திருப்பன் என்டு எடுக்கைக்குள்ள‌ சத்தியமாய் அம்பது ச‌தம் அல்லது ஒரு ரூபாயாக இருக்கும் என்டு தான் நினைச்சன் ஆனாலும் என்ன எடுத்திட்டன் அத்தோட‌ எடுத்த காசுக்கு ஆசை தீர‌ சாப்பிட்டன் ஆனாலும் அம்மம்மா கண்டு பிடிச்சுவாவோ என்டு கொஞ்சம் பயமாய்த் தான் இருந்தது...வீட்டை போனதும் அம்மம்மா என்னிடம் ஒன்டும் கேட்கவில்லை நான் பின்னேர‌ம் விளையாடிக் கொண்டு இருக்கும் போது பக்கத்து வீட்டு அன்ரி வந்தவ 5 ரூபா குத்தியைக் காணலேல்ல இவள் தான் 5 ரூபா குத்தி என்டு தெரியாமல் எடுத்துக் கொண்டு செலவழித்திட்டாளோ தெரியாது என்று அம்மம்மா அவவிட‌ம் மெல்லமாக குசு,குசுத்துக் கொண்டு இருக்கிறா உடனே அந்த அன்ரி சொல்கிறா இவள் கீதாவும் இவளோட தானே படிக்கிறாள் அவளிட்ட கேட்கட்டே இவள் எதாவது காசு கொண்டு வந்து இன்டைக்கு செலவழிச்சவோளோ என்டு சொல்ல உடனே அம்மம்மா வேண்டாம் இன்டைக்கு விடுவம் இனி மேல் எதாவது காசு காணமல் போனால் பார்ப்போம் என சொல்கிறார்...ஆஹா களவெடுப்பது எவ்வளவு ஆபத்தான விச‌யமும் அவமான விச‌யமும் என அன்று தான் உணர்ந்தேன்.

அன்று அம்மம்மாவிட‌ம் நான் தான் காசை எடுத்தேன் என்னை மன்னித்து கொள்ளுங்கோ என கேட்கவில்லை ஆனால் அதற்கு பிறகு நான் வீட்டில் காசு களவெடுப்பதில்லை ஆனால் அந் நேர‌த்தில் எனது ஒன்று விட்ட தங்கச்சியும் படிப்பதற்காக எங்களோடு வந்து நின்ட‌வள் அவள் சித்திக்கும்,சித்தப்பாவுக்கும் ஒரே மகள் அத்தோடு அவையள் இருவரும் வேலை செய்வதால் நல்ல காசும் வைத்திருந்தவை.ஒரே மகள் என்ட‌ படியால் கேட்டது எல்லாம் உடனே வேண்டிக் கொடுப்பினம்...அன்றும் அப்படித் தான் அவள் கேட்ட உட‌னே புதிசாய் வந்த 24 கலர் பென்சில் பொக்ஸ் வாங்கிக் கொடுத்திட்டினம் எனக்கும் அது சித்திர‌த்திற்கு தேவையாய் இருந்தது அம்மம்மாவிடம் கேட்டு ஏன் கரைச்சல் கொடுப்பான் என்டிட்டு அந்த பென்சில் பொக்ஸ்சை தூக்கி என்ட‌ ஸ்கூல் பாக்குள்ள வைச்சிட்டன் :icon_idea: ...அடுத்த நாள் திங்கட்கிழமை சித்தி வேலைக்கு போகைக்கு முதல் மகளை பள்ளிக்கு ரெடி பண்ணும் போது பாக்கைப் பார்த்தால் அவளின்ட‌ கலர் பென்சிலைக் காணேல்ல.எல்லோரும் தேடி கடைசியாய் என்ட‌ ஸ்கூல் பாக்குள்ள இருந்து கண்டு பிடிச்சிட்டினம்.எனக்கு பெரிய அவமானமாய் போய் விட்டது பேசாமல் ஸ்கூல் போயிட்டன்.

அன்று பின்னேர‌ம் வீட்டை வந்த உட‌னே அம்ம‌ம்மா மாவரைக்க மில்லுக்கு போறன் நீயும் வா என்டார் நானும் சரி என்டு பயந்து,பயந்து கூட‌ப் போனன்...போகைக்குள்ள அம்மம்மா மற்றாக்களது பொருட்களுக்கு ஆசைப்பட‌க் கூடாது உனக்கு எதாவது தேவை என்டால் என்னிட‌ம் கேள் நான் வேண்டித் தருவன் அல்லது கொப்பாக்கு,கொம்மாவுக்கு கடிதம் போட்டு கேள் அவையள் வேண்டித் தருவினம் என அமைதியாக,அன்பாக,அடிக்காமல் அம்மம்மா சொன்னது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது...அதற்கு பிறகு அன்றில் இருந்து இன்று வரை அவையளாக விரும்பி தந்தாலே வழிய அவர்களின் பொருளை களவாக எடுத்ததுமில்லை,எனக்கு இது பிடித்திருக்கு எனக்கு த‌ருவீங்களா என ஆசைப் பட்டு கேட்டு மற்றவர் பொருளை வாங்கியதுமில்லை :)

அனுபவம் பாட‌ம் தொட‌ரும்

நன்றாக எழுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

சிறிய வயதில் பேருந்தில் தனியாகப் பயணிப்பது பற்றி நீங்கள் கூறியதும் எனக்கும் பல ஞாபகங்கள். அதில் ஒன்று யாழ் பேருந்து நிலையத்தில் திரிந்த ஒரு மனநிலை பிறழ்ந்த பெண் சார்ந்தது. சிவனே என்று பள்ளிக்கூட பையைத் தூக்கிக்கொண்டு பேருந்திற்காய் நின்ற எனது கையில் அப்பெண் திடீரென எங்கிருந்தோ தோன்றி கிள்ளிவிட்டுச் சென்றார். மறுநாள் காலை எழுந்தபோது அவர் கிள்ளிய இடத்தில வட்டமாக கடி ஏற்பட்டிருந்தது. ஒரு மாதம் வரை எத்தனையோ மருந்து போட்டும் குணமாகவில்லை. இந்நிலையில் பள்ளியில் இருந்து கசூரைனா பீச்சிற்கு சென்றோம். கடலில் குழித்த மறுநாள் கடியின் அரைவாசி குறைந்து இரண்டு மூன்று நாட்களிற்குள் இருந்த இடம் தெரியாது கடி மறைந்திருந்தது.

புலத்தில் மட்டுமல் ஊரிலும் சிறுவர்கள் தனியே பயணிப்பதில் பல விடயங்கள் சிந்திக்கப்படவேண்டியனவாகவே இருந்தன.

Edited by Innumoruvan

நன்றாக இருக்கின்றது தொடருங்கள்.

எனது தங்கை முதலாம் வகுப்பில் பாடசாலைக்கு வராமல் விட்டதற்கு காரணம் என்னவென ஆசிரியர் கேட்க "அண்ணாத்துரையின் செத்தவீட்டிற்கு போனதாக சொல்லியிருக்கின்றா ".

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியவும் ஒரு கார்காரர் இருந்தவர், அவருக்கு பிறேமதாசவோ/ பண்டாவோ என்று பெயர். ஒரு பழைய A40 கார் வைத்திருந்தவர், அதில் அவர் குறைந்தது 10 / 15 பிள்ளைகளை ஆவது ஏற்றுவார். என்ன அப்படி போறவர்களும், டாக்டர், உத்தியோகத்தர்மாரின் பிள்ளைகள்தான், நாங்கள் பாட்டா செருப்போடு நடை ராசாதான். அவர் ஒவ்வொரு பிள்ளைகையும் காரில் ஏறுவது ஒருகலை. சிலவேளைகளில் அடியும் விழும். அப்ப சூட்கேசில் புத்தம் கொண்டுதியும் காலம், கார் டிக்கி முழுக்க புத்தகம்தான். பிறகு சில காலத்தில் மினிவான் காலம் வந்து விட்டது. அவருக்கு என்ன நடந்ததும் என்றும் நினைவில்லை.

ரதி தனது கதைகளை பகிந்து கொண்டது பழைய நினைவுகளை தட்டி சென்றது.

மணியனின் இலங்கை பயணம் வாசித்தவர்களுக்கு தெரியும் அந்த காலத்தில் கார் என்றால் என்ன? -அது A40 தான். அதன் வேறு வேறு பயன்கள் என்ன? அவர்ரிகுரிய சிறப்பு பெயர்கள் என்னவென்ன என, திருவிழாகார் சந்தைகார், கலியான கார்,மேளக்கார், ...... ஒரு தொகையான கார்கள், மறந்து போய்விட்டது, ஆனால் அவற்றில் நம்மாளின் பாடசாலைக்கார் இருந்ததாக ஞாபகம் இல்லை.

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கு நன்றி வொல்கனோ...நீங்கள் சொன்னது சரி அந்த டிரைவரின் பெயர் பிரேமதாசா :D

  • கருத்துக்கள உறவுகள்

.போகைக்குள்ள அம்மம்மா மற்றாக்களது பொருட்களுக்கு ஆசைப்பட‌க் கூடாது உனக்கு எதாவது தேவை என்டால் என்னிட‌ம் கேள் நான் வேண்டித் தருவன் அல்லது கொப்பாக்கு,கொம்மாவுக்கு கடிதம் போட்டு கேள் அவையள் வேண்டித் தருவினம் என அமைதியாக,அன்பாக,அடிக்காமல் அம்மம்மா சொன்னது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது...அதற்கு பிறகு அன்றில் இருந்து இன்று வரை அவையளாக விரும்பி தந்தாலே வழிய அவர்களின் பொருளை களவாக எடுத்ததுமில்லை,எனக்கு இது பிடித்திருக்கு எனக்கு த‌ருவீங்களா என ஆசைப் பட்டு கேட்டு மற்றவர் பொருளை வாங்கியதுமில்லை :)

நம்புகின்றோம். இலண்டலிலுள்ள பிரபல கடைகளில் ஒரு தமிழ்ப்பெண் hand bags, necklace, earrings போன்றவற்றைக் காசு கொடுக்காமல் எடுத்துச் செல்லுவதாகச் சொன்னார்கள். அது நீங்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நீங்கள் சும்மா ஒரு பேச்சுக்கு நான் நல்லா எழுதுகிறேன் என சொன்னாலும் அதை உண்மையாகவே பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன் :) ...அர்ஜீன் அண்ணாவுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நம்புகின்றோம். இலண்டலிலுள்ள பிரபல கடைகளில் ஒரு தமிழ்ப்பெண் hand bags, necklace, earrings போன்றவற்றைக் காசு கொடுக்காமல் எடுத்துச் செல்லுவதாகச் சொன்னார்கள். அது நீங்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது! :icon_mrgreen:

:o:lol:

வழமையை விட இந்த முறை கொஞ்சம் தூக்கலா இருக்கு உங்கட எழுத்து..பாராட்டுக்கள்..தொடர்ந்து எழுதுங்கோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்புகின்றோம். இலண்டலிலுள்ள பிரபல கடைகளில் ஒரு தமிழ்ப்பெண் hand bags, necklace, earrings போன்றவற்றைக் காசு கொடுக்காமல் எடுத்துச் செல்லுவதாகச் சொன்னார்கள். அது நீங்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது! :icon_mrgreen:

நீங்கள் வேற நான் வீட்டில தான் அதற்கு பின்னர் களவெடுக்கவில்லை :D ஆனால் இங்கே கடைகளுக்கு போனால் சின்ன,சின்ன களவு செய்கிறது தான்

[உ+ம்] எனக்கு ஒரு பல்ப் தேவை என்டால் £1 கடைக்கு போனால் அதில 5 பல்ப் £1க்கு இருக்கும் ஆனால் எனக்கு 1 பல்ப் தான் தேவை உட‌னே ஒரு பக்கட்டை உடைத்து ஒன்டை எடுத்திட்டு வாறது ஆனால் நீங்கள் சொல்ற மாதிரி பெரிய,பெரிய திருட்டு செய்கிற அளவிற்கு என்னும் வளர‌வில்லை :lol: ...களவும் கற்று மற என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள் :icon_idea:

சுபேஸ் உங்கள் கருத்திற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அன்று பின்னேர‌ம் வீட்டை வந்த உட‌னே அம்ம‌ம்மா மாவரைக்க மில்லுக்கு போறன் நீயும் வா என்டார் நானும் சரி என்டு பயந்து,பயந்து கூட‌ப் போனன்...போகைக்குள்ள அம்மம்மா மற்றாக்களது பொருட்களுக்கு ஆசைப்பட‌க் கூடாது உனக்கு எதாவது தேவை என்டால் என்னிட‌ம் கேள் நான் வேண்டித் தருவன் அல்லது கொப்பாக்கு,கொம்மாவுக்கு கடிதம் போட்டு கேள் அவையள் வேண்டித் தருவினம் என அமைதியாக,அன்பாக,அடிக்காமல் அம்மம்மா சொன்னது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது...அதற்கு பிறகு அன்றில் இருந்து இன்று வரை அவையளாக விரும்பி தந்தாலே வழிய அவர்களின் பொருளை களவாக எடுத்ததுமில்லை,எனக்கு இது பிடித்திருக்கு எனக்கு த‌ருவீங்களா என ஆசைப் பட்டு கேட்டு மற்றவர் பொருளை வாங்கியதுமில்லை :)

அனுபவம் பாட‌ம் தொட‌ரும்

உங்கள் அம்மம்மா மிகவும் புத்திசாலி.சொல்ல வேண்டிய முறையில் சொன்னதால் நீங்களும் திருந்திவிட்டீர்கள்.ஒரே ஒரு மின்குமிழைத் திருடுவது கொஞ்சம் அதிகம்   :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அம்மம்மா மிகவும் புத்திசாலி.சொல்ல வேண்டிய முறையில் சொன்னதால் நீங்களும் திருந்திவிட்டீர்கள்.ஒரே ஒரு மின்குமிழைத் திருடுவது கொஞ்சம் அதிகம் :lol:

உங்கள் கருத்திற்கு நன்றி வாத்தியார்...நீங்கள் சொல்வது போல வயசானவர்கள் அதிகம் படிக்கா விட்டாலும் புத்திசாலிகள்

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தை மீண்டும் தொடரலாமே.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.