Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தோழர் தப்பிலி நீங்கள் என்னதான் எமக்கு போட்டியான கட்சியில் இருந்தாலும் வெளியே தெரியாமல் அவையடக்கமாகச் :rolleyes: செய்யும் உதவிக்குத் தோழமையுடன் தலை வணங்குகின்றேன். என்னதான் இருந்தாலும் நாம் நல்ல நண்பர்கள் என்பதை நீங்கள் உறுதிப்படுத்துவது மிகவும் மகிழ்வைத் தருகிறது.

இடியப்பம் சொதி என்பது இளக்காரமா என்ன? :icon_mrgreen:

இடியப்பம் சொதி என்பதை நாம் வாங்கி உண்ணும்போது குடிசைக் கைத்தொழில் வளர்ச்சியுறுகிறது நாம் ஆட்சிக்குவரமுன்பே :icon_idea: குடிசைக் கைத்தொழிலை ஊக்குவிக்கிறோம் என்பதை இந்த போட்டிக்கட்சியில் நின்றுழைக்கும் தோழர் தப்பிலி சாடுவதுபோல் கூறினாலும் மறைமுகமாக எமது பிரச்சாரத்திற்கு கைகொடுத்து ஒரு பேருண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் :lol: :lol: :lol:

பக்கத்து குடிசையில் சாரயம் காச்சுகிறார்கள் அதையும் ஊக்குவிக்கலாமே :lol: :lol: :lol:

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் நான் முதலிலேயே எழுதினனான்

மன்னர்களுக்கு கம்புப்பிரச்சினையை :wub: தீர்க்கவே தலைவருக்கு நேரம் போதாது என்று.......... :lol::icon_idea:

அரசசபையிலும்,அரசியலிலயும் இது சகஜம்தானே, இலங்கை அரசுசபையிலும் கம்பை எடுத்து ஒளிச்சு வச்சு எல்லாம் விளளயாடி இருக்கிறாங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் கொள்கைகள் வெகுவிரைவில் வெளியிடப்படும்.

மன்னர் இசைக்கலைஞரும்

மன்னர் குழவியும்

அதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள் .

0ec2ee13-a541-4d51-a320-d8f3160bc2f1_S_secvpf.gif(தண்டோரா) :lol: :lol:

தலைவர் மன்னர் வாத்தியாரின் வேண்டுகோளுக்கிணங்க எமது கட்சியின் கொள்கைகள் வரையப்பட்டுவிட்டன. :wub:நாளை காலை கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இடம்பெறும். :lol:

பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு உங்கள் சந்தேகங்களை (அப்படி ஏதாவது இருந்தால் :icon_mrgreen:) தீர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்..! :wub:

இப்படிக்கு,

யாழ் மன்னர்கள் சபை :D

swordaxe.jpg

இடியப்பம் சொதி என்பது இளக்காரமா என்ன? :icon_mrgreen:

இடியப்பம் சொதி என்பதை நாம் வாங்கி உண்ணும்போது குடிசைக் கைத்தொழில் வளர்ச்சியுறுகிறது நாம் ஆட்சிக்குவரமுன்பே :icon_idea: குடிசைக் கைத்தொழிலை ஊக்குவிக்கிறோம் என்பதை இந்த போட்டிக்கட்சியில் நின்றுழைக்கும் தோழர் தப்பிலி சாடுவதுபோல் கூறினாலும் மறைமுகமாக எமது பிரச்சாரத்திற்கு கைகொடுத்து ஒரு பேருண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் :lol: :lol: :lol:

இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும் பமேக வின் கொள்கைகளை கேட்டீர்களா நண்பர்களே.

இருபத்தியோராம் நூற்றாண்டில் இருக்கிறோம். இடியப்பம் பிழிவதை குடிசை கைத்தொழில் ஆக்குவது பற்றிச் சிந்திக்கிறார்கள். ஐயகோ.... இடியப்பம் பிழியும் பொழுது பாரதி கண்ட புதுமைப் பெண்களுக்கு ஏற்படப் போகும் கைவலியை நினைத்து கண்கள் பனிக்கின்றது. நெஞ்சு வெடிக்கிறது. அவர்களின் வலியை நினைத்து தேர்தல் ஆணையாளரும் சோகத்தில் விம்முவதை உணர்கிறேன். :(

புதுயுகம் நோக்கி நகர வேண்டியவர்கள் பெண்கள். புதிய பாதையை காட்ட வேண்டியவர்கள் அந்த பொறுமைக் கண்மணிகள். ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்க வேண்டியவர்களை அடுப்படியில் முடக்குவதா?

மலரப் போகும் எங்கள் செழிப்பான ஆட்சியில் இயந்திரத்தால் இடியப்பம் பிழியும் பெரிய தொழிற்சாலைகள் தொடங்கி, அணங்குகள் நெயில் பாலீஷும் லிப்ஸ்டிக்கும் கலையாமல் சீரியல் பார்த்தபடியே உணவருந்தக் கூடிய புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவோம். :D

Edited by தப்பிலி

:lol: :lol: :lol:

மக்களே.. மகளிரே.. :wub:

ஏமாந்துவிடாதீர்கள்..! :rolleyes:

எங்கள் அரசவையில் நீங்கள் ராணியராக இருப்பதைத் தடுத்து மிடில் கிளாஸ் லெவலில் உங்களை வைத்திருக்கவே ஏமுக விரும்புகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விழைகிறோம்..! :lol:

யாழ் மன்னர்கள் கட்சியில் சேரலாமா என்று யோசிக்கின்றேன்.........smiley-think005.gif :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மன்னர்கள் கட்சியில் சேரலாமா என்று யோசிக்கின்றேன்.........smiley-think005.gif :)

தமிழினி, யாழ் மன்னர்கள் கட்சி ஆண்களுக்குரியது.

எங்கள் ப.மே.க. தான் பெண்களுக்குரிய கட்சி. எங்கள் கட்சி தலைவியே.... பெண் தான்.

நிலாமதி அக்காவும் எங்கள் கட்சியில் தான் உள்ளார்.

எங்கள் கட்சிக்கு வந்தால்... உங்களுக்கு விருப்பமான அமைச்சர் பதவியைத் தரத் தயாராக உள்ளோம்.

பெண்களுக்கு 50% சம உரிமை கேட்டு, நாடு தழுவிய போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதால்.... அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்க கட்சி தயாராகவே உள்ளது. :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அது கொடிக்கம்பமா :rolleyes: நான் ஏதோ புதுவித அகப்பை என்று நினைத்து கொண்டு போட்டேன். :lol:

மன்னிக்க வேண்டும், அது உங்கள் கம்பா? நேற்று சென்பக பாண்டிய மன்னர் அளித்த விருந்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் வழியில் உங்கள் கம்பை எனது செங்கோலாக நினைத்து கொண்டு வந்து விட்டேன், நேற்று சோமபானத்தை அளவுக்கதிகமாக பருவிட்டதால் ஏற்பட்ட குழப்பம், மன்னர் இசை கலைஞர் அப்போதே சொன்னார், செங்கோலின் அளவு நீளமாக இருக்கிறது என்று. அவரின் கணிப்பிடும் திறமையை இப்போது எண்ணி பார்க்கும் போது ஆசரியமாக இருக்கிறது,

"முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, பா,மே,க வுக்கு கொடிக்கம்பத்தை திருப்பி கொடுத்தான் சித்தன்" என்று காவியங்கள் என்னை போற்றி பாடட்டும். அடுத்த கணமே எங்கள் குதிரைப்டைகள் உங்கள் கம்பை உங்களிடம் ஒப்படைக்கும்,

பொதுவாக எடுத்த பொருட்களை திருப்பி கொடுக்கும் பழக்கம் எங்கள் பரம்பரைக்கே இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

இத்தனை நற்பண்புகள் கொண்ட மன்னர்சபையில் இணைந்து கொண்ட ராஜாதிராஜ............ ராஜ மார்த்தான்ட............ வீராதிவீர சூர.......... மன்னன் சென்பக பாண்டியனை வெற்றி முழக்கமிட்டு வரவேற்கிறோம்.

எங்களிடமிருந்த, ஒரேயொரு கொடிக்கம்பம் தான்... காணாமல் போனது.

அதனை எடுத்தது சஜீவன் என்று உரிமை கோரிவிட்டார்.

இப்போ மன்னன் சித்தன் தான்... தான் எடுத்தது என்று உரிமை கோருகின்றார்.....

இதில் யார் சொல்வது உண்மை, என்று கண்டறிய ப.மே.க. வின் புலநாய்வுத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.to_walk_a_dog.gif

  • கருத்துக்கள உறவுகள்

கடமையிலே கண்ணாயிருக்கும் தலைவர் எழுகஞாயிறு எங்கிருந்தாலும் வந்து, களப் பணிகளை ஆரம்பிக்கவும்.

நீங்கள் போர்முரசு கொட்டாமலேயே எதிர்க் கட்சித் தலைவர்கள் பயத்தில் சிதறி ஓடுகிறார்கள். புலிகேசியும் அல்லக்கைகளும் போர் புரிவதாக நினைத்து பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தூரத்தே தலைவியையும் கொடியையும் தொலைத்த ஒரு தொண்டனின் ஈனக் குரல் கேட்கிறது. :D

களத்தில் இறங்கி வெற்றிக் கனியை பறித்து உங்கள் காலடியில் வைக்க அணிவகுத்து நிற்கிறோம். தொண்டர்களின் தினவெடுத்த தோள்கள் துடிக்கின்றன.

போதும் போதாததிற்கு தேர்தல் ஆணையாளர் அடிக்கடி வந்து ஏதோ நிபந்தனைகள் விதித்துச் செல்கிறார். :(

உங்கடை தலைவர் எழுகஞாயிறை, உடுக்கடிச்சாலும் எழுப்ப முடியாது.

ஆளை களட்டி விட்டுட்டு, எங்கள் ப.மே.க. வுக்கு வந்து இணையுங்கள் தப்பிலி. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நான் முதலிலேயே எழுதினனான்

மன்னர்களுக்கு கம்புப்பிரச்சினையை :wub: தீர்க்கவே தலைவருக்கு நேரம் போதாது என்று.......... :lol::icon_idea:

விசுகு, கம்பு என்பது ஒரு தானியம். (அரிசி, சோழம், கோதுமை, கேழ், வரகு, குரக்கன் என்பதைப் போல...)

என்களிடம் காணாமல் போனது... நடுகிற கொடிக்கம்பம்.

ஐயோ... இந்த விசுகின்ரை உள்குத்து தாங்க முடியேல்லையே.... :D:lol:

உங்கடை தலைவர் எழுகஞாயிறை, உடுக்கடிச்சாலும் எழுப்ப முடியாது.

ஆளை களட்டி விட்டுட்டு, எங்கள் ப.மே.க. வுக்கு வந்து இணையுங்கள் தப்பிலி. :rolleyes:

உங்கள் அழைப்பிற்கு நன்றி தோழரே.

ஏற்கனவே உங்கள் தலைவி, கவிதை அன்னையின் கந்தக வரிகளால் கவரப்பட்டவன். இருந்தாலும் தனித்து நிற்கவே விரும்புகிறோம். ஆனால் கட்சிக்குள் தனியாளாய் நிற்கவும் தொடை நடுங்குகிறது. முதுகில் ரின் கட்டி விடுவார்கள். உங்கள் கட்சியுடன் கூட்டுச் சேருவது பற்றி கதைப்போமேன்றால் தலைவனைக் காணவில்லை. :lol:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆருயிர்ச்சகோதரி

தமிழின் இனிமை உணர்ந்தவர்

அவர் செல்லுமிடத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்

ஏற்கனவே எனது இளவல் மற்றும் போர்வாள் என் தளபதி இசை அங்கு களம் அமைத்து எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார்

எனவே மன்னர்களுக்கு பல புதையல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

ஏவி விடுங்கள்

உங்களது பேச்சுவார்த்தை மற்றும் விளம்பரஅம்புகளை............

நிழலி அமலாபாலின் மச்சங்களை எண்ணிக்கொண்டிருகின்றார் முடிய வருவார் ?

அமலபாலுக்கு மச்சம் கொஞ்ச கூட அதுதான் மினக்கெடுது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அழைப்பிற்கு நன்றி தோழரே.

ஏற்கனவே உங்கள் தலைவி, கவிதை அன்னையின் கந்தக வரிகளால் கவரப்பட்டவன். இருந்தாலும் தனித்து நிற்கவே விரும்புகிறோம். ஆனால் கட்சிக்குள் தனியாளாய் நிற்கவும் தொடை நடுங்குகிறது. முதுகில் ரின் கட்டி விடுவார்கள். உங்கள் கட்சியுடன் கூட்டுச் சேருவது பற்றி கதைப்போமேன்றால் தலைவனைக் காணவில்லை. :lol:

உங்கள் தலைவரின் பெயரே... எழுகஞாயிறு.

ஆன படியால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான்... அவர் வருவார்.

அது மட்டும், நீங்கள் தனிய நிண்டு, கட்சிப்பணி ஆற்ற முடியாது.

கட்சியும் கடைசியில், கடலில் கரைத்த பெருங்காயம் ஆகி விடும்.

உங்களைப் போன்ற உணர்வு மிக்க தொண்டர்களுக்கு, இளைஞர்களுக்கு.... இளைய தளபதி பட்டம் கொடுத்து, வரவேற்கச் சொல்லி...

தலைவி வல்வை சகாரா எமக்கு ஈய்.. மெயில் அனுப்பியுள்ளார்.

தலைவியின் கருணைப் பார்வையை தட்டாதீர்கள்.

வாருங்கள் தோழர் தப்பிலி.

தமிழினி, யாழ் மன்னர்கள் கட்சி ஆண்களுக்குரியது.

எங்கள் ப.மே.க. தான் பெண்களுக்குரிய கட்சி. எங்கள் கட்சி தலைவியே.... பெண் தான்.

நிலாமதி அக்காவும் எங்கள் கட்சியில் தான் உள்ளார்.

எங்கள் கட்சிக்கு வந்தால்... உங்களுக்கு விருப்பமான அமைச்சர் பதவியைத் தரத் தயாராக உள்ளோம்.

பெண்களுக்கு 50% சம உரிமை கேட்டு, நாடு தழுவிய போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதால்.... அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்க கட்சி தயாராகவே உள்ளது. :rolleyes:

சிறி அண்ணா நீங்கள் அமைச்சர் பதவிதான் தருவீங்க ஆனா மன்னர்கள் கட்சிக்கு போனால் ராணியாகலாமல்லோ - :lol: :lol: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா நீங்கள் அமைச்சர் பதவிதான் தருவீங்க ஆனா மன்னர்கள் கட்சிக்கு போனால் ராணியாகலாமல்லோ - :lol: :lol: :icon_idea:

அங்கு எத்தனை மன்னர்கள் உள்ளார்கள் என்று, ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.

பஞ்ச(5) பாண்டவர்களுக்குangel_smiley026.gif ராணியாக இருப்பதை விட,

எங்கள் கட்சியில் அமைச்சராக இருப்பதே... மேல் :D:lol:

அங்கு எத்தனை மன்னர்கள் உள்ளார்கள் என்று, ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.

பஞ்ச(5) பாண்டவர்களுக்குangel_smiley026.gif ராணியாக இருப்பதை விட,

எங்கள் கட்சியில் அமைச்சராக இருப்பதே... மேல் :D:lol:

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அமலாபாலின் மச்சங்களை எண்ணிக்கொண்டிருகின்றார் முடிய வருவார் ?

அமலபாலுக்கு மச்சம் கொஞ்ச கூட அதுதான் மினக்கெடுது.

அமலா பாலுக்கு.. மச்சம் கூட என்று, நீங்கள் எண்ணிப் பார்த்த மாதிரி, சும்மா.... ரீல் விடாதேங்கோ.... :icon_mrgreen::D

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி...

நிழலி, தனது வா.வா.கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று, ப.மே.க. விரும்புகின்றது.

சனநாயக நாட்டில், கம்யூனிச பூர்சுவா... வலது சாரிகளையும், இடது சாரிகளையும் ஒரு றோட்டில் போகாமல்...

நடு றோட்டில் நின்று விவாதிப்பதே உண்மையான சன நாயகம்.

அதனை வலியுறுத்தவே... எமது தலைவி வல்வை சகாரா அமெரிக்காவில் தங்கி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா நீங்கள் அமைச்சர் பதவிதான் தருவீங்க ஆனா மன்னர்கள் கட்சிக்கு போனால் ராணியாகலாமல்லோ - :lol: :lol:

எங்கள் சபையில் இணைந்துகொண்டுள்ள ரொராண்டோ அரசியார் சகோதரி தமிழினி அவர்களுக்கு மலர்க்கொத்து வழங்கி எமது அரசவைக்குள் வரவேற்கிறோம்..! :lol:

எதிர்க்கட்சியினர் எமக்கெதிரான தீவிர பொய்ப்பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள்..! எமது கட்சி ஆண்கள் கட்சியாம்..! பெண்களுக்கு ஆகாதாம்..! :wub:

பலே.. பலே.. மேலும் கொண்டுவாருங்கள் உங்கள் பொய்ப்பிரச்சாரங்களை..! :wub:முறிக்கிறோம் இராமன் வளைத்த வில் போன்று..! :lol:

பல இராச்சியங்களைப் பெண்களே ஆண்டது வரலாறு.. :rolleyes: மன்னர்கள் எனும்போது மன்னிகளும்.. ச்சே. அரசியரும் அதில் அடங்குவர்..! :lol: பெண்களைத் தெய்வமாக மதிப்பது மன்னர் சபை..! :wub:

மன்னர் வாத்தியாரின் தலைமையில், மாமன்னர் சுவி அவர்களின் ஆட்சியில் யாழ் களம் சிறந்து தழைத்தோங்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் (ப மே க) சேர்வதாகவுள்ளேன் காரணம் நானும் படிக்காதவன் என்பதால் :D அதுமட்டுமின்றி கட்சிக்காக நேர்மையுடன் பாடுபடுவது என எண்ணியுள்ளேன்.

Edited by தமிழ் அரசு

தலைவி வல்வை சகாரா எமக்கு ஈய்.. மெயில் அனுப்பியுள்ளார்.

இது என்ன புது வித தொடர்பாடல் சாதனமாக உள்ளது. :unsure:

இளைய தளபதி பட்டம் கொடுத்து, வரவேற்கச் சொல்லி...

மக்களுக்காக உழைப்பதே முக்கியம். பதவி என்பது எமக்கு இடுப்பில் கட் ........ ஸாரி தோளில் போடும் துண்டு மாதிரி. :lol:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி, யாழ் மன்னர்கள் கட்சி ஆண்களுக்குரியது.

எங்கள் ப.மே.க. தான் பெண்களுக்குரிய கட்சி. எங்கள் கட்சி தலைவியே....  பெண் தான்.

நிலாமதி அக்காவும் எங்கள் கட்சியில் தான் உள்ளார்.

எங்கள் கட்சிக்கு வந்தால்... உங்களுக்கு விருப்பமான அமைச்சர் பதவியைத் தரத் தயாராக உள்ளோம்.

பெண்களுக்கு 50% சம உரிமை கேட்டு, நாடு தழுவிய போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதால்.... அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்க கட்சி தயாராகவே உள்ளது. :rolleyes:

யாரும் ப மே க வில் சேர  முன்னர் சற்று நிதானமாக யோசியுங்கள்அங்கே சென்றால் இடியப்பம் பிழிய, மா இடிக்க :icon_idea: சமையலறைக்குள் விட்டுவிடுவார்கள். ஏற்கனவே அங்கு சென்ற எங்கள்  அக்கா நிலை இப்போ பரிதாபத்திற்கிடம். அவருக்கு உதவியாகத்தான் இன்னுமொருவரை ப மே க வினர்  வலை வீசித்  தேடுகின்றனர் :wub:

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

<p><p>

அங்கு எத்தனை மன்னர்கள் உள்ளார்கள் என்று, ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.

பஞ்ச(5) பாண்டவர்களுக்குangel_smiley026.gif ராணியாக இருப்பதை விட,

எங்கள் கட்சியில் அமைச்சராக இருப்பதே... மேல் :D:lol:

ப மே க வில் இருக்கும் பெண் அங்கத்தவர்களின்  இன்றைய  நிலை பரிதாபத்திற்கிடம்imagesca207x9u.jpgUploaded with ImageShack.us

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் (ப மே க) சேர்வதாகவுள்ளேன் காரணம் நானும் படிக்காதவன் என்பதால் :D அதுமட்டுமின்றி கட்சிக்காக நேர்மையுடன் பாடுபடுவது என எண்ணியுள்ளேன்.

தமிழரசை "வெல்கம்" என்று, தமிழில் கூறி....

காஞ்சிபுர பட்டுப் பொன்னாடை போர்த்தி வரவேற்கின்றோம்.

உங்கள் வரவால்.. எமது ப.மே.க. மேன்மேலும் பலபடையும் என்பது திண்ணம்.

எம் கட்சியில் சேரும் உறுப்பினர்களின், பெயர்களைப் பார்க்க....

எதிர்க்கட்சிச்கு, வயித்தாலை... அடிக்கும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.