Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலசைப் பறவைகாள் (Oh migrating birds) - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலசைப் பறவைகாள் (Immigrant birt)

வலசைப் பறவைகாள்

தென்திசை நோக்கி

போர்விமான அணிவகுபெனெ நீர்

குஞ்சுகளோடு எங்கு செல்கின்றீர்?

வெள்ளிச் சுவர்க்கமான வடதுருவத்தில்

எதிரிவந்தானா? மீண்டும் கிட்லரா

எதற்கு இப்படிக் குடும்பம் குடும்பமாய்

தெற்க்கு நோக்கிப் புலம்பெயர்கின்றீர்.

என்ன நிகழ்ந்தது வலசைப் பறவைகாள்?

தரை இறங்குங்கள்

அஞ்சவேண்டாம் வலசைப் பறவைகாள்.

இது கிட்லருக்கு தலைபணியாத

கிளற்ச்சிக்காரரின் துரொண்கைம் நகரம்’

அதுவும் ஈழமண் காக்க களபலியான

எங்கள் மாவீரரைப் போற்றும் திருநாள்.

வழிய உங்கள் மாவீரர்கள்.

உஙகளைப்போல நாம் அகதிகளல்ல.

நாம் வலசைப் பறவைகள்.

வெண்பனி விழமுன் சூரியன் தேடி

உங்கள் ஊரின் திசையில் பறக்கிறோம்.

உங்க உறவுகளிடம் நாம் எதைச் சொல்லட்டும்?

எங்கள் தோழர்கள் தாய் மண்ணில் எழுதிய

சிவந்த கனவுகள் கலைந்திடுமுன்னே.

சிதைத்த அவர்கள் சமாதியின் மீது

சூடிய மலர்கள் வாடிடுமுன்னே.

எங்சிய நாட்க்கள் தொலையும் முன்னே.

எம் கண்கள் துயின்றிடு முன்னே,

வருவோம் என்று சொல்லுங்கள்.

எழுகிற மக்களின் உறு துணையாக

வாழ்வோம் என்று என்று சொல்லுங்கள்.

வளர்வோம் என்றும் சொலலுங்கள்

மாவீரர்கள் வாழ்ந்த மண்ணை

வாழ்திப் பாடுக தோழர்களே – அவர்

மனதின் கனவுகள் துளிர்க்கும் மண்ணை

மீட்ட்கக் கூடுங்கள் தோழியரே

துரொன்கைம் நோர்வேயைச் சேர்ந்த மாணவி செல்வி ஜெயகரன் கேட்டு எழுதிய கவிதை. துரொன்கைம் அஞ்சலி நிகழ்வில் வாசித்திருப்பார் என நம்புகிறேன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தோழர்கள் தாய் மண்ணில் எழுதிய

சிவந்த கனவுகள் கலைந்திடுமுன்னே.

சிதைத்த அவர்கள் சமாதியின் மீது

சூடிய மலர்கள் வாடிடுமுன்னே.

எங்சிய நாட்க்கள் தொலையும் முன்னே.

எம் கண்கள் துயின்றிடு முன்னே,

வருவோம் என்று சொல்லுங்கள்.

எழுகிற மக்களின் உறு துணையாக

வாழ்வோம் என்று என்று சொல்லுங்கள்.

வளர்வோம் என்றும் சொலலுங்கள்

மாவீரர்கள் வாழ்ந்த மண்ணை

வாழ்திப் பாடுக தோழர்களே – அவர்

மனதின் கனவுகள் துளிர்க்கும் மண்ணை

மீட்ட்கக் கூடுங்கள் தோழியரே

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள் கவிஞரே!

எங்கள் பறவைகள், புலம் பெயர நினைக்கவில்லை!

தங்கள் மண்ணிலேயே, தவமியற்றின!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி போயட் பகிர்வுக்கு

நன்றி அண்ணா!

என்னதொரு எண்ணம்... வடதுருவத்தையும் தென்துருவத்தையும் இணைப்பதற்கு இணையான அசாத்தியத்தினை வரிகளில் சாத்தியமாக்கி காணிக்கையாக்கிய கவிஞரே.....!

இந்த சின்னப் பையனின்....

மனமார்ந்த நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுபேஸ், நன்றி புகையூரான் . நன்றி உடையார். நன்றி கவிதை. என் சகோதரியின் கணவரது மரணச் சடங்கின் பின் விரக்தியும் தொல்லைகளும் சூழ்ந்த்நேரத்தில் துரொண்கைம்தமிழ் பள்ளி மணவியின் வற்புறுத்தலில் உருவான கவிதை. அவசரத்தில் எழுதியது. இருந்தும் உங்களில் பலரது அபிமானத்தை அக் கவிதை பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி

கவிதைக்கு நன்றி கவிஞரே ஐரோப்பா பறவைகள் எங்கு சென்றாலும் தங்கள் நாட்டுக்குத் திரும்பி விடுகின்றன. நாட்டுப் பற்று மிக்கவை. ..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செண்பகன். காதல் இருந்தால் திரும்பத்தானே வேண்டும்

இந்தக் கவிதை எனது சகோதரி கணவரது மரணச்சடங்கு நெருக்கடியில் ஒரு மாணவியின் வேண்டுகோளுக்காக அவசர கதியில் எழுதப்பட்டது. கவிதைக்கு நல்ல உருவம் form வாய்த்தது. ஆனால் இன்னும் வேலை செய்திருக்கவேணும் என்பதை உணர்கிறேன். பிரசுரத்தின் முன்னம் இன்னும் கவித்துவத்துடன் மெருக்கூட்டப் படவேணும்..

மேலும் சிவகுமாரனுக்கு முன் பின் என தமிழரசுக் கட்ட்சிப் போராட்டங்களிலும் மற்றும் பல்வேறு இயக்கப் போராட்டங்களிலும் விடுதலைப் புலிகளின் போராட்டங்களிலும் எங்கள் மண்காக்க இறந்த எல்லோரையும் என் நெஞ்சத்தில் பிரதிஸ்ட்டை செய்து வணங்குகிறேன். நான் எப்பவும் அப்படித்தான் இருந்தேன்.

அந்த குறை நிரப்பலும் இளைய தலை முறைக்காக பதிவு செய்யப்பட வேண்டும். ஆறுதலாக இக்கவிதையை மெருகூட்டி முழுமைப் படுத்த வேண்டும். அல்லது புதிதாக எழுதவேண்டும்.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதனை ஒரு நெடுங்கவிடையாக வளர்த்தெடுக்க விருப்பம். இன்னும் என்னென விடயங்கலைத் தொடவேணும் என்று கருதுறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இதனை ஒரு நெடுங்கவிடையாக வளர்த்தெடுக்க விருப்பம். இன்னும் என்னென விடயங்கலைத் தொடவேணும் என்று கருதுறீங்க.

நடந்து முடிந்தது 'சரித்திரம்'.

நடந்து கொண்டிருப்பதோ ' நரகம்'

நடக்கப் போவது ' நமது கைகளில் இல்லை'!

வாழ்வு என்பது 'சாதம்' போன்றது! சரித்திரம் அதைத் தொட்டுக் கொள்ளும் 'கறி' போன்றது!

சாதமில்லாவிட்டால் 'கறி' அதன் தனித்துவத்தை இழக்கின்றது!

எனவே, நடந்து கொண்டிருக்கும், எமது உறவுகளின் 'நரக வாழ்வை' வெளிக்கொண்டு வாருங்கள், கவிஞரே!

உங்கள் கவிதைகள், தமிழ் நாட்டில் 'பரந்து விரிந்த' பார்வையாளர்களைக் கொண்டவை'.

உங்கள் வாயில் இருந்து வரும்போது, ' எமது வலிகள்' இறக்கைகள் முளைத்துத் தமிழ் நாடெங்கும், உலகமெங்கும் பறக்கும்!

இது எமது பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய தேவையை, தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லட்டும்!

தமிழகம், நிஜமாக அசையும் போது, மத்தி கட்டாயம் அசைந்தாக வேண்டும்'

எனவே, எமது உறவுகள் இன்றைய' இழிநிலை வாழ்வையும்' உங்கள் கவிதைகளில், உலகெங்கும் பரந்த 'இதயமுள்ளவர்களுக்கு' எடுத்துச் செல்லுங்கள்!

இதைப் பொறுமையாக வாசித்தமைக்கு, நன்றிகள் கவிஞரே!

ஏதோ ஏன் மனதில், தோன்றியதைச் சொன்னேன்!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வரச்சொல்லி எழுதியவர்களில் இருவர் பற்றி எழுதவேண்டும்.

ராஐவன்னியன் அவர்கள் என்னையும் இன்னொருவர் பற்றியும் அக்கறைப்பட்டு கேட்டார். ஏன் நீங்கள் இருவரும் அடிக்கடி கோவித்துக்கொண்டு போய்விடுகின்றீர்கள் என்று. அதன்பின்தான் நானும் யோசித்துப்பார்த்தேன். உண்மைதான்.

அவர் எமது கவிஞர் பொயற் அவர்கள். அவர் எனக்கு எழுதியுள்ளதை பார்த்தபோது அவருக்கும் அதையே எழுதணும் என்று தோன்றியது. கவிஞரே தொடர்ந்து எழுதுங்கள். ஒருவகையில் எமது சொத்து தாங்கள். ஒதுங்கலாமா???

snapback.pngpoet, on 29 November 2011 - 04:07 AM, said:

தோழா, நாங்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன தோல்வியுள் புதைந்து கிடக்கும் நம் தேரை மீட்பதென்றால் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ஊர் முழுவதையும் கூட்டித்தானே ஆகவேண்டியிருக்கு. நிலமையைப் பார்த்துத்தானே தீர்மானம் எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கள் வாழ்ந்த மண்ணை

வாழ்திப் பாடுக தோழர்களே – அவர்

மனதின் கனவுகள் துளிர்க்கும் மண்ணை

மீட்ட்கக் கூடுங்கள் தோழியரே

நல்ல வலிமையான சொல்லாடல்! மிக நல்ல கவிதை!

தொடருங்கள் , வாழ்த்துகள் நண்பரே!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கையூரான், நன்றி சுவே. விசுக்கு நிறைய பிழைசரிகளை விவாத்து எதிர்கால பாதையை சரியாகக் கண்டு கொள்ள வேனும்’ புங்கையூரான் உங்கள் கருத்துக்கு நான் பெரிய பதில் எழுத வேணும். ஆனால் யாழில் விடுதலை வேட்க்கையுடன் உண்மையான அவிப்பிராயத்தை எழுதினால் ஒருசிலர் என் கருத்தின் சரி பிழை விவாதிப்பதற்க்குப் பதிலாக தனிப்பட்ட முறையில் கொஞ்ச்சைப் படுத்துவார்களே.

வலசைப் பறவைகாள் (Immigrant birt)

வலசைப் பறவைகாள்

தென்திசை நோக்கி

போர்விமான அணிவகுபெனெ நீர்

குஞ்சுகளோடு எங்கு செல்கின்றீர்?

வெள்ளிச் சுவர்க்கமான வடதுருவத்தில்

எதிரிவந்தானா? மீண்டும் கிட்லரா

எதற்கு இப்படிக் குடும்பம் குடும்பமாய்

தெற்க்கு நோக்கிப் புலம்பெயர்கின்றீர்.

என்ன நிகழ்ந்தது வலசைப் பறவைகாள்?

தரை இறங்குங்கள்

அஞ்சவேண்டாம் வலசைப் பறவைகாள்.

இது கிட்லருக்கு தலைபணியாத

கிளற்ச்சிக்காரரின் துரொண்கைம் நகரம்’

அதுவும் ஈழமண் காக்க களபலியான

எங்கள் மாவீரரைப் போற்றும் திருநாள்.

வழிய உங்கள் மாவீரர்கள்.

உஙகளைப்போல நாம் அகதிகளல்ல.

நாம் வலசைப் பறவைகள்.

வெண்பனி விழமுன் சூரியன் தேடி

உங்கள் ஊரின் திசையில் பறக்கிறோம்.

உங்க உறவுகளிடம் நாம் எதைச் சொல்லட்டும்?

எங்கள் தோழர்கள் தாய் மண்ணில் எழுதிய

சிவந்த கனவுகள் கலைந்திடுமுன்னே.

சிதைத்த அவர்கள் சமாதியின் மீது

சூடிய மலர்கள் வாடிடுமுன்னே.

எங்சிய நாட்க்கள் தொலையும் முன்னே.

எம் கண்கள் துயின்றிடு முன்னே,

வருவோம் என்று சொல்லுங்கள்.

எழுகிற மக்களின் உறு துணையாக

வாழ்வோம் என்று என்று சொல்லுங்கள்.

வளர்வோம் என்றும் சொலலுங்கள்

மாவீரர்கள் வாழ்ந்த மண்ணை

வாழ்திப் பாடுக தோழர்களே – அவர்

மனதின் கனவுகள் துளிர்க்கும் மண்ணை

மீட்ட்கக் கூடுங்கள் தோழியரே

துரொன்கைம் நோர்வேயைச் சேர்ந்த மாணவி செல்வி ஜெயகரன் கேட்டு எழுதிய கவிதை. துரொன்கைம் அஞ்சலி நிகழ்வில் வாசித்திருப்பார் என நம்புகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.