Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூன்றாவது கண்

Featured Replies

''கொழும்பு என்பது அப்பொழுது எனக்குக் கொஞ்சம் பழகியிருந்தது. ஒரு வயசு அனுபவம்! ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை... அந்த "நாய் படாத பாடு" வேலைதான் இன்றுவரைக்கும் எந்தவேலையையும் இலகுவாக நினைத்துச் செய்யக்கூடிய மனவலிமையையும் சகிப்புத் தன்மையையும் எனக்குக் கொடுத்திருக்கின்றது என நினைக்கின்றேன்!

அப்படியானதொரு வேலையுடன் நகர்ந்த அந்த நாட்களின் ஒரு மதியப்பொழுது... காலையில் சாப்பிடாமல் வேலைக்கு போனதால் பசி வயிற்றைக் கிள்ளியது. இருந்த பசிக்கு... உடனையே எதையாவது சாப்பிட்டுவிட வேண்டுமென்று தோன்றினாலும், இன்றைக்காவது வாய்க்கு ருசியா குத்தரிசிச் சோறு,நல்ல மீன் குழம்பு, பெரிய மீன் பொரியலோட ஒரு வெட்டு வெட்டோணும்.... என்ற ஆசையுடன் வெள்ளவத்தை ஸ்டேஷன் ரோட்டிலிருந்த யாழ் உணவகத்தினை நோக்கி நடந்தேன்...அண்டைக்குத்தான் சம்பளம் வாங்கின வீறாப்புடன்!

குத்தரிசிச் சோறு... மீன்குழம்பு, மீன் பொரியல்... அப்புறம் அப்பளம், ரசம் என எல்லாத்தையும் முடிச்சிட்டு.... கடைசியா, அந்த வாழையிலையை மட்டும் தின்னாமல் விட்ட குறையாக ஒரு வெற்றித் திருப்தியோடு கையைக் கழுவிவிட்டு... காசைக் குடுப்பமே என்று ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் கையைவிட்டால்.....என்ர கடவுளே.... !!! சம்பளம் வாங்கி வைச்ச என்ர பர்ஸைக் காணவில்லை!!!எல்லாப் பொக்கற்றையும் கிண்டிக் கிளறிப் பார்த்திட்டன். இல்ல..இல்ல...இல்ல!!!!

கடைசியா... என்ர நண்பனொருவனின் புத்தகக்கடையில் பேனா வாங்கிய ஞாபகம். அது எழுதுதா இல்லையா? என்று ஆயிரத்தெட்டுத்தடவை கிறுக்கிப் பார்த்த ஞாபகம். "அடேய்! மை முடியப் போதடா!" என்று அவன் திட்டித் துரத்தினவரை ஞாபகம் இருக்கு. அங்கதான் எங்கையாவது விட்டிருக்கோணும். ஆனால் எங்க வைச்சன் எண்டு மட்டும் ஞாபகம் இல்லை! "உண்மையில நான் பாவம்" என்று எனக்கே நான்சொல்லிக் கொண்டிருக்க.... அந்தக் கடை முதலாளி அப்பதான் கடைக்குள்ளை வந்தார். அவரின்ர பெரிய வீரப்பன் மீசையைப் பார்த்தபோது, ஏதாவது பேசிச் சமாளிச்சு பிறகு காசு கொடுக்கலாம்... என்ற என் கடைசி நம்பிக்கையும் மனம் நழுவிப் போனது. "உண்மையில நான் பாவம்" போலதான் என்று எனக்கே தோன்றியது.

இந்த யோசனையுடன் நான் கண்விழி பிதுங்கி பதுங்குறதை பார்த்துகொண்டிருந்தது.... ஒரு உறவு.

(தொடரும்...)

இனிமேல்தான் அவன் எப்படி உறவானான்.... எனக்கு, என்று சொல்லப் போகின்றேன்!

அவன் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் உறவுதான்!

இன்னும் ஒரு மணி நேரத்தில் மீதிக்கதை....... உங்களை தொடரவைக்கும்.

கதையுடன் கவிதை வரும்.....

பி.கு: கதை ஓகே என்றால் சொல்லுங்கோ.... இல்லாட்டில் இப்பிடியே விட்டிட்டு, என்ர கவிதை மன்றத்திலயே மஞ்சம் கொள்கின்றேன்!

கதை நன்றாக உள்ளது...மிகவும் விறுவிறுப்பாக வேறு உள்ளது. தொடருங்கள் கவிதை உங்கள் கதையை.

கவிதைகளும் கதை சொல்லும்!!! - முற்றிலும் உண்மை :)

கதைகதையாம் பகுதிக்கு வந்த கவிதையே நீ வாழி !!! ஆனாலும் , காசிலை கவனம் இல்லாமல் சோத்துக்கடைக்குப் போகலாமோ :) :) :) 1?????????

  • கருத்துக்கள உறவுகள்

குத்தரிசிச் சோறு... மீன்குழம்பு, மீன் பொரியல்... அப்புறம் அப்பளம், ரசம் என எல்லாத்தையும் முடிச்சிட்டு.... கடைசியா, அந்த வாழையிலையை மட்டும் தின்னாமல் விட்ட குறையாக ஒரு வெற்றித் திருப்தியோடு கையைக் கழுவிவிட்டு... காசைக் குடுப்பமே என்று ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் கையைவிட்டால்.....என்ர கடவுளே.... !!! சம்பளம் வாங்கி வைச்ச என்ர பர்ஸைக் காணவில்லை!!!எல்லாப் பொக்கற்றையும் கிண்டிக் கிளறிப் பார்த்திட்டன். இல்ல..இல்ல...இல்ல!!!!

. "உண்மையில நான் பாவம்" போலதான் என்று எனக்கே தோன்றியது.

இந்த யோசனையுடன் நான் கண்விழி பிதுங்கி பதுங்குறதை பார்த்துகொண்டிருந்தது.... ஒரு உறவு.

(தொடரும்...)

நல்லது கவிதை!

இந்தப் பிக் பொக்கற்றுக் காரர் தான் எனக்குப் பரிச்சயமான கொழும்பு!

அவர்களது திறமை, அவர்கள் இயங்கும் வேகம் என்பன இன்னும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன!

தொடருங்கள், கவிதை!!!

  • தொடங்கியவர்

மூன்றாவது கண் .... (தொடர்ச்சி)

தான் சாப்பிட்ட குறையிலேயே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தவன் .... "அண்ணை இஞ்சை வாங்கோ!" என்றான் என்னை நோக்கி. ஏன் இவன் கூப்பிடுறான்? எனக்குக் கொஞ்சம் குழப்பம்...அத்தோட, தன்ர பில்லையும் என்ர தலையில கட்டக் கூப்பிடுறானோ ? என்ற கலக்கம் வேற !

சரி என்னதான் பார்ப்பம்..... என்று பக்கத்தில போனன். எதிரே உட்காரச் சொன்னான்! வந்திட்டம்.... இனி களங்கண்டுதான் ஆகோணும் பாருங்கோ! கதிரேல உட்கார்ந்தன்!

சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்..."அண்ணை நீங்கள் யாழ்ப்பாணமோ?" "இல்ல நான் வடமராட்சி" என்று மழுப்பினேன். "வடமராட்சி எவடம்?" .....என தெளிவாக கேட்க.... இப்ப சமாதானக் காலந்தானே... என என்னை நானே சமாளித்துக்கொண்டு "நான் பருத்தித்துறை அண்ணை... நீங்கள் எவடம்?" என திருப்பிக் கேட்டன்! "நான் திருகோணமலை...... சிலாபத்திலதான் இருந்தனான் நிறையக் காலமா.... இப்ப இங்க ரெண்டு வருசமா பெற்ராவில ஒரு சீடிக் கடையில வேலை பார்க்கிறன்... " என பதிலளித்தவன், கடையின்ர கார்ட் வேற குடுத்தான். அதில் முக்கால் வாசி சிங்களத்திலேயே எழுதி இருந்தது. "நீங்கள் முஸ்லீமோ?" என்று கேட்டதுக்கு சாப்பிடுறத நிப்பாட்டிட்டு.... "ஏன் என்னைப் பார்த்தால் 'தமிழன்' மாதிரி இல்லையோ?" என அவன் கேட்ட விதம் 'அவன் தமிழன்தான்' என்பதாய் என்னை நம்ப வைத்தது. உறுதிப்படுத்திக்கொள்ள ... அண்ணை உங்கட பெயர் என்னவென வினவ ..... 'சின்னவன்' தான் என்ர பெயர்... ஆனால், எல்லாரும் இங்க என்னை "ஜின்னா" என்றுதான் கூப்பிடுறவன்கள். அவன் என் பெயர் என்னவென்று கேட்கவே இல்லை. அதுவும் நல்லதென்றே நினைத்துக்கொண்டேன்!

அவன் சாப்பிட்டு முடித்து கைகளுவிவிட்டு நேர கவுண்டருக்குப் போய்.... ரெண்டு பீடா வாங்கி காசைக் குடுத்திட்டு வந்து ஒரு பீடாவை என்னிட்ட நீட்டிட்டு "வாங்கோ போவம்!" என்று சொன்னான். அப்பதான் என்ர காசு விஷயம் எனக்கு ஞாபகத்துக்கு வந்திது. "அண்ணை காசு இன்னும் குடுக்கேல. பிரண்டுக்கு கோல் பண்ணி கொண்டுவரச் சொல்லப்போறன்" என இழுக்க....... "நான் உங்களுக்கும் சேர்த்துக் கட்டிட்டன்.நீங்கள் உங்கட பொக்கற்றுக்குள்ளயெல்லாம் கைவிட்டுத் தேடும்போதே... எனக்கு விளங்கீட்டுது.... யோசிக்காதையுங்கோ வாங்கோ" என்றான்! எனக்கு அது உதவியாப் பட்டாலும், அந்தரமாயும் அதோட பயமாயும் இருந்திச்சுது. இவன் ஏன் எனக்கு தானாக வந்து உதவினான்? என்ற கேள்வி என்னை கொஞ்சம் பயமுறுத்தினாலும்... அவனுடன் கடையை விட்டு வெளியேறினேன்.

அவன் பெற்ராவுக்கு போகோணும் என்று சொல்ல.... பஸ் ஸ்ரான்ட் வரைக்கும் அவனுடன் நடந்து போக நினைத்து நடந்தேன். பஸ் ஸ்ரான்ரில 100, 101 பஸ்சுக்காக காத்திருந்தோம். வழமையாக நிமிஷத்துக்கு நிமிஷம் வாற பஸ் அண்டைக்கெண்டு வரவே இல்லை. அப்பொழுதுதான் அவன் தன் திருவாய் திறந்தான்.....! "சமாதானக் காலம் எண்டபடியால் நாங்கள் எல்லாரும் நிம்மதியாத் திரியிறம்! இல்லாட்டில்... மனிஷர் இப்பிடித் திரிய ஏலுமே?" என தொடங்கினான். "இப்பதான் இவங்கள் எல்லாருக்கும் புத்தி வந்திருக்கு....." என இழுக்க, அவன் யாரையோ குறிப்பாக் குத்திக் காட்டினமாதிரி எனக்கு விளங்கிச்சு! எனக்கு பொறுக்கேல...!!! இவன் சின்னவன் இல்ல... "ஜின்னா" போலதான் கிடக்கு. ஆனாலும் எனக்கு வாய் சும்மா கிடக்காது இந்த விசயத்தில. நான் திருப்பிக் கேட்டேன்..... "அரசாங்கத்துக்கு புத்தி வாறதுக்கு யார் காரணம்...... ஆனையிறவுவரைக்கும் குடுத்ததுதானே....?!" காரணம் என்றேன். அதுக்கு அவன் சொன்னான்...... "என்னத்தை அடிச்சாலும், பிடிச்சாலும் அவனவன் குடுக்கோணும்! சண்டை பிடிக்கிறத விட்டிட்டு சமாதானமாப் போகட்டும்.... அப்பதான் குடுப்பாங்கள் நல்லா....!" என இரட்டை அர்த்தத்தோடு சொல்லி அவன் சிரித்தது......... எனக்கு புரியவேயில்லை!

இன்னும் என்னென்னமோ நிறையக் கதைத்தான். அந்த "ஜின்னா"வின் கதைகளில் கடுப்பாகிய நான், எதையும் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை! சாப்பாட்டுக்கு காசு குடுத்தான்...... என்ற ஒரே காரணம் மட்டுமல்ல... முழுசா யாரென்றே தெரியாத இவனோடு எனக்கு என்ன பேச்சென்று....... ஒரு வறட்டுப் புன்னகையுடன் உட்கார்ந்திருக்க, அந்தப் பாழாய்ப்போன 100 ஆம் நம்பர் பஸ் வந்து சேர்ந்தது. அதுக்கு கோர்ன் வேற... பஸ் ஓட்டுறவருக்கு தான் ஏதோ ஏ.ஆர்.ரகுமான் என்ற நினைப்பு போல! அந்த நேரத்தில அதுகூட என்னைக் கடுப்பாக்கியது.

அவன் பஸ்சேறி விடைபெறும்போது ஒரு தொல்லை தீர்ந்தது......! என நினைத்துக்கொண்டேன்!

இதன் பின் நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. என் வாழ்க்கையிலும் பலவகையான எதிர்பாராத மாற்றங்கள் வந்து போயிற்று. ஆட்சி மாற்றங்களும் ஆயிற்று. சமாதானப் புறா இலங்கையையும் ஈழத்தையும் விட்டு தொலைதூரமாய் பறக்கத் தொடங்கிய காலத்தில் 'கொஞ்சம்' சூடானது கொழும்பும்தான்.

மீண்டும் குண்டுச்சத்தங்கள் கேட்க ஆரம்பித்த நாட்களின் ஒரு செய்தித்தாளின் தலைப்புச் செய்தியும்.....அதன் கீழ் பெரிதும் சிதையாத நிலையில் ஒரு தலை மட்டும் தனியாக வைக்கப்பட்டு இருந்த புகைப்படமும் என்னை நிலைகுலைய வைத்தது.

அந்தத் தலை "ஜின்னா"வினுடையதல்ல.... சின்னவனுடையது என்பதை என் மனம் உணர்ந்தபோது... நான் இன்னும் மறக்காத அவனது பேச்சும்... அவனது செயலும்... என் மூன்றாம் கண்ணைத் திறந்துவிட்டு என்னை ஏதோ உறுத்தியது!!! இன்றுவரை அவனுக்கு நான் கடன்பட்டவன்தான்!!! அவன் எனக்குக் கொடுத்த சாப்பாட்டுக் காசைவிட அவன் கற்றுத் தந்துவிட்டுப் போன மூன்றாம் கண்ணுக்கும்தான்!

என்றுதான் அந்த தற்கொடை உறவின் கடனை அடைப்பேனோ ? தெரியவில்லை....!!!???

அவன் உங்களுக்கும் உறவென்று நீங்கள் நினைத்தால்.....

மூன்றாம் கண்ணும் அவசியம்.......அவன் கடன் தீர்ப்பதும் அவசியம்!

(முற்றும்.)

Edited by கவிதை

... அவனது செயலும்... என் மூன்றாம் கண்ணைத் திறந்துவிட்டு என்னை ஏதோ உறுத்தியது!!! இன்றுவரை அவனுக்கு நான் கடன்பட்டவன்தான்!!!

மற்றவர்களுக்காக வாழ்ந்த நெஞ்சங்கள்...

தமிழர் உள்ளத்தில் வாழும் தெய்வங்கள்.

அவர்களைப் பற்றிய பதிவுகள் தொடரட்டும். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை பாராட்டுக்கள்...இப்படி இறந்த பல கரும்புலிகளின் பெயர்கள் வெளித்தெரியாமலே போய்விட்டன..தொடர்ந்து எழுதுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை உங்களுக்கு தெரிந்த இப்படியான சம்பவங்களை கதையாக எழுதுங்கள்...முடிக்கும் போது கொஞ்சம் அவசரப்பட்டு முடித்த மாதிரி இருக்கிறது இது என் கருத்து தப்பாக இருந்தால் மன்னிக்கவும்

மூன்றாவது கண் .... (தொடர்ச்சி)

தான் சாப்பிட்ட குறையிலேயே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தவன் .... "அண்ணை இஞ்சை வாங்கோ!" என்றான் என்னை நோக்கி. ஏன் இவன் கூப்பிடுறான்? எனக்குக் கொஞ்சம் குழப்பம்...அத்தோட, தன்ர பில்லையும் என்ர தலையில கட்டக் கூப்பிடுறானோ ? என்ற கலக்கம் வேற !

சரி என்னதான் பார்ப்பம்..... என்று பக்கத்தில போனன். எதிரே உட்காரச் சொன்னான்! வந்திட்டம்.... இனி களங்கண்டுதான் ஆகோணும் பாருங்கோ! கதிரேல உட்கார்ந்தன்!

சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்..."அண்ணை நீங்கள் யாழ்ப்பாணமோ?" "இல்ல நான் வடமராட்சி" என்று மழுப்பினேன். "வடமராட்சி எவடம்?" .....என தெளிவாக கேட்க.... இப்ப சமாதானக் காலந்தானே... என என்னை நானே சமாளித்துக்கொண்டு "நான் பருத்தித்துறை அண்ணை... நீங்கள் எவடம்?" என திருப்பிக் கேட்டன்! "நான் திருகோணமலை...... சிலாபத்திலதான் இருந்தனான் நிறையக் காலமா.... இப்ப இங்க ரெண்டு வருசமா பெற்ராவில ஒரு சீடிக் கடையில வேலை பார்க்கிறன்... " என பதிலளித்தவன், கடையின்ர கார்ட் வேற குடுத்தான். அதில் முக்கால் வாசி சிங்களத்திலேயே எழுதி இருந்தது. "நீங்கள் முஸ்லீமோ?" என்று கேட்டதுக்கு சாப்பிடுறத நிப்பாட்டிட்டு.... "ஏன் என்னைப் பார்த்தால் 'தமிழன்' மாதிரி இல்லையோ?" என அவன் கேட்ட விதம் 'அவன் தமிழன்தான்' என்பதாய் என்னை நம்ப வைத்தது. உறுதிப்படுத்திக்கொள்ள ... அண்ணை உங்கட பெயர் என்னவென வினவ ..... 'சின்னவன்' தான் என்ர பெயர்... ஆனால், எல்லாரும் இங்க என்னை "ஜின்னா" என்றுதான் கூப்பிடுறவன்கள். அவன் என் பெயர் என்னவென்று கேட்கவே இல்லை. அதுவும் நல்லதென்றே நினைத்துக்கொண்டேன்!

அவன் சாப்பிட்டு முடித்து கைகளுவிவிட்டு நேர கவுண்டருக்குப் போய்.... ரெண்டு பீடா வாங்கி காசைக் குடுத்திட்டு வந்து ஒரு பீடாவை என்னிட்ட நீட்டிட்டு "வாங்கோ போவம்!" என்று சொன்னான். அப்பதான் என்ர காசு விஷயம் எனக்கு ஞாபகத்துக்கு வந்திது. "அண்ணை காசு இன்னும் குடுக்கேல. பிரண்டுக்கு கோல் பண்ணி கொண்டுவரச் சொல்லப்போறன்" என இழுக்க....... "நான் உங்களுக்கும் சேர்த்துக் கட்டிட்டன்.நீங்கள் உங்கட பொக்கற்றுக்குள்ளயெல்லாம் கைவிட்டுத் தேடும்போதே... எனக்கு விளங்கீட்டுது.... யோசிக்காதையுங்கோ வாங்கோ" என்றான்! எனக்கு அது உதவியாப் பட்டாலும், அந்தரமாயும் அதோட பயமாயும் இருந்திச்சுது. இவன் ஏன் எனக்கு தானாக வந்து உதவினான்? என்ற கேள்வி என்னை கொஞ்சம் பயமுறுத்தினாலும்... அவனுடன் கடையை விட்டு வெளியேறினேன்.

அவன் பெற்ராவுக்கு போகோணும் என்று சொல்ல.... பஸ் ஸ்ரான்ட் வரைக்கும் அவனுடன் நடந்து போக நினைத்து நடந்தேன். பஸ் ஸ்ரான்ரில 100, 101 பஸ்சுக்காக காத்திருந்தோம். வழமையாக நிமிஷத்துக்கு நிமிஷம் வாற பஸ் அண்டைக்கெண்டு வரவே இல்லை. அப்பொழுதுதான் அவன் தன் திருவாய் திறந்தான்.....! "சமாதானக் காலம் எண்டபடியால் நாங்கள் எல்லாரும் நிம்மதியாத் திரியிறம்! இல்லாட்டில்... மனிஷர் இப்பிடித் திரிய ஏலுமே?" என தொடங்கினான். "இப்பதான் இவங்கள் எல்லாருக்கும் புத்தி வந்திருக்கு....." என இழுக்க, அவன் யாரையோ குறிப்பாக் குத்திக் காட்டினமாதிரி எனக்கு விளங்கிச்சு! எனக்கு பொறுக்கேல...!!! இவன் சின்னவன் இல்ல... "ஜின்னா" போலதான் கிடக்கு. ஆனாலும் எனக்கு வாய் சும்மா கிடக்காது இந்த விசயத்தில. நான் திருப்பிக் கேட்டேன்..... "அரசாங்கத்துக்கு புத்தி வாறதுக்கு யார் காரணம்...... ஆனையிறவுவரைக்கும் குடுத்ததுதானே....?!" காரணம் என்றேன். அதுக்கு அவன் சொன்னான்...... "என்னத்தை அடிச்சாலும், பிடிச்சாலும் அவனவன் குடுக்கோணும்! சண்டை பிடிக்கிறத விட்டிட்டு சமாதானமாப் போகட்டும்.... அப்பதான் குடுப்பாங்கள் நல்லா....!" என இரட்டை அர்த்தத்தோடு சொல்லி அவன் சிரித்தது......... எனக்கு புரியவேயில்லை!

இன்னும் என்னென்னமோ நிறையக் கதைத்தான். அந்த "ஜின்னா"வின் கதைகளில் கடுப்பாகிய நான், எதையும் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை! சாப்பாட்டுக்கு காசு குடுத்தான்...... என்ற ஒரே காரணம் மட்டுமல்ல... முழுசா யாரென்றே தெரியாத இவனோடு எனக்கு என்ன பேச்சென்று....... ஒரு வறட்டுப் புன்னகையுடன் உட்கார்ந்திருக்க, அந்தப் பாழாய்ப்போன 100 ஆம் நம்பர் பஸ் வந்து சேர்ந்தது. அதுக்கு கோர்ன் வேற... பஸ் ஓட்டுறவருக்கு தான் ஏதோ ஏ.ஆர்.ரகுமான் என்ற நினைப்பு போல! அந்த நேரத்தில அதுகூட என்னைக் கடுப்பாக்கியது.

அவன் பஸ்சேறி விடைபெறும்போது ஒரு தொல்லை தீர்ந்தது......! என நினைத்துக்கொண்டேன்!

இதன் பின் நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. என் வாழ்க்கையிலும் பலவகையான எதிர்பாராத மாற்றங்கள் வந்து போயிற்று. ஆட்சி மாற்றங்களும் ஆயிற்று. சமாதானப் புறா இலங்கையையும் ஈழத்தையும் விட்டு தொலைதூரமாய் பறக்கத் தொடங்கிய காலத்தில் 'கொஞ்சம்' சூடானது கொழும்பும்தான்.

மீண்டும் குண்டுச்சத்தங்கள் கேட்க ஆரம்பித்த நாட்களின் ஒரு செய்தித்தாளின் தலைப்புச் செய்தியும்.....அதன் கீழ் பெரிதும் சிதையாத நிலையில் ஒரு தலை மட்டும் தனியாக வைக்கப்பட்டு இருந்த புகைப்படமும் என்னை நிலைகுலைய வைத்தது.

அந்தத் தலை "ஜின்னா"வினுடையதல்ல.... சின்னவனுடையது என்பதை என் மனம் உணர்ந்தபோது... நான் இன்னும் மறக்காத அவனது பேச்சும்... அவனது செயலும்... என் மூன்றாம் கண்ணைத் திறந்துவிட்டு என்னை ஏதோ உறுத்தியது!!! இன்றுவரை அவனுக்கு நான் கடன்பட்டவன்தான்!!! அவன் எனக்குக் கொடுத்த சாப்பாட்டுக் காசைவிட அவன் கற்றுத் தந்துவிட்டுப் போன மூன்றாம் கண்ணுக்கும்தான்!

என்றுதான் அந்த தற்கொடை உறவின் கடனை அடைப்பேனோ ? தெரியவில்லை....!!!???

அவன் உங்களுக்கும் உறவென்று நீங்கள் நினைத்தால்.....

மூன்றாம் கண்ணும் அவசியம்.......அவன் கடன் தீர்ப்பதும் அவசியம்!

(முற்றும்.)

கடுகைக் குறுக்கி காரநெடியாக்கி வெளிக்கொண்டுவரும் உத்தி உங்களுக்கு நிறையவே இருக்கின்றது !!! இத்துடன் நில்லாது மேலும் பல கதைகளை நீங்கள் கதைக்கவேண்டும் . எனது மனமார்ந்த பாராட்டுக்கள் :) :) :) 1.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கரு

அதை வடிவமைத்தவிதமும் முடித்த விதமும் அருமை

இப்படி எத்தனையோ கதைகளை அல்ல நிஐங்களுக்குள் வாழ்ந்தவர் நாம்.

அதுவே எமக்கிருக்கும ஒரேயொரு பெருமை.

வெளியில் கொண்டுவர முயற்சிக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்

நல்லதொரு நிஜ( கதைக்கு) நன்றிகள் கவிதை. உங்கள் எழுத்து நடையும் விடயத்தை சொல்லிய விதமும் அருமை. தொடர்ந்து பல படைப்புக்களை எதிர்பாக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கவிதை, வாழ்த்துகள் !

  • தொடங்கியவர்

எனது இந்தக் கதை ஒரு நிஜ சம்பவத்தினைத் தழுவி எழுதப்பட்டது. இதனை விரிவாக எழுதமுடியாத சூழ்நிலைகள் காரணமாக, இன்னும் விளக்கமாக எழுதமுடியவில்லை என்பதற்கு வருந்துகின்றேன்! ஆனாலும்...... இக்கதை சொல்ல வந்த விடயங்கள், தங்களை சென்றடைந்திருக்கும் என முழுமையாக நம்புகின்றேன்!

கருத்தும் ஊக்கமும் கொடுத்த உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்! நிச்சயமாக மீண்டும், இன்னுமொரு நிஜத்துடன்... இன்னொரு கோணத்தில் ... கதையுடன் வருவேன்! எனது கதையோ, கவிதையோ ..... நிஜத்தினை மட்டுமே தாங்கிவரும்!

அதுவரை......... நன்றிகள் கூறி கவிக்கரையில் நான்..........! :)

நன்றி உறவுகளே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.