Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக கேரள எல்லையில் தீவைப்பு – தடியடி - பள்ளிகள் மூடல் பெரும் பதட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kerala%20border_CI.jpg

கேரளம் தமிழகம் இடையே முல்லைப் பெரியாறுயை கேரளாவைச் சார்ந்தவர்கள் இடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடலூரிலிருந்து கேரளா நோக்கி பேரணியாக கிளம்பினார்கள். கடந்த மூன்று தினங்களாக இந்த பெருந்திரள் பேரணி நடந்து வருகிறது. இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தேனிஇ கூடலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓடாததால் பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போடியில் கேரளாவைச் சார்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு சிலர் தீவைத்தனர். மத்திய அரசுக்குச் சொந்தமான ரப்பர் அலுவலகத்தை சிலர் தாக்கினர் இதனால் பெரும் பதட்டம் அப்பகுதியில் நிலவுகிறது.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இக்கட்டான தருணத்தில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தாய்த்தமிழக உறவுகள் பக்கம் நிற்கவேண்டியது காலத்தின் கட்டாயம்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஆனால் அவர்கள் என்னும் டில்லியின் இந்தியா மாயைக்குள் இருந்து ஜே கிந் .. வந்தேமாதரம்.... பாடுவதை நிறுத்தி யதார்த்தமாக தமிழனாக வாருங்கள் அப்போது ஈழத்தமிழன் உணர்வு பூர்வமாக உதவுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

அழிவுகளும் இழப்புகளும் ஈழத்தமிழனுடன்போகட்டும்.

பேச்சு மற்றும் ஐனநாயக அடிப்படையில் இதைத்தீர்க்க அதிகாரத்திலுள்ளோர் ஊடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் நெருப்புடன் விளையாடுவதற்கு சமனாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழிவுகளும் இழப்புகளும் ஈழத்தமிழனுடன்போகட்டும்.

பேச்சு மற்றும் ஐனநாயக அடிப்படையில் இதைத்தீர்க்க அதிகாரத்திலுள்ளோர் ஊடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் நெருப்புடன் விளையாடுவதற்கு சமனாகும்.

விசுகு நீங்கள் என்னும் சிறீலங்கா இந்தியா ஜனநாயகத்தை நம்புகின்றீர்களா ? இந்த நாடுகளில் எங்கு ஜனநாயகம் உள்ளது இவர்கள் குடும்ப அராஜக ஆட்சி எல்லோ நடைபெறுகின்றது. ^_^

சும்மா தமாஷ் பன்னாதிங்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் நம்புவதாக எங்கும் எழுதவில்லை.

ஆனால் அப்படி ஒன்று இருந்தால் அதை உடனடியாக செய்யுங்கள் என்றுதான் எழுதினேன்.

அத்துடன் அதைச்செய்யாது விடில் அதன் விளைவுகள் பயங்கரமானவை என்பதையே குறிப்பிட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
011211satish.jpg

தமிழ்நாடு இந்தியாவுக்கு சொந்தமானது தானா ?

முல்லை பெரியாறு கேரளதுக்கு சொந்தம். கடல் ஸ்ரீலங்காவுக்கு சொந்தம் சொல்லுவது இந்திய அரசு

.

mahi-man.jpg

இந்திய அரசு சிங்கள அரசுடன் இணைந்து ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தின் ஈரம் காயுமுன், மலயாள அரசியல்வாதிகளின் அப்பட்டமான பிடிவாதத்தை மறைமுகமாக வழிமொழிந்து தமிழகத் தமிழர்களுக்கு மீண்டுமொரு துரோகம் ஈடேற்ற துணை பொய்க்கொண்டிருக்கிறது.

தமிழகம், கேரளம், இரு மானிலங்களுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்துவந்த முல்லை பெரியாறு நீர் பங்கீட்டு பிரச்சினை விரிசல் விரிவடைந்து இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கிடையில் உண்டாகும் போருக்கான முஸ்தீபுகள் போல நிலைமை மாறியிருக்கிறது.

உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நிலைமையை சீராக்கவேண்டிய பொறுப்பு நடுவண் அரசுக்கு உண்டு. ஆனால் இந்திய நடுவண் அரசு கையாலாகாத்தனமாக மலயாள தேசத்தை காப்பாற்ற மூன்றாவது தரப்பு மத்தியஸ்தர்போல செயற்படுகிறது.

ஒரு நாட்டுக்குள் உள்ள இரண்டு மானிலங்களுக்கிடையிலான இந்தப்பிரச்சினை மிக நுண்ணியமாக கையாளவேண்டிய ஒன்று என்பது மறுக்கமுடியாதது.

எது எப்படியிருந்தாலும் தமிழகத்தின் பாசன வசதிக்காக மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து அரபிக்கடலுக்கு வீணாக சென்றுகொண்டிருந்த நீரை தடுத்து 1000 ஆண்டுகளுக்குமுன் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. முல்லை பெரியாறு அணை.

அணை தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் அணைக்கு பங்கம் வருமாகவிருந்தால் பாதிப்புக்குள்ளாகப்போவது தமிழகம் என்பதே நிதர்சனம். தாக்கம் அப்படி இருப்பதால் நியாயமான தீர்வு கிடைக்கும்வரை தெருவில் இறங்கவேண்டிய கட்டாயம் தமிழகத்து மக்களுக்கு கட்டாயமாகியிருக்கிறது.

தமிழக முதல்வர் அவர்கள் தமிழக மக்களை அத்து மீறவேண்டாம் என்றும் கேட்டிருக்கிறார். அதேநேரம் ஏற்கெனவே நீதிமன்றம் பரிந்துரைத்த உண்மயின் அடிப்படையில் பிரச்சினையை திசைதிருப்பாமல் அமைதியான முறையில் நிரந்தரமாக பிரச்சினையை தீர்வுகாண மத்திய அரசை உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்குமாறு கேட்டிருக்கிறார்.

ஆனால் மத்திய காங்கிரஸ் அரசு நீதிமன்ற தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு பிரச்சினையை அரசியலாக்கவே முனைப்பு காட்டி வருகிறது. கேரள அரசியல் கட்சிகளின் பொய் பிரச்சாரத்துக்கு வழிவிட்டு இரு மானிலங்களுக்குமிடையில் ஒரு மோதலை உருவாக்கி அதன்மூலம் கேரள அரசியல்வாதிகளின் திட்டத்துக்கு சாதகமாக முடிவை சாய்த்துவிடவே நடுவண் அரசு விரும்புவதாகத்தெரிகிறது.

ஒரு இந்தியா என்ற தாரக மந்திரத்தின்கீழ் இந்தியத்துணைக்கண்டம் இருந்துவருகிறது. அந்த அடிப்படையில் அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு மானிலத்தின் புவியியல் தன்மைசார்ந்து, ஒரு மானிலத்தின் இயற்கைவளம், மற்ற மானிலத்துக்கும் பரிவர்த்தனை செய்யவேண்டிய கடப்பாடு உண்டு. வளங்கள் பங்கிடுவதன் மூலமே ஒரே நாடு என்ற சுலோகம் உயிர்ப்புடன் இருப்பதற்கும் நாடு வளமாவதற்கான மூலமும் ஆரம்பமாகிறது.

வெள்ளப்பெருக்கு ஏற்படுங்காலங்களில் தமிழ்நாட்டை நோக்கி வெள்ள நீரை கடத்தி சங்கடத்தை உண்டுபண்ணுவதும் வறட்சியான காலங்களில் நீரை தடைசெய்வதும் ஒரு மானிலத்தை அழிக்கும் செயலாகவே இருக்கும். இவற்றை உணர்ந்து பாகுபாடற்ற நெறிமுறைகளை அறிமுகப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கே உண்டு.

முடியாத பட்சத்தில் ஒவ்வொரு மானிலத்துக்கும் சுதந்திரப்பிரகடனம் செய்து அவரவர் போக்கில் விட்டுவிடவேண்டிய தர்மத்தை பின்பற்றவேண்டியவர்களாகின்றனர். தேர்தல் காலத்தில் கொள்கையற்ற கூட்டணி அமைக்கும் அரசியல்வாதிகள் தொட்டதற்கெல்லாம் கூட்டணி தர்மம் காக்கிறோம் என கூவுபவர்கள். கூட்டு மானிலங்களின் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையை கையாளமுடியாவிட்டால் அரசியல் சாசன விதிகளை மீறிய குற்றவாளிகளாகின்றனர்.

ஒவ்வொரு மானிலங்களும் நாட்டின் உயர் மையமான நீதித்துறையின் கட்டளைகளை கருத்திலெடுக்காமல் தாம் நினைப்பதை நிறைவேற்ற நினைப்பார்களாக இருந்தால் அந்த நாட்டின் இறையாண்மை வகிக்கும் பங்குதான் என்ன. எதையும் தனித்தனியாக கையாளும் பிடிவாதப்போக்கு இருக்குமானால் அரசியல்ச்சாசனம் எதை செய்துவிடப்போகிறது.

1947க்கு முன் இந்திய தேசத்து மக்கள் ஆங்கிலேயருடன் போராடி மகாத்மா காந்தியின் தலைமையில் சுதந்திரத்தை ஒரு இரவுப்பொழுதில் பெற்றனர். ஆனாலும் அம்மக்கள் விடியலை இன்னும் தரிசிக்கவில்லை. இங்கிலாந்திலிருந்து விடுபட்டபின், உருவான இந்திய தேசியக்காங்கிரஸ் இத்தாலியிடம் சிக்கியிருக்கிறது.

இந்தியாவின் இன்றய தலைவிதி,. பிரதமர், ஜனாதிபதி, நீதித்துறை சுயமாக செயற்படமுடியாமல் அடிமைப்பட்டு கிடக்கின்றன. இன்னுமொரு போராட்டத்தின் பின் ஒரு பகலில் இத்தாலியிடமிருந்து சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே மக்களுக்கு ஏதாவது விமோசனம் கிடைக்கக்கூடும்.

ஈழதேசம் இணையத்திற்காக.

கனகதரன்.

http://www.eelamview...u-not-in-india/

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg 18.12.11 கவர் ஸ்டோரி

‘‘முல்லைப் பெரியாறு அணை எங்களின் உயிராதாரம். அதைத் தாண்டி கேரள அரசு அத்துமீறி புது அணையைக் கட்டினால், அதையும் தாண்டிப் போனால்... எங்கள் மனதின் எரிமலை தூங்காது; லேசாக புகை கக்கும் இந்த எரிமலை நிச்சயம் சிதறி தீக்குழம்பை வீசும்’’ என கோபாவேசத்தோடு திரண்டு குமுளியை முற்றுகையிட்டி ருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான தேனி மாவட்ட மக்கள்.

சாதாரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம் இப்போது வன்முறையின் முகமாகிவிட்டது. கேரளாவுக்குச் செல்லும் 13 பாதைகளையும் விவசாயிகள் மறித்து சாலைகளில் மரங்களையும், பாறாங்கற்களையும் போட்டு எல்லா வாகனங்களையும் தடுத்துவிட்டனர். இதனால், காய்கறி, பால், இறைச்சி போன்றவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்கள் எல்லாம் நின்றுவிட்டன.

தமிழக எல்லைப் பகுதியில் உள்ள சுரங்கனார் நீர்வீழ்ச்சியும், இயற்கை அழகையும் காண வெளிநாட்டுப் பயணிகள் இங்கு வருவது வழக்கம். இவர்களை அழைத்துச் செ ல்ல கேரள சுற்றுலாத் துறை சொகுசு மாட்டு வண்டிகளை இயக்கும். போராட்டத்தின் 2-வது நாளில், கேரள அரசைத் கண்டித்து பேரணி நடத்தியவர்கள், குருவனூத்து பாலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வண்டிகளை எரித்தனர். அங்கிருந்த அலுவலகத்தையும் நொறுக்கினர். கூடலூர் -லோயர் கேம்ப் காக்கனோடையில் கேரள மாநிலத்தவர் நடத்திய கயிறு தொழிற்சாலையையும் கொளுத்தினர். அதோடு ஜீப், மினி வேன்கள் மீது தீ வைத்தனர்.

01a.jpg

கம்பம், சின்னமனூர், கூடலூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆக்ரோஷமாக குமுளி நோக்கி டிராக்டர்களில் சென்றனர். அவர்களது கோஷம் காட்டையே அதிரவைத்தது. இப்படி திரளும் கூட்டத்தைத் தடுத்து சமாதானப்படுத்தி, ‘வன்முறை வேண்டாம். இரு மாநில அரசுகளும் நல்ல தீர்வு எடுக்க முடியும்’ என ஐ.ஜி. ராஜேஷ் தாஸ், தேனி எஸ்.பி. பிரவீன்குமார் கோரிக்கை வைத்தனர். இருந்தும் ஆத்திரமான மக்கள் தடுப்பு வேலிகளை உடைத்தனர். வேறு வழியின்றி போலீஸ் தடியடி நடத்தியது. இந்நிலையில், கொந்தளிக்கும் மக்களை அமைதிப்படுத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் லோயர் கேம்ப் புது ரோடு வழியாக அங்கு வந்தார். கோபப்பட்ட விவசாயிகளும், மக்களும் அவர் காரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். கற்களும் வீசப்பட்டன.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

முல்லைப் பெரியாறு பிரச்னை ஆசிட் பிரச்னையாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், ‘‘இன்று பற்றி எரிகிற முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையை ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் எனது தாத்தா மார்ஷல் நேசமணி, ‘முல்லைப் பெரியாறு முழுக்க தமிழகத்திற்கே சொந்தமானது’ எனக் கூறி, ஆதாரங்களை முன்வைத்து அனல் தெறிக்கப் பேசினார். அதை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என வீரியத்துடன் குரல் கொடுத்திருக்கிறார் அவரது பேரன் ரஞ்சித்.

‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ என்ற கட்சியை நிறுவி, கேரள தமிழ்ப் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராடியவர் மார்ஷல் நேசமணி. 1955-ம் ஆண்டு தனது கட்சி சார்பில் நாகர்கோயில் எம்.பி.யாக போட்டியிட்டு ஜெயித்த அவர், நாடாளுமன்றக் கூட்டத்தில் தனது கன்னிப் பேச்சிலேயே முல்லைப் பெரியாறு விவகாரத்தை த்தான் அதிகம் வாதாடினார். அவரது நாடாளுமன்ற உரைத் தொகுப்புகளைப் பத்திரமாக பாதுகாத்து வரும் ரஞ்சித், “இன்றைய குமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட கேரள தமிழ்ப் பகுதிகளை த01c.jpgமிழகத்துடன் இணைப்பதற்காக அப்போது உக்கிரமான போராட்டம் நடந்தது. அன்று தமிழ்நாடு காங்கிரஸ் க ட்சி இந்தப் போராட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை. திருவிதாங்கூர் தமிழர்களுக்காக எங்கள் தாத்தா மார்ஷல் நேசமணி மட்டும்தான் குரல் கொடுத்தார். 1955-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மாலையில் நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு பெற்றவர், தொடர்ந்து மறுநாள் காலையிலும் பேரவைத் தலைவரின் அனுமதி பெற்று தமிழர்களின் து யரங்களைப் பட்டியலிட்டார். தேர்ந்த வழக்கறிஞரான அவரது ஆதாரபூர்வ வாதங்களுக்கு அன்றைய கேரள எம்.பி.க்களால் மறுப்பு எதுவும் சொல்ல முடியவில்லை.

‘முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் 1889-ம் ஆண்டு வரை திருவிதாங்கூரின் பகுதியே அல்ல. பூஞ்சார் ராஜா என்கிற பாண்டிய மன்னனின் ஆளுகையில்தான் அப்பகுதி இருந்தது. கண்ணன் தேவன் தேயிலை நிறுவனத்தினர் அப்பகுதி நில குத்தகை சம்பந்தமாக 1879-ம் ஆண்டு பூஞ்சார் ராஜாவுட ன்தான் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் பெரியாறு அணைப் பகுதிக்குச் செல்ல கேரளாவிலிருந்து பாதையே கிடையாது. குமுளி, போடி, கம்பம் மற்றும் தமிழக சிறு கணவாய்கள் வழியாகத்தான் தேவிகுளம், பீர்மேட்டிற்குத் செல்ல முடியும். இந்த தகவல் 1951-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது. ஆனால் 1879-க்கும், 1885-க்கும் இடைப்பட்ட காலத்தில் பூஞ்சார் ராஜாவிடம் இருந்து திருவிதாங்கூர் மன்னர் குத்தகை அடிப்படையில் அந்தப் பகுதியைப் பெற்றார். அதனால் 1885-ல் பெரியாறு அணை ஒப்பந்தத்தின்போது அப்போதைய மத்திய அரசு செயலர் தேவையின்றி திருவிதாங்கூர் அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு விட்டார். பெரியாறு அணை சென்னை மாகாணப் பகுதிகளின் பாசனத்திற்கு அவசியத் தேவை என்பதால் அப்பகுதியை தமிழகத்துடனேயே இணைக்க வேண்டும்’ என ஒலித்துச் சொன்னார் நேசமணி.

01b.jpg

அப்போது கேரள எம்.பி. மீனச்சல் கொடுக்காப்பள்ளி என்பவர் குறுக்கிட்டு, ‘பூஞ்சார் ராஜா, திருவிதாங்கூர்காரர்’ என குரல் கொடுத்தார். அதையும் ஆதாரபூர்வமாகப் நேசமணி முறியடித்தார். நேசமணியின் குரலுக்கு அன்றே தமிழக காங்கிரஸ் முழுமையாக துணை நின்றிருக்குமானால் முல்லைப் பெரியாறு, நெய்யாறு போன்ற அணைப் பிரச்னைகளில் கேரளாவிடம் கையேந்தும் அவசியமே தமிழகத்திற்கு வந்திருக்காது. எங்கள் தாத்தாவின் வழியில் நாங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தாலும்கூட, அ.தி.மு.க. மீது எங்களுக்கு பெரிய மரியாதை உண்டு. காரணம், நேசமணியின் பெயரில் போக்குவரத்துக் கழகம் அமைத்தது எம்.ஜி.ஆர். அரசுதான். அதேபோல நேசமணியின் நூற்றாண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தது, ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அரசு. நேசமணி மீது பற்றுகொண்ட முதல்வர் ஜெயலலிதா, அவர் முன்வைத்த ஆதாரங்களையும் பயன்படுத்திக்கொண்டு முல்லைப் பெரியாறு அணையை வென்றெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை’’ என்று தெளிவாகச் சொல்கிறார் நேசமணியின் பேரன் ரஞ்சித்.

வந்தார்... போனார்..!

‘டேம் 999’ படம் குறித்து தமிழக உள்துறைச் செயலாளரிடம் விளக்கம் அளிப்பதற்காக இயக்குநர் சோகன் ராய் கடந்த 12-ம் தேதி காலை01d.jpg சென்னைக்கு வந்தார். அவருக்கு எதிராக போராட்டம் நடக்கக்கூடும் என்பதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எழும்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியவர் 10.30க்கு உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ராவைச் சந்தித்தார். அவருடன் அவரது பாடிகார்டுகள் மூவரும் வந்திருந்தனர். வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்களிடம், உள்துறை முதன்மைச் செயலாளரைச் சந்தித்த பிறகு பேசுவதாகக் கூறி உள்ளே சென்ற சோகன் ராய், ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தார். ஆனால், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் காரில் புறப்பட்டுச் சென்றார். கடும் எதிர்ப்பு இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த வருகை எந்த ஒரு சலசலப்பும் இன்றி முடிந்தது.

விரட்டும் கம்பம்...

வரவேற்கும் ஆரியங்காவு!

முல்லைப் பெரியாறு பிரச்னையால் கனல் உமிழ்ந்து கொண்டிருக்கிறது கம்பம். விரதமிருந்து ஐயப்பனைக் காணச்செல்லும் பக்தர்களை கேரள எல்லைக்குள்ளேயே விடாமல் தடுத்து விரட்டுகிறார்கள் மலையாளிகள். ஆனால் அதற்கு நேரெதிராக தமிழக பக்தர்களை 01e.jpgஇனிமையாக வரவேற்று உபசரித்து இரு மாநில ஒற்றுமைக்கும் பாலம் அமை த்துக் கொண்டிருக்கிறது மற்றொரு எல்லைப் பகுதியான ஆரியங்காவு.

மேற்குத் தொடர்ச்சி மலையின் செங்கோட்டை கணவாயில் அமைந்திருக்கிறது கோட்டை வாசல். தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியான இந்த இடம் ஆரியங்காவு பஞ் சாயத்துக்கு உட்பட்டது. கடந்த 8-ம் தேதி இந்தப் பஞ்சாயத்துத் தலைவி அய்யம்மாள், துணைத் தலைவர் சலீம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் திடீரென்று கோட்டை வாசல் பகுதிக்கு வந்து ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை மறித்தனர். ‘கம்பத்தில் பிரச்னை என்றால் இங்கேயுமா?’ என்று நொந்துகொண்டு வாகனங்களை நிறுத்தினார்கள் பக்தர்கள். ஆனால், கீழே இறங்கிய அவர்களுக்கு அதிர்ச்சிக்குப் பதில் வியப்புதான் காத்திருந்தது. ஒரு தாம்பூலத் தட்டில் பூக்கள், இனிப்பு, குங்குமம் ஆகிய மங்கலப் பொருட்களை வைத்து அவர்களை வணங்கி வரவேற்றிருக்கிறார் அய்யம்மாள். அவரின் அன்புக்கு நன்றி தெரிவித்து சந்தோஜமாக பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.

ரிப்போர்ட்டர் டீம்

- குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்று... பொறியியலாளர்களும், உச்ச நீதிமன்றமும் சொல்லும் போது...

அதனை இடிக்க அவசரம் காட்டும், கேரள அரசை பதவிநீக்கி ஆளுநர் ஆட்சியை கொண்டுவர, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மத்திய அரசு அதிக வேகம் காட்டாமல் இருப்பதைப் பார்க்க, கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசால்... கேரள அரசை தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதக்கு எதிரான போராட்டங்களை தணிப்பதற்காக மத்திய அரசும் கேரளா அரசும் சேர்ந்து போட்ட திட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

என்று துணியும் எங்கள் தமிழக வீரம்.

அன்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்று துணியும் எங்கள் தமிழக வீரம்...

அன்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்...

அஃதே!

தமிழகத்தில் தோன்றும் எந்தவொரு மக்கள் எளுச்சியையும் , அதை முளையிலேயே கிள்ளி சுகங்கண்ட பெருமை திராவிட கட்சிகளுக்கு உண்டு . தனித்தமிழ்நாடு கோரிக்கையுடன் ஆட்சி ஏறிய அண்ணாத்துரை அடித்த குத்துக்கரணத்தின் விளைவுகளை இன்று தமிழக அப்பாவி மக்கள் அனுபவிக்கின்றனர் . நாங்கள் உணர்ந்த ரணமும் வலியும் நீங்கள் உணரக்கூடதுதான் :( :( . ஆனால் , கடித்துக் குதறவரும் வெறிநாய்க்கு பயந்து ஓடாமல் அதை ஒரு கல்லுடனாவது எதிர்த்து நில்லுங்கள் . அப்பொழுது நாய் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடும் . முக்கியமாகத் தமிழக உறவுகளே !!!!!! யாருக்கும் அனுதாபத்திற்குரியவர்களாக இருக்காதீர்கள் . உங்களுக்குரிய பாதுகாப்பை வழங்காத இந்தியாவுடன் தேனிலவு கொண்டாடப்போகின்றீர்களா ????????????? யோசியுங்கள்!!!!!!!!!!! :( :( :( .

Edited by komagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.