Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது – சயனைட் அருந்தியும் காப்பாற்றப்பட்டார்

Featured Replies

புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது – சயனைட் அருந்தியும் காப்பாற்றப்பட்டார் - [ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 09:08 GMT ] [ கார்வண்ணன் ]

STF1.jpgவிடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் சிறிலங்காவின் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதான சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும் அடங்கியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலை செய்வதற்கு மூன்று திட்டங்களை கொண்டிருந்ததாகவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளின் போது அவர்கள் கூறியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே மற்றும் அமைச்சர் மகிந்த விஜேசேகர ஆகியோர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு இவர்களே திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், இவர்கள் எப்போது கைது செய்யப்பட்டனர் என்ற விபரத்தை கொழும்பு ஆங்கில நாளிதழ் வெளியிடவில்லை.

சிறிலங்காவில் துப்பாக்கிச் சண்டை, இரண்டு பேர் பலி

சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள மித்தெனிய என்ற இடத்தில் இன்று அதிகாலை ஆயுதக்குழு ஒன்றுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்டம் மித்தெனியப் பகுதியில் உள்ள ஜுலாப்பிட்டிய என்ற இடத்தில் ஆயுதக்குழுவொன்றின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்த அந்த இடத்துக்கு சிறலங்கா காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் ஆயுதக்குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது.

இந்தச் சண்டையில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து இரண்டு ரி-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த மோதலின் போது ஆயுதக்குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

http://www.puthinappalakai.com/view.php?20111224105260

:(
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசு எதோ ஒரு காரணத்துக்காக மீண்டும் புலிகள் என்ற பேச்சை எடுத்துள்ளது இது கண்டிப்பாக தங்களை பாதுகாக்கும் நோக்கமாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்தால் பொட்டம்மானை உயிரோடு பிடித்த மாதிரி இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பைப் பார்த்தால் பொட்டம்மானை உயிரோடு பிடித்த மாதிரி இருக்கு

அப்ப ஆரப்பா அவர்

  • தொடங்கியவர்

தலைப்பைப் பார்த்தால் பொட்டம்மானை உயிரோடு பிடித்த மாதிரி இருக்கு

புலிகளின் தலைமைப்பீடத்தை இன்னுமொரு நாடு கையளிக்கும் பட்சத்தில் நீங்கள் சொல்வது சாத்தியமாகலாம்

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்தால் பொட்டம்மானை உயிரோடு பிடித்த மாதிரி இருக்கு

அப்படி என்றால் பொட்டம்மானும் உயிரோடு இருக்கின்றார் நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், அவரும் பிரபாகரனோடு இணைந்து ஐந்தாம் கட்ட ஈழப் போரைத் தொடங்குவார் என்று கனவு கண்டு கொண்டிருக்கின்றீர்களோ?

அப்படி என்றால் பொட்டம்மானும் உயிரோடு இருக்கின்றார் நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், அவரும் பிரபாகரனோடு இணைந்து ஐந்தாம் கட்ட ஈழப் போரைத் தொடங்குவார் என்று கனவு கண்டு கொண்டிருக்கின்றீர்களோ?

இல்லை நிர்மலன், அந்தக்கனவு உங்க தலைவர் கேபி, அஸ்டாங்கமாக வீழ்ந்து சரணடைந்ததும் முடிந்து விட்டது(காலம் காலமாக காட்டிக்கொடுத்தது இப்போதுதான் புரிகிறது, என்ன செய்யலாம்)!!!! .

.. இப்ப இருக்கும் கனவு, யுத்தக்குற்றச்சாட்டுக்கள்/இனவழிப்பு/மனித உரிமை மீறல்களுக்கு நீதி சர்வதேசத்தினூடாக தேடுவதன் மூலம், அங்குள்ள மக்களுக்கு ஓர் வாழ்வை அமைத்துக் கொடுக்கலாம் என்பதே!!!!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை.. மகிந்த மட்டுமல்ல.. பொன்சேகாவும் தனது இருப்புக்காக பாவிப்பார்.. ரணிலும் பாவிப்பார்.. கெல உறுமையும் பாவிக்கும்.. ஜே வி பியும் பாவிக்கும்.. கருணாவும் பாவிப்பான்.. டக்கிளசும் பாவிப்பான்.. சங்கரியும் பாவிக்கும்.. சித்தார்த்தனும் பாவிப்பான். அந்த வகையில் இப்படியான செய்திகள்.. எம்மை அடைவது ஒன்றும் ஆச்சரியமில்ல. இதெல்லாம் சிரீலங்காவின் சகஜம்..!

இப்ப எல்லாம் சிங்கள அகராதியில் முடிஞ்சு போன புலிகள் அடிக்கடி உயிர்கிறது நடக்குது.. யாரையோ போட்டுத்தள்ள சிங்களம் தயாராகுது என்பதே இதன் பின்னணி. அது சொந்த இனத்துக்கையா இருக்கலாம்.. மாற்று இனங்களில ஆக இருக்கலாம்.

நீலப் பறவை நீங்கள் பதியும் விடுதலைப் புலிகள் பற்றிய செய்திகளுக்கு சிலர் எங்கிருந்தாலும் ஆஜராகி பதில் சா.. கொள்கை விளக்கம் அளிக்கனமே அதெப்படி. ம்ம்.. தலைவர் எல்லாப் பொறுப்பையும் இவையட்டத்தான் கொடுத்திட்டுப் போயிருக்கிறாரோ..! :(:rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

புலிகளை.. மகிந்த மட்டுமல்ல.. பொன்சேகாவும் தனது இருப்புக்காக பாவிப்பார்.. ரணிலும் பாவிப்பார்.. கெல உறுமையும் பாவிக்கும்.. ஜே வி பியும் பாவிக்கும்.. கருணாவும் பாவிப்பான்.. டக்கிளசும் பாவிப்பான்.. சங்கரியும் பாவிக்கும்.. சித்தார்த்தனும் பாவிப்பான். அந்த வகையில் இப்படியான செய்திகள்.. எம்மை அடைவது ஒன்றும் ஆச்சரியமில்ல. இதெல்லாம் சிரீலங்காவின் சகஜம்..!

இப்ப எல்லாம் சிங்கள அகராதியில் முடிஞ்சு போன புலிகள் அடிக்கடி உயிர்கிறது நடக்குது.. யாரையோ போட்டுத்தள்ள சிங்களம் தயாராகுது என்பதே இதன் பின்னணி. அது சொந்த இனத்துக்கையா இருக்கலாம்.. மாற்று இனங்களில ஆக இருக்கலாம்.

நீலப் பறவை நீங்கள் பதியும் விடுதலைப் புலிகள் பற்றிய செய்திகளுக்கு சில எங்கிருந்தாலும் ஆஜராகி பதில் சா.. கொள்கை விளக்கம் அளிக்கனமே அதெப்படி. ம்ம்.. தலைவர் எல்லாப் பொறுப்பையும் இவையட்டத்தான் கொடுத்திட்டுப் போயிருக்கிறாரோ..! :(:rolleyes::icon_idea:

வயலில் விதைக்கும் போது ஒரேயினத்தைத்தான் விதைக்கின்றோம்.சில வேளைகளில் கறுப்பு எள்ளுடன் வெள்ளை எள்ளு சேர்ந்திருக்கும்.இவைகளை அகற்றுவது மிக கடினம்.கறுப்பெள்ளில் வெள்ளை எள்ளின் ஆதிக்கம் கூடும் போது........ அந்த சந்தர்பத்தில் முழு விதையையும் அழிக்க வேண்டும்.இதை விட பிற களைகளை களை நாசினி மூலம் மற்றும் களை பிடுங்குவது மூலமும் அகற்ற முடியும்.இதை வடிவாக புரிந்துகொண்டால் எந்த களை எம்முடன் உண்டு என்பதையும் வருகிற மார்கழி21,2012 முழு விதையையும் அழிக்க வேன்டிய தேவையும் உண்டு என்பதையும் மறுக்கமுடியாது,இது ஒரு அளவையியல் மொத்த மனித இனத்திற்கே பொருந்தும்

மார்கழி21,2012

இது நடக்குமென்று தான் இவ்வளவு நாளும் நிம்மதியாய் இருந்தான்.

தச்சலா நடக்காமல் போனால்?

ஐயோ... நினைத்துப் பார்க்கவே பயமா இருக்கு.

Edited by Sooravali

சில நல்லவர்கள் உயிருடன் இருப்பது பல கெட்டவர்களுக்கு வயித்தில் புளிய கரைக்குது!!!!!! கேபி ஆதரவாளர்களே உசார்........ உங்க மங்காத்தா ஆட்டத்தை நிறுத்துங்கோ ........... இருக்க வேண்டியவர்கள் இருக்குறார்கள். காலம் வெகு விரைவில் பதில் சொல்லும்

சும்மா வந்து எங்களை உசுப்பெத்துங்கோ. நடந்தால் எங்களுக்கும் ஆசை தான்.

  • தொடங்கியவர்

இது நடக்குமென்று தான் இவ்வளவு நாளும் நிம்மதியாய் இருந்தான்.

தச்சலா நடக்காமல் போனால்?

ஐயோ... நினைத்துப் பார்க்கவே பயமா இருக்கு.

article-2077708-0F3F456200000578-751_634x387.jpg

இதை வைத்துக்கொண்டே முழியை பிதுக்குகிறார்கள்! இப்படியொரு உலோகமே உலகில் இல்லை என்கிறார்கள்.உலகின் மொத்த விஞ்ஞானிகளும் நமீபியாவில் முகாமிட்டுள்ளார்கள்

சில நல்லவர்கள் உயிருடன் இருப்பது பல கெட்டவர்களுக்கு வயித்தில் புளிய கரைக்குது!!!!!! கேபி ஆதரவாளர்களே உசார்........ உங்க மங்காத்தா ஆட்டத்தை நிறுத்துங்கோ ........... இருக்க வேண்டியவர்கள் இருக்குறார்கள். காலம் வெகு விரைவில் பதில் சொல்லும்

நீங்கள் உசார் படுத்துறதில கெட்டிக்காரர் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நிர்மலன், அந்தக்கனவு உங்க தலைவர் கேபி, அஸ்டாங்கமாக வீழ்ந்து சரணடைந்ததும் முடிந்து விட்டது(காலம் காலமாக காட்டிக்கொடுத்தது இப்போதுதான் புரிகிறது, என்ன செய்யலாம்)!!!! .

.. இப்ப இருக்கும் கனவு, யுத்தக்குற்றச்சாட்டுக்கள்/இனவழிப்பு/மனித உரிமை மீறல்களுக்கு நீதி சர்வதேசத்தினூடாக தேடுவதன் மூலம், அங்குள்ள மக்களுக்கு ஓர் வாழ்வை அமைத்துக் கொடுக்கலாம் என்பதே!!!!

நெல்லை,

அந்தக் கனவு இருக்கிறதோ இல்லையோ என்பதல்ல முக்கியம், அந்தக் கனவு தமிழனுக்கு எப்போதுமே வந்துவிடக்கூடாதென்று கே.பீ யும் அவனது கூலிகளான நிருமலன் போன்ற எடுபிடிகளும் தவமாய்த் தவமிருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

மற்றும்படி நீங்கள் சொல்லியதுபோல எமக்கு இன்றிருக்கும் ஒரே நம்பிக்கையும் அவசியமும், எமது மக்களை லட்சக்கணகக்கில் கொன்றொழித்துவிட்டு எக்காளமிட்டுச் சிரித்துக்கொண்டிருக்கும் சிங்களக் காட்டேரிகள் நீதியின் முன்னிறுத்தப்பட்டு தண்டணைக்குள்ளாக்கப்படவேண்டும். அதன் மூலம் சர்வதேச அழுத்தத்தினூடானன் நியாயமான நிரந்தரத் தீர்வொன்று எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.

நிருமலமன் போன்ற கோடரிக்காம்புகளுக்கு எமது இந்த நம்பிக்கை நிச்சயம் இனிப்பாக இருக்கப்போவதில்லை. சிங்களவனின் ம.. தின்னும் பன்...களுக்கு இப்படியான விசுவாசம் இருப்பதில் வியப்பொன்றுமில்லையே ??!!

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன், உங்களைப்பற்றி எங்களுக்குத் தெரியும்தானே. எந்தப் பக்கம் காற்றடிக்கின்றதோ அந்தப்பக்கம் நின்று கூக்கிரலிடுபவர் நீங்கள். இதனைவிட உங்களுக்கே நீங்கள் யார் பக்கம் இருக்கின்றீர்கள் என்பது உங்களுக்கும் புரியவில்லை. யாழ். களத்தினை படிக்கின்றவர்களுக்கும் புரியவில்லை.

ரகுநாதா, நீங்கள் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருங்கள். அது உங்கள் பிரச்சினை. எனது பிரச்சினை அல்ல. சிங்களம் திட்டத்தினை சரியாகத் தீட்டி ஒளித்திருக்கக்கூடிய எஞ்சியிருக்கின்ற போராளிகளைப் பிடிக்க முயல்கின்றது என்பதுதான் உண்மை. அந்த யதார்த்தத்தினைப் புரிந்து கொள்ளாமலேயே பலர் கனவு உலக சஞ்சாரத்தில் ஈடுபட்டபடி கருத்தினை எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

கே.பி. போராட்டத்தினைக் காட்டிக் கொடுத்ததாக அடிக்கொரு தடவை இங்கே பலர் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். இங்கே போராட்டத்தினைச் சீரழித்தவர்கள் பிரபாகரனைச் சுற்றி இருந்த ஜால்ராக் கூட்டங்கள்தான். இதனை பிரபாகரனும் ரசித்து மாண்டதுதான் கவலையான விடயம். (சுருக்கமாகக் கூறுவதனால் பிரபாகரன்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினைக் காட்டிக் கொடுத்து அழித்தவர். அதனை மறைப்பதற்காக பலரை துரோகியாக்கலாம், மாட்டி விடலாம் என நினைக்காதீர்கள். காலம்தான் பதில் சொல்லும் என்றால்... அந்தக் காலம் வந்து பதில் கூறினாலும் நீங்கள் நம்பப் போவது இல்லை என்பதுதான் உண்மை.)

மீண்டும் கூறுகின்றேன். என்னை நீங்கள் தாக்கி எழுதுவதால் நான் கவலைப்படப் போவதில்லை. உண்மையாகவே நான் எழுதுகின்றேன். பொய்யைப் புரட்டினை எழுதுவதனால் கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார் என்பது எனக்குச் சரியாகவே தெரியும்.

Edited by nirmalan

போராட்டம் தோல்விகண்டதற்கு அவன் காரணம் இவன் காரணம் அந்தக் காட்டிக்கொடுப்புக் காரணம் இந்தக் காட்டிக்கொடுப்புக் காரணம் என்பது உப்புச் சப்பற்ற வாதம். போராட போதிய ஆட்களும் இருந்ததில்லை போராட்டத்தில் இணைய பெரும்பான்மை மக்கள் விரும்பியதும் இல்லை. எல்லோருக்கும் தெரிந்த வெளிப்படையான விசயம் பத்தில் ஒரு பங்கு மக்களுக்கும் குறைவானவர்களே புலிகளுடன் இறுதியில் நின்றவர்கள். அதிலும் சொற்பமானவர்களே புலிகளாய் நின்றவர்கள். புலம்பெயர்ந்த பத்து லட்சம் மக்களும் போராட்டத்திற்கு ஆதரவாக நின்றது என்பது ஆளணி இல்லாத கள நிலையை எவ் வகையிலும் மாற்றியமைக்கவும் இல்லை. மாற்றியமைக்கவும் முடியாது. தோலவி என்பது சமூகம் சார்ந்த பிரச்சனை. சமூகத்தில் ஒவ்வொருவனுக்கும் இதில் பங்கு உண்டு.

போராட்டத்தின் தோல்வியை கூட நேர்மையான வழியில் உணர மறுக்கும் இந்தச் சமூகம் இனிமேல் எழுந்து போராடுவதே சந்தேகத்துக்குரியது.

article-2077708-0F3F456200000578-751_634x387.jpg

இதை வைத்துக்கொண்டே முழியை பிதுக்குகிறார்கள்! இப்படியொரு உலோகமே உலகில் இல்லை என்கிறார்கள்.உலகின் மொத்த விஞ்ஞானிகளும் நமீபியாவில் முகாமிட்டுள்ளார்கள்

இதைப்பற்றி இணையங்களில் வந்த தகவல்களைப் படித்திருந்தேன். என்னமோ சிரிப்புத்தான் வந்தது.

எதோ வார வரிசமேன்டாலும் இந்த உலகம் அழிஞ்சால் நல்லதுதான். நடக்கிரக்துகளைப் பார்க்க முடியல்ல.

நான் இந்த திரியை திசை திருப்ப முனையவில்லை, நீலப்பறவைக்கு பதில் மாத்திரமே சொல்ல வந்தேன்.

சண்டைகள் தொடரட்டும்.

Edited by Sooravali

புலிகளை.. மகிந்த மட்டுமல்ல.. பொன்சேகாவும் தனது இருப்புக்காக பாவிப்பார்.. ரணிலும் பாவிப்பார்.. கெல உறுமையும் பாவிக்கும்.. ஜே வி பியும் பாவிக்கும்.. கருணாவும் பாவிப்பான்.. டக்கிளசும் பாவிப்பான்.. சங்கரியும் பாவிக்கும்.. சித்தார்த்தனும் பாவிப்பான். அந்த வகையில் இப்படியான செய்திகள்.. எம்மை அடைவது ஒன்றும் ஆச்சரியமில்ல. இதெல்லாம் சிரீலங்காவின் சகஜம்..!

இப்ப எல்லாம் சிங்கள அகராதியில் முடிஞ்சு போன புலிகள் அடிக்கடி உயிர்கிறது நடக்குது.. யாரையோ போட்டுத்தள்ள சிங்களம் தயாராகுது என்பதே இதன் பின்னணி. அது சொந்த இனத்துக்கையா இருக்கலாம்.. மாற்று இனங்களில ஆக இருக்கலாம்.

:(:rolleyes::icon_idea:

Buddy........உங்க ஓட்டைவாய்க்கு .. இடைக்கிடையாவது கதவு ஒண்ணு போடுங்க!

அந்த செய்தியில் உண்மை இருக்கலாம்...!

ஒருவேளை எந்த தொடர்பும் இன்றி கைவிடப்பட்ட போராளிகள் , சிங்களவன் கையில மாட்டி இருக்கலாம்...! அவர்கள் நோக்கம் யாரையும் கொல்வதல்ல,, தங்க(ள்) உயிரை காப்பாத்திக்கிறதே!

எங்களோட தவறான “ஆய்வு”(?) எஞ்சியிருக்கும் போராளிகளா இருந்து,, இடைக்கிடை இணையத்தை செக் பண்ணும் பாவப்பட்டவங்களாபோன ,,

சாதாரண ஜீவன்களின் பாதுகாப்பில் ஜாக்கிரதை இல்லாம பண்ணலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா வந்து எங்களை உசுப்பெத்துங்கோ. நடந்தால் எங்களுக்கும் ஆசை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Buddy........உங்க ஓட்டைவாய்க்கு .. இடைக்கிடையாவது கதவு ஒண்ணு போடுங்க!

அந்த செய்தியில் உண்மை இருக்கலாம்...!

ஒருவேளை எந்த தொடர்பும் இன்றி கைவிடப்பட்ட போராளிகள் , சிங்களவன் கையில மாட்டி இருக்கலாம்...! அவர்கள் நோக்கம் யாரையும் கொல்வதல்ல,, தங்க(ள்) உயிரை காப்பாத்திக்கிறதே!

எங்களோட தவறான “ஆய்வு”(?) எஞ்சியிருக்கும் போராளிகளா இருந்து,, இடைக்கிடை இணையத்தை செக் பண்ணும் பாவப்பட்டவங்களாபோன ,,

சாதாரண ஜீவன்களின் பாதுகாப்பில் ஜாக்கிரதை இல்லாம பண்ணலாம்!

நீங்கள் இந்த சம்பவ இடத்தில் இருந்து தப்பி வந்து இந்தப் பதிவை எழுதுவதால் இதனை 100 க்கு 250% நம்புறன். தப்புத் தான்.. அறிவிலிகளோட டீல் தெரியாம உளறிட்டன்.. நீங்கள் தான் உண்மையை விளம்பிவிட்டீர்களே.. எனி வாயைப் பொத்திக்கிறன் அண்ணாச்சி. :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

நெல்லையன், உங்களைப்பற்றி எங்களுக்குத் தெரியும்தானே. எந்தப் பக்கம் காற்றடிக்கின்றதோ அந்தப்பக்கம் நின்று கூக்கிரலிடுபவர் நீங்கள். இதனைவிட உங்களுக்கே நீங்கள் யார் பக்கம் இருக்கின்றீர்கள் என்பது உங்களுக்கும் புரியவில்லை. யாழ். களத்தினை படிக்கின்றவர்களுக்கும் புரியவில்லை.

அண்ணா கொண்ணுட்டீங்க! ... சரியாக பிடித்தீர்கள்! ஆமாம் இப்ப உங்க தான் தோன்றித்தலைவர் பக்கம்தான் காத்து!!! அது எல்லோருக்கும் தெரிந்ததுதான்!!! உங்க தான்தோன்றித்தலைவர் பக்கம் வர ரொம்ப ரொம்ப மனசிருக்கு ... ஆனா .... உங்களுக்கு தந்த டீலை எனக்கும் தந்தால் மட்டும்தான் வர முடியும்1 ... வேலை வெட்டியில்லாமல் இருக்க மோட்கேஜும் கட்ட, ஆடம்பர வாழ்க்கைக்கு செலவுக்கு, அடிக்கடி சிறிலங்கா பயணத்துக்கு ... என்று உங்களுக்கு, பாண்டருக்கு, தான்தோன்றியின் மருமகனார் போன்றோருக்கு கிடப்பது கிடைத்தால் ... அடியேன் உங்கள் பாசையில் தொப்பி புரட்ட தயார்!!!! ... ஏற்பாடு செய்வீர்களா????? :icon_mrgreen:

புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது – சயனைட் அருந்தியும் காப்பாற்றப்பட்டார் - [ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 09:08 GMT ] [ கார்வண்ணன் ]

KP உடன் முரண்பாடுகள் காரணமாக அலரி மாளிகையில் சிலகாலமாக KP உடன் சேர்ந்து கோத்தபாயவின் கழிவறைகளை கழுவிக்கொண்டிருக்கும் KP யின் சகாவை கைது செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன், உங்களைப்பற்றி எங்களுக்குத் தெரியும்தானே. எந்தப் பக்கம் காற்றடிக்கின்றதோ அந்தப்பக்கம் நின்று கூக்கிரலிடுபவர் நீங்கள். இதனைவிட உங்களுக்கே நீங்கள் யார் பக்கம் இருக்கின்றீர்கள் என்பது உங்களுக்கும் புரியவில்லை. யாழ். களத்தினை படிக்கின்றவர்களுக்கும் புரியவில்லை.

ரகுநாதா, நீங்கள் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருங்கள். அது உங்கள் பிரச்சினை. எனது பிரச்சினை அல்ல. சிங்களம் திட்டத்தினை சரியாகத் தீட்டி ஒளித்திருக்கக்கூடிய எஞ்சியிருக்கின்ற போராளிகளைப் பிடிக்க முயல்கின்றது என்பதுதான் உண்மை. அந்த யதார்த்தத்தினைப் புரிந்து கொள்ளாமலேயே பலர் கனவு உலக சஞ்சாரத்தில் ஈடுபட்டபடி கருத்தினை எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

கே.பி. போராட்டத்தினைக் காட்டிக் கொடுத்ததாக அடிக்கொரு தடவை இங்கே பலர் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். இங்கே போராட்டத்தினைச் சீரழித்தவர்கள் பிரபாகரனைச் சுற்றி இருந்த ஜால்ராக் கூட்டங்கள்தான். இதனை பிரபாகரனும் ரசித்து மாண்டதுதான் கவலையான விடயம். (சுருக்கமாகக் கூறுவதனால் பிரபாகரன்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினைக் காட்டிக் கொடுத்து அழித்தவர். அதனை மறைப்பதற்காக பலரை துரோகியாக்கலாம், மாட்டி விடலாம் என நினைக்காதீர்கள். காலம்தான் பதில் சொல்லும் என்றால்... அந்தக் காலம் வந்து பதில் கூறினாலும் நீங்கள் நம்பப் போவது இல்லை என்பதுதான் உண்மை.)

மீண்டும் கூறுகின்றேன். என்னை நீங்கள் தாக்கி எழுதுவதால் நான் கவலைப்படப் போவதில்லை. உண்மையாகவே நான் எழுதுகின்றேன். பொய்யைப் புரட்டினை எழுதுவதனால் கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார் என்பது எனக்குச் சரியாகவே தெரியும்.

எனது கனவு இன்னொரு ஆயுதப்போராட்டம் தொடங்குவதல்ல, அப்படியொன்று தொடங்கினால் சேர்ந்தே நின்று அழிப்பதற்கும், காட்டிக்கொடுப்பதற்கும் உங்களைப் போன்ற பலர் காத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். எனது கனவு எமது மக்களுக்கு சிங்கள அடிமைத்தனத்திலிருந்து முற்றான விடுதலைதான். ஆனால் அதையும் நீங்கள் விட்டு வைக்கப்போவதில்லை. உங்கள் தாந்தோன்றித்தலைவரும் நீங்களும் சேர்ந்து சிங்களம் எம்மைத் தொடர்ந்தும் அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தஉவீர்கள் அல்லது சேர்ந்தே செய்வீர்கள்.

எப்போது கே.பீயை தம்ழிழ்னத்தின் தலைவனென்றும், அவன் செய்வது தமிழரின் விடுதலைக்காஹத்தான் என்று திருவாய் மலர்ந்தீர்களோ அன்றே உங்கள் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது.

இனக்கொலைக்கு துணைபோகும் உங்கள்போன்ற கிருமிகளிடமிருந்து வேறு எதையுமே நாங்கள் எதிர்பார்க்க முடியாது !!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.