Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இப்படியும் பெண்களா இவ்வுலகில்..?!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைக்கு இணங்கச்சொல்லி கள்ளக்காதலி மிரட்டல் : கண்ணீருடன் வாலிபர் போலீஸில் புகார்

நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், கோட்டாறு காவல் நிலையத்தில் கண்ணீருடன் சென்று ஒரு புகார் மனு அளித்தார்.

அப்புகார் மனுவில், ‘’எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கள்ள காதல் இருந்தது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்ததால், எங்கள் கள்ள காதலுக்கு எந்த தடையும் இல்லை. நாங்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம்.

இந்நிலையில் எனக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பிறகு நான் திருந்தி வாழ முடிவு செய்தேன்.

இதனால் எனது கள்ள காதலியிடம் இருந்து விலக தொடங்கினேன். அவளை சந்தித்து கொள்வதை குறைத்து கொ ண்டேன். என்னை அவள் அழைத்த போது, அறிவுரை கூறி திருத்த நினைத்தேன். ஆனால் அவள் மனம் மாறவில்லை.

‘நான் எப்போதெல்லாம் அழைக்கிறேனோ, அப்போதெல்லாம் நீ வர வேண்டும். எனது ஆசைக்கு நீ இணங்காவிட்டால் உன்னை சும்மா விட மாட்டேன். என்னை நீ ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, பலாத்காரம் செய்ததாக காவல்துறையில் புகார் அளிப்பேன் என மிரட்டுகிறார். எனவே இந்த பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

புகாரை படித்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாலிபரின் புகார் உண்மை தானா? என்பதை கண்டறிய சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண், அந்த வாலிபரிடம் அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தது தெரிய வந்தது. ‘அவன்தான் எனது உலகம். எங்களை பிரிக்க நினைக்காதீர்கள்.

அவன் சந்தோஷத்துக்காகவே நான் வாழ்கிறேன்’ என்றெல்லாம் கூறினார்.

இதையடுத்து பிரச்சினையை சுமூகமாக முடிக்கும் வகையில் கோட்டாறு காவல் நிலையத்தில் 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தது.

இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேசினர். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுரைகள் கூறினர். இனி இருவரும் சந்தித்து கொள்ள கூடாது. போனில் பேசக்கூடாது. இருவரும் அவரவர் குடும்பத்துக்காகவே வாழ வேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

நன்றி.. நக்கீரன்.கொம்

தமிழகம் முல்லைப்பெரியாறு பிரச்சனைல கொதிச்சுபோயிருக்கு . இதுதான் தமிழக அரசின் அத்திவாரத்தை ஆட்டம் போடவைக்கப் போகுது ^_^ ^_^ ^_^ .

ஆசைக்கு இணங்கச்சொல்லி கள்ளக்காதலி மிரட்டல் : கண்ணீருடன் வாலிபர் போலீஸில் புகார்

...

அப்புகார் மனுவில், ‘’எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கள்ள காதல் இருந்தது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்ததால், எங்கள் கள்ள காதலுக்கு எந்த தடையும் இல்லை. நாங்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம்.

இந்நிலையில் எனக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பிறகு நான் திருந்தி வாழ முடிவு செய்தேன்.

இதனால் எனது கள்ள காதலியிடம் இருந்து விலக தொடங்கினேன். அவளை சந்தித்து கொள்வதை குறைத்து கொ ண்டேன். என்னை அவள் அழைத்த போது, அறிவுரை கூறி திருத்த நினைத்தேன். ஆனால் அவள் மனம் மாறவில்லை.

‘நான் எப்போதெல்லாம் அழைக்கிறேனோ, அப்போதெல்லாம் நீ வர வேண்டும். எனது ஆசைக்கு நீ இணங்காவிட்டால் உன்னை சும்மா விட மாட்டேன். என்னை நீ ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, பலாத்காரம் செய்ததாக காவல்துறையில் புகார் அளிப்பேன் என மிரட்டுகிறார். எனவே இந்த பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

...

தடை ஏதும் இல்லாததால் அவர்கள் உல்லாசமாகப் பல இடங்களுக்குச் சென்று தங்கள் அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டார்களாம்... எல்லாம் முடிந்த பிறகு குடும்பத்தவர்கள் பார்த்து பேசிய பெண்ணை மனர்ந்து கொண்டு, அந்தரங்கத்தைப் பர்கிர்ந்து கொண்டவளை புத்திமதி சொல்லித் திருத்த முயன்றாராம்... வாசிக்க சிரிப்பாக உள்ளது... :lol::rolleyes: இப்படிப் பட்டவர்கள் இருக்கும் போது அந்தப் பெண் அப்படியான சிந்தனையில் இருப்பதை மட்டும் பிழை என்று கூறுவது சரியாகப் படவில்லை.

(இருவரும் சேர்ந்து முடிவுகளை எடுத்திருந்த பின்பு இப்படி நடந்திருந்தால் வேறு...)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணை அவரின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி

தவறு செய்ய ஊக்கமளித்த அந்த ஆணையே நான் குற்றம் கூறுவேன்.

பல ஆண்கள் இப்படியான செயல்களில் ஈடுபடுவது ஒட்டு மொத்த ஆண்கள்மீது

சேறுபூசுவதாக அமைந்துவிடுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் கருத்தே எனது கருத்தும்.

வாத்தியார் வாயைத்திறந்தால், உதிர்வது அத்தனையும் முத்துக்கள்! :D

பெண்:

அப்போது அந்த பெண், அந்த வாலிபரிடம் அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தது தெரிய வந்தது. ‘அவன்தான் எனது உலகம். எங்களை பிரிக்க நினைக்காதீர்கள்

ஆண்:

எங்கள் கள்ள காதலுக்கு எந்த தடையும் இல்லை. நாங்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம்.

சொற்பிரயோகங்களை பார்த்தால் ஆரம்பம் தொடக்கம் வஞ்சக நினைவு இருந்திருக்கு. வாதியாரின் கருத்துக்கு ஒரு பச்சை கொடுக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்வனைப் பற்றிப் பேசியே உலகம் பாதிக்கப்படவனை கைவிடுறது போல.. பாவம்.. அந்தப் பெண்ணின் கணவன். தன் குடும்பம் உய்யனுன்னு வெளிநாட்டிற்கு போய் மாடா உழைக்க... அந்தக் குடும்பப் பெண்ணோ அடுத்தவன் கூட ஒத்துழைச்சுக்கிட்டு இருக்கா..!

அந்தக் கணவன் நாளை ஊர் திரும்பும் போது.. இந்தப் பெண் மல்லிகையும் மாலையுமா வரவேற்க.. அவனும் நடந்தது எதுவுமே அறியாது.. தன் மனைவி பத்தினின்னு வாழ்வான். இப்படியான கணவனை ஏமாற்றும்.. காதலனை ஏமாற்றும் பெண்களை என்னென்று சொல்லுறது..??!

அந்தப் பையனப் பார்த்தா.. தான் கட்டப் போற அந்த இன்னொருத்திக்காவது உண்மையா இருக்கனுன்னு இவளை விட்டிட்டு போறான். இவளோ.. சொந்தக் கணவனுக்கே உண்மையாக இல்லை. இந்தப் பெண்ணின் தவறான நடத்தையால் பாதிக்கப்பட்டது அவனும் அல்ல.. அவளும் அல்ல. இவளை நம்பி ஏமாந்து இவள் தான் வாழ்க்கைன்னு ஒருத்தன் வெளிநாட்டில போய் மாரடிக்கிறான் பாருங்க.. அவன் தான். அவனும் ஒரு ஆண் தானே.. அதையேன் எங்களில பலர் காணினமில்ல..???! :):icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

தனது திருமணம் வரை ஊரெல்லாம் மேய்ந்துவிட்டுத்தனக்குத் திருமணம் முடிந்ததும் கொட்டிலுக்குள்ஒதுங்குவதும் மற்றவர்மீது பழி போடுவதும்எந்தவகையில் நியாயம்.வெளி நாடு சென்ற கணவன் மீதும் இந்தப் பெண்குற்றம் சுமத்தலாம்.திருமணச் சட்டப்படி கட்டிய மனைவியைக்கவனிக்காமல் வேலை வேலை என்று அலைவதும் குற்றமே :D

இதை வாசிக்கையில் சென்னையில் வசிக்கும் பொழுது கண் முன் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகம் வருகிறது.

அகதியாக வெளிநாடு சென்ற கணவர் அங்கு அழைக்கும் மட்டும் சில காலம் சென்னையில் வந்து பக்கத்துக் குடியிருப்பில் தங்கியிருந்தார் ஒரு அழகான இலங்கைப் பெண். எல்லோருடனும் நன்றாகப் பழகுவார். வந்து குறுகிய காலத்திலேயே சில கள்ளத் தொடர்புகள் உருவானது. அவர் அடித்த கொட்டத்திற்கு அளவில்லை. வெளிநாடு கூட்டிச் செல்வதற்காக அனுமதி பத்திரங்களுடன் கணவர் வந்திருந்தார். அவரும் அழகான ஆண்மகன். கணவர் வந்த பின் அந்தப் பெண் யாருடனும் கதைப்பதில்லை. இருவரும் சேர்ந்து வெளியே செல்லும் பொழுது அந்தப் பெண் யாரையும் நிமிர்ந்து கூடப் பார்ப்பதில்லை. சில வேளை கோயிலுக்குச் சென்று பழத் தட்டுடன் , குனிந்த தலை நிமிராமல் வருவார்.

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது திருமணம் வரை ஊரெல்லாம் மேய்ந்துவிட்டுத்தனக்குத் திருமணம் முடிந்ததும் கொட்டிலுக்குள்ஒதுங்குவதும் மற்றவர்மீது பழி போடுவதும்எந்தவகையில் நியாயம்.வெளி நாடு சென்ற கணவன் மீதும் இந்தப் பெண்குற்றம் சுமத்தலாம்.திருமணச் சட்டப்படி கட்டிய மனைவியைக் கவனிக்காமல் வேலை வேலை என்று அலைவதும் குற்றமே :D

அத்தான்.. நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம்.. என்னைப் பக்கத்தில இருந்து சதா 24/7 கவனிச்சிட்டு இருங்கோ என்றால் எவனாவது வேண்டாம் என்பானா..???! நிச்சயமா கவனிப்பான். இது புருசனை வேலைக்கு கலைச்சிவிட்டிட்டு மனிசிமார் வீட்டில இருந்து கொண்டு ஊர் மேயுறதா எல்லோ இருக்குது. இப்படியான வெளிநாட்டுக்குப் போற கணவன்மார் உங்கட மனிசிமாரையும் எனி கூட்டிக்கிட்டு போயிடுங்க. அப்படிப் போனாலும் சந்தேகத்தில பண்ணுறான்னு சண்டைக்கும் வருவினம்..! அப்ப என்ன தான் செய்து தொலைக்கிறது. பாவம் அப்பாவி ஆண்கள். அவர்கள் ஏமாற்றுக் கார பெண்களிடம் அந்த பெண்களை அனுபவிக்கும் ஆண்களிடமும் சிக்கித் தவிப்பது இந்த உலகில் வேதனை. இதற்கு முடிவு கட்டனுன்னா.. இப்படியான பெண்களையும் ஆண்களையும் சமூகத்தில் தனித்து இனம்காட்டுவதும் புறக்கணிப்பதுமே.. இவர்கள் திருந்த இடமளிக்கும்..! தெரிஞ்சு கொண்டு தப்புப் பண்ணுற பெண்களை ஆண்களை மன்னிக்கவே கூடாது..! தண்டிக்க வேண்டும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்கையில் சென்னையில் வசிக்கும் பொழுது கண் முன் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகம் வருகிறது.

அகதியாக வெளிநாடு சென்ற கணவர் அங்கு அழைக்கும் மட்டும் சில காலம் சென்னையில் வந்து பக்கத்துக் குடியிருப்பில் தங்கியிருந்தார் ஒரு அழகான இலங்கைப் பெண். எல்லோருடனும் நன்றாகப் பழகுவார். வந்து குறுகிய காலத்திலேயே சில கள்ளத் தொடர்புகள் உருவானது. அவர் அடித்த கொட்டத்திற்கு அளவில்லை. வெளிநாடு கூட்டிச் செல்வதற்காக அனுமதி பத்திரங்களுடன் கணவர் வந்திருந்தார். அவரும் அழகான ஆண்மகன். கணவர் வந்த பின் அந்தப் பெண் யாருடனும் கதைப்பதில்லை. இருவரும் சேர்ந்து வெளியே செல்லும் பொழுது அந்தப் பெண் யாரையும் நிமிர்ந்து கூடப் பார்ப்பதில்லை. சில வேளை கோயிலுக்குச் சென்று பழத் தட்டுடன் , குனிந்த தலை நிமிராமல் வருவார்.

இப்படித்தான் நாங்கள் கொழும்பில் இருந்த போது எங்கள் வீட்டுக்கு ஒரு 3 நாலு வீடு தள்ளி.. ஒரு தமிழ் அக்கா. பார்த்தா அப்பாவி போல. கணவன் ஜேர்மனிக்கு கூப்பிட என்று வந்து தங்கி இருந்தவா. ஒரு நாள் திடீர் என்று பொலிஸ் வந்து அந்த வீட்டில நின்றிச்சு. கேட்டா சொன்னாங்க.. அந்த அக்கா பஸ் நிறுத்தும் இடத்தில் ஆண்களோடு விபச்சார பேரம் பேசும் போது மாறுவேட பொலிஸிடம் மாட்டிக் கொண்டது என்று. பொலிஸ் வந்து வீட்டுக்காரருக்கு இந்தத் தகவலை கொடுத்தது. சோதனை என்னவென்றால்.. அவாவை நம்பி வந்த அவாட தங்கையும் அவாட கூடப் போனதால பிடிபட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பட்டிருந்தவா. பின்னர் தகப்பன் வவுனியாவில் இருந்து வந்து மிகவும் சிரமப்பட்டு இருவரையும் மீட்டவர். இப்போ அந்த அக்கா ஜேர்மனியில் கணவனுக்கு பத்தினி மனைவி..! இது எங்க கண்முன்னாடி நடந்த சம்பவம். இத்தனைக்கும் அவா ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் கோவில் என்று போவா. விரதங்கள் எல்லாம் கிரமமாகப் பிடிப்பா. ஆனால் ஒரே ரென்சன் பேர்வழி...! பொலிஸ் பிடிக்கும் வரை அவா அப்படி தப்புப் பண்ணினது தகப்பன் உட்பட யாருக்குமே தெரியாது. பொலிஸில் பிடிப்பட்ட பின் குனிந்த தலை நிமிர்ந்ததில்லை. யாரோடும் கதைப்பதும் இல்லை. தகப்பனே சொன்னார் அவள்.. தப்புப் பண்ணி இருக்கிறாள்.. வெளிநாடு போகும் வரை எனி தான் கூட இருந்து கவனிக்கனும் என்று. :):icon_idea:

Edited by nedukkalapoovan

நெடுக்கு நீங்கள் நீண்டகால மித்திரன் பத்திரிகை வாசகரா?

நெடுக்கு நீங்கள் நீண்டகால மித்திரன் பத்திரிகை வாசகரா?

:lol: :lol: :lol::icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நீங்கள் நீண்டகால மித்திரன் பத்திரிகை வாசகரா?

சிரித்திரன் கேள்விப்பட்டிருக்கிறேன்.. அதென்ன மித்திரன் என்றால்..??!

நக்கீரனை கிரமமாகப் படிப்பேன்..! :lol::icon_idea:

நெடுக்கு நீங்கள் நீண்டகால மித்திரன் பத்திரிகை வாசகரா?

:o:rolleyes::):lol::D:icon_mrgreen::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:o:rolleyes::):lol::D:icon_mrgreen::icon_idea:

ஒன்னுமே பதில் அளிக்க முடியல்லைன்னா.. ஒராள் தேவையில்லாத விளங்காத கேள்வியைக் கேட்க மற்றவர்கள்.... இப்படி சிமைலியை போட்டு.. சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்..! முதலில மித்திரன் என்றால் என்னென்று சொல்லி தொலையுறது..??! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்னுமே பதில் அளிக்க முடியல்லைன்னா.. ஒராள் தேவையில்லாத விளங்காத கேள்வியைக் கேட்க மற்றவர்கள்.... இப்படி சிமைலியை போட்டு.. சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்..! முதலில மித்திரன் என்றால் என்னென்று சொல்லி தொலையுறது..??! :):lol::icon_idea:

நெடுக்கர், இது கொழும்பில் இருந்து வெளிவந்த ஒரு பத்திரிகையாகும்!

இலங்கையில் நடக்கும், கொலைகள், கள்ளத் தொடர்புகள், காதல் தோல்விகள்,தற்கொலைகள்,யார் எவருடன் ஓடிப்போனார்கள், என்பது பற்றிய சகல விபரங்களும் , விலாவாரியாக விவரிக்கும் ஒரு பத்திரிகை!!!

நெடுக்கர் தனக்குத் தெரியாது என்று ச்சும்மா கலாய்க்கின்றார்....சிரித்திரன் நிறுத்தப்பட்ட காலத்தின் பின் பிறந்து ஸ்கொலர்ஷிப்பில் படிக்க போராடாமல் வெளிநாடு வந்த தலைமுறையை சேர்ந்தவர் அவர்...ஆனால் அவர் பிறந்த காலத்தில் மட்டுமல்ல இன்றுவரை மித்திரன் வாரமலர் வெளிவருகின்றது

அதன் செய்திகள் எப்படி இருக்கும்?

ஊரில் எவன் எவளுடன் கள்ள உறவு வைத்து இருந்தார்கள்

ஊரில் வேலை வெட்டி அற்ற பெண்கள் வம்பளக்கும் 'எவள் எவன் கூட ஓடிப் போனார்கள்'

எந்தப் பெண் எவனுக்கு கள்ளமாக பிள்ளை பெற்றாள்

போன்ற அரிய பெரிய தகவல்களை தாங்கி வரும்.

அதே செய்திகள் வந்த காலப் பகுதியில் வீரமரணம் எய்திய பெண் போராளிகள், தன் பிள்ளைக்கு உணவு கொடுக்காமல் போராளிகளுக்கு ஆமிக்கு தெரியாமல் சாப்பாடு கொடுத்து இறுதியில் மாற்று இயக்கங்களால் கொல்லப்பட்ட பெண்களின் செய்திகள், பாலியல் வல்லுறவுக்குள்ளான தமிழ் பெண்களின் செய்திகள் என பல வந்து இருந்தாலும்.. இப்படியான கள்ளக் காதல் பற்றிய செய்திகளை தாங்கி மித்திரன் வாரமலர் வரும்.

அதை வாசிக்க என்று ஒரு மட்டமான கூட்டம் இருக்கும்.

பிரதான செய்திகளில் இருந்து மக்களை திசை திருப்பி அற்பத்தனமான மூன்றாம் தர பாலியல் செய்திகளின் மீது அவாவை வளர்க்கும் மனோவியலின் பால் செயற்படும் தன்மையுடனான செயல்

இன்றும் இப்படியான செய்திகளை கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு நெடுக்கர் இங்கு ஓடி வந்து பதியும் போதும் அவருக்கு மித்திரன் பற்றித் தெரியாது என்கின்றார்

அதையும் நாம் நம்புவோமாக

பாவம் நெடுக்கு :( . நெடுக்கர் அச்சாப்பிள்ளை . தெரியாததை தெரியாது என்று தானே சொல்லவேணும் . எல்லாம் இருக்கிறது தான் பத்திரிகையுங்கோ :):):) .

மித்திரன் தலைப்புகளும் வில்லங்கமானவை.

'ஹேமமாலினியிற்கு பூனாவில் சத்திர சிகிச்சை'

இந்திய நகர் பூனாவில் உள்ள வைத்தியசாலையொன்றில் நடிகை ஹேமமாலினியிற்கு சத்திர சிகிச்சை நடந்த பொழுது வந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் தனக்குத் தெரியாது என்று ச்சும்மா கலாய்க்கின்றார்....சிரித்திரன் நிறுத்தப்பட்ட காலத்தின் பின் பிறந்து ஸ்கொலர்ஷிப்பில் படிக்க போராடாமல் வெளிநாடு வந்த தலைமுறையை சேர்ந்தவர் அவர்...ஆனால் அவர் பிறந்த காலத்தில் மட்டுமல்ல இன்றுவரை மித்திரன் வாரமலர் வெளிவருகின்றது

அதன் செய்திகள் எப்படி இருக்கும்?

ஊரில் எவன் எவளுடன் கள்ள உறவு வைத்து இருந்தார்கள்

ஊரில் வேலை வெட்டி அற்ற பெண்கள் வம்பளக்கும் 'எவள் எவன் கூட ஓடிப் போனார்கள்'

எந்தப் பெண் எவனுக்கு கள்ளமாக பிள்ளை பெற்றாள்

போன்ற அரிய பெரிய தகவல்களை தாங்கி வரும்.

அதே செய்திகள் வந்த காலப் பகுதியில் வீரமரணம் எய்திய பெண் போராளிகள், தன் பிள்ளைக்கு உணவு கொடுக்காமல் போராளிகளுக்கு ஆமிக்கு தெரியாமல் சாப்பாடு கொடுத்து இறுதியில் மாற்று இயக்கங்களால் கொல்லப்பட்ட பெண்களின் செய்திகள், பாலியல் வல்லுறவுக்குள்ளான தமிழ் பெண்களின் செய்திகள் என பல வந்து இருந்தாலும்.. இப்படியான கள்ளக் காதல் பற்றிய செய்திகளை தாங்கி மித்திரன் வாரமலர் வரும்.

அதை வாசிக்க என்று ஒரு மட்டமான கூட்டம் இருக்கும்.

பிரதான செய்திகளில் இருந்து மக்களை திசை திருப்பி அற்பத்தனமான மூன்றாம் தர பாலியல் செய்திகளின் மீது அவாவை வளர்க்கும் மனோவியலின் பால் செயற்படும் தன்மையுடனான செயல்

இன்றும் இப்படியான செய்திகளை கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு நெடுக்கர் இங்கு ஓடி வந்து பதியும் போதும் அவருக்கு மித்திரன் பற்றித் தெரியாது என்கின்றார்

அதையும் நாம் நம்புவோமாக

மித்திரன் பற்றிய தகவலுக்கு நன்றி.

நான் இது குறித்து நேற்று சில பெரியவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள் ஏரிக்கரை அரச பதிப்பக பத்திரிகைகளான.. தினகரன்.. டெயிலி நியூஸ்.. உடன் சேர்த்து வெளிவந்த பலான பத்திரிகை தான் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது பொய்யோ மெய்யோ தெரியவில்லை.

ஆனால் இந்தப் பத்திரிகையை நான்.. பள்ளியிலோ.. பல்கலைக்கழகத்திலோ.. மேலும் நூல்நிலையத்திலோ.. வீட்டில் அப்பா... அம்மா வாங்கி வந்து படித்தோ காணேல்ல.. என்பது உண்மை. அதை நம்புவதும் நம்ப மறுப்பதும் உங்கட பிரச்சனை.

சிரித்திரனை.. யாழ் இந்துக் கல்லூரி நூலகத்தில் கண்டு படித்திருக்கிறேன். குறிப்பாக குடாநாட்டை சிங்களப் படைகள் (1995) ஆக்கிரமிக்க முன் மல்லிகை ஆசிரியர் ஜீவாவின் முயற்சியால்.. 20 பக்க கொப்பி அளவில் உள்ளூரில் பதிப்பித்து வெளிந்தது என்று நினைக்கிறன். உள்ளூர் நகைச்சுவைகள்.. காட்டூன் படங்களுடன் இடம்பிடித்திருக்கும்..!

மேலும்.. பத்திரிகைகள் இரண்டு நோக்கோடு இப்படியான செய்திகளை வெளியிடும். 1. வாசகர்களின் சகல மட்டத்தினரையும் கவர என்று.

2. சமூகத்தில் இப்படியான சம்பவங்களும் நிகழ்கிறது. அந்த வகையில்.. சமூகம் இவை குறித்து அறிந்து கொள்வதோடு.. சிந்திக்கவும் விளிப்புணர்வு பெறவும்.. சீர்திருந்தங்களை பெறவும் என்று வெளியிடுகிறார்கள்.

நக்கீரன்.. போன்ற கொஞ்சம் சமூகப் பொறுப்புள்ள பத்திரிகைகளிடம் காரணம் 2 கொஞ்சம் அதிகம் என்பதால் அதில் வரும் செய்திகளை இங்கு இணைக்கிறேன். முன்னர் தட்ஸ்ரமிழில் வந்த போதும் சிலவற்றை இணைத்திருக்கிறேன். ஆனால் தட்ஸ்தமிழ் நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை போட்டு வாசகர்களின் சகல மட்டத்தையும் கவரவே முயற்சிக்கிறது என்று கண்டபின்.. அதிலிருந்து இப்படியான செய்திகளை இணைப்பதை தவிர்த்துக் கொண்டேன். (ஒரு தடவை தட்ஸ்தமிழ் ஆசிரியர் பீடத்திற்கு இதுகுறித்து மின்னஞ்சல் செய்திருந்தேன். கவிதைகள் போட அவர்கள் ஆக்கங்களைக் கேட்ட போது.. எனது கவிதைகளோடு இதனையும் சுட்டிக்காட்டி இருந்தேன். ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இன்றும் அதையே தொடர்கிறார்கள். ஆனால் இப்போ போடும் படங்களின் தரம் கொஞ்சம் நாகரிகமாக உள்ளது.)

இதுதான் உண்மைக் காரணங்கள். நம்புவதும் விடுவதும்.. உங்கள் கையில். எப்போதும்.. சமூகம் ஒன்றில் நடக்கும் விடயத்தை ஒளித்து வைத்து.. அது ஒளித்து வைத்து நடக்க.. தொடர வாய்ப்பளிப்பதிலும்.. வெளிப்படையாக அதை மக்கள் முன் கொணர்ந்து மக்களை விளிப்புணர்வூட்டி.. சிந்திக்க.. சீர்திருத்த.. தூண்டுவது நல்லது என்று நினைக்கிறேன். :):icon_idea:

Edited by nedukkalapoovan

அன்ரன் பாலசிங்கம் இலங்கையில் இருக்கும் போது சிரித்திரன் பத்திரிகையில் வேலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன் .

மித்திரன் ஊரில் மிக பிரபலம்.நாப்பது தாண்டியவர்கள் மத்தியானம் ஒரு வெட்டுவெட்டிவிட்டு வந்து வாசகாலையில் மித்திரனை தான் முதலில் தூக்குவார்கள் .அதில் வரும் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரி பட்லி போன்ற தொடர்கதைகள் ரொம்ப பிரபலம்.

  • கருத்துக்கள உறவுகள்

மித்திரன் தலைப்புகளும் வில்லங்கமானவை.

'ஹேமமாலினியிற்கு பூனாவில் சத்திர சிகிச்சை'

இந்திய நகர் பூனாவில் உள்ள வைத்தியசாலையொன்றில் நடிகை ஹேமமாலினியிற்கு சத்திர சிகிச்சை நடந்த பொழுது வந்தது.

:o :o :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி தம்பி நெடுக்குக்கு

ஆனால் அவர் எழுதும் கருத்துக்கள் இடைக்கிடை அவரது கருத்துக்களையே வெட்டுகின்றன

தற்போதைய சமூதாயம் இதைத்தான் செய்கிறது. ஆடி முடிய திருமணம் செய்து வாழலாம் என்ற கொள்கையை வரவேற்பவர்கள் அதன் பலாபலன்களை எதிர்கொள்ளாது காவல்துறையை நாடுவதும் கேலிக்குரியது?

இதைத்தான் சொல்வார்கள்

அவளைத்தொடுவானேன் கவலைப்படுவானேன் என்று.

எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்யமுடியும்?

அதேநேரம் கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணுக்கான தண்டனையைக்காலம் நிச்சயம் கொடுக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.