Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். வருகிறார் அப்துல்கலாம்

Featured Replies

டெல்லியில் உள்ள அரசுக்கு இன்று என்ன வேண்டும்? ஈழ தமிழர்கள் சிங்களத்துக்கு அடங்கி அடிமைகளாக வாழவேண்டும்.

இது ஆயுத பலம் அழிக்கப்பட்டுள்ள நிலையிலும் மாறாததும், இன்றும் போன நூற்றாண்டு அரசியல் போல எண்ணி கலாமை அனுப்புவதும் பீகிங்கின் இலக்கை இலகுவாக்கும்.

  • Replies 72
  • Views 5.1k
  • Created
  • Last Reply

தமிழர்களை ஈழத்தில் இனப்படுகொலை செய்த, அணுமின் உலை மூலம் படுகொலை செய்ய முயலும், நீர்ப் பாசனம் வழங்காது தமிழ் நாட்டு மக்களை பட்டினிச் சாவுக்கு தள்ளும் ஒரு கூருரமான இந்திய தேசிய அரசின் அப்பட்டமான முகமூடியான அப்துல் கலாம் என்னும் காவடி ஈழம் வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.யாழ் மக்கள் இவருக்கு தகுந்த்த வரவேற்ப்பு அழிப்பார்கள்.

இந்த இந்து தேசிய முகமூடிக்கு செம்பு தூக்கி இந்திய ரத்தினா விருது வாங்கும் செம்பு தூக்கிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அமைதிகாக்கும் படையினால் யாழ்வைத்திய சாலையில் படுகொலை செய்யபட்ட வைத்தியசாலை ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும், படுகொலை செய்யபட்ட இடத்தில் ஒரு மலரையேனும் அஞ்சலியாக வைப்பாரா?

யாழ்வைத்திசாலை படுகொலைகள்

http://en.wikipedia.org/wiki/Jaffna_hospital_massacre

Edited by சித்தன்

249px-Black_flag_waving.svg.png

சக கவிஞரான தமிழ் விஞானி அப்துல்கலாம் அவர்களை யாழுக்கு வருக வருக என வரவேற்க்கிறேன். திரு அப்துல்கலாம் அவர்களது நிகழ்ச்சி நிரலில் யாழ் ஒஸ்மானியா கல்லூரியும் கைதடியில் உள்ள செவி விழிபுலனிழந்தவர்களது பாடசாலையும் சேர்கப் படவேண்டுமென்று இந்திய தூதரக அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். வடகிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் ஏழைப்பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிர உங்கள் வரவு பயன்படும் என்கிற நம்பிக்கையுடன்

கவிஞன் கலைஞன் வ.ஐ.ச.ஜெயபாலன் visjayapalan@gmail.com

ஓமோம்.. கவிஞர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள், கிரிக்கெட்டுக்காரர்கள், காடை, கடைப்புளிகள், துரோகிகள், நயவஞ்சகர்கள்.. எல்லோரும் சிங்களவனுடனும் இந்தியாக்காறருடனும் ஒண்டுக்குளஒண்டா இருக்கட்டும்... அப்பாவிகளும் ஏழைகளும் அடிச்சுகொண்டு சாகவும் கொடுரமாக கொலைசெய்யப்படவும் புலம்பெயர்ந்த உண்மையான உணர்வாளர்கள் சிறைகளில் வாடவும்... நல்லாத்தான் இருக்குதையா உங்கள் கூத்து...

சக கவிஞராம் சக கவிஞர்.... வருகுது பச்சைபச்சையா.... :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் கலாமுக்கு மக்கள் தொண்டனின் திறந்த மடல்


அறிவியல் மாமேதையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களே, பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெடிப்பு நடத்தப்படுவதற்கு முன்நின்றவர் நீங்கள். அதன் மூலம் அணுயுகத்தில் இந்தியா அடியெடுத்து வைப்பதற்குக் காரணமாக இருந்தீர்கள். உலகின் அணுவிஞ்ஞானிகளில் தலைசிறந்தவராகவும் நீங்கள் திகழ்கிறீர்கள்.

அணுவிஞ்ஞானியான நீங்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றபோது பெருமிதம்கொண்ட தமிழர்களில் நானும் ஒருவன்.

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் நீங்கள் தலையிட முடிவு செய்தபோது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு நல்லதொரு முடிவுக்கு வருவீர்கள் என நம்பினோம்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சென்று பார்வையிட்டு, அதன் பிறகு அதனருகிலேயே போராடிக்கொண்டிருக்கும் மக்களைச் சந்திக்காமல் நாளிதழில் நான்கு பக்கம் வரும் அளவுக்கு நீண்டதொரு அறிக்கையைக் கொடுத்துள்ளீர்கள்.

கூடங்குளத்தைப் பார்வையிட்ட அன்று இரவோடு இரவாக இந்த அறிக்கையை எழுதி மறுநாள் வெளியிட்டிருக்க முடியாது. நீங்கள் கூடங்குளம் வருவதற்கு முன்னாலே அறிக்கையை எழுதிவிட்டு அதற்குப் பின்னால் கூடங்குளம் அணு உலையைச் சோதனை செய்ததில் ஏதாவது அர்த்தம் உண்டா?

அந்த அறிக்கையில் முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் குறிப்பிட்டபடி செய்தீர்களா? கூடங்குளத்திலும் சுற்றிலும் வசிக்கும் மக்களைச் சந்திக்காமல், அவர்களின் உணர்வுகளையும் சந்தேகங்களையும் எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?

கடல்கோள், பூகம்பம் போன்ற இயற்கை விபத்துகளால் ஒரு சிறிதும் பாதிக்கப்படாத அளவுக்கு கூடங்குளம் அணு உலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பெருமையுடன் உறுதி தந்திருக்கிறீர்கள். அவ்வாறு சொல்லும்போதுகூட கூடங்குளத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று கூறியிருக்கிறீர்களே தவிர, பூகம்பம் வரவே வராது என அறுதியிட்டு உறுதிதர உங்களால் இயலவில்லையே ஏன்?

இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி அணு உலை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் 30 கி.மீ. சுற்றளவில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடாது. அப்படி 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் அணு உலையை அமைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதி உங்களுக்குத் தெரியாமல் வகுக்கப்பட்டிருக்க முடியாது.

கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் 17 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசின் ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு எதிராகக் கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த விதிமுறையை ஆணையம் வகுத்ததற்கே காரணம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மக்கள் 30 கி.மீ. அப்பால் தப்பிச் செல்வதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான். அணு உலையில் விபத்தே ஏற்படாது என்பது உண்மையானால் இந்த விதியை வகுக்க வேண்டிய அவசியம் என்ன?

அணு உலையில் உபயோகப்படுத்தப்பட்ட திடக்கழிவுகளைப் பாதுகாப்பது குறித்து விரிவாகக் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறாமல்விட்ட ஓர் உண்மை என்னவென்றால் கூடங்குளம் அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பதற்கு 20 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்பதை அணு உலையை நிறுவுவதற்கு 17 ஆயிரம் கோடிதான் முதலீடு, ஆனால், அதன் ஆயுள்காலம் முடிந்தபிறகு புதைப்பதற்கு 20 ஆயிரம் கோடி செலவாகும். இந்தச் செலவுகளையெல்லாம் மொத்தமாகக் கூட்டினால் மின்சார உற்பத்திச் செலவு அணு உலையில் மிகமிக அதிகம். அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கிறது என்கிற தங்கள் கூற்று அடிபட்டுப் போகிறது.

இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரம் பெற வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சியை நாம் எட்டினால்கூட 2030ஆம் ஆண்டுக்குள் 4 இலட்சம் மெகாவாட்தான் உற்பத்தி செய்ய இயலும். ஆனாலும் இந்த 4 இலட்சம் மெகாவாட்டில் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அணுமின் உலைகள் மூலம் மட்டுமே பெற முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் இன்றைக்கு நம் நாட்டில் அணுசக்தியின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. எனவே, மீதமுள்ள 45 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு அணுசக்தியைத் தவிர, வேறு வழியில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்.

இந்தியாவில் அணு ஆற்றல் துறையின்கீழ் வரும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுக்கான அமைப்பு, நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 23 விழுக்காடு சேமிக்க முடியும் எனக் கூறியுள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை? திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட பல பெரிய தொழில் நிறுவனங்கள், அதன் மூலம் பெருமளவு மின்சேமிப்பைச் செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் 2,194 மெகாவாட் அளவு மின்சாரத்தைச் சேமித்திருக்கின்றன என்ற உண்மையைக் கூறுவதும் இந்திய அரசின் ஆற்றல் துறைதான்.

கூடங்குளம் அணுமின் நிலைய மின்சக்தித் திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித் திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர் என மின்னணுவியல் துறை பேராசிரியர் முனைவர் வே. பிரகாஷ் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 2011 முதல் 2015க்குள் 19 ஆயிரம் மெகாவாட் மின்சேமிப்பு செய்வோம் என்கிறது மத்திய அரசின் ஆற்றல் துறை.

இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி இந்திய அணுசக்தித் துறையில் மின் உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியும் என்று கூறிவிட்டு அதற்கேற்ற தொழில் நுட்பம் உலகில் எங்கும் இல்லை. அப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இதை நாம் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

யுரேனியத்தைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகமாக வெப்பம் கடத்தும் ஆற்றல் கொண்டது தோரியம் என்றும் குறைந்த கதிரியக்கக் கழிவைக் கொடுக்கக்கூடியது தோரியம் என்றும் அணு ஆயுதம் செய்ய இயலாத தோரியம் என்றும் நீங்களே உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

அப்படியானால் யுரேனியத்தின் கதிரியக்கம் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவேதான் தோரியத்தைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வது பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை, வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது எனக் கூறும் நீங்கள் அந்த ஆராய்ச்சி முற்றுப் பெறும்வரை பொறுத்திருக்கக்கூடாதா? அதற்குள் அவசரப்பட்டு ஆபத்தான கதிரியக்கத்தைப் பரப்பும் யுரேனியத்தைப் பயன்படுத்தி கூடங்குளம் அணு உலையைச் செயற்பட வைப்பதற்கு அவசரப்படுவது ஏன்?

கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு ரூ. 200 கோடி செலவில் "புரா' திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதாவது நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டமாகும்.

1988ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின் உலை குறித்து இந்தியாவுக்கும் சோவியத் நாட்டுக்குமிடையே உடன்பாடு கையெழுத்தாயிற்று. 22 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கூடங்குளம் பகுதி மக்கள் மீது 22 ஆண்டுகாலமாக ஏற்படாத கரிசனம் மத்திய அரசுக்கு இப்போது திடீரென ஏற்படுவானேன்?

22 ஆண்டுகாலத்துக்கு மேலாக வறட்சியான அந்தப் பகுதியின் வளர்ச்சியிலோ, ஏழ்மை நிறைந்த அந்த மக்களின் முன்னேற்றத்திலோ, இந்திய அரசுக்குக் கொஞ்சமும் கவலை ஏற்படவில்லை. அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் மக்களைச் சரிகட்டத்தானே இந்தப் "புரா'திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது?

அணு சக்தி என்பது இறைவன் மனித குலத்துக்குக் கொடுத்தது. அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் மனித குலத்தின் கையில்தான் உள்ளது. எனவே, கூடங்குளத்தின் மூலமும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்களின் மூலமும் உற்பத்தியாகும் அணு மின்சாரம் கண்டிப்பாக நமக்குத் தேவை என உங்கள் அறிக்கையில் அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தி இருக்கிறீர்கள்.

ஆனால், இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் கைக்கா, நரோரா, தாராபூர், கல்பாக்கம் மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள அணு உலைகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக்குறைவினாலேயோ அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டு உள்ளது என்றும், கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச்சூழலில் கலந்துள்ளது என்றும் பகிரங்கமாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்திய அரசிடமிருந்தோ அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ உங்களிடமிருந்தோ அவருக்கு இதுவரை எத்தகைய பதிலும் கூறப்படவில்லையே அது ஏன்?

இனி தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு வருவோம். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டுமானால் அதற்கு அவசியமான கட்டமைப்பு மின்சாரம் ஆகும். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி அணு மின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய செய்தியாகும். கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபா முதலீடு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்க இருக்கிறது எனவும் தமிழக மக்கள் நாவில் தேனைத் தடவ முயற்சி செய்திருக்கிறீர்கள்.

உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளுக்குப் பின்னாலும் காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடகத்துக்கும், முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கும், பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திரத்துக்கும் கூடங்குளம் மின்சாரத்தில் பாதி அளிக்கப்பட இருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகப் போகும் மின்சாரத்தில் 50 % மட்டுமே தமிழகத்துக்கு அளிக்கப்படும் என்பதை பெரிய வாய்ப்புப்போல கூறியிருக்கிறீர்கள். மீதமுள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஆனால், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக உருவாகும் அபாயம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே. இது என்ன நியாயம்?

ஏற்கெனவே நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்த மூன்று அண்டை மாநிலங்களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 26 கோடி யுனிட் மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 22 கோடி யுனிட்தான் ஆகும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையும் தமிழகத்துக்குக் கொடுத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அவசியம் இருக்காதே.

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தாங்களே மின்நிலையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி 3,000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 5 அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு இலவசமாகவும் பிறகு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்கப்படுவதும்தான் காரணமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தமாகவே அனல் மற்றும் காற்று மின்உற்பத்தியைச் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட வேண்டும். அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கும் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.

காவிரியில் பெருகிவரும் வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அழிவைத் தடுக்கவும், வளம் பெருக்கவும் கரிகாலன் கல்லணையைக் கட்டினான். ஆனால், மக்களுக்கு அபாயத்தை அளிக்கும் கூடங்குளம் அணு உலைக்காக வாதாடும் நீங்கள் கரிகாலனையும் கல்லணையையும் எடுத்துக்காட்டாகக் காட்டுவது சற்றும் பொருத்தமற்றதாகும். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக உங்களைப் பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். அதை நீங்கள் ஏன் உணரவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

http://thinakkural.c...8-01-48-50.html

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

249px-Black_flag_waving.svg.png

  • கருத்துக்கள உறவுகள்

249px-Black_flag_waving.svg.png

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் இந்த வருமான வரியை ஒழுங்காக கட்டாத நடிக மா...மாக்களுக்கு ஊழலுக்கு எதிராக பேசும் மாமா கலாமின் மீது எப்போதுமே ஒரு தனி ஈடுபாடு உண்டு. பின்ன இருக்காதா மாமா ஊழலுக்கு எதிராக தானே பேசுவாரு வரிகட்டாம அரசாங்கத்தை ஏய்ப்பவனுங்களை பற்றி எல்லாம் பேசமாட்டாருல்லா. அப்படி பேசுனா அவனுங்க என்னைக்கே கலாம் மாமாவுக்கு கட்டம் கட்டி இருக்க மட்டானுங்களா. மாமாவுக்கும் நடிகனுங்கனா ஒரு தனி இது தான். அது தான் ஏன் என்று புரியலை. அதிலும் பெரிய கொடுமை என்னன்னா கோலிவுட்டில் பூனை கண்ணழகியை வைத்து வியாபாரம் செய்த விவேகம் கெட்ட மாமா பயலை தன்னால் பங்கு பெறமுடியாத இந்திய விஞ்ஞான கல்வி நிறுவன விழாவில் தனக்கு பதிலாக அனுப்பி பேச வைத்தது தான். சாதி கூட்டங்களில் கைதட்டுக்களை வாங்குவதற்காக பேசுகின்ற ஒருத்தனை சமூகத்தை கட்டமைக்க தயாராகி கொண்டிருக்கும் எதிர்கால சிற்பிகளுக்கு மத்தியில் உரையாற்ற அனுப்பி வைத்ததை என்னவென்று சொல்ல..... மாமா கலாமின் கண்களில் தகுதி வாய்ந்த வேறொருவர் படவில்லையா... இல்லை படங்களில் தன்னை சின்ன கலைவாணராக அடை மொழியை (கலைவாணர் மட்டும் இருந்திருந்தால் இந்த பயலை வாரியலாலேயே விளாசி இருப்பார்) தனக்கு தானே வைத்து கொண்டு நடிகைகளின் புரோக்கராக அலையும் மாமா பயலின் தகுதியே போதுமென்று கலாம் மா..மா.. நினைத்தாரோ என்னவோ அது அவருக்கே வெளிச்சம்.

தொழில் ரீதியான மாமாவுக்கான தகுதிகள் ரொம்ப தெள்ள தெளிவாக தெரிந்தது பிரிந்தது .. இணைப்புக்கு நன்றி தோழர் நுணாவிலான்.... :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் கலாம் யார்?

  • இவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர்.
  • இவரது தாய் மொழி தமிழ்.
  • இந்தியாவில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துவதாலும், முஸ்லிம்களை ஈவுஇரக்கமின்றி கொல்வதனாலும் முஸ்லிம்களுக்கு என்று பிரிந்து சென்ற பாகிஸ்தான் அணுவாயுத வல்லரசாக உருவாகி வரும் நிலையிலும், சீனா அணுவாயுத வல்லரசான நிலையிலும் இந்தியாவை அணுவாயுத வல்லரசாக்குவதற்கு அதி சிறந்த பங்களிப்பை செய்தவர் அப்துல் கலாம்.
  • இவரது அணுவாயுத பங்களிப்புக்காக இவர் இந்தியாவின் குடியரசு தலைவராக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இந்திய குடியரசு தலைவருக்கு குறிப்படத்தக்களவு அதிகாரங்கள் இல்லை.

அப்துல் கலாம் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஏதாவது செய்தாரா?

இந்திய குடியரசு தலைவராக இருந்த போது இராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஈழத்தமிழரும், இந்திய தமிழரும் சமர்ப்பித்த கருணை மனுவை நிராகரிக்காமல் அப்படியே விட்டு சென்றதன் மூலம் அவர்கள் நியாயத்துக்கு அப்பாற்பட்ட வகையில் கொல்லப்பட காரணமானவராகவில்லை. இந்த உரிமை குடியரசு தலைவர்களுக்கு இருந்த காரணத்தால் இவரால் அதை செய்ய முடிந்தது.

அப்துல் கலாம் யாழ் போவதன் காரணம் என்னவாக இருக்க முடியும்?

இந்திய அரசும் உளவுத்துறையும், இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை சமப்படுத்துவதற்காக வடக்கில் இந்தியாவுக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கு முயற்சிப்பதாக தெரிகிறது. அப்துல் கலாம் போன்ற பிரபலமான விஞ்ஞானியின் வரவு யாழ்ப்பாணத்தில் இiளைய தலைமுறையின் ஆதரவையும், அறிவுசார் சமுகத்தின் ஆதரவையும் பெற உதவும் என்று இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நினைத்திருக்க கூடும். இந்தியாவின் வலுச்சமநிலைக்கான போட்டி, வடக்கு மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் உதவக்கூடிய சாத்தியம் உள்ளது. ஆயுதக்குழுக்களினதும், இராணுவத்தினதும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள், கடத்தல்கள் இந்திய முதலீட்டுக்கும், இந்தியரின் வருகைக்கும் இருப்புக்கும் ஆபத்தாக அமையலாம் என்பதே அதற்கு காரணமாகும்.

ஈழத்தமிழர்களுக்கு ஏன் செல்வாக்கு மிக்க நண்பர்கள் இல்லை?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல.. மேளமடிச்சு.. மாலை போட்டு.. வரவேற்று.. விருந்து கொடுத்து.. விடைகொடுத்து அனுப்புவதிலும்.. இவரின் வருகையை பயன்படுத்தி.... வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தங்களின் ஏகோபித்த அரசியல் உரிமையின் தேவையை தெளிவுற இவருக்கும்.. இவர் மூலம் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும்.. உணர்த்தி விடுவது சிறப்பு.

இதனை யாழ் பல்கலைகழக சமூகமும்.. யாழ் இந்துக் கல்லூரி சமூகமும்.. ஏனையோரும்.. செய்ய வேண்டும்.. இதனையே இவரின் விஜயத்துக்குரிய பகுதிகளுக்கு அப்பால் உள்ள.. தமிழ் மக்களும் விரும்புகின்றனர்.

மேலும்... இந்திய அமைதிப்படை காலம்.. சிங்களப் படைகளின் காலங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இவரின் வருகையின் போது.. தமக்கான மனித உரிமை கேட்டு ஒரு அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும். அப்போதுதான்.. ராஜீவ்காந்தியை கட்டிக் கொண்டு கிடக்கும்.. இவர்களின் இதயங்களில் கொஞ்சம் என்றாலும்.. அடுத்தவனின் சாவிற்கும்.. காணாமல் போனவற்றிற்கும்.. அர்த்தம் பிறக்க வழி பிறக்கும்..! இவர்களை மனிதர்கள் என்று நம்பி.. இதனைச் செய்வது அவசியம். குறைந்தது மாணவர்களாவது இதனைச் செய்ய வேண்டும்.

வெறுமனவே இவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டி.. இவரைத் திட்டி.. இவர்களின் வரவிற்கு ஆட்சியாளர்கள் வழங்கும் முக்கியத்துவத்திற்கு இலவச விளம்பரம் தேடிக் கொடுத்துவிட்டு ஓய்ந்து போவதிலும்.. இவர்களின் உள்ளுணர்வை மக்களின் நியாயங்கள் தட்டிக் கேட்டச் செய்வதே இந்திய ஆளும் வர்க்கத்தில் உருப்படியான மாற்றங்களுக்கு அத்திவாரம் இட முடியும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இவர்களின் உள்ளுணர்வை மக்களின் நியாயங்கள் தட்டிக் கேட்டச் செய்வதே இந்திய ஆளும் வர்க்கத்தில் உருப்படியான மாற்றங்களுக்கு அத்திவாரம் இட முடியும்..! :icon_idea:

பழிவாங்க துடித்துக்கொண்டு திரியும் சோனியாவுக்கு நியாயங்களை புரிய வைக்க முடியுமா தெரியாது. மேற்கு நாடுகளுக்கு இலங்கையில் உள்நுளைய ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து வைரத்தை வைரத்தால் வெட்ட வேணும். தமிழ்நாட்டையும் பிரிய உதவி வழங்கினால் பிற்காலம் இந்திய உபகண்டத்திலும் அண்டை நாடுகளிலும் சமாதனமும் அமைதியும் நிலவும்.

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல.. மேளமடிச்சு.. மாலை போட்டு.. வரவேற்று.. விருந்து கொடுத்து.. விடைகொடுத்து அனுப்புவதிலும்.. இவரின் வருகையை பயன்படுத்தி.... வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தங்களின் ஏகோபித்த அரசியல் உரிமையின் தேவையை தெளிவுற இவருக்கும்.. இவர் மூலம் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும்.. உணர்த்தி விடுவது சிறப்பு.

இதனை யாழ் பல்கலைகழக சமூகமும்.. யாழ் இந்துக் கல்லூரி சமூகமும்.. ஏனையோரும்.. செய்ய வேண்டும்.. இதனையே இவரின் விஜயத்துக்குரிய பகுதிகளுக்கு அப்பால் உள்ள.. தமிழ் மக்களும் விரும்புகின்றனர்.

மேலும்... இந்திய அமைதிப்படை காலம்.. சிங்களப் படைகளின் காலங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இவரின் வருகையின் போது.. தமக்கான மனித உரிமை கேட்டு ஒரு அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும். அப்போதுதான்.. ராஜீவ்காந்தியை கட்டிக் கொண்டு கிடக்கும்.. இவர்களின் இதயங்களில் கொஞ்சம் என்றாலும்.. அடுத்தவனின் சாவிற்கும்.. காணாமல் போனவற்றிற்கும்.. அர்த்தம் பிறக்க வழி பிறக்கும்..! இவர்களை மனிதர்கள் என்று நம்பி.. இதனைச் செய்வது அவசியம். குறைந்தது மாணவர்களாவது இதனைச் செய்ய வேண்டும்.

வெறுமனவே இவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டி.. இவரைத் திட்டி.. இவர்களின் வரவிற்கு ஆட்சியாளர்கள் வழங்கும் முக்கியத்துவத்திற்கு இலவச விளம்பரம் தேடிக் கொடுத்துவிட்டு ஓய்ந்து போவதிலும்.. இவர்களின் உள்ளுணர்வை மக்களின் நியாயங்கள் தட்டிக் கேட்டச் செய்வதே இந்திய ஆளும் வர்க்கத்தில் உருப்படியான மாற்றங்களுக்கு அத்திவாரம் இட முடியும்..! :icon_idea:

கறுப்புக் கொடி காட்டுவதென்றால் எல்லோரும் தம்மை மறைத்துக் கொண்டல்ல அணிந்திருக்கும் சட்டையிலாகிலும் ஒரு கறுப்புப் பட்டி அணிந்து அடையானப்படுத்திக் கொண்டு அப்துல் கலாம் அவர்களைச் சந்திக்க் வேண்டும் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களையும் கறுப்புப் பட்டி அணிந்த அடையாளத்துடனேயே செய்யவேண்டும். நெடுக்கு

அப்துல்கலாம் என்னும் ஒரு கருவியை இந்திய ஆளும் வர்க்கம் தனது நோக்கங்களுக்குப் பாவிக்கிறது.இதில் அப்துல் கலாம் என்னும் தனி மனிதனால் ஈழத் தமிழருக்கு எந்தத் தீர்வையும் தந்து விட முடியாது. மாறாக அப்துல் கலாமை வரவேற்பதன் மூலம் , சிறிலங்காவில் தமிழர்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமால் வாழ்கிறார்கள் என்னும் செய்தியைச் சொல்வதற்காகவே இந்த விஜயம் பாவிக்கப்படும்.இதனை நோக்காகக் கொண்டே சிறிலங்கா அரசும் இந்திய அரசும் இணைந்து இதனைச் செய்கின்றன.

இது மனித உரிமை போர்க் குற்றம் முதலியவற்றை முன் நிறுத்தும் மேற்குலகிற்கும், சிறிலங்காவில் கால் பதித்ருக்கும் சீனாவுக்கும் செய்திகளை அனுப்ப உதவுமே தவிர தமிழருக்கு இதனால் பயன் ஏதும் ஏற்படப் போவதில்லை.மாற்றாக தமிழர்கள் இவரின் விஜயத்திற்க்கு எதிர்ப்புத் தருவது, தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் சார்ந்து பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உலகிற்கும், தமிழர்கள் இந்திய அரசின் கொத்தடிமைகள் இல்லை என்பதை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எடுத்துக் கூறும்.

எதோ கலாமுடன் கதைப்பதன் மூலமோ மனுக் கொடுப்பதன் மூலமோ தமிழர்கள் பயன் பெறலாம் என்று கூறுவது , கலாமுக்கு இவை எதுவுமே இது வரை தெரியாது என்று நினைப்பதுவும் சிறு பிள்ளைத் தனமானது.

அரசியல் பலம் என்பது போராட்டங்களின் மூலமே சாத்தியமானது.அவை தான் இந்தியாவுக்கும் உலகுக்கும் சில செய்திகளைச் சொல்ல வல்லன.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் அண்ணா எப்படியோ அப்துல் கலாமின் வருகைக்கு மக்கள் எதிர்ப்பாக இருந்தாலும் ஆயுத முனைகளாலும் அச்சுறுத்தல்களாலும் அவ்விடத்தை ஒட்டுக்குழுக்களும் ராணுவமும் நிரவ வைக்கும். அப்படி நிரவிய மக்களை ஊடகங்கள் படம் எடுத்துவிட்டு அப்துல் கலாமை வரவேற்க யாழ் மக்களும் மாணவர்களும் ஒன்று கூடினார்கள் என்றுதான் எழுதப்போகின்றன. அப்துல் கலாமும் மக்களும் மாணவர்களும் மகிழ்வோடு என்னைச் சந்தித்து உரையாடினார்கள் என்ற செய்திதான் வெளிப்படுத்தப்போகிறார்.. எப்படியோ மக்களும் மாணவர்களும் அச்சுறுத்தலால் இவ்விடத்தை நிறைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருத்தப்படுவார்கள் ஆதலால் அவர்கள் அவரைச் சந்திக்கும் தருணத்தில் தமது எதிர்ப்பையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துவது நல்லது அல்லவா...

//உள்ளே இருந்து உடைக்கப்பட்ட முட்டையில் இருந்துதான் ஓர் உயிர் வெளிப்படுகிறது. புதிதாகத் தோன்றும் எந்தவொரு விஷயமும் வெடிப்பு, உடைப்பு, எதிர்ப்பு போன்றவற்றில் இருந்தே தோன்றுகின்றன. உலகம் தோன்றி இத்தனை ஆயிரம் கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மற்ற உயிர்களோடு சேர்த்து மனிதனும் பிழைத்திருக்கிறான் என்று சொன்னால் அதற்கு முக்கியக் காரணம்.. டார்வின் சொல்லிச் சென்ற விதிதான். 'வலிவுள்ளதே வாழும்!'

எனில், அந்த வலிவுள்ள உயிரினங்களின் இன்னொரு இயல்பு எதிர்ப்பு. தனக்கு ஆபத்து வந்தால் மட்டும் கொந்தளிப்பது எதிர்ப்பாகாது. தனக்கு நேர்ந்த ஓர் அபாயம் அடுத்தவனுக்கு நேர்ந்துவிடக் கூடாது என்னும் பதைபதைப்பில் உருவாவதுதான் உண்மையான எதிர்ப்பு, கொதிப்பு, கொந்தளிப்பு ஆகும். இதையேதான் சேவும் சொன்னான், "உலகத்தில் எங்கேனும் ஓர் அநீதியை காண நேர்ந்து அதனால் நீங்கள் கோபம் கொண்டால் நாம் அனைவரும் தோழர்கள்!".

ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் இரும்புத் தொழிற்சாலை வந்துவிடக் கூடாது என்று ஓலமிடுபவர்கள், கூடங்குளத்தில் அணு உலை கூடாது என்று கூக்குரலிடுபவர்கள், ஊழலை முடிவுக்குக் கொண்டு வர லோக்பால் கொண்டு வா என்று அரசை நிர்பந்திப்பவர்கள், முதலாளித்துவப் பேரலை தங்களை மூழ்கடித்துவிடக் கூடாது என்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்பவர்கள், ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர தஹ்ரீர் சதுக்கத்தில் இருந்து குரல் கொடுப்பவர்கள், ஊதியக் குறைப்பு, வரி விதிப்பு, வேலை நீக்கம் என அடுத்தடுத்து துன்பங்களைச் சந்தித்து ஏதென்ஸ் நகர வீதிகளில் ஊர்வலம் வருபவர்கள், பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்து மாட்ரிட் நகரில் கலவரத்தில் ஈடுபடுபவர்கள், கொடுங்கோண்மை புரியும் ஆட்சியாளர்களைக் கீழே தள்ளு என்று 'மல்லிகைப் புரட்சி'யில் ஈடுபட்டு மார்தட்டுபவர்கள், 'உடையைப் பார்க்காதே... உள்ளத்தைப் பார்!' என்று 'ஸ்லட் வாக்' நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிப்பவர்கள், முல்லைப் பெரியாறுக்காக அணி திரள்பவர்கள்.. இவர்கள் எல்லோரும் ஓரணியில் நின்றார்கள் கடந்த 2010ல். ஒரே காரணம்... அவர்களின் நம்பிக்கைக்கு உரியதாக அவர்களது அரசு இல்லை!//

அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கின்ற உரிமைகள் அனைத்தும் உனக்கு மறுக்கப்படும் போதும், உனக்கு விதிக்கப்பட்ட நியாய, தர்மங்கள் மீறப்படும் போதும் நாம் போராடித்தான் ஆக வேண்டும். வறுமை, பட்டினி, ஊழல் போன்ற மனிதனின் தினசரி வாழ்க்கையினோடு மோதுகின்ற ஒவ்வொன்றையும் போராட்டமாக்கத்தான் வேண்டும்.

general.jpg

அகிம்சை வழியோ, ஆயுத வழியோ... காலமும், சூழ்நிலையும் முடிவு செய்யட்டும். உன் வாழ்க்கையை, உன் தலைமுறையின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டுமென்றால், நீ பெருஞ்சீற்றம் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை. உன் சீற்றத்தை உன்னால் வெளிப்படுத்த இயலாமல் போனால் நீ ஏற்கனவே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதாகத்தான் பொருள்.

உள்ளேயிருந்து உடைக்கப்பட்டு உன் வாழ்வுரிமையைப் பாதுகாக்கப் போகிறாயா அல்லது வெளியே இருந்து உடைக்கப்பட்டு நீ உணவாகப் போகிறாயா? கோழிக் குஞ்சுக்கும் கழுகுக்கும் உள்ள வித்தியாசம் இதுவே!

இன்னும் வேறு என்ன சொல்வேன்... ஒன்று சொல்வேன்... 'பெருஞ் சீற்றங்கொள்... நீ பிழைத்திருக்க!'

nanri .

நாரதர் அண்ணா எப்படியோ அப்துல் கலாமின் வருகைக்கு மக்கள் எதிர்ப்பாக இருந்தாலும் ஆயுத முனைகளாலும் அச்சுறுத்தல்களாலும் அவ்விடத்தை ஒட்டுக்குழுக்களும் ராணுவமும் நிரவ வைக்கும். அப்படி நிரவிய மக்களை ஊடகங்கள் படம் எடுத்துவிட்டு அப்துல் கலாமை வரவேற்க யாழ் மக்களும் மாணவர்களும் ஒன்று கூடினார்கள் என்றுதான் எழுதப்போகின்றன. அப்துல் கலாமும் மக்களும் மாணவர்களும் மகிழ்வோடு என்னைச் சந்தித்து உரையாடினார்கள் என்ற செய்திதான் வெளிப்படுத்தப்போகிறார்.. எப்படியோ மக்களும் மாணவர்களும் அச்சுறுத்தலால் இவ்விடத்தை நிறைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருத்தப்படுவார்கள் ஆதலால் அவர்கள் அவரைச் சந்திக்கும் தருணத்தில் தமது எதிர்ப்பையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துவது நல்லது அல்லவா...

நீங்கள் சொல்பவை நடக்கக்கூடும் தான்.அதே நேரம் எமது எதிர்ப்பை எங்கே எல்லாம் காட்ட முடியுமோ அங்கே எல்லாம் காட்டுவோம்.அது புலத்தில் எம்மால் முடிந்தது.களத்தில் எத் தகைய போராட்டம் நடாத்த வேண்டும் என்பதை களத்தில் நிற்பவர்களே தீர்மானிக்க முடியும்.

ஆனால் களத்துக்கு வெளியால் நிண்டு கொண்டு கலாம் என்னும் முகமூடிக்கு சலாம் போடும் சிலரை என்ன என்று சொல்வது.? எதுவித அரசியலும் அற்ற சூனியங்கள் என்பதா இல்லை சொந்த்தப் பிழைப்பைப் பார்க்கும் கூத்தாடிகள் என்பதா?

இந்த பெரிய அறிஞனுக்கு சாதரண தமிழரல்லாத தமிழ் நடிகைகளுக்கு, நடிகர்களுக்கு வந்த தமிழ் மக்கள் மீதான அபிமானம், அநுதாபம் வராமலா போய்விடப்போகிறது? அப்போது அப்துல் கலாம், தான் இந்த பயணத்துக்கு கொடுத்த அனுமதியை சினிமாத்துறையார் செய்தது போலவே தானும் வாபஸ் வாங்காமலா விட்டு விடுவார்? சினிமா நடிகர்களுக்கு பிரதானமானது அழகும் கலையும். அப்துல்கலாம் தன்னிடம் அவை இருக்கோ இல்லையோ குறைந்த பட்சம் அவர்களுக்கு இணையான அநுதாப இதயம் உண்டு என்பதை காட்ட முயல்வார் என்றுதான் நினைக்கிறேன்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமைதிகாக்கும் படையினால் யாழ்வைத்திய சாலையில் படுகொலை செய்யபட்ட வைத்தியசாலை ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும், படுகொலை செய்யபட்ட இடத்தில் ஒரு மலரையேனும் அஞ்சலியாக வைப்பாரா?

யாழ்வைத்திசாலை படுகொலைகள்

http://en.wikipedia....spital_massacre

கடமையின் போது உயிர் நீத்த ஊழியர்கள்

Dr A. Sivapathasuntheram, Dr M.K. Ganesharatnam, Dr Parimelalahar, Mrs Vadivelu, Matron, Mrs Leelawathie, Nurse, Mrs Sivapakiam, Nurse, Mrs Ramanathan, Nurse, Mr Shanmugalingam, Ambulance Driver, Mr Kanagalingam, Telephone Operator, Mr Krishnarajah, Works Supervisor, Mr Selvarajah, Works Supervisor

hospital5.jpg

http://tamilnation.co/indictment/indict047.htm

The War of October 1987 (India's Disarming Operation - Jaffna Hospital

"...An attempt by the Indian Army to capture Jaffna Town had been expected for a few days. For this reason many members of the staff had kept away. Others thought the Indian Army would be considerate and stayed on performing necessary functions. Many injured by shelling and many of those wounded kept on arriving at the hospital. Medicines were in short supply, making surgery difficult. Over 70 dead bodies were said to be piled up in the mortuary.

A false sense of security prevailed because the intensity of shelling had been noticeably reduced after a telephone call made from the G.A.'s office to the Indian Embassy by leading citizens in Jaffna. They telephoned on 13 October (1987) complaining about the shelling and aerial bombing. According to these sources the Indian Embassy had denied that they had any knowledge of such military action which was bound to cause grievous harm to civilians.

The environs of the hospital came under cannon fire from the Fort and from overhead helicopters at 11:00 a.m. on 21 October - Deepavali day.

A shell fell on the O.P.D. building at 11:30 a.m.. The O.P.D. officer went running to the administration building and informed a Consultant of what had happened. At 1:00 p.m. the Consultant was informed that Indian troops had been sighted at the top of Shanti Theatre Lane. At 1:30 p.m. a shell fell on Ward 8 killing 7 persons. The Consultant who went out with another doctor to survey the situation spotted some empty cartridges suggesting that persons had been firing from inside the hospital premises.

At 2:00 p.m. the Consultant's attention was drawn to the presence of some armed L.T.T.E. men inside the hospital premises. The Consultant went with Dr. Ganesharatnam and requested them to leave, pointing out the danger they would cause the inmates. The leader of the group agreed and they went away. 5 minutes later the Consultant was informed that another group of L.T.T.E. men had come inside. Dr. Ganesharatnam requested that the Consultant go with someone else this time as he was, because of his outspokenness, already having a problematic relationship with the L.T.T.E.. The Consultant went this time with one of the lady doctors and spoke to the L.T.T.E. party. According to the Consultant, they agreed to go and "disappeared from sight."

There was a lull after 2.00 p.m.. According to this Consultant:

"I really did not know what advice to give those in the hospital. If I had known it was safe to go, I would have advised everyone to leave. But this was by no means certain because there was a curfew on and the army was near at hand. My decision to leave was mainly on the consideration that I was hungry and the decision to chance it was casually taken. I left through the back entrance at 2:30 p.m. with one of my colleagues and reached home without incident.

"At about 4 p.m. we heard shooting again for 15 to 20 minutes from the vicinity of the petrol shed on Hospital Road. There was no retaliatory fire from the hospital. At that time, to our knowledge there were no Tigers in the hospital."

Thus begins the story of the harrowing experience of the resident doctors of this foremost and biggest hospital in the war torn North. One of them went on with their terrible tale:

"We were in the radiology block in the tea room at that time. The whole place was crammed with people including the patients from the evacuated ward 7 as well. We heard the noise of firing coming closer. But we were sure that even if the Indian Army entered, they would check us, and then explanations could be offered. Dr. Ganesharatnam who was with us went out of the room. Some of our colleagues were still in the wards. The noise of the firing was drawing very close. All around us was the noise of firing. We realised the danger and lay flat on the floor.

The Indian Army came firing into the Radiology Block and fired indiscriminately at this whole mass of people huddled together. We saw patients dying. We lay there without moving a finger pretending to be dead. We were wondering all the time whether we would be burnt or shot when the bodies of the dead were collected ...

In the night we heard few bursts of fire. Most of the time we heard them moving on the floor above, where out quarters were situated. We were like this for almost 18 hours until 11:00 a.m. the next day."

Another of them took over the narration:

"The Indian Army entered through the out gate, came up along the corridor and fired indiscriminately. They fired into the Overseer's office, and into other offices. I saw many of my fellow workers die... Another worker whispered to me: ' Keep lying down and do not move'.

"So we lay down quietly, under one of the dead bodies, throughout the night. One of the overseers had a cough and he groaned and coughed once in a way in the night. One Indian soldier, threw a grenade at this man killing some more persons. I know the ambulance driver died. In another spot one man got up with his hand up and cried out: "We are innocent. We are supporters of Indira Gandhi." A grenade was thrown at him. He and his brother next to him died.

The night passed by, and the morning dawned. Still it was absolutely tense. At about 8:30 a.m., Dr. Sivapathasundaram, the Paediatrician, came walking along the corridor with 3 nurses. He had convinced them that they should identify themselves and surrender. They were walking with their hands up shouting: "We surrender, we are innocent doctors and nurses."

Dr. Sivapathasundaram was gunned down point blank and the nurses injured. He was a man who had come to save the lives of the children and neonates marooned in the hospital. His dedication was replied with violence and death in the hands of this army from a country that called itself the champion of peace and nonviolence.

Those who survived continued to lay among the dead, as if dead, until 11:00 a.m. the following day.

The residents said they were rescued only when an officer turned up at one of the wards and was confronted by a lady doctor there. This doctor explained the situation to the officer and later on came to where they were with the army, holding her hands up. She had called out to her colleagues and those who were injured. They found their colleague Dr. Ganesharatnam with a stethoscope lying dead.

When the residents went up to their rooms saw the whole place ransacked - with bloodied boot marks on their clothing scattered on the floor. They had lost all their valuables. Later they continued work - but a guard was at their door. They were absolutely terror stricken those days. Another resident doctor picked up the story:

"I lay along the corridor leading away from the foyer of the Radiology Bock. My legs were sticking out and evening sunlight coming through an open window was falling on it. I was scared and lay as stiff as possible making sure that no movement could be seen ...I am indeed fortunate to have survived. The soldiers threw a grenade, and in the morning I discovered that all the people lying in front of me were dead. The blasting grenades made tremendous noises as if bombs were exploding. Then the debris and dust would settle on us and cake in the fresh blood of those dead and injured.

All through the night as I lay awake I heard noises, voices, an occasional spray of shooting above our heads or a grenade thrown. I heard a child cry: "Amma (mother), tea, tea, tea."

Another baby screamed. I thought maybe the mother had died. Another woman said: "My legs are numb. They are cold. There is a corpse on it. Please remove it." Unable to bear her moans, I shouted: "Please anybody near her, can't you remove the corpse? Are you deaf?"

The woman continued to moan ... till in the morning I knew the reason for the silence. All those around and the woman herself were dead. One man was reciting the Hindu religious work, the Sivapuranam, and was calling out:"Long live Rajiv. Long live Indira Gandhi."

In the morning we found him the victim of a grenade blast. Then we discovered that there were a few others who had survived in the toilet. We whispered together: Hearing about all this, maybe the Director of the hospital and the others would come over immediately and rescue us from the hospital ... They were all in the refugee camps. So most probably they could get together, complain, and perhaps come out as a group, all of them holding white flags. They will then rescue us. Let's wait for the morning...

And we waited eagerly from the dawn to break. We were indeed very hopeful. At about 8:00 or 8:30 on the 22nd ... I heard Dr. Sivapathasuntheram's voice. He was shouting as he was coming along: "We are innocent doctors and nurses. We surrender. We surrender..."

As he turned into the foyer, we saw the soldier on the stairs leading from the foyer shoot repeatedly. Dr. Sivapathasuntharam was dead ...

We saw later that the nurses whom he had pushed down on either side of him had escaped with injuries. Now we knew that our fate was sealed. We lay there awaiting death.

Later on, around 10:30 or 11:00 a.m., we heard our co-resident, a woman doctor, her voice calling out to the living and the injured to get up with their hands held up. I thought only six of us in the room had survived, but I found out that at least 10 of us were there. All of us with our hands up were walking out of the room. We stepped over the dead bodies that were in front of us. They seemed to stretch over almost a mile. They must have acted as a deterrent to the Indians' coming close to us. That's why we survived ... Some of us started crying. Then the only Consultant amongst us, quietened us down. He told us: "Do not cry .,, this is not the hour for crying. We have lost so much, so many. But we have tasks, enormous tasks to do. Let us keep together and work."

We know that if he had not said so, we would have been totally demoralised. It was this spirit of courage and dedication of this small band of doctors, nurses and other employees that made Jaffna Hospital unique and placed it proudly among the hospitals that functioned under siege, despair and fear. I was reminded of hospital in the camp of Bourj al Barajneh, Beruit under the Imal siege."

So it was from the 22nd to the 29th of October, that this band of persons with all their anxieties attended to the wounded day and night single handedly. As the surgeon said:

"I did not know what happened to my wife and two small daughters. I had left them at the refugee camp ... After the first two days we knew we are not going to be killed in cold blood. That was a relief. We knew we were walking on a tight rope ... between life and death ... I used to lose my temper, my anger burst out ... as we saw many shells hit patients. We also had Indian Army men injured by land mines.. totally smashed up. We were asked to treat them as well. For us doctors, the moment they come into the hospital they were patients. They were the sick ... and our duties were dear."

As he was talking to us pouring out his harrowing tale, characteristically spiced with his sense of humor, we knew the spirit of medical care that pervaded this hospital in the war torn city of Jaffna.

This ordeal is unprecedented especially when viewed in the light of the earlier pronouncements of the Indian Red Cross on how a hospital should be treated even in war time - that was when Sri Lankan forces were around. Many questions were hanging unanswered. Why was no attempt to evacuate, warn or isolate the sick and the stall' make? Why was the hospital not surrounded? Why was the Indian entry into the hospital made only through the front, thus leaving the back of the hospital open for those who wanted to escape to do so - while the sick and those who cared for the sick remained behind to be killed?

It is true that the Tigers were there earlier in the day. One person said that he had seen them hanging their clothing to dry. Another saw a few arms left behind on the premises.

Be that as it may, why did the professional army of a great nation storm a civilian hospital, with such callous disregard for both international covenants and the cost in human lives which may never be determined precisely.

The Indian authorities seem to have decided that there will be no public inquiry into the incident..."

http://tamilnation.co/indictment/indict047.htm

  • கருத்துக்கள உறவுகள்

249px-Black_flag_waving.svg.png

<_<

சரி... இனி இன்டெர்நெட்டை தாண்டி நிகழ்காலத்துக்கு வருவோம்.

நிஜத்தில் இந்த கருப்புக்கொடி, ஆர்ப்பாட்டம், எதிர்ப்புத்தெரிவிப்பது நடக்கக்கூடிய காரியமா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல்கலாம் என்னும் ஒரு கருவியை இந்திய ஆளும் வர்க்கம் தனது நோக்கங்களுக்குப் பாவிக்கிறது.இதில் அப்துல் கலாம் என்னும் தனி மனிதனால் ஈழத் தமிழருக்கு எந்தத் தீர்வையும் தந்து விட முடியாது.

உண்மை, அதிலும் ஒய்வுபெற்ற அவரால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது.

மாறாக அப்துல் கலாமை வரவேற்பதன் மூலம் , சிறிலங்காவில் தமிழர்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமால் வாழ்கிறார்கள் என்னும் செய்தியைச் சொல்வதற்காகவே இந்த விஜயம் பாவிக்கப்படும்.இதனை நோக்காகக் கொண்டே சிறிலங்கா அரசும் இந்திய அரசும் இணைந்து இதனைச் செய்கின்றன.

எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்? இது உங்களுடைய அபிப்பிராயமா அல்லது ஆதாரங்களுடனான துல்லியமான தகவலா?

  • அப்துல் கலாம் இந்திய பாதுகாப்புடன் வந்து போவது எந்த வகையில் தமிழ்மக்கள் சிறிலங்காவில் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்ற செய்தியை சொல்கிறது?
  • வந்து போகும் இராஜதந்திரிகள் நேரடியாகவே பார்த்து போகிறார்கள் அங்கே என்ன நடக்கிறது என்று.
  • எனது அபிப்பிராயப்படி அப்துல் கலாமின் வருகை ஈழத்தமிழ் மக்களுக்கு தாம் செய்யவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களை பற்றிய செய்தியை சொல்வதற்கான இந்திய அரசின் திட்டமாகவே தெரிகிறது. இதே செய்தியை சிறிலங்காவிற்கும், சீனாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் இந்தியா சொல்வதாகவே தெரிகிறது.

இது மனித உரிமை போர்க் குற்றம் முதலியவற்றை முன் நிறுத்தும் மேற்குலகிற்கும், சிறிலங்காவில் கால் பதித்ருக்கும் சீனாவுக்கும் செய்திகளை அனுப்ப உதவுமே தவிர தமிழருக்கு இதனால் பயன் ஏதும் ஏற்படப் போவதில்லை.

இது உங்களுடைய அபிப்பிராயம்.

எனது கருத்து இந்த செய்தியே ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா செய்யவிருக்கும் பொருளாதார மற்றும் அறிவியல் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியது என்பதே. ஆகவே இந்த செய்தி ஈழத்தமிழருக்கு கிடைக்கவுள்ள பயன்கள் பற்றியது. இந்தியா இந்த அபிவிருத்தியை செய்வது தனது நலன் கருதியே என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாற்றாக தமிழர்கள் இவரின் விஜயத்திற்க்கு எதிர்ப்புத் தருவது, தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் சார்ந்து பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உலகிற்கும், தமிழர்கள் இந்திய அரசின் கொத்தடிமைகள் இல்லை என்பதை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எடுத்துக் கூறும்.

தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் இருப்பது, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தெரியும். வந்து போகும் இராஜதந்திரிகள் அதுபற்றி கரிசனை கொண்டுள்ளார்கள். அப்துல் கலாமுக்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் இவ்வாறான உரிமைகள் மறுக்கப்படுவது இனிமேல் உலகறிய செய்யப்பட வேண்டியுள்ளது என்பது சரியான கருத்தாக எனக்கு தெரியவில்லை.

அரசியல் பலம் என்பது போராட்டங்களின் மூலமே சாத்தியமானது.

இராஜதந்திர நகர்வுகள் மற்றும் உறவுகள், குறிப்பாக உனக்கும் நன்மை எனக்கும் நன்மை (Win -Win) என்ற வகையிலான உறவுகள் மூலம் கிடைக்கும் அரசியல் பலம், போராட்டங்கள் மூலம் கிடைக்கும் அரசியல் பலத்திலும் பார்க்க வெற்றிகரமாகவும் நிலையாவும் இருந்திருக்கின்றது. இவ்வாறான அரசியல் பலம் மூலமே சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகி இன்று முதலாம் உலக நாடாக இருக்கிறது. அதற்காக சிங்கப்பூர் மக்கள் போராட்டமே நடத்தவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர்களின் போராட்டத்தின் நிறைவு இராஜதந்திர உறவினாலே கிடைத்தது.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போராட்டம் எதுவும் நடக்கவில்லை. இந்த இரு நாடுகளும் இராஜதந்திர உறவை ஏற்படுத்திக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கின்றன. இந்த உறவு உருவான போது இஸ்ரேல் என்ற நாடே இருக்கவில்லை. யூதர்கள் என்ற அழிந்து போகும் இனம் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட உறவே அவர்களுக்கு நாட்டை உருவாக்கியது. போராட்டமும் நடந்தது, ஆனால் நாட்டை உருவாக்கும் அரசியல் பலம் இராஜதந்திர உறவு மூலமே கிடைத்தது. நாம் இராஜதந்திர உறவுகளை பெரிது படுத்தாமல், முடிவு தெரியாத போராட்டத்தை தொடருவது வெற்றி காணும் வழியாக தெரியவில்லை.

அவை தான் இந்தியாவுக்கும் உலகுக்கும் சில செய்திகளைச் சொல்ல வல்லன.

செய்திகளை சொல்வதற்காக போராட்டங்களை 50 வருடங்களாக நாங்கள் நடத்தி வருகிறோம். இந்த செய்திகள் ஏற்கனவே அறியப்பட்டவையே. செய்திகளை சொல்வதற்காக போராட்டங்களை இனிமேலும் தொடர்ந்து நடத்துவது பயனுள்ளதாக தெரியவில்லை. ஆனால் இராஜதந்திர நகர்வுகளை விளங்கிக் கொண்டு அதற்கேற்ப எமது மக்கள் திட்டமிட்டு செயற்படுவற்கு, நாம் குறிப்பிடத்தக்களவில் உதவுவதாக தெரியவில்லை.

Edited by Jude

ஏன் யூட் சகோதரம் ,,, உங்களுக்கே இது ஓவரா தெரியலியா?

என்னமோ புதுசா சொல்லுவீங்கன்னு பாத்தா........

நாரதர் அண்ணா சொன்னத ரிஜக்ட் பண்ணுறமாதிரி போக்கு காட்டி......

கடைசில அவர் சொன்ன மேட்டரைதானே,, அப்பிடியே சொல்லி இருக்கீங்க , மறைமுகமாக! :)

சாவடிக்குறீங்களே! :rolleyes:

சிரிப்புத்தான் வருது..

இவர்களுடன் நாம் இராஜதந்திர உறவு வைத்துக்கொள்ளமுடியாது..

ஏன்? ஏனெண்டால் இவர்கள்தான் எமது எதிரிகள்.

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போராட்டம் எதுவும் நடக்கவில்லை. இந்த இரு நாடுகளும் இராஜதந்திர உறவை ஏற்படுத்திக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கின்றன. இந்த உறவு உருவான போது இஸ்ரேல் என்ற நாடே இருக்கவில்லை. யூதர்கள் என்ற அழிந்து போகும் இனம் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட உறவே அவர்களுக்கு நாட்டை உருவாக்கியது. போராட்டமும் நடந்தது, ஆனால் நாட்டை உருவாக்கும் அரசியல் பலம் இராஜதந்திர உறவு மூலமே கிடைத்தது. நாம் இராஜதந்திர உறவுகளை பெரிது படுத்தாமல், முடிவு தெரியாத போராட்டத்தை தொடருவது வெற்றி காணும் வழியாக தெரியவில்லை.

யாரோடு இராஜ தந்திர உறவை மேற்கொள்ளலாம் என நினைக்கிறீர்கள்?. பல மேற்கு, அமெரிக்கா,இந்தியா என நேரடியாகவும்.மறைமுகமாகவும் தமிழ் மக்களை கொன்றவர்கள்.எந்த நம்பிக்கையின்(trust) அடிப்படையில் இவர்களுடன் இராஜ தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வது?? அல்லது ஒரு fancy க்காக இராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் இருப்பது, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தெரியும். வந்து போகும் இராஜதந்திரிகள் அதுபற்றி கரிசனை கொண்டுள்ளார்கள். அப்துல் கலாமுக்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் இவ்வாறான உரிமைகள் மறுக்கப்படுவது இனிமேல் உலகறிய செய்யப்பட வேண்டியுள்ளது என்பது சரியான கருத்தாக எனக்கு தெரியவில்லை.

இந்தியா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.நல்ல பிள்ளையாக இப்பொழுதும் நடித்து கொண்டிருக்கிறது.தமிழ் மக்களுக்கு நிச்சயமாக இந்தியாவின் வேடம் தெரியும். கலாமினை எதிர்ப்பதன் மூலம் இந்தியாவின் வேடத்தை தமிழ் மக்கள் ஏன் உலகுக்கு காட்டும் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தக்கூடாது??

செய்திகளை சொல்வதற்காக போராட்டங்களை 50 வருடங்களாக நாங்கள் நடத்தி வருகிறோம்.

செய்திகள் தெரிந்தும் தெரியாதது போல நடித்தது தான் இவ்வுலகம்.உ+மாக லிபிய விடயத்தில் எப்படி அசுரகதியில் உலக நாடுகள்,ஐ.நாவால் செயற்பட முடிந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.