Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெந்த புண்ணில்...

Featured Replies

வெந்த புண்ணில்...

பிராங்போட் விமான நிலையத்தில், இலங்கையிலிருந்து புறப்பட்ட விமானம் தரை இறங்கிவிட்டதற்கான அறிவிப்பு மின்திரையில் எழுத்தில் ஒடீக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்த ஜெகன் 'எல்லாப் பரிசோதனையும் முடிந்து பயணிகள் வெளியேற ஒன்றரை மணித்தியாலங்களாவது செல்லும்' என்ற கணிப்பில், குட்டி போட்ட பூனைமாதிரி அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தான். இதனை அவதானித்த, விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் ஜெகனின் அடையாள அட்டையை வேண்டி, பரிசோதித்து, அதனைக் குறிப்பெடுத்த போது, ஜெகனுக்குப் பயம் ஏற்பட்டதுடன். அவனது இதயம் மேலும் படபடக்கத் தொடங்கியது. இந்நிலையில், சிறிது நேரம் செல்ல, பயணிகள் வெளியேறியபோது, தான் அழைத்துச் செல்ல வந்த ஆள் அதற்குள் வருகிறாரா என்று அவதானித்துக்கொண்டிருந்தான்.

அவன் எதிர்பார்க்கும் ஆள் வருவதுபோல் இருந்தது. வந்தவரை முன் பின் தெரியா விட்டாலும் "நீங்கள்தான் கலாவா"... என்று கேட்டபோது, வந்தவர் "ஆம்" எனத் தலையாட்ட, "நான்தான் ஜெகன். உங்களைக் கூட்டிக்கொண்டு போக வந்தனான்" . என்றவன், "என்னைத் தொடர்ந்து வாருங்கள்" என்று கூறி கார் நிற்கும் இடத்துக்கு சென்றான். ஜெகன் என்ற பெயர் வந்தவருக்கு ஏற்கனவே கூறப்பட்டிருந்ததால், வந்தவர் அவனைத் தொடர்ந்தார்.

அவர்கள் சென்ற கார் அகதிகள் பதியும் இடத்திற்கு முன் நிற்பாட்டப்பட்டது. "அக்கா இதில இறங்குங்க..." என்று கூறியவர் கலாவை அதில் இறக்கிவிட்டபின் சென்றுவிட்டான். கலாவுக்கு எங்கே போவது என்ன செய்வது என்று எதுவும் புரியவில்லை. இதனை அவதானித்த, வேறொரு நாட்டைச் சேர்ந்தவர், கலாவை கூட்டிச் சென்று. பதியவேண்டிய இடத்தைக் காட்டியபோது. அங்கேயும் என்ன செய்வதென்று புரியவில்லை. "தமிழ்..." என்றார். அதிகாரிக்கு விசயம் விளங்கியது. தொலைபேசி மூலம் தமிழ் மொழிபெயர்பாளரை அழைத்தார். மொழிபெயர்ப்பாளர் வந்தபோது. ஏதோ அருவருப்பான ஒரு பிராணியைப் பார்த்தமாதிரி அவளைப் பார்த்த பார்வை அவளுக்கு அருவருப்பாக இருந்தது. 'நான் அப்படி என்ன கேவலமாக இருக்கிறன்' என்று நினைத்தவர் தனது சேலையைச் சரிசெய்து. தலையையும் தடவிப் பார்த்தாள். 'ஏதோ வந்திட்டம், வருவதைச் சமாளிக்க வேண்டியதுதான்' எனச் சிந்தித்தபோது, மொழிபெயர்ப்பாளர் கையால் சைகை செய்து, அறையினுள் வரும்படி அழைத்தார்.

மொழிபெயர்ப்பாளரின் கேள்விகள் சிங்கள இராணுவ அதிகாரிகளின் செயற்பாட்டை ஞாபகப் படுத்தியதுடன், அவரைத் துழைத்துத் துன்புறுத்துவதாகவும் இருந்தது. என்ன செய்ய முடியும். 'எம்மவர்கள் பலர் இப்படித்தான்' என்றெண்ணிய வேளை அகதி முகாம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறி அதன் முகவரி கொடுக்கப்பட்டது. 'அங்கு இராணுவ முகாங்ளுக்குத் திரிஞ்சம். அகதி முகாமாத் திரிஞ்சம்... இங்கேயும் அகதிமுகாமா... என்ன செய்வது. எல்லாம் எங்கடை தலைவிதி...' என்று எண்ணியவாறு சென்றபோது, ஒரு வானில் ஏற்றி, முகாமுக்குச் கொண்டுசென்றார்கள். அங்கே ஒரு அறையில் நாலுபேர். இரண்டு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. ஒரு கட்டிலுக்கு மேல் ஒரு கட்டில். இவருக்கு மேற்கட்டில் கொடுக்கப்பட்டது. அதில் ஏறிப் படுத்தார். தாய்நிலத்தின் ஏக்கம் அவரை ஆட்கொண்டது. கவலை. பிரிவுத்துயர். தனிமை, போரின் தாக்கம், தமிழ்க் கைக்கூலிகளின் அடாவடித்தனம் அவர் மனத்திரையில் மாறிமாறி அலைமோதிக் கொண்டிருந்தன.

பூநகரி நெல் உற்பத்திக்கு புகழ் பெற்ற இடம். குறிப்பாக பச்சைப் பெருமாள், மொட்டைக் கருப்பன் நெல் விளைச்சலுக்கு விசேடமான பிரதேசம். மொட்டைக் கருப்பன் நெல்லரிசி மாவில் புட்டவித்து, அதைக் கையால் பிசையும்போது, எண்ணை கசிவது மட்டுமல்ல, கமகம என ஒரு நல்ல வாசனை வீசும் தன்மையும் கொண்டது. அப்படியான நெல் விளையும் பிரதேசத்தில் இருந்து, தன் நிலபுலன்களைவிட்டு சிங்கள அரசின் கொடூரமான செல் வீச்சுக் காரணமாக குடிபெயர்ந்த குடும்பங்களில் கலாவின் குடும்பமும் ஒன்று. அவர் தன் குடும்பம் சகிதம் முழங்காவில் என்னும் இடத்துக்குப் போய், வாழ்ந்தபோது, திடீரென வந்த குபீர் குண்டுவீச்சு விமானம் அவரின் வீட்டில் எரிகுண்டு வீசியதால் அவர்; கணவர் உயிர் இழந்தார். சிறிய காயங்களுக்குள்ளான அவரும் அவரது பிள்ளைகளும் மீண்டும் இடம் பெயர்ந்து, விஸ்வமடுவுக்கு சென்று வாழ்ந்தனர்.

ஊரையும் பிரிந்து உறவுகளையும் பிரிந்து கணவனையும் இழந்த நிலையில் விஸ்வமடுவில் வாழ்ந்தவர் அங்கிருந்தும் இடம்பெயர்ந்தார். தமிழரின் வாழ்விடங்களிலிருந்து, தமிழரைக் கலைத்த இனவாதப் பூதம் முள்ளிவாய்காலில் பெரும்பகுதியான தமிழரை முடக்கி நரவேட்டையாடி, தமிழரின் தசையைப் பிழிந்து, இரத்தத்தால் தனக்கு அபிசேகம் செய்து. வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை பலி எடுத்தது. அந்தப்பலிக்குத் தன் பிஞ்சுக் குழந்தைகள் இரண்டை இரை கொடுத்த கலாவை அது சின்னாபின்னப்படுத்தி தெருவோரத்தில் வீசியது, குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு ஓரத்தில் கிடந்தவர், பின்னர், ஒரு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு, பட்டியுக்குள் அடைக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாய் அங்கு வாழ்ந்தார். குறியிடப்பட்ட மாடுகளை இனம் காண்பதுபோல் ஒருவன் தனக்குத் தெரிந்த போராளிகளையும் போரளிகளின் குடும்பங்களையும் அடையாளம் காட்டிக்கொண்டிருந்தான். அவன் கலாவின் பக்கம் வந்தபோது, அவர் அவனைக் கவனித்து 'பாவி எத்தனை நாள் உண்மையானவன் என நம்பி உனக்குச் சாப்பாடு போட்டன், நீயும் இப்படியா!' என எண்ணித் தனது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். இந்த நிலையில் பல இளம் பெண்களையும் இளைஞர்களையும் இராணுவம் பிடித்து, இழுத்து சென்றுகொண்டிருந்தது. இவை அனைதும் அவரின் மனத்திரையில் கடல் அலைகள்போல் ஆர்பாரித்துக்ககொண்டே இருந்தன.

உண்ண உணவும் இல்லை. உறங்கப்பாயும் இல்லை. உறவுகளைக் கூடக் காண முடியாத நிலையில் துன்பங்கள் சோகங்கள், இளம் பெண்களின் அலறல் சத்தம்... இளைஞர்களின் முணுகல் சத்தம்... எத்தனை நாட்கள் இவற்றுடன் அடைபட்டுக் கிடக்க முடீயும். துணிவு கொண்டார். முகாமுக்குள் வந்த தண்ணீர் வண்டி ஒன்றுக்குள் ஏறி, வெளியேறி, பின்னர் தன் தாய் நிலத்தைவிட்டுப் புலம் பெயர்ந்து, அன்னிய தேதசத்தில் அடைக்கலம் கோர ஒரு முகவரை நாடினார். அதன் பலன் இப்பேர்து இங்கே...

அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இரவுப் பொழுது எப்படிக் கழிந்ததென அவரால் நினைத்துப் பார்க்க முடியாமலே மறுநாள் வந்திருந்தது. சில காகிதத் தாள்களுடன் வந்து ஒருவன் அவரை அவசரமாக வரும்படி சைகையால் கூறினான். சிறிது நேரம் யோசித்தவர்... கட்டிலை விட்டு இறங்கி, வந்தவனுடன் சென்றார். அவருக்கு கையில் இரண்டு துண்டுப் பாணும் ஒரு அப்பிளும் கொடுக்கப்பட்டது, அதனுடன் சென்றவருக்கு, முகாமுக்கு கொண்டுவந்த அதே வான் அங்கு தயாராக நின்றது. அதில் ஏற்றப்பட்டு வேறொரு விசாரணை செய்யும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கே கைரேகை அடையாளங்களை பதிவு செய்து, சில பத்திரங்களில் கையெழுத்து வைத்து வெளியேறியபோது, இரண்டு தமிழ் பையன்கள் நின்றனர். அவர்களுடன் உரையாடியபோது. ஒருவர் "விடுமுறை நாட்களில் வெளியில் சென்று வரலாம் அம்மா... நான் வந்து உங்களைக் கூட்டிக் கொண்டு போறன்..." என்று கூறியது அவருக்கு ஆறுதலாக இருந்தது. அதன்பின் முகாமுக்குச் சென்றவர் மீண்டும் கட்டிலில் ஏறினார்.

'வீட்டுக்கு கோலம் போட்டு விளக்கேற்றி வைத்தோம் வீடுதேடி வந்தவர்களுக்கெலாம் விருந்தும் வைத்தோம்... அக்கம் பக்கமெல்லாம் அகமகிழ்ச்சியாகக் கொண்டாடீக் குது காலித்தோம். எந்த உணவுக்கும் யாரிடமும் கையேந்தாத வாழ்க்கை, சுதந்திரமாகத் திரிந்தோம். இன்று, மற்றவர்களிடம் மண்டியிட்டு, மாற்றிக் கட்டத் துணியில்லாமல், ஒரு நேர உணவுக்கு கையேந்தும் நிலை... என்ன செய்யிறது...' வருந்தினார். இருண்ட முகில்களுக்கிடையே மின்னல் கீற்று தெரிந்தது மாதிரி அவரைச் சந்தித்து உரையாடியவரின் ஆறுதல் வார்த்தை நினைவுக்கு வந்தது. யோசித்தபடியே படுத்திருந்தார். அறைக்கதவு தட்டப்பட்டது. இறங்கிக் கதவைத் திறந்தபோது, குறிப்பிட்ட பையன் பழங்கள் பிஸ்கட் அகியவற்றுடன் அங்கு நின்றான். 'என்பிள்ளையைப் பார்த்த மாதிரி இருக்கு...' எனக்கூறி கண் கலங்கினார்.

வந்த பையன், "கெதியா... வெளிக்கிட்டு வாங்கம்மா..." என்று கூறியபின் கொண்டுவந்த பொருட்களை அவரின் கட்டிலுக்கடியில் வைத்தபின், வெளியால் வந்து காத்திருந்தான். அவர் வெளியே வந்தபின் தன் வீட:டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறியபின், வேறொரு வீட:டுக்கு கூட்டிச் சென்றான்.

அந்த வீட்டுக்காரர் கலாவை ஏற இறங்கப் பார்த்தார். "எங்க இருந்தனீங்க... எப்ப வெளிக்கிட்டனீங்க... எப்படி வந்தனீங்க..." என்று பல கேள்விகள் கேட்டார். கலாவும் வஞ்சமமில்லாமல் சுருக்கமாகப் பதில் கொடுத்திருந்தாள்.

"இவ்வளவு இராணுவக் கெடுபிடியுக்குள்ள இருந்து... தமிழ் ஆட்கள் வெளியால வாறதென்பது நம்ப முடியாத விசயம்... ஆனா... வந்திருக்கிறீங்க... ஏதாவது ஆதரவில்லாமல் வரமுடியாது. உங்களைப் போல பல பேரை சிங்கள இராணுவம் அனுப்பி வைச்சிருக்கு... எங்களுக்கெல்லாம் தெரியும். வந்தனீங்க ஒருத்தரோடையும் தொடர்பு வைத்திருக்கப்படாது. தொடர்பு வைத்து, வீண் பிரச்சினையில மாட்டிக் கொள்ளாதேயுங்க..."

கலா கூட்டிக்கொண்டுவந்த பையனின் முகத்தைப் பார்த்தாள்.

"தம்பி உனக்கும்தான் சொல்லுறன்... காமில காணுற ஆட்களையெலாம் இங்க கூட்டிக்கொண்டுவந்து எங்கட உயிரை வேண்டாதை.... தெரியும்தானே..."

கலாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை... "என்ன தம்பி... புதிசா வந்தா... அரசாங்கம் அனுப்பின ஆளே... வீடுதேடி வந்த ஆளுடன் எப்படிப் பண்பாக் கதைக்கிறதெண்டு கூட உங்களுக்குத் தெரியாதா? நாங்களும் நாட்டுக்காகப் பாடுபட்டனாங்கதான்... நான் இரண்டு மாவீரரின்ரை தாய்... இந்த வயித்துக்குள்ளதான் அவங்களும் கிடந்தவங்க... நாங்களும் களத்தில நின்றனாங்கதான்... நீங்க ஏதோ இந்த நாட்டுத் தலைவர் மாதிரியும், நாங்க... ஏதோ பரதேசியள் மாதிரியும.;... நினைச்சு... எல்லாம் உங்களுக்குத் தெரியும் எண்டு கண்டபாட்டுக்குக் கதைக்காதீங்க... மற்றவரை மதிக்கப் பழகுங்க... நீங்க கனகாலம் இங்ச இருக்கிற தெண்டாப்ப பெரிசா நினைக்காதேயுங்கோ..."

"மாவீரரின்ரை தாயாயெண்டால் என்ன, போராளி என்றால் என்ன, இஞ்ச... நாங்கள் சொல்லுறதைக் கேட்டு. எங்களோடை இணைஞ்சு, போகவேணும்... இல்லையெண்டால் பிரச்சினைதான்... "

"எங்களுக்கு இங்க நடக்கிறதெதுவும் தெரியதெண்டு நினைக்காதிங்க..." என்று

கூறியபடி கோபமாக எழுந்து, " தம்பி போவம் வாங்க..." என்றபடி கலா வெளியேறினார்.

பையனும் கூட எழுந்து சென்றான்.

வெளியில் சென்ற கலா "தம்பி... யார் இவர்... இங்கை ஏன் கூட்டிக்கொண்டுவந்தனீங்க... " என்றார்.

"கோவிக்காதேயுங்க அம்மா... விடுதலை விடுதலை என்று திரிஞ்சினம். அதால ஏதாவது உதவி செய்வினம் என்று யோசிச்சு... இங்க கூட்டிக்கொண்டுவந்தனான் இந்த ஆள்... இப்படிப்பட்ட ஆள் என்று நான் நினைக்கவில்லை... சரி பறவாயில்லை... என்னால இயன்ற உதவியை நான் செய்யிறன்" என்று கூறியபடி, அகதிமுகாமில் கலாவை விட்டுவிட்டு, தன் இருப்பிடம் சிந்தித்தவாறு சென்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

"கோவிக்காதேயுங்க அம்மா... விடுதலை விடுதலை என்று திரிஞ்சினம். அதால ஏதாவது உதவி செய்வினம் என்று யோசிச்சு... இங்க கூட்டிக்கொண்டுவந்தனான் இந்த ஆள்... இப்படிப்பட்ட ஆள் என்று நான் நினைக்கவில்லை... சரி பறவாயில்லை... என்னால இயன்ற உதவியை நான் செய்யிறன்" என்று கூறியபடி, அகதிமுகாமில் கலாவை விட்டுவிட்டு, தன் இருப்பிடம் சிந்தித்தவாறு சென்றான்

ஒரு வரியில் சொல்வதானால், யதார்த்தம்!>

இன்றைய உலகம் இப்படித்தான். நாட்டுக்காக உண்மையாக உழைத்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் வால் பிடித்தவர்கள் இப்படித்தான் மிரட்டுகிறார்கள். இந்தக் கதையில் வரும் பெண்ணின் இழப்புகள் ஈடுகட்ட முடியாதவை. கணவனைப் பறி கொடுத்து, பிள்ளைகளை மண்ணுக்காக ஈன்ற அந்த தாயுள்ளம் வணக்கத்திற்குரியது. உதவி செய்யவேண்டி வருமோ என்ற பயத்தில் தான் இப்படியான போக்கினை சிலர் கடைப்பிடிக்கின்றனர். இப்பொழுது தான் புதிது புதிதாக புதுப் புது தலைவர்கள் முளைத்துக்கொண்டு இருக்கிறார்களே.

உண்மை கதையை தந்தமைக்கு மிக்க நன்றி...

'எங்களுக்குள் உலவும் யதார்த்தம்' என்பதனை போட்டுடைத்து..... வெளிக்காட்டும் கதை!!!

நன்றி செம்பகன் :)2

மிக உண்மையான கதை .எழுதியவிதமும் யதார்த்தமாக இருந்து .

கைக்கூலிகள் ,பின் புலிகள்,பின் புலம் பெயர்ந்து தேசியம் வளர்ப்பவன் எல்லாம் ஒரே தமிழன் தான்.இதற்குள் நான் திறம் நீ திறம் எண்டு சண்டை.

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தம்.

தேசியம் என்று கனைக்கும் பலரது உண்மைமுகம் இதுதான்.

வெந்த புண்ணில்...

பிராங்போட் விமான நிலையத்தில், இலங்கையிலிருந்து புறப்பட்ட விமானம் தரை இறங்கிவிட்டதற்கான அறிவிப்பு மின்திரையில் எழுத்தில் ஒடீக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்த ஜெகன் 'எல்லாப் பரிசோதனையும் முடிந்து பயணிகள் வெளியேற ஒன்றரை மணித்தியாலங்களாவது செல்லும்' என்ற கணிப்பில், குட்டி போட்ட பூனைமாதிரி அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தான். இதனை அவதானித்த, விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் ஜெகனின் அடையாள அட்டையை வேண்டி, பரிசோதித்து, அதனைக் குறிப்பெடுத்த போது, ஜெகனுக்குப் பயம் ஏற்பட்டதுடன். அவனது இதயம் மேலும் படபடக்கத் தொடங்கியது. இந்நிலையில், சிறிது நேரம் செல்ல, பயணிகள் வெளியேறியபோது, தான் அழைத்துச் செல்ல வந்த ஆள் அதற்குள் வருகிறாரா என்று அவதானித்துக்கொண்டிருந்தான்.

அவன் எதிர்பார்க்கும் ஆள் வருவதுபோல் இருந்தது. வந்தவரை முன் பின் தெரியா விட்டாலும் "நீங்கள்தான் கலாவா"... என்று கேட்டபோது, வந்தவர் "ஆம்" எனத் தலையாட்ட, "நான்தான் ஜெகன். உங்களைக் கூட்டிக்கொண்டு போக வந்தனான்" . என்றவன், "என்னைத் தொடர்ந்து வாருங்கள்" என்று கூறி கார் நிற்கும் இடத்துக்கு சென்றான். ஜெகன் என்ற பெயர் வந்தவருக்கு ஏற்கனவே கூறப்பட்டிருந்ததால், வந்தவர் அவனைத் தொடர்ந்தார்.

அவர்கள் சென்ற கார் அகதிகள் பதியும் இடத்திற்கு முன் நிற்பாட்டப்பட்டது. "அக்கா இதில இறங்குங்க..." என்று கூறியவர் கலாவை அதில் இறக்கிவிட்டபின் சென்றுவிட்டான். கலாவுக்கு எங்கே போவது என்ன செய்வது என்று எதுவும் புரியவில்லை. இதனை அவதானித்த, வேறொரு நாட்டைச் சேர்ந்தவர், கலாவை கூட்டிச் சென்று. பதியவேண்டிய இடத்தைக் காட்டியபோது. அங்கேயும் என்ன செய்வதென்று புரியவில்லை. "தமிழ்..." என்றார். அதிகாரிக்கு விசயம் விளங்கியது. தொலைபேசி மூலம் தமிழ் மொழிபெயர்பாளரை அழைத்தார். மொழிபெயர்ப்பாளர் வந்தபோது. ஏதோ அருவருப்பான ஒரு பிராணியைப் பார்த்தமாதிரி அவளைப் பார்த்த பார்வை அவளுக்கு அருவருப்பாக இருந்தது. 'நான் அப்படி என்ன கேவலமாக இருக்கிறன்' என்று நினைத்தவர் தனது சேலையைச் சரிசெய்து. தலையையும் தடவிப் பார்த்தாள். 'ஏதோ வந்திட்டம், வருவதைச் சமாளிக்க வேண்டியதுதான்' எனச் சிந்தித்தபோது, மொழிபெயர்ப்பாளர் கையால் சைகை செய்து, அறையினுள் வரும்படி அழைத்தார்.

மொழிபெயர்ப்பாளரின் கேள்விகள் சிங்கள இராணுவ அதிகாரிகளின் செயற்பாட்டை ஞாபகப் படுத்தியதுடன், அவரைத் துழைத்துத் துன்புறுத்துவதாகவும் இருந்தது. என்ன செய்ய முடியும். 'எம்மவர்கள் பலர் இப்படித்தான்' என்றெண்ணிய வேளை அகதி முகாம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறி அதன் முகவரி கொடுக்கப்பட்டது. 'அங்கு இராணுவ முகாங்ளுக்குத் திரிஞ்சம். அகதி முகாமாத் திரிஞ்சம்... இங்கேயும் அகதிமுகாமா... என்ன செய்வது. எல்லாம் எங்கடை தலைவிதி...' என்று எண்ணியவாறு சென்றபோது, ஒரு வானில் ஏற்றி, முகாமுக்குச் கொண்டுசென்றார்கள். அங்கே ஒரு அறையில் நாலுபேர். இரண்டு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. ஒரு கட்டிலுக்கு மேல் ஒரு கட்டில். இவருக்கு மேற்கட்டில் கொடுக்கப்பட்டது. அதில் ஏறிப் படுத்தார். தாய்நிலத்தின் ஏக்கம் அவரை ஆட்கொண்டது. கவலை. பிரிவுத்துயர். தனிமை, போரின் தாக்கம், தமிழ்க் கைக்கூலிகளின் அடாவடித்தனம் அவர் மனத்திரையில் மாறிமாறி அலைமோதிக் கொண்டிருந்தன.

பூநகரி நெல் உற்பத்திக்கு புகழ் பெற்ற இடம். குறிப்பாக பச்சைப் பெருமாள், மொட்டைக் கருப்பன் நெல் விளைச்சலுக்கு விசேடமான பிரதேசம். மொட்டைக் கருப்பன் நெல்லரிசி மாவில் புட்டவித்து, அதைக் கையால் பிசையும்போது, எண்ணை கசிவது மட்டுமல்ல, கமகம என ஒரு நல்ல வாசனை வீசும் தன்மையும் கொண்டது. அப்படியான நெல் விளையும் பிரதேசத்தில் இருந்து, தன் நிலபுலன்களைவிட்டு சிங்கள அரசின் கொடூரமான செல் வீச்சுக் காரணமாக குடிபெயர்ந்த குடும்பங்களில் கலாவின் குடும்பமும் ஒன்று. அவர் தன் குடும்பம் சகிதம் முழங்காவில் என்னும் இடத்துக்குப் போய், வாழ்ந்தபோது, திடீரென வந்த குபீர் குண்டுவீச்சு விமானம் அவரின் வீட்டில் எரிகுண்டு வீசியதால் அவர்; கணவர் உயிர் இழந்தார். சிறிய காயங்களுக்குள்ளான அவரும் அவரது பிள்ளைகளும் மீண்டும் இடம் பெயர்ந்து, விஸ்வமடுவுக்கு சென்று வாழ்ந்தனர்.

ஊரையும் பிரிந்து உறவுகளையும் பிரிந்து கணவனையும் இழந்த நிலையில் விஸ்வமடுவில் வாழ்ந்தவர் அங்கிருந்தும் இடம்பெயர்ந்தார். தமிழரின் வாழ்விடங்களிலிருந்து, தமிழரைக் கலைத்த இனவாதப் பூதம் முள்ளிவாய்காலில் பெரும்பகுதியான தமிழரை முடக்கி நரவேட்டையாடி, தமிழரின் தசையைப் பிழிந்து, இரத்தத்தால் தனக்கு அபிசேகம் செய்து. வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை பலி எடுத்தது. அந்தப்பலிக்குத் தன் பிஞ்சுக் குழந்தைகள் இரண்டை இரை கொடுத்த கலாவை அது சின்னாபின்னப்படுத்தி தெருவோரத்தில் வீசியது, குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு ஓரத்தில் கிடந்தவர், பின்னர், ஒரு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு, பட்டியுக்குள் அடைக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாய் அங்கு வாழ்ந்தார். குறியிடப்பட்ட மாடுகளை இனம் காண்பதுபோல் ஒருவன் தனக்குத் தெரிந்த போராளிகளையும் போரளிகளின் குடும்பங்களையும் அடையாளம் காட்டிக்கொண்டிருந்தான். அவன் கலாவின் பக்கம் வந்தபோது, அவர் அவனைக் கவனித்து 'பாவி எத்தனை நாள் உண்மையானவன் என நம்பி உனக்குச் சாப்பாடு போட்டன், நீயும் இப்படியா!' என எண்ணித் தனது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். இந்த நிலையில் பல இளம் பெண்களையும் இளைஞர்களையும் இராணுவம் பிடித்து, இழுத்து சென்றுகொண்டிருந்தது. இவை அனைதும் அவரின் மனத்திரையில் கடல் அலைகள்போல் ஆர்பாரித்துக்ககொண்டே இருந்தன.

உண்ண உணவும் இல்லை. உறங்கப்பாயும் இல்லை. உறவுகளைக் கூடக் காண முடியாத நிலையில் துன்பங்கள் சோகங்கள், இளம் பெண்களின் அலறல் சத்தம்... இளைஞர்களின் முணுகல் சத்தம்... எத்தனை நாட்கள் இவற்றுடன் அடைபட்டுக் கிடக்க முடீயும். துணிவு கொண்டார். முகாமுக்குள் வந்த தண்ணீர் வண்டி ஒன்றுக்குள் ஏறி, வெளியேறி, பின்னர் தன் தாய் நிலத்தைவிட்டுப் புலம் பெயர்ந்து, அன்னிய தேதசத்தில் அடைக்கலம் கோர ஒரு முகவரை நாடினார். அதன் பலன் இப்பேர்து இங்கே...

அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இரவுப் பொழுது எப்படிக் கழிந்ததென அவரால் நினைத்துப் பார்க்க முடியாமலே மறுநாள் வந்திருந்தது. சில காகிதத் தாள்களுடன் வந்து ஒருவன் அவரை அவசரமாக வரும்படி சைகையால் கூறினான். சிறிது நேரம் யோசித்தவர்... கட்டிலை விட்டு இறங்கி, வந்தவனுடன் சென்றார். அவருக்கு கையில் இரண்டு துண்டுப் பாணும் ஒரு அப்பிளும் கொடுக்கப்பட்டது, அதனுடன் சென்றவருக்கு, முகாமுக்கு கொண்டுவந்த அதே வான் அங்கு தயாராக நின்றது. அதில் ஏற்றப்பட்டு வேறொரு விசாரணை செய்யும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கே கைரேகை அடையாளங்களை பதிவு செய்து, சில பத்திரங்களில் கையெழுத்து வைத்து வெளியேறியபோது, இரண்டு தமிழ் பையன்கள் நின்றனர். அவர்களுடன் உரையாடியபோது. ஒருவர் "விடுமுறை நாட்களில் வெளியில் சென்று வரலாம் அம்மா... நான் வந்து உங்களைக் கூட்டிக் கொண்டு போறன்..." என்று கூறியது அவருக்கு ஆறுதலாக இருந்தது. அதன்பின் முகாமுக்குச் சென்றவர் மீண்டும் கட்டிலில் ஏறினார்.

'வீட்டுக்கு கோலம் போட்டு விளக்கேற்றி வைத்தோம் வீடுதேடி வந்தவர்களுக்கெலாம் விருந்தும் வைத்தோம்... அக்கம் பக்கமெல்லாம் அகமகிழ்ச்சியாகக் கொண்டாடீக் குது காலித்தோம். எந்த உணவுக்கும் யாரிடமும் கையேந்தாத வாழ்க்கை, சுதந்திரமாகத் திரிந்தோம். இன்று, மற்றவர்களிடம் மண்டியிட்டு, மாற்றிக் கட்டத் துணியில்லாமல், ஒரு நேர உணவுக்கு கையேந்தும் நிலை... என்ன செய்யிறது...' வருந்தினார். இருண்ட முகில்களுக்கிடையே மின்னல் கீற்று தெரிந்தது மாதிரி அவரைச் சந்தித்து உரையாடியவரின் ஆறுதல் வார்த்தை நினைவுக்கு வந்தது. யோசித்தபடியே படுத்திருந்தார். அறைக்கதவு தட்டப்பட்டது. இறங்கிக் கதவைத் திறந்தபோது, குறிப்பிட்ட பையன் பழங்கள் பிஸ்கட் அகியவற்றுடன் அங்கு நின்றான். 'என்பிள்ளையைப் பார்த்த மாதிரி இருக்கு...' எனக்கூறி கண் கலங்கினார்.

வந்த பையன், "கெதியா... வெளிக்கிட்டு வாங்கம்மா..." என்று கூறியபின் கொண்டுவந்த பொருட்களை அவரின் கட்டிலுக்கடியில் வைத்தபின், வெளியால் வந்து காத்திருந்தான். அவர் வெளியே வந்தபின் தன் வீட:டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறியபின், வேறொரு வீட:டுக்கு கூட்டிச் சென்றான்.

அந்த வீட்டுக்காரர் கலாவை ஏற இறங்கப் பார்த்தார். "எங்க இருந்தனீங்க... எப்ப வெளிக்கிட்டனீங்க... எப்படி வந்தனீங்க..." என்று பல கேள்விகள் கேட்டார். கலாவும் வஞ்சமமில்லாமல் சுருக்கமாகப் பதில் கொடுத்திருந்தாள்.

"இவ்வளவு இராணுவக் கெடுபிடியுக்குள்ள இருந்து... தமிழ் ஆட்கள் வெளியால வாறதென்பது நம்ப முடியாத விசயம்... ஆனா... வந்திருக்கிறீங்க... ஏதாவது ஆதரவில்லாமல் வரமுடியாது. உங்களைப் போல பல பேரை சிங்கள இராணுவம் அனுப்பி வைச்சிருக்கு... எங்களுக்கெல்லாம் தெரியும். வந்தனீங்க ஒருத்தரோடையும் தொடர்பு வைத்திருக்கப்படாது. தொடர்பு வைத்து, வீண் பிரச்சினையில மாட்டிக் கொள்ளாதேயுங்க..."

கலா கூட்டிக்கொண்டுவந்த பையனின் முகத்தைப் பார்த்தாள்.

"தம்பி உனக்கும்தான் சொல்லுறன்... காமில காணுற ஆட்களையெலாம் இங்க கூட்டிக்கொண்டுவந்து எங்கட உயிரை வேண்டாதை.... தெரியும்தானே..."

கலாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை... "என்ன தம்பி... புதிசா வந்தா... அரசாங்கம் அனுப்பின ஆளே... வீடுதேடி வந்த ஆளுடன் எப்படிப் பண்பாக் கதைக்கிறதெண்டு கூட உங்களுக்குத் தெரியாதா? நாங்களும் நாட்டுக்காகப் பாடுபட்டனாங்கதான்... நான் இரண்டு மாவீரரின்ரை தாய்... இந்த வயித்துக்குள்ளதான் அவங்களும் கிடந்தவங்க... நாங்களும் களத்தில நின்றனாங்கதான்... நீங்க ஏதோ இந்த நாட்டுத் தலைவர் மாதிரியும், நாங்க... ஏதோ பரதேசியள் மாதிரியும.;... நினைச்சு... எல்லாம் உங்களுக்குத் தெரியும் எண்டு கண்டபாட்டுக்குக் கதைக்காதீங்க... மற்றவரை மதிக்கப் பழகுங்க... நீங்க கனகாலம் இங்ச இருக்கிற தெண்டாப்ப பெரிசா நினைக்காதேயுங்கோ..."

"மாவீரரின்ரை தாயாயெண்டால் என்ன, போராளி என்றால் என்ன, இஞ்ச... நாங்கள் சொல்லுறதைக் கேட்டு. எங்களோடை இணைஞ்சு, போகவேணும்... இல்லையெண்டால் பிரச்சினைதான்... "

"எங்களுக்கு இங்க நடக்கிறதெதுவும் தெரியதெண்டு நினைக்காதிங்க..." என்று

கூறியபடி கோபமாக எழுந்து, " தம்பி போவம் வாங்க..." என்றபடி கலா வெளியேறினார்.

பையனும் கூட எழுந்து சென்றான்.

வெளியில் சென்ற கலா "தம்பி... யார் இவர்... இங்கை ஏன் கூட்டிக்கொண்டுவந்தனீங்க... " என்றார்.

"கோவிக்காதேயுங்க அம்மா... விடுதலை விடுதலை என்று திரிஞ்சினம். அதால ஏதாவது உதவி செய்வினம் என்று யோசிச்சு... இங்க கூட்டிக்கொண்டுவந்தனான் இந்த ஆள்... இப்படிப்பட்ட ஆள் என்று நான் நினைக்கவில்லை... சரி பறவாயில்லை... என்னால இயன்ற உதவியை நான் செய்யிறன்" என்று கூறியபடி, அகதிமுகாமில் கலாவை விட்டுவிட்டு, தன் இருப்பிடம் சிந்தித்தவாறு சென்றான்.

:):):) 3 .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகமே செம்பகமே கற்பனை கொஞ்சம் தேசியத்தை சுரண்டிபார்க்குது.....

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகன்..! வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது உங்கள் கதை...பாராட்டுக்கள் உங்கள் எழுத்துக்களுக்கு செம்பகன்..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எனது கணனி நோய்வாய்ப்பட்டதால் கருத்து எழுத முடியவில்லை. காலம் தாழ்த்தி எழுதுவதற்கு மன்னிக்கவும். புங்கையூரான், கல்கல்கி, கவிதை, அர்ச்சுன், வல்வைசகறா, கோமகன், புத்தன், சுபேஸ் ஆகியோர்களுக்கு நன்றி.

களத்தில் விழுப்புண் அடைந்து இங்கு வந்த ஒரு போராளியை, விடுதலைக்குப் பணம் சேர்த்து அதில் திண்டு கொழுத்த ஒருவர் அடிக்கப்போனதை நேரில் கண்டவன் நான்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக உண்மையான கதை .எழுதியவிதமும் யதார்த்தமாக இருந்து .

கைக்கூலிகள் ,

பின் புலிகள்,????

பின் புலம் பெயர்ந்து தேசியம் வளர்ப்பவன்

எல்லாம் ஒரே தமிழன் தான்.இதற்குள் நான் திறம் நீ திறம் எண்டு சண்டை.

புலிகள் யாரை ஏமாற்றினார்கள்?

என்பதற்கு உங்களிடம் எது ஆதாரம் இருக்கிறதா?

கரடியையும்............. சொறி நாயையும் பற்றி நீங்கள் எழுதுவதே அதற்குள் புலியை விடுவதற்காகவே. ஏன் சுத்தி வளைக்கிரீங்கள்?

நேரடியாகவே உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரகூடியத்தை எழுதிவிடலாம். இது கூட அடுத்தவனை வைத்து நீங்கள் காணும் ஒரு சிற்றின்பம்தான். இதற்குள் அடுத்தவன் சொரிகிறான் என்று புலம்புறீங்கள். அவர்கள் என்னத்தை புதிதாக செய்கிறார்கள்? நீங்கள் நாளும் செய்வதைத்தானே அவர்களும் செய்கிறார்கள்.

அடுத்தவன் வாழ்வை உங்களின் சுகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பயன்படுத்துவது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்; என்றாலும் கேள்விக்கான பதில்.

புலிகள் யாரையும் ஏமாற்றவில்லை. புலித்தோல் போத்த நரிகள் (காசுப்புலிகள்) தான் மக்களை ஏமாற்றினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.