Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதரவுடன் பொற்கிளி(ழி) இது வரை எட்டு சுற்றுக்களை கடந்துள்ளது. நாம் வாக்குறுதி வழங்கியபடி இன்னும் நான்கு சுற்றுக்கள் உள்ளது. இந்த நான்கு சுற்றுக்களின் பின்னர் பொற்கிளி(ழி) எம்மால் தொடர முடியுமா என்பதற்கான நம்பிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, வேறு நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தொடர்ந்து இந்த முயற்சியை ஒவ்வொரு மாதமும் முன்னெடுக்க விரும்பினால் அவர்களுக்கு ஆரம்பத்தில் தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் (ஏதாவது தேவைப்பட்டால்) வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். இந்த முயற்சியை தொடர்வதற்கு யாருக்காவது விருப்பம் என்றால் இப்போதே திட்டமிடுங்கள். அது நீங்கள் இந்த முயற்சியை இலகுவாக 2013ம் ஆண்டிலிருந்து தொடர்வதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

------

உங்களின், வழிகாட்டலுக்கு நன்றி, போக்குவரத்து.

2013ம் ஆண்டிற்கான.... பொற்கிளி(ழி) வழங்கும் பொறுப்பை யார்... ஏற்கிறீர்கள்.

மாதம் 50 டொலர் படி... வருடத்துக்கு 600 டொலர் வரும்.

இதற்கான ஆதரவை யாராவது தர முன்வந்தால்....

ஒளிப்பதிவு தயாரிக்கும் ஆலோசனையை... போக்குவரத்து வழங்கத் தயாராக உள்ளார் என கூறியுள்ளார்.

எங்கே... கை உயத்துங்கோ பார்க்கலாம்....

முந்துபவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.

  • Replies 306
  • Views 28.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யாராவது நிறுவனம் முன்வந்து அனுசரணை வழங்கினால் அன்பளிப்பு கொடுக்கலாம். இல்லாவிட்டாலும் அன்பளிப்பு இல்லாமலே இந்த முயற்சியை தொடரவும் முடியும். ஒவ்வொரு மாதமும் பொற்கிளி(ழி) பெறுகின்ற கருத்தாளர்களிடையே வருடத்தின் சிறந்த மூன்று அல்லது ஒரு கருத்தாளரை தெரிவு செய்து அவர்களுக்கு/அவருக்கு வருடநிறைவில் அல்லது அரையாண்டுகளில் அன்பளிப்பும் (யாழ் நினைவு பரிசுகள்/பரிசு) கொடுக்கலாம். இங்கு இதை எவராவது முன் வந்து பொறுப்பெடுத்து செய்வார்களா என்பதே தற்போதைய தேவை. தனிநபராக இல்லாவிட்டால் இரண்டு, மூன்று பேர் சேர்ந்த குழுவாகவும் செயற்படலாம்.

எமக்கு பிரதானமாக நேர பற்றாக்குறை காரணமாகவே 2013இலும் இந்த முயற்சியை தொடர்வது சிரமமாக அமையும். இந்த முயற்சிக்காக ஒவ்வொரு மாதமும் மிக நீண்ட நேரத்தை செலவு செய்கிறோம். வேறு பல முக்கியமான விடயங்களில் கவனத்தை செலுத்த வேண்டியுள்ளதால் தொடர்ந்தும் எம்மால் இந்த முயற்சியை 2013இலும் நீடிப்பது கடினமாக உள்ளது.

உங்கள் அனைவரினதும் ஆதரவுடன் மாதாந்த பொற்கிளி(ழி) உருவாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முன்னெடுப்பது உங்கள் கைகளிலேயே உள்ளது. நன்றி

Edited by போக்குவரத்து

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மாதமும் சிறந்த கருத்தாளரைத் தெரிவு செய்வது எழுதுபவர்களை ஊக்குவிக்கும் ஒரு நல்ல செயல். புலபெயர் நாடுகளில் வசதியாக வாழும் எமக்கு அம்பது டொலர் சிறிதுதான் உதவும். அதே தாயகத்தில் உதவியின்றித் தவிப்போர்க்கு மாதம் முழுவதும் உதவும்.சிறந்த கருத்தாளராகத் தெரிவு செய்யப்படுபவரின் பெயரில் ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்துக்கு உதவலாம் அல்லது வேறுவேறு குடும்பங்களுக்கு உதவலாம்.தெரிவு செய்யப்படும் கருத்தாளரே வன்னியில் துன்பப்படும் குடும்பத்தைத் தெரிவுசெய்து தரலாம். 2013 ற்கான 600 டொலரை நான் தருகிறேன்.

கேட்டவுடன்... முதலாவது ஆளாக வந்து, 2013ற்கான யாழ்களத்தின் பொற்கிளி(ழி) வழங்குதலுக்கு அனுசரணை வழங்கிய சகோதரி மெசொபொத்தேமியா சுமேரியர் அவர்களுக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டவுடன்... முதலாவது ஆளாக வந்து, 2013ற்கான யாழ்களத்தின் பொற்கிளி(ழி) வழங்குதலுக்கு அனுசரணை வழங்கிய சகோதரி மெசொபொத்தேமியா சுமேரியர் அவர்களுக்கு நன்றி

அத்துடன் தாயக மக்கள் பற்றிய கரிசனை கண்டு பூரித்துப்போனேன். யாழ் மிளிரும். அதற்கு இவர்களே சாட்சி.

கடவுள் உங்களுடன் இருப்பார் சகோதரி.

மெசொபொத்தேமியா சுமேரியர் அக்கா உங்களுக்கு மிகவும் நன்றி.. இப்பொழுது தான் புதிதாக உள்நுழைந்திருக்கிறீர்கள்... அதற்குள்ளான உங்கள் சேவை என்னை வியக்க வைக்கிறது. மிக்க நன்றிகள் அக்கா...[size=4] :)[/size]

பச்சை முடிந்து விட்டது. பின்னர் வந்து போடுகிறேன். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மாதமும் சிறந்த கருத்தாளரைத் தெரிவு செய்வது எழுதுபவர்களை ஊக்குவிக்கும் ஒரு நல்ல செயல். புலபெயர் நாடுகளில் வசதியாக வாழும் எமக்கு அம்பது டொலர் சிறிதுதான் உதவும். அதே தாயகத்தில் உதவியின்றித் தவிப்போர்க்கு மாதம் முழுவதும் உதவும்.சிறந்த கருத்தாளராகத் தெரிவு செய்யப்படுபவரின் பெயரில் ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்துக்கு உதவலாம் அல்லது வேறுவேறு குடும்பங்களுக்கு உதவலாம்.தெரிவு செய்யப்படும் கருத்தாளரே வன்னியில் துன்பப்படும் குடும்பத்தைத் தெரிவுசெய்து தரலாம். 2013 ற்கான 600 டொலரை நான் தருகிறேன்.

அனுசரணை வழங்கிய சகோதரி மெசொபொத்தேமியா சுமேரியர் அவர்களுக்கு நன்றி

  • தொடங்கியவர்

ஒளிப்பதிவு தயாரிக்கும் ஆலோசனையை... போக்குவரத்து வழங்கத் தயாராக உள்ளார் என கூறியுள்ளார்.

ஒளிப்பதிவு மூலமே இதை தொடர வேண்டும் என்றும் இல்லை. ஒலிப்பதிவாக வெளிவிடலாம், புகைப்படமாக போடலாம், எழுத்திலும் வடிவாய் எழுதிப்போடலாம். இந்த முயற்சியை தொடர்ந்து பொறுப்பேற்பவர்கள் தமது வசதிப்படி செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் சிறந்த கருத்தாளரைத் தெரிவு செய்வது எழுதுபவர்களை ஊக்குவிக்கும் ஒரு நல்ல செயல். புலபெயர் நாடுகளில் வசதியாக வாழும் எமக்கு அம்பது டொலர் சிறிதுதான் உதவும். அதே தாயகத்தில் உதவியின்றித் தவிப்போர்க்கு மாதம் முழுவதும் உதவும்.சிறந்த கருத்தாளராகத் தெரிவு செய்யப்படுபவரின் பெயரில் ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்துக்கு உதவலாம் அல்லது வேறுவேறு குடும்பங்களுக்கு உதவலாம்.தெரிவு செய்யப்படும் கருத்தாளரே வன்னியில் துன்பப்படும் குடும்பத்தைத் தெரிவுசெய்து தரலாம். 2013 ற்கான 600 டொலரை நான் தருகிறேன்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி. அனுசரணை வழங்கும் நீங்கள்தான் பரிசை எவ்வாறு கொடுக்க போகின்றீர்கள், தலைப்பை (தற்போது - யாழ் கருத்துக்கள உறவுடகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான் + (மாதம் வருடம்) எப்படி போடவேண்டும் என்பவற்றை தீர்மானிக்க வேண்டும்.

நான் ஏற்கனவே பரிசு பற்றிய விளக்கங்களை கூறி இருந்தாலும் தேவை கருதி சுருக்கமாக அது பற்றிய சில விடயங்கள்.

1. பொற்கிளி(ழி) யை ஒவ்வொரு மாதமும் பெறும் கருத்தாளரின் வாழிடம்(நாடு), நினைவு பரிசை பெறும் வகை (அமேசன், பேபல்...) போன்ற பல விடயங்களை பொறுத்து ஒவ்வொருவரின் நினைவு பரிசும் $50 தொடக்கம் $75 வரை மாறுபடுகிறது.

2. நாம் இங்கு தொண்டு செய்வதற்கு வரவில்லை, யாழ் இணையத்தில் அனுசரணை வழங்கி எமது நிறுவனத்தின் சில SEO (Search Engine Optimization) தேவைகளையும் செய்வதற்கு பார்க்கிறோம். எமது பார்வையில் நேரடியாக நினைவு பரிசை கருத்தாளர்களுக்கு வழங்குவது அதிக பயன்களை ஏற்படுத்தும் என்று நினைக்கிறோம்.

இங்கு நினைவு பரிசு என்பது பரிசின் தொகையாக அல்லாமல் அதன் மதிப்பாகவே பார்க்கப்படவேண்டும். அத்துடன், அதை ஒரு சேவையாக அல்லது ஒரு பொருளாக பயன்படுத்தக்கூடியதாக காணப்படும் போது இணையத்தளத்தை வெறும் சூனியப்பிரதேசமாக பார்க்காமல் தொட்டு உணரக்கூடிய ஒரு வகையிலான பிணைப்பை கருத்தாளர்களுக்கு ஏற்படுத்தும் என்று நினைக்கிறோம்.

உதவி செய்வதாயின் அதை கருத்தாளர்கள் நேரடியாகவே தாயகத்துக்கு வழங்கமுடியும். இங்கு பரிசு பெற்றுத்தான் அங்கு வழங்கவேண்டும் என்கின்ற தேவை நிச்சயம் இல்லை. வசதி, வாய்ப்பு உள்ள கருத்தாளர்கள் ஆயிரம் டாலரையும் தாயகத்துக்கு அனுப்பலாம். இந்த வகையில் அன்பளிப்பு தொகை $50 ஆயினும், $75ஆயினும் தொகையை பாராது அதன் மதிப்பை உணர்ந்து நல்லவிதமான நினைவுகளை தூண்டக்கூடிய வகையில் அது கருத்தாளர்களிடையே ஒரு இணைப்பை யாழ் இணையத்துடன் ஏற்படுத்தும்.

வெளிநாடுகளில் வாழக்கூடிய பெரும்பாலான கருத்தாளர்களுக்கு $50 ஒரு பொருட்டே இல்லை, ஆனால் நினைவு பரிசாக அந்த $50 ஒரு சிறிய தொழில்நுட்ப கருவியாகவோ, நூலாகவோ, அணிகலனாகவோ இருக்கும் போது பசுமையான நினைவுகள் எப்போதும் ஏற்படும், குடும்பத்தில் உள்ளவர்கள், ஏனையோருக்கும் அந்த நினைவு ஓட்டங்களை நீண்ட காலத்தின் பின்னும் கூறலாம்.

இப்படியான காரணங்களினாலேயே நாம் நினைவு பரிசு கருத்தாளர்களை நேரடியாக சென்றடையவேண்டும் என்று விரும்புகிறோம்.

தவிர நாம் எமது நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து நீண்ட காலமாக (1989) பல்வேறு உதவிகளை (தாயக மக்கள் உட்பட) பலவிதமான மக்களுக்கும் செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை இங்கு வந்து செய்யவேண்டிய தேவை எமக்கு இல்லை.

மெசொபொத்தேமியா சுமேரியர் அவர்களின் அனுசரணைக்கு நன்றி கூறுவதோடு, அவருக்கு தோள் கொடுத்து இந்த முயற்சியை பொறுப்பு ஏற்கக்கூடியவர்கள் முன்வாருங்கள். இதை 2013 இல் ஒருங்கிணைத்து செய்வதற்கு யாராவது முன்வரவேண்டும்.

நன்றி

Edited by போக்குவரத்து

நன்றி மெசொப்பொத்தேமியா சுமேரியர்.

பரிசுப் பணத்தை கஷ்டப்படும் தாயக உறவுகளுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக மீண்டும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் மொசப்பொத்தேமியா சுமேரியர்!

உங்கள் உன்னதமான நோக்கம், இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நன்றிகள் மொசப்பொத்தேமியா சுமேரியர்![/size]

[size=4]உங்கள் உன்னதமான நோக்கம், இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்! [/size]

  • தொடங்கியவர்

மெசொபொத்தேமியா சுமேரியரின் அனுசரணையுடன் பொற்கிளி(ழி)யை தொடர்ந்து ஒருங்கிணைத்து வழங்குவதற்கு யாராவது முன்வாருங்கள். உங்களால் தொடர்ச்சியாக முழு வருடத்திற்கு செயற்பட முடியாவிட்டாலும் ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொருவர் சுழற்சி முறையில் பொறுப்பெடுத்து செய்யலாம். நீங்கள் சிறந்த கருத்துக்களையும், பொற்கிளி(ழி) பெறும் கருத்தாளரையும் தெரிவு செய்யுங்கள். அதை ஒரு பதிவாக வழங்குங்கள். மெசொபொத்தேமியா சுமேரியர் அனுசரணையை வழங்குவார். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் படைப்பிலக்கியம் சார்ந்த பகுதிக்கு 2013 ஆண்டுக்கு முழுமையாக பன்னிரு மாதங்களுக்குமான பொற்கிழிக்கு எனது முழுமையான ஆதரவை வழங்க விரும்புகின்றேன். உங்கள் திட்டமிடலில் என்னுடைய விருப்பையும் இணைத்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் இவ்விடயம் தொடர்பாக யாழ் இணையத்தில் தனிப்பட்ட உரிமையோ உத்திகளோ கைக்கொள்ளமாட்டேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். :rolleyes:

வாழ்த்துகளும் நன்றிகளும் சகாறா அக்கா.... :)

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு புரியலியே கொஞ்சம் விளங்கிற மாதிரி என்னோட தமிழ் ல சொல்லுறது புக்காரா அக்கா :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டு நான் தமிழில்தான் எழுதி இருக்கிறேன். சும்மா பகிடி விடாதேங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி நோ டென்ஷன் :D

என்னுடைய வாழ்த்துகளும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெசொபொத்தேமியா சுமேரியர் அவர்களின் அனுசரணைக்கு நன்றி கூறுவதோடு, அவருக்கு தோள் கொடுத்து இந்த முயற்சியை பொறுப்பு ஏற்கக்கூடியவர்கள் முன்வாருங்கள். இதை 2013 இல் ஒருங்கிணைத்து செய்வதற்கு யாராவது முன்வரவேண்டும்.

மெசொபொத்தேமியா அவர்களுக்கு! நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு..உங்கள் முயற்சிக்கு தோள்கொடுக்க விரும்புகின்றேன் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

போக்கு வரத்து நிறுவனத்தினரோடு,சுமேரியர்,சகாராக்கா,குசா தாத்தா அனைவருக்கும் உங்கள் நல் ஆதரவுக்கு மனம் நிறைந்த நன்றிகளும், வாழ்த்துக்ளையும் தெரிவித்துக்கொள்கிறேன்..:)

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் 2013 பொற்கிளி(ழி) வழங்கும் நினைவுப் பரிசுப் போட்டிக்கு,

மொசப்பொத்தேமியா சுமேரியருக்கு... ஒத்தாசை வழங்க முன்வந்த வல்வை சகாராவுக்கும், குமாரசாமி அண்ணாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தொடருங்கள்

நாங்களும் பின்னால் நிற்கின்றோம்.

அடுத்தடுத்ததாக நாங்களும் இணைந்து கொள்வோம் என்ற உறுதியைத்தருகின்றேன்......

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாழ்த்துக்கள் தந்தவர்களுக்கும் ,தாங்களாகவே உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி. உடனே பதில் தர முடியாமைக்கு மன்னிப்பீர்கள்தானே ???போக்குவரத்து அவர்களுக்கு அவரைமாதிரியே பதில்கொடுக்கலாமா அல்லது நான் புதிது என்பதால் கொஞ்சம் வேறுபாணியில் எழுதுவதா என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் என் கேள்விகளுக்கு மற்றவர்களே பதிலும் தந்துவிட்டனர். நாங்கள் இங்கு சேவை செய்ய வரவில்லை என எழுதியிருந்தீர்கள் போக்குவரத்து. சேவை என்பதை எப்படி வரையருக்கின்றீர்கள் என்று கூறமுடியுமா? உதவிசெய்பவர்கள் நேரடியாகவே தாயகத்துக்கு வளங்கமுடியும்தான்.ஆனால் நான் யாழ் இணைய எழுத்துகளால் கவரப்படுத்தான் உங்களுடன் இணைந்தேன். நான்தரும் உதவி மற்றவருக்குப் சரியான முறையில் பயன்படவேண்டும் என்றமுறையிலும் இல்லாதமக்களுக்கு உதவும்போது கிடைக்கும் மனநிறைவே இன்னும் கொடுக்கத் தூண்டும் என்பதாலும்தான் என்யோசனையை முன்வைத்தேன். இதைவிட நினைவுப்பரிசு ஒருவருக்கு மகிழ்வைத் தருமென்று நான் எண்ணவில்லை. மற்றப்படி என்னை முன்னிலைப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. மற்றப்படி கள்ளுக்கொட்டிலில கள்ளடிச்சுக்கொண்டிருக்கிற குமாரசாமியரை உதவிக்கு எடுக்கலாமா எண்டு மற்றவர்கள்தான் சொல்லவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுக் கொட்டிலில்... கள்ளடிப்பவர்களுக்குத்தான்... உலக விசயங்கள் கனக்கத் தெரியும்.

குமாரசாமி அண்ணாவுக்கும் வாழ்த்துகள்.... :)

மற்றப்படி கள்ளுக்கொட்டிலில கள்ளடிச்சுக்கொண்டிருக்கிற குமாரசாமியரை உதவிக்கு எடுக்கலாமா எண்டு மற்றவர்கள்தான் சொல்லவேணும்.

அட கள்ளுக்கொட்டிலில் கள்ளடிச்சுக்கொண்டிருந்தாலும் கு.சா அண்ணா நல்ல கலகலப்பானவர். உதவி செய்யும் குணமுள்ளவர். சுய நினைவை இழக்காதவர்...

அவரை சேர்த்துக்கொள்ள எல்லாம் யோசிக்கப்படாது.... உடனேயே சேர்த்திடணும்... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.