Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பனும்.. கலவியும்.. கொங்கையும்.. காஸும் நகைச்சுவையா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nanban_film.jpg

மூன்று முட்டாள்கள் (3 idiots) என்ற பெயரில் வெளி வந்த ஹிந்தி திரைப்படத்தை அப்படியே முழுங்கி சங்கர் எடுத்த வாந்தியே.. பொங்கலுக்கு சில நாட்கள் முன் வெளிவந்துள்ள.. நண்பன் படம் ஆகும்.

அதில் விஜய்.. ஜீவா.. சிறீகாந்த்.. சத்யன்.. சத்யராஜ்.. இலியானா என்று பல பேர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் விஜயின் அறிமுகத்தில்.. ஒரு காட்சி.. ராக்கிங் (பகிடிவதை) என்று ரவுசரை கழற்றிப் போட்டு ஜட்டியில் நிற்பது..!

ஆரம்பத்தில் புகுத்தப்பட்ட அந்த பழக்கம்... படம் முழுக்க வியாபித்து விடுகிறது. நண்பனுக்கு நன்றி சொல்லவும் ரவுசரை கழற்றிறாங்க.. அந்தளவுக்கு அது எல்லை மீறிப் போனதை காண முடிகிறது.

ஆரம்பத்தில் அந்தக் காட்சி.. ராக்கிங்கின் கொடூரத்தை காட்ட செய்யப்படுகிறது என்று தான் படம் பார்ப்பவர்கள் நினைப்பார்கள். ஆனால் அந்தக் கொடூரத்தை நகைச்சுவை போல.. படம் முழுக்க ஏன் படத்தின் இறுதிவரை சங்கர் தொடர்ந்து செய்திருப்பது கல்லூரிகளில் ராக்கிங்கில் செய்வதை விட கொடுமையானதாக உள்ளது. சிலர் அதனை நகைச்சுவை என்கின்றனர். அப்போ அதையே ராக்கிங்கில் செய்யும் போது அதையேன் கொடுமை என்கிறார்கள்..???!

இன்னொரு காட்சியில் சத்யன் ஆசிரியர் தினத்தை ஒட்டி தனது கல்லூரி முதல்வரான சத்தியராஜை வாழ்த்தி பேசுவார். அதற்கு என்று தயாரிக்கப்பட்ட பேச்சில்.. சத்யனை.. வைரஸ் கிருமி என்று அழைக்கப்படும் சத்யராஜை பழிவாங்க என்று விஜயும் நண்பர்களும்.. அந்தப் பேச்சை கணணியின் உதவியோடு மாற்றி எழுதி வைப்பார்கள். சத்யன் அமெரிக்காவில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு நல்ல இலக்கணத் தமிழ் வராது. அந்த வகையில்.. இவர்கள் சத்யனின் பேச்சில் எழுதி வைத்திருந்த ஆபாச வார்த்தைகளை சத்யன் புரிந்து கொள்ளாமல் அதை விழா மேடையில் மனப்பாடம் செய்து பேசுவார்.

அதில்.. கல்விக்கு.. கலவி என்றும்.. கொள்கைக்கு.. கொங்கை என்றும்..கற்பிப்பிற்கு.. பாலியல் வல்லுறவு என்றும்...மாற்றி எழுதி வைக்க.. பேச்சு படு ஆபாசமாக அமைந்து விடுகிறது. கேள்வி என்னவென்றால்.. கலவியும்.. கொங்கையும்.. ரவுசரை கழற்றிறதும்.. தானா நமக்கு.. நகைச்சுவை...??!

கலவியும்.. கொங்கையும் நகைச்சுவைக்குரிய அம்சங்களா..???!

சரி அதுபோக.. படத்தில்.. சத்யன் ஞாபக சக்தியை அதிகரிக்க என்று லேகியம் சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாக.. அந்த லேகியம் தந்த விளைவால்.. அவரின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். அவர் காஸ் விட்டால் அது அந்தச் சூழலையே நாறடிச்சு விடும். ஆனால் அதுவே.. படம் முழுக்க.. சத்யனை பற்றிய நகைச்சுவை வசனமாக அமைந்து விடுகிறது. அதில் அப்படி என்ன நகைச்சுவை உள்ளது. காஸ் விடுறது.. நகைச்சுவையா..???!

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்று வரைவிலக்கணம் வகுக்க வேண்டாம்.. ஒரு தராதரம் அமைக்க வேண்டாமோ..??! பெண்களின் அந்தரங்க உடல் உறுப்புக்களை பற்றி பேசுவதும்.. பாலியல் சார்ந்த விடயங்களை கலந்து பேசுவதும்.. அந்தரங்க உடைகளை காண்பிப்பதும்.. காஸ் போன்ற இயற்கையான உடல் சார்ந்த கழிவகற்றல்களை.. வாயு வெளியேற்றங்களை கதைப்பதுமே.. நகைச்சுவை என்று ஏற்று நகைக்கும் நிலையிலா தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர்..??!

எனக்கென்றால்.. அவற்றில் நகைச்சுவையை விட.. தவறான வழிகாட்டல்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக.. உணர முடிந்தது. நகைச்சுவை என்பது எது என்ற உணர்தலை தவறாக இனங்காட்டுவதாகவே அது இருக்கிறது.

எதிர்காலத்திலாவது.. தமிழ் சினிமா இது குறித்து சிந்திக்குமா.. உருப்படியான சமூகப் பயன்மிக்க நகைச்சுவைகளை புதிய தலைமுறைக்கான சரியான வழிகாட்டலோடு முன் வைக்குமா..??!

இந்தப் படத்தில் நல்ல அம்சங்கள் என்று சொன்னால்.. All is well என்று மனதை சாந்தப்படுத்திக் கொள்வது.. மற்றும் கல்வி சார்ந்த தற்கொலைகள் பற்றிய அறிவூட்டல்.. தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் நிலவும் போட்டி கற்கைச் சூழலில் ஏற்படும்.. மன அழுத்தங்கள்.. திறமைக்கு முன்னுரிமை அளிக்காது.. குடும்ப தேவைகளுக்காக பிள்ளைகள் மீது அவர்கள் விரும்பாத படிப்பை திணிப்பது.. ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக பாரத்தை சுமத்தி.. மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் மனப் பயம் மூலம் பாதகமான விளைவுகளை உண்டு பண்ணுவது.. புத்தகத்தில் உள்ளதை வெறும் பாடமாக பாவனைக்கு உதவாது மனப்பாடம் செய்து படிப்பது தவறு என்று சுட்டிக்காட்டுவது.. ஒருவரின் மன ஓட்டத்தை கண்டறியும்.. Demo.. விளக்கம்.. போன்றவற்றை இனங்காட்டாமலும் இருக்கக் கூடாது.

நகைச்சுவையிலும் இந்த தரத்தை வெளிப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை நகைச்சுவைக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கும்.

நன்றி.

பார்த்ததில் உணர்ந்ததைச் சொல்வது...

நண்பன் படம் பார்த்தவன்.

ஆதாரம்: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் பட‌ம் பார்த்தாராம் அதை இவர் விமர்சனமாக எழுத வந்திட்டாராம்...பட‌த்தை போய் தியேட்டரில் பார்த்தேன் என வெளிப்படையாக எழுத வேண்டியது தானே

நெடுக்காலபோவன் நண்பன் என்ற படத்தைப் பார்த்ததில், தான் உணர்ந்து கொண்டதை இங்கே பர்கிந்திருக்கிறார். :rolleyes:

நான் இன்னும் பார்க்கவில்லை, உங்கள் பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்!

நான் ஹிந்தியில் வெளியான 3 idiots உம் பார்த்தேன் நண்பனும் பார்த்தேன் ஹிந்தியில் வெளியானதை எந்தவித மாற்றமும் இன்றி தமிழில் தமிழில் தந்துள்ளார் இங்கு 2 பாடல்கள் அதிகமாக சேர்க்கபட்டுள்ளன

சங்கரே சொல்லி இருந்தார் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு வாருங்கள் எண்டு எனக்கு படம் பிடித்து இருந்தது . இந்தியாவிலுள்ள பாடத்திட்டம் பற்றி போட்டு கிழித்துள்ளனர்.

. படம் நல்ல படம் பார்க்கலாம் எல்லோருமே .

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது.

ஏதோ காரணத்தால் மறுத்துவிட்டார்.

நான் புதிய சினிமாப் படங்கள் பார்ப்பது அரிது.

இப்படியான விமர்சனங்கள் மூலம் சிலவற்றை அறிந்து கொள்வேன்.

இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நெடுக்கர்!

நான் இன்னும் பார்க்கவில்லை!!

படம் சுத்த போறிங், அரச்ச மாவையே திருப்பி திருப்பி அரைத்து கொண்டு ,,,,,,,,,,,,,,

'க ற் ப ழி ப் பு' எனும் பெண்மீதான பாலியல் கொடூர வன்முறைச் சொல் மிகவும் சாதாரணச் சொல் போன்று அதுவும் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட கொடுமையை என்னவென்பது. சங்கர் போன்ற வியாபாரிக்கு இந்தச் சொல் சிரிப்பை ஏற்படுத்தும் ஒரு சொல்லாம்..

தமிழ் சினிமாவின் இன்னொரு சாக்கடை சங்கர்

Edited by நிழலி

நேற்று வார இறுதி என்பதால் மகன் என்னுடன் வந்து நின்றான். வீட்டில் இருந்தால் அவனுக்கும் Boring ஆக இருக்கும் என்று நண்பன் படத்துக்கு கூட்டிச் சென்றேன். 3 idiots பார்க்கவில்லை என்பதால் கதை பிடித்து இருந்தது. ஆனால் சங்கர் எனும் சாக்கடை புகுத்தி இருந்த வசனங்களும் underwear இனைக் காட்டி ஆசிர்வாதம் வாங்குவது நகைச்சுவையாம் என்று காட்டிய காட்சிகளும் வெறுப்பையும் எரிச்சலையும் தந்தன

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வார இறுதி என்பதால் மகன் என்னுடன் வந்து நின்றான். வீட்டில் இருந்தால் அவனுக்கும் Boring ஆக இருக்கும் என்று நண்பன் படத்துக்கு கூட்டிச் சென்றேன். .............????????

சுத்தம்...மகனுக்கு என்ன வயசு?

Happy Feet2, etc.......???

இலினா என்று பல பேர் நடித்திருக்கிறார்கள்

அது இலியானா சார் :D

சத்யன் அமெரிக்காவில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு நல்ல இலக்கணத் தமிழ் வராது.

இது தவறான கருத்து. அவரிற்க்கு தமிழ் வரும். நாம் பேசுவதும் இலக்கண தமிழ் இல்லையே. சத்தியனிற்க்கு எதையும் மனப்பாடம் பண்ணி படிப்பதே வழக்கம். அப்படி மனப்பாடம் பண்ணும் போது அதன் கருத்தை அவர் கவனித்தில் எடுப்பதில்லை. அதனால் தான் அவர் மற்றவர்கள் மாற்றியதை அப்படியே அனைவரிற்க்கும் முன் வாசிக்கின்றார். ஆழமாக படிக்காமல் வெறும் மனப்பாடம் செய்து படிப்பதன் விளைவையே இது காட்டுகின்றது. ஆனாலும் எனக்கும் அந்தக் காட்சிகள் பிடிக்கவில்லை.

ஒட்மொத்தமாக வழமையான ஒரு குப்பயே நண்பன். நல்ல படங்களை கொப்பி பண்ணுதே இன்றைய சினிமாக்காரர்களிற்க்கு கடினமாக உள்ளது. :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது இலியானா சார் :D

உங்கள் வேதனை புரிஞ்சு கொண்டு.... :lol::D தட்டச்சில் நிகழ்ந்து கவனிக்கப்படாது போன பிழையை திருத்திக் கொண்டிருக்கிறோம்.

நன்றி சார். :)

உங்கள் வேதனை புரிஞ்சு கொண்டு.... :lol::D தட்டச்சில் நிகழ்ந்து கவனிக்கப்படாது போன பிழையை திருத்திக் கொண்டிருக்கிறோம்.

நன்றி சார். :)

சற்று நிமிடங்கள் தாமதம் ஆகி இருந்தால் உங்களுடைய உருவ பொம்மையை இ.மு.க. (இலியான முன்னேற்றக்கழகம்) எரித்திருக்கும். :D

அதென்ன இலையான், அது இதென்ற பெயர்? ஆளாவது பார்க்க நல்லா இருக்கிறாரா படத்தில? அவர் எங்க நடிக்கப் போறார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன இலையான், அது இதென்ற பெயர்? ஆளாவது பார்க்க நல்லா இருக்கிறாரா படத்தில? அவர் எங்க நடிக்கப் போறார்?

உங்கள் ஆதங்கம் புரிகிறது. இலியானா.. இலியானா என்றாங்களே.. ஒரு படத்தைக் கிடத்தை போட்டு கதைக்க மாட்டேங்கிறாங்களே.. என்று.. கவலைப்படுறீங்க என்றும்.. புரிகிறது..

உங்கள் கவலைகள் தீர... ஆள் பார்க்க நல்லாத் தான் இருக்கா. நல்ல.. சிலிம்மா வேற இருக்கா..! :):lol:

ileana_dcruz_01.jpg

ileana_dcruz_03.jpg

நல்லாத் தான் ஆராய்ச்சி செய்யுறீங்க போல நெடுக்ஸ்.

அதுசரி, இவ ஏன் ஒரு மாதிரியா நிக்கிறா? இடுப்புல சுளுக்கா? :lol::D

படத்தில இலையான் பார்க்க நன்னாவே இல்ல.. போஷாக்கு குறைபாடு .. ??? :rolleyes: :rolleyes:

இவதான் ஹீரோயினியான்னு சந்தேகமே வந்துட்டுது.. படம் முடியும்மட்டும் வேறொருத்தி வரமாட்டாளான்னு ஒரு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படத்தில இலையான் பார்க்க நன்னாவே இல்ல.. போஷாக்கு குறைபாடு .. ??? :rolleyes: :rolleyes:

இவதான் ஹீரோயினியான்னு சந்தேகமே வந்துட்டுது.. படம் முடியும்மட்டும் வேறொருத்தி வரமாட்டாளான்னு ஒரு...

நீங்கள் மட்டுமில்ல.. படக்குழுவினினரும்... இலையான் பற்றி சொல்லுறதை கேளுங்க.. :lol:

http://www.youtube.com/watch?v=xTjRDqFDNi4&feature=related

2.50 வது நிமிடம்... வருது என்று நினைக்கிறன்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் அதில் நேரத்தை செலவளிப்பதில் ஆர்வமில்லை..ஆனால் இப்படி யாழுக்குள் விமர்சனங்கள் யாரச்சும் எழுதினால் வந்து பார்த்துட்டு போவன்..நண்பன் திரைப்படத்தைப் பற்றிய பகிர்வில் தலையங்கப்பகுதியில் எழுதி இருக்கும் சில கண்றாவி சொல்பிரயோகங்களை மற்றும் கருத்துப் பகிர்வை பார்துட்டே நினைச்சேன் இது ஓரளவுக்கு வயது வந்தவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைப் புரிதலோடு கூடிய ஒரு திரைப்படமாகத் தான் அமைந்திருக்கும் என்று...இப்போ சிலருடைய விமர்சனங்களைப் பார்க்கும் போது என் நினைப்பும் திரைப்படத்தின் பங்கும் ஓரளவுக்கு தன்னும் சரியாகத் தான் இருக்கிறது போல் இருக்கிறது..நேற்றைய தினம் என் மைத்துனியோடு கதைக்கும் போது சொன்னார் தானும் பிள்ளைகளும்,தன்னுடைய சகோதரியும் நண்பன் படம் திரை அரங்கில் பார்த்தாக..நல்ல திரைப்படமா என்று கேட்டேன் சும்மா பம்பலாக போச்சுது என்று சொன்னார்.ஓரளவுகுக்கு பன்னிரண்டு வயது,பதின் ஐந்து வயது பிள்ளைகள் என்றாலே நாங்கள் அவர்களைக் கூட குழந்தைகள்,சின்னப் பிள்ளைகள் என்று தான் சொல்லிக் கொள்கிறோம்...யாராச்சும் ஏதாவது கேட்டால் கூட அவர்களா,அவர்கள் இன்னும் சின்னப்பிள்ளைகள்,குழந்தைகள் என்று தான் பட் என்று வாயில் வந்துடுகிறது...

இது ஒன்பது வயது,ஏழு வயது, ஆறு வயதுப் பிள்ளைகளை கொண்டுபோய் வைச்சு கொண்டு இப்படியான திரைப்படங்களை பார்ப்பது எனக்கு மனதுக்கு சங்கடமாக பட்டது.இங்கு பாடசாலைகளில் மிக சிறிய வயதிலயே அப்பா,அம்மா கண்டிச்சால் என்ன செய்யவேணும் என்பதில் இருந்து இன்னும் பல தேவை அற்ற விடையங்களை பிள்ளைகளுக்கு புரியாத பருவத்திலயே சொல்லிக் கொடுக்கிறார்கள் தான் இல்லை என்று சொல்லி மறுக்க இல்லை..ஆனாலும் எங்கள் குழந்தைகளை பக்குவப்படுத்தி நல்லவளிக்கு இட்டு செல்வதில் நாங்கள் நிறையவே கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டியவர்கள்..எனக்கு இந்தக் கருத்தை பகிர வேணும் போல் இருந்திச்சு அது தான் சொல்கிறன்..

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவன் நண்பன் என்ற படத்தைப் பார்த்ததில், தான் உணர்ந்து கொண்டதை இங்கே பர்கிந்திருக்கிறார். :rolleyes:

நான் இன்னும் பார்க்கவில்லை, உங்கள் பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்!

அது தான்,அங்க தான் இருக்கு விச‌யம் இந்தப் பதிவில் இவர் என்ன எழுதியிருக்கிறார் என வாசியுங்கள் :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96525

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது தான்,அங்க தான் இருக்கு விச‌யம் இந்தப் பதிவில் இவர் என்ன எழுதியிருக்கிறார் என வாசியுங்கள் :lol:

http://www.yarl.com/...showtopic=96525

பார்க்க பரிதாபமா இருக்குது. என்னடா என் டவுட்டை ஒருத்தரும் கிளியர் பண்ணுறாங்கல்லையே என்று அக்காச்சி நீங்க பரிதவிக்கிறது விளங்குது. :lol:

நான் படத்தை தியேட்டரில பார்க்கல்ல. போதுமா அக்காச்சி..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க பரிதாபமா இருக்குது. என்னடா என் டவுட்டை ஒருத்தரும் கிளியர் பண்ணுறாங்கல்லையே என்று அக்காச்சி நீங்க பரிதவிக்கிறது விளங்குது. :lol:

நான் படத்தை தியேட்டரில பார்க்கல்ல. போதுமா அக்காச்சி..! :lol::D

:) :) :)

நெடுகு சார்

விஜய் சார் குத்து அடி வெட்டு இல்லாம நடிச்ச இந்த படதுகு பாராட்டனும் எலே

என்டாலும்

குசுவ படதில மூனு மணிதியாலமாய் கேலி செய்தை கண்டிகோணும் எலே

என்டாலும்

வேலாயுததை விட இது பரவாயில எலே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.