Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை சிதறடியுங்கள்’ – மகிந்த கட்டளை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

angry-mahinda-150x150.jpg

புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் தமிழ்த் தேசிய அமைப்புக்களை உடைப்பதற்கு தேவையான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கே.பி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச கட்டளை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் சிறீலங்கா கார்டியன் எனப்படும் சிங்கள இணைய ஊடகம், வண.பிதா இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் அவ்வமைப்புக்குள் ஊடுருவல்களை மேற்கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ச கட்டளையிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இவ் ஊடுருவல்களில் ஈடுபடும் உளவாளிகளுக்கு தேவையான பயண ஒழுங்குகளை கோத்தபாய ராஜபக்ச செய்து தருவார் என்றும், டக்ளஸிடம் ராஜபக்ச தெரிவித்திருப்பதாக சிறீலங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, உருத்திரகுமாரனின் தலைமையில் இயங்கும் நாடுகடந்த அரசாங்கத்தை சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க வழிப்படுத்தும் வேலைகளில் அதனை நிறுவிய கே.பி ஈடுபட்டு வருவதாகவும் சிறீலங்கா கார்டியன் இணையம் தெரிவித்துள்ளது.

உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசாங்கத்தை கே.பியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒஸ்லோவில் உள்ள சர்வே, பரிசில் உள்ள மனோ ஆகிய இரு நபர்கள் வழிநடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai...newsite/?p=4507

நாங்கள் ஒற்றுமையாக ஓரணியில் இல்லாததும் நன்மைக்கே :rolleyes::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் ஒற்றுமையாக ஓரணியில் இல்லாததும் நன்மைக்கே :rolleyes::wub:

இதைதான் பெரியவர்கள் அந்த காலத்திலேயே சொன்னார்கள் போல் இருக்கிறது நடப்பது எல்லாம் நல்லதுக்கே என்று, ஒரே இடத்தில் அதிகாரத்தைஇ குவிய விடாது புலம்பெயர் தமிழர் பிரித்து கொடுத்தது அவர்களது தூர நோக்காக கூட இருக்கலாம்

Edited by சித்தன்

நடக்க இருக்கும் ஐ.நா.மனித உரிமை தொடரில் மகிந்த கூட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மகிந்த டக்ளசையும், கே. பி. யாரையுமே முதலில் போட்டுக்கொடுப்பான் :icon_idea:

எனவே, இவர்களாக முந்துவது நல்லம் :D

Edited by akootha

மன பீதி. ஒரு பெக் அடிச்சா எல்லாம் சரியாகி விடும் மகிந்த மாமோய்.

...

உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசாங்கத்தை கே.பியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒஸ்லோவில் உள்ள சர்வே, பரிசில் உள்ள மனோ ஆகிய இரு நபர்கள் வழிநடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

... இங்கு யாழில் இதனை பல முறை எழுதியபோது ... காரனம் இல்லாது ... பாய்ந்து பாய்ந்து இணையவனாலோ/நிழலியினாலோ தூக்கப்பட்டது! ... ஏன் இச்செய்தியையும் தூக்குங்களேன்????

.... நீண்ட காலத்துக்கு, பூசனிக்காயை ஒரு பிடி சோற்றினுள் மறைக்க முடியாது ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையககருத்துக்கள் எல்லாம் இலங்கை அரசாங்கத்துக்கு போகின்றன. என்னரோ உண்மை தான.

யாழ் இணையம் ஒம் என்றால் நான் அனைத்து கேபி தொடர்பாளர்களையும் எழுத தயார்

எங்களுடைய தேவையும் கவனமும் முடிந்தளவுக்கு அமைப்புக்களை பலப்படுத்தி, தாயக மக்களுக்கு நியாயமான, அவர்கள் ஏற்கும் தீர்வை பெற்றுகொடுப்பதே. அதிலே மட்டுமே கவனம் இருக்கவேண்டும்.

முடிந்தால் இயலுமான வழிகளில் எதிரிகளை குழப்பவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை சிதறடியுங்கள் என்று மகிந்தா சொல்கிறார். இதுக்கு ஏன் மகிந்த சொல்லவேண்டும். ஏற்கனவே புலம் பெயர்ந்த தமிழர்கள் நான் பெரிது நீ பெரிது என்று அடிப்பட்டு மகிந்தா விரும்பியதை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவ் ஊடுருவல்களில் ஈடுபடும் உளவாளிகளுக்கு தேவையான பயண ஒழுங்குகளை கோத்தபாய ராஜபக்ச செய்து தருவார் என்றும், டக்ளஸிடம் ராஜபக்ச தெரிவித்திருப்பதாக சிறீலங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, உருத்திரகுமாரனின் தலைமையில் இயங்கும் நாடுகடந்த அரசாங்கத்தை சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க வழிப்படுத்தும் வேலைகளில் அதனை நிறுவிய கே.பி ஈடுபட்டு வருவதாகவும் சிறீலங்கா கார்டியன் இணையம் தெரிவித்துள்ளது.

உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசாங்கத்தை கே.பியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒஸ்லோவில் உள்ள சர்வே, பரிசில் உள்ள மனோ ஆகிய இரு நபர்கள் வழிநடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா காடியன் ஒட்டு கேட்டு இதை எழுதவில்லை. இதற்கு பணம் கொடுத்து தமிழரை மிரள வைக்க, தமிழரை உடைய வைக்க செய்ய படும் அலுவல்கள் இவை. விளம்பரம் தேவைப்படும் தமிழ் ஊடகங்கள் தங்களைத்தாங்கள் கவனித்துக்கொள்ளுகின்றன.

காடியனின் முதல் பக்க செய்திகளில் இதுவும் ஒன்று.

The Church & its links to Sri Lanka’s terrorism & elsewhere

by Shenali Waduge

In short, all we need say is that Prabakaran was merely a pawn and the man chosen by an international Christian movement to create an East Timor in Sri Lanka. Prabakaran was Christian, most of the other top leaders were also Christians (Protestant) whilst some chose to hide their Christian identity behind Hindu names. They then brainwashed innocent Hindus, made them into killers and ensured that 3 generation of Tamil Hindus never had a future. Tamil Hindus need to wake up and realize this important fact. Think about it – Hindu lives lost, Hindu children lost, Hindu property destroyed. This is why we continue to say we are being attacked by neo-colonialists.

http://www.srilankag...sri-lankas.html

Edited by மல்லையூரான்

சிங்கள - இந்திய காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளின் அவலத்தையே இத்தகைய செய்திகள் சொல்கின்றன!

வீரத் தமிழர் வெற்றியை நோக்கிப் பயணித்தபடியே இருப்பார்.

angry-mahinda-150x150.jpg

புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் தமிழ்த் தேசிய அமைப்புக்களை உடைப்பதற்கு தேவையான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கே.பி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச கட்டளை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் சிறீலங்கா கார்டியன் எனப்படும் சிங்கள இணைய ஊடகம், வண.பிதா இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் அவ்வமைப்புக்குள் ஊடுருவல்களை மேற்கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ச கட்டளையிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இவ் ஊடுருவல்களில் ஈடுபடும் உளவாளிகளுக்கு தேவையான பயண ஒழுங்குகளை கோத்தபாய ராஜபக்ச செய்து தருவார் என்றும், டக்ளஸிடம் ராஜபக்ச தெரிவித்திருப்பதாக சிறீலங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, உருத்திரகுமாரனின் தலைமையில் இயங்கும் நாடுகடந்த அரசாங்கத்தை சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க வழிப்படுத்தும் வேலைகளில் அதனை நிறுவிய கே.பி ஈடுபட்டு வருவதாகவும் சிறீலங்கா கார்டியன் இணையம் தெரிவித்துள்ளது.

உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசாங்கத்தை கே.பியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒஸ்லோவில் உள்ள சர்வே, பரிசில் உள்ள மனோ ஆகிய இரு நபர்கள் வழிநடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai...newsite/?p=4507

ஐயா லங்கா கார்டியன் இது தொடர்பாக வெளியட்ட மூலச் செய்தியை யாராவது இங்கே இணைக்க முடியுமா? நான் அதை பாரிசிலுள்ள சைபர் கிறைம் காவல்துறைக்கு தகவலுக்காக கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.

ஐயா லங்கா கார்டியன் இது தொடர்பாக வெளியட்ட மூலச் செய்தியை யாராவது இங்கே இணைக்க முடியுமா? நான் அதை பாரிசிலுள்ள சைபர் கிறைம் காவல்துறைக்கு தகவலுக்காக கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.

எனக்கு இதை அனுப்பிய நண்பர் இதை இவ்வாறுதான் கொழும்பில் இருந்து மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார்

நாடுகடந்த அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஊடுருவுமாறு சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அறிவுறுத்தியதாக இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்களை மகிந்த பெயர் குறிப்பிட்டுக் கூறியதாகவும் சிறிலங்கா கார்டியன் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிதியுதவி வழங்கும் படியும் தனது ஆட்களை மேற்குலக நாடுகளுக்குக் கொண்டு சென்று சேர்ப்பிப்பதற்கு உதவுமாறு டக்ளஸ் மகிந்தவைக் கேட்டுக் கொண்டதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் கோத்தாபயவிடம் கலந்துரையாடுமாறு மகிந்த தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இங்கே யாழில் இணைக்ப்பட்ட செய்தி வேறுவிதமாக உள்ளது.இதில் எது சரி என்பதை இனம் காணவேண்டிய அவசரத் தேவையும் இருக்கிறது தயவு செய்து யாழ் கள உறவுகள் அந்த மூலச் செய்தியை உடன் இணைக்க முடியுமா? எனது கொழும்பு நண்பரை தொடர்புகொள்ள முடியாதுள்ளது

http://www.srilankaguardian.org/ இந்த முகவரிapல் அந்தச் செய்தியை கண்டுபிடிக்க முடியவில்லை

ஐயா லங்கா கார்டியன் இது தொடர்பாக வெளியட்ட மூலச் செய்தியை யாராவது இங்கே இணைக்க முடியுமா?

Paramilitary leader and LTTE’s K P advised to infiltrate diaspora Tamil organisations

During his visit to Jaffna after the Independence Day celebrations in Anuradhapura, President Mahinda Rajapakse has requested the government Minister and the paramilitary leader Douglas Devanada to get his men to infiltrate into the government hostile Tamil organisations in the Tamil diaspora to disturb their activities. The President is said to have quoted the names Transnational Government of Tamil Eelam and the Global Tamil Forum.

DD-KP.jpg

Douglas Devananda in turn has asked for financial support and safe passage of his men to the western countries. According to a source close to Douglas Devananda, the President has asked the minister to contact his brother Gotabaya Rajapakse to facilitate the request.

The source also confirmed that former LTTE’s arms procurer KP who have the government hospitality is doing his part to influence diaspora Tamil organisations. As the founder of the Transnational Government of Tamil Eelamm he is said to have some influence and the President is said to have quoted some instances of creating troubles within the TNGTE.

http://www.srilankag...-lttes-k-p.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒன்றும் உம்முடைய ஆதிக்கத்தில்லை

இங்கு ஒன்றையும் புடுங்கமுடியாது உம்முடைய கால் நக்கிகளால்..

நாங்கள் ஒன்றும் உம்முடைய ஆதிக்கத்தில்லை

இங்கு ஒன்றையும் புடுங்கமுடியாது உம்முடைய கால் நக்கிகளால்..

ஏற்கனவே உருத்திரகுமாரரின் நாடு கடந்த தமிழீழ அரசு, இந்திய உளவாளிகள் விநாயகம்/சங்கீதன் சார்ந்த தலைமைச்செயலக கும்பலின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது! சென்ற முறை புலமெங்கும் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகளை இக்கும்பல். நாடு கடந்த தமிழீழ அரசின் உதவியுடன் தான் குழப்பி அடித்தது!! ... இனி என்ன இந்த நா.க.த.அ இனுள் ஊடுருவ இருக்கிறது??????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாட்களில், ஜே.ஆர்.ஜெயவர்த்தனா காலங்களின், பாலகுமாரன் சொன்ன தீர்க்கதரிசமான வார்த்தைகள் நினைவில் நிழலாடுகின்றன!

தமிழர்கள் எங்கே போனாலும் தான் கவலைப் படப் போவதில்லை! இலங்கையை விட்டுப் போனாலே காணும் என்றார், ஜே.ஆர்.

அப்போது பாலகுமாரன் கூறினார்!

எங்கள் போராட்டம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றது! அங்கே தமிழர்கள், விதைக்கப் படுகின்றார்கள்! அந்த விதைகள் முளைவிடும் போது, சிங்களம் பதில் கூறித்தான் ஆக வேண்டும்!!!

Paramilitary leader and LTTE’s K P advised to infiltrate diaspora Tamil organisations

During his visit to Jaffna after the Independence Day celebrations in Anuradhapura, President Mahinda Rajapakse has requested the government Minister and the paramilitary leader Douglas Devanada to get his men to infiltrate into the government hostile Tamil organisations in the Tamil diaspora to disturb their activities. The President is said to have quoted the names Transnational Government of Tamil Eelam and the Global Tamil Forum.

Douglas Devananda in turn has asked for financial support and safe passage of his men to the western countries. According to a source close to Douglas Devananda, the President has asked the minister to contact his brother Gotabaya Rajapakse to facilitate the request.

The source also confirmed that former LTTE’s arms procurer KP who have the government hospitality is doing his part to influence diaspora Tamil organisations. As the founder of the Transnational Government of Tamil Eelamm he is said to have some influence and the President is said to have quoted some instances of creating troubles within the TNGTE.

http://www.srilankag...-lttes-k-p.html

நன்றி அகுத. இதை இலங்கையில் உள்ள வெளிநாட்டு வீசா அலுவலகங்களுக்கும் அனுப்ப வேண்டும்.

427340_244297338986787_100002195684582_551130_754335623_n.jpg

தன் இனத்தையே காட்டிக்கொடுத்து சிங்களவனின் எச்சி எலும்புக்காக வால் ஆட்டும் கருணா ...இது போன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபடுவதற்காகவே தன் இனத்தையே காட்டிக்கொடுத்தார் என்பது இப்போது தெளிவாகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

please write letters to your parliamentarians and all country's High Commissiioners in Sri Lanka quoting what Rajapaksa asked from the murderer Douglas/ paramilitary leader.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... இங்கு யாழில் இதனை பல முறை எழுதியபோது ... காரனம் இல்லாது ... பாய்ந்து பாய்ந்து இணையவனாலோ/நிழலியினாலோ தூக்கப்பட்டது! ... ஏன் இச்செய்தியையும் தூக்குங்களேன்????

.... நீண்ட காலத்துக்கு, பூசனிக்காயை ஒரு பிடி சோற்றினுள் மறைக்க முடியாது ....

மாவீரர் நிகழ்வில்தானே பழைய, புதிய நிர்வாகத்தின் தேச உணர்வின் ஆழத்தை போதும், போதும் என்ற வகையில் பார்த்தாயிற்று.

நான் ஒரு சராசரி மக்கள் என்ற நிலையில் இரண்டு அமைப்பின் உள்ளும் என்ன நடக்கின்றது என்ற அறிதல் இல்லா நிலையில் இவர்கள் செயற்பாட்டை பரிசோதித்தால்; மக்களின் விருப்பங்களுக்கு செவிசாய்க்க விரும்பாத இவர்கள் போக்கு வெளிப்படுத்துவது இதுதான். மூஞ்சூறு விளக்குமாறு காவிய கதைதான் இவர்கள் தகுதிக்கு தேசக் கடமை!

மேலும் ஊடகம் என்பது தன் கருத்தை மக்களுக்கு திணிப்பதை விட மக்களின் கருத்தியலுக்கு கண்ணாடியாய் தான் விளங்க வேண்டும் எனபதே அதன் பொறுப்பான பணி. ஆனால் தமக்கு சார்பான அமைப்புகளுக்கு காவடியாய் விளங்குவதே தமது பணி எனக்கொண்டிருக்கின்றது புதினம் போன்ற சில ஊடகங்கள்!

நாடு.க. அரசு ஒன்றுதான் மக்கள் பெரும்பான்மையின் விருப்பங்களால் நெறிப்படுத்தப்படக்கூடிய ஒரு போறிமுறையின் ஆரம்ப நிலை! எங்களது இன்றைய கடமை இந்தப் பொறியை மேலும், மேலும் செம்மைப் படுத்தும் வழியைத் தேடுவதே அன்றி அதன் செயற்பாடுகளை வசைபாடிக் கொண்டிருப்பது அல்ல!

"கேபியால் இது துவக்கப்பட்டது" என்ற வசைபாடல் மிகக் கேவலச் சிந்தைக்கே உரியது!

Edited by தேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.