Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பாரிய ராஜதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்” – ஜெனீவாவில் பீரிஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

glp.jpg

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள மேற்படி தீர்மானம் தீங்கற்றது எனவும் அது குறித்து இலங்கை கவலையடையத் தேவையில்லை எனவும் அமெரிக்கா தற்போது கூறியுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பான அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை இலங்கை ஆதரவிக்கவில்லை என அவர் கூறினார்.

‘இவ்விடயம் இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும். இத்தீர்மானம் தீங்கற்றது என்ற அமெரிக்காவின் யோசனையை நாம் ஆதரிக்கமாட்டோம்’ என அவர் தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் அடிப்படையில் அமெரிக்கா தனது தீர்மானத்தை வரைந்துள்ளது.

எனினும் இதை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவையென அமைச்சர் பீரிஸ் கூறினார்.

“இந்த அறிக்கை 2011 டிசெம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின் பண்டிகைக் காலம் வந்தது. எமக்கு எதிரான தீர்மானமொன்று இருக்கும் என 2012 ஜனவரி 25 ஆம் திகதி எனக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் சிபாரிசுகளை நான்கு வார காலத்திற்குள் அமுல்படுத்த வேண்டுமென எதிர்பார்ப்பது எவருக்கும் நியாயமாக தோன்றுமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்விடயத்தில் சர்வதேச தலையீடு பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும் எனவும் உள்ளூர் தீர்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=51452

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரிய வாயை திறந்து பொய் சொல்வதா போராட்டம்?  

பீரிசிண்ட வேலைக்கும் ஆப்பு வெகு விரைவில். 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் சற்றுத் தடுமாறுகின்றது.

பிரேரணை நிறைவேற்றப்பட்டால்

தமிழருக்குக் கிடைக்கும் பெரும் வெற்றி.

சிங்களவன் பெரும் குள்ள நரி. விஜயனும் எழுநூறு கள்னுமாக இலங்கைக்கு வந்தவங்க இப்ப எப்படி!. சீறுவான். பாய்வான். முடியாவிட்டால் திரும்ப புத்தம் சரணம் என்று காலிலே விழுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

பீரிஸின் மூளையை, எரித்து விடவோ அல்லது புதைத்து விடவோ கூடாது!

வருங்கால, ராஜதந்திரிகளுக்குப் பிரயோசனப் படலாம்!!!

என்ன செய்கிறது. கில்லாரியிடம் போய் இனிமேலும் பொய் சொல்ல ஏலாது என்ற செய்தி எல்ல ஊடகங்களுக்கும் கசிந்து விட்டது. அதை திருத்தாவிட்டால் மேவினின் கையிலையோ அல்லது துமிந்தாவின் கையிலையோ தெரியாது. பொய் இல்லையப்பா, இரட்டிப்பு பொய் சொல்கிறேன்; இப்போதைக்கு ஆளை விட்டிடுங்கோவப்பா என்கிறார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடயத்தில் சர்வதேச தலையீடு பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும் எனவும் உள்ளூர் தீர்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஹெல உறுமையாவை வைத்து தீர்க்கலாம் என பீரீஸ் நினைக்கிறாரா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹெல உறுமையாவை வைத்து தீர்க்கலாம் என பீரீஸ் நினைக்கிறாரா??

ஸ்ரீ லங்காவின் வறுமையையும், கடனையும் மறக்க வைக்க இன்னொரு கருப்பு ஜூலை வெள்ளவத்தையிலோ, மலையகதிலோ நிறைவேறலாம். 

ஜனநாயகம், ராஜதந்திரம் என்ற முக மூடிக்குள் மறைந்துகொண்டு, இந்தியக் காட்டுமிராண்டிகளின் ஆதரவு தமிழினப் படுகொலைக்கு முன்பு போல் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழினப் படுகொலைகளை நடாத்திவரும் சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் மாபெரும் இராஜதந்திரப் போர்!

Edited by ஆராவமுதன்

சாதாரணமாக இவற்றை எடைபோட முடியாது. கடந்த காலங்களில் இவைபோன்ற நிகழ்வுகளால் சிறிலங்கா வெற்றியடைந்துள்ளது. தற்போதைக்கு தமிழர் உரிமைவிடயமாக இது முன்னெடுக்கப்படாமல் மனிதவுரிமை விடயமாகவே இது முன்னெடுத்தல் சிறந்தது.

எனக்கென்னமோ சிங்களவன் ஆற்றையும் கையில காலில விழுந்து இந்தமுறையும் தப்பிடுவான் போலதான் இருக்கு.

மனிதவுரிமையை மதிக்கும் நாடுகள் இலங்கைமீது தடைகளை கொண்டுவருவதன் மூலமே இலங்கையை தண்டிக்கமுடியும்.

எங்களைவிட சிங்களவனை விளங்கினவர்கள் இல்லை அதேபோல் சிங்களவனுக்கு விளங்கிறமாதிரி சொல்ல புலிகளைவிட ஒருத்தருமில்லை. புலிகளை அழிக்க உதவியவர்கள் இதை எப்போ உணரப் போறார்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் புலம்பெயர் தமிழனுக்கு விடும் இராஜதந்திர போருக்கான அழைப்புதான் இந்த அழைப்பு இந்த அழைப்பை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம் என்பதிலேயே இருக்கு வெற்றி தோல்வி .......

Sri Lankan anger over US move at UN rights council

- AFP -

Sri Lanka on Thursday vowed to hold mass protests against US-backed moves at the United Nations to press for an independent probe into alleged war crimes during the island's civil war.

Government spokesman Susil Premajayantha said rallies would be organised across Sri Lanka to display opposition to the planned proposal at next week's Human Rights Council sessions in Geneva.

"We will organise demonstrations to show that the people of this country are with the government. They are against the Western forces," Premajayantha told reporters.

He said the US was leading moves to bring a resolution against Sri Lanka at the UN council, but Colombo was confident of being able to block it.

"We have lobbied member countries and the feedback that we have is very positive," he said. "We will be able to block any resolution against us."

Human rights groups say up to 40,000 civilians perished in the final months of the government's military campaign to crush the Tamil Tigers in 2009, but Colombo maintains no civilians were killed by its troops.

Last week, the US made it clear that it would support moves against Sri Lanka in Geneva.

Sri Lanka has avoided censure at previous meetings thanks to backing from Russia and China. India, the island's closest neighbour, has also supported Colombo in fending off censure.

The military last week announced appointing a five-member panel to probe allegations of excesses -- an apparent change in the government's approach to charges of war crimes.

The UN estimates some 100,000 people died during Sri Lanka's decades-long ethnic conflict, which ended with the killing of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) leadership.

http://news.yahoo.com/sri-lankan-anger-over-us-move-un-rights-114443065.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.