Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா தரப் போவது என்ன?

Featured Replies

தனது மொழிக்கும், தனது உரிமைகளுக்குமான ஒரு ஆதிக் குடியின் போர் வல்லாதிக்க சிங்கள அரசியலால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மனித உயிர்களைக் காவு வாங்கி மூன்று ஆண்டுகள் முடியப் போகிறது, போர் முடிந்து விட்டதா? அல்லது இந்தப் போராட்டம் இனி உயிர் பெற்று எழுமா? என்கிற பலரது கேள்விக்குள் ஈழமும், அதற்கான போராட்டமும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை ஜெனீவா மாநாடு பன்னாட்டு சமூகத்திற்கு உரக்கச் சொல்லி இருக்கிறது. ஆனாலும், உண்மையிலேயே இந்த மாநாடும், பன்னாட்டு சமூகங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் நீதி தான் என்ன? என்பது குறித்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. அமெரிக்காவுக்கு உண்மையில் ஆதிக் குடியான தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் உரிமைகள் குறித்த அக்கறை இருக்கிறதா? அல்லது அது கொண்டு வந்திருக்கிற ஐ.நா தீர்மானத்தின் நோக்கம் தான் என்ன?

சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இப்படிச் சொன்னார், "இந்திய மக்களும், சீன மக்களும் அதிகப்படியாக மகிழுந்துகளை (கார்) வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதே உலகின் எரிபொருள் பற்றாக் குறைக்கான காரணம்". மேலோட்டமாகப் பார்த்தால் ஓரளவு உண்மையானதாகத் தோன்றும் இதில் அடங்கி இருக்கிற முதலாளித்துவ வன்மத்தை வெகு நுட்பமாக நாம் கண்டு கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கால காலமாக மகிழுந்துகளைத் தங்கள் வாழ்வுரிமை என்பது போலப் பயன்படுத்தி வருகிற அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் பிற நாட்டு மக்கள் இவற்றைப் பயன்படுத்துவதையே ஒரு குற்றமாகவும், தங்கள் உரிமைகளை மீறிய செயலாகவும் கருதுகின்றன என்பது தான் இதில் அடங்கி இருக்கிற நுட்பமான அரசியல்.

உலகின் பல நாடுகளில் இருக்கும் இயற்கை வளங்களை, ஆதிக் குடிகளின் உரிமைகளை, உணவுப் பொருட்களை இப்படித்தான் தன்னுடைய முதலாளித்துவத் தேவைகளுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன, ஈராக்கில் இருக்கும் எண்ணெய் வளமாகட்டும், தெற்கு ஆசியாவில் இருக்கும் கோழி மட்டும் ஆட்டிறைச்சிக்கான சந்தை ஆகட்டும், ஈரான் மக்களின் சுயமரியாதை நிரம்பிய ஆட்சியாகட்டும், அமெரிக்கா எல்லா இடங்களிலும் தன்னுடைய தேவைக்கான எல்லாவற்றையும் மற்றவர்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்கிறது அல்லது அதிகப் பட்சமாகப் போரிடுகிறது. போரிடும் எல்லா இடங்களிலும் அங்கிருக்கும் ஆதிக் குடிகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து அவர்களின் உரிமைகளைச் சிதைப்பதும், அவர்களை முகாம்களில் அடைத்துக் கஞ்சி ஊற்றுவதும் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ வல்லாதிக்க நாடுகளுக்குக் கை வந்த கலை. மனித உரிமைகள் குறித்தும், ஆதிக் குடிகளின் உரிமைகள் குறித்தும் குரல் எழுப்புவதற்கு அமெரிக்கா போன்ற நாடொன்றுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டே நாம் இந்த ஜெனீவா மாநாட்டின் கூறுகளை ஆய்வு செய்ய முடியும்.

இந்தத் தீர்மானத்தின் மூலமாக தமிழர்களுக்குக் கிடைப்பது என்ன என்பதை விடவும், அமெரிக்கர்களுக்குக் கிடைக்கப் போவது என்ன என்பது தான் மிக முக்கியமான கேள்வி. ஆசிய மண்டலத்தைப் பொறுத்தவரை, சீனா ஒரு தவிர்க்க இயலாத உலகப் பெரும் ஆற்றலாக மாறி வருவதை நீண்ட காலமாகவே வெகு உன்னிப்பாகக் கவனிக்கும் அமெரிக்காவுக்கு அது ஒரு உறுத்தலாக மட்டுமன்றி, இந்த உலகின் சட்டாம்பிள்ளை என்கிற உயரிய அதிகாரம் கை நழுவிப் போய் விடுமோ என்கிற அச்சமும் இருக்கிறது, மாற்றாக ஆசியாவில் அது கட்டமைக்க விரும்பிய குழப்பங்கள் பலவற்றில் இலங்கையைப் போலவே இந்திய - பாகிஸ்தான் மோதலும் ஒரு நீண்ட காலத் திட்டமாக இருந்து வந்தது, ஆனால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற பன்முகத் தன்மை கொண்ட வெவ்வேறு சமூகங்கள் இணக்கமாக இருப்பதும், ஒருங்கிணைந்த ஆற்றலாக உருவெடுப்பதும் அமெரிக்க முதலாளித்துவ நலன்களுக்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் கேடாக இருக்கும் என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிற அமெரிக்கா தன்னுடைய மறைமுகத் திட்டங்களில் இந்த மூன்று ஆற்றல்களும் இணைந்து நேர்கோட்டில் செயல்படுவதைத் தடுக்கும் திட்டத்தை முதலிடத்தில் வைத்திருந்தது. காங்கிரஸ் அரசின் எரிபொருள் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் எரிபொருள் துறையில் தெற்காசிய நாடுகள் தன்னிறைவை எட்டுவதற்கான ஒரு தொலை நோக்குத் திட்டமாக எரிபொருள் குழாய் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்புடன் இருந்தபோது அமெரிக்கா தன்னுடைய கைக்கூலிகளும், முன்னாள் முதலாளித்துவப் பன்னாட்டுத் தரகர்களான மன்மோகன் சிங்கின் மூலமும், ப.சிதம்பரம் மூலமாகவும் அந்தத் திட்டத்தைத் தகர்த்து மணிசங்கர் ஐயரை பதவியில் இருந்தே துரத்தியது இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாக இருக்கும்.

தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கும் இந்திய, சீனச் சந்தைகள், உள்நாட்டில் பொருளாதார வீழ்ச்சி, போலி அரசியல் கட்டமைப்புகளின் சரிவு, உழைக்கும் மக்களின் வல்லாதிக்கங்களுக்கு எதிரான புரட்சி இவற்றின் தீவிரத் தன்மைகளைக் கண்டு உள்ளூர நடுங்கும் அமெரிக்காவுக்கு தெற்காசியாவில் ஒரு வலிமையான காலூன்றலும், தலையீடும் நீண்ட காலத் தேவையாக இருக்கிறது. அதற்கு வாய்ப்பான ஒரு களமாகவே இலங்கையை இப்போது அமெரிக்கா தேர்வு செய்திருக்கிறது. இந்தத் தீர்மானத்தை வெற்றி அடையச் செய்வதன் மூலமாகவோ அல்லது அது தொடர்பான பன்னாட்டு அழுத்தங்களை முன்னெடுப்பதன் மூலமாகவோ திரிகோண மலையில் ஒரு நிலையான கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் உண்மையான நோக்கம். அப்படி அமைப்பதின் மூலம் எதிர்காலத்தில் வலிமையான தன்னுடைய ராணுவ பேரங்களை அது இந்தியா, இலங்கை மற்றும் சீன அரசுகளுடன் நடத்துவதற்கு ஜெனீவா மாநாடு அமெரிக்காவுக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது என்பதைத் தவிர வேறு இதயப் பூர்வமான தமிழ் மக்களின் மீதான அக்கறை எல்லாம் அமெரிக்காவுக்குத் துளி அளவும் இல்லை என்பது தான் நடப்பு உண்மை. இந்த உண்மையை மனதில் வைத்துக் கொண்டே தமிழ்ச் சமூகம் தன்னுடைய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அழுத்தம்.

சரி, அப்படியென்றால் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் அவையில் கையளித்திருக்கிற இந்த தீர்மானத்தினால் தமிழர்களுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லையா? என்கிற கேள்வி ஒன்றும் எழுகிறது. உறுதியாக இந்தத் தீர்மானத்தினால் பன்னாட்டு அரசியலில் தமிழ் மக்களுக்கு சில நன்மைகள் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது, அவை முறையே:

1) தமிழ் மக்களின் நீண்ட கால உரிமைப் போராட்டம் உலக அளவில் கவன ஈர்ப்புப் பெறுவது.

2) முறையான அழுத்தங்களால், தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகளால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படைக் கூறுகளை அமெரிக்கா தவிர்த்த பல்வேறு நாடுகளிடம் கொண்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பு.

3) இந்தியாவின் செயல்திட்டங்களில், அதன் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளில் நெருக்கடியான சில மாற்றங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பு.

4) தங்கள் போராட்டத்தின் நோக்கங்களுக்கு இன்றியமையாத தொடர்ச்சியான ஊடக வெளிச்சம்.

இந்த முக்கியமான சில நன்மைகளைத் தவிர்த்து சில உபரி நன்மைகளும் தமிழ்ச் சமூகத்திற்குத் தற்காலிகமாகக் கிடைக்கக் கூடும், அவை, அரசியல் ரீதியாக பிளவுற்றுக் கிடக்கும் தமிழ் சமூகத்தின் ஒருங்கிணைவு, உள்நாட்டில் கிடைக்கப் பெரும் நெகிழ்ச்சியான சில பொருளாதார, அரசியல் நன்மைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

தெரிந்தோ தெரியாமலோ அமெரிக்கா கையில் எடுத்திருக்கிற அதன் போலி நீதிக்கான குரலை உலக அரங்கில் உரக்க ஒலிக்கச் செய்து, பிறகு அந்தக் குரலை அமெரிக்காவின் குழலில் இருந்து மீட்டு தனிக் குரலாக ஒலிக்கச் செய்வதில் தான் தமிழ் அரசியல் ஆற்றல்களின் திறன் அடங்கி இருக்கிறது, வாக்கெடுப்பில் வெற்றியோ அல்லது தோல்வியோ நமது அரசியல் போராட்டத்தின் வலிமையை அதிகரிக்கச் செய்யப் போவதில்லை, மாறாக அதன் உள்ளரங்குகளில் இருந்து இந்த நீண்டகால ஆதிக்குடிகளின் உரிமைப் போராட்டத்தின் உண்மையை நாம் எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்பதில் தான் நமது உண்மையான வெற்றியும் தோல்வியும் அடங்கி இருக்கிறது. அமெரிக்கா நமக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்று நாம் நம்பிக் கிடப்பது ஏறத்தாழ கருணாநிதியும், ஜெயலலிதாவும் நமக்கான உரிமைகளை வென்று எடுப்பார்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக் கிடப்பதைப் போலவே மிகுந்த நகைச்சுவை அம்சங்கள் கொண்டது, ஏனெனில் அமெரிக்கா தான் போர்க் குற்றங்களை இந்த உலகிற்குக் கற்றுக் கொடுத்த முதல் நாடு, தனது ஒட்டு மொத்த முதலாளித்துவ நலன்களுக்காக அது கொன்றொழித்த குழந்தைகளும், பெண்களும் இலங்கை செய்ததைப் போலப் பன்மடங்கு என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக் கூடாது.

புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் அணுகுமுறைகளும், உள்நாட்டில் கடும் அழுத்தங்களுக்கு இடையே வாழும் எளிய உழைக்கும் தமிழ் மக்களும் (அரசியல் அமைப்புகள் மற்றும் தேர்வு செய்யப்பட தமிழ் மக்களின் பிரதிநிதிகள்) இணைந்து தங்கள் செயல் திட்டங்களை நடைமுறைக்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொண்டு, பன்னாட்டு அரங்கில் தொடர்ச்சியாக அழுத்தங்களை விளைவிப்பதும், இந்திய அரசின் செயல் திட்டங்களில் இருந்து விலகி இருப்பதும் மட்டுமே தமிழ் ஈழம் என்கிற தமிழர்களுக்கான தேசியக் கனவை உயிர்ப்போடு வைத்திருக்கும், காலம் கடந்தாயினும் கொன்றழிக்கப்பட்ட எமது குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிருக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்பதே ஜெனீவாவின் மூலமாக நமக்குக் கிடைக்கும் இப்போதைய நன்மை

Source: http://tamizharivu.wordpress.com

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா தெரியவில்லை என்ன தர போகுது என்று.

ஒரு மாசமா பட்டினி இருக்கிற மக்களுக்கு ஒருக்கா பாயாசம் கொடுத்திட்டு, இன்னும் ஒரு மாசம் பொறுக்க சொல்லும். :lol:

ஒற்றுமையா போராடுங்கப்பா கால் வயிற்று கஞ்சியாவது கிடைக்கும் ஒவ்வொரு நாளும்

:icon_idea:

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - இந்தியா ஆதரிக்குமா?

ஜெயலலிதாவும் கருணாநிதியும் கண்டு கொள்ளாத எந்த அரசியல் செய்தியையும்

தமிழக தமிழர்களும் கண்டு கொள்வதில்லை. சமீபத்திய உதராணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு பற்றிய செய்தி. இவர்கள் இருவரின் அறிக்கையைத் தொடர்ந்து இந்தச் செய்தி டீக்கடை மற்றும் சலூன்களில் விவாதிக்கப்படும் பரபரப்பான செய்தியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு என்றால் என்ன?

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எனச் சொல்லிக் கொண்டு, இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது உலகம் அறிந்த செய்தி. தற்போது இந்தச் செய்திகள் குற்றச்சாட்டுகளாக உருப்பெற்று இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது.

ஒரு நாட்டிற்கு எதிரான இது போன்ற குற்றச்சாட்டுகளை அனுமதிப்பதற்கும், விசாரிப்பதற்கும் நடைபெறும் அமர்வுதான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு. மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாதிக்கு மேல், அதாவது 24 நாடுகளின் ஆதரவை பெற்றுவிட்டால், குற்றம் சுமத்தப்படும் நாட்டின் மீது, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படும் என்பது விதி.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா

தற்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன. அதே நேரத்தில் இலங்கை அரசு, தமக்கு எதிரான இந்த தீர்மானத்தை தோற்கடிக்க தனது ஆதரவு நாடுகளிடம் ஆதரவு திரட்டிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 22 நாடுகள் இலங்கைக்கு எதிராக திரண்டு விட்டதாகவும், இன்னும் இரண்டு நாடுகள் ஆதரவு தந்துவிட்டால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகள் வலுப்பெறும் என்பதும் வதந்திகள்.

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பது சந்தேகமே!

இந்தியா இலங்கைக்கு எதிரான நிலை எடுக்குமா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான செய்திகள் வரவில்லை. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும், இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன.

ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது. இந்தியாவின் ஆதரவு இலங்கைக்குதான் என்று இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஒரு பத்திரிகை பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருடைய நம்பிக்கையில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. காரணம் அமெரிக்காவால் நடத்தப்படும் சர்வதேச அரசியல் பிண்ணனி.

இந்த உலகத்தின் நாட்டாமையாக தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு மனித உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு எந்த தார்மீக அருகதையும் இல்லை. உலகம் முழுக்க மனித உரிமைகளை மீறி வருவது அமெரிக்காதான். அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டுக்கு நெருக்கடி தந்தால், அந்தப் பிராந்தியத்தில் தனது வாலை நுழைக்கிறது என்று அர்த்தம். அதே போல ஆசியாவில் பொருளாதார வல்லரசுகளாக உயர்ந்து வரும் இந்தியாவையும், சீனாவையும் அருகில் இருந்து அதட்ட அதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. தற்போது அது தேர்ந்தெடுத்திருக்கும் இடம் இலங்கை. எனவே அமெரிக்காவின் இந்த தீர்மானத்துக்கு நிச்சயம் சீனா வாக்களிக்காது. இந்தியாவும் வாக்களிக்காது. ஆனால் தமிழக அரசியல் மற்றும் இலங்கை அரசியல் நெருக்கடி காரணமாக இந்தியா நடுநிலை எடுக்கலாம்.

தான் மூக்கை நுழைக்க வசதியாக, அமெரிக்கா இதை சர்வதேச மனித உரிமைப் பிரச்சனையாக்கப் பார்க்கிறது. ஆனால் இது வெறும் உள்நாட்டுப் பிரச்சனை என்பது இலங்கை ஆதரவு நாடுகளின் கருத்து.

பாக், பங்களாதேஷ் போர்களின் போதும், காஷ்மீர் பிரச்சனைகளிலும் இந்தியாவின் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்ததுண்டு. எனவே இப்போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், எதிர்காலத்தில் இலங்கை சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படாமல் போகலாம். இந்தியாவிற்கு அமெரிக்கா, சீனா இரண்டையுமே சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல?

மிக முக்கியமாக இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையின் மேல் பகிரங்க குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டவும், சர்வதேச சட்டங்களை பின்பற்றவும் ஒரு கண்காணிப்பு குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு LLRC - Lessons Learnt and Reconciliation Commission என்று பெயர். உள்நாட்டுப் போரால் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதே இந்தக் குழுவின் நோக்கம். அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தக் குழு சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுதான் உள்ளது.

ராஜபக்ஷேவை இந்த தீர்மானம் போர்க்குற்றவாளியாக சித்தரிக்கவில்லை. இலங்கையின் மேல் எந்தப பகிரங்க குற்றச்சாட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றாலும், அதனால் இலங்கைக்கு சர்வதேச அரசியல் பாதிப்பு எதுவும் பெரிதாக இருக்காது எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இலங்கையை சர்வதேச அரங்கில் குற்றவாளியாக நிறுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன்

http://selvaspeaking...og-post_10.html

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ப்தியும், விரக்த்தியும் :(

தனது மொழிக்கும், தனது உரிமைகளுக்குமான ஒரு ஆதிக் குடியின் போர் வல்லாதிக்க சிங்கள அரசியலால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மனித உயிர்களைக் காவு வாங்கி மூன்று ஆண்டுகள் முடியப் போகிறது, போர் முடிந்து விட்டதா? அல்லது இந்தப் போராட்டம் இனி உயிர் பெற்று எழுமா? என்கிற பலரது கேள்விக்குள் ஈழமும், அதற்கான போராட்டமும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை ஜெனீவா மாநாடு பன்னாட்டு சமூகத்திற்கு உரக்கச் சொல்லி இருக்கிறது.

தந்தை செல்வாவின் அகிம்சை போராட்டம் கிட்டத்தட்ட முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னராக முடிந்தது. ஆனால் தமிழரின் உரிமைகள் கிடைக்காததால் அது கால ஓட்டத்தில் வேறு ஒரு வகையில் பரிணாமித்தது.

மிகுந்த நம்பிக்கை தந்த ஆயுதப்போராட்டம் மூன்று ஆண்டுகளுக்கு அநீதியான முறையில் முடிவடைந்தது. ஆனால், பல உறுதிமொழிகளும் ஏமாற்றப்பட்டு மக்கள் நாதியற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

எனவே, மக்கள் விடுதலை போராட்டம் மீண்டும் ஒரு புதிய பாணியில் தொடரும்.

ஒபாமாவின் கருத்தானது அவர் மீள் தேர்தலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் மக்களின் வாக்குகளை குறிவைத்து பேசப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இப்படிச் சொன்னார், "இந்திய மக்களும், சீன மக்களும் அதிகப்படியாக மகிழுந்துகளை (கார்) வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதே உலகின் எரிபொருள் பற்றாக் குறைக்கான காரணம்". மேலோட்டமாகப் பார்த்தால் ஓரளவு உண்மையானதாகத் தோன்றும் இதில் அடங்கி இருக்கிற முதலாளித்துவ வன்மத்தை வெகு நுட்பமாக நாம் கண்டு கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கால காலமாக மகிழுந்துகளைத் தங்கள் வாழ்வுரிமை என்பது போலப் பயன்படுத்தி வருகிற அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் பிற நாட்டு மக்கள் இவற்றைப் பயன்படுத்துவதையே ஒரு குற்றமாகவும், தங்கள் உரிமைகளை மீறிய செயலாகவும் கருதுகின்றன என்பது தான் இதில் அடங்கி இருக்கிற நுட்பமான அரசியல்.

உலக சந்தையில் அதிகளவு விலையில் மசகு எண்ணையை விற்க அதை உற்பத்தி செய்யும் (குறிப்பாக மத்திய கிழக்கு) நாடுகள் விரும்புகின்றன. உலகில் அதிக மசகு எண்ணையை வாங்கும் வலு உள்ள நாடு அமெரிக்கா. அவர்களால் மட்டுமே உலக மசகு எண்ணெய் விலையில் மாற்றத்தை கொண்டுவரலாம். அவர்கள் மசகு எண்ணெய்க்கு ஒரு மாற்று எரிபொருள் சக்தியை கண்டு பிடித்து விட்டால், உற்பத்தியாளர்கள் அம்போதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகை பில்லியன்களில்..! அதுவும் சீனாவில் ஒரு நாளைக்கு 3 எனும் அடிப்படையில் மில்லியனர்கள் உருவாகிறார்களாம்..! இப்படி ஒரு மக்கள் தொகை வாகனங்களை வாங்க ஆரம்பித்தால் விலை கூடாமல் என்ன செய்யும்? :D

நான் 2003 இல் கனடா வந்தபோது ஒரு லிட்டர் பெற்றோல் 60 சதத்தில் இருந்தது.. இப்போது இரட்டிப்பாகிவிட்டது..! கவனித்திப்பார்த்தால் சீன, இந்திய வளர்ச்சி அபரிதமாக ஏற்பட்டதும் இந்தக்காலத்தில்தான்..! :rolleyes:

ஒபாமா சொன்னதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை..! ஆனால் அந்தக் கார்களை விற்று லாபம் பார்த்தவர்கள் யார் என்கிற கேள்வியும் உள்ளது..! :wub:

இந்தகட்டுரையின் மிக முக்கிய பயன்தரும் கருத்துக்கள் :

உறுதியாக இந்தத் தீர்மானத்தினால் பன்னாட்டு அரசியலில் தமிழ் மக்களுக்கு சில நன்மைகள் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது, அவை முறையே:

1) தமிழ் மக்களின் நீண்ட கால உரிமைப் போராட்டம் உலக அளவில் கவன ஈர்ப்புப் பெறுவது.

2) முறையான அழுத்தங்களால், தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகளால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படைக் கூறுகளை அமெரிக்கா தவிர்த்த பல்வேறு நாடுகளிடம் கொண்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பு.

3) இந்தியாவின் செயல்திட்டங்களில், அதன் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளில் நெருக்கடியான சில மாற்றங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பு.

4) தங்கள் போராட்டத்தின் நோக்கங்களுக்கு இன்றியமையாத தொடர்ச்சியான ஊடக வெளிச்சம்.

படு நச்சுத்தன்னமையான வாதம். பாலைக்காட்டி நஞ்சை பருக்குகிறார்.

அரசியல் தெரியாத அரசாங்க வக்காலாத்து தமிழர்களை ஆதிக்குடிகளாக வருணிக்கிறார். இலங்கையில் ஆதிக் குடிகளாக கொள்ளப்படுபவர் வேடர்கள். தமிழ்ர்கள் நாகரிகத்தின் உச்சிக்கு சென்றவர்கள்.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் கண்டு கொள்ளாத எந்த அரசியல் செய்தியையும்

தமிழக தமிழர்களும் கண்டு கொள்வதில்லை

தற்போது சீமானும் வைகோவும் தான் ஆட்சியை தீர்மானிக்கிறார்கள்.

இந்தத் தீர்மானத்தை வெற்றி அடையச் செய்வதன் மூலமாகவோ அல்லது அது தொடர்பான பன்னாட்டு அழுத்தங்களை முன்னெடுப்பதன் மூலமாகவோ திரிகோண மலையில் ஒரு நிலையான கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் உண்மையான நோக்கம். அப்படி அமைப்பதின் மூலம் எதிர்காலத்தில் வலிமையான தன்னுடைய ராணுவ பேரங்களை அது இந்தியா, இலங்கை மற்றும் சீன அரசுகளுடன் நடத்துவதற்கு ஜெனீவா மாநாடு அமெரிக்காவுக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது

இதை அமெரிக்கா செய்தால்த்தான் தமிழருக்கு குறைந்தது இன்னுமொரு 30-40 வருடங்களுக்கு சீனா- கிந்தியாவிலிருந்து தப்ப வேண்டிய பாதுகாப்பு கிடைக்கும் என்பது நமது எதிர்பார்ப்பு. இல்லையேல் கிந்தியா திருப்ப IPKF பை போட்டு தமிழர்களை அடித்து நொறுக்கிவிடும்.

தெரிந்தோ தெரியாமலோ அமெரிக்கா கையில் எடுத்திருக்கிற அதன் போலி நீதிக்கான குரலை உலக அரங்கில் உரக்க ஒலிக்கச் செய்து, பிறகு அந்தக் குரலை அமெரிக்காவின் குழலில் இருந்து மீட்டு தனிக் குரலாக ஒலிக்கச் செய்வதில் தான் தமிழ் அரசியல் ஆற்றல்களின் திறன் அடங்கி இருக்கிறது,

இந்தியாவை இங்கிலாந்து ஆண்டுகொண்டிருந்த போதே, அதை எதிர்த்து போராடிய காந்தி, நேரு ஒத்துக்கொண்ட விடயம், ஜனநாயகத்தை விரும்புவோர் மேற்கு நாடுகளின் பக்கம் தான் போக வேண்டுமென்பது. ஆனால் அதன் பின்னர் அணிசேரா நாடுகளை சேர்த்துக்கொண்ட இந்தியாவானது , ஈரான், பாகிஸ்த்தான், இலங்கை, மியன்மார், பங்களாதேஷ், லிபியா, கியூபா, போன்றவற்றைத்தான் வழிநடத்துகிறது. இந்த இந்தியாவுடன் சேர்ந்த டிடோவின் நடுதான் இறுதியில் பல போர்க்குற்றங்கள் சாட்டப்பட்ட யூக்கோசிலவாக்கியா. தமிழர்கள் சிங்கபூர், ஸ்ரேல், யப்பானின் பாதையில்த் தான் போவார்கள். இவர்களுக்கு பொருளாதாரமும், ஜனநாயமும் சேர்ந்த பாதுகாப்புத்தான் வேண்டும். அமெரிக்கவுக்கும் தமிழர்களுக்குமிடையில் ஆப்பிறுக்குவது எளிதல்ல. அமெரிக்கா எதையோ தெரிந்த பின்னர் தான் இதில் இறங்கியிருக்கிறது. அது தான் தமிழ் தலைவர்கள் என்று நினைப்பவர்களுடன் பேச்சிப்பார்த்துமிருக்கிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவா ஒரு அரசியல் படிக்கல்லு.  சறுக்கினால் திரும்பி ஏறுவோம்.

இப்போது எமக்கு முக்கியம் ஸ்ரீ லங்கா ஜெனோசைட் பிரச்சாரம்.  

தற்போது சீமானும் வைகோவும் தான் ஆட்சியை தீர்மானிக்கிறார்கள்.

எமக்காகக் குரல் கொடுக்கிறார்கள் என்பதற்காக கண்டபாட்டிற்குக் கற்பனை பண்ணாதீர்கள்.

தமிழக அரசியலில் இவர்களை மக்கள் கண்டுகொள்வதே இல்லை

தமிழின அழிப்புக்குத் துணைபோன தமிழக நலன்களையே கவனத்திலெடுக்காத காங்கிரஸ் கட்சிக்கு இறுதியாக தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 5.71 சதவீதமான வாக்குகள் கிடைத்தன.

எப்போதும் ஈழத்தமிழர்களிற்காக மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளின்போதும் உறுதியாகப் போராடும் வைகோவின் மதிமுகவிற்கு காங்கிரசைவிட மூன்று மடங்கிற்கும் குறைவான வாக்குகள். 1.7 சதவீதம்.

அதிமுக, திமுக, தேதிமுக, காங்கிரஸ், பாமக இவற்றிற்கு அடுத்த நிலையிலேயே மதிமுக தமிழக மக்களால் வைக்கப்பட்டுள்ளது.

Edited by மின்னல்

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பது சந்தேகமே!

தான் மூக்கை நுழைக்க வசதியாக, அமெரிக்கா இதை சர்வதேச மனித உரிமைப் பிரச்சனையாக்கப் பார்க்கிறது. ஆனால் இது வெறும் உள்நாட்டுப் பிரச்சனை என்பது இலங்கை ஆதரவு நாடுகளின் கருத்து.

பாக், பங்களாதேஷ் போர்களின் போதும், காஷ்மீர் பிரச்சனைகளிலும் இந்தியாவின் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்ததுண்டு. எனவே இப்போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், எதிர்காலத்தில் இலங்கை சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படாமல் போகலாம். இந்தியாவிற்கு அமெரிக்கா, சீனா இரண்டையுமே சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல?

ராஜபக்ஷேவை இந்த தீர்மானம் போர்க்குற்றவாளியாக சித்தரிக்கவில்லை. இலங்கையின் மேல் எந்தப பகிரங்க குற்றச்சாட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றாலும், அதனால் இலங்கைக்கு சர்வதேச அரசியல் பாதிப்பு எதுவும் பெரிதாக இருக்காது எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இலங்கையை சர்வதேச அரங்கில் குற்றவாளியாக நிறுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன்

முதலாவது இந்தியாவின் அரசியல் பிரச்சினை. அவர்கள் விதைத்ததை அவர்கள் அறுவடைக்கும் காலம் வருகிறது. தமிழர்களை அழிக்க கண்முடித்தனமாக சிங்களத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். தங்களின் உண்மையான நண்பர்களை உதறித் தள்ளினார்கள். அதுக்கான விலையை அவர்கள் ஒருநாள் கொடுத்தே ஆகவேண்டும். இப்போது இந்த பிரேரணையை ஆதரித்தாலும் சிக்கல் ஆதரிக்காவிட்டாலும் சிக்கல். இதுக்கான தீர்வை இந்திக்காரங்க்களோ அல்லது சோனியாவோ தான் காணவேண்டும்.

இரண்டாவது இந்ததீர்மானம் ஒன்றும் போற்குர்ரத்தைப் பற்றி சொள்ளவிளைத்தான் இருந்தாலும் இது ஒரு தொடக்கம்தான். இதில் இருந்து சிங்களவன் இலகுவில் மீளமுடியாது. அதுக்கான அரசியல் சுழல் இலங்கைக்கு இப்போது இல்லை. இதில் உள்ள விடயங்களும் கால வரையறையும் ஒரு பொறிதான். இதுக்கு சிங்களவங்கள் இணங்கி இருந்தால் இதன் தாக்கம் குறைவுதான் ஆனால் சிங்களவன் சும்மா டேதிர்க்கவிலை அவன் அமெரிக்காவை இந்த விசயத்தில் அசைக்கப் பார்க்கிறான் அப்படி இருந்தும் இது நிறைவேறினால் இது நிச்சயமாக அடுத்த முறை தொடரப்படும். அப்படி இதை சிங்களம் உதாசீனம் செய்தால் அடுத்த கட்ட நகர்விற்கு அமேரிக்கா போகவேண்டி வரலாம்.

இதுக்கெல்லாம் உழைக்க எங்களின் அனைத்துத் தரப்புக்களும் தயாராக வேண்டும்.

பலவிடயங்கள் முடிச்சுப்போடப்படுகின்றன. தமிழர்களுக்காக அமெரிக்கா தீர்மானம் எதுவும் கொண்டுவரவில்லை. அது வெளிப்படையானது. தமிழராகிய நாம் பாதிக்கப்பட்டவராகையால் அது நமக்குச் சாதகமானதுபோல் தோற்றமளிக்கிறது.

ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட வேண்டுமென்பதில் அனைத்துத்தரப்பும் குறியாகவிருந்து வெற்றி கண்டுவிட்டன. தற்போதைய தேவை அமெரிக்க இந்திய நலன் சார்ந்தவைதான். இதில் அமெரிக்கத் தீர்மானம் வென்று இந்தியா தோற்றது போல் உலகிற்குக் காண்பிக்கப்பட்டாலும் இரண்டுமே நன்மையடையும். தமிழர் தரப்பிற்கும் இதில் சில நன்மைகள் விளையும். அது எதிர்பார்க்காத எதிர்மறை நன்மைகளாகக் கூட இருக்கலாம்.

அமெரிக்கா சமர்ப்பித்த அறிக்கையும் திருத்தங்களும்

நீலம் - இணைக்கப்பட்டது

மஞ்சள் - அகற்றப்பட்டது

US-Resolution-Gra.jpg

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காகக் குரல் கொடுக்கிறார்கள் என்பதற்காக கண்டபாட்டிற்குக் கற்பனை பண்ணாதீர்கள்.

தமிழக அரசியலில் இவர்களை மக்கள் கண்டுகொள்வதே இல்லை

தமிழின அழிப்புக்குத் துணைபோன தமிழக நலன்களையே கவனத்திலெடுக்காத காங்கிரஸ் கட்சிக்கு இறுதியாக தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 5.71 சதவீதமான வாக்குகள் கிடைத்தன.

எப்போதும் ஈழத்தமிழர்களிற்காக மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளின்போதும் உறுதியாகப் போராடும் வைகோவின் மதிமுகவிற்கு காங்கிரசைவிட மூன்று மடங்கிற்கும் குறைவான வாக்குகள். 1.7 சதவீதம்.

அதிமுக, திமுக, தேதிமுக, காங்கிரஸ், பாமக இவற்றிற்கு அடுத்த நிலையிலேயே மதிமுக தமிழக மக்களால் வைக்கப்பட்டுள்ளது.

மின்னல்..

நான் தமிழகத்தில் இருந்த காலத்திலேயே காங்கிரசுக்கென்று மக்கள் ஆதரவு இருந்ததில்லை..! :rolleyes: அவர்களுக்கு ஸ்ரீரங்கம் அவாள்கள் வாக்களிப்பார்கள்..! காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் வாக்களிப்பார்கள்..! ஆனால் அதிக வாக்குகளை அவர்கள் பெறுவது கூட்டணி மூலமாகத்தான்..! :rolleyes:

திமுக கூட்டணியில் கங்கிரஸ் நிற்கும்போது, இயற்கையாகவே திமுக அபிமானிகள் கைச்சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்..! அவ்வாறு கிடைத்ததுதான் அந்த ஐந்து சதவிகித வாக்குகள்..! அந்த அடிப்படையில் பார்த்தால் திமுக அபிமானிகளே போனதடவை காங்கிரசுக்கு வாக்களிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும்..! :D

பலவிடயங்கள் முடிச்சுப்போடப்படுகின்றன. தமிழர்களுக்காக அமெரிக்கா தீர்மானம் எதுவும் கொண்டுவரவில்லை. அது வெளிப்படையானது. தமிழராகிய நாம் பாதிக்கப்பட்டவராகையால் அது நமக்குச் சாதகமானதுபோல் தோற்றமளிக்கிறது.

ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட வேண்டுமென்பதில் அனைத்துத்தரப்பும் குறியாகவிருந்து வெற்றி கண்டுவிட்டன. தற்போதைய தேவை அமெரிக்க இந்திய நலன் சார்ந்தவைதான். இதில் அமெரிக்கத் தீர்மானம் வென்று இந்தியா தோற்றது போல் உலகிற்குக் காண்பிக்கப்பட்டாலும் இரண்டுமே நன்மையடையும். தமிழர் தரப்பிற்கும் இதில் சில நன்மைகள் விளையும். அது எதிர்பார்க்காத எதிர்மறை நன்மைகளாகக் கூட இருக்கலாம்.

இப்போதிருக்கும் நிலைமையைப் பார்க்கும்போது, நாம் எதிர்பார்க்குமளவு நன்மைகூட கிடைக்கப்போவதாகத் தெரியவில்லை. சிறீலங்காவிற்கான அழுத்தங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். அதோடு, அமெரிக்காவின் பிரேரணைக்குக்கூட வாக்குகள் கிடைக்குமா என்பது சந்தேகமே.

இத்தீர்மானம் தமிழர்களுக்காக கொண்டு வரப்படாவிட்டாலும், இலங்கைக்கு சார்பானதாக இருந்தாலும் உலகளாவிய ரீதியில் அது இலங்கைக்கு ஒரு அவமானமே.

இலங்கை விடயத்தில் அமேரிக்கா/ஐநா தலையிட்டால் பின்பு அவர்கள் அதிலிருந்து விலக முடியாது. அப்படி விலக நினைத்தால் உலக நாடுகளின் முன் அவர்களுக்கு அவமானம் கிடைத்து விடும். அத்துடன் உலக நாடுகளுக்கு பதில் கூற வேண்டி இருக்கும்.

இந்தத் தீர்மானத்தை வெற்றி அடையச் செய்வதன் மூலமாகவோ அல்லது அது தொடர்பான பன்னாட்டு அழுத்தங்களை முன்னெடுப்பதன் மூலமாகவோ திரிகோண மலையில் ஒரு நிலையான கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் உண்மையான நோக்கம். அப்படி அமைப்பதின் மூலம் எதிர்காலத்தில் வலிமையான தன்னுடைய ராணுவ பேரங்களை அது இந்தியா, இலங்கை மற்றும் சீன அரசுகளுடன் நடத்துவதற்கு ஜெனீவா மாநாடு அமெரிக்காவுக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது என்பதைத் தவிர வேறு இதயப் பூர்வமான தமிழ் மக்களின் மீதான அக்கறை எல்லாம் அமெரிக்காவுக்குத் துளி அளவும் இல்லை என்பது தான் நடப்பு உண்மை

அமேரிக்கா இலங்கையில் குடியேறினால் அது எமக்கு நன்மையே. இலங்கை இராணுவத்தினரிடமிருந்தும் ஒட்டுக்குளுக்களிடமிருந்தும் எமது மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டுமென்றால் தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்க படையோ அல்லது ஐநா படையோ வந்தால் தான் முடியும்.

எமது அடுத்தடுத்த சந்ததியாவது பாதுகாப்புடன் வாழ முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இந்தத் தீர்மானம் தமிழர் நலனுக்காகக் கொண்டுவரப்படவில்லையோ அதேபோலத்தான் முன்பு புலிகளுக்கெதிரான தடைகளும் சிங்களத்திற்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டிருக்கவில்லை..! ஆனால் சிங்களம் அத்தடைகளினால் "நன்மை" அடைந்திருக்கவில்லையா? :rolleyes:

பிரச்சாரத்திற்கு பயனுள்ள கையேடு : http://tgte-us.org/pressrelease/HRC_Booklet-Final.pdf

எப்படி இந்தத் தீர்மானம் தமிழர் நலனுக்காகக் கொண்டுவரப்படவில்லையோ அதேபோலத்தான் முன்பு புலிகளுக்கெதிரான தடைகளும் சிங்களத்திற்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டிருக்கவில்லை..! ஆனால் சிங்களம் அத்தடைகளினால் "நன்மை" அடைந்திருக்கவில்லையா? :rolleyes:

Yes ....very good point...................

எப்படி இந்தத் தீர்மானம் தமிழர் நலனுக்காகக் கொண்டுவரப்படவில்லையோ அதேபோலத்தான் முன்பு புலிகளுக்கெதிரான தடைகளும் சிங்களத்திற்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டிருக்கவில்லை..! ஆனால் சிங்களம் அத்தடைகளினால் "நன்மை" அடைந்திருக்கவில்லையா? :rolleyes:

ருமையான கருத்து.

ன்று மேற்குலகம் தனது இலங்கை சார்பாக்க பிழையான நகர்வை ஏற்படுத்தியபொழுது, சிங்களம் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வென்றது. இன்று மேற்குலகம் சிங்களத்தால் ஏமாற்றப்பட்டுள்ளது. தீர்வும் இல்லை, மனித உரிமைகளும் இல்லை, சீனா மட்டுமே எங்கும் உண்டு எதிலும் உண்டு.

இன்று நாமும் சிங்களத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிக இலாபம் அடையவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.