Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம்

Featured Replies

தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-25 10:36:11| யாழ்ப்பாணம்]

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்குமாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும்.

உண்மையில் ஜெனிவாவில் தீர்மானம் நிறை வேறியதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எள்ளளவேனும் பங்கு கிடையாது. ஜெனிவாத் தீர்மானத்தை வரவேற்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நேர்மையும், நீதியும் இருக்குமாயின் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த ஜெனிவாத் தீர்மானம்- அந்தத் தீர்மானம் நிறைவேறுவதற்கு உதவியவர்களுக்கு பகிரங்கமாக நன்றி கூற வேண்டும். உண்மையில் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறுவதற்கும் ஈழத்தமிழர்கள் பட்ட துயரம் கண்டு உலகம் முழுவதும் கண்ணீர் விடவும் செய்த மகா புண்ணி யம் சனல் 4ஐயே சாரும்.

‘இலங்கையின் கொலைக்களங்கள்- தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்’ என்ற ஆவணப்படத்தை சனல் 4 வெளிப்படுத் தாமல் இருந்திருந்தால், வன்னியில் யுத்தம் நடந்ததா? என்று இந்த உலகம் கேட்டிருக்கும். எனவே சனல் 4 இற்கு ஈழத் தமிழ் இனம் தங்கள் சீவிய காலம் வரை நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள். இதற்கு மேலாக விடுதலைப் புலிக ளின் தோல்விக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் இராஜதந்திர ரீதியில் உலக அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று, நாடுகடந்த தமிழீழத்தை உடனடியாகவே ஆரம்பித்தார்கள். அவர்கள் எடுத்த அந்த அதிரடியான நடவடிக்கை யும் ஜெனிவாத் தீர்மானத்திற்கு மூல காரணமாயிற்று.

இதைவிட எங்கள் பாசத்திற்குரிய சகோதரன் சீமானின் அர்ப்பணிப்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுக்கமான முடிபு என்பனவும் இந்தியாவை, இலங்கைக்கு பகையாக்கியது. ஆகவே, ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறுவதில் பங்க ளித்தவர்களுக்கு தமிழ் இனம் நன்றியுடையதாக இருக்க வேண்டும். இதைவிடுத்து ஜெனிவாவுக்குப் போகப் பயந்தவர் கள், ஜெனிவாத் தீர்மானத்தில் தங்களுக்கு உரிமை இருக்கிறது எனக் கூறினால் அதற்கு தமிழ் மக்களிடம் இருந்து மொழிவழிப் பதில் அன்றி வேறுவிதமாகவே அதற்கான பதில் வழங்கப்படும்.

http://www.valampuri...ws.php?ID=27820

  • கருத்துக்கள உறவுகள்

வலம்புரியின் கட்டுரை சரியானதே....

தமிழ் தேசிய கூட்டமைப்பு, யாரோ... பெற்றுக் கொடுத்த வெற்றியில்... குளிர் காய நினைப்பது, அதன் முட்டாள் தனத்தையே... காட்டுகின்றது.

எந்தத் தனிப்பட்ட அமைப்பும் இதற்கு உரிமைகோர முடியாது. ஆனால் அனைவரும் பங்காளிகள்தான். வலம்புரி கூட்டமைப்பை ஒதுக்க முடியாது. அத்தகுதி வலம்புரிக்கு இல்லை.

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு 47 நாடுகளுக்கும் கடிதம் எழுதியது, தென் ஆப்ரிக்காவுக்கு சென்றது, இவற்றை விட வேறு பல விடயங்களையும் செய்திருக்கலாம்.

திரிசங்கு நிலை!: கூட்டமைப்பை பொறுத்தவரையில் செய்தவற்றை வெளியே சொன்னால் சிங்களத்தால் பிரச்சனை. சொல்லாவிட்டால் தாயக / புலம்பெயர் மக்களால் பிரச்சனை.

Edited by akootha

தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-25 10:36:11| யாழ்ப்பாணம்]

..

உண்மையில் ஜெனிவாவில் தீர்மானம் நிறை வேறியதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எள்ளளவேனும் பங்கு கிடையாது. ...

http://www.valampuri...ws.php?ID=27820

100% உண்மை ...

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் சொன்னாலும் ததேகூமிகவும் மௌனமாக இருந்து கடைசி நேரத்தில் ஜெனிவாத் தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும் என்ற நிலையிலேயே கடிதங்களை அனுப்பிது.ததேகூ கடிதம் அனுப்பாவிட்டாலும் தீர்மானம் நிறைவேறியிருக்கும்.யாரும் ததேகூ அளவுக்கு மீறி வக்காலத்து வாங்க வேண்டாம்.என்ன செய்வது தமிழர்களின் கையறு நிலையில் ததேகூட்டமைப்பை உதறவும் முடியாது.இதை நன்குணர்ந்தே கூட்டமைப்பு அரசியல் செய்கின்றது.(ஒண்டுக்கும் ஏலாத கணவனை உதறவும் முடியாமல் சேர்க்கவும் முடியாமல் தவிக்கும் பத்தினிப் பெண்ணிண் வேதனை தமிழ்மக்களுக்கு)

பிரித்தானியதமிழர் பேரவை,

கனேடிய தமிழர் காங்கிரஸ் ( Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல்செயலவை ( United States Tamil Political Action Council), பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு (Tamil Youth Organisation United Kingdom),

ஈழத்தமிழர் அவை. உலகத் தமிழர் பேரவை,

பெற்றுக் கொடுத்த வெற்றியில்...தமிழ் தேசிய கூட்டமைப்பு, .

குளிர் காய நினைப்பது, அதன் முட்டாள் தனத்தையே... காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகூதா அண்ணா,  நீங்கள் இந்தியா ஆதரிக்கும் என்று முன்பு கூறிய பொழுது ஆதங்கத்தில் பகல் கனவென்றேன்.

உண்மையாகிவிட்டது.  உங்களுக்கு தங்க நாக்கு அண்ணா. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் சொன்னாலும் ததேகூமிகவும் மௌனமாக இருந்து கடைசி நேரத்தில் ஜெனிவாத் தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும் என்ற நிலையிலேயே கடிதங்களை அனுப்பிது.

இந்த கருத்தை ஏற்றுக் கொள்வது கடினமானது.

47 நாடுகளில் 22 நாடுகள் அமெரிக்காவுக்கு சில நாட்களுக்கு முதலே ஆதரவை தெரிவித்திருந்தன. 25 நாடுகள் எதிர்த்திருக்கும் சாத்தியம் இருந்தது. இறுதி நேரம்வரை இந்தியா காத்திருந்து கடைசி நேரத்தில் சிறிலங்காவுக்கு பாடம் படிப்பிக்க விரும்பியது போல தெரிகிறது.

இந்தியா

அடிப்படையில் இந்தியா சிறிலங்காவுக்கு "முடிந்தால் சீனாவின் உதவியுடன் இந்த தீர்மானத்தை முறியடித்து பார்" என்று சவால் விட்டது போன்ற நிலையே இருந்தது. கடந்த முறை சிறிலங்காவை இந்தியா காப்பாற்றியிருந்தது. இந்த முறையும் அந்த சந்தர்ப்பம் இந்தியாவுக்கு இருந்தது. இந்தியா எதிர்த்து வாக்களித்திருந்தால் மலேசியா உட்பட வாக்களிக்காத நாடுகளும் எதிர்த்து வாக்களித்திருக்கும். கடந்த முறை இப்படித்தான் தீர்மானம் தோற்று போனது.

இந்த முறை இந்தியா தனது ஒரு வாக்கால் 22 + அமெரிக்கா + இந்தியா = 24 ஆகி 23 வாக்குகள் எதிர்க்கும் நிலையை உருவாக்கியது. ஒரு வாக்கால் தீர்மானம் வெல்லக் கூடிய நிலையில் சில நாடுகள் வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கிக்கொண்டன.

கூட்டமைப்பு

கூட்டமைப்பின் கடிதம் பெரும் பங்களிப்பை செய்யவில்லை. ஆனால் அது வெற்றி உறுதிசெய்யப்பட்டபின் தான் அனுப்பப்பட்டது என்பது சரியாக இருக்க முடியாது. அதே வேளை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இன்று கூட்டமைப்பு இலங்கையில் ஒரு முக்கியமான அரசியல் சக்தி. இந்த நிலையை பெற்றுக்கொள்வதற்காகவே கூட்டமைப்பு பகிரங்கமாக தமிழீழத்தை கைவிட்டது. இன்று அதற்கு கைமாறாக ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானப்படி இலங்கையின் 13வது சட்டத்திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பரவலாக்கத்தை LLRC யின் பரிந்துரைப்படி சிறிலங்கா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது கூட்டமைப்பை பொறுத்தளவில் பெரிய வெற்றியாகும்.

தமிழீழம்

தமிழீழம் தமிழ் மக்களுக்கு மிகச்சிறப்பான தீர்வானாலும் கூட்டமைப்புக்கு பெரும் நன்மையை வழங்கப்போவதில்லை. இதற்கு காரணம் வெளிநாட்டு தமிழர்கள் கூட்டமைப்பை தமிழீழத்தில் இருந்த இடம் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்பதை கூட்டமைப்பு அறியும். ஆகவே கூட்டமைப்பு இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து தமிழீழத்துக்கு மாற்றாக அதிகாரப்பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த அனைத்தையும் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

உதவும் சக்திகளாக ...

இந்த அதிகாரப்பரவலாக்கம் நடக்காமல், சீன ஆதிக்கம் வலுப்பெறுவது தமிழீழத்தை சாத்தியமாக்கும் பாதையாக அமையும். உண்மையில் தமிழீழ ஆர்வலர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் இன்றைய சூழ்நிலையில், அதிகாரப்பரவலாக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சக்திகளை தமது நோக்கத்துக்கு உதவும் சக்திகளாக பார்க்க வேண்டும். மகா நாயக்க தேரர்கள், சிகள உறுமய போன்ற அமைப்புகள் சிறிலங்காவின் சிங்கள பகுதிகளில் இவ்வாறான "உதவும் சக்திகளாக" இருக்கின்றன. தமிழ் பகுதிகளில் அதிகாரப்பரவாக்கலின் பின் ஈ.பி.டி.பி. கருணா பிள்ளையான் போன்றவர்களின் அமைப்புகளுக்கு எதிர்காலம் இல்லை. ஆகவே இந்த அமைப்புகளும் அதிகாரப்பரவலாக்கத்தை நடைபெறாமல் இருக்க இரகசியமாக எதையும் செய்வர். இவர்களும் தமிழீழத்துக்கு பாதை அமைக்கும் "உதவும் சக்தி"களாகும்.

இந்த "உதவும் சக்திகள்" தமிழீழத்துக்கு தாம் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்யவில்லை என்பது தெளிவு. ஆனால் இவை தமிழீழம் உருவாக, தாம் விரும்பாமலே உதவும் சக்திகள் என்பதும் உண்மை.

இவ்வாறான உதவும் சக்திகளுடன் செயற்படுவது, விடுதலைப்புலிகள் பிரேமதாசவுடன் சேர்ந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றியது போன்ற அணுகுமுறையாகும்.

Edited by Jude

  • தொடங்கியவர்

பல நல்ல சிந்திக்க வைக்கக்கூடிய கருத்துக்கள்.

தமிழ் பகுதிகளில் அதிகாரப்பரவாக்கலின் பின் ஈ.பி.டி.பி. கருணா பிள்ளையான் போன்றவர்களின் அமைப்புகளுக்கு எதிர்காலம் இல்லை. ஆகவே இந்த அமைப்புகளும் அதிகாரப்பரவலாக்கத்தை நடைபெறாமல் இருக்க இரகசியமாக எதையும் செய்வர். இவர்களும் தமிழீழத்துக்கு பாதை அமைக்கும் உதவும் சக்திகளாகும். இவ்வாறான உதவும் சக்திகளுடன் செயற்படுவது, விடுதலைப்புலிகள் பிரேமதாசவுடன் சேர்ந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றியது போன்ற அணுகுமுறையாகும்.

இவர்கள் தமிழீழத்தை அமைக்கும் சக்திகள் என்பதை எம்மில் சிறுபான்மையினர் ஏற்றாலும் சுதந்திர தமிழீழ மக்கள் ஏற்பார்களோ தெரியாது.

இவர்களை வைத்து சர்வதேச ரீதியில் எந்த இராஜதந்திர அணுகுமுறைக்கும் பலம் சேர்க்க முடியாது. இவர்களால் செய்யக்கூடியது தாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து சிங்கள அரச இராணுவ போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து தமது தண்டனையை குறைப்பதே.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பல நல்ல சிந்திக்க வைக்கக்கூடிய கருத்துக்கள்.

இவர்களை வைத்து சர்வதேச ரீதியில் எந்த இராஜதந்திர அணுகுமுறைக்கும் பலம் சேர்க்க முடியாது. இவர்களால் செய்யக்கூடியது தாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து சிங்கள அரச இராணுவ போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து தமது தண்டனையை குறைப்பதே.

நீங்கள் காட்டும் வழி இவர்கள் பிழைத்துக் கொள்வதற்கு சாதாரண வாழ்க்கை வாழ விரும்பும் ஒருவரது ஆலோசனையாகவே அமைகிறது.

இவர்கள் முதலில் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு தயாரானவர்கள் அல்ல. அவர்களது உயர் சக்தி வாழ்க்கை முறை தமிழீழத்துக்கு பாதை அமைப்பதற்கு தேவையாக இருக்கிறது. அவர்கள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பின்வரும் செயற்பாடுகளில் தமது நலன்கருதி ஈடுபடுவார்கள்.

  • கூட்டமைப்பை உடைப்பதற்கும் அழிப்பதற்குமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
  • தேர்தல்கள் அதிகாரப்பரவலாக்கல் நடவடிக்கைகளை குழப்புவார்கள்.
  • குற்றச்செயல்களை அதிகரிப்பார்கள். கிறில் பூதம் முதலான மிரட்டல்கள் இந்த வகையிலானதாக இருக்கலாம்.

இவை தமிழீழத்துக்கான பாதையின் சிறிய பகுதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைபப்பு இதற்கு தங்களின் சாமத்தியமான அணுகுமுறை தான் காரணம் என்று அறிக்கைவிட்டபோது எனக்கும் ஒரு மாதிரித்தான் இருந்தது.

அவர்களது பங்கும் இருந்திருக்கலாம். நாம் அறியோம்.

ஆனால் தங்களின் சாமத்தியமான அணுகுறையால்தான் இது சாத்தியமானது எனச்சொல்வதன் மூலம் இதில் அவர்களைவிட அதிகமாக உழைத்தவர்களை சாமத்தியமாக தவிர்த்தது ஏற்புடையதல்ல. அது எமக்கு ஆபத்தானது கூட.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I am a member of TGTE. I know the importance of TGTE-TNA cooperation if we are to succeed in the international forums. TNA cannot always talk openly like us. But I sense our minds meet with theirs. At least, let us wait for some time to see how they act in practical matters coming out of this resolution. That will be the real acid test. Then of course we can criticize them if they are wrong, not now.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் பங்கும் ஏனைய தமிழ் அமைப்புகளினது பங்குக்கு ஈடாகவோ அல்லது சற்று குறைவாகவோ இருந்திருக்கலாம்.ஆனால் கூட்டமைப்பு அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் ,கனடா,தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.இனியும் தமிழர்களுக்காக ராஜதந்திர ரீதியில் பேச வல்லவர்களும் அவர்களே.கூட்டமைப்பு சிறிலங்காவில் இருந்து செயற்படுவதால் பல விடயங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளார்கள்.

மேற்படி வெற்றியில் பங்குக்கு உரிமை கோர வேண்டுமெனில் 90%க்கு மேலான உரிமையை அமெரிக்கா தான் கோர வேண்டும்.இறுதி நேரங்களில் ஏதோ தனது கௌரவப்பிரச்சனை போல அமெரிக்கா செயற்பட்டது.இஸ்ரேலுக்காக கூட அமெரிக்கா இப்படி கஸ்டப்படவில்லை.(ஒரு பிரேரணையை வெல்ல)

  • கருத்துக்கள உறவுகள்

TNA welcomes adoption of UNHRC resolution Tamil Guardian 25 March 2012

The Tamil National Alliance has welcomed the passing of the US-sponsored resolution at the 19th session of the UN Human Rights Council.

Full text follows:

"We believe that the Resolution will benefit all Sri Lankans, regardless of ethnicity. We sincerely hope that the Resolution and the clear collective will of the Council will encourage the government to face the future with fortitude and move decisively to protect human rights and take tangible action to advance genuine reconciliation,

"The need for substantial progress in human rights protection, genuine and meaningful reconciliation and accountability are deep-felt needs of all citizens of the country. We therefore urge the government to avail itself of the opportunity provided by the Resolution of the Human Rights Council and dedicate itself to serving these urgent needs as provided for in the resolution.

"The TNA strongly believes that this Resolution is a first step in the pursuit of justice and accountability and sincerely thanks all countries, organizations and institutions that demonstrated a firm commitment to the achievement of a future for the Tamil community in Sri Lanka that is marked by equality, dignity, justice and self-respect.

"The TNA will, on behalf of the Tamil people, work with commitment and dedication towards the advancement of these goals."

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சமகால வரலாற்றை கோட்பாட்டு ரீதியாக சரியாக ஆராய்ந்து தெளிதல் சரியான நிலைபட்டையும் தீர்மானங்களையும் எடுப்பதற்க்கு மிக முக்கியமான அடிப்படையாகும். ஜேனீவா தீர்மானம் நிறைவேறியதில் முக்கிய பங்களித்தவர்கள் யார் யார் என்கிற கேழ்விக்கு எங்கள் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அல்ல ஆய்வு அடிப்படையில் மட்டுமே பதில் தேட முடியும்.அத்தகைய பதில்கள் மட்டுமே விடுதலைக்கான அரசியலுக்கு வழிகாட்ட முடியும். இது தொடர்பாக தனி கட்டுரை எழுத உள்ளேன். ஆயினும் சுருக்கமாக சிலவிடயங்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

ஜெனீவா தீர்மானத்தின் வெற்றியின் பின்னணி இரண்டு பக்கங்கலைக் கொண்டது.

1. போர்க்குற்றத்துக்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டதும் வெளிக்கொண்ரப் பட்டதும். இதுவே ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படை.

2. ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கான அரசியல் சூழல்;

1.1 போர்க்குற்ற ஆதாரங்களை பிரபலப் படுத்திய பெரும்பணி சனல் 4 பதிரிகையாளர்களுக்கும். சனல் 4 நிறுவனத்துக்கும் மிக முக்கியமான பங்கு உள்ளது.

1.2 ஆனால் மிகவும் ஆபத்தானதும் கடுமையானதுமான இலங்கையில் இராணுவத்தினர் மத்தியில் இருந்த ஆதாரங்கலைத் திரட்டி வெளியில் கொண்டுவந்த பணியில் முக்கியமான பங்கு தமிழ்நெற்றில் பணிபுரிந்த தோழன் சிவராமுடையவும் என்னுடையவும் ஆருயிர்த் தோழனாகிய சிங்கள பத்திரிகையாளர் பாசன (

Rohitha Bashana Abeywardane of Journalists for Democracy in Sri Lanka

) அவர்களுக்கும் அவரது JDS அமைப்புக்கும் சேரும்.

1.3முள்லிவாய்கலில் இருந்து தமிழ்வாணி மூட்டிய நெருப்பை தீபங்களாக்கி யுத்தக் குற்றங்களை வெளிச்சம்போட்டுக் காட்டியதில் பாசணவுக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய சிங்கள ஊடகவியலாலர்கள் சிலருக்கும் நாம் த்லை வனங்கவேண்டும். பாசனவின் உதவியுடன் தப்பிவந்த தமிழ்நெற் யுத்த நிருபர் லோக்கீசன்போன்ற பலரை நாம் மறந்து விடுகிறோம்.

2.1 ஜெனீவாதீர்மானம் நிறைவேறுவதற்கான அரசியல் சூழலின் உருவாக்கத்தைப் பார்க்கிறபோது தமிழர்கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் குறிப்பாக அமரிக்காவுக்கு அனுசரணை புது டெல்ஹிக்கு அழுத்தம் என்கிற வகையில் கணிசமான அளவுக்கு உழைதிருக்கிறார். அதனை யாரும் மறக்க முடியாது.

2,2 இந்தியா தீர்மானத்தை ஆதரிக்க முடிவெடுத்தமை

இந்த விடயம் தொடர்பாக புலம்பெயர்ந்த அமைப்புகளின் பங்கும் முக்கியமானதாகும். இதுதொடர்ப்பாக விரிவாக எழுதவேண்டும். தயவு செய்து யாழ் நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த விபரங்ளைப் பதிவு செய்யுங்கள்.

இந்த வகையில் ஜூட், அகோதா, சுபா சுந்தரலிங்கம் போன்றவர்களின் பதிவுகளை வழி மொழிகிறேன். இறைவன் விசுக்கு நுணாவிலான் பதிவுகலும் முக்கியமானவை.

Edited by poet

ஜெனிவா தீர்மானத்துக்காக எல்லோரும் அவரவர் சக்திக்கு ஏற்றவாறு உழைத்திருக்கிறார்கள்.தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உழைத்திருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை ஜெனிவாவுக்கு வரவிடாமல் தடுத்தது அமெரிக்கா.அதற்கு அடுத்த கட்ட நகர்வு தொடர்பான அரசியல் காரணங்கள் இருக்கின்றன.

தமிழ் மக்கள் தொடர்பான சர்வதேச நகர்வுகள் எடுக்கப்படும் போது தாயகத்திலே அதற்கென்று ஒரு ஆதரவுத் தளம் வேண்டும் அந்த ஆதரவுத் தளம் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பேயாகும்.புலம் பெயாந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சர்வதேச அரங்கில் போர் குற்றம் மற்றும் உரிமை மீறல் பிரச்சனைகளை கையாள தமிழ் தேசிய கூட்டமைப்பு தாயத்தில் ஈபிடிபி பிள்ளையான் குழு முதலான அரச ஆதரவுக் குழுக்கள் மூலம் தமிழ் தேசித்துக்கான ஆதரவுத்தளத்தை சிதைக்கும் சிறிலங்கா அரசின் முயற்சிகளை முறியடிக்கும் வேலைகளை முழுமூச்சாச செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு கூறப்பட்ட ஆலோசனையாகும்.

இந்த காலகட்டத்தில் சனல் 4 தொலைக்காட்சிக்கு துரோகி பட்டம் கட்ட முற்பட்டது,தமிழ் தேசிய கூட்டமைப்பினரை துரோகிகளாக்க வரிந்து கட்டிக்கொண்டு செயற்படுவது, அமெரிக்கத் தீர்மானத்தில் ஒன்றும் இல்லை.அது தமிழீழத்தை பெற்றுத் தராது என்கின்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியல் பரப்ப்புவது என்ற ஒரு சாரார் முனைப்புடன் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் இவர்களுடைய இந்த செயற்பாடுகளும் சிறீலங்கா அரசின் நோக்கங்களும் ஒரே தடத்தில் ஒன்றாகப் பயணிப்பதை அவதானிக்கலாம்.

அமெரிக்க மேற்குலக நலன் ஈழத்தமிழ் தேசிய நலன் என்கிற இரண்டு திசைகளில் பயணித்த வௌ;வேறு நேர்கோடுகள் காலத்தின் தேவையால் இன்று ஒரு புள்ளியில் சந்தித்திருக்கின்றன.. இந்தப் புள்ளியை முற்றுப் புள்ளி ஆக்குவதும் தொடர்ந்து இறுதி இலக்கை நோக்கி பயணிக்கக் கூடிய நேர்கோடாக்குவதும் நமது கைகளிலே தான் இருக்கிறது.

ஓரே ஒரு பேச்சுவார்த்தையின் மூலம் அல்லது ஒரே ஒரு சர்வதேச தீர்மானத்தின் மூலம் ஒரே நாளில் அல்லது ஒரு மாதத்தில் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று நம்பினால் 30 வருட காலம் ஆயதமேந்திப் போராடியிருக்கத் தேவையில்லை.

தெற்கு சூடான் பிரிவதற்சான் சர்வஜன வாக்கெடுப்பு ஓரமாதத்தில் வந்துவிடவில்லை.கிட்டத்தட்ட 8 வருடங்கள் பலவேறுபட்ட பேச்சுவார்த்தைகள் நகர்வுகளுக்கு ஊடகத்தான் அது நடந்தது.

முள்ளிவாய்க்காலில் எங்களுக்கு ஆயுத ரீதியாக எமக்கு ஏற்பட்ட தோல்வி பௌத்த சிங்கள பேரனவாத அரசை அசர பலங்கொண்ட இராணுவ மேலாண்மை அரசாக மாற்றிவிட்டது.

இப்போது எங்களுடைய வேலை அதை எப்படி வெல்வது என்பதாகத்தான் இருக்கவேண்டும்.எதிரியினுடைய முரண்பாடுகளும் அந்த முரண்பாடுகளை எதிரிகையாளும் விதத்துக்கு எதிரான நடைமுறைத் தந்திரோபயங்களும் தான் எந்களுடைய வெற்றியை தீர்மானிக்கும்.

இதே மூலேபாயத்தை எதிரி எங்கள் மேல் பிரயோகித்து எங்களை சிதைக்க அனுமதித்தால் நாங்கள் அடையாளம் மற்றவர்களாக போய்விடுவோம்.

தியாகி எதிர் துரோகி அரசியல் நடத்தும் சிறீலங்கா நலன் விரும்பிகளை இந்தச் சந்தர்ப்பதிலாவது நாங்கள் இனங்கண்டு ஒற்றுமையோடு பயணிப்போம்.வேற்றுமையில் ஒற்றுமைகண்டு பிழைப்புவாதத்தை ஒழித்து பலம் தான் அதிகாரத்தின் அடிப்படை என்பதை உணந்து செயற்படுவோம்.உலகத் தமிழனின் பொருளாதார பலம் ஊடக பலம், அரசில் பலம் எல்லாவற்றையும் தமிழீழம் என்ற இலக்கை நோக்கி எப்படி பிரயோகிப்பது என்பதை மட்டும் சிந்திப்போம்.

Edited by navam

நிச்சயமாக கூட்டமைப்புக்கும் பங்குண்டு. இதனை உத்தேசமாக 1% ஐ விடக் குறைவு என்று சொல்லலாம்.

ஆனால் அதன் பங்களிப்பு,

தமிழர் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும்

அல்லது

தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை கட்டிக்காக்கும்

அளவுக்கு இல்லை என உறுதியாக சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் சனல் 4 இற்குப் பெரும் பங்குண்டு.ஆனால்சனல் 4இற்குக் கூட்டமைப்பு எந்த வகையிலும் உதவியிருக்கச் சாத்தியமில்லை.போர்க்குற்ற விசாரணைபற்றி கதைக்கவே இல்லை.இப்போது சுமந்திரன் போர்க்குற்ற விசாரணை தேவையே இல்லை என்கிறார்.போர்க்குற்ற விசாரணையும் அதனூடாக தமிழருக்கு எதிராக சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை நிறுவப்படாமல் தமிழருக்கான நீதியோ விடுதலையோ சாத்தியமில்லை.அதைச் செய்யர்த கூட்டமைப்பு எந்த வகையில் இதற்குப் பெரும் பங்களித்திருக்க முடியும்.புலம் பெயர் அமைப்புக்களின் பெரும் பங்களிப்பும் அமெரிக்கா இந்த விடயத்தில் உறுதியாக இருந்ததால்தான் இத்தீர்மானம் வெற்றி பெற்றது.nஅமரிக்கா தவிர்ந்து வேறு எதேனும் ஒரு நாடு இத்திரு;மானத்தைக் கொண்டு வந்திருந்தால்இந்தியா எதிர்த்து வாக்களிப்பதோடு எனைய நாடுகளையும் அதற்குத்தூண்டி தீர்மானத்தைக் கிடப்பில் போட்டிருக்கும்.இதுவே கடந்த முறை நடந்தது.கடந்த முறை இந்தியாவுக்கு நீதியாகத்தெரிந்த விடயம் இந்த முறை அநீதியாகத் தெரிந்ததற்குக் காரணம்.அமெரிக்கா.அதற்கு இந்தியாவின்; நீண்ட மௌனமே சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் இவர்களுடைய இந்த செயற்பாடுகளும் சிறீலங்கா அரசின் நோக்கங்களும் ஒரே தடத்தில் ஒன்றாகப் பயணிப்பதை அவதானிக்கலாம். - நவம்.

நவம் அவர்கலது கருத்தை நானும் வழிமொழிகிறேன். கூட்டமைப்பு வடகிழக்கை இணைத்து பிரதிநிதித்துவம் பெறாமல் இருந்திருந்தால். வடக்கும் கிழக்கும் வெவ்வேறு அணிகளோ மகிந்த சார்பு அணிகளோ வென்றிருந்தால் உலகம் தமிழர் ஒருமித்து ஈல்லையென்றும் மகிந்தவுக்கு பின் நிற்கிறதாகவும் கருதியிருக்கும். புலிகள் சார்பான பிரதி நிதித்துவம் வந்திருந்தால் அமரிக்கா போர்குற்றம் சுமத்தப் பட்ட அணிகளில் ஒன்றாகப் அவர்களை புறக்கணித்திருக்கும் இந்தியா எதிர் நிலை எடுதிருக்கும். அத்தகைய ஒரு சூழலில் நிச்சயமாக இந்தியா இன்று எடுத்த நிலை பாட்டை எடுத்திருக்காது. அமரிக்கா இத்தகைய ஒரு தீர்மானத்தை முன்மொழிய தயங்கி இருக்கவும் கூடும். களத்தில் வாழும் தமிழர்கள் விசாரணையைக் கோருகிறார்கள் என்கிற தெளிவான சமிக்ஞையை உயிர் ஆபத்துக்கு மத்தியிலும் சம்பந்தர் சர்வதேசத்துக்குக் கொடுத்தது மிக முக்கியமான பங்களிப்பாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலாதிகாலம் காத்திருந்ததுபோல் நம் கண்களில் ஒரு ஏக்கம். யுகாதியுகங்கள் பொறுத்திருந்துவிட்டது போல் நெஞ்சினில் ஒரு தாபம். பிறவிக்குமேல் பிறவிகள் எடுத்து இதை தேடிவந்ததுபோல் நினைவினில் ஒரு மயக்கம். இறுதில் அது நிறைவேறிவிட்டது.

அசையாத மலையின் முன்னே பகிரதப்பிரயத்தனத்தை காட்டி பெற்ற முடிவுகள் இன்று எல்லோர் கண்களுக்கும் முன் பார்வைக்கு விடப்பட்டிருக்கிறது. முதன் முதலாக, சர்வதேச சமூகம் இலங்கையின் கண்ணுக்குள் நேருக்குநேர் பார்த்து ”உன்னை நாங்கள் நம்பமுடியாது” என்று கூறிவிட்டன.

என்வே இலங்கை கூனி குறுகி போகத்தக்க ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. ஆனால் நாம் இது நமது வெற்றியாக கொண்டு இறுமாந்திருக்க நேரமல்ல.

இத்தகைய நேரங்களில் நாம் எம்மைபற்றி சுயதம்பட்டம் செய்யும் போது பல பிரதான பங்களிப்பாளர்களை மறந்துபோக நேர்கிறது. எனவே ஆவணத்தில் போவதற்காக நான் சில பங்களிப்புகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஒன்றுக்கு இரண்டு தடவைகளாக, காண்போர் நெஞ்சங்களை கலங்கவைக்கத்தக்கதான கணோளி சாட்சியங்களை ஒளிபரப்பித்தான், சனெல்-4, இதை நமக்கு சாத்தியமாக்கியது.

ஆயிரமாயிரம் பக்கங்களாக ஆவணங்களைத்தாயாரித்து மறுக்கமுடியாத நிரூபணங்களை வைத்துத்தான் சர்வதேச அரசு சாரா. நிறுவனங்கள்(INGOs) இதை நமக்கு சாத்தியமாக்கின.

நமது மாண்புமிகு அதிபருக்கான கையெழுத்து வேட்டையை நடாத்தி, அசமந்த போக்கான அதிகாரிகளிடமிருந்த முன்னேடுப்பு செயல்பாடுகளை, தெரிவுசெய்யப்பட்ட அர்சியல்வாதிகளின் கைகளுக்கு மாற்றிய, சர்வதேச மன்னிப்புசபையை, இந்நேரத்தில் நாம் நன்றிக்கடனுடன் நினைவு கூரவேண்டும், இதுவரையில் இலங்கையில் எதுவுமே நடக்கவில்லை என்ற கடைசி அறிக்கை உள்ளடங்கலாக, அவர்களின் தொடர்ந்த விடாபிடியான நிலைப்பாடுகளுக்கும் நாம் நன்றி செலுத்தவேண்டும்.

எமது ஆதங்கங்களை சர்வதேச நாடுகளுக்கு தெளிவாக விளங்கவைக்க கூடியதாக, கடைசி நேரத்திலும் இரண்டு தொகுதி அறிக்கைகளைதயாரித்தளித்த, சர்வதேச நெருக்கடிக்குழுவின், தொடர்ச்சியான சக்திவாய்ந்த அறிக்கைகளையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இதேமாதிரியான பல அறிக்கைகளை சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவும், மனித உரிமைகள் காப்பகமும் தயாரித்து எமக்கு உதவியாக வெளிவிட்டிருக்கின்றன.

சித்திரவதை தடுப்புக்குழுவும், இலங்கை அரசு சொல்வதெல்லாம் எப்பவும் சுத்தப்பொய் என்பதை எடுத்துக்காட்டி அறிக்கைகள் வெளிவிட்டு எமக்கு உதவியிருக்கிறது.

மேலும் நாங்கள் மட்டும்தான் இவர்களின் சேவைகளை வேண்டியிருப்போராக இல்லாதிருந்தும், தாமக வந்து நாளும் பொழுதும், தங்கள் கைகளாள் அறிக்கைகளை சமர்பிக்க பிரசன்னமாக இருந்து தமது நியாயமான பங்குகளுக்கு மேலாக நமக்கு சேவைகள் செய்திருந்தார்கள் இந்த INGOs.

இனி நமக்கு தெளிவாக ஞபகமிருக்கவேண்டியது, எமக்கு தேவையானது, சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றென்பதாகும். நமக்கு இன்னமும் அது கிடைக்கவில்லை. ஆனால் நல்லிணக்க ஆணைக்குழு, தெட்டத்தெளிவாக, ஒருஅரச நிறுவனங்களும், போரின் கடைசி காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களில் சம்பந்தபட்டிருக்கவில்லை என்றும், அதற்கான விசாரணை ஒன்று தேவை இல்லை என்றும் கூறுகிறது. ஆகவே நாம் கேட்பது இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நடை முறைப்படுத்துவதால் நடந்துவிடாது.

இப்போது எதிரிக்கு கொடுக்கபட்டிருப்பது சுண்டி வலிக்க தக்க கண்டிப்பு ஒன்று மட்டுமே. இது நமக்கு ஒரு வெற்றி அல்ல. எனவே எம்மை நாம் சிறப்பித்து இன்பம் காணாமல் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட நாம் எல்லாம் ஒன்றிணைய கிடைத்த சந்தர்ப்பமாக இந்த நாளைக்கொண்டாடுவோம்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு சங்கடம் கொடுக்கும் முள்ளிவாய்கால் பேரழிவை முன்னெடுப்பதில்லை என்றவாறு கருத்து தெரிவித்திருந்த கூட்டமைப்பு, இந்தியாவைப்போல் தீடிரென சாதகமாக மாறியிருப்பது வரவேற்கத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை நாம் சிறப்பித்து இன்பம் காணாமல் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட நாம் எல்லாம் ஒன்றிணைய கிடைத்த சந்தர்ப்பமாக இந்த நாளைக்கொண்டாடுவோம்..

இதையே மக்கள் எல்லோரிடமும் வேண்டி நிற்கின்றனர்.

இதன் பொருள் ஒரு கட்சிக்குள்ளேயோ அல்லது ஒரே அணியிலோ நில்லுங்கள் என்பதல்ல.

இலட்சியப்பாதையில் முக்கிய விடயங்களின் ஒன்றிணைந்து பணி புரியுங்கள் என்பதே.

எவரிடமுள்ளதையும் எவரும் பறிக்க முயற்சிக்காது எமக்கான பாதையும் பணிகளும் விரிந்து கிடக்கின்றன். அவற்றைச்செய்வோம். மக்கள் முடிவெடுப்பர் தமக்காக உழைத்தோரை.

  • கருத்துக்கள உறவுகள்

காகம் இருக்கும்போதே பனங்காய் விழுந்தது.........

இதற்கு மேலாக விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் இராஜதந்திர ரீதியில் உலக அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று, நாடுகடந்த தமிழீழத்தை உடனடியாகவே ஆரம்பித்தார்கள். அவர்கள் எடுத்த அந்த அதிரடியான நடவடிக்கை யும் ஜெனிவாத் தீர்மானத்திற்கு மூல காரணமாயிற்று.

இது வலம்புரியாரின் வாக்கியம். இதன் மூலம் வலம்புரியார் நா.க.த. அரசையும் கூட்டமைப்பையும் இரு துருவங்களுக்கும் தள்ளி பிரித்து வைக்கிறாரா தெரியவில்லை.

நா.க.அரசை ஆரம்பித்தகாலங்களில் பிரதமர் உருத்திரகுமாரன் பேசிய பேச்சுக்களின் சாரம் நா.க.அரசு தாயகத்து அரசியல் நிலைபாடுகளை கருத்தில் எடுக்காது என்பதே. தமது அதிகாரங்களை புலத்தில் சனநாயக அடிப்படையில் நடாத்தப்படும் தேர்தல்களின் மூலம்தான் பெற்றுகொள்ளப்போவதாக கூறினார். அதன் காரணம் புலத்துமக்கள் சுயாதீனமாக சிந்திக்கதக்கவர்களாக இருக்கும் போது அங்கு மட்டும்தான் ஜனநாயக வாக்குமூலம் மக்களின் கருத்துகளை அறிந்து அரசியல் முன்னெடுப்புகளை தொடங்கமுடியும். அவர் தாயக மக்களின் கருத்துக்களை அவர்களின் அண்ணன் தம்பிகளிடமும், அக்கா தங்கைகளிடமும் புலத்தில் தேடினார். தாயக மக்கள் தங்கள் விருப்பு வெறுப்புக்களை வெளிக்காட்ட முடியாத நிலையில் இருப்பதை வைத்துத்தான் இப்படி முடிவு எடுக்கபட்டது. அதனால் அவர் நேரடியாகவே அரசுக்கெதிரான இனவழிப்பு, போர்குற்றம் என்ற முறைப்பாடுகளுடன் சர்வதேசத்தையும் நோக்கி பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

சம்பந்தருக்கு பிளேக், சிவசங்கர் மேனன், நாராயணன் போன்றவர்களுடன் தான் பேசமுடியுமாயிருந்தது. மேலும் அவருக்கு கசாப்பு கடைகாரன் ஒவ்வொரு ஆடாக பட்டியிலிருந்து இழுத்துக்கொண்டுபோய் வெட்டுவதுபோல் இலங்கை இராணுவத்தால் தமிழரின் எதிரிகளின் பெயர்களால் பெயரிடப்பட்டிருந்த அகதிகள் முகாமிலிருந்து ஒவ்வொருவராக புலிகள் என்ற பேரால் இழுத்து செல்லப்பட்டு கொலை செய்யபட்டுக்கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருக்கவேண்டியிருந்தது. அந்தநேரத்தில் அத்தகைய செயல்கள் போர்க்குற்றமென்று கொடூர ராணுவத்துடன் வாதாடமுடியாது. அதனால் அவர் பழையபடியும், தப்பி இருப்போரை காப்பாற்ற, அரசுடன் இணைந்த பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வு திட்டங்களை கேட்டார். இது பார்வைக்கு நா.க.அரசும், கூட்டமைப்பும் இரு திசைகளில் போவதுபோல் ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. இதனால் வலம்புரியார் இந்த பிரமையை வைத்து தனது தொழிலை கொண்டு செல்கிறார். ஆனால் இந்த பிரமை எவ்வளவு உண்மை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம்.

நா.க.அ ஆரம்பத்திலேயே சிங்கள அரசுக்கு சவால்விடுக்க தயாராக இருந்தது. ஆனால் தாயகமக்கள் தாங்கிகொள்ள தக்கதல்லாத முடிவுகளில் அவசரப்படவுமில்லை. கூட்டமைப்பு உள்ளே முடக்கப்பட்டிருந்ததால் வெளியே வந்த வெற்றிடத்தை தான் நிரவி வந்தது. எப்போதுமே தனது பாதையை கூட்டமைப்புடன் முற்று முழுதாக இணைத்து கூட்டமைப்பின் மீது அரசு விடும் மிரட்டல்களுக்கு தானும் அடிபணியவேண்டிய நிலையில் தன்னை போட்டுக்கொள்ளவில்லை. இந்த வெளிவாரியான பாதைவித்தியாசம், இரண்டும் வேறு வேறு திசைகளில் பயணிக்கிறதென்று வலம்புரியார் காட்ட முயலும் செய்கைகளை, ஒருவிதத்திலும் ஆதரிக்காது.

சென்ற மாவீரர் தின உரையில் இதை பிரதமர் வெளிப்படையாகவே கூறியிருந்தார். அதாவது, இலங்கை அரசுடனும் மற்றைய அரசுகளுடனும் பேச்சுவர்தைகளை நடத்தி இடைக்கால தீர்வுகளையும் அவலப்பட்டுபோன மக்களுக்கு ஆறுதல்களையும் கூட்டமைப்புத்தான் முன்னின்று கொண்டுவரவேண்டும் என்றும், நா.க.அரசு தனது தொலைநோக்கு திட்டங்களுடந்தான் தொடந்து பயணிக்கும் என்பதுதான் அந்த பேச்சு. அதாவது நா.க.அரசு பேச்சுவார்த்தைக்கு எதிர் என்பதல்ல. ஆனால் அதேநேரம் பேச்சுவர்த்தையினால் நீண்டகாலத்தீர்வு ஏற்படுத்தமுடியும் என்று நம்பிக்கை வைக்காதது. அதே மாதிரியே சம்பந்தர் அரசு தமிழ் ஈழம் தந்தால் வேண்டாம் என்று கூறவில்லை. அதாவது இந்த பேச்சு வார்தைகளில் அவரால் தமிழ் ஈழத்தை பிரேரிக்க முடியாது. அரசு வைக்க போகும் தீர்விலிருந்துதான் தான் தனது பேச்சுவார்த்தைகளை ஆராம்பிக்க முடியுமென்கிறார். இந்த பேச்சுவார்த்தைகளில் அரசு தமிழ் ஈழத்தை பிரேரிக்காது என்பதால், அவரின் முடிபு தீர்வு பேச்சுவார்தைகளின் போது நாட்டுப்பிரிவினை வராது என்பதே. அவர் அமெரிக்கா வந்தபோது சர்வதேசம் தலையிட்டு தமிழ் மக்களுக்கு நடந்த வன்முறைகளுக்கு ஒரு நீதியைப் பெற்றுதரவேண்டும் என்று கேட்டிருந்தார். அதாவது அவரின் வசனத்தில் இதுவும் ஒரு போர் குற்ற விசாரணையே.

மொத்ததில் நாம் காண்பது நா.க.அரசும் கூட்டமைப்பும் தேவையின்படிதான் நடந்துகொள்கிறார்களே ஒழிய ஒருவரும் வித்தியாசமான திசைகளில் போகவில்லை.

மேலும் பிரேரணைக்காலத்தில், நா.க.அ. சும், கூட்டமைப்பும் ஸ்தாபன அளவுகளில் சேர்ந்தியங்காவிடினும் அங்கத்தவர் அளவில் சேர்ந்துதான் இயங்கினார்கள்.

கூட்டமைப்பு முதலில் அறிவித்தபடி பிரேரணைக்கு வருவதை அரசு தடுத்துவிட்டது. கூட்டமைப்பு இலங்கை அரசின் மிரட்டல்களை வெளிப்படையாக கூறாமல் உண்மைகளை மறைத்துவிட்டது. அதை தொடர்ந்து விளங்க வைக்கவே, பிரேரணையின் வெற்றி தமது ராஜதந்திரம் சரியெனக்காட்டுகிறது என்று அறிக்கை விட்டார்கள். வலம்புரியின் தலைப்பு கூறுவதுபோல் உரிமை கொண்டாவில்லை. வலம்புரியார் கூட்டமைப்பின் அறிக்கையைத் தனது தேவைக்கேற்ப திரிவு படுத்துகிறார்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.