யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,
எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.
யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.
எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.
யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.
விதிமுறைகள்:
- யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
- ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
- கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
- ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
- யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.
"நாமார்க்கும் குடியல்லோம்"
நன்றி
யாழ் இணைய நிர்வாகம்
53 topics in this forum
-
ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலம் பல அழியாத நினைவுகளை நகர்த்திக் செல்கிறது. அவற்றில் பாடசாலைக் காலம் .முக்கியமானவை ..பள்ளித்தோழர்கள் அயல் வீட்டு ..நண்பன் ..உறவுக்கு காரன் ..என பலரும் இருப்பார்கள் . அந்த ஊரின் சற்று வசதியானவர் ...ஸ்டோர் கீப்பர் ..(களஞ்சிய பொறுப்பாளர் ) சுந்தரம்பிள்ளை ... அருகில் இருக்கும் கிராமங்களுக்கான விநியோகப் பொருட்கள் இவரது மேற்பா ர்வையிலேயே நடைபெறும் . மனைவி மூன்று ஆண் மக்களோடு இனிதே வாழ்ந்து வந்தார் .. .மூத்தவன் கேசவனின் நண்பன் ..பக்கத்து வீட்டு பிரேமன். இவர்களின் தந்தை அன்றாடம் கூலி வேலை செய்பவர். அவனுக்கு ஒரு அழகான தங்கையும் இருந்தாள். கேசவனும் பிரேமனும் பாலர் பாடசாலையில் இருந்தே ஒன்றாக கல்வி கற்றார்கள்…
-
- 16 replies
- 2.1k views
-
-
போர்ப்பரிசு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சுமதிபால அங்கேயிருந்த சீமேந்தாலான இருக்கையிலிருந்து வானத்தை வெறித்துப் பார்த்தபடி, தனது முழங்காலைத் தடவிக்கொண்டு பெருமூச்செறிந்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தான். அம்மா! என்ற சத்தம் அவனது சிந்தனையை சிதறடிக்க சத்தம் வந்த திசையைப் பார்க்கிறான். அங்கே வெள்ளைப் பிரம்போடு ஒருவர் எழும்பமுயன்றுகொண்டிருந்தார். அருகே சென்ற சுமதிபால, அவரைத் தாங்கிக் கொண்டு வந்து தானிருந்த இருக்கையில் இருத்திவிட்டு, "வத்துறு பொனவத,, என்று கேட்டான். வெள்ளைப் பிரம்போடிருந்தவர் வேண்டமென்று தலையசைத்தார்.இவனே பேச்சைத் தொடர்த்தான். "கொய்த யன்ன,, என்று கேட்கவும், நான் தமிழ் என்று கூறிவிட்டு அமைதியாக, ஒரு சில மணித்துளிகள் அமைதியாகக் கழிந்தன. சுமதிபாலாவோ கொச்சைத…
-
- 15 replies
- 3.5k views
-
-
அம்மா….இண்டைக்கு வசதிக்கட்டணம் கட்டட்டாம் ! மூன்று வருஷமாய்ப் பணம் கட்டப்படவில்லையாம் !இல்லாவிட்டால், வாற கிழமை சோதினை எழுத விட மாட்டினமாம்! பரீட்சையுடன் சம்பந்தப்பட்டிருத படியால்...அடுத்த சம்பளம் வரட்டும் என்ற வழமையான பதிலை...அம்மாவால் சொல்ல முடியவில்லை! சரியப்பு...அப்பாவிட்டைச் சொல்லுறன்! ஏன் தான் வசதிக்கட்டனம் எண்டு பேர் வைச்சிருக்கினமோ தெரியாது! வச்தியில்லாததுகளிட்டையும் பலவந்தமாய்ப் பறிக்கினம்...என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் அம்மா! அன்று காலை அப்பா கொஞ்சம் வழமைக்கு மாறாகக் கடு கடுப்பாகவே இருந்தார்! அவர் ஒரு ஆசிரியர்! அம்மாவும் ஒரு ஆசிரியை! அவர்களது சம்பளத்தில் தான் ஐந்து பேரைக்கொண்ட குடும்பம் நடத்தப்பட வேண்டும்! தனது விரலுக்கு மேலால கொஞ்சம்…
-
- 17 replies
- 3.1k views
-
-
கிராமத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் பல சுக போகங்கள் நகரத்து மக்களுக்கு கிடைப்பதில்லை.அதிலே ஒன்றை எடுத்து விடலாம் என்று தொடங்குகின்றேன். எந்தக் காலங்களாலும் சரி ஏதோ ஒரு திருவிழா சன சமூக நிலையம் திறப்பு விழா அல்லது ஆண்டுவிழாஎன்று ஏதோ ஓர் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.கோவில்களில் திருவிழா தொடங்கினால் கொடியேற்றத்தில் இருந்து பூங்காவனம் வரைக்கும் ஏட்டிக்கு போட்டியாக சிகரம்கள் கட்டி பெரிய மேளம் சின்னமேளம் கண்ணன் கோஸ்டி என்று விடிய விடிய கூத்துக்கள் நடக்கும்.இந்தக் காலங்களில் ஒவ்வொரு திருவிழாகாரரினதும் கூத்துக்களை விலாவாரியாக அச்சடித்து கார்களில் ஒலி பெருக்கி கட்டி காலையில் இருந்து மாலை வரை இடை இடையே பாட்டு சத்தங்களின் நடுவே அன்றைய நிகழ்ச்சி நிரலையும் சொல்லிக் கொண…
-
- 44 replies
- 7k views
- 1 follower
-
-
1 அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? அனைத்துலகப்பெண்கள்நாள் ஆண்டுதோறும் சிறப்பாக, உலகெங்கும் கொண்டாடப்பட, அழுவதே நாளாந்த வாழ்வாகிப்போன அவலம் சுமக்கும் பெண்கள் உலகம் ஒன்று உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உறவுகள் தொலைத்தவர் துயரை எத்தனைபேரால் புரிந்திட முடியும்? இழப்புக்கள் தரும் வலிகளோடு அனுதினமும் போராடி போராடி, அழுவதைத்தவிர வழியே இல்லாமல் அல்லாடி அல்லாடி அவலம் சுமக்கும் எங்கள் தாயகப்பெண்கள் நிலை எத்தனை பேருக்கு தெரியும்? வாழ இடமின்றி தத்தளித்து தவித்து உயிரே போனாலும் சரி எம் நிலம் மீட்க எமக்காக நாமே போராடுவோம் என தனித்து நின்று போராடும் எங்கள் மண்ணின் பெண்கள் அன்றாடம் படும் அவலங்கள் எ…
-
- 11 replies
- 1.4k views
-
-
அழகோ அழகு பள்ளிச் சிறுமி பருவம் அடைந்ததும் பேரழகு பருவப் பெண் மண மேடையில் இன்னும் அழகு மணப்பெண்ணுக்கு மாலையிடட மணமகன் அழகு மணமக்களுக்கு முதற்குழந்தை பரிசு பெற்ற அழகு அழகுக்கு குழந்தையின் மழலை ப் பேச்சு அழகு தத்தி த்தவளும் மழலையின் முதலடி அழகு தத்தி நடைபயிலும் மழலையின் ஒவ்வொரு அசைவும் அழகு அழகுக்கு அழகு சேர்க்கும் பெண் குழந்தை இன்னும் அழகு புரிந்து நடக்கும் மனையாள் ஆடவனுக்கு அழகு பெற்றோருக்கு முதற் குழந்தை பெருமித அழகு என் பையன் என் பொண்ணு என்ற அப்பாக்கு கர்வம் கொண்ட அழகு ஆண் பிள்ளையும் ப…
-
- 6 replies
- 5k views
-
-
இந்த தலைப்பைப் பார்க்கும் பலருக்கு இதில என்ன புதினம் இருக்கு என்று நக்கல் நழினமாக பார்க்கலாம். ஆனால் என்னோடு ஒத்த வயதினருக்கு இந்த லோங்ஸ்இன் வலி புரிந்திருக்கும். ஏறத்தாள 45 வருடங்கள் முன்பாக யாரும் நினைத்த நேரத்தில் இந்த லோங்சை மாட்ட முடியாது.அதை மாட்டுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று இருந்தது. பாலர் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை சந்தோசமாக போகும் பள்ளி வாழ்க்கை ஜீசிஈ எனும் பரீட்சையில் வந்து தடம் புரழும். இதுவரை அரைக் காற்சட்டைளோடு சுதந்திரமாக திரிந்தவர்கள் இந்த பரீட்சையில் சித்தியெய்தினால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பு மாத்திரமல்ல எதிர் காலமே சூனியமாகிவிடும். இந்த சோதனைகளில் சித்தியடைந்தவர் மட்டும் புதிதாக லோங்ஸ் மா…
-
- 52 replies
- 4.7k views
- 2 followers
-
-
இது ஒரு பொன் மாலைப்பொழுது….. என் முன் ஆளுயர நிலைக்கண்ணாடி உற்றுப் பாா்க்கிறேன் இது நானா? இதில் தொியும் விம்பம் என்னதா? அடடா, காலம் என்னையும் எனது இளமையையும் எத்திப் பறித்து விட்டதா? தினமும் பாா்க்கும் கண்ணாடிதான் ஆனாலும் இன்றுபோல் பாா்க்கத் தவறி விட்டேனா? மீண்டும் கண்களை இடுக்கி நிதானமாக உற்றுப் பாா்க்கிறேன் சந்தேகமில்லை இது என் உருவம் தான் முகத்தில் சுருக்கம் முடி அடியில் வெண்மையின் நெருக்கம் துடிப்பும் துள்ளலும் ஆடங்கிய கை கால்களில் சிறிது நடுக்கம் அத்தனை விடயங்களையும் அட்டவணைப்படுத்தும் என் ஞாபகச் சிறகுகளில் சற்று…
-
- 17 replies
- 3.5k views
- 1 follower
-
-
ஏகாந்தமாய் இம்மாலையில் அன்பே, உன் தோள் சாய நான் தூங்காமல் காத்திருக்கிறேன் தூக்கத்தில் மட்டுந்தான் நீ வருவாயா? நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் நீ விழி மூடிக்கிடக்கிறாய். நான் விழி மூடும் நேரமெல்லாம் என் விழிகளுக்குள் நடக்கிறாய் இருவரும் சேர்ந்தே நடப்பதுவும் சேர்ந்தே விழிப்பதுவும் எப்போது? பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எம்மால் மட்டும் முடிகிறது. உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள் மனதிற்கும் உண்டு முடிவே இல்லாத வாழ்வும் பிரிவே இல்லாத உறவும் என்றுமே இருந்ததில்லை இருந்தும் ஏகாந்தத்தை இரசிப்பதுவும் நேசிப்பை ருசிப்பதுவும் எமக்குப் பழக்…
-
- 7 replies
- 1.3k views
-
-
இருட்டடி பாகம் - 1 எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த ஒரு சாதாரண கிராமம். எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது. ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற்…
-
- 66 replies
- 5.9k views
-
-
விவசாயம் செய்வதற்குப் பல முறைகள் இருந்தாலும் எமது நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வதற்கு மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமாகக் கருதியதால் hugelkultur முறையைப் பற்றி எழுதுகிறேன். அதுமட்டுமல்லாது இம் முறையானது Permaculture எனப்படும் இயற்கை உணவுச் சுற்றை அண்டியதாகவும் உள்ளது. இப் பதிவின் இறுதியில் எனது குறுகிய hugelkultur பயிற்செய்கை அனுபவத்தையும் எழுதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால் hugelkultur முறையானது மரக் கிளைகள அடுக்கி மண்ணினால் மூடி அதன்மேல் பயிரை வளர்த்தலாகும். விரிவாக இது பற்றிக் குறிப்பிடும் முன்னர் இதன் பலன்களைப் பற்றிப் பார்த்தால் இப் பதிவை வாசிப்பதற்கு ஆர்வம் உண்டாகலாம். இயற்கை, இயற்கை, … இலவசம். குறுகிய இடத்தில் பயிர் நடப்படும் நிலப்பரப்பை அதிகர…
-
- 17 replies
- 4.1k views
-
-
ஈரநிலா உயிர் சுற்றிவர சிதறி விழுந்ததுபோலும், வழி தவறிய மூச்சு திகைத்து அப்படியே உறைந்ததுபோலும், இரத்தநாளங்களில் அதிர்வுகள் அடர்ந்ததுபோலும், விவரிக்க முடியாத வகையில் பிரித்தறியும் உணர்வு உறைந்ததுபோலும்…….. அந்தக் கணம் ஆட்டிப்படைத்தது. இதுவரை மானுட உணர்வில் அறியாத களேபரமாக மீனாவின் ஆன்மா தவித்தது. கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி. ஒலி எழுப்பும் புலன் இல்லாத இடத்தில் வலி செய்தால் என் செய்யும்? அப்படி ஒரு நடப்பு அவ்விடத்தில் அரங்கேறியிருந்தது. இக்கொந்தளிப்பின் அடியில் கலங்கி ஓலமிட்டபடி மீன…
-
- 39 replies
- 3.1k views
- 1 follower
-
-
ஈஸ்டர் கவிதை பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய் ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன் இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய் நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால் நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர் வீணே வழிதவறிச் சென்றிடாமலே - எந்தன் வௌ்ளாட்டு மந்தைக்குள்ளே வந்திணைகுவீர் செய்திட்ட பாவெமெ்ல்லாம் கொண்டுவருவீர் - எந்தன் சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர் உய்ய மனந்திரும்பி வாருமன்பரே - நான் உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன் பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப் பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர் தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய ஜீவன் உமக்குண்டு நீள் புவியிலே ஆக்கினையை உங்களுக்காய் அனுபவ…
-
- 7 replies
- 5.1k views
-
-
உயிரே! உனக்கேன் என்னோடு பந்தம். .? வசந்தங்கள் உன்னோடு சொந்தம். எனக்கேன் உன் மீது மோகம் ...? இந்த விடை தெரியாத வினாக்கு விடை தேடலே என் வாழ்க்கையாய்போனது. நீ சில வேளைகளில் கண்ணைக் சிமிட்டும் போது ! அந்த நொடி சிதறி கிடந்த என் கவிதைகள் எழுந்து தடுமாறின. உன் விழிகள்இரண்டும் பேசியதால் என் உதடுகள் ஊமையானது. என் இதயம் ! உன் நினைவுகளை கூவிச் சென்றது. விடைபெறும் தருணத்தில் உன்னிடத்தில் சொல்ல விட்டு போகின்றேன். ஆனால் ! என்னுடன் வர மறுக்கின்றது. என் மனசு.......... நரகவேதனை என்றால் என்ன? என்பைத அப்போதுதான் உணர்கிறேன், அந்த நொடி என் மெளனங்களை படித்து பார். ஓராயிரம் அர்த்தங்களை செல…
-
- 1 reply
- 1.5k views
-
-
என் முதலாவது காதலியே...! உன்னை நெஞ்சோடு…, இறுக்கமாக அணைத்த நாள், இன்னும் நினைவிருக்கின்றது! நீ…,! எனக்கு மட்டுமே என்று.., பிரத்தியேகமாக... படைக்கப் பட்டவள்! உனது அறிமுகப் பக்கத்தில், எனது விம்பத்தையே தாங்குகிறாயே! இதை விடவும்…,, எனக்கென்ன வேண்டும்? உனது நிறம் கறுப்புத் தான்! அதுக்காக…., அந்தக் கோபாலனே கறுப்புத் தானே! அதுவே உனது தனித்துவமல்லவா? உன்னைப் பற்றி…, எனக்கு எப்பவுமே பெருமை தான்! ஏன் தெரியுமா? ஜனநாயகமும்...சோசலிசமும், உடன் பிறந்த குழந்தைள் போல.. உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!, உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது? என்னவ…
-
- 11 replies
- 2.6k views
-
-
உன்......... கதவில்லாதா ...... உறங்கும் அறைபோல் ...... என் இதய அறைக்குள் .... நீ .................................! உன் .......... கூந்தல் காற்றில் ஆடும் ...... கண பொழுதெல்லாம் ....... இதயம் படும் வேதனையை ....... எப்போது அறிவாயோ ......? உன்னை நினைத்து ....... எழுதும் கவிதையை ....... காதல் தெரியாதவர்கள் ....... காதல் பித்தன் என்பார்கள் ...... உனக்கு புரிந்தால் போதும் ..... நான் உன் காதல் சித்தன் .......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய்
-
- 21 replies
- 4.2k views
-
-
ஒரு சாதாரண பயணம் இது கதையுமில்லை கத்தரிக்காயுமில்லை - எனது பல பயணங்களில் இதுவும் ஒன்று. இது முதற் தடவையும் இல்லை, இறுதியும் இல்லை - ஆனால் தொடரும் எனது பயணங்களில் ஒன்று. இங்கு இதே முறையில் பலதடவைகள் வந்திருந்தாலும், ஒவ்வொருமுறையும் புதிய அனுபவங்கள் + புதிய மனிதர்கள். முதற்தடவையாக பகிர்கின்றேன். பல பெயர்களை தவிர்த்துள்ளேன். கற்பனை கலக்காத ஒரு பதிவு இது. புதன் கிழமை மச்சான் நான் முதலாம் திகதி திரும்புறன் எப்படா வாறாய்? - தொலைபேசியில் ஒரு கதறலா அதட்டலா என்று புரியாத நண்பனின் குரல். இவனை சமாளிப்பது இலகுவான விடயமில்லை என்று எனக்கும் தெரியும். சிலவேளைகளில் அன்பினால் அதட்டுவதும் அதிக உரிமை எடுப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. மச்சான், எனக்கு கொழும்ப…
-
- 36 replies
- 3.6k views
-
-
அன்புள்ள அக்கா இது உங்களுக்கு நீங்கள் இதுவரை முகம் அறியாத உங்கள் தம்பிகளில் ஒருவன் எழுதுவது. காலங்கள் தம் சுவடுகளை பதிந்துவிட்ட அப்பால் நகர்ந்து செல்கின்றன. மனிதன் தன் வாழ்வின் எச்சங்களை இந்தப் பூமிப்பந்தில் விட்டே அப்பால் சென்றுவிடுகின்றான். அந்த எச்சங்கள் பல்கிப்பெருகி விழுதுகளாகிப் படர்ந்து இந்தப்பாரெல்லாம் பரவிக் கிடக்கின்றன. விரிந்த மணற்பரப்பில் பதிந்திருக்கும் அழகான ஆழமான சுவடுகளைத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். இடையிடையே அள்ளி வீசிய காற்றின் வேகத்தால் சுவடுகள் அழிந்து போயிருந்தன. சில தேடல்களின் பின்னர் அந்த அழகான சுவடுகள், என்மனதின் எதோ ஒரு மூலையில் உறங்கி கிடந்த அந்த ஆழமான சுவடுகள் அந்த மணற்பரப்பில் மீண்டும் என் கண் முன்னே தோன்றின.…
-
- 18 replies
- 2.7k views
-
-
சபிக்கபட்ட இனமென்று தெரிந்திருந்தும் உன்னை நிமிர்த்திட நான் துடித்தேன். யாருக்கும் கிடைக்காத பொக்கிசமாய் அர்சுனனை மீண்டும் உன் குடியில் பிறக்கவைத்தேன்! ஆயிரம் ஆயிரம் அபிமன்யூக்களை உனக்கென்று கொடுத்து வைத்தேன்! சதுரங்க ஆட்டத்தின் வித்தைகள் தெரிந்தவனை உன் கூட்டத்தின் தளபதியாக்கினேன்! சுதந்திரத்தின் வாசம் புரியட்டும் உனக்கு என்று பறவைகளை உன் வாசலுக்கு அனுப்பி வைத்தேன்! நல்ல எண்ணங்கள் புத்தியில் வரட்டுமென வாசனை மலர்களை உன் வீட்டு வாசலில் வைத்தேன்! கிடுகு வேலிக்குள் சண்டியனாய் நீ வளர்ந்தாய்! வடக்கென்றும் கிழக்கென்றும் தீவென்றும் பிரிவுகள் பல பேசி கோமணமும் இல்லாது அம்மணமாய் நீ…
-
- 13 replies
- 1.2k views
-
-
கைபேசியில் அலாரமாக இந்த அழகான பாடல் காற்றில் மிதந்து காதில் வருட இன்று என்னவோ காலையில் எழுந்திருக்க மனமில்லாமல் மிகவும் அசதியுடன் தன் அதிகாலை பணிகளை நினைத்தவாறே திரும்பி நேரத்தை பார்க்கின்றாள் வைதேகி. இன்னும் சிறிது நேரம் செல்ல எழும்பலாம் என்று நினைத்து திரும்பி படுக்கும் போது அவளின் மன ஓட்டம் 30 வருடங்களை பின்நோக்கி இழுத்துசெல்கின்றது. என்ன அழகான ஒரு வாழ்க்கை! சிட்டுக்குருவிகளை போல் நண்பிகளுடன் சிறகடித்து எந்த கவலையும் இல்லாமல் பாடசாலை, மாலைநேர வகுப்பு என்று இனிமையான காலங்கள். அந்த இனிமைக்காலத்தில்தான் தன்னோடு படித்த வாமனை சந்திக்க நேர்ந்தது. அவனின் அமைதியும் அறிவும் இவளை காதலில் விழவைத்தது. அதே போன்று வாமனும் வைதேகியின் அன்பான குணத்தாலும் அழகாலும் தைதேகி மேல் கா…
-
- 26 replies
- 3.5k views
-
-
இரும்பாய் கனத்த என் இதயம் துடுப்பிழந்த படகைப்போல் அலைகளால் இழுத்து செல்லப்பட்டு அன்னிய தேசத்தில் அனாதையாய் எங்கெங்கோ புலப்படும் ஒளி இழந்த மின் விளக்குகள் போல் தெரிகிறேன் கொஞ்சம் கொஞ்சமாய் ! என்னுள் அன்று இழந்தவையோ இருக்கின்றன இன்னும் அணையாமல் நினைவெனும் நினைவிடத்தில் ! என் நிதர்சனத்தின் நீண்ட பயணத்தில் நீங்காது நீள்கின்றன நீறு பூத்த ஆறாத ரணங்களாய் எட்டாண்டின் நினைவுகள் ! காலச்சுழற்சியில் கற்பனைகளும் கலைந்துப்போக வன்னி மண் நினைவுகள் மட்டும் என் உணர்வை விலை பேசியதாய் ஏன் தானோ நிலையாய் நிற்கின்றன? உணர்வுகள் உருக்குலைந்தன உறவுகளும் உடைந்துபோகின நிதானமான என்னை நிர்கதியாக்கின அன்றைய நாள்... என்னை நித்தமும் ந…
-
- 4 replies
- 2.6k views
-
-
பாடசாலை முடிவதற்க்கான மணிச்சத்தம் எப்படா கேட்க்கும் என்று இருந்த மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடியே வெளி வாசலை நோக்கி ஓடினார்கள்.துர இடம் போகிறவர்கள் அருகில் வீடு உள்ளவர்கள் என்று பேதம் இல்லாமல் பாடசாலைக்கு முன் உள்ள சைக்கில் கடையில் கூடி விடுவார்கள்.சைக்கிளுக்கு காத்தடிக்வோ அல்லது லைக்கில் திருத்தவோ இல்லை அந்தக்டையில் விற்க்கும் குச்சி ஐஸ பழம் வாங்கத்தான் இவளவு வேகமும்.50 சதம் விற்க்கும் அந்தப்பழத்தை வாங்கிக் முழுவதுமாக குடித்து முடிப்பதற்குள் அரைவாசி கரைந்து ஓடி விடும்.கரைந்தது உருகியது எல்லாம் நக்கி முடிந்து வீதியோர தண்ணிக்குளாயில் கையை களுவிய பின் தான் தங்கள் வீிடு நோக்கி செல்வார்கள்.இவளவு கூத்துக்களையும் ஓர ஓரமாக நின்று எக்கத்துடன் பாத்துக்கொன்டிருப்பான் பாபு.காரனம் …
-
- 27 replies
- 6.7k views
-
-
************ சிறு பருவத்திலிருந்து ஒரு பழக்கம் அதை பழக்கமென்பதைவிட கணிப்பு என்று சொல்லலாம் ஒருவர் குடித்திருந்தால் அவருடன் எந்த பேச்சுவார்தையும் அன்று வைப்பதில்லை. இது எனது தகப்பனாரின் குடிக்குப்பின்னாலான நடவடிக்கைகளை பார்த்து வந்து அதன் பின் நண்பர்கள் உறவுகள் என தொடர்ந்து வந்திருக்கிறது எல்லோரது செயலும் எனது கணிப்புக்கு உரமேற்றியிருக்கின்றனவே தவிர ஒரு போதும் வலுவிளக்கச்செய்ததில்லை. நான் தான் இப்படியான கணிப்பு வைத்திருக்கின்றேன் என்றில்லை குடிப்பவர்களே மற்றொரு குடிப்பவரை பார்த்து இவ்வாறு தான் சொல்கிறார்கள் எமது சமுதாயமும் இப்படித்தான் ஒரு கணக்கு போட்டு வைத்துக்கொள்கிறது எனது தகப்பனார் என்னிடம் ஒரு முறை சொன்னார் …
-
- 22 replies
- 2.4k views
-
-
கோபம் காலையில் காபி சூடாயிருந்தால் கோபம் பஸ் வண்டி க்கு காத்திருக்கும் போது ஒரு வகை எரிச்சல் உடனான கோபம் . வேளைக்கு உணவின்றேல். புகைச்சலுடன் கோபம். ஏழைக்கு இறைவன் மீது கோபம் குழந்தை சிந்தும் உணவின் மேல் கோபம் குழந்தையின் முரண்டு பிடித்தால் கோபம் உதட்டு அருகே வரும் உணவு கீழே சிந்திய கோவம் எரியும் அடுப்பில் காஸ் தீர்த்து விடடால் கோபம் .. ஆழ்ந்த உறக்கத்தில் அலாரம் மீது கோபம் விரும்பியது கிடை க்கா விடடால் கோபம் . காத்திருக்கும் அவள்/அவன் வராவிடடால் கோபம் . பந்தி உணவில் கடைசி வரி கிடைத்தால் கோபம் பசி வேளையில் உணவின்றேல் கோபம் நீண்ட வரிசையி ல் குற…
-
- 15 replies
- 2.5k views
-
-
ஆனந்தம் விளையாடும் வீடு இது ஆனந்தம் விளையாடும் வீடு 5 அன்றில்கள் ஒன்றான கூடு இது தான் அவர்களால் அவர்கள் வீட்டில் அநேகம் பாடப்பட்ட பாடல். அன்பான அம்மா அடித்தே இருக்காத அப்பா வசதியான நாடு திறமையான பிள்ளைகள் மேல் படிப்புக்கள்...என எல்லாமே நன்றாகவே போய்க்கொண்டிருந்தன பட்டப்படிப்பு முடிக்கும் தருணம் அவனுக்கு காதல் ஒன்று அரங்கேறியது சாதி வந்து குறுக்கிட்டது குடும்பம் சின்னாபின்னமாகியது தகப்பனார் கோமா நிலையில் வைத்தியசாலையிலிருந்தார் கோமா நிலையிலிருந்த தகப்பனை காட்டி அவர் பெற்ற பிள்ளை பாசமாக வளர்ந்த வளர்த்த படித்த பிள்ளை சொன்னது சாதி வெறியன் ஒருவன் சாகக்கிடக்கிறார் என்று.
-
- 14 replies
- 1.4k views
-