Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் -------------------------------------------------------------- தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது. அடர் சிவப்பு – cramoisy அடர் நீலம் - perse / smalt அடர் மஞ்சள் - gamboge அயிரை/ அசரை - sandy colour அரத்த(ம்) (நிறம்) - heliotrope / haematic அருணம் - bright red, colour of the dawn; அவுரி(நிறம்) - indigo அழல் நிறம் – reddish colour of fir…

  2. 'மல்’ என்றால் வலிமை எனப்பொருள். வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி மலை எனப்பட்டது. மலையையும் மலை சார்ந்த இடத்தையும் குறிக்குங் திணை-குறிஞ்சித் திணை மிக உயர்ந்த மலை - மிசை/ விண்டு - very high mountain விண்டு - விண்ணளாவிய மலை நாட்டின் குறுக்காக உள்ள மலை - விலங்கல் - blocking mountain ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காகப் பாறைகள் அமைந்திருக்கும் மலை - அடுக்கல்- mountain as stratified. மூங்கிற்காடுகள் உள்ள மலை -வரை மிக நீண்ட மலைத்தொடர் - நெடுவரை (இங்கு வரை என்றால் பொதுமலை) காடுகள் அடர்ந்த மலை - இறும்பு - foothill மரங்கள் அற்ற, ஓரளவு சிறிய புதர்களைக் கொண்ட மலை - பிறங்கல் பனியால்(dew) மூடப்பட்டிருக்கும் மல…

  3. தமிழ் அறிக - 1 கையெழுத்தும் தலையெழுத்தும் சகாயம் பற்றிய இரண்டாம் கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர் அதில் கையாண்டிருந்த இரு சொற்கள் குறித்து வினவினார். அவரது முதல் வினா கையெழுத்து , கையொப்பம் ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதாகும். இன்று பேச்சு வழக்கில் Hand writing , signature ஆகிய இரண்டு பொருள்களுக்கும் கையெழுத்து என்னும் ஒரே சொல்லைக் கையாள்கிறோம். அது சரியல்ல. 'புரியாத மாதிரி அவன் கையெழுத்து இருக்கிறது', 'புரியாத மாதிரி அவன் கையெழுத்துப் போடுகிறான்' இந்த இருதொடர்களிலும் வெவ்வேறு பொருள்களில் கையெழுத்து என்னும் சொல் வருகிறது. 'கையெழுத்துப் போடுதல்' என்று வந்துவிட்டால் அது Signature எனப் புரிந்துகொள்கிறோம். ஆனால் கையொப்பம் என்பதுதான் அதற்குச் சரி. வெவ்…

  4. இன்று எம்மிடையே வழக்கில் உள்ள தாய் மொழியாம் தமிழ் மொழியின் எழுத்து உருவங்களில் மாற்றங்கள் அத்தியாவசியமானவையா ?? இல்லையா ?? என்பது ஓர் விவாதத்துக்குரிய பொருளாகின்றது . பிராமி எழுத்துக்களில் தொடங்கிய தமிழின் வரிவடிவம் , வட்டெழுத்தில் ஊடறுத்து பாய்ந்து இன்று யூனிகோட்டில் வரை பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளபொழுதும் , வரிவடிவங்களில் தமிழ் தனது தனித் தன்மையை இழந்திருக்கவில்லை . அனால் வரிவடிவத்தில் மாற்றங்கள் வந்தாலே தமிழ் மொழி மேலும் வளர்ச்சி அடையும் என்ற கருத்துக்களும் இப்பொழுது எழ ஆரம்பித்திருக்கின்றன . அண்மையில் வெளிவந்த ஓர் ஆய்வுக்கட்டுரை இந்த விடையத்தைத் தொட்டுச் செல்கின்றது . அதை உங்களுடன் பகிருகின்றேன் கள உறவுகளாகிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் . நேசமுடன் கோ…

  5. முந்தையபகுதியின் சுழியத்திலிருந்து அடுத்த எண்களுக்கு போகமுதல் தமிழ் எண்களைப்பற்றி பார்த்துவிடுவோம். இதன் முன்னைய பதிவிற்கு இங்கே கிளிக்... தமிழ் எண்களானவை தமிழ் மொழியின் எண் குறிகளும், அவற்றின் பயன்பாடுகளும்,அளவை முறைகளுமான பரந்ததான ஒரு எண் வழக்காகும். தமிழ் எண்கள், தமிழுக்கு தனித்துவமானவை. பெரும்பாலும் தமிழ் எழுத்துக்களை ஒத்துள்ள தமிழ் எண் குறியீடுகள் தற்போது பயன்படுத்தப்படாமல், தமிழ் எழுத்துக்களோடு இந்தோ அராபிய எண் குறியீடுகளே பயன்படுகின்றன. தமிழ் எண்களின் சிறப்பான அம்சம் என்னவென்றால் அந்த எண் முறைகள் பயன்படுத்கப்பட்ட காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்க முடியாத பின்ன அளவுகளுக்கும்,பேரெண்களுக்குமேல்லாம் பெயர்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக பலகாலமாக பயன்பட்ட…

  6. பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று பழமொழிக்கு பல அர்த்தங்கள் உண்டு இது வரை நான் அறிந்த பழமொழிகளை பாட்டியின் பழமொழியும் சங்கவியும் என்றும் பழமொழி என்றும் இருபதிவாக பதிவிட்டுள்ளேன். இப்பதிவில் நான் படித்த பலமொழிகளை தொகுத்துள்ளேன். பழமொழி என்றால் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு…

    • 2 replies
    • 9.5k views
  7. நாட்டுப்புறப்பாடல்கள் வாய்மொழியாகவே மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் தற்காலத்தில் பெருமுயற்சிகள் எடுத்து எழுத்துவடிவில் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. குறிப்பாக நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான, சிறுவர் பாடல்கள் தற்காலத்தில் தேய்ந்து அருகி வருகின்றன. இதற்குக் காரணம் சிறுவர்கள் தம்விளையாட்டு எண்ணம் மறக்கப்பெற்று அவற்றிக்கு நேரமும் வாய்ப்பும் இல்லாமல் போனது என்பதே ஆகும். சிறுவர்கள்தம் விளையாட்டு எண்ணம் தொலைக்காட்சி, கணினி விளையாட்டு ஆகியவற்றால் கவரப்பெற்று விளையாட்டு, ஆடல், பாடல், விடுகதை போன்றவற்றிற்கு நேரம் இல்லாமல் போயிற்று. விளையாட்டைக் காண்பவர்களாக மட்டுமே இக்காலக் குழந்தைகள் வளர்ந்து வரும் இவ்வகை குறைவதற்கான காரணம் ஆகும். மேலும் பள்ளிகளில…

  8. இன்று ஏதோ தேடும்போது இதை வாசிக்கக் கிடைத்தது உங்களுடனும் பகிர்கிறேன். நன்றி மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள்.. நான் வலைப்பதிவுக்கு வந்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்ட மலையக நாட்டுப்புற பாட்டு... எனும் மீண்டும் இடுகையிடுகிறேன். நான் வலைப்பதிவுக்கு பிரவேசித்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்டதனால் இந்த மலையக நாட்டுப்புறப் பாடல்கள் பலரைச் சென்றடைந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதனாலே மீண்டும் பதிவிடுகிறேன். தமிழருக்கென்று ஒரு தனித்துவமான கலை,கலாசார, பாராம்பரியங்கள் இருக்கின்றது.அவற்றில் குறிப்பாக தமிழர்களது கலைகள் தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைநத ஒன்றாக காணப்படுகின்றது. தமிழருக்கே தனித்துவமான பல கலைகள் இருக்கின்றன. அதிலும் கிராமங்கள்…

    • 3 replies
    • 9.4k views
  9. அறிவோம் நம் மொழியை: போக வேண்டிய தூரம் ஒரு மொழியின் தொன்மை எவ்வளவு பெருமைக்குரியதோ அதே அளவுக்கு அதன் இளமையும் பெருமைக்குரியது. மொழியில் இளமை என்பது சமகாலத்துடன் அதற்கு இருக்கும் உயிரோட்டமுள்ள உறவைக் குறிப்பது. தொன்மைச் சிறப்பு மிக்க தமிழ் மொழி எந்த அளவுக்கு இளமையாக இருக்கிறது? இன்றைய சூழலில் தமிழை எப்படி அணுகுவது? மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கேற்பத் தமிழை எப்படிப் பயன்படுத்துவது? உலகின் எல்லா அறிவுத் துறைகளும் தமிழில் வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றனவா? அன்றாட வாழ்வில் தமிழின் இடம் என்ன? உலக நடப்புகளைப் புரிந்துகொள்வதில் தமிழின் திறன் என்ன? அந்த விஷயத்தில் ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழ் எங்கே இருக்கிறது? …

  10. வணக்கம், இது தமிழ் மொழியின் தொன்மையும் அதன் பரம்பலும் பற்றிய ஒரு ஆய்வு காணொளி. இதுபற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி.

  11. கண்ணதாசன் காப்பியடித்தானா? அப்துல் கையூம் அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is a Copy-cat” என்ற அவதூறை எடுத்துப் போட்டுச் சென்றார். அவருடைய ‘மேதாவித்தனம்’ எனக்கு எரிச்சலை ஊட்டியது. யாரோ புரிந்த வாதத்தை அரைகுறையாகக் கேட்டுவிட்டு இப்படி ஒரு தப்பான ஒரு முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். ஒன்று, இவர் கண்ணதாசனை முற்றிலும் அறியாதவராக இருக்க வேண்டும் அல்லது ‘காப்பி’ என்பதன் பொருள் என்னவென்று தெரியாதவராக இருக்க வேண்டும். சொல்ல வந்த கருத்தை தமிழில் கூட சொல்லத் தெரியாத ஒருத்தரிடம் போய் நான் என்ன தர்க்கம் செய்ய முடியும்? அந்த இடத்த…

  12. தமிழர் திருமண முறை-அன்று முதல் இன்று வரை - ச.மாடசாமி குடும்பமும் திருமணமும் ""இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள். அதன் காரணமாய் எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள் இருப்பது போலவே உணர்கிறார்கள்''! என்பது உளவியல் அறிஞர் ஆலன் ரோலண்ட் கருத்து. "வனத்தில மேஞ்சாலும் இனத்தில வந்து அடையணும்" என்ற தமிழ்ச் சிந்தனை அவர் கூற்றை நிரூபிக்கத்தான் செய்கிறது. அவரவரினன் குடும்பம் அவரவருக்குள் ஒண்டிக் கிடக்கிறது.தூரங்களால்-நாகரிகங்களால்-சொந்தக்குடும்பத்திலிருந்து பிரிந்து கிடப்பவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. குடும்பத்தின் பிடிமண் எல்லோருக்குள்ளும் கொஞ்சம் கிடக்கிறது. வீட்டுக்குள் பண்பாட்டுப் பிரச்சினை தோன்றும் போதெல்…

  13. இடக்கரடக்கல் என்பது பேச்சு வழக்கில் நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் ஒரு தகுதி வழக்கு. இடர்பாடாகத் தோன்றும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் குறிப்பிடும்போது அதற்குரிய இயல்பான சொற்களைக் கொண்டு நேரடியாகக் கூறாமல், நாகரிகம் கருதி மாற்றுச் சொல் கொண்டு குறிப்பிடுவது இடக்கரடக்கல் என்பதாகும். இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது. இடக்கர்+அடக்கல் => இடக்கர் என்பது “சொல்லத்தகாத”, இடக்கு அடக்கல் என்பது “அடக்கி” அவையில் அல்லது பிறருக்கு மத்தியில் சொல்லத்தகாத சொல்லைக் கூறாமல் அதை அடக்கி, அதற்குரிய மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துதல். அதாவது ‘நாசுக்காக’ …

  14. சங்கத் துறைமுகம் - முசிறி முன்னுரை ஒரு நாட்டில் கடல் வணிகம் அதன் துறைமுகங்களைப் பொருத்தே அமையும். சாதகமான காற்று, இயற்கையானத் துறைமுகங்கள், பாதுகாப்பான வணிகநிலை, ஆதரவான அரசுகள், தேவையான கச்சாப்பொருள்கள், நெகிழ்வான வரிவிதிப்பு முறை போன்றவை வணிகத்திற்குச் சாதகமான அம்சங்களாகும். அவற்றில் மிகவும் இன்றியமையாதது இயற்கையான துறைமுகங்களேயாகும். தமிழ்நாட்டில் இவ்வாறான இயற்கை துறைமுகங்கள் மிகவும் குறைவு. இருந்த போதிலும் பழந்தமிழ் சேரநாட்டில் உள்ள துறைமுகங்கள் தம் வணிகத்தினால் சிறப்பிடம் பெற்றன. முசிறி, தொண்டி போன்ற சிறந்த துறைமுகங்களின் புகழ் உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது. சேர நாட்டில் கிடைத்த வாசனைப் பொருட்களான மிளகு (Pepper) போன்றவையே அவர்களின் உலகளாவிய வணிகத்திற்…

  15. தமிழர் புலமை -- யாப்பிலக்கணம் பல டுப்பாகூர்கள் புது கவிதை என்ற பெயரில் சகட்டுமேனிக்கு அள்ளி தெளித்தாலும் .. சிலவற்றை மற்றும் ரசிக்க முடிகிறது.. உண்மையில் கட்டுடைத்தல் .. பில்டிங்க் உடைத்தல் போல ... பலது கண்றாவியாக இருக்கிறது... தமிழ் இலக்கியம் 6 வகுப்பு முதல் துணைபாட நூல் ஆக கல்லூரி இளநிலை (BSC BCA BA BCOM)இரண்டாம் வகுப்பு வரை தனி பாடபகுதி வருவதால் .. பலருக்கு யாப்பிலக்கணம் பற்றி அறிய தர வேண்டியுள்ளது... அப்போதான் ஒழுங்காக பாடல்களை தருவார்கள்.... யாப்பு இலக்கண அறிமுகம் இலக்கியங்களை இயற்றும்போது இரண்டு வகையானஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றதுஉரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும்செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இ…

  16. நினைவு கூர்தலா, நினைவு கூறுதலா ? எது சரி ? நினைவு கூறுதல், நினைவு கூர்தல் என்னும் இருவகையான தொடர்களுக்குள் குழப்பம் வருகிறது. “என் இளமைக் காலத்தை நினைவு கூறுகிறேன்” என்று எழுதுவதா ? “என் இளமைக் காலத்தை நினைவு கூர்கிறேன்” என்று எழுதுவதா ? அத்தொடரின் பொருள் என்ன ? ஒன்றினை ஆழ்ந்து நினைத்துப் பார்க்கும் செயல் என்று தெரிகிறது. நினைவு மேலோட்டமானதாக இருக்கும்போது அதனை மேலும் துலக்கமாக எண்ணிப் பார்ப்பது. ஒன்றுக்கு இரண்டுமுறை நினைத்துப் பார்ப்பது. நினைவுக்குள் சரிபார்ப்பது. இதுதான் அத்தொடரின் பொருள். நினைவு கூறுதல் என்றால் என்ன ? கூறுதல் என்பதற்குப் பொருள் தெரியும். ஒன்றினைச் …

  17. உலகின் எல்லா நாடுகளிலும் இப்போது தமிழர்கள் வாழ்கின்றார்கள். முன்பெல்லாம் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடாக தமிழகத்தை அடுத்து இலங்கையையும், மலேசியா சிங்கப்பூரையுமே நாம் உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்பொழுது உலகின் எல்லா மூலைகளிலும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு காரணங்களுக்காகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வெவ்வேறு நாடுகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சூழ்நிலை. இப்படி புலம்பெயர்ந்து செல்லும் போது, இருக்கின்ற நாட்டின் தேவைக்கேற்ப புதிய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இது தவிர்க்கப்படமுடியாத ஒன்றே. ஆகினும் தமிழ் மக்கள் தாய் மொழியை மறந்து விடாமல் தங்களது அடுத்த சந்ததியினருக்கும் இ…

    • 8 replies
    • 8.6k views
  18. திருஞானசம்பந்தர் தேவாரம் சமணர் பெண்களைக் வன்புணரச் சொல்லுகிறதா? பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே" என திருஞான சம்பந்தர் சமணப் பெண்களை வன்புணர இறைவனிடம் வேண்டுவது ஏன்? வரலாறு நெடுக மதம் என்பது வன்முறை சார்ந்தே வளந்திருக்கும்போது அது அன்பை போதிக்கிறது என பொய்யுரைகள் புகல்வதேன்? மேற்கண்ட வினா 'Quora' தமிழ் தளத்தில் வினவப்பட்டு, பலநாட்கள் கழித்தே என் கண்ணில்பட்டது. ஐயம் வினவுவதற்குப் பதிலாக, தீர்ப்பை எழுதிவிட்டு, குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் தொனியில் இரு…

    • 6 replies
    • 8.6k views
  19. Started by nunavilan,

    # வடசொல் தமிழ் 1 அகங்காரம் செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல் 2 அகசுமாத்து தற்செயல், திடீரெனல் 3 அகதி வறியவன், யாருமற்றவன் 4 அகந்தை இறுமாப்பு, செருக்கு 5 அகம்பாவம் தற்பெருமை, செருக்கு 6 அகராதி அகரவரிசை 7 அகற்பிதம் இயல்பு 8 அகா…

    • 1 reply
    • 8.4k views
  20. திருக்குறள் அலசுவோமா? கள உறுப்பினர்களின் அனுபவ வாயில்களின் ஊடான ஒரு எளிய உரை பொறாமையுடைமை 1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை, இகழ்வார்ப் பொறுத்தல் தலை. இதன் உண்மையான பொருள் என்பது யாதெனில், தன்னைத்தோண்டுபவரினை தாங்கும் நிலம் போல, எம்மை இழிவாகப் பேசுபவரின் குற்றத்தை பொறுத்துக்கொள்வது மிகச் சிறந்த குணமாகும். உதாரணமா நேற்று புலிப்பாசறை மற்றவரின் மனதினை தாக்கும் விதத்தில் எழுதியிருந்தால் அதனை பொருத்துக்கொள்வதே உங்களின் மிகச் சிறந்த குணம்.

  21. கலீலியோ கலீலியோ கோபுரம் ஒன்றில் மேலிருந்து வெவ்வேறு எடைகள் கொண்ட பொருட்களை ஒரே நேரத்தில் கீழே போட்டு அவை ஒரே சமயத்தில் தரையை வந்தடைகின்றன என்பதை நிறுவிய சம்பவம் அனைவரும் அறிந்ததே. கலீலியோவின் கூற்று உடனடியாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் படவில்லை. அவரது கூற்று தவறு அரிஸ்டாடில்தான் சரி என்பதை நிறுவுவதற்காக பேராசிரியர் ஒருவர் பைசா கோபுரத்தின் உச்சியிலிருந்து வெவ்வேறு எடைகள் உள்ள பொருட்களை கீழே போட்டார். அவை கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தரையை வந்தடைந்தன என்றாலும் எடை குறைவான பொருள் தரையைச் சேர்வதற்கு ஓரிரு தருணங்கள் அதிகம் தேவைப்பட்டது (பின்னால் இதற்குக் காரணம் காற்றினால் ஏற்படும் உராய்வினால் என்பது தெரிந்தது). பேராசிரியர் கலீலியோ பெருந்தவறு செய்து விட்டார், அரிஸ்டாடில்தான் ச…

    • 4 replies
    • 8.3k views
  22. யாழ்ப்பாணத்தில் உள்ள மலேயன் கஃபேயில் வடை+டி குடிக்க இன்று குந்தியபோது முன்னால் இருந்த கடையின் பெயர்ப் பலகை தென்பட்டது. புடைவை புடவை எது சரி. கொஞ்சம் தேடியதில் மண்டை காய்ந்து குழப்பம் அதிகமானதே தவிர வேறெதுவுமில்லை பரம்பொருளே. அவ்வையார் தனது வெண்பாவில் இப்படி கூறுகின்றார். கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய் எருதாய் முழப்புடவை யாகித் – திரிதிரியாய்த் தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே கோரைக்கால் ஆழ்வான் கொடை. சேக்கிழார் பன்னிரண்டாம் திருமுறையில் இப்படி கூறுகின்றார். பொய்தருமால் உள்ளத்துப் புன்சமணர் இடங்கழிந்து மெய்தருவான் நெறியடைவார் வெண்புடைவை மெய்சூழ்ந்து கைதருவார் தமையூன்றிக் காணாமே இரவின்கண் செய்…

  23. வைசிய புராணமும்- வளையாபதியும் எது உண்மை? வளையாபதியின் சிறப்பு; வட மொழியில் தோன்றிய ரகுவம்சம் குமார சம்பவம் சிசுபால வதம் நைடதம் கிராதர்ஜீனியம் ஆகிய 5 நூல்களை பஞ்ச காவியம் என்று அழைப்பர்.அதே போல தமிழில் தோன்றிய சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,மணிமேகலை,வளையாபதி ,குண்டல கேசி ஆகிய 5 நூல்கள் ஐம்பெரும்காப்பியம் எனப்பட்டன. இந்த பாகுபாட்டை யார் வகுத்தது என்று தெரியவில்லை.. நன்னூலுக்கு உரை வழங்கிய மயிலை நாதர் ஐம்பெரும்காப்பியம் எண் பெரும்தொகை,பத்து பாட்டு எட்டு தொகை பதினொண்கீழ்கணக்கு என இலக்கியங்களை வகைபடுத்தியுள்ளார்..ஆனால் அவர்க் கூட ஐம்பெரும்காப்பியம் எவை எவை என்று வகைப்படுத்தவில்லை.. பிற்காலத்தில் ஆசிரியர் பெயர்தெரியா பாடலென்று ஐம்பெரும் காப்பியத்தினை வகை…

    • 3 replies
    • 8.1k views
  24. "கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும் கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேன்டும் வாடை தருமூதலிலே நடுங்கும் போதும் வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும் பாடையிலெ படுத்தூரை சுற்றும் போதும் பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும் ஓடையிலெ என் சாம்பல் கரையும் போதும் ஒண் தமிழெ சலசலத்து ஓடவேண்டும்" இது யாரால் இயற்றப்பட்டது என்பதையறிந்தால் தெரிவிக்கவும். ஈழத்தில் கல்வி கற்ற காலத்தில் இதை உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் என்று சிலர் சொன்னதாக நினைவு.வரதரின் அறிவுக் களஞ்சியம் இதழில் இது வேறு ஒருவரால் இயற்றப்பட்டதாவகவும் சொல்லப்பட்டது

    • 11 replies
    • 7.8k views
  25. ஒருவர் வந்து என்னிடம் இக் கேள்வியைக் கேட்டு விடை கூறச்சொன்னார். எனக்கு விடை தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் தந்துதவவும். தட்டானிற்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார். (சில வேளையில் கேள்வியில் பிழையிருக்கலாம்) வடிவேலின் 23ம் புலிகேசியில் வருகின்ற கேள்வி இது.

    • 8 replies
    • 7.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.