Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உலகின் மூத்த குடி தமிழ் குடி.. அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்புதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்…

    • 3 replies
    • 1.6k views
  2. பழந்தமிழரின் அளவை முறைகள்...! முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண…

    • 3 replies
    • 4.3k views
  3. பருவக்காற்றை கண்டுபிடித்தது தமிழன்? - சாமிநாதன் - தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள்.இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல் படம், ஜாவாவில் கப்பல் சிற்பம், சங்க இலக்கியத்தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் சீசர் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ் நாட்டில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளிநாட்டு யாத்திரிகளின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹியான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள், இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். தமிழர்களின…

  4. கள உறவு 'கரு' அவர்களின் வேண்டுகோளின் பேரில் இணைக்கப் பட்டது!

    • 3 replies
    • 1k views
  5. கடந்த பதிவில் களப்பிரர்கள் பற்றியும், காணாமல் போன மூன்று நூற்றாண்டுகள் பற்றியும் பேசினோம். வரலாற்று ஆசிரியர்களால் இந்த களப்பிரர்கள் என்பவர்கள் யார் என்பது பற்றி பல்வேறு அனுமானங்களும், கருத்துகளும் வழங்கி வருகிறது. அவை பற்றி நாம் இந்தப் பதிவில் மிகவும் விரிவாக தேடலாம். களப்பிரர்கள் என்பவர்கள் தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்கள். அவர்கள் தான் பிறகு ஒன்று சேர்ந்து படை திரட்டி தமிழகத்தைக் கைப்பற்றி முன்னூறு வருடங்கள் ஆண்டனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால் இங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தொண்டை நாடு என்பது பல்லவர்கள் ஆண்ட பகுதி. அதாவது தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்று சென்னையை உள்ளடக்கிய ப…

    • 3 replies
    • 4.3k views
  6. தமிழகத் தமிழரும் அயலகத் தமிழரும் (பழ. நெடுமாறன்) தமிழ்நாட்டில் ஆறு கோடிக்குச் சற்று மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் ஏறத்தாழ மூன்று கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். சங்ககாலத்தில் இலங்கை ஈழம் என்றே அழைக்கப்பட்டது. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் "ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கநூலான இதில் இலங்கை என்ற பெயர் சுட்டப்படவில்லை. அப்போதிருந்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழரின் ஆட்சி அங்கு நிலைநாட்டப்பட்ட போது மேலும் தமிழர்கள் அங்கு குடியேறி…

    • 3 replies
    • 1.9k views
  7. தமிழன் கண்ட சித்திரக்கவி பாகம் 02 போன தொடரில் சித்திரக் கவியின் தோற்றத்தையும் அதன் பன்னிரெண்டு வகைகளையும் , அதில் நான்கு வகைகளை அதற்கான விதிமுறைகளையும் உதாரணங்களுடன் பார்த்தோம் . இந்தத் தொடரில் மிகுதி நான்கு வகைகளையும் பார்க்கலாம் . 05 நாக பந்தம்: இந்தக் கவிதை இரண்டு பாம்புகள் எப்படி மேல்நோக்கி பிணிப் பிணைந்து இருக்கின்றனவோ அப்படி அமைந்திருக்கும் இதன் விதிமுறையாக , இது வெண்பா யாப்பில் அமைக்கப் பெறவேண்டும்; அறம் உரைப்பதாக அமைய வேண்டும்; ஒரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும், மற்றொரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும் ஒன்றாக இருக்கும் அமைப்பில் பாடுவது இந்த நாக பந்தக் கவிதையாகும் . ஆகவே நாகபந்தம் என்பது இர…

  8. உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையத் சீன நாகரிகம் சீனருடையத் கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை "வேதகால நாகரிகம்" என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, "அது திராவிட நாகரிகம்" என பொருந்தாப் பொய்யை உரைத்து வருகின்றனர். சிந்துவெளியைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் போதெ…

  9. நாம் ஒருமுறை ஏடிஎம் என்று சொல்லக்கூடிய தானியங்கி காசளர் இயந்திரத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள். ஆனால் மருந்துக்குக்கூட ஒரே ஒரு வார்த்தையை தமிழில் பயன்படுத்தவில்லை. எமக்கு வியப்பைவிட ஆத்திரம் பொங்கி வந்தது. அவர்களுக்கு தமிழ்பேச தெரியாமல் இருந்தால் அப்படி ஒரு அந்நிய மொழியில் பேசுவதை நாம் எந்த விதத்திலும் தவறாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. பேச்சு என்பது அவர்களின் விடுதலை உணர்ச்சி. அதில் தலையிடும் அளவிற்கு நாம் நாகரீகம் அற்றவர்கள் அல்ல. ஆனால், நமது முகவரியான நமது அடையாளத்தை நாம் இழந்து, அந்நிய முகத்தை அணிந்து கொள்வதை நம்மால் தாங்க முடியவில்லை. இன்று தமிழ்நாடெங்கும் இந்த தரங்கெட்ட நிலை செழித்தோங்கிக் கொண்ட…

  10. உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது ! அது மொரீசியசு (Mauritius) (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2, ௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.5 தமிழில் ௫) இடம் பெற்றிருப்பதை இப்படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரிசியசின் பல பகுதிகளில் ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்களை தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 54, 000 தங்களது தாய்மொழி தமிழ் எனத் வாழ்கின்றனர்.. இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுவதாகவும், …

    • 3 replies
    • 1.5k views
  11. ஒண்டு ரெண்டு மூண்டு நாலு ஒண்டு ரெண்டு மூண்டு நாலு எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா ஒட்டுமொத்த தமிழும் ஒரு நாள் உலகை ஆழும் தமிழா வெற்றி மட்டும் எமது மண்ணில் வீரம் நிறைந்தால் கிடைக்கும் எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா நேற்று இன்று இல்லை இன்று நேற்று இல்லை நாளை மட்டும் எம் கையில் வாழும் நாளில் உண்டு விட்டு விட்டு வாடா தமிழா வேற்றுமை வேண்டாமேடா சுட்டுத் திசையும் அவனே உன் முன் தொடர்ந்து செல்வாயாடா? எதிரி கொட்டியது போதும் பொறுமை தமிழா எழுந்து நீயும் வாடா எதிரில் உன்ன…

    • 3 replies
    • 835 views
  12. மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர்திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உர…

  13. பகுதி - 1 இந்து மதம் எங்கிருந்து வந்தது? நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து. அது அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்க…

  14. கிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து காத்தவராயன் கூத்து ஏனைய நாட்டுப்புறக் கூத்துக்களைவிட மூன்று சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது. ஒன்று இது இலங்கையில் மட்டுமே ஆடப்படும் ஒரு கூத்தாகும். இந்தியாவில் காத்தவராயன் கதை கூத்தாக ஆடப்பட்டாலும் அது அங்கு ஆட்டக்கூத்தாகவே இடம்பெற்று வருகிறது. இலங்கையில் இடம்பெறும் காத்தவராயன் கூத்தில் ஆட்டங்கள் இடம்பெறுவதில்லை. ஆனால் பாடல்களின் தாளத்திற்கேற்ப ஒரு அழகிய துள்ளுநடை இதன் தனித்துவமாகும். இரண்டாவது இக்கூத்து கிராமிய சிறு தெய்வ வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டது. இதன் பிரதான பாத்திரம் முத்துமாரியம்மனாகவும் அடுத்த பாத்திரம் காத்தவராயனாகவுமாகவே விளங்கிவருகின்றனர். இது பெரும்பாலும் அம்மன் கோவில்களிலேயே மேடையேற…

  15. இராசேந்திர சோழனின் கடார(மலேசியா)ப் படையெடுப்பைப் பற்றிய கல்வெட்டு இராசேந்திர சோழனின் அயல்நாட்டுப் படையெடுப்பு பற்றிய அரிய செய்திகளைத் தாங்கியுள்ள கல்வெட்டு அவனின் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டு,தஞ்சாவூர் இராசகோபுரத்துக் கர்ப்பகிருகத்தில் தென்புறத்திலுள்ள முதற்படை,இரண்டாம் படைகளில் உள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்து அமைந்த கல்வெட்டாக இது உள்ளது. கல்வெட்டால் அறியப்படும் போர்ச்செயல்கள் கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்கனைத் தோற்கடித்தான்; அவனுடைய செல்வத்தையும் அவன் தலைநகரின் வாசலில் கட்டியிருந்த விச்சாதிரத் தோரணத்தையும், மணிகள் பதிப்பிக்கப்பட்ட இரட்டைக் கதவுகளையும் தன் வசமாக்கிக்கொண்டான்; சுமித்ராத் தீவிலுள்ள விசயம்,பண்ணை,மலையூர் என்னும் ஊர்களை வென்…

  16. சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று. வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விடயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சித்த அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம். எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும். ஆசான் அகத்தியர் உடம்பிலுள்ள வர்மங்களை பற்றிக் கூறி இருக்கிறார். * தலைப்பகுதி வர்மங்கள் = 37 * நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13 * உடலின் முன் பகுதி வர்ம…

  17. Melchi Jasper தமிழ் மொழி அழியுமா ! ================== சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றா…

    • 3 replies
    • 2.7k views
  18. வணக்கம், அண்மையில எனது அக்கா தான் யூரியூப்பில் கேட்டு மகிழ்ந்த ஓர் தமிழ்ப்பாடலை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தா. நீங்களும் கேட்டுப்பாருங்கோ, பாடல் மிக நன்றாக இருக்கிது. ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே. கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன் எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய்…

  19. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல்வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி. நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அ…

  20. வீதி நாடக கலைஞர் சப்தர் ஹஸ்மி கொலை செய்யப்பட்ட பத்தாவது நினைவு விழா தஸ்தக் தில்லியில் 1998ல் ஒரு பெரும் சர்வதேச விழாவாக கொண்டாடப்பட்டது. அங்கு உதயகுமார் ஹிந்துத்துவ அரசியலின் போக்குகள் குறித்து மிக காத்திரமான பார்வையுடன் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அவரது பேச்சு அன்று ஹிந்துத்துவத்தின் போக்குகள் குறித்து ஒரு செரிவான உரையாடலைச் சாத்தியமாக்கியது. அன்று மாலை ஒர் உரையாடலின் போது என்.ராம் எனக்கு இவர் ஒரு தமிழர் பெயர் உதயகுமார் என்று அறிமுகம் செய்து வைத்தார். உதயகுமாருடனான நட்பு அந்த கணத்தில்தான் மலர்ந்தது அப்பொழுது அவர் அமெரிக்காவின் மினியாஃபாலிசில் உள்ள மினியஸோட்டா பல்கலைக்கழகத்தில் இனம் மற்றும் வறுமை Race and poverty பற்றிய ஆய்வுத்துறையில் பேராசிரியராக இருந்தார்.…

  21. "சீனமொழியைவிட தமிழ் வித்தியாசமானது. சீனமொழியில் ழகரம் இல்லை. மேலும் தமிழில் விகுதிகள் நிறைய. 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்பார்கள் அல்லவா? அதை உணர்ந்தேன். தொண்டையில் தண்ணீர் வைத்துக்கொண்டு பயிற்சி பெற்றேன். இன்று (பிப்ரவரி-21) உலகத் தாய்மொழி தினம் (International Mother Language day). 1952-ல் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வங்காள மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்கக்கோரி நடந்த போராட்டத்தில் நான்கு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அந்தப் போராட்டத்துக்குப் பிறகே வங்கதேசம் என்ற நாடு உருவானது. அந்தப் போராட்டத்தில் மொழிக்காக உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக அந்த நிகழ்வு நடந்த பிப்ரவரி 21ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்…

  22. அனிதாப் பிரதாப்பின் அற்புதமான பேச்சு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.