சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
கறுப்புச் சட்டையானாலும் சிகப்புச் சட்டையானாலும் அணியும்போதே மனதில் ஒரு நியாயமான பெருமையுடன் - ஒரு வகையில் அடக்கமான கர்வத்துடன் (!) - அணிய வேண்டும் எனும் எண்ணம் கொண்டவன் நான். ஏனெனில் மானிட சமூகத்தில் இவ்விரு அணியினர்தாம் கொள்கைச் சான்றோர் என்பது என் ஆணித்தரமான கருத்து. சமீபத்தில் இந்த சட்டை பற்றிய கர்வத்தை தோழர் மதிவதனி அவர்கள் தமது உரையொன்றில் குறிப்பிட்டபோது என் எண்ணம் அது திண்ணமானது (A concept in me became a conviction for me). தந்தை பெரியார் அருகில் நிற்கும் வாய்ப்பு அமையாவிடினும், அவரது கொள்கை வழித்தோன்றலான தலைவர் கி. வீரமணி அவர்கள் அருகில் நிற்கும் பேறு பெற்றேன். இவ்வரிய செவ்வியை ஏற்படுத்தித் தந்த தோழர்கள் மானமிகு இராஜேந்திரன் ஐயா, மானமிகு வேல்முருகன் ஐயா,…
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈 வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் அசிங்கம் காட்டிய இளைஞன் – வீடியோ வைரல் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு பெண் பயணியிடம், ஒரு இளைஞன் தனது அந்தரங்க உறுப்பை காட்டும் அசிங்கமான செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது. இது ஒரு கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றம் ஆகும். நாட்டின் பெயருக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் செயல் இது. Nuraichcholai boys
-
- 4 replies
- 662 views
- 1 follower
-
-
வாழையடி வாழை - சுப.சோமசுந்தரம் தமிழ் நிலத்தின் சிறந்த எழுத்தாளராக, திரைப்பட இயக்குனராக பரிமளித்திருக்கும் திரு. மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் தொடர்பாக சிறிது எழுத வந்தேன். நல்ல படங்களைப் பற்றித் தெரிய வரும்போது OTT தளத்தில் வரும் வரை பொறுப்பதில்லை; திரையரங்கிலேயே பார்த்து விட வேண்டும் எனும் முனைப்பு உள்ளவன்தான் நானும். இருப்பினும் படம் வந்து ஐந்தாறு நாட்கள் கழித்து மிதமான கூட்டத்தில் பார்ப்பதிலேயே அலாதி இன்பம் காண்பவன் நான். காரணங்கள் சில உண்டு. ஒரு நல்ல திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் (ஒவ்வொரு frame ஐயும் என்று சொல்வார்களே, அது அதேதான் !) சலனமில்லாமல் ரசித்துப் பார்க்க முடிகிறது. ஒரு சிறுபிள்ள…
-
-
- 3 replies
- 616 views
- 1 follower
-
-
சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்றை நேற்றுப் பார்த்தேன். யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டதையும் அதை எரிக்க காரணகர்த்தாவாக இருந்த ஜே ஆர் அவர்களையும் வன்மையாக கண்டித்து அவர் பேசியிருந்தார். அதைக் கேட்டு எமது பயப் புள்ளைகள் எல்லாம் பயங்கரமாக உணர்ச்சிவசப்பட்டு ஏராளமாக ஷெயார் செய்திருந்தார்கள். யாழ் நூலகத்தை ஜே ஆர் எரித்தற்கான அவர் சொல்லும் காரணம்... மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் வெல்வதற்காகத்தான் ஜே ஆர் யாழ் நூலகத்தை எரித்தாராம். இதுதான் சிங்கள முற்போக்குவாதிகள், இடதுசாரிகள், புத்திஜீவிகளின் புத்திசீவித்தனம்! பிற இனங்கள் மீதான சிங்களப் பேரினவாதத்…
-
-
- 3 replies
- 764 views
- 1 follower
-
-
"நான் ஒராள் செய்யிறதாலே என்ன பெருசா நடக்கப் போகுது, ஆருக்குத் தெரியப் போகுது" என்னும் மனோபாவத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்த பல்லாயிரம் சிறு தவறுகள் ஈழவிடுதலைப் போராட்டத்தை எவ்வளவு பாதித்திருக்கும், நமக்காகப் உயிர் கொடுத்துப் போராடியவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆப்பை இறுக்கியிருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, வெளிநாடுகளில், "புலிகளுக்குப் பயந்துதான், வெளிநாடு வந்தனான்" என்று வாக்குமூலம் கொடுத்து வதிவிட உரிமையை எளிதாக வாங்கிக் கொண்ட "தீவிர புலி மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" எத்தனை பேர் உள்ளனர். லோயர்களின் மூளைச் சலவைக்கு ஆட்பட்டு இவ்வாறு கொடுத்த வாக்குமூல…
-
- 3 replies
- 1.3k views
-
-
கட்டிப் பிடிப்பதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி Dunedin (Neuseeland) விமான நிலையத்தில் இருக்கும் அறிவித்தல் பலகையைப் பார்க்கும் போது, கோபமும் வருகிறது அதே நேரம் சிரிப்பும் சேர்ந்து வருகிறது. பயணிகளை வழியனுப்பும் போது கூட வருபவர்கள் அவர்களைக் கட்டி அணைத்துக் கொள்வதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி என்று Dunedin விமான நிலைய அறிவித்தல் பலகையில் இருக்கிறது. விமான நிலையத்தின் தலைவர் டானியல் டி போனோ (Daniel De Bono) ஒரு வானொலி நேர்காணலில் இப்படிச் சொல்கிறார், “ஒரு ஆய்வின்படி, கட்டிப்பிடிக்கும்போது, "காதல் ஹோர்மோன்" ஒக்ஸிடாசினை ("love hormone" oxytocin) வெளியிட 20 வினாடிகள் போதுமானது. ஆகவே மூன்று நிமிடங்கள் கட்டிப் பிடிப்பதே அதிகமானது. யாராவது மூன்று நிமிடங்களுக்க…
-
-
- 3 replies
- 659 views
- 1 follower
-
-
https://www.facebook.com/groups/1838618882939539/permalink/2225319530936137/
-
- 3 replies
- 961 views
- 1 follower
-
-
தொழில்ரீதியாக உங்கள் உடற் கட்டமைப்பை கட்டி எழுப்ப வேண்டுமானால், Anaboleஐ பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது” இப்படிக் குறிப்பிடுகிறார் ஒரு உடற் பயிற்சிக் கூடப் பயிற்சியாளர் ஒருவர். Anaboleஐ பயன்படுத்தினால், தங்களின் வாழ்க்கையை அது சிதைத்துவிடும் என்பதை கண்கூடாகக் கண்டும் சிலர் புகழுக்காகவும் பணத்துக்காகவும் தொடர்ந்து அந்தத் தவறை செய்கிறார்கள். உடற்பயிற்சியின் போது தசைக் கட்டமைப்பை (muscle building)வளர்த்துக்கொள்ள Anabole Steroide ஊக்கமருந்தைப் பயன்படுத்துவார்கள். Jo Lindnerம் அதற்கு விதிவிலக்கானவரல்ல. உடற்கட்டமைப்பில், யேர்மனியின் மிக பெரிய நட்சத்திரமாக இருந்தவர் Jo Lindner. அவர் தனது 30ஆவது வயதில் (30.06.2023) மரணிப்பார் என்று யாருமே எதிர்பார்க…
-
- 3 replies
- 882 views
- 1 follower
-
-
இலங்கையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை பலரும் அறிந்த ஒரு செய்தியே. இதைப் பற்றி 'அருஞ்சொல்' இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கின்றது. சரோஜ் பதிரான இதை எழுதியிருக்கின்றார். ********************************** மருத்துவர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கை (சரோஜ் பதிரானா) -------------------------------------------------------------------------------------------------------------- சுகாதாரத் துறையிலிருக்கும் முதுநிலை அதிகாரிகள் அளித்த பணி நெருக்கடிகள் மோசமாக இருந்ததது. அதைவிட, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கிவிட்டு பிறகு நட்டாற்றில் விட்டுவிட்டனர் அரசை ஆள்பவர்கள். கோவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான்,…
-
-
- 3 replies
- 483 views
- 1 follower
-
-
ஐயோ சாமி தைப் பொங்கல் எனக்கு வேணாம்! ===================================== நான் சின்னப் பொடியனா இருந்தபோது நாங்கள் எங்கள வயலில நெல்லு விதைச்சுப் பராமரிச்சு அறுவடை செய்தம். தை மாதம் புது அரிசி போட்டுப் பொங்கிச் சந்தோசமா சாப்பிடுவம். பிறகு கோவிலுக்குப் போவம், அப்பிடியா சொந்தக்காரர் வீட்டுக்குப் போவம். பிறகு பொங்கல் திண்ட தியக்கத்தில கொஞ்ச நேரம் நித்திரை கொண்டிட்டுப் பின்னேரம் பருத்தித்துறைக் கடற்கரைக்குப் பட்டம் பார்க்கப் போவம். இப்பிடி ஒரு பிரச்சினை இல்லாமத்தான் எங்கட தைப்பொங்கல் கொண்டாட்டம் இருந்தது. தைப்பொங்கல் உழவர் பெருநாள், சூரியனுக்கு நன்றி சொல்லுற நாள் அடுத்தநாள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லுற நாள் என்ற புரிதல்தான் எனக்கு இருந்தது. பி…
-
- 3 replies
- 1.2k views
-
-
அநுரவின் அதிரடி நடவடிக்கை! அநுரவினால் கோடீஸ்வரராகும் யூடிப்பர்கள்! ஆரம்பமே பெரும் ஊழல்! https://www.facebook.com/share/1AE8sN2Ykp/
-
- 3 replies
- 655 views
-
-
https://www.facebook.com/100004156729307/posts/2086587891489748/ தலைப்பு என்ன வைப்பது என்று தெரியவில்லை ...வாசிக்கவே ஆச்சரியமாய் உள்ளது கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாற்றில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் முஸ்லிம்கள் ************************************ இந்த ஆலயத்தின் முக்கிய வரலாறு போர்த்துக்கீசர் ஆக்கிரமிப்பில் தொடங்குகிறது.வெள்ளை இராணுவ அதிகாரி விட்ட சவாலை வெற்றி கொள்ள, இங்குள்ள நந்தி வாய் திறந்து புல் உண்டு வாலைக் கிளப்பி சாணமும் போட்ட எல்லோருக்கும் தெரிந்த அதிசயக் கதையில் பிரபல்யமடைந்தது. எனது உம்மாவின் உம்மா தாயும்மாவின் தந்தையின்…
-
- 3 replies
- 589 views
-
-
உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கும் மேற்கிந்திய தீவிற்கும் இடையே நடந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு திடீரென்று அந்த அணியின் முன்னணி வீரர் குண்டன் டீ காக் விளையாடாதது தெரிய வந்தது. அதற்கான காரணமாகக் கூறப்பட்டது உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் "BLACK LIVES MATTER MOVEMENT" என்று அடர் நிறத் தோல் கொண்ட மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் இந்த உலகில் பிறந்த மக்களை நிற ரீதியாக பிரித்துப்பார்ப்பது தவறென்றும். ஒருவரை விட இன்னொருவர் தாழ்ந்தவரும் இல்லை. உயர்ந…
-
- 3 replies
- 968 views
-
-
பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே கட்டுரை தகவல் பென்னி லு பிபிசி சைனீஸ் விபெக் வெனிமா பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் 37 வயதான மருத்துவர் லீ சுவாங்யேவின் துயரங்களை வென்றெடுத்த கதை மற்றும் மலை ஏறுதல் மீதான அவரது காதல் ஆகியவை சீனாவில் வைரலானது. போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிறுவயதில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 16 வயதில்தான் இவர் வாசிக்கக் கற்றுக்கொண்டார். 1988 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லீ சுவாங்யேவுக்கு ஏழு மாத குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியது. இது அவரை குதி கால்களில் குந்தி அமர்ந்தால் அன்றி, நடக்க முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றது. சிறுவயதில், மற்ற …
-
-
- 3 replies
- 433 views
- 1 follower
-
-
ஆங்கிலப் புத்தாண்டில் இந்து ஆலய வழிபாடு 500 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கிரிகோரியன் காலண்டர் முறைப்படி ஆண்டின் முதல் நாள்ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்நாள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் இன, நிற, மத, மொழி வேறுபாடில்லாமல் பிரமாண்டமானவாணவேடிக்கைகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கடினவாழ்வு கழிந்து மகிழ்ச்சிநிரம்பிய புதிய வாழ்வுக்கு வாய்ப்பு உருவாவதாக ஓர் நம்பிக்கையை உருவகமாக ஏற்படுத்துகின்றது. எனவேதான் இந்நாள் கொண்டாட்டத்துக்கு உரியதாகின்றது. தமிழர்களும் வரலாறுகளினதும் பாரம்பரியங்களினதும் குழப்பங்களால் தை முதல்நாளா, சித்திரை முதல்நாளாதமிழ்ப்புத்தாண்டு என்ற சர்ச்சைகளுக்குள் சிக்காமல் தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு இரண்டையும…
-
- 3 replies
- 1.8k views
-
-
"மண்ணுளி பாம்பு" பற்றி... கேள்விப் பட்டீர்களா? மண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப் பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும். SAND BOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன. இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி…
-
- 3 replies
- 14.6k views
-
-
கம்மாரிசு எல்லாரும் ஒழுங்கையில நாலு மணீல இருந்து கிளிபூர் விளையாடாமல் wait பண்ணிக்கொண்டு இருந்தம். இப்ப வாற நேரம் சரி அண்டைக்கும் உதே நேரம் தான் வந்தவன் , எண்டு அன்பழகன் சொல்ல ஆதித்தன் மாமா வீட்டு மதிலில ஏறி எல்லாரும் இருந்தம். இவன் வாறதாலை இண்டைக்கு விளையாட்டும் இல்லாமல் போட்டு எண்டு செந்தில் புறுபறுக்க நாங்களும் பொறுமை இழந்து வெளிக்கிடுவம் எண்ட சத்தம் கேட்டிச்சு. உடனே Panasonic Radio வில FM ஐ மாத்தினம். அப்ப MW வில தான் எல்லாம் , BBC மட்டும் SW 2 இல கேக்கிறது. நாங்கள் தான் இலங்கையில FM ஐ முதல் கேட்டது, அதுகும் ஒட்டுக் கேட்டது. அவன் கதைக்கிற பாசையை translate பண்ணிறதுக்கும் கிருபான்டை அப்பா இருந்தவர். இந்தா கண்டிட்டானாம் , பதியிறானாம் , கோயில் தெரியுதாம் எண்டு…
-
- 3 replies
- 718 views
-
-
அன்னபூரணி “ போனகிழமை தான் படம் பாத்தனி , திருப்பியும் என்ன சீலைக்கு…. “ எண்டு தொடங்க , ஓம் அப்பிடியே சீலையும் எடுத்துக் கொண்டு வருவம் வருசத்திக்கு எண்டு செல்லம்மாக்கா சண்முகத்தாருக்கு உறுதியா சொல்லிப்போட்டா. மனிசி சொல்லிறதை தட்டிக் கேக்ககிற ஆம்பிளை ஒருத்தரும் பிறக்கிறதில்லை எண்டதால சண்முகத்தாரும் சரண்டர் ஆனார். முந்தி சண்முகத்தாரும் லேசில விட மாட்டார் . மனிசியைப் பேசத் தொடங்கினா ஒழுங்கை முடக்கு வரை பேசிக்கொண்டே போவார் . ஆனால் போன மாசம் பொயிலையோட சேத்து மற்றச் சாமாங்கள் ஏத்த வந்த ஜெயசிங்கவோட கள்ளு அடிக்கேக்க , சண்முகத்தார் மனிசீட்டை ஏதோ கேக்கப்போய் ரெண்டு பானை உடைய , இவர் சங்கடப்பட அவன் “ ஹம கானிம எக்காய் நம வித்தறாய் வெனஸ் “ ( எல்லா மனிசியும் ஒண்டு தா…
-
- 3 replies
- 821 views
- 1 follower
-
-
அந்தர்ஜனம் / சாதனம். கேரளாவில் அந்தர்ஜனம் என்னும் பெயரில் நடந்த பெண்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகள் நடந்த கொடுமை சுமார்த்த விசாரம் என்பது கேரளத்தில் நம்பூதிரிகளின் சமூகத்தில் வழக்கிலிருந்த ஒரு குற்ற விசாரணை முறை. நம்பூதிரிப் பெண்களின் நடத்தையில் சந்தேகம் உண்டானால் அவர்களை விசாரணைக்குட்படுத்தி தண்டனை வழங்கும் ஒருதலைப்பட்ச விசாரணை முறை இது. நம்பூதிரிகள் சிறுபான்மையினர். அவர்களுக்கு நேரடியாக ஆயுதபலம் சாத்தியமில்லை. ஆகவே கேரளத்தில் மட்டும் ஒரு தனி வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். நம்பூதிரி ஆண்கள் மன்னர்குடும்பங்களிலும், நாயர்சாதியின் பெருநிலப்பிரபுக்களின் குடும்பங்களிலும் பெண்களை மணம்புரிந்துகொண்டார்கள். அதன்மூலம் அக்குடும்பங்…
-
- 3 replies
- 1k views
-
-
“ ஆயிரம் பொய் சொல்லி ” “சித்தப்பா சொல்லப் போப் போறாராம் நீயும் போப்போறியே “ எண்டு சின்ன மாமி கேக்க , நானும் ஏதோ அம்மா சொன்னாத்தான் போவன் எண்ட மாதிரி அம்மாவைப் பாக்க , “ வா வந்து இந்த சட்டையை மாத்தீட்டுப் போ” எண்டா அம்மா. ஒற்றை விளப் போகோணுமாம் எண்டு ஆள் கணக்குக்கு என்னை ஏத்தி விட்டது எண்டது பிறகு விளங்கிச்சு. “ உவனை உண்ட மடியில வைச்சிரு அண்ணை “ எண்டு பெரிய மாமி சொல்ல சித்தப்பாவும் காரின்டை முன் சீட்டில இருந்த படி என்னை மடீல தூக்கி வைச்சிருந்தார். “தம்பி காரை கொக்குவிலுக்கு விடும் முதலாவதா பெரியப்பருக்கு சொல்லிப்போட்டுத்தான் மற்றாக்களுக்கு சொல்ல வேணும்” எண்டு சித்தப்பா சொல்ல காரும் பெரிய அப்பப்பா வின்டை வீட்டை போச்சுது. Morris Oxford காருக்கால என்னை விட ஆறு …
-
- 3 replies
- 859 views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு https://www.facebook.com/share/r/GcHfkZRWV52aPdfH/
-
-
- 3 replies
- 498 views
-
-
தொழில் முறை யூடியூப் டிஜிட்டல் உலகு எங்கோயோ போய் கொண்டிருக்கிறது. விசயம் புரிந்தவர்கள் அங்கே பணம் பண்ண போகின்றனர். தெரியாதவர்கள் சுஜவிபரக்கோர்வை, நேர்முகம், மேனேஜர், ஸ்ட்ரெஸ், மாத சம்பளம் என்று வழமையான வாழ்க்கையினை ஓடிக் கொண்டு இருக்கின்றனர். இலங்கை யூடியூப் பரான டிக்கா ப்ரோ இன்று ஒரு லட்ச்சம் சந்தாதாரர் இலக்கினை அடைந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இவர் மாத்தறையில் பிறந்த இஸ்லாமிய தமிழர். வட்டார தமிழ் பேசும் இவர், சிங்கள மொழியில் படித்தவர். தனது யூடியூப் சேனலை சிங்களம், தமிழ் என ஆரம்பித்து, இரு பகுதியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொண்டார் பின்னர் தமிழ், சிங்களம் என்று தனித்தனியாக பிரித்துக் கொண்டார். இன்று தமிழ் சானல், 100,000 பேரை எட்டி…
-
- 3 replies
- 1.2k views
-
-
அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய அம்மன் சிலையும். அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய அம்மன் சிலையும். ஒரு தடவை அனுராதபும் புனித நகரத்திற்குச் சென்றபோது மிகவும் மோசமான, அவல நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த பண்டைய காளி கோயிலின் இடிபாடுகளைக் கண்டேன். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். அனுராதபுரம் புராதன நகரின் மத்தியில், தூபராம தாதுகோபத்திலிருந்து அபயகிரி தாதுகோபத்…
-
- 3 replies
- 521 views
-
-
-
கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது Dec 31, 2025 - 04:11 PM உலகமே 2026ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3:30 மணிக்கு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. 2026 புத்தாண்டு பிறந்ததையொட்டி, அந்நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாமாக வரவேற்றனர். பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி, 32 தீவுகளையும் ஒரு சிறிய பவளத் தீவையும் கொண்டுள்ளது. நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கிறது. அவுஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்கள…
-
- 3 replies
- 464 views
- 1 follower
-