Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01 பகுதி: 01 - நல்லூர் திருவிழாவுக்கு வருகையும் & சந்திப்பும் ஆகஸ்ட் 2025 சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது பொன்னிறமாக பிரகாசித்தது. அதன் குறுகிய பாதைகளில் மாலைகள், இனிமையான கற்பூரப் புகை மற்றும் தவில் மேளங்களின் இன்னிசை ஒலிகளால் அதன் அரவணைப்பு நிரம்பியிருந்தது. நல்லூர் முருகன் திருவிழா அதன் உச்சத்தை எட்டியிருந்தது - ஆயிரக்கணக்கானோர் பிரகாசமான வேட்டிகளையும் அழகு மின்னும் புடவைகளையும் அணிந்து கொண்டு தெருக்களில் திரண்டனர். அவர்களின் கண்கள் அலங்காரமாக அலங்கரிக்கப்பட்ட தமிழ் கடவுளான, 'அலங்காரக் கந்தனைச்' சுமந்து செல்லும் தேரை நோக்கி உயர்ந்தன. “பஞ்சம் படை வந்தாலும் பட்டினி தான் வந்தாலும்…

  2. மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் 100 இக்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கொண்ட பாரிய மனிதப்புதைகுழி!!!!! தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்....(செய்தி) 1.கொலைசெய்து புதைத்தவனே அதை மீண்டும் தோண்டி எடுத்துக்காட்டும் வினோதம்... 2.மண்டை ஓடுகளில் "தமிழன்" என்று எழுதப்படவில்லை... 3.ஐ.நா என்ற ஒரு மனித உ(எ)ரிமை அமைப்புக்கு கண் தெரியாமல் போய் 5 வருடம்!!!! 4.இதில் யாரும் படுகொலை செய்யப்படவில்லை எனவும் அவர்களே தாங்களாக கிடங்கு கிண்டி தங்களை தாங்களாகவே புதைத்திருக்கலாம் என ஐ.நா நிபுணர் குழு(?) கண்டுபிடிப்பு. புதைகுழிக்குள் புதைக்கப்பட்டார்களா? இல்லை அவர்களாகவே புதைந்துபோனார்களா என்பது புரியாத புதிராக ஐ.நா மனித உ(எ)ருமை அமைப்புக்கு இருப்பதாக அதன் முக்கிய பேச்சாளர் தெரிவிப்பு. 5.இலங்க…

  3. ரெலிபோன் மணி அடித்தது.. அவளாகத் தான் இருக்கும்.. என்ற நினைப்பில் போனைத் எடுத்தேன்.. தொட்டேன்.. அமுக்கினேன்.. ஏதோ அவளை நேரில்.. தொடுவது போல எல்லாம்..மெதுவாக.... நிதானமாக நடந்தது. ஆம் அது அவளே தான்... ஹலோ... என்றேன்.. பவுத்திரமாக. மறுமுனையில்... எப்படி இருக்கீங்க.. என்றவள் என்னிடம் இருந்து.. பதிலை எதிர்பார்க்க முதலே...நீங்க விரும்பியது போல.. இன்றைக்கு சந்திக்கலாம்... இன்றைக்கு ஏமாற்றமாட்டன். சொல்லிற இடத்த வாங்க... என்றாள் அவசரப்பட்டவளாக. அதனைக் கேட்டு.. அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில்.. திகைத்துப் போய் நான் போனோடு நிற்க.. சிந்திக்க கால அவகாசம் தராமல்.... நவிக்கேற்றறை மூளையில் பதித்தவள் போல.. சந்திக்கும் இடத்திற்கும் வழியும் சொல்லிக் கொண்டே போனால்..... கெதியா வாங்க…

  4. தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-4 ----------------------------------- சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கொழும்பில நடக்காமல் போன பிரச்சினை பெரிய பிரச்சினையா கிடக்கு.யானைப்போருக்குள்ள பூனைப்போராக்கிடக்கு உந்தப்பிரச்சினை. இந்த மாதம் ஜெனிவா மாநாட்டில இலங்கைக்கு எதிரான "போர்க்குற்ற பிரேரணை" வாற நேரம் உது தேவையோ எண்டது நியாயமான கேள்விதான். ஏனெண்டா தமிழனுக்கு ஏதோ கொஞ்ச நஞ்ச நீதி கிடைக்கும் நேரத்தில ... அங்க சனமெல்லாம் வலு சந்தோசமா சோக்கா இருக்குது எண்டு காட்ட உப்பிடியான களியாட்ட நிகழ்வுகள் உதவும் எண்டுகினம் கனபேர். இன்னோரு பக்கத்தால "வெளிநாட்டில உள்ளவை மட்டும் கூத்தடிச்சு கும்மாளம் அடிக்கலாம்,இங்க நாங்கள் கொஞ்ச சந்தோசமா இருக்குறது உங்களுக்கு பிடிக்க இல்லையோ" எண்டுகினம் ஒரு சிலர். இத…

  5. எங்கே அவன் தேடுதே சனம் அவரை எல்லோரும் நாட்டாமை என்றுதான் அழைப்பார்கள். மற்றவர்கள் அவரை நாட்டாமை என்று அழைப்பதில் அவருக்கு நிறைந்த மகிழ்ச்சி. கலியாண வீடா? சாமத்தியச் சடங்கா? பிறந்தநாள் விழாவா? இல்லை செத்த வீடா? எங்கள் நகரத்தில் தமிழர்களுடைய எந்த நிகழ்வானாலும் நாட்டாமையே பிரதம விருந்தினர். புலம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த காலத்தில் வேலை செய்வதற்கான அனுமதி எங்களுக்குக் கிடையாது. அப்படியான நிலையிலேயே நாட்டாமை, பூ விற்றுக் காசு சேர்த்தவர். பூ விற்பவர் என்பதால் அவரது பெயரோடு ‘பூ’ என்பது அடைமொழியாயிற்று. அதாவது ‘பூ சபா’ என்றாயிற்று. சேர்த்த பணம், அதனால் வந்த அங்கீகாரம் அதோடு இணைந்த ஆணவம் எல்லாம் சேர்ந்ததால் காலம் செல்ல அவர் நாட்டாமை ஆகிப்போனார். அதெப்படி பூ வி…

    • 24 replies
    • 3.8k views
  6. "உள்ளம் கவர்ந்த கள்வன்" நான் உயர்தரம் முடித்து, அரசாங்கம் அறிமுகப் படுத்திய தரம் அற்ற, இனரீதியான தரப்படுத்தல் மூலம், பல்கலைக்கழக நுழைவை இழந்து, தனியார் நிலையம் ஒன்றில் தொழில் சார்ந்த கல்வி ஒன்றில் அன்று பயின்று கொண்டு இருந்தேன். பொழுது போக்காக சில பேனா நண்பர்களை உள்வாங்கி, எனது ஓய்வை பயன் படுத்திய காலம் அது. நாளடைவில், அதில் ஒரு பேனா நண்பன் முன்னிலை வகுக்க தொடங்கினார். அரசியல் தொடங்கி சமயம் வரை எமக்குள் கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இருவருக்கும் சில உடன்பாடுகளும் மாறுபட்ட கருத்துக்களும் இருந்தாலும் நட்பு வலுவாகிக் கொண்டே போனது. நம்பிக்கை வளர, இயல்பாகவே, எந்தவித தயக்கமும் இன்றி கடிதங்கள் பரிமாற தொடங்கினேன். அவனை பற்றிய தனி விபரங்களையும் …

  7. "எங்கள் பள்ளிக்கூடம்" [இடைக்காடு மகாவித்தியாலயம்] இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஒரு யாழ்ப்பாணக் கிராமமான அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள இடைக்காட்டில் எங்கள் பள்ளிக்கூடம் முதலில் ஒரு திண்ணைப் பாடசாலையாக 1925 இல் முப்பது பிள்ளைகளுடன் பண்டிதர் திரு சுவாமிநாதர் இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு, தேற்றாவடி திரு சுப்பர் முருகுப்பிள்ளை ஆசிரியரின் இல்லத்தில் உருவானது. பின் ஓலைக்கொட்டிலில் அமரர் பண்டிதர் திரு க இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு இன்று எங்கள் பாடசாலை அமைந்து உள்ள இடத்தில் நூறு பிள்ளைகளுடன் இடைக்காடு புவனேஸ்வரி ஆரம்ப பாடசாலையாக உருவானது. அப்பொழுது அது ஓரளவு பின்தங்கிய நிலையில், ஆனால் அறிவின் கலங்கர…

  8. அவனுக்கு வயது ஒரு பூக்கும் காலத்துடன் சேர்த்து இருந்தது இளமை வசீகரமும் அவனை நன்றாக வளப்படுத்தி இருக்க தன்னை இன்னும் மெருகேற்ற அடிக்கடி ஜிம்மிலும் போய் இருக்க தவறுவது இல்லை. என்ன ஆளும் வடிவு கெட்டிக்காரனும் வேற. முதல் பார்க்கும் எந்தப்பெண்ணும் ஒருமுறை இருமுறை திரும்பி பார்க்கும் அழகன். பழைய இதிகாச கதாநாயகன் போல வர்ணிக்கும் அளவு அழகு இருத்தும் என்ன பண்ணுறது. பிறக்கும் போது அவனுடன் கூடி பிறந்தது வெட்கம். எவரையும் திரும்பி பார்க்க அவன் கண்கள் தயங்கும். அவனுடன் போவது அவனை பார்க்கும் பெண் நம்மளையும் பார்ப்பாள் என்கிற நட்பாசை. சரி விசயத்துக்கு வருவம். ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூ சக்கரை என்பதைபோல நம்ம ஏரியாக்கு நாம்தான் கீரோ. லுமாலா சைக்கிள மடக்கி வெட்டுற வெட்டில நாலு பெட்ட…

  9. "மனிதம் தொலைத்த மனங்கள்"……. அந்தக்கிராமத்தில் அதிகாலைவேளையிலும் சூரியன் உக்கிரமூர்த்தியாக இருந்தான் .அருகே இருந்த கோவில் மணி ஓசை காலை ஆறு மணி என்பதை ஆறுமுகம் வாத்தியருக்கு உணர்த்தியது . அருகே படுத்திருந்த மனோரஞ்சிததை சிறிதுநேரம் உற்றுப்பார்த்தபொழுது அவரை அறியாது அவர்கண்ணில் எட்டிப்பார்த்த கண்ணீரை , உள்ளே செல் என்று அவரால் சொல்ல முடியாது இருந்தது . ஏனெனில் சிறிது நேரத்திற்கு முதலே தனது ஏக்கப்பார்வையுடன் ஆறுமுக வாத்தியாரின் மடியில் அவளது மூச்சு அடங்கியிருந்தது. அவளது இழப்பால் ஒருகணம் தடுமாறிப் பெருங்குரலெடுத்துக் குளறினார் ஆறுமுகவாத்தியார் . உள்ளே படுத்திருந்த சுகுணா கலவரத்துடன் ஓடிவந்தாள் . ஆறுமுகம் வாத்தியார் தன்னுடன் படிப்பித்த மனோரஞ்சித்தை பலத்த எதிர்ப்பகளு…

  10. ஆகாயத்தாமரை மீனா சலனங்கள் அற்ற பார்வையுடன் என்னை நோக்கினாள். அவளின் பார்வை எனக்குள் பலத்த அதிர்வை ஏற்படுத்தி என் எண்ணங்களை புரட்டிப்போட்டது. அவளுடைய பார்வையை மீறி பேசும் நிலையை அடைய முடியாத தவிப்பு என்னை ஆக்கிரமித்தது….. ஐரோப்பாவிலிருந்து உறவினர்களின் திருமண விழாவில் கலந்து கொள்ள கனடா வந்த எனக்கு மன ஆழத்தில் புதைந்திருந்த ஆவல் தலைதூக்கியதில் வியப்பில்லை பதின்ம வயதில் மறுக்கப்பட்ட காதலின் தாக்கம் ஐம்பதைத் தாண்டியும் மனதில் துயரமாக யாரும் அறியாமல் அழவைத்திருந்தது. நம்பியவளை ஏமாற்றிவிட்டோமோ என்று சிறுகச் சிறுக என்னைச் சாகடித்து எனக்குள் தன்னை மட்டும் உயிர்ப்பாக வைத்திருக்கும் உணர்வு காதலுக்கு மட்டுந்தான் இருக்கமுடியும். அவளைப் பார்த்தே ஆகவேண்டும் இன்னும் இருநாட்கள…

  11. "வெளிச்சத்துக்கு வராதவள்" பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய அனைத்து மக்களும் வசிக்கும் இடங்களில் மிகவும் முக்கியமானதும் இலங்கையின் வணிக தலைநகரமும், இலங்கையின் ஆகப்பெரிய நகரமுமான கொழும்பு ஒரு பரபரப்பான நகரமாகும். அங்கே இந்தியப் பெருங்கடலின் சத்தமும், போக்குவரத்து நெரிசலும், தெருவோர வியாபாரிகளின் சலசலப்பும் கலந்த வெள்ளவத்தை என்ற இடத்தில், முல்லை என்ற இளம் தமிழ்ப் பெண் வாழ்ந்து வாழ்ந்தாள். பரபரப்பான அந்த நகரத்தைப் போலல்லாமல், முல்லை அமைதியாகவும், கிட்டத்தட்ட கூச்ச சுபாவமுள்ளவராகவும், வெளிச்சத்துக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் கொழும்பின் மையத்தில் வசித்தாலும், அவளுடைய வாழ்க்கை அமைதி, நெகிழ்ச்சி மற்றும் உ…

  12. ஒரே ஒரு மன்னிப்பு ------------------------------ அவர் எனக்கு ஒரு ஒன்று விட்ட தாத்தா முறை. மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் பின்னோக்கி போய்ப் பார்த்தால், ஒரு குடும்பத்தில் இருந்து நாங்கள் இன்று பல கிளைகளாக, பல குடும்பங்களாக வந்தது தெளிவாகவே தெரிந்தது. அவரின் பதிவுப் பெயர் எனக்கும், ஊரில் பலருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை கூப்பிடும் பெயர் கொஞ்சம் விநோதமானது. ஒரு காலத்தில் நீண்ட தலைமுடி வைத்து, அதை சிலுப்பிக் கொண்டு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்திருக்கின்றார் போல. அதனால் அப்படியே அந்தப் பட்டப் பெயர் அவருடன் ஒட்டிவிட்டது. ஊரில் அநேகமாக எல்லோருக்கும் பட்டப் பெயர்கள் இருந்தன, பெரும்பாலும் அந்தப் பெயர்களே பாவனைகளிலும் இருந்தன. ஒன்று விட்ட தாத்தாவின் வி…

      • Thanks
      • Haha
    • 8 replies
    • 842 views
  13. " உயர்தர பரீட்சை எடுத்த‌வுடன் ந‌ண்பர்களுடன் ஊர் சுற்றி திறியும் பொழுது , இப்ப இருப்பது போல் கைய‌டக்க தொலைபேசி ஒன்றுமில்லைதானே ஆனபடியால் நாலுக்கும் நாலரை மணிக்குமிடையில் எல்லோரும் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடுவோம் ,குறைந்தது ஐந்து சைக்கிளில் நண்பர்களுடன் ஊர் உலாத்தலுக்கு வெளிக்கிடுவோம் முதலில் போவது மருதடிக்கு .சைக்கிளை எம் மீது சாய்த்துக்கொண்டு மருதடியானை வணங்குவோம் உள் சென்று தரிசிப்பதை தவிர்த்து கொள்வோம் ,வேறு தரிசனங்கள் செய்வதற்காக.,.சந்தனம்,விபூதி மறக்காமல் பூசிகொள்வோம் காரணம் வீட்டை போகும் பொழுது அம்மா கேட்டால் பள்ளிகூடத்தில விளையாடிவிட்டு, கோவிலுக்கு போயிற்று வாறோம் என்று சொல்லி நல்ல பிள்ளைகள் என்று பெயர் எடுப்பதற்காக அந்த திருவிளையாடலை செய்வோம்.. நாலு திசையு…

  14. அவள் மனம் போலவே எங்கும் இருண்டுபோய் அடை மழை பெய்துகொண்டிருந்தது. பஸ்ஸில் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தபடியால் பூட்டிய கண்ணாடி யன்னல்களின் ஊடே தெறிக்கும்மழை நீர் அவள் முகத்திலும் இடைக்கிடை விழுந்தது. ஆனாலும் அதைத் துடைக்க வேண்டும் என்னும் நினைப்பே அற்று மழை நீரில் இருண்ட வானத்தைப் பார்ப்பதற்கான முயற்சியில் தோற்றுக்கொண்டிருந்தாள் சந்தியா. ஏன் தான் இந்த உலகில் பிறந்தேனோ என்னும் சலிப்பு மனதில் எழ, எனக்கு வேறு வழியே இல்லை என்னும் தீர்மானத்துக்கு வருவதைத் தவிர வேறு மாற்று வழி தெரியாது, பெருமூச்சு ஒன்றே வெளிவந்து அவளை அசுவாசப்படுத்தியது. வாழ்க்கை வாழ்வதற்குத்தான் எனில் ஒன்றை மட்டும் இறுகப் பற்றியபடி ஏன் வாழ்வை நாம் எதிர் கொள்ள வேண்டும். அந்த ஒன்றே யாதுமாகி, எதையும் அலட்சியம் செய…

    • 6 replies
    • 1.8k views
  15. அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவள். அழகானவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். நவநாகரீக உடைகள் அணிவது அவளுக்கு பிடிக்காது. தமிழ் கலாச்சாரப்படி வாழ்பவள் என்று அவளைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்கள். இதில் அவளுக்கு பெருமையும் கூட. அவளுக்கு ஒரு நண்பி இருக்கிறாள். இல்லை, இருந்தாள். அந்த நண்பி 16 வயதில் இருந்தே வேற்று இனத்தவன் ஒருவனைக் காதலித்தாள். அவனுடன் நகரம் முழுவதும் சுற்றினாள். 18 வயது ஆனவுடன் அவனுடன் ஒன்றாக வாழவும் சென்று விட்டாள். கடந்த 5 வருடமாக திருமணம் செய்யாமல் அவனுடனேயே வாழ்ந்த வருகிறாள். அந்த நண்பியைப் பற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் பலவாறு பேசுவார்கள். அந்த நண்பி அணிகின்ற உடைகள் பற்றியும், துணைவனுடன் டிஸ்கோ செல்வது பற்றி…

  16. "என் மூச்சு நீயடி" இந்தியப் பெருங்கடலின் எல்லையற்ற விரிவை உற்றுப் பார்த்துக் கொண்டு சிவகுமார் யாழ்ப்பாணக் கடற்கரையில் நின்று கொண்டிருந்தான். கதிரவன் மறைந்து கொண்டிருந்தது, அப்பொழுது தண்ணீரின் மேல் ஒரு சூடான தங்க நிறத்தை வீசியது, ஆனால் காட்சியின் அழகு அவனைக் கவரவில்லை. அவன் சுவாசித்த காற்றாக மாறிய மீராவின் நினைவுகளால் அவன் மனம் மூழ்கி இருந்தது. அவன் வாய் "என் மூச்சு நீயடி" என முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த சிவகுமார் அமைதியான அதே நேரம் மதிப்பீட்டுத் திறனையும் மற்றும் சுயபரிசோதனை அல்லது அகநோக்குப் பார்வை அல்லது சிந்தனை கொண்ட இளைஞன் ஆவான். அவனது பெற்றோர் எப்போதும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர், அதை, அவர்களின் வார்த்தைகளை…

  17. வேலையால் வந்து தபால் பெட்டியைத் திறந்து பார்த்தவனுக்கு, இன்னும் இரண்டு நாட்களில் அவனது பிறந்த நாள் வருகின்றது என்பது நினைவுக்கு வந்தது.. நீலத்திலும், சிவப்பிலும், கடித உறையில் போடப்பட்டிருந்த வரிக்கோடுகள் அது ஒரு வெளிநாட்டுக் கடிதம் என்பதைத் தெளிவாகக் காட்டின. வீட்டில் உள்ளவர்களுக்கும், சொந்தங்களுக்கும், அவனது பிறந்தநாள், தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்ட நிலையில், உலகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு ஜீவன் மட்டும் இன்றும் அவனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பது, அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சற்றே மகிழ்ச்சியுடன் கடிதத்தைக் கவனமாகத் திறந்தவன், அதனுள் இருந்த வாழ்த்து மடலை எடுத்துப் பிரிக்கையில், அதன் மீது தனது விரல்களை, மெதுவாக நகர்த்தினான். அப்போது, அவனது கையில் படி…

  18. "போதும் இந்த நரகம்..!" குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோநிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற் பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்று குடியை போற்றுகிறது. அதேபோல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமும் புறநானுறு 235 இல், "சிறியகட் பெறினே, எமக்கீ யும் மன்னே; பெரிய கட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே;" என்று பெண் புலவரான ஒளவையார் புகழ்ந்து கூறுகிறார். …

    • 2 replies
    • 466 views
  19. "குடும்பம் ஒரு கோயில்" "கோவில் கூடாது என்று சொல்லவில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது" - பராசக்தி உண்மையில் கலைஞர் மு கருணாநிதியின் இந்த வசனம் அன்று எனக்கு விளங்கவில்லை. நான் அதை பெரிதுபடுத்தவில்லை. எதோ சந்தையில் வாங்கும் தலையணையில் கவர்ச்சியாக எழுதி இருக்கும் ஒரு வசனம் போல் அதை எடுத்துக்கொண்டேன். வீடு என்பது நான் இரவில் உறங்கும் இடமாக, வீட்டு புறா மாதிரி, தினம் திரும்பும் ஒரு வசிப்பிடமாக கருதினேன். வீடு என்பது கட்டாயம் ஒரு குடும்பத்தின் அடையாளம் என்று கூட கருதலாம். ஆமாம் நான் பாதுகாப்பாக, குடும்ப வலைக்குள் அகப்பட்டவனாக, அதே நேரம் பொதுவாக மகிழ்வாக, அன்பு விளையும் ஆலயமாக உணர்ந்தேன். ஆமாம் ’ஆ’ என்றால் ஆன்மா.’லயம்’ எ…

  20. அடிப்படை அனுபவம் ---------------------------------- பல வருடங்களின் முன் மகனுக்கு எட்டு வயதாக இருந்தது. அன்று ஒரு பிள்ளை எட்டு வயதில் எட்டு வித்தைகளையாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தச் சூழலில் ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. எட்டு வயதில் ஒரு அஷ்டாவதானி போல. இன்று சூழலின் நிர்ப்பந்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு பிள்ளைகளையும் சதாவதானிகளாக மாற்றாமல் இது ஓயாது போல. எனக்கு இதில் துளியளவும் நம்பிக்கையும் இல்லை, கூட்டத்துடன் சேர்ந்து ஓடுவதற்கான பொறுமையும் அன்று இருந்திருக்கவில்லை. ஊரில் நீச்சலை நானாகவே தான் சிறு வயதில் கற்றுக் கொண்டேன். கடலில் தான். சேர்ந்து போயிருக்கின்றோம், ஆனாலும் அவரவரே நீந்திப் பழகினோம். ஒரு நாள் இரண்டு பாகம் கடலில் கீ…

  21. இது ஒன்றும் பயண அனுபவமோ அல்லது பயணக் கட்டுரையோ அல்ல, இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கு போய் வந்தேன் என உங்களுக்குச் சொல்வது தான் நோக்கம் . இம்முறை வசந்த கால விடுமுறைக்கு இத்தாலியின் கடற்கரை நகரங்களில் ஒன்றான ஜேசலோவிற்கு ஒர் ஐந்து நாள் பயணம் போய் வந்தோம். பயணத்திற்கான நோக்கம் பெரிதாக ஒன்றுமில்லை வீடு , வேலை, மன அழுத்தங்கள் எல்லாவற்றையும் மறந்து சில நாட் கள் ஒய்வெடுப்பது தான் நோக்கம்.எனது வேலை இடத்து நண்பன் ஒருவர் ஐந்தாறு தடவைகள் ஜேசலோவிற்கு சென்று வந்தது ஜேசலோவினை தெரிவு செய்தமைக்கான காரணமாக இருந்தது அத்துடன் எனது வீட்டிலிருந்து 600 km தூரத்திலிருந்ததும் ஒரு காரணம் எமது வீட்டிலிருந்து காரில் பயணம் 600km தூரம் ஏறத்தாள 7 மணித்தியாலப் பயண நேரம். …

  22. அவளின் போண் மெதுவாக உறுமிக்கொண்டிருந்தது மகள் போண் அடிக்கிறது.... அவளுக்கு விளங்கவில்லை பாத்றூமில் இருந்தாள் போணூக்கு பதிலை வழங்க நான் எடுத்தேன் எதிரே உள்ளவர் பணத்தை உடனடியாக கட்டுங்கள் என்று கடும் தொனியில் எச்சரித்து போண் பண்ணுனா எடுக்க மாட்டீங்களோ? என அதட்டினார் . அதற்கிடையில் மகள் வந்து ஏன் அப்பா நீங்கள் போண் எடுத்த நீங்கள்? சும்மா இருக்க மாட்டீங்களா உங்கட போணா இல்லையே என்ற போண்தானே ஏன் நீங்க எடுத்த நீங்கள் என என்னை கோபமாக கேட்டாள். என்ன பிரச்சினையென‌ நான் கேட்க ம‌கள் ஒன்றுமில்லை என அவள்மழுப்புகிறாள் . ஒரு வயதுக்கு பிறகு முதுமை ஒன்றை விரும்பும் ஆனால் அந்த முதுமை விரும்புவதை நாம் வாழ முடியாமல் தங்கி வாழ்வது என்பது மிக கொடுமையாக இருக்கும் எதாவது செய்வதென்றால் கூட கூட…

  23. Started by வல்வை சகாறா,

    குறிப்பு. பாதைகள் மூடப்பட்டு, இராணுவத்தால் சூழப்பட்ட பகுதிக்குள் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இரவுகளில் மட்டுமே பயணங்கள் இருளுக்குள் சன நெரிசல்படும் குளுவன் காடுகளூடாக….. சேறு சகதி என நீர்வழிப்பயணங்களாகவும் 90 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாண மக்களின் பயணங்கள் அமைந்தன. பாம்பு “க்வ்”………. முனகலும் இல்லாமல் அழுகையும் இல்லாமல் ஈனசுரத்தில் எழுந்து அடங்கியது குரல். அடிவயிற்றைக் கைகளால் அழுத்தியபடி இருண்ட கொட்டிலுக்குள் அவ்வுருவம் சுருண்டு விழுந்தது. அந்தக்கரையில் இருந்த திடீர் தேனீர் கடையின் முன்னால் டிரம்மில் கிடந்த தண்ணீரில் சேறாகிய பஞ்சாபியைக் கழுவிக் கொண்டாள் சுபாங்கி. ஈரம் சொட்டச்சொட்ட பஞ்சாபி உடலோடு ஒட்டியது. சிறு குடிலான திடீர் த…

  24. எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு நான் முதன் முதலாக அதை பார்த்தது. நந்தாவில் அம்மன் கோயிலுக்கு பின்பக்கமாக அமைச்சிருந்த சொர்ணம் அண்ணை ஆட்களிண்ட தொடர் முகாம்களுக்கு குண்டு வீச எண்டு வந்த சியாமளா செட்டி சீ ..... சியாமா செட்டி எண்டு சொல்லுற, இரண்டாம் உலகமாக யுத்தத்திலே கழிச்சுவிட்ட பொம்மர் பதிஞ்சு குண்டை போட்டுவிட்டு எழும்பும் போது தான் அதை கொண்டு வந்து அடிச்சாங்கள். ஒரு பிக்கப் வாகனத்திலே பின்னுக்கு பூட்டிவைச்சிருந்தாங்கள். அதை அடிச்சு பொம்மருக்கு படுகுதோ இல்லையோ அந்த காலத்திலேயே எப்படியும் படும் என்று நம்பிக்கை என்னை போன்ற "சின்ன பெடியங்களுக்கு" இருந்தது. டட் ..டட் டட் ...டும் டும் டும் .... சத்தம் அப்போ எங்களுக்கு நாடு கிடைச்சிடும்போல இருக்கும். எங்களுக்கு மட்ட…

  25. ஸ்வேதா தன் இரண்டு வயதாகப் போகும் குழந்தை இழுத்த இழுப்புக்கு மறுப்பேதுமின்றி முன்னே இருந்த வரபேற்பறைக்கு நகர்ந்தாள். அங்கு மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தன் விளையாட்டுப் பொருட்களைக் குழந்தை ஆழமாக ஊடுருவிப் பார்த்தது. அவற்றைப் பரபரவென விதம் விதமாக மாற்றியடுக்கி தன்னுடைய குழந்தை உலகை இன்னும் அழகாக்கி மகிழ்வடைந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு . பரசவத்தில் கைகளைக் கொட்டிச் சிரித்தது. ஸ்வேதா தன் மழலையின் உலகோடு தன்னை சேர்த்துக் கொள்ள முயன்று, தோற்றுப் போனவளாய் குழந்தைக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் தன்னைச் சாய்த்துக் கொண்டாள். அன்று மதியம் தன் கணவனோடு நடந்த சம்பாசனையோடு அவள் மனசு தானாக ஒட்டிக்கொண்டது. "என்ர கார் திறப்பைக் கண்டன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.