கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
649 topics in this forum
-
கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. வானத்திலே வெடித்து ஒளியை பாச்சிய பரா வெளிச்ச குண்டுகள் மங்கலாக தெரிய தொடங்கியது. சிங்கள குரல்கள் கிட்டவாக கேட்கிறது. இன்னும் ஒரு நிமிடத்துக்காவது எனது உடலில் பலத்தை கொடு என்று நான் என்றைக்குமே கும்பிடாத இறைவனிடம் கேட்கிறேன். அதிகாலை இரண்டுமணிக்கு அண்ணளவாக தொடங்கிய சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழரின் விடிவுக்கான வாழ்வா சாவா நந்திக்கடலின் சேற்றுப் பகுதியில் ஈச்சமுட்களுக்கு நடுவிலே தீர்மானிக்கபட போகிறது என்று யாருமே கணித்திருக்க முடியாது. தலைவனை பாதுகாப்பாக வெளியேற்றினால் மட்டுமே இனி தமிழரின் எதிர்காலம் என்ற தலையாய இலக்கு. ஒரு படகில் கட்டப்பட்ட மிதவைகளுடன் அந்த நந்திகடலை தாண்டும்போதே எதிரிக்கு திகைப்பு ஏற்பட எந்த சந்…
-
- 18 replies
- 2.2k views
-
-
நீலக் கடலின் ஓரத்தில்... கூட்டைவிட்டு விடுதலையாகிய ஒரு சிட்டுக்குருவியைப் போல மேலே மேலே இயந்திரப்பறவை இறக்கை விரிக்க கனடாவில் எல்லைகள் புள்ளிகளாக கட்டிடக்காடு, வாகன நெரிசல், வேலைப்பளு, நாளைய ஏக்கம், அனைத்தையும் மூட்டைகட்டி ஓர் மூலையில் போட்டு விட்ட உணர்வுடன் வெட்ட வெளியில்; கொட்டிக் கிடக்கும் கொள்ள அழகை ரசித்தபடி மனம் பரவசத்தில் பரபரக்க வேகமெடுக்கும் வெஸ்ற் ஜெட் விமானத்தினுள் நாம். விமானத்தினுள் அமர்ந்திருந்த அனைவருமே தம் விடுமுறையை கழிக்கச் செல்பவர்கள் என்றபடியால் அனைவர் முகத்திலும் உல்லாசமான மனநிலை. எமது குடும்பத்தினர் அறுபது வயது தொடக்கம் ஆறுமாதக் குழந்தைவரை ஏறக்குறைய இருபத்திஜந்து பேர்வரை விமானத்தில் பறந்து கொண்டிருந்தோம். விமானம் புறப்பட ஆயத்தமாகும் முன…
-
- 11 replies
- 2.2k views
-
-
பகுதி - 1 அன்றைய காலைப் பொழுதின் விடியலிலேயே , பாலைவனமொன்றின் சகல குணாதிசயங்களும் கலந்திருந்தன. கண்களைத் திறந்து பார்க்கக் கூட இயலாத அளவுக்கு, அதன் பிரகாசம் இருந்தது. நீண்ட ஒரு கருநிற மலைப்பாம்பொன்றின் வளைவுகளுடன், அந்த நெடுஞ்சாலை நீண்டு கிடந்தது. முதல் நாள் இரவின் ‘கடுங்குளிர்', மெல்லிய நீர்ப்படலமொன்றை, அந்த வீதியின் மீது தடவியிருந்தது. வரப்போகும் ‘வெயிலின்' கடுமையுணர்ந்த கங்காருக்கள், வீதியின் இரு பக்கங்களிலும் பரந்திருந்த, மஞ்சள் நிறமான கோரைப்புற்களின் மறைவுகளிலிருந்து, வீதியில் படிந்திருந்த நீரைத் தங்கள் நாக்குகளினால், மெல்ல மெல்ல நக்கி எடுப்பதற்காக வந்து கொண்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால், அன்றைய பொழுது தாகத்துடனேயே கழிந்து விடக்கூடும். முந்திய இரவுகளில்…
-
- 20 replies
- 2.1k views
-
-
தம்பி நல்லாய் படிச்சு , உவன் கனகனின்ட மகனை போல நீயும் வெளிநாட்டுக்கு போய்மேற்படிப்பு படிச்சு டாக்டராக வந்திட வேணும் என்று கரனின் அப்பா சொல்லிகொண்டே இருப்பார்.கரன் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது கனகரின் மூத்தமகன் குகன் மருத்துவதுறையில் இறுதியாண்டு படித்திகொண்டிருந்தான்.கனகர் அரச உத்தியோகத்தர் .இரு மகன்கள் இரு மகள்கள்.மூத்தவன் குகன் அடுத்த இருவரும் பெண்கள் கடைசி கணேஸ். கரணும் கணேஸும் ஒரே வகுப்பு ஒரே பாடசாலை இருவருக்குமிடையே ஒரு போட்டி மனபான்மை இருந்தது. குகன் இறுதியாண்டு படிக்கும் பொழுதே ,கனகர் நல்ல சீதனத்துடன் கலியாணத்தை ஒழுங்கு படித்துவிட்டார்.பெண் சுகி மருத்துவத்துறையில் இரண்டாம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தாள…
-
- 17 replies
- 2.1k views
-
-
எனது வேலைக்கான பயணத்தில் நாள்தோறும் பேருந்தில் போய்வருவது வழமை தினம் தினம் பஸ்கட்டணம் அதிகரிப்பதால் போக்குவரத்து செலவு அதிகமாக வரவே கையில் தலைக்கவசத்தை வைத்து பயணம் செய்வது வாடிக்கையானது. சில நேரம் சிலர் ஏற்றிச்செல்வார்கள் சில நேரம் கையசைத்தும் ஏற்றிசசெல்ல மாட்டார்கள் ஆரம்பத்தில் நானும் மோட்டார் சைக்கிளில் பயணித்தேன் காலப்போக்கில் பொருளாதார சுமை காரணமாக பஸ்ஸில் பயணிக்க ஆரம்பமானேன் . பஸ் சீசன் ரிக்கட் எடுத்தாலும் சீசனைக்கண்டால் பஸ்ஸை தூர நிறுத்தும் நம்மூர் சாரதிகளும் நான் தற்போது தலைக்கவசத்துடன் பாதையில் நிற்கும் இந்த நிலைக்கு காரணம் . வேலையிடத்தில் எனது உயரதிகாரியை சந்தித்து எனக்கு பயணம், சாப்பாட்டு செலவு அதிகமாகிறது என்னால் வேலைக்கு ஒழுங்காகவும்,குடும்ப சூழ்நிலை க…
-
- 16 replies
- 2.1k views
- 1 follower
-
-
திரு திருமதி செல்வன் அடுத்த வீடு பார்க்க தொடங்கிவிட்டார்கள். கையில் ஒரு சூட்கேசுடன் கனடா வந்து இறங்கிய செல்வனுக்கும் மனைவிக்கும் முதல் இருப்பிடம் நண்பனின் நிலக்கீழ் அறைதான் .சில மாதங்களில் செல்வனுக்கு ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிட்டது . மனைவி நித்தியா கணக்கியல் படிக்க பாடசாலை செல்ல தொடங்கியிருந்தார் . கையில் கொஞ்சம் காசு சேர சூரியஒளி படாத அந்த இடத்தை விட்டு ஒரு அப்பார்மென்ட் எடுத்தது போய்விட்டார்கள் . நித்தியாவிற்கு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது ,செல்வனுக்கு வருமானமும் சற்று அதிகரிக்க சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்து நித்தியா வேலை செய்யும் வங்கிக்கு அருகில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டார்கள் . இருவருக்கும் நிரந்தர வேலை ,நல்ல ச…
-
- 20 replies
- 2.1k views
-
-
டிசம்பர் மாதம் என்று சொல்ல முடியாதவாறு வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது. இன்னும் பத்து நாட்களில் அடுத்த ஆண்டு வந்துவிடும். சில்லென்ற காற்று வீசுவது யன்னலூடாக வெளியே அசையும் மரங்கள் உணர்த்தின. குளிர் காலத்தில் வெயில் வந்தாலே லண்டனில் ஒரு ஊசிக் காற்றும் அதனோடு சேர்ந்து வீசும். அபிக்கு வெளியே செல்லவே மனமின்றி இருந்தது அந்தக் காற்றைப் பார்க்க.ஆனாலும் என்ன செய்வது வேலைக்குச் செல்லத்தானே வேண்டும். அண்ணனின் உழைப்பில் சாப்பிட முடியுமா ??? என மனம் கேட்டுக்கொண்டது. அபியின் அண்ணன் வசந்தன் லண்டனில் ஆறு ஆண்டுகளாக வசிக்கிறான்.PR கிடைத்துவிட்டதுதான். ஆனாலும் தங்கைக்கும் மகேந்திரனுக்கும் ஏயென்சியில் கட்டின காசுக்கடன் இன்னும் முடிந்தபாடு இல்லை. அதனால் இரவு பகல் என்று வேலை. இ…
-
- 9 replies
- 2.1k views
-
-
செழியனிற்கு ஒரு மாமா இருந்தார். அந்த மாமா தலைநகரில் வாழ்ந்தார். அப்பாவைப் பிடிக்காத செழியனின் முதலாவது ஹீரோ அவர் தான். அவர் அப்பப்போ தான் செழியன் வாழும் ஊரிற்கு வந்துபோவதனால் செழியனின் நண்பர்கள் அவரைப் பார்த்ததில்லை. தனது ஹீரோவைத் தனது நண்பர்களிற்கு விபரிப்பதில் செழியன் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருந்தான். காரணம், செழியனின் மாமா அவனது நண்பர்கள் எவரும் கண்டிராத, அதனால் கற்பனையில் அவர்களால் காணமுடியாத, ஒரு பாத்திரமாக இருந்தார். ஒப்பிடுவதற்கு ஒருவரும் இல்லாத மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். தமிழ் பட வராலாற்றில் சிவாஜியோடு ஒப்பிடுவதற்கு நடிகர்கள் இருக்கிறார்கள். சிவாஜியின் ஒரு படம் தன்னும் பார்த்திராத ஒருவரிற்கு சிவாஜி எப்பிடி இருப்பார் என்று ஓரளவிற்கு விளக்கிவிடலாம…
-
- 9 replies
- 2.1k views
-
-
தெய்வமும் மனிதனாகலாம் எழுத்து: முல்லை சதா சோளகக் காற்று தொடங்கிவிட்டதால் இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.இயக்கச்சி சோதனைச்சாவடியில் இராணுவ பரிசோதனைகளை முடித்துக்கொண்டு கைப்பையை தோளிலே கொழுவிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்.போர் நடந்த ஆனையிறவு முகாம் சூழல் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.உடைந்த கட்டடங்களும்,எரிந்த வாகனங்களும் யுத்தத்தின் சாட்சியாய் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.இராணுவம், விடுதலைப் புலிகளென ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்ட இடம் என்று எண்ணும்போது காலுக்குக் கீழே இரத்தம் பிசுபிசுப்பது போன்ற உணர்வில் உடல் கூசத் தொடங்கிது. மக்களோடு மக்களாய் நடந்து இராணுவத்தின் கண்ணிலிருந்து மறைந…
-
- 10 replies
- 2.1k views
-
-
புனிதப்போர்-சிறுகதை-சாத்திரி நடு இணைய இதழுக்காக ஓவியம்: சமித்திரா ஸ்ரீரங்கநாதன் 2005-ம் ஆண்டு யூலை மாதம் 25 நள்ளிரவை தாண்டிய நேரம் பிரான்சின் அதிபருக்கு உளவமைப்பன டி ஜி எஸ் சின் தலைவரிடமிருந்து அவசரமாக சந்திக்கவேண்டும் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரும் உடனிருந்ததால் விரும்பத்தக்கது என்றொரு தகவல் வந்திருந்தது.சிறிது நேரத்தில் அதிபரின் வீட்டிலேயே அந்த இரகசிய சந்திப்பு நடை பெற்றது. ஆப்கானிலிருந்த பிரெஞ்சு இராணுவத் தளத்திலிருந்து சங்கேத மொழியில் புலனாய்வு பிரிவு அனுப்பிய அந்த செய்தியை உளவமைப்பின் தலைவர் விபரமாக சொல்லி முடித்தபின்னர், “எல்லாமே தயார் நிலையிலுள்ளது. திட்டம் கூட வகுத்து விட்டார்கள்.உங்களின் சம்…
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
மனசெல்லாம் மழையே......... பஞ்சுப் பொதியாய் வானப்பரப்பெங்கும் வியாபித்து பரவிக் கிடக்கும் மேகத்திரையைக் கிழித்தபடி விமானம் பியர்சன் விமானநிலையத்திலிருந்து மேலெழந்து வேகமெடுத்து ஓடத்தொடங்கிய நாழிகையில் விமானத்தின் ஐன்னலோர இருக்கையில் விமானப்பட்டியை விலக்கியபடி அமர்ந்து கண்களை மூடியபடிசாய்ந்த மதியின் எண்ணங்கள் பின்னோக்கி வேகமெடுத்து ஓடத்தொடங்கின. ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தி ஐந்து வருடங்களின் பின் சந்திக்கப்போகும் தன் சிந்தையில் நிறைந்த சிநேகிதனை வட்டமிட்டது மனம். இமைச்சாளரங்கள் மூடிக்கொள்ள இதயம் மாத்திரம் இயங்கத் தொடங்கியது. கலாச்சார ஈரம் குலையாத அந்தக் குட்டிக் கிராமத்தில் பண்பான தந்தைக்கும் அன்பான அன்னைக்கும் மூத்த மகளாகப் பிறந்தவள் மதி .'அக்கா அக்கா' என்று அவளைச் ச…
-
- 9 replies
- 2.1k views
-
-
வெரி வெரி குட்டி கிறுக்கல் பிறந்து கிட்டதட்ட 18 மாதங்களுக்கு மேலாகி விட்டது .ஒன்றரை வருடம் என்று சொல்லலாம் .பிறந்தது சிவப்பு புரட்சி வெடித்த மண்ணில் என்ற காரணத்தால் சிவப்பு சித்தாத்தங்களை ஆறு மாதங்களில் நன்றாகவே மூளைச்சலவை செய்து கொண்டான் .தனது சித்தாந்தை உலகம் பூராவும் பரப்ப வேண்டும் குறுகிய காலத்தில் என்ற நல்லெண்ணத்தில் புரட்சிப்படையை உருவாக்கி பிறந்தமண்ணை தவிர்த்து வெளிநாடுகளுக்கு பறந்தான். எல்லோருக்கும் தனது சித்தாந்தங்களை இன,மொழி,மதம் கடந்து சமதர்மத்துடன் பரப்பி சோசலிச பார்வையுடன் சிவப்பு வெள்ளத்தில் மூழ்கடித்தான்.வென்றது அவனது புரட்சி .. China variant UK variant South Africa variant Indian variant போன்ற பல பல தேசிய நாடுகளை உருவாக்கி ம…
-
- 9 replies
- 2.1k views
-
-
அழகான அலங்காரத்துடன், உதட்டோரம் புன்னகை மாறாமல், அமைதியாக தூங்கும் தேவதையாக அவள். அவனைப் பார்க்கின்றாள். அவளையே பார்த்தபடி நின்றவனின் இறுகிய முகத்தில் ஏதோ தேடுகிறாள். இறுதி நிமிடங்கள், இப்போதாவது ஒரு வார்த்தை கணவனாக வாய்விட்டுச்சொல்வாயா? இத்தனை வருடங்கள் நீ எனக்குச் காட்ட மறந்த காதலை, நட்பை, சொல்லமறந்த நன்றிகளை, கேட்க மறுத்த மன்னிப்புகளை..... கடைசித் துளிகள், கைகள் நடுங்க, இதயம் கனக்க, அவன் அந்தப் பொத்தானை அழுத்துகிறான். காதலின்றி, நட்பின்றி, வாழாத வாழ்கையை வாழ்ந்த வலியுடன் அவள் காற்றில் கரைந்து காணாமல்ப் போய்விட்டாள். இதோ மனசுக்குள் மட்டும் அவன் நேசித்த(?) அவளை, ஒரு பிடியாக்கி மின்சாரம் கைகளில் தர, முதல் முறைய…
-
- 15 replies
- 2.1k views
-
-
செவ்வந்தித் தோட்டம் காணவில்லை என்ற செய்தியுடன் காவல் அதிகாரிகளின் தகவல் பிரிவு தொலைக்காட்சியூடாக தமது கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்க, அதையும் பார்த்தவாறே மாதவி அழுது சிவந்த கண்களுடன், மெத்திருக்கையில் புதைந்து போயிருந்தாள். குளிர் காற்று மிதமாக அவளிருந்த இருப்பறைக்கு வந்து போய்க்கொண்டிருந்தது. கோடை காலத்தின் ஆரம்பம் ஆதலால் வீட்டின் முன்னே நின்றிருந்த மரத்தில் இலை தெரியாமல் பூத்திருந்த செரி ப்லோசம் (cherry blossom) இனிமையான ஒரு சுகந்தத்தைக் காற்றோடு அனுப்பிக் கொண்டிருந்தது. அவளுக்கு அதன் மென்மையான சுகந்தம் மனதுக்கும் இதமாக இருந்தாலும் அவள் முகம் வாடி, வதங்கிப்போயிருந்தது. இன்றோடு அவள் சகோதரி, அவளுடன் ஒரே நாளில், ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தவள் …
-
- 7 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஜெயசுக்குறு ராணுவ நடவடிக்கை நடைபெற்ற காலம் வன்னியின் மேற்கு கிழக்கை கிழமைக்கு கிழமை மாறி மாறி திரிந்தவண்ணம் இருந்தோம்... எமது அணி விஷேட வேவு பிரிவு என்பதால் நாளாந்தம் எதிரி நிலை கண்காணித்து அறிக்கை கொடுக்க வேண்டிய பணியாக இருந்தது.. எமக்கு என்று ஒரு காப்பரண் எல்லை கிடையாது. வன்னியின் கிழக்கு பகுதியில் நின்ற எமக்கு அழைப்பு உடனும் கிளம்பி வரும்படி.. இரவுப் பயணம்.. வந்தவேகத்தில் நித்திரை தூக்கம் நல்லாய் உறங்கீட்டம்.. ஆனாலும் காதுகளில் பெண்களின் குரல் கூடுதால கேட்டபடி இருந்தது.. அதிகாலை விடியலை தேட கண்விழித்து பார்த்து பொறுப்பாளருக்கு தொடர்பை எடுத்தோம்.. எங்க வரணும்..? அவர் நீங்க நில்லுங்க நான் வந்து கூடி வாறன் என் பதில் சொல்லி தொடர்பை துண்டித்தார் . சரி எழும்பி முகம் கழுவ போவ…
-
- 19 replies
- 2.1k views
-
-
வயசு போகப்போக பக்தி முத்தி பரவச நிலையை அடைய துடிப்பது மனித இயல்பு .அது அடியேனை ஆட்டி படைக்க தொடங்கி சில அறிகுறிகள் தென்படவே என்னை அறியாமலே சில செயல்களை செய்ய தொடங்கினேன் .காலையில் எழுந்தவுடன் "முருகா நீயே முதல்வன் நீ இன்றி எதுவும் அசையாது" என கொஞ்சம் சத்தமாக சொல்ல பக்கத்தில படுத்திருந்த பெட்டர்காவ் "என்னப்பா ஆர் யூ ஆல்ரைட்" என கேட்க நானும் "ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம் "என கண்ணை மூடி கட்டிலில் அமேர்ந்தேன் திடுக்கிட்டு எழுந்து அருகில் வந்து " டொக்டரிட்ட போவமே ,குளிச்சு வெளிக்கிடுங்கோ நான் லீவு போட்டுவிட்டு கூட்டிகொண்டு போகிறேன்" "இப்ப ஏன் டொக்டரிட்ட உமக்கு விசரே" "எனக்கோ உங்களுக்கோ...." என ஆச்சரியதுடனும் பரிதாபமாகவும் பார்த்து கேட்டாள். " எம் பெருமா…
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
அவனுடைய கையில் UK வீசா அலுவலகத்தால் கொடுக்கப்பட்ட ஆவண உறை இருந்தது. அந்த மூடிய உறைக்குள்தான் வீசா கிடைத்திருக்கின்றதா இல்லையா? என்ற அவனதும் அஞ்சலியினதும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முடிவும் அடங்கியிருந்தது. ஒருவித படபடப்போடு அதைத் திறந்தவனுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மிகப் பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. சில அநாவசியக் காரணங்களை வீசா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களாகக் கூறி அதை மூன்று பக்கத்தாள்களில் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தனர். 'அஞ்சலியுடன் கூடிய விரைவில் சேரப்போகிறோம்' என்ற கனவில் இருந்தவனுக்கு.... 'அது இப்போதைக்கு இல்லை' என்பது... மிகப்பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் கொடுத்திருந்தது. இவன் தன்னை நினைத்து கவலைப்பட்டதைவிட... அஞ்சலி இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள…
-
- 4 replies
- 2.1k views
-
-
மச்சான் டி சொல்லு இதில போட்டு டக்கென்று வாறன் என்று சொல்லியபடி கைபேசியின் திரையில் கைகளை அழுத்தியபடி நடந்தான் ரமேஸ் ,உள் மனதில் இன்றாவது அரைவாசி தந்தால் நல்லது வாங்கி அப்படியே அனுப்பி போடலாம் அப்பாக்கு வேற ஒப்ரேஷன் இருக்கு ,முதல் மாறிய வட்டி காசு வேற கொடுக்க வில்லை திரும்பியும் கேட்டால் எப்படி தருவீனம் என எண்ணிக்கொண்டு வேகமா நடந்தான் இரயில் நிலையம் நோக்கி ....... இவன் என்னடா வேலை முடிய வாடா ஊருக்கு காசு போடணும் என்னிடம் விஸா இல்லை நீதான் போட்டு தரனும் என்று சொல்லிப்போட்டு ,டி சொல்லு வாறன் எண்டுட்டு எங்க போறான் இவன் என தனக்குள் கடுப்பாகியபடி நகுலன் வீதியை அலுப்பா பார்த்தான் ,வரட்டும் வரவிட்டு டி குடிப்பம் இப்ப வெளியில நிப்பம் ஏரியாவில் என்ன நடக்கு எ…
-
- 6 replies
- 2.1k views
-
-
செய்தது நீ தானா …-சிறுகதை விடுமுறை நாளென்றாலே கொஞ்சநேரம் அதிகமாக நித்திரை கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படுத்தாலும் வேலை நேரத்துக்கே வழமை போல எழும்பிவிடுவேன். ஆனால் அவசரப்படாமல் ஆடியசைந்து ஒரு தேநீரை போட்டு எடுத்துக்கொண்டு போனில் யூ ரியுப் அப்பில் இளையராஜாவின் இனிய கானங்களை எடுத்து அப்படியே விரலால் சுண்டிவிட அது தொலைகாட்சி திரைக்கு தாவி அகன்ற திரையில் ஓடத் தொடங்கியதும் சோபாவில் சாய்ந்தபடி கண்ணை மூடி காட்சியை பார்க்காமல் கேட்பதே ஒரு இன்பம். தமிழ் சினிமாவுக்கு இளையராஜா வராமல் போயிருந்தால் எனது தலைமுறையினருக்கு தேனிசைத் தென்றல் தேவா தான் தெய்வமாகியிருப்பர். வித்தியாசாகரும்,மரகத மணியும் மனதில் நின்றிருப்பார்கள். வாத்தியார் பிள்ளை மக்க…
-
- 0 replies
- 2k views
-
-
கப்டன் ரவி காலம் எழுதிய வரிகளில்...! இந்திய ராணுவம் ஈழமண்ணுக்குத் தந்து சென்ற வடுக்கள் எங்கள் மனங்களில் நூற்றாண்டுகள் போனாலும் கரையாத துயரங்கள்; அவை. ஓவ்வொரு ஊருக்குள்ளும் ஒரு குடும்பமேனும் இந்தியப் படைகளால் சிதைவுற்ற கதைகளைச் சுமந்து கிடக்கிறது வரலாறு. அந்தக் கொடிய நாட்களில் எங்கள் ஊர்களில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த புலிவீரர்கள் பலரது கதைகளையும் காலம் மௌனமாகச் சுமந்து கொண்டு நகர்கிறது. 1989ம் ஆண்டின் ஓரிரவு எங்கள் வீடுகளில் அத்துமீறி நுளைந்து நிரந்தரமாய் எங்களோடு உறவாகி நினைவுள்ளவரை தங்கள் ஞாபகங்களைத் தந்து சென்றவர்களுள் கப்டன் றவியண்ணாவும் ஒருவர். ஊரில் உலாவிய போராளிகளுள் றவியண்ணா வித்தியாசமான போராளி. அமைதியென்றால் அது றவியண்ணாதான். அதிகம் கதையில்லை …
-
- 16 replies
- 2k views
-
-
பரவலா எல்லா இடமும் சீட்டு பற்றி தான் பேச்சு. வேற கடைக்காரர் காச சுத்தீற்றாங்கள், இவர் இவர் காச எடுத்துக்கொண்டு ஓடிட்டார், இவர் தரேல்ல எண்டு. கிட்டத்தட்ட எல்லா பெரிய சீட்டுக்களும் தொங்கீற்று. கடைக்காரர் போட்ட சீட்டுகள் யாரோ சுத்தீற்றினம் எண்டு தான் கதை, பார்த்தா கடையில புதிய புதிய சாமான்கள் கிடக்கு. உடுப்பு கடைகளில புதிய டிசைன் உடுப்பு. இது போதாத குறைக்கு வேற இடத்தில புதுக்கடை. பெரிய விசயம் இல்ல, சீட்ட எடுத்த ஆக்களுக்கு காசு போகேல்ல, 60,000 வரவேண்டிய இடத்தில 25,000 குடுத்தா, மிச்சத்த கேக்க, இவர் தந்தா தாறன் எண்டு பதில். உதாரணத்துக்கு, மிச்சம் தரேல்ல எண்டா 20 பேரில 8 பேரா தந்தவே, மிச்சம் 12 தரேல்லையா? சாத்தியம் இல்லாத நிலை, மிச்சம் எங்க? ஒரு நகை கடைகாரர் தனக்கு கடன், சீட்டு…
-
- 2 replies
- 2k views
-
-
அன்புள்ள சின்னண்ணா....! (11வருடங்கள் முதல் எழுதப்பட்டு ஒரு பகுதி மட்டும் எங்கோ பத்திரிகையொன்றுக்கு அனுப்பப்பட்டது. இன்று தியாகி திலீபனின் பழைய பதிவுகள் தேடப்போனதில் மீளக்கிடைத்துள்ளது. தியாகி திலீபனண்ணாவின் நினைவு சுமக்கும் நாட்களில் 26வருடங்கள் கழித்து நினைவில் வரும் திண்டு வளந்தான் சின்னண்ணாவின் நினைவோடும் மீளும் நினைவு இது) அதுதான் நான் அவனுக்கு வைத்தபெயர் அவனும் தனது பெயரைச் சொல்லாமல் அடம்பிடித்துக் கொண்டு திரிந்தான். மற்றவர்களும் தனது பெயரைச் சொல்லக் கூடாதென்று எல்லோரையும் தனது சொற்களால் கட்டிவைத்திருந்தான். சமாதிகோவிலடிக் காவலரணில் அறிமுகமான அந்தச் சின்னண்ணா ! எங்கேயிருக்கிறாய் ? 1987இல் இராணுவம் கட்டுவனுக்கு வந்ததோடு வீடுகளைவிட்டு வெளியேறிய நாங்கள் வளவும…
-
- 12 replies
- 2k views
-
-
பள்ளியில் விஞ்ஞான கண்காட்சி நடக்கவிருக்கிறது. தயார்ப்படுத்தல்கள் களேபரப்படுகின்றன. அனைத்து மாணவர்களிற்கும் ஏதேனும் ஒரு விஞ்ஞான விளக்கம் தரும் காட்ச்சிப்பொருளினை எடுத்துவரச் சொல்லப்படுகிறது. ஓவ்வொரு வகுப்பிலிருந்தும் எப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமென்பதை விஞ்ஞான ஆசிரியர் தெரிவுசெய்கிறார். இரண்டு லீற்றர் கொக்கோகோலாப் போத்தலின் விஞ்ஞான அவசியம் தாயாரிற்கு எடுத்தியம்பப்பட்டு அவன் வீட்டில் அது வாங்கப்படுகிறது. தங்கைகளிற்கும் தாயாரிற்கும் பகிர்ந்து பானம் அருந்தப்பட்டு முடிந்ததும், வேலை ஆரம்பிக்கிறது. போத்தலின் கீழ்ப்பகுதி சீராக அரிந்து நீக்கப்படுகிறது. ஒரு குமிழ்முனைப் பேனாவின் உடலும் இரண்டு றீபிள்களும் எடுக்கப்படுகின்றன. குளாயாக்கப்பட்ட முமிழ்முனைப் பேனாவின் உடலில் இரண்ட…
-
- 1 reply
- 2k views
-
-
ஜெகதீஸ்வரன் இறந்துவிட்டான் உதவியவர்களுக்கு நன்றிகள். அன்பின் சாந்தி, எனது தம்பி ஜெகதீஸ்வரன் 14.09.2013 அன்று இறந்துவிட்டார். அவரது உயிர் காக்க நேசக்கரம் ஊடாக நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள். அவரது கடைசி ஆசைப்படி திருக்கேதீஸ்வரத்தில் இறுதி நிகழ்வுகள் செய்தோம். நேசக்கரம் ஊடாக எனது தம்பிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள். தம்பியின் மரணச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க முயன்றேன் உங்கள் தொலைபேசி வேலை செய்யவில்லை. 15.09.2013 அன்று வந்தடைந்த செய்தியிது. இந்த செய்திக்குரிய முன்னாள் போராளி இறந்துவிட்டான். இவனைப் பற்றியொருமுறை மீள் நினைவு கொள்வோம். ஒரு முன்னாள் போராளி மகசீன் சிறைச்சாலையில் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலமையில் இருப்பதாக 2011 செப்ரெம்பர்…
-
- 15 replies
- 2k views
-
-
தலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டா…
-
- 16 replies
- 2k views
-