கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
650 topics in this forum
-
எழுபதுகளின் கடைசி. மூன்றாம் முறை A/L பரீட்சை எழுதிவிட்டு ஏதோ டாக்டர் ஆக போகின்றவன் கணக்கு விடுமுறைக்கு மன்னாருக்கு அத்தானிடம் செல்கின்றேன்.அத்தானின் ஜீப்பில் மன்னார் வங்காலை காடுகள் எல்லாம் சுற்றி அடித்தாலும் பொழுது போவதாக இல்லை .ஒரு லைபிரரி ,ஒரு தியேட்டர் , எங்கும் கழுதைகள் ,அதிக வெய்யிலால் காஞ்சு கிடக்கு மண். இரண்டு நாட்களில் அம்மாவும் அக்காவும் மன்னாருக்கு வந்து சேர்ந்தார்கள் .சும்மா இருந்த அத்தானின் குவார்ட்டர்சில் இந்தியாவில் இருந்து கப்பல் வரும் போது கப்பல் கப்டன் ,ரேடியோ ஆபிசர் வரை தங்குமிடமாக அது மாறியிருந்தது .அவர்கள் ஒரே குடியும் கும்மாளமும் தான் .அத்தான் எச்சில் கையால் காகம் விரட்ட மாட்டார். குடி என்றால் என்னவென்று இன்றுவரை தெரியாது .அவர்களுக்கு இடமும் பொருளு…
-
- 75 replies
- 10.5k views
-
-
செய்தது நீ தானா …-சிறுகதை விடுமுறை நாளென்றாலே கொஞ்சநேரம் அதிகமாக நித்திரை கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படுத்தாலும் வேலை நேரத்துக்கே வழமை போல எழும்பிவிடுவேன். ஆனால் அவசரப்படாமல் ஆடியசைந்து ஒரு தேநீரை போட்டு எடுத்துக்கொண்டு போனில் யூ ரியுப் அப்பில் இளையராஜாவின் இனிய கானங்களை எடுத்து அப்படியே விரலால் சுண்டிவிட அது தொலைகாட்சி திரைக்கு தாவி அகன்ற திரையில் ஓடத் தொடங்கியதும் சோபாவில் சாய்ந்தபடி கண்ணை மூடி காட்சியை பார்க்காமல் கேட்பதே ஒரு இன்பம். தமிழ் சினிமாவுக்கு இளையராஜா வராமல் போயிருந்தால் எனது தலைமுறையினருக்கு தேனிசைத் தென்றல் தேவா தான் தெய்வமாகியிருப்பர். வித்தியாசாகரும்,மரகத மணியும் மனதில் நின்றிருப்பார்கள். வாத்தியார் பிள்ளை மக்க…
-
- 0 replies
- 2k views
-
-
செழியனிற்கு ஒரு மாமா இருந்தார். அந்த மாமா தலைநகரில் வாழ்ந்தார். அப்பாவைப் பிடிக்காத செழியனின் முதலாவது ஹீரோ அவர் தான். அவர் அப்பப்போ தான் செழியன் வாழும் ஊரிற்கு வந்துபோவதனால் செழியனின் நண்பர்கள் அவரைப் பார்த்ததில்லை. தனது ஹீரோவைத் தனது நண்பர்களிற்கு விபரிப்பதில் செழியன் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருந்தான். காரணம், செழியனின் மாமா அவனது நண்பர்கள் எவரும் கண்டிராத, அதனால் கற்பனையில் அவர்களால் காணமுடியாத, ஒரு பாத்திரமாக இருந்தார். ஒப்பிடுவதற்கு ஒருவரும் இல்லாத மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். தமிழ் பட வராலாற்றில் சிவாஜியோடு ஒப்பிடுவதற்கு நடிகர்கள் இருக்கிறார்கள். சிவாஜியின் ஒரு படம் தன்னும் பார்த்திராத ஒருவரிற்கு சிவாஜி எப்பிடி இருப்பார் என்று ஓரளவிற்கு விளக்கிவிடலாம…
-
- 9 replies
- 2.1k views
-
-
செவ்வந்தித் தோட்டம் காணவில்லை என்ற செய்தியுடன் காவல் அதிகாரிகளின் தகவல் பிரிவு தொலைக்காட்சியூடாக தமது கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்க, அதையும் பார்த்தவாறே மாதவி அழுது சிவந்த கண்களுடன், மெத்திருக்கையில் புதைந்து போயிருந்தாள். குளிர் காற்று மிதமாக அவளிருந்த இருப்பறைக்கு வந்து போய்க்கொண்டிருந்தது. கோடை காலத்தின் ஆரம்பம் ஆதலால் வீட்டின் முன்னே நின்றிருந்த மரத்தில் இலை தெரியாமல் பூத்திருந்த செரி ப்லோசம் (cherry blossom) இனிமையான ஒரு சுகந்தத்தைக் காற்றோடு அனுப்பிக் கொண்டிருந்தது. அவளுக்கு அதன் மென்மையான சுகந்தம் மனதுக்கும் இதமாக இருந்தாலும் அவள் முகம் வாடி, வதங்கிப்போயிருந்தது. இன்றோடு அவள் சகோதரி, அவளுடன் ஒரே நாளில், ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தவள் …
-
- 7 replies
- 2.1k views
- 1 follower
-
-
-
-
- 5 replies
- 636 views
-
-
சைக்கிளும் நானும்.... அப்பா அரச உத்தியோகம், அவரிடம் ஒர் றலி சைக்கிள் இருந்தது அதில் தான் அவர் வேலைக்கு சென்று வருவார் .அந்த சைக்கிளில் தான் நான் சைக்கிள் ஒட கற்றுக்கொண்டது.அப்பா வேலையால் வந்தவுடன் வீட்டு சுவரின் சாத்திவிட்டு செல்வார் சைக்கிளுக்கு ஸ்டாண்டு வாங்கி பூட்டுவது வீண் செலவு என நினைத்திருக்கலாம் ...அவர் வைத்து விட்டு சென்றவுடன் வீட்டு முற்றத்தில உருட்டிக்கொண்டு திரிவேன் ,பிறகு பெடலில் காலை ஊண்டி ஒரு பக்கமாக ஒடி திரிந்தேன் ஒரு படி முன்னேறி பாருக்கு கீழே காலை போட்டு மற்ற பக்க பெடலை மிதிச்சு பலன்ஸ் பண்ணி அடுத்த காலையும் பெடலில் வைத்து ஓடதொடங்கி விட்டேன்.அந்த காலத்தில் ஆண்களின் சைக்கிள் தான் அதிகம் விற்பனையில் இருந்தது ,பெண்கள் சைக்கிள் யாழ் மாவட…
-
- 17 replies
- 2.2k views
-
-
மாமா! மாமா! ஆரும் இல்லையோ வீட்டில...... ஓம் ஓம் நிற்கிறம் என்ன தம்பி? மாமா இல்லையா மாமி? இல்ல அவரு தோட்டத்துப்பக்கம் போயிருக்காரு ஓ அப்படியா வந்தால் சொல்லுங்க மகளுக்கு சாமத்திய கல்யாணம் வச்சிருக்கன் எல்லோரும் குடும்பத்தோட கட்டாயணம் வரணூம் வரச்சொல்லி சொல்லுங்க சரி அவரு வந்தால் சொல்லுறன் ம் உள்ள வாங்க வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு போங்க இல்ல மாமி ஆயிரம் வேலை கிடக்கு நான் வந்து போனத சொல்லுங்க மாமாகிட்ட சரி சொல்லுறன் தம்பி இஞ்சாருங்கோ உங்க மருமகன் இப்பதான் வந்து போகிறார் யாரு ? மதிமோகனா? ஓமோம் அவர்தான் என்னவாம் இஞ்சால பக்கம் காத்து அடிச்சிரிக்கி அவங்க எல்லோரும் நாட்டுக்கு வந்திருக்காங்களாம் பிள்ளைக்கு சாமத்திய வீடு செய்ய ஓ!!! அதுவா செய்தி ம் என்ன மாதிரி உங்க வீட்டுப்பக்கத…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
காலை நாலரைக்கு அடிக்கும் முதல் விசில் கேட்பதுக்கு சந்தர்ப்பம் இல்லை நித்திரை அமுக்கி வைத்து இருக்கும் அதுக்கு பிறகு இரண்டாவது விசில் இரண்டுதரம் பறக்கும் திடுக்கிட்டு முழிச்சா அவன் அவன் இது என்ட இது உண்ட என்று இழுபாடு நடக்கும் பொழுது வெளிக்கும் வெளிச்சத்தில் இதால நாங்க எப்பவும் கலட்டி மடிச்சு தலைமாட்டுக்கு கீழவே வைத்து படுக்கிறது ..எழும்பின வேகத்தில் நித்திரை வெறியில் மாறி மாறி எடுத்துக்கொண்டு ஓடினா வரிசை கட்டி நின்று நம்பர் சொல்லிட்டு அவர் அவர் தங்கள் குழுக்களுடன் தங்களுக்கு கொடுத்த கிணத்தடிக்கு போனா வாளி சண்டை நடக்கும் சரி ஒருத்தன் குளிக்க பக்கத்தில நின்று குளிப்பம் என்றால் மற்றவன் காலுக இருப்பன் அங்கால போடா என்று வாளிய விட்டா அது கீழ உள்ளவன் தலையில விழும் ஐயோ என்று அவன்…
-
- 5 replies
- 1.7k views
-
-
1996 இடம் பெயர்வு தொடர்ச்சியா இரண்டு தரம் யாழில் இருந்து வந்து சில மாதம் ஆகவில்லை மீண்டும் கிளிநொச்சியில் இருந்து ஸ்கந்தபுரம் ஊடா மல்லாவி என்று வாழ்க்கை பயணம் போகுது அப்ப எல்லாம் அந்த வயதில் எமக்கு அவைகள் ஒரு விளையாட்டு போல புதுசா ஒரு இடத்துக்கு போறம் என்கிற நினைப்பு தவிர அதன் வலிகளை அப்பொழுது புரிய எமக்கான வயதும் அனுபவனும் போதாது தான் ...வளர்த்த நாயை கிளி வரை கொண்டுவந்து சேர்த்த எனக்கு மீண்டும் வேறிடம் கொண்டு சொல்ல முடியவில்லை மனுஷர் போக வழியை கானம் இவன் வேற நாயை கொண்டு திரியுறான் என்று அப்பா பேசிய போது அப்பொழுது வந்த கோபம் இப்ப நினைத்தால் மனம் வலிக்குது பாவம் அப்பா அன்று நான் கோவப்பட்டு இருக்க கூடாது என்று ..எம்மை காப்பதில் தான் அவரின் முழு கவனமும் இருக்கு என்று அப்பொழு…
-
- 11 replies
- 1.6k views
-
-
அவனைச்சுற்றி நின்று அனைவரும் கை தட்டி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். அப்பொழுது யாரோ அவனை தள்ளிவிட்டது போல இருந்தது . திடுக்கிட்டு விழித்தான் விமானம் சிங்கப்பூரின் சாங்கிவிமான நிலையத்தில் தரையிறங்கிக்கொண்டிருந்தது. தங்கள் பயணத்தை நல்லபடியாக முடித்தபயணிகள் விமானிக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக கைதட்டிக்கொண்டிருந்தனர் என்பதது அப்பொழுதான் அவனிற்கு தெரிந்தது 0000000000000000 நானும் விதவைதான் எனக்கு யுத்தத்தின் வலி தெரியும் எனவே சமாதானம் வேண்டும் என்றபடி சமாதான விதவைத் தேவதையாக வாக்கு கேட்டு சந்திரிகா ஆட்சியில் அமர்ந்து பேச்சு வார்தைகளும் தொடங்கி விட்டிருந்த காலகட்டம்.சந்திரிக்கா தேர்தலில் நிற்கும் பொழுதே புலிகளிற்கும் அவரிற்கும் சில இரகசிய பேச…
-
- 55 replies
- 12k views
-
-
கொஞ்சம் மங்களான பொழுது சூரியன் அப்பொழுதுதான் குளக்கரையின் முடிவில் மீனுடன் பேசிக்கொண்டு இருந்தான் தலையில் கொஞ்ச விறகு கட்டைகளை சுமந்தபடி மணியக்கா வேகமா குளக்கட்டின் விளிம்பில் நடந்தபடி இருந்தார் .... மேச்சலுக்கு போன லட்சுமி வீடு வரமுன் போகவேணும் என்னும் வேகம் மட்டும் மணியக்கா கண்களில் குடிகொண்டுள்ளது தான் போக கொஞ்சம் சுணங்கினாலும் களனி தண்ணியை தட்டி ஊற்றி முற்றம் எல்லாம் சேறா ஆக்கி போடுவாள் என்று சேலை தலைப்பை இழுத்து செருகிக்கொண்டு நடந்தாள் மணி ... அந்த அந்திசாயும் பொழுதுதான் கண்ணனுக்கு பிடிச்ச பொழுது குளக்கரை ஆலமரம் எப்பொழுதும் தனியா வந்து இருத்து ரசிப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்கும் தனிமையில் இருக்கும் பொழுதுகளில் அவனின் சிந்தனை எல்லாம் எதிர்காலம் எப்படி அமையும் என்பதே .…
-
- 4 replies
- 1.1k views
-
-
. விடியற்காலை ஆறு மணியளவில் வானொலியை போடுவார் அப்பா .மும்மதபக்திபாடல்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும் .அப்பா காலைக்கடன் முடித்து தோட்டத்தில் ஒரு செம்பரத்தை பூவை பறித்து கொண்டு சாமி படத்திற்கு வைத்து போட்டு எழும்புங்கோ பள்ளிக்கூடத்திற்கு நேரமாகின்றது என்று சொல்லுவார்.அதன் பின்பு கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிக்கும்பொழுது நித்திரா தேவி என்னை அறியாமலயே என்னை மீண்டும் அரவணைத்து கொள்வாள். வானொலியின் சத்தைதை கூட்டிவிடுவார் .இசை ஒலிபரப்பாகும் செய்தி ஆரம்பமாகப் போகின்றது என்பது இலங்கை வாழ் சகலரும் அறிந்த ஒன்று அதை தொடர்ந்து '"நேரம் ஆறு மணி முப்பது நிமிடங்கள் செய்திகள் வாசிப்பது...மையில்வாகனம் சர்வானந்தா" டேய் ரேடியோவில செய்தி போகுது எழும்புங்கோ என்ற…
-
- 21 replies
- 6.5k views
-
-
கந்தவனம்! ஆள் ஊரிலை பெரிய காய். ஆள் கரிக்கறுப்பு எண்டாலும் கட்டுமஸ்தான உடம்பைக்கண்டு மயங்காத கன்னியர் இல்லை எண்டே சொல்லலாம். சிங்கன் பாலர் வகுப்புக்கு வாத்தியார் எண்டாலும் தான் பெரிய பேராசிரியர் மாதிரித்தான் ஊருக்குள் திரிவார்.சனசமூக நிலைய கூட்டம் அல்லது பல நோக்கு கூட்டுறவு சங்க தேர்தல் வந்தால் ஆளை பிடிக்கேலாது.தன்ரை கையில தான் இந்த பிரயளமே உருளுவது போல் அவரும் ஊர் முழுக்க உருண்டு பிரண்டு திரிவார்.....அதிலும் அவர் குளக்கரையில் நின்று தேகாப்பியாசம் செய்யும் அழகே தனியழகு....அதற்கென்றே ஒரு சில கன்னியர் கூட்டம் அவர் வரும் நேரம் பார்த்து நீராட வருவர். அவரும் ஒரு நாள்...... மிச்சம் மீதி வேலிக்காலை வரும்......
-
- 17 replies
- 6.5k views
- 2 followers
-
-
[size=6]சோத்து சுந்தரி....[/size] நானாக யோசிக்கவில்லை... அம்மாவும் அப்பாவும் ஊட்டி ஊட்டி வளர்த்து எனக்கு இலண்டனுக்கு வருமுன்னரே உடம்பு கொஞ்சம் ஊதித்தான் இருந்திச்சு. இதில அடிக்கடி நொட்டைத்தீன் சாப்பிட்டு வயிறும் வைச்சிருந்தால் சொல்லவே வேணும்! இப்ப கொஞ்ச நாளா காலில நகம் வெட்டலாம் எண்டு குனிஞ்சு நகம்வெட்டியால் வெட்ட வெளிக்கிட்டால் நெஞ்சுக்கும் முழங்காலுக்கும் இடையில ஏதோ பெரிசாக ஒண்டு (பிழையாக யோசிக்காதேயுங்கோ) நிக்குது எண்டு பாத்தால், அது எந்த வஞ்சனையுமில்லாமல் வளந்து முட்டுக்காய் இளநீ மாதிரிக் கிடக்கும் வயிறுதான். இவர் இப்ப பிள்ளைபெற வேண்டாம் எண்டு கவனமாக இருந்தும் ஏதாவது பிசகிச் சிலவேளை வயித்தில பூச்சி, புழு ஏதாச்சும் வந்திட்டுதோ எண்ட பயத்தில சோதிச்சுப் …
-
- 35 replies
- 3.8k views
-
-
http://www.shobasakthi.com/shobasakthi/?p=1354 இந்தக் கதையினை வாசித்துமுடித்தபோது, எனது மனதில் எழுந்த முதலாவது கேழ்வி 'மாயோள்' என்ற தலைப்பினை ஏன் சோபாசக்த்தி கதையின் தலைப்பாக இடவில்லை என்பதாவே இருந்தது. அத்தனை அருமையான பெயர் அது. சோபாவின் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமான ஒரு சொல்லில் ஒரு எழுத்தினை வேண்டுமென்றே மாற்றி, அது ஒரு விசித்திரமான பெயர், வெளியிடத்தில் இருந்து வந்திருந்தவளின் பெயரென்று ஒரு பெரும் நாவலையே அந்தச் சொல்லிற்குள்ளால் நடத்தி முடித்திருக்கிறார். இந்தக்கதையின் அடி ஆழம் அனைத்தும் அந்தச் சொல்லிற்குள் பொதிந்து கிடக்கிறது. இருந்தும் அதனைத் தலைப்பாக இடாது குழந்தை காயாவின் பெயரினை வைத்திருக்கிறார். யோசிக்கும் போது அதன் தேவை புரிகிறது. இப்பதிவின் கடைசிப் பந்திய…
-
- 20 replies
- 3.8k views
-
-
ஜெகதீஸ்வரன் இறந்துவிட்டான் உதவியவர்களுக்கு நன்றிகள். அன்பின் சாந்தி, எனது தம்பி ஜெகதீஸ்வரன் 14.09.2013 அன்று இறந்துவிட்டார். அவரது உயிர் காக்க நேசக்கரம் ஊடாக நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள். அவரது கடைசி ஆசைப்படி திருக்கேதீஸ்வரத்தில் இறுதி நிகழ்வுகள் செய்தோம். நேசக்கரம் ஊடாக எனது தம்பிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள். தம்பியின் மரணச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க முயன்றேன் உங்கள் தொலைபேசி வேலை செய்யவில்லை. 15.09.2013 அன்று வந்தடைந்த செய்தியிது. இந்த செய்திக்குரிய முன்னாள் போராளி இறந்துவிட்டான். இவனைப் பற்றியொருமுறை மீள் நினைவு கொள்வோம். ஒரு முன்னாள் போராளி மகசீன் சிறைச்சாலையில் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலமையில் இருப்பதாக 2011 செப்ரெம்பர்…
-
- 15 replies
- 2k views
-
-
August 6th 2016 .Saturday . யாழ்ப்பாணம் . காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தோட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மோட்டார்சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து , “அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்" . நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் . காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் "என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் " என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் . “ந…
-
- 7 replies
- 3.1k views
-
-
இன்று எனக்கு நன்கு அறிமுமான ஒரு நண்பரை சந்திப்பதாய் ஒப்பந்தம் இருந்ததை கைத்தொலைபேசி சிணுங்கியபடியே அறிவித்தது. மனதில் அதைக் குறித்துக்கொண்டேன். அவருக்கு பின் மதியவேளை அவரை சந்திப்பதாகவும், நாம் ஒஸ்லோவின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர் ஒன்றில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் சந்திப்போம் என்றும் குறும்செய்தி அனுப்பினேன். ”சரி” என்று பதில் குறுஞ்செய்தி வந்தது. கோப்பிக்கடைக்கு வெளியே நண்பர் உட்கார்ந்திருந்தார். அவரருகே உட்கார்ந்துகொண்டேன். பரிமாறும் அற்புத அழகியொருத்தி என்ன வேண்டும் என்றாள். ஒரு தேத்தண்ணி என்றேன். என்ன தேத்தண்ணி என்றுவிட்டு மாம்பழம், தோடம்பழம், இன்னும் பல பெயா்களைக் கூறி இதில் எது வேண்டும் என்றபடியே புருவத்தை உயர்த்தினாள், மாம்பழம் எனக்குப் பிடிக்கும் என்பதால் ம…
-
- 5 replies
- 1.6k views
-
-
23.03.2023, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது மகனின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது மகனின் மனைவி வழி சொந்தங்களும் எங்களுடன் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்திருந்தார்கள். கதைகள் பல்வேறு விடயங்களைத் தொட்ட படி போய்க் கொண்டிருந்தன. அன்றைய தினம் நான் வசிக்கும் நகரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. “நண்பகலில் கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர், அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்” என்பதே அந்தப் பரபரப்புச் சம்பவம். சம்பவத்தை யாரும் பார்த்ததாக அறிவிக்கவில்லை. இணையத்திலும், உள்ளூர் வானொலியிலும்தான் செய்தி வெளியாகியிருந்தது. மகனின் சகலன் ஆதியும் கட்டிட ஒப்பந்தக்கார நிறுவனமொன்றின் சொந்தக்காரன். ஆகவே அவனுக்கு அந்தச் செய்தியி…
-
-
- 34 replies
- 3k views
- 1 follower
-
-
விடிகாலையில், காகங்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சேனாதி, கிணத்தடிக்குப் போய் முகத்தை அலம்பிவிட்டு, வீட்டுவாசலில் தொங்கிய திருநீற்று முட்டிக்குள் கையைவிட்டு எடுத்த திருநீற்றை முகத்தில் பூசியபடி, அப்பனே முருகா என்று உரத்தே சத்தம்போட்டார். அவர் கூப்பிடுவதும், முருகனிடமிருந்து பதில் வராததும் வழமையே எனினும், அவர் முருகனை அழைக்கும் உரத்த குரல், அவரது மனைவியாகிய சரசு என அழைக்கப்படும் சரஸ்வதியை நிச்சயம் நித்திரையிலிருந்து எழுப்பி விடும். அடுப்படிக்குப் போய், நேற்றே,அரைவாசியாய் எரிந்து முடிந்திருந்த ஒரு கங்குமட்டையிலிருந்து ஒரு துண்டுக்கரியை எடுத்துப் பல்லைவிளக்கிக்கொண்டு , பிள்ளையள் எழும்புங்கோவன் விடிஞ்சிட்டுது எண்ட படி, கேத்திலைத் தூக்கி அடுப்பில் வைத்துவிட்டுக் கிணத்தடியை …
-
- 37 replies
- 4k views
-
-
தகிக்கும் தீயடி நீ (கொஞ்சம் பெரிய சிறுகதை) ----------------- அவளை நீங்கள் ஒரு புத்தகக் கண்காட்சிலோ அல்லது ஒரு ரயில் பயணத்திலோ கண்டிருந்தால் அந்த நிமிடமே "என்னைக் கல்யாணம் செய்வாயா" என்று கேட்டு இருந்து இருப்பீர்கள். அல்லது கோவில் ஒன்றின் கர்ப்பக் கிரகத்தில் கண்டிருந்தால் அன்றே மொட்டை அடித்து இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி அனுதினமும் ஆராதிக்கும் ஒரு பக்தனாகவே மாறியிருப்பீர்கள் அல்லது ஒரு சிறு சந்தியில் கடந்து போகும் இன்னொரு வாகனத்தில் அவளைக் கண்டு இருந்திருந்தாள் அவள் வீடு எங்கு என்று தேடியே பித்துப் பிடித்து அலைந்து இருப்பீர்கள். ஆனால் நான் அவளைக் கண்டது இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்ல. மிகவும் குறுகிய சந்தொன்றின் இடது பக்கம் இருந்த ஒரு சிறு அடு…
-
- 27 replies
- 2.6k views
-
-
சந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்! பாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்தாலும் வடிவாத் தெரியிற காலம்! அண்டைக்கும் சரசு வழக்கம் போல, படலையைக் கடந்து சென்றாள். ஒரு கொஞ்ச தூரம் நடந்து போய்த் திரும்பிப் பார்த்து, கழுத்தைத் திருப்பி ஒரு சின்ன “‘வெட்டு"! சும்மா ‘வெட்டு' எண்டு எழுதமட்டுமே முடியுமே தவிர, அதை எழுதி விளங்கப்படுத்திறது கொஞ்சம் கடினமான காரியம்! ஆனால், அடி வளவுக்குள்ள பனங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த ஆச்சிக்கு, அந்த ‘வெட்டின்' அர்த்தம் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்! மனுசி நேர சந்திரனிட்டை வந்து, ஒரு ஒளிவு மறைவுமில்லாமல், தம்பி, உனக்கும் அந்தப் பெடிச்சிக்கும் இடையில ஏதாவது இருக்கோ? என்று கேட்கவும், இப்படியான நேரடித்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத சந…
-
- 13 replies
- 1.6k views
-
-
முதற்பாகத்தைப் பார்வையிட.... http://www.yarl.com/forum3/index.php?showtopic=130316 ஏதோ, ஒரு காரணத்தினால், அல்லது பல காரணங்களினால், அவன் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் குறுக்கிட்ட போதும், நிரந்தரமான வலிகளோ, வடுக்களோ இன்றி, இது வரை அவனால் விலகிச் செல்ல முடிந்திருக்கின்றது! அப்படியானால், காதலே சந்திரனுக்கு ஏற்படவில்லையா? என்ற கேள்விக்கும் அவனால் பதில் சொல்ல முடியாது! ஒவ்வொன்றிலும் இனம், மதம், மொழி என்று பல தடைகள் குறுக்கிட்டன!அவனைக் காதலிப்பதாகக் கூறியவர்கள், எவருக்கும் காதலுக்காக, அவற்றைக் கடந்து செல்லும் தைரியம் இருக்கவில்லை! அவற்றைக் கடந்து வரத் துணிந்த ஒருத்தியையும் விட்டுவைக்கக் காலனுக்கும் கருணையில்லை! நீ விரும்பும் பெண்ணிலும் பார்க்க, உன்னை விரும்பும் பெ…
-
- 16 replies
- 1.4k views
-
-
தங்கக் கூண்டு என் பெயர் எழில். பருவப் பெண்களுக்கே உரிய வாழ்க்கை பற்றிய கனவுகள் எனக்கும் உண்டு - பிரத்தியேகமாக எனக்கென்றே பிரம்மனால் படைத்து அனுப்பப்பட்ட தலைவன் வெண்புரவியில் வந்து சேருவான் போன்ற அதீதமான கற்பனைகள் தவிர. இந்த மாதிரியான கற்பனைகள் தோன்றாததற்குக் காரணம் பாழாய்ப் போன(!) வாசிப்புப் பழக்கமும், என் தந்தையாரால் நேர்முகமாகவும் நூல் முகமாகவும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளும் என்றே நினைக்கிறேன். என் விருப்பம் போல் அறிவியலில் ஆய்வு மாணவியானேன். என் விருப்பம் போல் ஏனைய பிறவும் வாசித்துத் தள்ளினேன். எழுத்து பற்றி என்னுள் எழுந்த வேட்கை என்னை சிறு பத்திரிக்கைகளில் எழுத வைத்தது. சான்றாண்மை மிக்க ஒரு சிலரின் கேண்ம…
-
- 20 replies
- 4k views
- 1 follower
-
-
தட்டி வான் 1.தட்டி வான் தெரியாத ஆரும் யாழ்ப்பாணத்தில இருக்க முடியாது.உந்த மினிவான் வரக்குமுன்னம் தட்டிவான் தான் கொடிகாமம்,பருத்துறை,யாழ்ப்பாணம் றூட் ஓடினது. காத்தோட்டமா இருந்து அங்கின இங்கின பராக்கு பாத்துக்கொண்டு போறதுக்கு நல்ல வசதி. 2.தட்டி வான் செய்த கொம்பனிக்காரன் இப்ப யாழ்ப்பாணம் வந்தா அதை லச்சகணக்கில காசு குடுத்து வாங்கிக்கொண்டு போவாங்கள்.ஏனெண்டா 100 வருச பழசு தட்டி வான்.இருந்தாலும் எங்கட ஆக்கள் இப்பவும் ஓடுகினம். 3.பிரச்சினை காலத்தில டீசலோ பெற்றோலோ இல்லாத நேரம் எங்கட ஆக்கள் தட்டிவானை மண்ணெண்ணையில ஒடிக்காட்டினவை.புகை பறக்க காது அடைக்கிற சத்தம் வரும். 4.கொடிகாமத்தில இருந்து யாழ்ப்பாண சந்தைக்கும், பருத்துறை சந்தைக்கும் மரக்கறியள்,தேங்காய் மூடையள்,பிலாப்பழம…
-
- 11 replies
- 2.8k views
-