Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. காணாமற்போனவர்கள் இனி வர வேண்டாம் நீலக்கோடுகள் அடர்த்தியாய் வரையப்பட்ட சாரமும் வெள்ளைச் சேட்டும் அணிந்திருந்தான். சன நெரிசலை விலக்கி வந்து கொண்டிருந்தவன் தனது நடையின் வேகத்தைக் கூட்டி ஓடிவரத் தொடங்கினான். கையில் ஒரு பை அதனுள் எதையோ வைத்துக் காவிக்கொண்டு ஓடிவந்தான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். கையில் இருந்த பையிலிருந்து ஒரு அழகான பெட்டியை அவளிடம் நீட்டினான். இது உன்னுடைய மகனுக்காக நான் எடுத்து வைச்சிருந்தனான். இத அவனிட்டைக் குடு மாமா தந்தனெண்டு....! அவன் கொடுத்த பெட்டி தவறி கீழே விழுந்தது. அதனுள் சில்லறைக்காசுகள். நிலத்தில் சிதறிய காசுகளைப் பொறுக்கிப் பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள். பச்சையுடையுடுத்த சட்டித் தொப்பியணிந்தவர்கள் அவனைச் சூழ்ந்தா…

    • 3 replies
    • 1.2k views
  2. எனது வீட்டு வரவேற்பறை பத்து வருடப் பழசு. ஆட்களைத்தான் மாற்ற முடியாது. சரி அறைகளின் வண்ணங்களையாவது மாற்றினால் மனதுக்கு இதமாக இருக்கும் எண்டு கணவரைக் கேட்டால், கணவர் அதுக்கென்ன மாத்துவம். எல்லாரும் சேர்ந்து பழைய பேப்பரை உரியுங்கோ. நான் பெயின்ற் அடிக்கிறன் என்றார். எனக்குத் தெரியும் உது நடக்காத வேலை எண்டு. ஏனென்டா போன வருசமும் இப்பிடித்தான் கொரிடோருக்குச் சொல்லி கடைசியா நான் தான் பெயின்ட் அடிச்சு முடிச்சது. அதனால நீங்களோ நாங்களோ ஒண்டும் செய்ய வேண்டாம். ஆட்களைப் பிடிச்சுச் செய்வம் எண்டு சொல்ல, வீணா ஏன் அவங்களுக்குக் காசு எண்டு இரண்டு மூண்டு நாள் இழுபறியில் பக்கத்து வீட்டில இருக்கிற போலந்துக் காரனைக் கேட்பதென முடிவெடுத்தேன். போன மாதம் அவன் முன் வீட்டு மதில் கட்டினதைப்…

    • 28 replies
    • 2.9k views
  3. வாடா மல்லிகை கார்த்திகை திங்கள் 2013 ஒரு நாள் மதிய வேளையில் அலுத்துக் களைத்து வீடு திரும்பும் பொழுது எனது மனம் வழமைக்கு மாறாக ஊரைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை .கடந்த மூன்று வருடங்களாக அரிதார முகங்களையும் , அவற்றால் வரும் ஓட்டில்லாத சிரிப்புகளையும் பார்த்துச் சலித்த எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற ஓர் எண்ணம் சடுதியாக என் மனதில் சடுகுடு விளையாடியதில் வியப்பு ஏதும் இல்லை . மனதில் எழுந்த எண்ணத்தை செயலாக்கும் முடிவில் வீடு வந்த நான் ,என் எண்ணத்தை பள்ளியறையில் மஞ்சத்தில் ஆற அமர இருக்கும்பொழுது எனது மனைவியிடம் பகிர்ந்தேன் . அவளும் எனது மன ஓட்டத்தில் இருந்தாளோ என்னவோ எனது எண்ணத்துக்கு பச்சைக்கொடி காட்டினாள் . இருவரும் ஒன்றிணைந்து …

    • 42 replies
    • 5k views
  4. Started by putthan,

    தலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டா…

    • 16 replies
    • 2.1k views
  5. உலகம் சுற்றும்.. குருவிகளுக்கு ஒரு திமிர் இருந்தது.. தமிழில "டிஸ்ரிங்சன் - (Distinction) எடுத்தது என்று. அந்தத் திமிரோட.. புலம்பெயர்நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் தமிழ் மொழி பொதுப்பரீட்சைக்கான ஆயத்தம் நடந்து கொண்டிருக்கிறது... அதில்.. ஆண்டு 7 பயிற்சி வினாக் கொத்து ஒன்று குருவிகளின் கண்ணில் பட அதைக் குருவிகள் கொத்தி பார்க்கத்துடிச்சுதுங்க.. சும்மா இல்ல..show off க்குத்தான்.. தமிழில.. படம் காட்ட. முதல் கேள்வியே.. ஈழத்தில் வன்னிப் பகுதி எத்தனை "பற்று"களாகப் பிரிக்கப்பட்டிருந்தது..??! போச்சே வடை போச்சே. டிஸ்ரிங்சன் கிழிஞ்சு போச்சு. சிங்களவன் டிசைன் பண்ணின தமிழைப் படிச்சிட்டு.. தமிழிலை டிஸ்ரிங்சனை எடுத்திட்டு... சோ காட்ட வெளிக்கிட்டா..தமிழன் டிசைன் பண்ணின பேப்பரில கவுண்…

  6. Started by கோமகன்,

    கறுப்பி ஒரு பேப்பருக்காக கோமகன் அமாவாசையின் கரிய நிறம் அந்தக் கிராமத்தில் அட்டைக் கரியாக மண்டியிருந்தது . அவ்வப்பொழுது வவ்வால்களின் பட பட சிறகடிப்பும் , கூவைகளின் புறுபுறுப்பும் , சில்வண்டுகளின் சில்லெடுப்பும் , ஒரு சில கட்டாக்காலி நாய்களின் ஊளையும் அந்தக் கிராமத்தின் அமைதிக்கு உலை வைத்துக்கொண்டிருந்தன . கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கந்தப்புவின் மனதுக்கு இந்த முன்னெடுப்புகள் எதோ ஒன்று நிகழப் போவதை உணர்த்தியது . கந்தப்பு மெதுவாகக் கயிற்றுக் கட்டிலில் இருந்து எழுந்து சென்று தனது கொட்டிலின் மூலையில் இருந்த சாமி படத்தின் முன்னால் இருந்த திருநீற்றுக் குடுவையினுள் கையை விட்டு நெற்றி நிறைய திருநீற்றை அள்ளிப் பூசி வாயிலும் சிறிது போட்டுக்கொண்டு மீண்டும் கயிற்றுக…

    • 8 replies
    • 1.3k views
  7. "உண்மையாகவா! அவள் உன்னைக் காதலிக்கிறாளாடா..?" கேட்ட நண்பர்களின் முகத்தில் அவநம்பிக்கை, ஆச்சரியம், அதிசயம், அதற்கும் மேலாக அது பெரும் வியப்பாக இருந்தது. "சும்மா கதைவிடாதை." "சத்தியமா மச்சான், வேண்டுமென்றால் இன்றைக்கே புறூவ்பண்ணிக் காட்டவா." அவன் காதல் மன்னனின் அழகு கொண்டவன். எங்கள் நண்பன்தான். ஆனாலும்! உயிரோடு ஒட்டிய நண்பனல்ல!!. காரணம்! அவன் நடத்தையில் பெண்கள் சம்பந்தப்பட்ட சந்தேகம்.... ஆனாலும் அவன் இருக்குமிடம் கலகலப்பும் சிரிப்புமாகத் திகழ்வதாலும், கூடப்படிப்பதாலும், நண்பனாகியிருந்தான். இவனையா அந்தப் பேரழகி காதலிக்கிறாள்!!. பெரும் பணமும், படிப்பும் நிறைந்த குடும்பத்தில் பிறந்த அவள் எங்கே?. இவன் எங்கே? இவனைப்பற்றிய உண்மை அறியாமலா அவள் இவனைக் காதலிக்கிறாள்..!!. காதலுக்…

    • 4 replies
    • 1.5k views
  8. ( இப்பதிவு வாலிபவயதுக் குறும்பு பாகம் 6 ன் தொடர்ச்சியாகும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=138217 ) அவன் அம்மாவும், மஞ்சுவின் அம்மாவும் அடைப்பில்லாத அந்த வேலிநடுவில் இருந்த வேப்பமரத்தடி வேரில் அமர்ந்து ஊர்க்கதை, உறவுக்கதை பேசிக்கொண்டிருக்கும் போது, அவனும் மஞ்சுவும் மணலில் வரம்புகட்டிக் கீச்சு மாச்சுத் தம்பளம் விளையாடிய காலத்திலிருந்து, இனிப்புக்கும், பலகாரத்திற்கும் அடிபடுவதும், கோள்சொல்லி அவள் அவனை அடிவாங்க வைத்து ரசிப்பதும், பாசத்தோடு காக்காக் கடி கடித்து அவள் அவனுக்கு மிட்டாய் ஊட்டிவிடுவதும், பூப்பறித்து அவன் அவள் தலையில்சூட்டி அழகுபார்ப்பதும்,, அந்த இரு தாய்மார்களையும், பூரிப்படைய வைக்கத்தான் செய்தது. அவர்கள் உள்ளங்களில் இனிமையான கற்பனைகள் வளர்ந்…

    • 10 replies
    • 1.8k views
  9. Started by sOliyAn,

    கூண்டினுள் சோகமே வடிவாக அமர்ந்திருந்தன அப்பறவைகள். ­"லவ் பேர்ட்ஸ்". காதல் பறவைகள். கூண்டைத் திறந்து விரல்களைக் குவித்து, கையை உள்ளே நீட்ட, அதில் தாவி அமர்ந்துகொண்டது காதல் சோடியில் ஒன்று. அலகைத் தாழ்த்தி அவனது கரத்தை மென்மையாகக் கொத்தி, மீண்டும் அவனது முகத்தில் ஏதோ தேடி.... மறுபடியும் கையை உற்றுப் பார்ப்பதுமாக.... அவனது முகத்தில் முகிழ்த்த உணர்ச்சிரேகைகளையும், கரத்தின் ரேகைகளையும் ஒப்பிட்டு, எதிர்காலத்துக்குப் பதில் தேடுகிறதோ? யாரது எதிர்காலம்.... தனதா? எனதா....? எதிர்காலத்திற்கான கேள்விகளை விதைத்துச் சென்ற யாழினியின் தாக்கம்.... அவள் தானே உருவாக்கி, வளர்த்து, தீர்மானித்து, முடிந்த முடிவாய் அவனின் நிம்மதியை முடித்த செயலுக்குப் பரிகாரம் உண்டா என …

    • 5 replies
    • 1.2k views
  10. ஆடி மாத பின்னிரவு ,அந்த நாள் ஏறித்த கோரவெய்யிலை சற்று தணித்து அதிகாலையை வரவேற்க பச்சை வயல்களை தழுவிய படி மெல்லிய இளங்காற்று தஞ்சாவூரை வருடுகின்றது . உரத்தநாட்டு கிராமம் - தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் ஓரம் ஒரு கீற்றுக்கொட்டகையில் பெற்றோமக்ஸ் விளக்கு ஒளியின் உதவியுடன் சிற்பிகள் சிலர் உளியால் கருங்கற்களை செதுக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். பல்லவர் காலத்தில் இருந்து இன்று வரை இந்த உளிஓசை இங்கு கேட்டுக்குகொண்டுதான் இருக்கு . கொட்டகையை சுற்றி எங்கும் பெரிய பெரிய கருங்கற்கள் தீட்டபடாமல் நீண்டுகிடக்கின்றன. அங்கிருக்கும் ஒரு பெரிய கருகங்கல்லில் தலைக்கு கையை கொடுத்தபடி சாய்ந்திருகின்றான் சாரங்கன், அவனருகில் இருந்து இடது கைவிரலை ஆட்டிய படி எதையோ அழுத்திசொல்லும்…

    • 0 replies
    • 1k views
  11. தகிக்கும் தீயடி நீ (கொஞ்சம் பெரிய சிறுகதை) ----------------- அவளை நீங்கள் ஒரு புத்தகக் கண்காட்சிலோ அல்லது ஒரு ரயில் பயணத்திலோ கண்டிருந்தால் அந்த நிமிடமே "என்னைக் கல்யாணம் செய்வாயா" என்று கேட்டு இருந்து இருப்பீர்கள். அல்லது கோவில் ஒன்றின் கர்ப்பக் கிரகத்தில் கண்டிருந்தால் அன்றே மொட்டை அடித்து இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி அனுதினமும் ஆராதிக்கும் ஒரு பக்தனாகவே மாறியிருப்பீர்கள் அல்லது ஒரு சிறு சந்தியில் கடந்து போகும் இன்னொரு வாகனத்தில் அவளைக் கண்டு இருந்திருந்தாள் அவள் வீடு எங்கு என்று தேடியே பித்துப் பிடித்து அலைந்து இருப்பீர்கள். ஆனால் நான் அவளைக் கண்டது இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்ல. மிகவும் குறுகிய சந்தொன்றின் இடது பக்கம் இருந்த ஒரு சிறு அடு…

    • 27 replies
    • 2.7k views
  12. இப்பதிவை தொடரவேண்டி இருப்பதால் வரும் பதிவு வாலிபவயதுக் குறும்புக்கு சற்றும் பொருத்தமற்றுத் தோன்றுகிறது ஆகவே தொடரப்போகும் பதிவை "மஞ்சு என் உயிர் நீதானடி" என்ற தலைப்பில் பதியவுள்ளேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். "உன்னுடைய அப்பாவின் ஆட்கள்தானே நீதவான்! அவரிடமும் ஒரு நற்சான்றுப் பத்திரம் வாங்கினால் உன்னைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்த்துவிடுவதற்கு உதவியாக இருக்கும்." மாமாவின் ஆலோசனை அவனை நீதவான் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. சொந்தம்தான் , ஆனாலும்! அவன் முன்விறாந்தை தாண்டி உள்ளேபோய்ப் பழகமுடியாத ஒரு தராதரப் பந்தம். அங்கிருந்த வாங்கில் போய் இருந்தான். சிறு மங்கை ஒருத்தி வந்து விசாரித்தாள். அவள் போனதும், அவர் வந்தார். வந்த விபரம் சொன்னான். ஓ அப்படியா! நீர் இன்னாருடைய மகனா! ச…

    • 8 replies
    • 1.5k views
  13. இரவு முழுவதும் அவள் தூங்கினாளா என்று அவளுக்கே தெரியவில்லை. ம் ..... கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு மூன்று மணி நேரம் தூங் கியிருப்பாளா??? நீண்ட நாட்களின் பின் மனவருத்தம், மட்டற்ற மகிழ்ச்சி,எல்லையில்லா நின்மதி என மாறி மாறி அவளை அலைக்களித்தபடிதான் அந்த இரவு நகர்ந்தது. ஆனாலும் அவளின் மனம் இத்தனை சீக்கிரம் இவ்வளவு தெளிவடையும் என்று அவளே நினைத்துப் பார்க்கவில்லை. கடந்த காலங்களை எண்ணிப்பார்த்தபோது வரிசையாய் எல்லாம் வந்து போயின. என்னிடம் என்னதான் இல்லை என்று இவ்வளவு நாட்கள் இத்தனை கேவலப்பட்டேன் என்று எண்ணியபோது பெருமூச்சு ஒன்றும் நீண்டதாய் வந்தது. எல்லாம் விதியின் செயல்தான் அன்றி வேறென்ன என்று மனம் நின்மதி அடைந்தது. அவனுக்கும் அவளுக்குமான நெருக்கம், இல்லை நெருக்கம் என்ற…

  14. நாள் ஒன்று வரும் மாவீரர் தின நினைவாக எழுதப்பட்ட நாடகம். எழுத்து ஆக்கம்: இளங்கோ, பின்னணி இசை கோர்ப்பு : சசி வர்ணம் நடித்த மற்றும் குரல் வடிவம் தந்த அனைத்து கலைஞ்சருக்கும் நன்றிகள். (எல்லோருடைய பெயர்களும் என் கை வசம் இல்லை - அடுத்த பதிவில் இணைக்கின்றேன் மன்னிக்கவும்) கதைக் களம் ஆனது புலம் பெயர் நாடு, தாயகம் இரண்டையும் உள்ளடக்கி இருக்கும். புலம் பெயர் நாட்டில் ஆரம்பித்து தாயகம் நோக்கி நகரும். இறுதியில் புலம் பெயர் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி நிறைவுறும் தமிழரின் போராட்டம் குறித்த நம் இளையவர்களின் புரிந்துணர்வு, விட்டு செல்லப்பட்ட பொறுப்புகள் சம காலத்தில் தாய் மண்ணில் நடக்கின்ற அவலங்கள், முன்னால் போராளிகளின் நிலைமை, தமிழராய் நாம் அனைவரும் ஒற்றுமையாய் அணி திரள வ…

  15. கதையின் ஆரம்பப் பகுதியைப் பார்க்க, பின்வரும் இணைப்பில் அழுத்தவும்...!. http://www.yarl.com/forum3/index.php?showtopic=137109 பகுதி-2 பரந்து கிடந்த அந்தச் சிவப்புக் கல் மலைக்குவியலின், வாய்ப்பக்கத்தை நோக்கித் தனது காரைச் செலுத்திய ‘ மாயா', அங்கு தனியாக நின்றிருந்த ஒரு ‘யூகலிப்டஸ்' மரத்தின் அருகே நிறுத்தினாள்! அந்த மரமும், அவளைப்போலவே பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பது போலவே அவளுக்குத் தெரிந்தது. ‘உலுறுவின்' மேலே சென்று, அதிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக, உல்லாசப்பயணிகள் சிலர் வரத் தொடங்கியிருந்தனர். ‘உலுறுவை' அவள் பார்க்கும் விதத்துக்கும், மற்றவர்கள் பார்க்கும் விதத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகத் தான் அவள் எண்ணினாள். எல்லாரும் ‘கயிலாயம்' போவ…

  16. ..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு மங்கிய வெளிச்சத்தில் ..கடிகாரம் மணி 1.05 காட்டியது ... நடு நிசி....எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்து தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் தூங்க முயற்சிக்கிறாள் ..அருகே இரு குழந்தைகளும் ஆழ்ந்த் நித்திரை ..... முன்னைய நாட்கலேன்றால் அவரவர் அறையில் தனியே படுப்பார்கள். இரவில் ஏதும் அவசரமென்றால் கதவைத்தட்டி அனுமதிபெற்று ...உள் வரவேண்டும் எ ன்பது பாஸ்கரனின் கண்டிப் பான கட்டளை. இந்நாட்டு வழக்கப்படி ஆணுக்கு ஒன்றும் பெண்ணுக்கு ஒன்றுமாக மூன்று அறை கொண்ட வீட் டில் தான் ஒரு குடும்பத்தை அனுமதிப்பார்கள். சில வாரங்களா…

  17. இன்று எனக்கு நன்கு அறிமுமான ஒரு நண்பரை சந்திப்பதாய் ஒப்பந்தம் இருந்ததை கைத்தொலைபேசி சிணுங்கியபடியே அறிவித்தது. மனதில் அதைக் குறித்துக்கொண்டேன். அவருக்கு பின் மதியவேளை அவரை சந்திப்பதாகவும், நாம் ஒஸ்லோவின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர் ஒன்றில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் சந்திப்போம் என்றும் குறும்செய்தி அனுப்பினேன். ”சரி” என்று பதில் குறுஞ்செய்தி வந்தது. கோப்பிக்கடைக்கு வெளியே நண்பர் உட்கார்ந்திருந்தார். அவரருகே உட்கார்ந்துகொண்டேன். பரிமாறும் அற்புத அழகியொருத்தி என்ன வேண்டும் என்றாள். ஒரு தேத்தண்ணி என்றேன். என்ன தேத்தண்ணி என்றுவிட்டு மாம்பழம், தோடம்பழம், இன்னும் பல பெயா்களைக் கூறி இதில் எது வேண்டும் என்றபடியே புருவத்தை உயர்த்தினாள், மாம்பழம் எனக்குப் பிடிக்கும் என்பதால் ம…

  18. இன்னும் இரண்டு மாதங்கள் தான். சுசீலாவுக்கு எல்லையில்லா அவஸ்தை, மகிழ்வு, பயம் என ஒன்றுசேர்ந்த கலவையான உணர்வு ஏற்பட்டது. எந்த நேரத்திலும் அவள் தயாராகவே இருக்கிறாள். எத்தனை நாட்களாகிவிட்டன ஓடியாடித் திரிந்து. கிட்டத்தட்டச் சிறை வாழ்க்கை போலத்தான். என்ன விரும்பிய உணவு, கணவனின் ஆதரவான விசாரணை, பெற்றோரின் தொடர் தொலைபேசி விசாரிப்புக்கள் என்று எத்தனை தான் இருந்தாலும் கணவன் அருகே இல்லையே என்னும் குறையும் பெரிதாகத்தான் தெரிந்தது. இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடுவேன் என்று சுதாகரன் கூறினாலும் அவன் தன்னிடம் வந்து சேரும் வரை சுசீலாவுக்கு நின்மதி இருக்கப் போவதில்லை. யார் என்ன ஆறுதல் கூறினாலும் கணவன் அருகிருப்பதே பெரிய பலம். நோய் வாய்ப்பட்டிருக்கும் தந்தையை விட்டுவிட்டு வரமுடியாததால் த…

  19. Started by Innumoruvan,

    'ரி-56 ஆல் 'ரச்' அடிச்சுப் பாத்தபோது, ற்றிகரை விரல் அமுக்கியதற்கும், குண்டு வெளிக்கிட்டு இலக்கை அடைந்ததற்குமிடையேயான நேரம் எத்தனை சிறியது என்பது என் மூளை கிரகிக்க முடியாத சிறியதாய் இருந்தது.... படங்களிலும் கதைகளிலும் துப்பாக்கி சுடுதலைப் பார்த்ததற்கும் சுட்டபோது உணரப்பட்டதற்குமிடையேயான வித்தியாசம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. சுடுதலின் ஒலி எத்தனை பெரியது! அது செவிப்பறையில் எத்தனை கடினமாய் உதைத்தது என்பதும், துப்பாக்கியின் எனது தோளின் மீதான உதைப்பின் பரிமாணமும் நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிதாய் இருந்தது. சண்டைகளைத் திரைப்படத்தில் பார்ப்பதற்கும் ஒரு குண்டு சுடுவதில் உள்ள உடல் வருத்தத்திற்குமிடையேயான வேறுபாடு அப்போது தான் என்னால் உணரப்பட்டது. அந்த சுடுக…

  20. கணிதப்பாடத்தில் ஒரு சந்தேகம் தீர்க்கக் கேட்டுவந்தாள் சங்கீதா, யாரையுமே ஏறிட்டுப் பார்க்காத அழகுத் திமிரோடு, அவள் அறிவுத் திமிரும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. ஆனாலும் கணிதத்தில் வேங்கைப் புலியான சங்கரனிடம் சந்தேகம் கேட்கும்போது மட்டும், கிளிபோலக் கொஞ்சுவாள். சங்கரனுக்கும் தான் அழகன் என்ற திமிர் உண்டு. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்காத திமிர். ஆனாலும்! சங்கீதாவிடம் மட்டும் அந்தத் திமிர் மோதமுடியாது வழிந்து நிற்கும். அதற்குக் காரணம் என்னவோ..? இருவருக்கும் ஒன்றாக அமைந்த அந்தக் குணாதிசயம்தான் காரணமோ..? ஆமாம்! எதிலும் அவசரமின்றி ஆறுதலாகக் கணக்கிட்டுக், காலையில் நித்திரையால் எழும் நேரம், படிக்கும் நேரம், குளிக்கும் நேரம். உணவு உட்கொள்ளும் நேரம். இன்ன உடைதான் இன்று என்று நேற்…

  21. பத்தாவது தேறியதும். தொடரந்து படிப்பைத் தொடர்வதற்கு என் குடும்பப் பொருளாதாரம் இடம்தர மறுத்தது. விவசாயத் துறையில் பயின்று அதில் முன்னேற முயன்ற எனக்கு ஒரு கூட்டுத்தாபன ஆலையில் இயந்திரங்களை இயக்கும் வேலை. மாமாவின் சிபாரிசு மூலம் கிட்டியது. என் மகனும் உத்தியோகம் பார்க்கிறான்...! என்ற மகிழ்ச்சியும், பெருமையும் அம்மாவின் முகத்தில் பிரகாசித்தது. இவன் சாதகத்துக்கு தண்ணீர் வாய்காலைத் தாண்டும் யோகமும் இல்லை. ஆனையிறவையும் தாண்டமாட்டான்...! என்று அம்மாவுக்கு யோசியன் சொல்லிய அடுத்த மாதமே, ஆனையிறவோடு மகாவலி கங்கையையும் தாண்டி மட்டுநகர் சென்றுவிட்டேன். சமுத்திரமும் தாண்டிப் புலத்திற்கு வந்ததும், குழந்தைப் பாக்கியமே இல்லை என்ற யோசியத்தையும் மீறி மூன்றுக்கு மேல் வேண்டவே வேண்டாம் என்று கட்ட…

  22. பாகம். 4 பதிவின் தொடர்... எதிர்பாராத கெளசல்யாவின் சந்திப்பு கல்லூரி வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அழகிய மாணவிகளில் ஒரு தாமரைப்பூ போன்று அதன் செந்நிற அழகும் கொண்டவள் கெளசல்யா. பளிங்குபோன்று பளபளப்பாக மின்னும் சருமம். வளைந்து நெளிந்த வாளிப்பான கட்டுடல். நாணம் கொண்ட அச்சத்துடன் நிலம் பார்க்கும் கண்கள், புன்னகையால் விருந்து தர முயல்வது போன்ற இதழ்கள். பூரணமான பெண்மைக்குரிய அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் என்று நண்பர்கள் கூறுவது பொய்யல்ல. அவளை யாராவது மாணவன் சீண்டினால், மற்றப் பெண்களைப்போல் சீறிச் சினந்து ஆசிரியரிடம் போட்டுக் கொடுப்பது, அல்லது சீண்டுபவர் காலத்துக்கும் நினைத்து நினைத்து அவமானப்படும்படி முறைத்து, ஒரு வெறுப்பான பார்வையை வீசுவது என்று இல்லாது, என…

  23. பகுதி - 1 அன்றைய காலைப் பொழுதின் விடியலிலேயே , பாலைவனமொன்றின் சகல குணாதிசயங்களும் கலந்திருந்தன. கண்களைத் திறந்து பார்க்கக் கூட இயலாத அளவுக்கு, அதன் பிரகாசம் இருந்தது. நீண்ட ஒரு கருநிற மலைப்பாம்பொன்றின் வளைவுகளுடன், அந்த நெடுஞ்சாலை நீண்டு கிடந்தது. முதல் நாள் இரவின் ‘கடுங்குளிர்', மெல்லிய நீர்ப்படலமொன்றை, அந்த வீதியின் மீது தடவியிருந்தது. வரப்போகும் ‘வெயிலின்' கடுமையுணர்ந்த கங்காருக்கள், வீதியின் இரு பக்கங்களிலும் பரந்திருந்த, மஞ்சள் நிறமான கோரைப்புற்களின் மறைவுகளிலிருந்து, வீதியில் படிந்திருந்த நீரைத் தங்கள் நாக்குகளினால், மெல்ல மெல்ல நக்கி எடுப்பதற்காக வந்து கொண்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால், அன்றைய பொழுது தாகத்துடனேயே கழிந்து விடக்கூடும். முந்திய இரவுகளில்…

  24. முக நூலில் கந்தையா முருகதாசன் என்னும் பத்திரிகையாளர் ஒரு விண்ணப்பம் வைத்தார். எழுத்தாளர்களை எல்லாம் இணைத்து ஒவ்வொரு வாரம் ஒருவர் கதை எழுதுவது என்று. அதாவது ஒருவர் ஒரு கதையைத் தொடங்க அடுத்த வாரம் இன்னொருவர் தொடர்வார். நான் யாழில் தொடங்கினால் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே வேறொரு ஊரின் இணையத் தளத்தில் அதை ஆரம்பிப்பதாக இரு நாட்களில் அறிவித்துவிட்டார். நாம் இங்கே நிறையப்பேர் கதை எழுதுபவர்கள் இருக்கிறோம். நாம் ஒரு தொடரை இங்கே ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. உறவுகளே! உங்கள் கருத்துக்களும் ஆதரவும் எதிர்பார்க்கப் படுகிறது.

  25. எண்ணைவளம் மிக்க சவூதி அரேபியா, அரசராலும் அவரது சொந்த பந்தங்களாலும் ஆளப்படும் ஒரு முடியரசு நாடு. அரச அமைச்சர்களும், முக்கிய அதிகாரிகளும் அரச குடும்பத்தினை சேர்ந்தவர்கள். பல பெண்களை மணக்கும் அரச குடும்ப ஆண்மக்களால் உருவாகப் பட்ட கணக்கு இல்லா வாரிசுகளினால், பெரும்பாலும் அமைச்சர்கள் எல்லோரும் இளவரசர்கள் தான். சவூதியின் மொத்த செல்வமும் இந்த அரச குடும்ப, மற்றும் இளவரசர்கள் வசம் தான் சிக்கி உள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போல தாய்லாந்திலிருந்தும் மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இவ்வாறாக இளவரசர் ஒருவரின் வீட்டுக்கு 23 -24 வருடங்களின் முன்னர் சுத்தம் செய்யும் பணியாளர் ஆக வந்து சேர்ந்தார் ஒரு தாய்லாந்து கிராமவாசி. அவரைப் போல் கிட்…

    • 64 replies
    • 14.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.