கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
தாயை எண்ணிஎண்ணி நந்தாவுக்குத் தலைவலி வந்தது தான் மிச்சம். எதுவித முடிவையும் எடுக்க முடியவில்லை. இத்தனை நாள் எத்தனை துன்பத்தை அனுபவித்தாகிவிட்டது. இருந்தும் மனதில் முடிவெடுக்க முடியாத பயம் சூழ்ந்து தூக்கம் இழக்க வைத்ததுதான் மிச்சம். நான் ஏன் மற்றவர்களுக்குப் பயப்படுகிறேன்? அவர்கள் என்ன கூறினால் என்ன. எனக்கு ஒன்று என்றால் அவர்களா ஓடி வரப் போகிறார்கள். எனக்கோ என் குடும்பத்துக்கோ அதனால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று தெரிந்த பின்னாலும் என்ன தயக்கம் என தன்னைத்தானே கேட்டும் பயனில்லை. இத்தனை நாள் மற்றவர்கள் மனதில் என்னைப் பற்றி இருந்த பிம்பம் அழிந்துவிடுமே என்னும் எண்ணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது மனதை அங்குமிங்கும் அலைக்கழித்தும் விடை தான் கிடைக்கவில்லை. ஏற்கனவே அ…
-
- 18 replies
- 2.7k views
-
-
டிசம்பர் மாதம் என்று சொல்ல முடியாதவாறு வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது. இன்னும் பத்து நாட்களில் அடுத்த ஆண்டு வந்துவிடும். சில்லென்ற காற்று வீசுவது யன்னலூடாக வெளியே அசையும் மரங்கள் உணர்த்தின. குளிர் காலத்தில் வெயில் வந்தாலே லண்டனில் ஒரு ஊசிக் காற்றும் அதனோடு சேர்ந்து வீசும். அபிக்கு வெளியே செல்லவே மனமின்றி இருந்தது அந்தக் காற்றைப் பார்க்க.ஆனாலும் என்ன செய்வது வேலைக்குச் செல்லத்தானே வேண்டும். அண்ணனின் உழைப்பில் சாப்பிட முடியுமா ??? என மனம் கேட்டுக்கொண்டது. அபியின் அண்ணன் வசந்தன் லண்டனில் ஆறு ஆண்டுகளாக வசிக்கிறான்.PR கிடைத்துவிட்டதுதான். ஆனாலும் தங்கைக்கும் மகேந்திரனுக்கும் ஏயென்சியில் கட்டின காசுக்கடன் இன்னும் முடிந்தபாடு இல்லை. அதனால் இரவு பகல் என்று வேலை. இ…
-
- 9 replies
- 2.1k views
-
-
மீண்டும் வசந்தகாலம் மரம் ,செடி, கொடி பூத்து குலுங்க தொடங்கிவிட்டன.வீட்டுத்தோட்டம் வைக்கும் சிட்னிவாழ் பெரும் குடிமக்கள் தங்களது முயற்சியில் தீயா வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்.அவர்கள் தீயா வேலை செய்வதைப் பார்த்து சுரேஸும் கொஞ்சம் மிளகாய் கன்றுகளை வாங்கி வந்து நடத்தொடங்கினான். சுரேஸின் நடமாட்டத்தை அறிந்த பின் வீட்டு நாய் குரைத்தது.உடனே நாயின் உரிமையாளர் ஆங்கிலத்தில் நாயைவிட அதிக சத்தத்தில் குரைக்க நாய் குரைப்பதை நிறுத்தியது. மீண்டும் குரைக்க தொடங்க ஆத்திரமடைந்த சுரேஸ் "ஏய் நாயே நானா, நீயா இந்த ஏரியாவுக்கு முதல் வந்தது"உரத்த குரலில் கத்தியவன் ஊரா இருந்திருந்தால் பொட்டுக்குள்ளால் பூர்ந்து வந்து உன்ட காலை அடிச்சு நொருக்கியிருப்பேன் என் மனதில் திட்டியபடியே மிளகாய் கன்றுகளை ந…
-
- 14 replies
- 4.7k views
-
-
வித்தியாசமான வீரன் கப்டன் ஊரான் அல்லது கௌதமன் அழியாச்சுடர் ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும். 2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி.அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு வீட்டாருக்கு மட்டுமல்ல ஒருநாள் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துப் புலியாவான் என்று யார் அன்று நினைத்திருப்பார்கள் ? இன்பசோதிய…
-
- 5 replies
- 1.3k views
-
-
கடந்த கிழமை நியூயோர்க்கிலிருந்து சன்பிரான்ஸ்சிஸ்கோ வரும் போது என்றைக்கும் இல்லாத மாதிரி முன்னால் போன மனைவி அவசரகால கதவு இருந்த இடம் ஆட்களும் இல்லை.இடமும் பெரிதாக இருந்ததால் அதிலேயே இடம் பிடித்துவிட்டா. மற்றைய விமானங்களில் இருக்கை இலக்கங்கள் தருவார்கள்.அதை தேடிப் பிடித்து இருந்திடலாம்.முன்னுக்குப் போனாலும் பின்னுக்குப் போனாலும் எமது இருக்கைகள் எமக்காக காத்திருக்கும்.ஒரேஒரு வில்லங்கம் பின் இருக்கைக்கு போகிறவர்கள் முன்னுக்கு ஏறினால் கொண்டு போற பொதிகளை முன்னுக்கு எங்கே இடம் கிடைக்குதே அங்கே தள்ளிவிட்டுட்டு போய்விடுவார்கள்.எமது இருக்கை முன்னுக்கு இருந்தாலும் கடைசியாக ஏறினால் பொதிகள் வைக்க முடியாது.தேடித் திரிந்து பின்னுக்கு எங்காவது தான…
-
- 16 replies
- 4.2k views
-
-
அஞ்சலி தன் சந்தோசம் என்றாலும் துக்கம் என்றாலும்.... முதலில் இவனோடுதான் பகிர்ந்துகொள்வாள். அன்றும் அப்படித்தான்..... அவள் இந்தியாவிலிருந்து போன் பண்ணியிருந்தாள். வழமைக்கு மாறான அவளது கனமான குரல்... அவள் நன்கு அழுதிருக்கிறாள் என்பதனை உணர்த்தியது. "என்ன அஞ்சு... என்ன ஆச்சு? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" என அவன் கனிவாக விசாரிக்க... மறுமுனையில், விம்மத் தொடங்கினாள் அஞ்சலி. "என்ன நடந்தது அஞ்சு....? என்ன ஆச்செண்டு சொன்னாத்தானே தெரியும்.... " என மீண்டும் வினவ, "நான் நாளைக்கே மலேசியா வாறன். எனக்கு இங்க இருக்க விருப்பமில்லை. நான் லண்டனுக்கு திருப்பிப் போகேலடா. உன்னோடயே வந்து இருக்கப்போறன்.... !" சொல்லிவிட்டு மீண்டும் விம்மியழத்தொடங்கினாள். "அஞ்சு.... என் செல…
-
- 4 replies
- 3.7k views
-
-
2010 ஜனவரியோடு அவனும் அஞ்சலியும் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகிவிடும். இந்த நிலையில்தான், அஞ்சலி அவனுடன் பேசும்போதெல்லாம்.... அடிக்கடி அவனிடம் ஒரு விடயத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தாள். "எப்பயடா உன்னை பாக்கிறது?" என அவள் அடிக்கடி கேட்க ஆரம்பித்ததிலிருந்தே, அஞ்சலி அவனை ரொம்பவே மிஸ் பண்ணுறாள் என்பதனை இவனால் உணரமுடிந்தது. ஆனால் இவனது அப்போதைய சூழ்நிலை அவளது விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றக்கூடியதாக அமைந்திருக்கவில்லை 'அஞ்சலியை பார்க்கவேணும்... அவளோடையே இருக்கவேணும்....ரொம்ப சந்தோசமாக.... மனம் நிறைந்த காதலோடு வாழவேணும்..... !' இதைத்தவிர அவனுக்கு அதிகபட்ச ஆசைகள் என்று எதுவும் இருந்ததில்லை. அவனது எண்ணமும் சிந்தனையும் அதுமட்டுந்தான். அவனது மனம் பூராவும் அஞ்சலியும் அவ…
-
- 4 replies
- 1.7k views
-
-
அவனுடைய கையில் UK வீசா அலுவலகத்தால் கொடுக்கப்பட்ட ஆவண உறை இருந்தது. அந்த மூடிய உறைக்குள்தான் வீசா கிடைத்திருக்கின்றதா இல்லையா? என்ற அவனதும் அஞ்சலியினதும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முடிவும் அடங்கியிருந்தது. ஒருவித படபடப்போடு அதைத் திறந்தவனுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மிகப் பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. சில அநாவசியக் காரணங்களை வீசா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களாகக் கூறி அதை மூன்று பக்கத்தாள்களில் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தனர். 'அஞ்சலியுடன் கூடிய விரைவில் சேரப்போகிறோம்' என்ற கனவில் இருந்தவனுக்கு.... 'அது இப்போதைக்கு இல்லை' என்பது... மிகப்பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் கொடுத்திருந்தது. இவன் தன்னை நினைத்து கவலைப்பட்டதைவிட... அஞ்சலி இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள…
-
- 4 replies
- 2.1k views
-
-
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரிந்திருக்கும் காதலர்களுக்கு பேருதவியாக இருக்கின்ற இந்தக் காலத்தில், அஞ்சலியையும் இவனையும் பற்றி சொல்லியா தெரியவேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் பேசிக்கொள்வார்கள். 'ஸ்கைப்' என்கின்ற ஒன்று அவர்கள் இருவரும் முகம்பார்த்துப் பேசுவதற்கு பெரும் வசதியேற்படுத்திக் கொடுத்திருந்தது. அவனுக்கு வேலைப்பழு அதிகமாக இருந்தாலும் அஞ்சலியுடன் கதைப்பதற்காக நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை. இருந்தாலும் சில சமயங்களில் வேலைப்பழு காரணமாக சரியான நேரத்தில் ஃபோன் எடுப்பதற்கு அவ்வப்போது மறந்துவிடுவான். அப்பொழுதெல்லாம் அஞ்சலி கொஞ்சம் கோபப்பட்டாலும் இவனது கெஞ்சும் வார்த்தைகளினால் பின்னர் சமாதானமாகிவிடுவாள். அவனுக்கும் அவளுக்குமிடையில் சண்டை வருவதென்றால், …
-
- 8 replies
- 3.2k views
-
-
விலாசம் மறந்த வீரனின் சுவடுகள் தளபதி ஜெயம் (பாலகுரு சுவேந்திரன்) (பாலகுரு சுவேந்திரன் - பிறப்பு - 1965ம் ஆண்டு) வெற்றிகளுக்கு விழுதான வேர்களை உலகம் என்றைக்கும் உணர்ந்து கொள்வதில்லை. வீரத்தின் வேர்களுக்கான விலாசங்களும் அப்படியே வெளியில் அவை ஒருபோதும் வெளிச்சமிடப்படுவதில்லை. இத்தகைய வேராக வெளியில் வராத விலாசமாக எங்களோடு எங்கள் மக்களோடு வாழ்ந்து வரலாறாகிப் போனவர்களில் தளபதி ஜெயமண்ணாவும் ஒருவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புத மனிதன். கதாநாயகத் தகுதியையோ கவர்ச்சியான மேடைப்பேச்சு வல்லுனர்களையோ புலிகளின் பாசறைகள் வளர்த்ததில்லை. தலைவனின் வேதம் போல ‚'சொல்லுக்கு முன் செயல்' இதுவே விடுதலைப்புலகள் வரலாற்றின் வெற்றி. திறமைகள் மட்டுமே அந்தந்த தகுதிகளைப் பெற்றுக் கொ…
-
- 3 replies
- 1.8k views
-
-
விநாசியர் வீட்டில இருந்ததை விட தோட்டத்தில் நின்றதுதான் அதிகம் தனது வயதான காலத்தில் ஒய்வை சற்றும் விரும்பாத மனிதர் எப்பபாரு வயல் ..தோட்டக்காணி என்று மாறி மாறி நடந்து திரிவது பிள்ளைகளின் படிப்பு வாழ்க்கை என குடும்ப சுமையை தூக்கி நிக்கிற ஒரு மனிதனா அவரை ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் கலகலப்பான பேச்சு சினம் கொள்ளாத முகம் இடம் பெயர்ந்து அவர் கணியில் ஒரு குடில் போட்டு இருந்த எமக்கு அம்மாபச்சை அரிசிக்கு அவரின் கத்தரிக்கா பலமுறை ஒன்றி இருந்தது..இருக்கு. ஒருபக்கம் வெங்காயம் ..ஒருபக்கம் முளகாய் ..தண்ணி ஓடும் பாத்திக்கு இரு கரையும் மேல் கீரை மிகுதி தண்ணி வழிந்து போகும் இடத்தில் பூசணி என மிக நேர்த்தியா திட்டம் இட்டு பயிர் செய்வது அவரின் சிறப்பு.இறைக்கும் தண்ணி போகும் இடம் எல்லாம் ஒ…
-
- 20 replies
- 2.3k views
-
-
அனுராதபுரப் புகையிரத நிலையத்தில் ஒரு பெருமூச்சோடு தனது பயணத்தின் பாதி தூரம் கடந்த நிம்மதிய்டன் தன்னைச் சற்று ஆசுவாசப் படுத்தியது அன்றைய யாழ்தேவி! தனது பயணத்தின் பாதித் தூரம் கடந்த நிம்மதியுடன் வாசுகியும் தனது பயணப் பொதியைத் தோளில் தொங்கவிட்ட படியே யாழ்தேவியை விட்டு இறங்கினாள்! ஏழு வருடங்களுக்கு முன்னர் அங்கு ரீச்சர் வாசுகியாக இறங்கும் போதிருந்த பயமும், தயக்கமும் அவளிடமிருந்து விடை பெற்று நீண்ட காலம் போய் விட்டது போல இருந்தது! வழக்கமாக அவளுடன் கூடவே பயணிக்கும் மாம்பழம், பலாப்பழம், நல்லெண்ணெய், பனங்கிழங்கு, முருங்கைக்காய் போன்றவையும் அவளுடன் இன்று பயணிக்கவில்லை! பாரதி கண்ட புதுமை பெண்ணைப் போன்ற மனநிலையில் அனுராதபுரம் பஸ் நிலையத்தை நோக்கி அவளது கால்கள் நடந்து …
-
- 13 replies
- 3k views
-
-
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் வரை நான் கல்வி பயின்றது கலவன் பள்ளியில். ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே படித்தோம். விளையாட்டில் நான்தான் முதல் எனது பள்ளியில். ஓட்டப் போட்டியில் என்னை வெல்ல யாரும் இல்லை என்று அப்போது எனக்கு கொஞ்சம் தலைக்கனமும்தான். மாவட்ட ரீதியான போட்டி இரு வாரங்களில் நடைபெற இருந்தது. அதற்காக ஆண்களில் மூன்று பெண்களில் மூன்று பேராகத் தெரிவு செய்து ஆசிரியர்கள் எமக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தனர். பெண்களில் நான் என்றால் ஆண்களில் கண்ணன் என்னும் ஒருவன் நன்றாக ஓடுவான். சாதாரணமாகவே எனக்கும் அவனுக்கும் சரிவருவதில்லை. எப்போது பார்த்தாலும் எலியும் பூனையும் தோற்றுப்போகுமளவு சண்டை போட்டபடி இருப்போம். அவன் போய் வாத்தியாரிடம் கோள் சொன்னாலும் அடி அவனுக்குத்தான். அதன…
-
- 13 replies
- 1.2k views
-
-
அருகில் உள்ள உணவகமொன்றில் வேலை செய்யும் என்னுடைய பிரெஞ்சு கார நண்பனொருவன் இன்று என் வேலையிடத்துக்கு காலையிலேயே சோகத்தோடு வந்தவன் பாரில் நின்ற என்னிடம் ஒரு கிளாஸ் விஸ்க்கி வேணுமென்றான் . காலங்காதாலையேவா என்ன பிரச்னை என்றேன் ..குடிக்கிறதுக்கு நேரம் காலம் என்று ஏதாவது சட்டமிருக்கா என்றான் ..இல்லைதான் உனக்கு வேலை இல்லையா என்றதும் அதெல்லாம் தன்பாட்டில் நடக்கும் என்றவனுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்தபடி மேலே சொல்லு என்றேன் .. எனக்கும் மனிசிக்கும் பிரச்னை ... இதை தானே ஆறு மாதமாய் சொல்கிறாய் புதிதா வேறை ஏதாவது சொல் .. இப்போ பெரிய பிரச்னை ... என்ன உன்னை போட்டு அடிச்சாளா .... அதெல்லாம் அப்பப்போ நடக்கிற சின்ன பிரச்னை ... அப்போ நீயே சொல்லு .... …
-
- 3 replies
- 5k views
-
-
1990 ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பகாலகட்டம். தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் சண்டைகள் பரவலாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்மாவட்டம் கோட்டையைச் சுற்றி தளபதி பிரிகேடியர் பானு அண்ணை தலைமையில் உருவாக்கப்பட்ட இறுக்கமான முற்றுகையைத் தகர்க்க முடியாமல் சிறிலங்காப்படை திணறிக்கொண்டிருந்தது. முற்றுகையை உடைக்கச் சிறிலங்கா தனது முப்படைகளின் முழுப்பலத்தையும் பிரயோகித்தது. நூற்றியேழு நாட்கள் கடுமையாகப் போரிட்ட சிறிலங்கா இராணுவம் இறுதியில் இரவோடிரவாக யாழ்; கோட்டையைக் கைவிட்டு ஒடிவிட்டது. யாழ்க்கோட்டையின் பின்னடைவை ஈடு செய்வதற்காக, ஒரு மாதத்திற்குள்ளாகவே பலாலி இராணுவத்தளத்தில் இருந்து பாரிய நகர்வைச் செய்தது சிங்கள இராணுவம். தாக்குதலணிகள் கடுமையான …
-
- 21 replies
- 2.8k views
-
-
அதிகாலை ஒரு மணி இருக்கும். வெடிச்சத்தம் காதைப் பிளக்க.. நித்திரை இடையில் கலைகிறது. "சண்டை தொடங்கிட்டுது எல்லாரும் எழும்புங்கோ" அம்மா அவசரப்படுத்திக் கொண்டிருக்க, பலாலிப்பக்கம் இருந்து 'ஆட்லறிகளும்' கூவுகின்றன. "மண்டை தீவுப்பக்கம் தான் அடி விழுகுது" அப்பா தன் பங்குக்கு சொல்லும் பொழுதே வெடிச்சத்தம் உக்கிரமடைகிறது. பயம் கெளவிக் கொள்ள வீட்டை விட்டு வெளிய வந்து மாமரத்துக்கு அருகில் நின்றபடி அவதானிக்கிறோம். "சந்திரிக்கா போட்ட யுத்த நிறுத்தம் இந்தளவும் தானா?" அம்மா ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக் கேக்க, "அவள் கதிரை பிடிச்சிட்டாள் எல்லோ எனி என்னவும் செய்வாள்" அப்பா பதிலுரைக்கிறார். நித்திரை குழம்பிய பக்கத்து வீட்டு 'அங்கிளும்'. வெளியே வந்து, வீதியில் நின்றபடி " என்ன அடி தொடங்கிட்டு…
-
- 8 replies
- 1.7k views
-
-
வேலையால் வீடு திரும்பும் போது ரோரோன்டாவில் இந்த வாரம் அடிக்கும் சணல் வெக்கை என்னையும் வாட்டி எடுத்தது .பாடசாலை விடுமுறை என்பதால் வீட்டில் சின்னவனை காணவில்லை. பாஸ்கெட் போல் விளையாட நண்பர்களுடன் போயிருப்பான் .மனுசி வேலையால் வந்து ஏ சி யை உச்சத்தில் விட்டு உண்ட களைப்பு தீர தூக்கம். பெரியவன் வில் ஸ்மித் இன் பழைய சீரியலுடன் டி வி யில் மூழ்கியபடி. ஏழு முப்பதற்கு தொடங்கும் அலெக்ஸ்இன் ஜேப்படியில் யார் கூடுதல் பதில் சரியாக சொல்லவதாக தினமும் அவனுக்கும் எனக்கும் போட்டி.. இன்று எனக்கு ஐந்து அவனுக்கு மூன்று. குளிர்சாதன பெட்டியில் நன்கு உறைந்த ஸ்ரவுட்டை உடைத்து வாயில் விட்டபடி வீட்டிற்கு பின்னால் இருக்கும் தோட்டத்தை பார்க்கிகின்றேன். அத்தனை தாவர உயிர்களும் தண்ணீர் வேண்டி அழுது ஓய…
-
- 8 replies
- 1.8k views
-
-
வெறிகாரர்களும், வெறிகாறிகளும் ஒரு கதைசொல்லியும் நானும் எத்தனையோ குடிகாரர்கள், வெறிகாரர்கள், வெறிகாறிகளைக் கண்டிருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன். 1980ல் செங்கலடியில் முதலாவது அனுபவம் கிடைத்தது. அன்று அந்த நண்பன் குடித்தது பிளேன் டீ நிறத்தில் இருந்த தென்னஞ்சாராயம். ஆனால் எடுத்த வாந்தியோ ஈஸ்மன்கலர் சித்திரமாய் இருந்தது. பின்பு 1986 இல் இந்தியாவில் இரண்டு, முன்று புதிய குடிகாரர்களுடன் தினமும் இரவில் மொட்டைமாடியில் பெரும்பாடுபட்டிருக்கிறேன். அவர்களில் ஒருவன் எனது மடியில் படுத்திருந்தே குடித்தான். சிரித்தான். காதலில் உருகினான், அழுதான். வாந்தியெடுத்தான். நான் தினமும் அவனையும் கழுவி, மொட்டைமாடியையும் கழுவிய நாட்கள் அவை. பின்பு நோர்வே வந்தபின்னும் வெறிக…
-
- 0 replies
- 678 views
-
-
வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை. விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமையின் இயங்கு சக்தி மட்டும் என்றென்றும் உயிரோடு வாழ்ந்து பல்லாயிரம் பேரை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் தீயாகி வியாபித்திருக்கும். இத்தகைய அடையாளங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஒருவர் றட்ணம் என்ற இயக்கப் பெயரைக் கொண்ட தெய்வேந்திரம் ஜெயதீபன் என்ற இயற்பெயரோடு நெருப்பின் சக்தியாக இருந்ததை காலம் ஒரு போதும் அடையாளப்படுத்தியதில்லை. 1974ம் ஆண்டு உரும்பிராய் மண்ணில் தெய்வேந்திரம் தம்பதிகளின் 2வது குழந்தையாகப் பிறந்த ஜெயதீபன் ஒரு சாதா…
-
- 10 replies
- 7k views
-
-
சுதாவின் நீண்டநாள் ஆசை அன்றுதான் நிறைவேறியது.அம்மா இவ்வுலகைவிட்டு போகமுதல் தான் சிட்னியில் கட்டிய வீட்டுக்கு ஒருமுறை அழைத்துகாட்ட வேணும் என்ற அவளது ஆசை அன்று நிறைவேறியதயிட்டு ஒரே சந்தோசம்.சுதாவின் அம்மா இப்பொழுதுதான் முதல் முறையாக வெளிநாட்டுக்கு வெளிக்கிடுகின்றார்.ஊரில் அயலவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு என வெளிக்கிட தானும் ஒரு நாள் மகளிடம் போவேன் என்று நினைத்துக்கொண்டாள்.அவளுக்கு இப்ப 75 வயசு .மிகவும் கஸ்டப்பட்டு தான் விசா எடுத்தார்கள்.பிணை பணம் 10ஆயிரம் அவுஸ்ரெலியா பணம் கட்டி கடைசி குடும்ப அங்கத்தவர் என்ற பிரிவில் ஒரு மாதிரியாக விசாவை எடுத்துப்போட்டார்கள். விமான நிலையத்திற்கு சுதாவும் மகள் சுருதியும் சென்றிந்தார்கள்.சக்கரநாற்காலியில் அம்மாவை விமானப்ணிப்பெண் தள்ளிகொண்டுவர…
-
- 20 replies
- 2.3k views
-
-
வேலையிலிருந்து இளைப்பாறினால் பரிசாக கிடைப்பது நேரம் மட்டுமே.முப்பதைந்து வருடங்களுக்கு மேலாக முழுநேர பணியில் இருந்தவனுக்கு , தற்பொழுது முழுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பு கிடைத்து."சும்மா இருந்து சுகம் காணு" என யோக சுவாமிகளின் வாசகம் ,எங்கயோ படித்த ஞாபகம் வரவே இது தானே சும்மா இருந்து சுகம் காணுதல் என நினைத்து இரண்டு நாள் வீட்டிலிருந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான் .சும்மா இருந்தா சுகம் காணலாம் என சுவாமிகள் சொன்னார்,ஆனால் அவனுக்கு சும்மா இருந்தா சுகம் கிடைப்பது போல தெரியவில்லையே தொல்லை தான் வருகிறதே இதற்கு என்ன தீர்வு என சிந்திக்க தொடங்கினான். சும்மா இருந்து சுகம் காணுதலின் அர்த்தம் என்ன என கூகிள் ஆண்டவனிடம் கேட்டான் .கேட்டதும் கொடுப்பவர் அவர் ஒருவரே..கூகிள் ஆண்…
-
-
- 10 replies
- 450 views
-
-
முதலாளித்துவம் ------ பணப்பலம் உள்ளவனும் பணம் படைத்தவனும் பணத்தாசை பிடித்தவனும் ஒன்று சேர்ந்தார்கள் "பிறந்தது பொருளாதாரம்" ^ எழுத்துருவாக்கம் கே இனியவன்
-
- 1 reply
- 1.3k views
-