நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
கல்லீரலும் அதன் பாதிப்பால் ஏற்படும் நோய்களும் நம் உடலானது நரம்புகள், தசைகள், எலும்புகள், இரத்த நாடி, நாளங்கள் என பலவற்றால், பிண்ணிப் பிணைக்கப் பெற்று உருவாக்கப் பெற்றதாகும். எமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தத்தமது பணிகளை சிறப்பாக செய்வதற்கு உடலின் உள்உறுப்புகள் யாவும் ஒழுங்காக செயல்பெற வேண்டியது கட்டாயமாகின்றது. இவற்றுள் ஏதேனும் ஒரு உறுப்பு செயலிழந்தால் அல்லது ஊறு பட்டால்; அது அவற்றுடன் இணைந்து செயல் பெறும் மற்றைய உறுப்புகளையும் செயலிழக்க அல்லது ஊறுபட வைத்து விடுகின்றது. எமது பழக்கவழக்கங்கள், உணவுமுறை, நாம் வாழும் சூழல் போன்ற பலவகையான காரணங்களினால் உடல் உறுப்புகள் அதனதன் செயல்களை செய்வதில் குறைபாடு ஏற்பட்டு அதனால் உடல் நலம் பல வகைகளில் பாதிக்கப்படுகிறத…
-
- 0 replies
- 17.4k views
-
-
நீரிழிவு நோயும் பாதங்களின் பராமரிப்பும் நீரிழிவு நோய் மக்களை ஆட்டிப் படைக்கும் நோயாகும். இலங்கையில் நான்குபேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்,நீரிழிவு நோய் காரணமாக வருடாந்தம் 700 க்கும் அதிகமானவர்களின் கால்கள் அகற்றப்படுவதாக தேசிய நீரிழிவு மத்திய நிலையம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், நாட்டின் சகல பகுதிகளிலும், நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்கள் உள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. கட்டுப்பாடின்றி உணவு உட்கொள்ளுதல், மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாமல் செயல்படுவது ஆகியனவே, நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் எனவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ள…
-
- 3 replies
- 17.4k views
- 1 follower
-
-
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அளித்த அருமருந்து தான் பாகற்காய். அதில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்படுத்தும் முறையும் கீழே தரப்பட்டுள்ளது. பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும். பாகற்காயின் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகற்காயின் இலைச் சாற்றில் காசிக் கட்டியை (கத்தைக் காம்பு) உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தமாகி சிரங்கு உதிர்ந்து…
-
- 5 replies
- 17.3k views
-
-
இருமல் , சளி குணமாக : கொஞ்சம் தேனை ( Honey ) ஒரு தேக்கரண்டி எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியமடைவீர்கள். குழந்தைகளுக்குக் கூட நம்ம ஊரில் இதனைக் கொடுப்பதுண்டு.இகுருவி இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும். கூடவே சாதாரண காய்ச்சல் இருப்போர் நம்மூர் மிளகு ரசத்தையும் வைத்துச் சாப்பிடலாம். நம்மூர் மிளகு ரசம் தேவையான பொருட்கள் o புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு o மிளகுப் பொடி - 2 1/2 தேக்கரண்டி o துவரம்பருப்பு - 6 மேசைக்கரண்டி o பெருங்காயம் - ஒரு சிறு …
-
- 11 replies
- 17.2k views
-
-
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு... இந்த உணவுகள் கை கொடுக்கும்! ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான குறைபாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த ஆண்களுக்கு தான் இது அதிகமாக வரக்கூடும். சமீபத்திய புள்ளி விவரங்கள் படி, 45 வயதை கடந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கும், 60 வயதை கடந்த ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளது. இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினைக் குணப்படுத்த சில மருத்துவ வழிமுறைகளும் இருக்க தான் செய்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதை பற்றி பேசுகையில், இயற்கை வழிமுறையே இதனை சரி செய்வதற்கான …
-
- 14 replies
- 17.2k views
-
-
அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல் ‘நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என்று சமீபத்திய விளம்பரங்கள்வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை. தினம் ஒரு அப்பிள் சாப்பிட்டால், டொக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டொக்டரைத் தேடிப் போவதும்அப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். அப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் போதும். ஒரு நெல்லிக்காய் மூன்று அப்பிள்களுக்குச்சமம். 1. ‘காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இர…
-
- 0 replies
- 17k views
-
-
ஆரோக்கியமான கூந்தலுக்கு ... தலை முடி ஆரோக்கியம் மாதம் ஒரு முறை மருதாணி இலைகளை அரைத்து தலைக்குத் தேய்த்தால் நல்ல குளிர்ச்சி கிடைத்து, தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். வாரத்தில் 2 முறைகள் ஆலிவ் ஆயிலை மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து, பின்பு சிகைக்காய் தூள் பயன்படுத்திக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலை முடி வளர்ச்சி தினமும் சிறிகளவு வேப்பங் கொழுந்தை எடுத்து வாயில் மென்று சாப்பிட்டால் தலைமுடி நிறைய வளரும். ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டியபின் தலைக்குத் தேய்த்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும். வாரத்திற்கு 2 முறைகள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிராது. செம்பருத்…
-
- 71 replies
- 16.8k views
-
-
. சுய இன்பம் ஆபத்தா? நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து. காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக…
-
- 38 replies
- 16.4k views
-
-
தமிழர் மருத்துவம் நோய், நோய்க்கான காரணங்கள், நோய் அறியும் முறைகள், நோய் அறிபவர் (மருத்துவர்), மருத்துவ முறைகள், மருந்து, சராசரி இறப்பு வயது, மருத்துவ முறை வெளிப்படுத்தப்படாத நிலை போன்ற செய்திகளைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. மனித உடல் அமைப்புக் குறித்த செய்திகளும் இலக்கியங்களுள் குறிப்பிடப்பட்டுள்ளன. கருத்தோன்றும் காலம், கருவின் தோற்றம், வளர்ச்சி, பிறப்புநிலை, கருச்சிதைவு, செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற மனித உயிரின் பிறப்பு முறைகளும், இவை மட்டுமன்றி ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக உயிர்த் தோற்றம் பற்றிய நிலைகளும், விலங்குகளின் தன்மைகளும் இலக்கியங்களில் விரிவாகப் பேசப்படுகின்றன. இக்கட்டுரை இவ் இலக்கியச் செய்திகளின் வழித் தமிழர் மருத்துவம் கு…
-
- 2 replies
- 16.3k views
-
-
வலது கண் அடிக்கடி துடிப்பதன் காரணம் என்ன? யாராவது தெரிந்தால் கூறுங்கள் ஏனெனில் எனது வலது கண் ஓரு வாரத்துக்கு மேலாக அடிக்கடி துடித்த வண்ணமே உள்ளது?
-
- 3 replies
- 16.3k views
-
-
மன அழுத்தம் குறைக்க ஐந்து வழிகள்... ஒரு அழுத்தம் மிகுந்த, பணிப்பளு மிகுந்த நாளுக்குப் பின் நீங்கள் என்ன செய்வீர்கள்? தொலைக்காட்சி பார்ப்பீர்களா? தியானம் செய்வீர்களா? நண்பரை அழைத்துப் பேசுவீர்களா? மக்கள் மிகுதியாகப் பயன்படுத்தும் ஐந்து வழிகளைப் பற்றியத் துணுக்கு இது. தியானம்: தியானம் மன அழுத்தத்தைக் குறைப்பதில் மிக்க உதவியாக இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தியானத்திற்கு நிறைய நேரமும் செலவழிக்க வேண்டாம். 15 முதல் 20 நிமிடங்களே போதும். ஏற்றி வைத்த தீபத்தையோ ஏதாவது ஒரு சொல்லையோ தியானக் குறிக்கோளாக வைத்துக் கொண்டால் போதும். உடற்பயிற்சி: அளவான உடற்பயிற்சி என்டோர்பின் (Endorphin) என்னும் மூளை வேதியியற் பொருளின் தோற்றத்தை ஊக்குவிக்கிறது. என்டோர்பின் நல…
-
- 9 replies
- 16.2k views
-
-
-
ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்.. காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – (விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வித…
-
- 0 replies
- 15.7k views
-
-
பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா? தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மென்மையாக ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தால், தங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் முடியை அகற்றி வருகின்றனர். அதில் கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியையும் அகற்றுகின்றனர். அந்தரங்க முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! மேலும் உடலில் வளரும் முடியை அகற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் ஷேவ் செய்வது, ட்ரிம் செய்வது, வேக்ஸ் செய்வது போன்றவை பொதுவான வழிகள். இதில் ஷேவிங் முறையைத் தான் நிறைய பேர் பின்பற்றுகின்றனர். ஏனெனில் இந்த வழியால் நமக்கு வலி இருக்காது. அந்தரங்க பகுதியில் …
-
- 13 replies
- 15.6k views
-
-
சளித் தொல்லை பாடாய்ப் படுத்துகிறதா? ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில…
-
- 1 reply
- 15.6k views
-
-
வளர்ந்த நாடுகளில் 4.6 மில்லியனும், வளர்ந்து வரும் நாடுகளில் 5.4 மில்லியனும், புற்றுநோயின் தாக்குதலுக்கு உட்படுகின் றனர். பொதுவாக இந்தியாவில் 1 லட்சம் ஜனங்களில் 110 ஆண்களும், 120 பெண்களும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது. உலகில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில், உணவுக்குழாய் புற்றுநோயும் ஒன்று. உணவுக்குழாய் என்பது (Esophagu) தொண்டை முதல் வயிற்றின் மேல்பகுதிவரை (cardia) அமைந்துள்ள ஒரு குழாய். இக்குழாயைத் தாக்கும் புற்றுநோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உணவுக்குழாயின் அடிப்பகுதி, ‘லைன் ஆஃப் கன்ட்ரோல்’ போல் செயல்படுகிறது. வாயில் சுரக்கும் உமிழ்நீரை (எச்சில்), அல்கலைன் அல்லது காரம் என்று சொல்லலாம். இரைப்பைக்குள் உருவா…
-
- 3 replies
- 15.3k views
-
-
நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்? ஜூன் மாதம் வந்துவிட்டாலும் வெயிலின் தாக்கம் மட்டும் இன்னும் தணியவில்லை. கோடையில் ஏற்படும் ஆரோக்கியத் தொல்லைகளுள் சிறுநீர்க் கடுப்பு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். என்ன காரணம்? உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ண…
-
- 8 replies
- 15.2k views
-
-
ஆண்களுக்கான அழகு குறிப்புகள் ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு என்பது என் கருத்து ஆண்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம் அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும். முதலில் உங்கள் முக அழகை பற்றிய சில குறிப்புகள் சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும். பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது …
-
- 49 replies
- 15.1k views
-
-
நினைவாற்றல் அல்லது ஞாபக சக்தி எனப்படுவது. தான் அனுபவித்த, கற்றறிந்த விடயங்களை தேவைப்படும்போது மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும். நினைவாற்றல் குன்றுவதனால் பல விடயங்களில் தோல்வி ஏற்பட்டு பின்தங்கிவிட நேரிடும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு பரிட்சை நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கை கொடுக்கும். ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் மறந்து போனாலே டென்சன் ஆகிவிடுவார்கள். அதன் பின்பு அவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. அதே போன்றுதான் நேர்முக பரீட்சைக்கு தோன்றும் ஒருவருக்கும் உரிய நேரத்தில் சரியான பதில் தெரிந்திருந்தும் நினைவாற்றல் குறைவினால் பதில் கூற முடியாது தோ…
-
- 1 reply
- 14.9k views
-
-
வேப்பிலையின் மருத்துவ பயன்கள் ! வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது.. வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை போல கொடுத்து வர அம்மை நோய் தணியும். வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி,…
-
- 4 replies
- 14.9k views
-
-
அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி அரிசி. கவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு. நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது. பண்டைய காலங்களில் தென்னிந்தியாவில் செட்டிநாடு சமுதாயம் மட்டுமே இந்தக் கவுனி அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தியது. இன்றும்கூட, செட்டிநாடு திருமணங்களில் கவுனி அரிசியில் செய்யப்பட்ட ஓர் இனிப்பு வகை இடம்பெறுகிறது. இதன் சிறப்பைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள் அண்மைக்காலமா…
-
- 156 replies
- 14.5k views
- 2 followers
-
-
ஆணுக்கு அழகு மீசை. சங்க காலத்தில் ஆண்கள் முறுக்கு மீசையுடன் வலம் வந்தனர். நாகரீகம் வளர வளர மனிதனின் நடை, உடை பாவனை மாறியது. முறுக்கு மீசையும் தொங்கு மீசையானது. வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலான பேர் மீசை இல்லாத முகத்தையே விரும்புகின்றனர். தமிழர்களில் பெரும்பாலான பேர் மீசை வைத்துக்கொள்வதை அவசியமாக கருதுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் கூட அரும்பு மீசையை தடவிப்பார்த்து `நாம பெரிய மனுசனாயிட்டோம்' என்று சந்தோஷப்பட்டுக் கொள்வதுண்டு. இப்படி பலருக்கு பல விதமான ரசனைகள் உண்டு.யாழ் கள உறுப்பினர்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? (தயவு செய்து நாட்டுக்கு இந்த கருத்து கணிப்பு தேவையா என கேட்காதீர்கள்)
-
- 43 replies
- 14.4k views
-
-
வாய் துர்நாற்றம் – சரி செய்வது எப்படி? சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர்நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfu…
-
- 11 replies
- 14.2k views
-
-
ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது. குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச…
-
- 39 replies
- 14.2k views
-
-
தமிழில் அறிவியல், அறிவு என்ற இரு வார்த்தைகளின் மூலமும் அறிதல் என்ற வார்த்தையே. சுருங்கக் கூறின் அறிவியல் என்பது அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிதலே. சில வருடங்களுக்கு முன்பு ஒரு நூலை வாசித்திருந்தேன். அதில் நீங்கள் ஒரு விடயத்தை அதிகமாக யோசித்தீர்கள் என்றால் மூளையில் இருந்து அந்த எண்ண அலைகள் இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும். பிரபஞ்சத்தில் சுத்திக் கொண்டிருக்கும் அதே ஒத்த எண்ண அலைகள் உங்கள் மூளைக்கு வந்து சேரும். இதுதான் அந்த புததகத்தில் இருந்த அடக்கம். சில நாளைக்கு முன்பு தமிழ்ப் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் உரையை கேட்க நேர்ந்தது. அதில் அவர் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். குறள் இதுதான். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உ…
-
- 3 replies
- 14.1k views
-