நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
நம் நாட்டுச் செடிக் கிழங்கு வெள்ளைக்காரன் விழுந்து விழுந்து சாப்பிடுகிறான் .தானே பயிரிடுகிறான் மரமண்டைகளா நீங்கள் .? கொஞ்சம் எமது கிராமிய இயற்க்கை மருத்துவத்தை காப்பாற்றுங்கள் எனது முக நூலின் நண்பர்கள் யாராவது ஒருவர் முயலுங்களேன் மலட்டுத்தன்மை போக்கும் தண்ணீர்முட்டான் கிழங்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் உயிர்வாழத்தேவையான உணவுகளை இயற்கை வழங்கியிருக்கிறது. நம் கண்ணெதிரே காணப்படும் செடி கொடிகள் கூட மூலிகைத் தன்மை உடையதாகவும், மருந்துப்பொருளாகும் பயன்படுகிறது.அந்த வகையில் தண்ணீர்முட்டான் கிழங்கு எனப்படும் மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மித வெப்ப மண்டல பகுதிகளைச் சார்ந்தது. இது இந்தியாவ…
-
- 1 reply
- 2.1k views
-
-
கண்களைப் பேணும் காய்கறிகள் நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழ…
-
- 1 reply
- 1k views
-
-
உணவு உட்கொண்ட உடன் புகைப்பிடிக்கும், தேநீர் அருந்தும் பழக்கம் கொண்டவரா நீங்கள் அப்படியெனில் இது உங்களுக்குத்தான். உண்ட உணவு ஜீரணமாகும் முன்பே சிகரெட் பற்றவைத்தால் அது குடல் கேன்சர் ஏற்பட வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள். உணவு உண்டபின் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று மிகப்பெரிய பட்டியலே கொடுத்துள்ளனர் அவர்கள். இன்றைக்கு பலபேர் உணவு உண்டவுடன் அவசரமாக சிகரெட் பற்ற வைத்து உள்ளே இழுப்பார்கள். இது உடல் நலத்திற்கு தீங்கானது. சாப்பிட்டவுடன் பிடிக்கப்படும் ஒரு சிகரெட், பத்து எமனுக்குச் சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டாம். எனவே, சிகரெட்டுக்கு நோ சொல்லுங்க. …
-
- 1 reply
- 779 views
-
-
பாட்டி வைத்தியம் - நரை முடி அகல முருங்கைக் கீரை சாதாரணமாக வீடுகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும்.முடி நீண்டுவளரும். நரை முடி அகலும்.தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிய…
-
- 1 reply
- 3.4k views
-
-
மிகவும் களைப்பாகி சலித்துவிட்டதா? நம் அனைவருக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்: படுக்கைக்குப் போய் ஓய்வெடுத்தே ஆக வேண்டும் என்று தோன்றும். ஆனாலும் உங்களால் ஆழ்ந்து தூங்க முடியாது. ஆனால் கவலைப்பட வேண்டாம். படுக்கைக்குச் செல்லுமுன் வழக்கமாக என்ன செய்யலாம் என்பதை எல்லோரும் கற்றுக் கொள்ளலாம். 1. உண்மையிலேயே களைப்பாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்யவும் இது வெளிப்படையானதாகத் தோன்றும். ஆனால் படுக்கச் செல்வதற்கு நீங்கள் தயாராக இருந்தால், இரவில் தூங்கிவிடுவது மிகவும் எளிமையானது. இருந்தபோதிலும், இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பவர்கள், மற்றவர்கள் `சாதாரணமாக' தூங்கும் நேரமாகக் கருதும் நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள். படத்தின் காப்புரிமை Getty I…
-
- 1 reply
- 599 views
-
-
காய்கறிகளில் மிகவும் சுவையாகவும், கண்ணை கவரும் நிறத்திலும், அனைவருக்கும் பிடித்ததுமாக இருப்பது கேரட். அந்த கேரட் இந்த காலத்தில் தான் கிடைக்கும என்று சொல்ல முடியாது. ஏனேனில் அது அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது. மேலும் அந்த கேரட்டின் வேர் சற்று மொறுமொறுப்புடனும், சுவையாகவும் இருக்கும். சொல்லப்போனால் இது ஒரு சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் அதில் அந்த அளவு ஊட்டச்சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளன. மேலும் இதனை டயட்டில் இருப்பவர்கள், தங்கள் உணவுப் பொருட்களில் தினமும் ஒரு கேரட்டை சாப்பிட்டால் போதும், உடல் எந்த ஒரு நோயும் வராமல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் நன்கு பிட்டாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். * பார்வை குறைபாடு : கேரட்டை சாப்பிடும் போது, அதி…
-
- 1 reply
- 618 views
-
-
செலவே இல்லாமல் எமது சூழலில் கிடைக்கும் இயற்கை மூலிகை உணவுகள்
-
- 1 reply
- 905 views
-
-
மனிதனின் இரத்தக் குழாய்களுக்குள் நீந்திச் செல்லும் நுண்ணிய ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பலகலைக்கழக நுண் பெளதிகம் மற்றும் நானோ பெளதிக ஆய்வுக்கூடத்தில் இந்த ரோபோக்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இரத்தக்குழாய் அடைப்புகளின் காரணமாக செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இந்த ரோபோக்கள் உதவிகரமாக இருக்குமாம். இரத்தக் குழாய்களுக்குள் ஊசிமூலம் இந்த ரோபோக்களை செலுத்தி செயல்பட வைக்க இயலும். ஒரு மில்லிமீட்டரில் கால்பங்கு பெரியதான இந்த ரோபோக்களை piezoelectricityஐப் பயன்படுத்தி இயங்கச் செய்ய முடியும் என்கிறார்கள் நுண் எந்திரவியல் மற்றும் நுண் பொறியியல் அறிஞர்கள். சிலவகையான படிகங்கள், பீங்கான்கள் இவற்றின் மீது அழுத்தம் கொடுக்கும்போது மி…
-
- 1 reply
- 816 views
-
-
08 OCT, 2023 | 01:45 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் 2020இல் மார்பகப் புற்று நோயளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரித்துள்ளதோடு, பெண்களில் 26 சதவீதமானவர்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்தார். மார்பகப் புற்றுநோய் வருவதை தடுக்க முடியாவிட்டாலும் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் முழுமையாக சுகப்படுத்த முடியும் என்றும் வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் '101 கலந்துரையாடல்' நிகழ்வில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மார்பகப் புற்றுநோய் …
-
- 1 reply
- 694 views
- 1 follower
-
-
வீட்டில் யாரேனும் அதிகம் தூங்கினால், பெரியவர்கள் அவர்களைக் கண்டித்து, "இப்படித் தூங்கினால் உடல் பருமன் ஆகிவிடும். ஒரு வேலையும் செய்யாமல் தூங்கினால் உணவி#ருந்து பெறப்பட்ட சக்தி செலவழியாமல் உடம்பு பெருத்துவிடும்'' என அறிவுரை கூறுவதைப் பார்த்திருக்கிறோம். மாறாக, ஒல்லியான, அழகான உடல்வாகு பெற நன்றாக உறங்க வேண்டும் என்று ஒரு புதிய ஆராய்ச்சி மூலம் தெரிகிறது. "உடல் எடையைக் குறைக்க ஓர் உன்னதமான திட்டம் இதோ: ஒரு தூக்கம் போடுங்கள்'' என்று செய்தியாக நாம் அறிவது சஞ்சய் படேல் என்ற விஞ்ஞானியின் ஆராய்ச்சியிலிருந்து. அவர் அமெரிக்காவில், ஒஹையோ மாநிலத்தில் உள்ள கிளீவ் லேண்ட் நகரின் Case Western Reserve University யில் பணிபுரிகிறார். 68,000-க்கு அதிகமான பெண்களை இந்த ஆராய்ச்சியில் உட்படுத்…
-
- 1 reply
- 3.7k views
-
-
********
-
- 1 reply
- 1.4k views
-
-
நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை. ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன. இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:- காரணங்கள்: நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதா…
-
- 1 reply
- 589 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேஸ்மின் ஃபாக்ஸ்- ஸ்கெல்லி பதவி, 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு ஒரு முறை கழிக்கப்படும் டைப் 3 அல்லது டைப் 4 என வகைப்படுத்தப்படும் சாஸேஜ் வடிவிலான மலமே சிறந்தது எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழிக்கும் மனிதரா, அல்லது கழிவறை செல்வதே அபூர்வமான ஒன்றா? இப்படியாக, ஒவ்வொருவரின் மலம் கழிக்கும் இடைவெளியும் எண்ணிக்கையும் வேறுபடும். அவை உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உணர்த்துவது என்ன? மலத்தின் பின்னால் உள்ள அறிவியலை இங்கு தெரிந்துகொள்வோம். ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஏன் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்? இந்தியாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களை அதிகம் பாதிக்கும…
-
-
- 1 reply
- 804 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 712 views
-
-
Cardiac Arrest, Heart Attack இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நேற்றைய தினம் கார்டியாக் அர்ரெஸ்ட் (Cardiac Arrest) ஏற்பட்டது அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஊடங்கள் மற்றும் சமூக ஊடங்களில் மாரடைப்பு என சிலர் குறிப்பிட்டார்கள். நிஜத்தில் கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்? மாரடைப்பு : - இதயத்துக்கு செல்லும் பிரத்யேக கரோனரி (Caronary) இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு இரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத் தான் மாரடைப்பு (Heart Attack) எனச் சொல்வார்கள். மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான பாரம் ஏற்படுவது போல தோன்றும். பெரும்பாலும் மாரடைப்பு ஏ…
-
- 1 reply
- 1.2k views
-
-
குண்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பை தாங்கும் சக்தி அதிகமென்கிறது மருத்துவ ஆய்வு மாரடைப்பு வந்தபின்னர், ஒல்லியாக இருக்கும் நபர்களைவிட, குண்டாக இருப்பவர்களால் எளிதாகத் தாங்க முடிகிறது. அவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள டேவிட் ஷெபன் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள். ஒரு மனிதனின் பி.எம்.ஐ. என்று சொல்லப்படும், எடை, உயர கூட்டு அளவைக்கும், அவர் மாரடைப்பால் பாதிக்கும் போது அளிக்கப்படும் சிகிச்சைக்கும் தொடர்பு உள்ளது என்று இப்போது தான் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டாக இருந்தால், அவர்களுக்கு இருதயக் கோளாறு நிச்சயம் என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம், மருத்துவமனையில் மாரடைப்புக்காக சேர்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிஸேரியன் சிகிச்சையும் சில சர்ச்சைகளும் http://healthwings.blogspot.com/2011/01/blog-post.html சீசர் என்பது மக்கள் அறிந்த ஒரு சொல் மட்டுமல்ல மக்கள் மனங்களை உறுத்தும் சொல் என்றாலும் அது தவறில்லை சீசர் என்பது சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு வழங்கப்படும் யாவரும் அறிந்த சொல் என்றே கூறவேண்டும் இது பெரும் சத்திர சிகிச்சை வகைக்குரியது அதாவது அயதழச ளரசபநசல என்னும் வகைக்குரியது இது ஆபத்து மிக்கது இதைவிட காயப்பட்ட பகுதி மீள சீரமைக்கப்பட சாதாரண மகப்பேற்றை விட கூடுதல் காலம் தேவை இருப்பினும் இன்னும் பல எதிரான காரணங்கள் இருப்பினும் கனேடியர்களுள் பலர் 2008 ஆம் ஆண்டில் தேவையற்ற சத்திர சிகிச்சைகளுக்கு பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளனர் என்று தேசியரிதியான ஆய்வொன்றின் முலம் தெரியவந்…
-
- 1 reply
- 1.5k views
-
-
தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை பாதுகாக்கும். 1. சிறுக்கீரையில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. 2. பிரசிவித்த பெண்களுக்கு சிறுக்கீரை மிகச்சிறந்தது. சிறுக்கீரையை பொரியல் செய்து, அதிலேயே பிசைந்து சாப்பிட சொல்வார்கள். 3. சிறுக்கீரை மலச்சிக்கல் ஏற்படாமல் சிறந்த மலமிலக்கியாக செயல்படுகிறது. 4. சிறுக்கீரையில் புரதம், நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. 5. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. 6. கீரையை மிளகுடன் சேர்த்து சூப் போ…
-
- 1 reply
- 905 views
-
-
குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – சுற்று-1. ---- இக்கட்டுரை 10-09-2008 ல் நண்பர் ஒருவரின் குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றிற்காக எழுதப்பட்டது. அந்நூல் இதவரை வெளிவந்ததற்கான குறிப்புகள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கட்டுரையின் அலுப்பூட்டும் ஆய்வுமுறை ஏற்படுத்திய சுவராஸ்யமின்மை இதனை வெளியிடுவதற்கு அவருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியருக்கலாம். அதனால் அதை சொல்லத்தயங்கி, நூல் வெளிவந்த குறிப்பு தெரிவிக்கப்படாமல்கூட இருந்திருக்கலாம். எப்படியோ, இதனை இங்கு வெளியிடுவதன் வழியாக 2 மாதங்கள் உழைப்பையும் நேரத்தையும் தின்ற இக்கட்டுரையினை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே. கட்டுரையின் நீளம் கருதி, பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது, படிப்பதற்கு வசதியாக. --…
-
- 1 reply
- 7.4k views
-
-
பாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உணவு, சத்தற்ற சக்கை உணவு உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு நோய்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்தன. இன்று எந்த வித்தியாசமும் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மாறிவிட்ட உணவுப் பழக்கம்தான். உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவரும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி முகமையும் (ஐ.ஏ.ஆர்.சி.) இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலை அந்த அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த உணவு வகைகள் என்னென…
-
- 1 reply
- 540 views
-
-
நிறத்தில் வெள்ளையான உப்பும், சீனியும் குணத்தில் நஞ்சாகின்றது: சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது அது – உப்பு. எவ்வளவு ருசியாகச் சமைத்தாலும் உப்பில்லாவிட்டால் அதை வாயில் வைக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகமாகும்போதும் பல உபத்திரவங்களை அளித்துவிடும். உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகக்கற்கள் ஏன் பக்கவாத பாதிப்பு கூட ஏற்படும். அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த…
-
- 1 reply
- 1.7k views
-
-
நம்பிக்கை இழக்காதே! மனம் தளராதே! என்பது தான் அறிவியல் அறிஞர் ஒருவர் அனைவருக்கும் தரும் யோசனை! நமது மூட், ஆசைகள் மற்றும் உணர்வுகளுக்கு ஏற்ப நம்முடைய உடல் மாறிவிடும் தன்மை படைத்தது. நல்ல உணவை நினைத்தால் ஜீரண சுரப்பிகள் சுரக்கும், வாயில் எச்சில் ஊறும்! ஒரு துயரகரமான நிகழ்ச்சியை நினைத்தாலே சிலர் அழுது விடுவர்! ஒரு பேரழகியைக் கண்ணால் கண்டவுடனே கண்கள் பளபளக்கும்! ஆக, நமது சுவாசம் ‘மூடு'டன் மிக நெருங்கிய தொடர்புடையது! விஞ்ஞானி ஃப்ராய்ட், தான் ஆல்ப்ஸ் மலையில் பார்த்த ஒரு இளம்பெண்ணைப் பற்றி விவரித்துள்ளார். அவளுக்கு அடிக்கடி நரம்புத் தளர்ச்சி உருவாகும். தலைசுற்றல், காதில் ஓசை இடைவிடாமல் கேட்டல், மார்பில் எரிச்சல், தொண்டை அடைப்பு, சாவு உடனே வந்து விடுவது போன்ற உணர்வு இவை எல்லாம் தொ…
-
- 1 reply
- 858 views
-
-
கொலெஸ்ட்ராலைக் குறைக்கும் புதிய தடுப்பு மருந்து இதய நோய்களை தடுக்க உதவும் கொலஸ்ட்ரோலை குறைக்கும் தடுப்பு மருந்தை மனிதர்களில் சோதிக்க விஞ்ஞானிகள் ஆரம்பித்துள்ளனர். இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் கொழுப்பு படிவதை தடுப்பதற்காக இந்த மருந்து ஊசி மூலம் ஏற்றப்படும். பக்கவாதம், இதயவலி மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக தினமும் மாத்திரை உண்பதற்கு பதிலாக இது அமையும். BBC
-
- 1 reply
- 398 views
-
-
உடனிருந்தே கொல்லும் வியாதி.. உங்களுக்கு கோபம் வருவதுண்டா?...' இது என்ன கேள்வி!!...மனுஷனாப்பொறந்தவனுக்கு கோபம் வர்றது சகஜமானதுதானே'ங்கிறீங்களா!!!. உண்மைதான்..நம்ம ஆழ்மனசுல அடக்கி வைக்கப்பட்ட உணர்வு மற்றும் மன அழுத்தங்களே எல்லை மீறும் போது கோபமாக வெளிப்படுகின்றன. கோபப்படறது சகஜம்ன்னாலும் , அது எல்லை மீறி, நம்மை அழிச்சிடாம இருக்கிறவரைக்கும் அதுவும் ஓர் உணர்வுதான்.(வேறொன்னுமில்லை.. பதிவு கொஞ்சம் நீளமா போச்சு.. டைம் எடுத்து படிச்சிடுங்க. ப்ளீஸ்..ஹி..ஹி..) நமக்கு அதிகமா கோபம் வருதுங்கிறதை நம்ம உடல்மொழிகளே(body language) காட்டிக்கொடுத்திடும். தாடை இறுகி, நறநறன்னு பல்லைக்கடிப்போம்,இதயத்துடிப்பு கூடுதலாகும், முகமெல்லாம் சிவந்து உடம்பெல்லாம் வேர்த்துக்கொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பரம்பரை காரணமாகவும் புற்று நோய் வரலாம் புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயல்ல என்று மருத்துவ உலகம் இன்று நிரூபித்து வருகின்ற தருணத்தில், மேலைத்தேய நாட்டவர்களைப் போல் தெற்காசியாவில் வாழ்பவர்களுக்கு பெருங்குடலில் புற்று நோய் வருவதில்லை என்றும், ஆனால் இன்றைக்கு மாறிவிட்ட உணவு பழக்கத்தாலும் இவ்வகையான புற்று நோய் வரக்கூடும் என்று எச்ரிக்கை செய்கிறார் சென்னையில் பணியாற்றி வரும் புற்று நோய் சத்திர சிகிச் சை நிபுணர் டொக்டர் எம். பி. விஸ்வநாதன். சென்னை இராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையின் புற்று நோய் சிகிச்சையில் நிபுணராக பணியாற்றி வரும் இவரை சந்தித்து புற்று நோய் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் தருமாறு கேட்டோம். புற்று நோய் கட்டியாக உருவெடுப்பதன் மருத்துவ காரணம் என்ன? …
-
- 1 reply
- 1.7k views
-