யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
கருத்துக் களப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, அன்புடையீர்! நான் வரவேற்புப் பகுதியில் பதிவிட்டுடிருக்கிறேன். அதிலே உறவுகள் பலர் உற்சாகமாக வரவேற்றுக் கருத்தகளைப் பதிவிட்டள்ளபோதும் என்னால் அவர்களுக்கு பதிலெழுத முடியாமல் உள்ளது. எழுதும் பெட்டியில் எழுதிப் பிரதி செய்து கிளிக் செய்தால் அதிற் பதிவதற்கான துறப்புக் காட்டாது வேறுவிடயங்களைக் காட்டுகிறது. என்னால் ஒரு புதிய திரியைத் தொடங்க முடிகிறது. ஆனால் பின்னூட்டங்களை எழுத முடியவில்லை. எனவே இதற்கான கரணியம் தெரியவில்லை. உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த அன்புடன் நொச்சி
-
- 17 replies
- 2k views
-
-
வணக்கம் நண்பர்களே நான் யாழின் ஒரு பழைய உறுப்பினன். ஆனால் இப்போது யாழில் பல இடங்களுக்கு அனுமதி இல்லை. இது எனக்கு மட்டுந்தானா? அல்லது பழைய உறுப்பினர்கள் எல்லோருக்குமா? இதற்காக நான் மோகனுக்கு ஒரு மடல் எழுதி கெஞ்சப்போவதில்லை. யாழ் பழையவர்களை தூக்கி எறியவிரும்பினால் எறியட்டும்.
-
- 17 replies
- 3.2k views
-
-
ஒவ்வொரு காலத்திற்க் காலமும் யாழில் யாராவது நிர்வாக நடவடிக்கைக்காக தலைப்புப் போடவேண்டியுள்ளதே என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. தொழில்நுட்ப அறிவினைப் பெருக்கி யாழ்கருத்துக்களத்திற்கு வந்தநாம், அதனை எம் அறிவைப் பெருக்குவதற்கு அல்லது சமூகத்துடன் பல அறிவுசார் விடயங்களை அல்லது சமூகத்திற்குப் பயனுள்ள விடயங்களைப் பகிர்ந்து அதன் மூலம் எம் சமூகத்திற்கு ஏதாவது நன்மைகளை வழங்கலாம். அதைவிடுத்து ஊரில் திண்ணையில் இருந்து வம்பு வளர்ப்பதனைப் போல் இக் களத்திலும் வந்து தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதிலே காலத்தினைக் கழிப்பது வேதனையானது. தகவல் தொடர்பு ஊடகங்கள் என்பது பொதுவாக பயன்தரும் தகவல்களைப் பெறுவதற்கானதாக இருக்க வேண்டுமே அன்றி மற்றவர்களின் தனிப்…
-
- 17 replies
- 2.8k views
-
-
கடந்த சில நாட்களாக யாழ் களத்துக்குள் நுழையும்போது ஒரு எச்சரிக்கை செய்தி வருகிறது. முகநூல் போன்று வேறெந்தத் தளத்திற்குச் செல்லும்போதும் வருவதாகத் தெரியவில்லை. இது எனது கணினியில் ஏற்கனவே ஏற்பட்ட தாக்கமா, அல்லது யாழ்களத்தில் ஏற்பட்ட ஊடுருவலா? யாராவது கணினி விற்பன்னர் தெளிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும்..! "Allow" என்பதன்மேல் கிளுக்கியை (mouse) வைக்கும்போது இணைக்கப்பட்டுள்ள படத்தில் சிவப்புப் பெட்டியினுள் காட்டப்பட்டுள்ள முகவரி வருகிறது (joreres.com). வின்டோஸ் இன் பெயரில் உள்நுழைய முயற்சிக்கும் ஒரு மேனமினுக்கியின் தளம் எண்டு நினைக்கிறன்..!
-
- 17 replies
- 1.6k views
-
-
தமிழில் தட்டச்சு செய்வது சிரமமாக உள்ளது. Explorer 8 ஐ எனது இணைய தேடுகருவியில் மேம்மடுத்திய பிறகு எனது தமிழில் எழுதும் திறண் மிகவும் பாதிக்க பட்டு இருக்கிறது. எனது கணணில் Vista 64 Bit ல் இயங்குவதால் யாழி தரப்பட்டு இருக்கும் ஆங்கிலம் தமிழ் மாற்றும் பலகையய கூட சிரமம் இண்றி உபயோகிக்க முடியவில்லை. எழுத்து பிழை இல்லாது இயங்க என்ன செய்ய வேண்டும் நீங்கள் எல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்.? பாமினி எழுத் கூட பாவிப்பது கடினமாக இருக்கிறது.
-
- 17 replies
- 1.6k views
-
-
யாழ் கருத்துக்களத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றிய திரி ஒன்றில் எழுதப்பட்ட கருத்துக்களால் மனம் வருந்தி இப்பதிவினை இடவேண்டிய தேவையேற்படுகின்றது. அரசியல்வாதிகள் சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தினைத் தூற்றுவதும், குறைந்தபட்ச மனிதநேயமின்றி அரசியல் சாயம் பூசி எழுதுவதும் எமக்கிடையேயான இடைவெளியினை மேலும் அதிகப்படுத்தும் கருத்துக்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. நீண்ட கால நோக்கில் இவ்வாறான கருத்துக்கள் எம்மையும் தமிழக உறவுகளையும் அந்நியப்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டு கள உறவுகள் தமது கருத்துக்களை சமூகப் பொறுப்புணர்வுடன் வைத்தல் வேண்டும். மேலும் எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த தோல்விக்கு, தோல்விக்கான காரணங்களைத் தெரிந்திருந்தும்…
-
- 17 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழ் களம் தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தெரியவில்லையாம் ,என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார் . இது குறிப்பிட்ட நண்பருக்கு மட்டுமா ? அல்லது தமிழ்நாடு முழுக்கவா என்று யாராவது அறியத்ததருவீர்களா ?
-
- 17 replies
- 3.1k views
-
-
-
அன்புடன் நிர்வாக குழவினருக்கு இவ் மடல் ஊடாக தங்களிடம் கேட்டு கொள்வது யாதெனின் .... எனது கருத்துக்கள். கவிதைகள் மற்றும் இதர விடயங்கள் அல்லது ஆக்கங்களால் தழிழ் தேசியத்திற்க்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ ஏதாவது பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் உள்ளது என நீங்கள் எண்ணுகிறீர்களா....??? இல்லை எனின் எனது கருத்தை சிந்தனை சிதறலை ஏன் நீங்கள் தடுக்க வேண்டும்...??? ஒளிக்க வேண்டும் எனவே ஏதும் அறியாத ஒரு நிலையில் விட தெரியாத புதிராக எனக்கு இது உள்ளது . என்னால் உங்கள் இணையத்திறக்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ பங்கம் வருமாயின் நான் எனது எழுத்து பணியை தங்கள் இணையத்தில் இத்தோடு நிறைவு செய்கிறேன் . எனவே அது பற்றிய தங்களது விரிவான தெளிவான …
-
- 17 replies
- 2.5k views
-
-
தற்போது யாழ்களம் பலர் பார்வையிடும் தளமாக மாறிவிட்டது. யாழ் ஒரு தனி தமிழுக்கான தளம்!! சிலவேலைகளில் இங்கு கருத்தெழுதுபவர்களில் பலர் (என்னையும் சேர்த்துத்தான்) பல எழுத்துப் பிழைகளை விடுகிறோம். இந்தப் பிழைகளை முற்று முழுதாக திருத்த இயலா விடினும், விடயத் தலைப்புகளில் வரும் பிழைகளையாவது மட்டுறுத்தினர்கள் திருத்தலாம்தானே??? .... சில கருத்துக்களை களத்திலிருந்து மாயமாக்கும் சில மட்டுறுத்தினர்கள், கொங்ச நேரத்தை இதில் செலவிடலாம்தானே!!!! இல்லையேல் தூள்கிங் "ராமராசன்" டமிழ் பேசியதை கேட்பது போல்தான், யாழ்களமும் வாசிக்க வேண்டி வரும்!!!!!
-
- 16 replies
- 2.8k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆங்கில உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி http://www.govthamileelam.org/ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தமிழ்த்தளம் மற்றும் ஆங்கிலச் செய்தித் தளமும் விரைவில் வெளிவரும் என்பதையும் அறியத் தருகிறோம்.
-
- 16 replies
- 1k views
-
-
யாழ்கள உறவுகள் அவதானம். யாழ்கள உறவுகளே அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக ஒரு மின்னஞ்சல் பல பெயர்களில் வருகின்றது எனக்கு மட்டுமல்ல யாழ்கள உறவுகள்.வேறு சிலரிற்கும் இது போன்ற மின்னஞ்சல் மற்றும் முகபுத்தக அஞ்சல்ளிற்கும் கிடைத்துள்ளதால் அவதானமாக செயற்படுங்கள் அதே சமயம் நிதிஉதவி செய்யுமாறும் சிலதடைவைகள் கேட்டிருந்தார். எனக்கு கிடைத்த மின்னஞ்சல் இதுதான். என் அன்புக்கினிய தோழருக்கு, நான் சிதைந்து போன எமது இயக்கத்தின் (தமிழீழ விடுதலை புலிகள்) புலனாய்வு கட்டமைப்புக்கு மீண்டும் உயிரூட்ட பாடுபடுகிறேன். இருந்தும் துரோகிகளை அடையாளம் காண்பது என்பது மிகவும் சிரமமான விடயமாக உள்ளது. நான் வன்னியில் புலனாய்வுத்துறையில் போராளியாக பணியாற்றியவன். சிறுவயதில் இருந்தே புலனா…
-
- 16 replies
- 1.3k views
-
-
ஆடி 5 ம் திகதி கரும்புலிகள் தினம்... ஒரு வாரம் மாவீரர் நாள் கடைப்பிடிப்பது போல குறைந்தது இந்த முறை எங்களுக்காகவே மடிந்து போன மாவீரர்களை அதிகமாகவே கௌரவிக்க , நினைவு கூர வேண்டிய தேவையில் இருக்கின்றோம்... எங்களுக்கு போராடியவர்களை நாங்கள் எண்றும் நண்றியுடன் நினைவு கூருவோம் என்பதுக்கு இது ஒரு தேவையான காலமும் கூட... தயவு செய்து கரும்புலிகள் யாரையாவது தெரிந்தவர்கள் பழகியவர்கள் அவர்கள் பற்றியும் ஒளிப்படங்கள் காணொளிகள் என்பனவற்றை எல்லாம் இணைப்பதோடு உங்களின் உள்ளத்து உணர்வுகளள வடித்து கவிகளும் கட்டுரைகளும் எழுதுமாறு தாள்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.... மோகன் அண்ணா விடம் ஒரு வேண்டுகோள்... மாவீரர்கள் பற்றி எழுதுவதுக்கு எண்றே தனி ஒரு பகுதியை ஆரம்பி…
-
- 16 replies
- 1.9k views
-
-
இந்த யாழ்களத்தை பல வருடங்களாக பார்ப்பவன் என்றவகையில் சொல்கிறேன்..... இங்கே சிலர் இந்திய தமிழ் உறவுகல் போல வேடம் அணிந்து வந்து.....ஈழத்து தேசியத்தை தரக்குறைவாக தாக்குவதை கண்டுள்லேன். அவர்கல் உண்மையிலேயே இந்தியர்கல்தான? என்ற சந்தேகம் எனக்கு நிரையவே உண்டு. என்னை பொறுத்த மட்டில் அவர்கலை நாம் சட்டை செய்யாமல் விடுவதே உசிதம். இவர்கலுக்கு பதில் சொல்லப் போய், வீணாக எமது வார்த்தைகள் தடித்து அதனால் நாம் எமது தமிழக உறவுகளை திட்டும் படியாகி, அதனால் ஈழ-தமிழக உறவில் விரிசல் வந்தால் அது எமது எதிரிகளுக்கு சாதகமாய் போய்விடும். நாம் யாரும் தலைவர் பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கித்தான் அவர் பிழைக்க வேன்டும் என்பதில்லை. அவரின் பலம் அவரது எதிரிகளுக்கும் நன்கு தெரியும். எனவ…
-
- 16 replies
- 2.6k views
-
-
அதாவது கீழ் உள்ள இணைப்பில் இருக்கும் தோற்றம் http://www.google.co...iw=1024&bih=704 கருத்தெழுதும் பகுதியில் font size.image.colour.smile இவைகள் ஒன்றும் தெரியுது இல்லை யாராவது முடிந்தால் உதவி செய்யவும் இதை எப்படி சரி செய்வது என்று.
-
- 16 replies
- 1.9k views
- 1 follower
-
-
பெயர் மாற்றம்!?.. வணக்கம் கள உறவுகளே! இவ்வளவு காலமும் யாழ்களத்தில் "கணொன்" எனும் பெயரில் கடித்தெடுத்தவன், "சோழன்" ஆக மாற விரும்புகிறேன். இதற்கு தனிப்பட்ட காரணங்கள் என்று எதுவுமில்லை, எல்லாம் ஒரு தமிழ்ப் பெயரில் இங்கு உலாவ விரும்பியதால்தான்! நிர்வாகம் பெயரை மாற்றுமென நம்புகின்றேன். அப்படியாயின் "கணொன்" எனும் பெயர் ஏன் வந்தது: இதை இங்கு கூறத்தான் வேண்டும். ... சில வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றிற்கு மகன் பிறந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, நானும், எனது உறவினனான நண்பனும் பார்க்கச் சென்றிருந்தோம். அங்கு அக்குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பான பேச்சு வந்தது. அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் இருந்தது. எனது நண்பனோ அவர்களிடம் "உங்கள் மூத…
-
- 15 replies
- 2.8k views
-
-
ஏன்? யாருக்கும் காரணம் தெரியுமா? 🧐
-
- 15 replies
- 2.5k views
-
-
யாழின் புதிய அமைப்பில் உள்ள சிமைலி அடையாளங்கள் பல புதியனவாக இருக்கின்றன. பழைய யாழில் இருந்த சிமைலிகள் இலகுவாக விளங்கக்கூடியனவாக இருந்தன. இப்போது இருக்கும் சிமைலிகளுக்கான அர்த்தங்களை விளங்குவது கடினமாக இருக்கின்றன. விஷயம் தெரிந்தவர்கள் நேரம் உள்ளபோது இப்போது இருக்கும் சிமைலிகளின் அர்த்தங்களை விளக்க முடியாது. உண்மையைச் சொன்னால் எனக்கு எந்த சிமைலிக்கு என்ன அர்த்தம் என்று இன்னும் சரியாக விளங்கவில்லை. அதைவிடச் சிலர் யாழில் இல்லாத சில சிமைலிகளையும் சில சமயத்தில் இணைக்கின்றனர். அவற்றை எவ்வாறு ? எங்கிருந்து இணைக்கின்றீர்கள் ? அவை இலவசமானவையா ? என்பதையும் தெளிவு படுத்தினால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி
-
- 15 replies
- 1.7k views
-
-
இது ஒன்றும் நம்ம றோயல் பமிலி இல்லை... நிஜமாகவே யாழ்ப்பாணத்தில் ஒரு அரச குடும்பம் இருந்திருக்கின்றது. அதை பற்றியது... நமது யாழ்ப்பாண அரச குடும்பம் நெதர்லாந்தில் வசிக்கின்றது... (எனக்கு ஒரே குழப்பமாக இருக்கின்றது.... நெதர்லாந்து நாட்டு நண்பி இந்த அரச குடும்பம் பற்றி சொல்லி இந்த இனையத்தளத்தை எனக்கு காட்டினார்.....ஸ்கொன்லன்ட் நண்பர்களும் சிலர் சொன்னார்கள்) இணையத்தளம் இதோ.. 1) http://www.jaffnaroyalfamily.org/index.php 2) http://www.jaffnaroyalfamily.org/contentfi...page23_tumb.gif 3) http://www.jaffnaroyalfamily.org/news.php?id=19 4) http://www.jaffnaroyalfamily.org/news.php?id=41
-
- 15 replies
- 2.8k views
-
-
அதாவது உலகம் பூராக பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையுணர்வு ஏற்படுத்தவேணுமென்றால் என்ன முறையை கையாளவேண்டும்?
-
- 15 replies
- 2.4k views
-
-
கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::... …
-
- 15 replies
- 2k views
-
-
நேற்று (26.06.09) ஐரோப்பிய நேரம் காலை 6 மணி முதல் இன்று (27.06.09) மாலை 3.30 மணிவரை கருத்துக்களத்தில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகின்றோம். நாம் இப்பொழுது பயன்படுத்தும் கருத்துக்கள மென்பொருளின் புதிய வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. பழையதைக் காட்டிலும் செயற்திறன்மிக்கதாக அது இருந்ததால் - அதனைக் கொண்டு, யாழ் கருத்துக்களத்தை புதுப்பிக்க நாம் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. கடந்த ஒரு வாரகாலமாக வேறு ஒரு தற்காலிக இணைய வழங்கியில் அனைத்தையும் முயற்சித்த பின், நேற்று எமது இணைய வழங்கியில் புதிய கருத்துக்கள மென்பொருளை நிறுவ முயன்று தோற்றுப்போனோம். பல்வேறு வகையான வழிமுறைகளையும், மாற்று முயற்சிகளையும் மேற்கொண்டும் கருத்துக்களத்தை நிறுவுவதில் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்கமுடி…
-
- 15 replies
- 1.5k views
-
-
முகப்பு வடிவ மாற்றம் ............. யாழ் களமுகப்பு வித்தியாசமாய் அழகாய் இருக்கிறது . நிர்வாகத்துக்கு நன்றி .
-
- 15 replies
- 1.1k views
-
-
இங்கு எனது முகமூடி "வாசகன்". "இருக்கும் நண்பர்களையும் இழந்து விடாதே" தலைப்பில் திரு நாரதர் அவர்கள் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். வேறு எவரோ மீது இருக்கும் தனிப்பட்ட விரோதத்தில் நானும் அவரும் ஒருவர் என்று தானே ஒரு கற்பனையை செய்து என்மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார். என்னை வேறோருவராக நினைத்து இருந்தால் அவர் என்னிடம் தனிமடலில் விளக்கம் கேட்டிருக்கலாம். இப்போதும் கேட்கலாம். அதை விடுத்து தாங்களாகவே ஓரு முடிவை எடுத்து.... கேவலமாக இருக்கிறது. அநுபவசாலிகளும் எடுத்தேன் கவிழ்தேன் என்று எழுதுவது அவர்களின் அநுபவத்தையே கேள்வி குறியாக்காதா??????
-
- 15 replies
- 2k views
-
-
மதிப்பிற்குரிய யாழ் இணைய நிர்வாகத்திற்கு, தமிழர்களின் முக்கிய நாளாக உலகெங்கும் மாவீரர் தினம் அனுசரிக்கப் படுவதால் அதன் நிகழ்சிகள் நடக்க இருக்கும் நாடுகளையும், இடங்களையும், நேரங்களையும் இணைய முகப்பில் போட்டும் படியும், மாவீரருக்குத் தீபம் ஏற்றும் இணைய இடுக்கினை உதாரணம்: [http://november27.net/ & http://varudal.com/november27/ ] யாழ் இணையமும் ஏற்படுத்தினால் உறுப்பினர்களும் வாசகர்களும் தங்கள் அஞ்சலிகளைகளையும், சமர்ப்பணமாக கவிதைகளையும் மாவீரருக்கு செலுத்த ஒரு சந்தர்பமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. சக உறுப்பினரின் கருத்தையும் எதிர் பார்க்கிறேன். -நன்றி!
-
- 15 replies
- 1.2k views
-