வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள் ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் கடந்த 13, 14 ஆம் திகதிகளில் …
-
- 11 replies
- 2k views
-
-
வவுனியாவை சேர்ந்த சிறுவன் லண்டனில் உயிரிழப்பு! வவுனியா, கோவில்குஞ்சுக் குளத்தை பூர்விகமாகக் கொண்டுள்ள லண்டனில் வசித்துவரும் சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஏழு மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்குச் சென்றிருந்த வேளை, பாதசாரி கடவையைக் கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் சிறுவனை மோதியுள்ளது. இந்நிலையில், குறித்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லண்டன் கேய்ஸ் (Uxbridge Road, Hayes,Hayes) பகுதியில் தனது பெற்றோருடன் வசித்துவரும் சசிகரன் அகர்வின் (வயது-4) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். http://athavannews.com/வவுனியா…
-
- 10 replies
- 1.6k views
-
-
நெதர்லாந்தில இதுவரை வதிவிட அனுமதிகிடைக்காத இலங்கைத்தமிழர்கள் எவரும் தற்போது திருப்பியனுப்பமாட்டார்கள் இலங்கையில் அதிகரித்துவரும் தற்போதைய மனிதஉரிமை மீறல் சம்பவங்களினால் இவ்முடிவு எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் நெதர்லாந்தில் 2002 ம் ஆண்டுக்கு முன் வந்த அனைத்துநாட்டினருக்கும் வதிவுடஉரிமை வழங்கப்படலாம்?
-
- 10 replies
- 2.1k views
-
-
10 வருடங்களுக்கு முன் அளித்த தீர்ப்பின் படி இந்தோனேசியா அதிபரும் மன்னிப்பு வழங்க மறுத்ததை அடுத்து இன்னும் சிலநாட்கள் அல்லது வாரங்களில் ஆஸ்திரேலியா தமிழரான மயூரனுக்கு மரணதண்டனை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது......ஆஸ்திரேலியா அரசின் கடைசிக்கட்ட பெரும் முயற்ச்சிகளையும் மீறி அவருக்கான தண்டனையை இந்தோனேசியா முன்னெடுக்கின்றது..... http://www.news.com.au/world/asia/doomed-bali-nine-duo-to-be-transferred-to-nusa-kambangan-island-this-week-ahead-of-their-executions/story-fnh81fz8-1227221756457 இந்த செய்தியை இதுவரை யாரும் யாழில் இணைக்காததும் இதை பற்றி யாரும் பேச பயப்படுவதும் ஆச்சரியம் தருகின்றது.... 2005 முதல் 2015 வரை நடைபெற்றவற்றை இங்கே சென்று பார்க்கலாம்.... h…
-
- 10 replies
- 2.2k views
-
-
இலங்கையில் யாழ்ப்பாணத்து ஆண்கள் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கனடா செல்வதற்கு திறந்த வீசா கொடுக்கிறார்கள். அதற்கான படிவம் 250 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஊரில் இருந்து நேற்று இரவு தகவல் சொன்னார்கள். இதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் வந்தமையால் உடனடியாக வாங்கவேண்டாம் என்று சொல்லிவிட்டு. அதற்கான இணைய தளத்தில் தேடிப்பார்தேன். அப்படி ஒன்றும் இல்லை. இன்று விடிய எழும்பியவுடன் முதல் வேலையாக கனேடிய குடிவரவு திணைக்களத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது உண்மையா என விசாரித்தேன். அவர்களும் இலங்கை நிலைமை குறித்து தாங்கள் கவலைப்படுவதாகவும் இருந்தபோதிலும், இலங்கைக்கான அப்படியான ஓர் நிகழ்ச்சித்திட்டம் தங்களிடம் இல்லை எனவும் கூறினார்கள். யாரோ அச்சியந்திரம் வைத்திருப்பவர…
-
- 10 replies
- 1.8k views
-
-
நடுங்கும் விரல்களால் ஒரு இட்லி யைக்கூட அவரால் பிய்த்து உண்ண முடியவில்லை. அதிகபட்சம் ஓர் இட்லி அல்லது பாதி தோசைதான் அவருடைய உணவு. ஒழுங்கு செய்யப்படாமல் கலைந்துகிடக்கும் நூல்கள், ஒரு தண்ணீர் கேன், பழைய கட்டில் - இவைதான் 90 வயது டேவிட் ஐயாவின் வசிப்பிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள். யார் இந்த டேவிட்? ''என்னை எல்லோரும் 'டேவிட் ஐயா’ என்றுதான் சொல்வார்கள். என் பெயர் சாலமோன் அருளானந்தம் டேவிட். இலங்கை அரசின் பயங்கரவாதப் பிரிவு போலீஸிலும், இந்தியாவிலும் இந்த 90 வயதுக் கிழவனின் பெயரை இப்படித்தானப்பா பதிந்திருக்கிறேன்!'' என்று மெலிதாகச் சிரிக்கும் டேவிட் ஐயா, தன் அந்திமக் காலத்தை யாருமற்ற தனிமையோடு சென்னையில் கழிக்கிறார். ''இலங்கையின் கரம்பனில் 1924-ம் ஆண்டு பிறந்தேன். ஆண…
-
- 10 replies
- 2.1k views
-
-
ஆர்யா சம்பந்தப்பட வில்லை. போலீஸ் ஆணையர் தெரிவிப்பு. ஜேர்மன் தமிழ் பெண் விவகாரத்தில், இருவர் கைதாகிய நிலையில், முதலாவது, இரண்டாவது குற்றவாளிகளாக ஆர்யாவும் அவரது தாயாருமுள்ளனர். அவர்கள் விரைவில் கைதாவர்கள் என்று ஜேர்மன் பெண்ணின் சார்பில், அமைந்த வழக்கறிஞர் சொல்லி இருந்தமை குழப்பத்தினை உண்டாக்கி இருந்தது. இந்த நிலையில் பத்திரிகையாளரை சந்தித்த சென்னை போலீஸ் ஆணையர், ஜேர்மன் பெண்ணின் புகார் அவர்கள் மேலே அளிக்கப்பட்டிருந்தது என்ற அடிப்படையில் அவர்கள் பெயர் ஆரம்பத்தில் இருந்தது உண்மை. அந்த வழக்கறிஞர் அதே புகாரின் அடிப்படையிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தினையும், நாடி இருந்தனர். உயர் நீதிமன்றமும் விசாரிக்க உத்தரவு இட்டிருந்தது. எமது விசாரிப்பின் முடிவில்…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
2021 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தெரிவுகளில் ஈழத் தமிழர். அனுக் அருட்பிரகாசம் எனும் இளைஞரால் படைக்கப்பட்டுள்ள 'A Passage North' எனும் நூலாக்கம் booker பரிசுக்கான 'Long List' இல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இன்று காலை பரிசினை தீர்மானிக்கும் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலங்களில் இலங்கையர்கள், எழுத்துலகில் (ஆங்கில) தமது முத்திரைகளை பதித்து வருகிறார்கள். இந்த அறிவிப்பு இவ்விடயத்தில் இன்னுமொரு மைல் கல்லாகும். இலங்கையின் யுத்தகாலத்தில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த, வடக்கினையும்,யுத்த பாதிப்புகளையும் அதனூடாக, நூலாசிரியரின் அனுபவங்களையும் கொண்டதாக நூல் அமைந்துள்ளது. இந்த 'Long List' இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, மற்றும் முன்னதாகவே புக்…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
என் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார்... அவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார் .. அதை கேட்டு நான் திகைத்து போனேன் . அவர் சொன்னார் ?.. நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிரோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள்.... நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுரிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்ல…
-
- 10 replies
- 1.4k views
-
-
லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தின் இணுவில் பிரதேசத்தை சேர்ந்தவராவார். சசிகலா சுரேஷின் தந்தையார் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலைச் சேர்ந்தவர். அவர் பிரதி கணக்காய்வாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக தமிழ் பெண் தெரிவு | Virakesari.lk
-
- 10 replies
- 1.5k views
-
-
இளங்கலைப் பட்டப்படிப்பிற்காக கனடா வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, ஐக்கிய இராச்சியத்திற்குச் (UK) செல்லுபவர்களை விட அதிகமாகக் காணப்படுகிறது. சர்வதேச இளங்கலை மாணவர்களை தம்வசம் கவரும் போட்டியில் ஐக்கிய இராச்சியத்தின் பின்னடைவிற்கு அந்நாட்டின் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளே பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தித்தின் சகல கட்சிப் பாராளுமன்றக் குழு ஒன்றின் ஆய்வின் மூலம் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.cicnews.com/2016/05/canada-popular-uk-international-undergraduates-058022.html#LmeVFdyPpqk6GT1j.99
-
- 10 replies
- 1.1k views
-
-
கடந்த இரண்டு நாள்களிற்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பின்னணியில் அவரது சகோதரரால் நடாத்தப்படும் லங்காசிறீ. தமிழ்வின் மற்றும் மனிதன் இணையத்தளங்கள் பற்றியதொரு சர்ச்சை கிளம்பியிருந்தது. கூடவே இன்னொரு பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கின்றது அது என்னவெனில் லங்கா சிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi 2 world தமிழ் அரட்டை சேவை பற்றியது. அந்த காணொளி அரட்டையூடாக பலநூறு தமிழர்கள் தமிழிச்சிகள் ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது. அதைப்பற்றி அறியலாமென நினைத்து அரட்டையில் அரட்டையடிக்கும் ஒரு இளைஞரை இனம் கண்டு தொடர்புகொண்டபொழுது அவர் அண்ணை என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை நிர்வாண…
-
- 10 replies
- 2k views
-
-
தேவசகாயம் தலைமையிலான ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயச் செயற்பாடு மீது UK Charity Commission சந்தேகம் எஸ் கருணலிங்கம் தலைமையிலான செயற்குழுவை கலைப்பதற்கு ஆலயத்தின் அறக்கட்டளையினருக்கு அந்த அதிகாரம் இருப்பது பற்றி தமக்கு தொடர்ந்தும் சந்தேகம் இருப்பதாக Charity Commission,UK தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக Charity Commission,UK கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளைக்கு மார்ச் 13ல் எழுதியுள்ள கடிதத்தில் செயற்குழுவை கலைப்பதற்கான தகுந்த காரணங்கள் எதனையும் அறக்கட்டளையினர் வழங்கவில்லை என அம்மடலில் தெரிவித்து உள்ளது. லண்டனில் உள்ள கூடிய வருமானம் உடைய ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயகத்தில் பல்வேறு நலவாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டு வந்தது. மாணவர்களுக்கு இலவச கணணி வகுப்புக்…
-
- 10 replies
- 1.8k views
-
-
பொதுவாக நமக்குள் சிலர் தையைத் தமிழ்ப் புத்தாண்டு எனச் சில வருடங்களாகக் கொண்டாடுவார்கள். தாயகத்தில் இருந்து இறுதி யுத்த காலப்பகுதியில் வந்ததாக சொல்லப்படுகின்ற கடிதத்தை மையப்படுத்திப் பலர் கொண்டாடுவார்கள். அவர்களிடம் விளக்கம் கேட்டால் எந்தக் காரணமும் அவர்களுக்குச் சொல்லத் தெரிவதில்லை. இத்தனைக்கும் இப்படிப்பட்ட தமிழர் வாழ்வியல் பற்றிய அந்தக் கடிதத்தில் தலைவர் சம்மதித்தாரா என்பது பற்றி எந்த ஆதாரமும் இல்லை. சிலர் சித்திரையில் விஸ்ணு- நாரதர் பற்றிய புராணக்கதை இருப்பதால் தையில் கொண்டாடலாம் என்பார். தையிலும் ஒரு புராணக்கதையை உருவாக்கினால் எந்த நாளுக்கு மாறுவார்? ஒரு காலத்தில் தைப்பொங்கலைத் தமிழர் விழாவாக கொண்டாடிய மனது, இந்தப் புத்தாண்டு விடயத்தின்பின்னர் அது பற்றிய விபரங்களை…
-
- 10 replies
- 1.4k views
-
-
லண்டனில் கருனா குலு தன் நிதி சேகரிப்பு பணிகளில் ஏடுபடுவதாக செய்தி ஒன்று காதுக்கு வந்துள்ளது. இது பற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள்.
-
- 10 replies
- 2.5k views
-
-
பரியோவான் கல்லூரி பழைய மாணவனும், என் நண்பனும், Yarl IT hub இன் முதுகெலும்பாகவும் இருக்கும் ரமோஷனின் வாழ்க்கை பயணம் பற்றிய காணொளி / பேட்டி. தான் மட்டும் முன்னேறியதுடன் வடக்கில் உள்ள இளையவர்களையும் முன்னேற்ற முயற்சிகளை எடுக்கும் ஒருவர் இவர். இக் காணொளியை தயாரித்து வெளியிட்ட Saho Creation இற்கு நன்றி.
-
-
- 10 replies
- 919 views
- 1 follower
-
-
புலம் பெயர் தமிழர், தாங்கள் வாழும் நாடுகளில், தங்களைத் தமிழர்கள் என்று வெட்கப்படாமல் பிரகடனப் படுத்துவதன் மூலம் பலவற்றைச் சாதிக்க முடியும்! அவற்றுள் ஒன்று ' லண்டன் நிலங் கீழ்' புகையிரத பயணச்சீட்டு இயந்திரத்தில் தமிழ் மொழியின் அறிமுகம் என்றும் நான் கருதுகின்றேன்! நான் கூறுவது, பிழையாக இருந்தால், லண்டன் வாழ் உறவுகள் தெரியப்படுத்தவும்! எது எப்படியோ, சிங்களவன் எழுதிற தமிழிலும் பார்க்க, இதில் தமிழ் மணக்கிறது!
-
- 10 replies
- 1.3k views
-
-
Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்! March 7, 20250 Share0 Markham நகர இல்லம் ஒன்றில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண்ணும், வளர்ப்பு நாயும் பலியாகினர். இதில் மற்றொரு ஆண் படுகாயமடைந்தார். வெள்ளிக்கிழமை (07) காலை 6:30 மணியளவில் நெடுந்தெரு 48 – Castlemore வீதிகளுக்கு அருகில் உள்ள Solace வீதியில் உள்ள இல்லம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் 20 வயதான நிலட்சி ரகுதாஸ் என்ற தமிழ் பெண் பலியானார். 26 வயது ஆண் கடுமையான, ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தத் தாக்குதலின் போது German Shepherd நாய் ஒன்றும் உயிரிழந்துள்ளதாக York பிராந்திய காவல்துறையின…
-
-
- 10 replies
- 993 views
-
-
-
- 10 replies
- 1.7k views
-
-
அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றிவரும் மருத்துவர், பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற தமிழருக்கு, உலக அளவில் மதிப்புமிக்க பொறியியல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாக்டர் பரஞ்சோதி ஜெயக்குமார் அவர்கள் அமெரிக்க இராணுவத்தின் பீரங்கி வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார் இவர், இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று, 1982-83 காலப்பகுதியில், அதே பல்கலைகழகத்தில் கணிதவியல் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு SAE International என்ற அனைத்துலக பொறியியலாளர் அமைப்பு ஆண்டுதோறும் வழங்கி வரும், ஆர்ச் டி கொல்வெல் ஒத்துழைப்பு பொறியியல் பதக்கத்தை (Arch T. Colwell Cooperati…
-
- 10 replies
- 1.2k views
-
-
கீழ்வரும் செய்தியானது ஈமெயிலில் வந்திருந்தது. கள உறவுகளின் பார்வைக்கு இங்கு பதிவிடுகிறேன். தமிழ் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 26.09.2001 அன்பார்ந்த எமது உறவுகளே! முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே என்பதை காத்திரமாக வெளிப்படுத்தக் கூடியவர்கள் புலம் பெயர் தமிழர்களே என்ற வகையில் அதனை சிதைக்கும்; நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது. இந்த சிதைப்பு நடவடிக்கைக்காக சில அடிவருடிகளையும் வழிதவறிப் போன சில போராளிகளையும்; அது களமிறக்கியுள்ளது. இக்குழுக்கள் ‘தலைமைச் செயலகம்’ என்று கூறி புலம் பெயர் மண்ணில் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்வதுடன் வழமைய…
-
- 10 replies
- 1.5k views
-
-
ஆஸ்திரேலியாவில் பிரதமரின் இல்லம் சுற்றிவளைப்பு; மக்கள் ஆவேசத்துடன் உண்ணர்ச்சி பூர்வமாக சாலை மறிப்பு Dr. Brian Seneviratne addressing the protest in Sydney
-
- 10 replies
- 2.9k views
-
-
2019ம் ஆண்டு பிரிட்டனில் பிரபலமாகும் உணவு வகைகளில் இலங்கை உணவுவகைகள் முதலிடத்தினை பிடித்து உள்ளதாக பிபிசி தெரிவிக்கின்றது. இரண்டாவது இடத்தினை பர்மிய உணவு பிடித்துள்ளது. லண்டன் ஹொப்பேர்ஸ், தி கோகனட் ட்ரீ, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் விற்கப் படும் ஆசியா ரேஞ்சு வகைகளில் அதிகம் விலையாகும் இலங்கை உணவு வகைகள் போன்றவை சிறப்பான வகையில் இலங்கை உணவுகளை முன்னணிக்கு கொண்டுவர உதவி உள்ளன. மேலும், கொத்து லங்கா தரும் தெருவோர உணவான கொத்து ரொட்டி, தேங்காய் சம்பல் போன்றன மிகவும் தரமானவை. முன்னர் இலங்கை உணவுகள், இந்திய உணவு வகையினுள் முடங்கி இருந்தது. இப்போது, அவ்வாறு இந்திய உணவு ஆக இல்லாமல், தனி அடையாளத்துடன் வீறு நடை போடுகின்றது என்கிறார் 'தி குரோஸ்ர்' பத்திரிகையின், பிரபலமாகும் …
-
- 10 replies
- 2.3k views
-
-
ஜெயதேவனுக்கு; தாங்கள் அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றில் கூட்டப்பட்ட கூட்டம் சம்பந்தமாகவும், தங்களால் தொடங்கப்பட்ட புது கட்சி தொடர்பாகவும், தாங்கள் விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்டதற்காகத்தான் தற்போது எதிராக செயற்படுவதாகவும், ... பலபல நாடகங்களை அரங்கேற்றி வருகிறீர்கள்!! இவை சம்பந்தமாக பிரித்தானிய தமிழ் பிரஜை ஒருவருக்கு ஏற்படும் கேள்விகள், விடைகளை தங்களோடு பகிர விரும்புகிறேன்!! இதற்கான பதில்கள் தங்களிடமிருந்து வரமாட்டாது என்று தெரிந்தும் எழுத முற்படுகிறேன்!! தாங்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் வன்னி சென்றபோது, விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகத்தான் நீங்கள் இன்றைய கோலம் கொண்டுள்ளதாக கூறுகிறீர்கள்!! ம…
-
- 10 replies
- 2.5k views
-
-
P2P போராட்டம் – பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி 44 Views தமிழர் தாயகத்தில் பெரும் எழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரித்தானிய தமிழர், பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். Video Player 00:00 00:17 http://tccuk.org/wp-content/uploads/2021/02/2f2ea145-231f-4931-8217-aa5604…
-
- 10 replies
- 1.4k views
-