நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
வீழ்ந்து போனவர்களின் ஒலிக்கும் குரல்கள் டிசே தமிழன் -'வன்னி யுத்தம்' என்கின்ற நேரடிச் சாட்சியின் நூலைப் பற்றிய பதிவு- 1. யுத்தங்களில் நியாயமாய் நடந்த போர்கள், நியாயமற்று நடந்த போர்கள் என்கின்ற வரலாறே இல்லை. போர் என்பது எப்போதுமே அழிவுகளேயே தரக்கூடியயையே. போர் ஒன்றில் வென்றவர்களாய் இருந்தாலென்ன தோற்றவர்களாய் இருந்தாலென்ன யுத்தத்தின் நினைவுகளிலிருந்து அவ்வளவு எளிதில் எவருமே வெளியேறி விடமுடியாது. வென்றவர்கள் தம் வெற்றிக்களிப்பின் போதையில் அது நிகழ்த்திய அழிவுகளை மறந்தமாதிரி ஒரு நாடகத்தை நிகழ்த்தலாம். ஆனால் அது உண்மையல்ல, ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. தோற்றவர்கள் இந்த வலிகளோடும் வடுக்களோடும் மிஞ்சியுள்ள காலங்களை வாழத்தான் வேண்டியிருக்கின்றது. 'வன்னி யுத்தம்' என்…
-
- 9 replies
- 704 views
-
-
தமிழக வாசகர்களின் உற்சாக வருடாந்திரத் திருவிழாவான சென்னைப் புத்தகக் காட்சி வாசகர்கள் எண்ணிக்கை, வாங்கப்பட்ட புத்தகங்கள் எண்ணிக்கை, விற்பனையான தொகை என எல்லா விதங்களிலும் இதுவரை இல்லாத புது உச்சத்தைத் தொட்டு புதன்கிழமையோடு நிறைவடைந்தது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 37-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெற்றது. சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் 777 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பிரமாண்ட புத்தகக் காட்சியில் 435 தமிழ்ப் பதிப்பாளர்கள், 263 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 59 ஊடகப் பதிப்பாளர்கள் பங்கேற்றனர். ஏறத்தாழ ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புக…
-
- 9 replies
- 4.5k views
-
-
"வெந்து தணியாத பூமி" இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை (26.03.2022) அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் திரு. வரதன் கிருஸ்ணா அவர்கள் எழுதிய "வெந்து தணியாத பூமி" புத்தகம் வெளியிடப்படவுள்ளது. இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த வரதன் கிருஸ்ணா அவர்கள் ஈழப் புரட்சி அமைப்பில் (Eelam revolutionary organisation - EROS) இணைந்து செயல்பட்டவர். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார். மலையக மக்கள் வாழ்வு, அரசியல் மற்றும் தமது ஈழப் போராட்ட அனுபவங்கள் குறித்து மிக ஆழமான பார்வையையும், திறனாய்வுகளையும் வரதன் கிருஸ்ணா இந்நூலில் வெளிக்கொண்டு வந்துள்ளார். சமாதானத்திற்கான கனேடியர்கள் ஸ்ரீலங்கா சார்வு வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. இலண்டன…
-
- 9 replies
- 764 views
-
-
முக்கிய குறிப்பு: நான் நூல் விமர்சகனோ அல்லது திறனாய்வாளனோ அல்ல. உப்பு நாய்கள் மீதான என் பார்வையை மட்டும் கீழே தருகின்றேன். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அண்மைக் காலங்களில் ஒரு நாவலை இந்தளவுக்கு மனம் அதிரவும், சற்று அருவருப்பு உணர்வு மேலிடவும், ஆத்திரம், இரக்கம், கோபம், அதிர்ச்சி போன்ற கலவையான உணர்வு பெருக்கு எழவும் வாசித்திருக்கவில்லை. வாசிக்க கூடாத நாவலாகவும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நாவலாகவும் இருக்க கூடிய நாவல்களில் ஒன்றாக உப்பு நாய்கள் அமைந்திருக்கின்றது எனக்கு. சென்னையின் பணச் செழிப்பு மிக்க பகுதிகளிலும், செழிப்பும் வறுமையும் பக்கம் பக்கம…
-
- 9 replies
- 2.3k views
-
-
சொல்வனம் இணைய இதழில் படித்தவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். முழுமையாகப் படிக்க: இதழ்: 112 பெர்லினும் தமிழ் இலக்கியத்துக்குள் வந்தாச்சு வெங்கட் சாமிநாதன் தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு. எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது. இது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்துதான். - See more at: htt…
-
- 9 replies
- 4.5k views
-
-
யூலியன் கப்பெலி (Julian Cappelli)அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். சிறுவர்களுக்கான புத்தகங்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். அவருடைய சிறுவர்களுக்கான இரண்டு புத்தகங்களுக்கு( The Missing cup cake, Block Party) நான் படங்களை வரைந்திருக்கிறேன். யூலியன் கப்பெலி ஒருதடவை ஒரு தமிழ்க் குடும்பத்தை சிட்னியில் சந்தித்த பொழுது, “பாயசம் வைக்க வேண்டும் பானையிலே அரிசி இல்லை…” என்று அங்கே சிறுவன் ஒருவன் பாடுவதைக் கேட்டு அந்தப் பாடல் பிடித்துப் போய் அதைப் பற்றி என்னிடம் கேட்டார். அந்தப் பாடலை இணையத்தில் தேடி எங்கோ ஒளிந்திருந்த பாடலைத் தேடி எடுத்து அதன் விளக்கத்தை அவரிடம் சொன்னேன். அதை வைத்து அவர் எழுதிய சிறுவர்களுக்கான பாடல் புத்தகம்தான் Oats and honey. …
-
-
- 8 replies
- 1.1k views
-
-
“ஆறா வடு” என்று ஒரு நாவல் வந்திருக்கு, இப்படி ஒரு எழுத்தை அண்மைக்காலமாக வாசிக்கவேயில்லை, நீங்க கட்டாயம் விமர்சனம் எழுதோணும் -- தம்பி, நீர் மட்டும் சிட்னி வந்தா, “ஆறா வடு” புத்தகத்தை தருவன், வாசிச்சு பாரும் ஜேகே, நான் உடுமலை.காம் இல இருந்து வாங்கி வைச்சிருக்கிறன். வாசிச்சு முடிச்சு இப்ப மனிசி வாசிச்சுக்கொண்டு இருக்கு. கதை நல்லா இருக்கு. ஆனா அவர் மற்ற கோஷ்டியா? ஜேகே, நீங்க கட்டாயம் வாசிக்கோணும். சயந்தனில இருக்கிற லிபரல் நக்கல் எப்பவுமே கலக்கும். அண்ணா, நீங்க வாசிச்சிட்டு விமர்சனம் போடுங்க. யாரு வாசிக்காட்டியும் நீங்க வாசிக்கோணும். அப்ப தான் “எழுத்து” என்றால் உங்களுக்கு என்னவென்று விளங்கும்! சயந்தன் எழுதிய “ஆறாவது வடு” நூல் ஆஸ்திரேலியாவில் …
-
- 8 replies
- 2k views
-
-
* இந்த மதிப்பீட்டில் ‘தி இந்து’ வெளியீடுகள், ‘தி இந்து’ குழுமத்தைச் சார்ந்தவர்களின் நூல்கள் சேர்க்கப்படவில்லை. பளிச் புத்தகம் புத்தகக் காட்சியின் பளிச் புத்தகம் ‘அடையாளம் பதிப்பக’த்தின் ‘தொடக்க நிலையினருக்கு...’ பின்நவீனத்துவம், ஜென், மொழியியல், புவிவெப்பமாதல் போன்ற தூக்கம் வரச் செய்யும் விஷயங்களை எளிமையாகவும் சுவாரசியமாகவும் தரும் புத்தக வரிசை இது. அதுவும் இதன் காமிக்ஸ் பாணி வடிவமைப்பு இருக்கிறதே... தமிழுக்குப் புதுசு மட்டும் அல்ல; எவரையும் வசீகரிக்கக் கூடியதும்கூட! மீண்டும் காந்தி காந்தியும் நேருவும் வசீகரித்தனர். ‘கிழக்குப் பதிப்பகம்’ கொண்டுவந்த ராமச்சந்திர குஹாவின் ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’, ‘அலைகள் வெளியீட்டகம்’ கொண்டுவந்…
-
- 8 replies
- 1.6k views
-
-
அறிய மனமுள்ள அனைவரிற்கும் ஏணைப்பிறையை அறிமுகம் செய்கின்றோம். இதில் பெரும் மனநிறைவும் அடைகின்றோம். புவி ஏதோவொரு அச்சில் சுழல்வதாகச் சொல்கின்றார்கள். இந்த மனிதகுலம் எந்த அச்சில் சுழல்கின்றது. ஏணைப்பிறையில் விடையுள்ளது. ஏணைப்பிறையை யாரும் வாசிக்க முடியாது. அதற்குள் வாழத்தான் முடியும். வாழத்துடிக்கின்ற, ஆனால் வாழமுடியாத, ஆனாலும் வாழ முயல்கின்ற மக்கள் கதைதான் இது. ஒவ்வொரு காலகட்டத்தின் முடிவும் இன்னொன்றின் தொடக்கமும் ஏதோ ஒரு விடுதலையை நோக்கிய போராட்டத்தின் விளைவே. ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் உலகிற்களித்த கொடை, என்றும் உயிர் வாழும் இலக்கியங்கள்தான். இவ்விலக்கியங்களுள் என்றும் உயிர்வாழும் மனிதர்களைத்தான். அவ்விலக்கியங்களுள் முற்றிலும் இருள் சூழ்ந்து பாதைகள் யாவும் மூடுண்ட …
-
- 8 replies
- 5.2k views
-
-
நான் மரணித்திருக்க வேண்டும் இயக்குனர் சேரன் வெள்ளி, 18 ஜனவரி 2013 04:56 "எம் இல்லங்கள் தீக்கிரையானது எம் குழந்தைகள் மடிந்தனர் எம் பெண்கள் கற்பிழந்தனர் எம் இளைஞர் சுடப்பட்டனர் எம் தேசம் அழிக்கப்பட்டது நாங்கள் எம் மொழியைப் பேசியிருக்கக் கூடாது'' ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத்தில் ஒரு பெரும் போர் நடந்து முடிந்தது. போரின் முடிவில் லட்சக்கணக்கானோர் அகதியாக்கப்பட்டு புலம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான குழந்தைகளும், தாய்மார்களும் பெரியோரும் இறந்து போனார்கள். ஆயிரக்கணக்கான போராளிகள் செத்து மடிந்தனர். ஒரு போரினால், இவ்வளவு துயரங்கள் நடக்கும் என்பது வரலாறு நமக்களித்திருக்கின்ற படிப்பினை. ஆனால் எதற்காக இந்தப்போர் நடந்தது? உலகம் தோன்றிய காலந்தொட்…
-
- 8 replies
- 1.7k views
-
-
- ஜெயபாலன் த - 28 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளான யூலை 12 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிலவற்றை இடைமறித்து அதில் பயணித்த 69 முஸ்லீம்களைப் மட்டக்களப்பில் குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்தனர். ஏற்கனவே கீழ் நிலையில் இருந்த தமிழ் – முஸ்லீம் இனங்களுக்கு இடையேயான உறவை இப்படுகொலைகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளியது. இப்படுகொலைகள் இடம்பெற்று 28 ஆண்டுகளின் பின் இப்படுகொலையை ஆவணப்படுத்தும் ‘குருக்கள் மடத்துப் பையன்” என்ற நூலை சையது பஷீர் எழுதி உள்ளார். நிச்சாமம் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் யூலை 14 சனிக்கிழமை தேசம் வெளியிட்டு வைக்க உள்ளது. கிழக்கு லண்டன்; ஈஸ்ற்ஹாமில் நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கு அரசியல் ஆய்வாள…
-
- 8 replies
- 915 views
- 1 follower
-
-
இது முற்றிலும் பெண்களால் நிரப்பப்பட்ட நாவல். பெண்ணின் அகவுலகை ஆணின் பார்வையிலிருந்து பார்த்துப் பழகிய நமக்கு இதுவொரு புது அனுபவமாக இருக்கும். நாவலின் மையக்கருத்தை பின்னட்டையிலிருக்கும் குறிப்பிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது. இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை, வெளிவந்தவையும் ஓர் ஆணின் பார்வையிலிருந்தே அமைந்து வந்துள்ளது. முன்னுரையில் குறிப்பிட்டது போன்று "முதல் ஜாமத்தைக் காட்டிலும், விபரீதமானது - கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்". அது எல்லைகளற்றது, கட்டுப்படுத்த முடியாதது, தணல் போன்றது, ஆழ்ந்த நினைவுகளைக் கிளறிக் கொணர்வது. நாவலில் வரும் பகுதிகளைக் குறிப்பிடாமல், என்னுள் உணர்ந்தவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ராபியா என்ற…
-
- 8 replies
- 3k views
-
-
போதையில் பல வகை ஆர். அபிலாஷ் போன வாரம் இங்கே ஒரு கூட்டம் நடந்தது. இணைய (போர்னோகிரபி, சமூக வலைதளங்களின்) போதை பற்றி ஒருவர் விரிவாக பேசினார். ஏற்கனவே நாம் கேள்விப்பட்டது தான். இணையம் நமது நரம்பணுக்களின் சர்க்யூட்டை மாற்றி அமைக்கிறது. உடனடி கிளர்ச்சிக்காய் மனம் ஏங்கத் துவங்குகிறது. எதையும் ஊன்றி பொறுமையாய் கவனிக்க முடியாமல் மனம் சிதறுகிறது, தத்தளிக்கிறது, அலைபாய்கிறது. இது தான் இணைய போதை. இது நம்மில் கணிசமானோருக்கு மிதமான அளவில் உண்டு. நான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் சென்னைக்கு படிக்க வந்த போது ஜெயமோகன் என்னிடம் இணைய போதை பற்றி எச்சரித்தார். அப்போதெல்லாம் ஸ்மார்ட் போன்கள் இல்லை. கணினி மையங்களுக்கு போய்காளைவண்டி போல் ஓடும் இணையத்தை மேய வேண்டும். ஆன…
-
- 8 replies
- 1.9k views
-
-
84 இல் எனது 12 ஆம் வயதில் நான் ஓடத் தொடங்கியது இப்போது சில வருடங்களாகத்தான் ஓய்திருக்கிறேன்.எனது ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு விடயங்களில் தீவிரமாக இருந்திருக்கிறேன்.எனது 92 தொடக்கம் 93 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொழும்பில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. கொழும்பு எனக்கு ஏற்கனவே பழக்கமான இடந்தான் (90 இல் இந்துக் கல்லூரியில் சில மாதம் படித்திருந்தேன்) என்றாலும் எதாவது செய்ய வேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசித்த போது பழம்தமிழ் புத்தகங்களை சேகரிக்கும் எண்ணம் தோண்றியது. மிக நல்ல புத்தகங்களைச் சேர்த்தேன்.நான் நோர்வேக்கு இடம்பெயரும் போது அனைத்து புத்தகங்களையும் இங்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்தென். ஆனால் பல பொதிகள் வழியில் தொலைந்து போயின. எனது உ…
-
- 8 replies
- 4.8k views
-
-
இளமைக்கால நினைவுகள் எவ்வளவு சுவையானவை. எளிதில் மறக்கக்கூடியவையா என்ன? எங்கள் இளமைக்காலத்து நினைவுகளை அசைபோடும் கட்டுரைத்தொடரை நான் சில ஆண்டுகளாக “ஒரு பேப்பர்’ பத்திரிகையில் எழுதிவந்தேன். குறிப்பிடக்கூடிய அளவு வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற அவற்றில் 36 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஓவியர் ரமணியின் சித்திரங்களுடன் ” நேற்றுப்போல இருக்கிறது” என்ற பெயரில் தொகுப்பாக வெளிவர இருக்கிறது. இதுவும் எனது “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவலைப் போலவே வடலி வெளியீடாக வருகிறது. ரமணியின் ஓவியங்கள் இந்தத்தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன.. எங்கள் சின்ன வயதில் சைக்கிள் பழகுவதென்பதை பெரிய சடங்காகவே நடத்தி முடிப்போம்.. விடலைப் பருவத்தில் சைக்கிள் பழகி, எட்டாத பெடலை எட்டி உழக்கி, உழக்கி ஓட…
-
- 8 replies
- 1.5k views
-
-
உறவுகளுக்கு வணக்கம்🙏 Discovery Book Palace வெளியீடாக வரவுள்ள எனது அடுத்த நூலின் (சிறுகதை) அட்டையை வெளியிடுவதில் மகிழ்கிறேன்❤ சிறந்த அட்டைப்படத்தை வடிவமைத்த பாலாஜி அவர்களுக்கு நன்றி! தியா - காண்டீபன்
-
-
- 8 replies
- 1.5k views
-
-
`20 ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சியைப் புகட்டி நிற்கும் மகத்தான தொகுப்பு' [17 - January - 2007] [Font Size - A - A - A] {தினக்குரல்} தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகத்தை உடையதென்ற புகழை முன்னர் யாழ்ப்பாணமே தன் வசம் வைத்திருந்தது. இத்தகைய நிலைமை யாழ்ப்பாணம் பெறுவதற்கு அதற்கான தகுதியைக் கொடுத்தவை யாழ்ப்பாண மக்களின் கல்வியும் அவர்களது தீவிர வாசிப்புப் பண்பாடுமாகும். யாழ்ப்பாண மக்களின் வாசிப்பிற்குப் பசளையிட்டவை; அக்காலத்தில் அங்கு இயங்கிக் கொண்டிருந்த புத்தக சாலைகளெனில் அதற்கு மறுப்பிருக்காது. இத்தகைய புத்தகசாலைகளில் பூபாலசிங்கம் புத்தகசாலையுமொன்றாகும். இப்புத்தக நிலையங்கள் தரமான நூல்களையும் சஞ்சிகைகளையும் இறக்குமதி செய்தும் கொள்வனவு…
-
- 8 replies
- 13.2k views
-
-
01. யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையையும் சுமத்திவிட்டிருக்கிறது. இந்தத்தொகுதியில் இடம்பெறுகிற கூடுதலான கவிதைகள் அம்மா பற்றிய ஏக்கங்களாகவே இருக்கின்றன. தீயில் எரியும் அம்மாவை முத்தமிட வரமுடியாத துயரத்தை ஜெயபாலன் எதிர்கொண்டவர். யுத்தம் நிறையப் போரை நோயாளியாக்கியிருக்கிறது. பிரித்திருக்கிறது. தொடர்புகளை துண்டித்திருக்கிறது. தோற்றுப்போனவர்களின் பாடல் என்ற கவிதையும் அம்மா கவிதைகளின் தொடர்ச்சியாகவும் எல்லா அம்மாக்களின் திரண்ட துயரமாகவும் எழுச்சியாகவும் எழுதப்பட்டிருக்கிறது. ஈழத்து கவ…
-
- 8 replies
- 6k views
-
-
[size=6]சே குவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தொபரின் வீடு [/size] யமுனா ராஜேந்திரன் ஹேபர்ட் மார்க்யூஸ் கூறுவது போல 'புள்ளிவிபரங்கள் ஒருபோதும் குருதி சிந்துவதில்லை'. கதை சொல்லிகளே புள்ளிவிபரங்களை குருதிசிந்த வைக்கிறார்கள். ஆவணங்கள் அறிக்கைகளில் வரும் புள்ளிவிபரங்களை விடவும் கதைசொல்லிகளால் ரத்தம் சிந்த வைக்கப்படும் உண்மைகள் அதிகம் கூரானவை, உயிருள்ளவை. - நிலாந்தன் நிலவிய சோசலிசம் குறித்து, பின் புரட்சிகர சமூகங்கள் குறித்து, சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் அடியொற்றிச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எந்தப் பிரமைகளும் இல்லாதது போலவே ஈழப் போராட்டம் குறித்தும், விடுதலைப் புலிகள் அதனோடு பிற இயக்கங்கள் குறித்தும் விடுதலை அரசியலில் நாட்டமுள்ள எவருக்கும் இன்று எந்தப்…
-
- 7 replies
- 3k views
-
-
-
- 7 replies
- 1.4k views
-
-
கவி அருணாசலம் எழுதிய... "மூனாவின் நெஞ்சில் நின்றவை" என்ற புத்தகத்தையும், சந்திரவதனா எழுதிய... "மன ஓசை" என்ற புத்தகமும்.. பாஞ்ச் அண்ணா மூலம் கிடைத்தது... மிகப் பெரிய சந்தோசம். 😍 முதல் புத்தகம்... 144 பக்கம். இரண்டாவது புத்தகம் 195 பக்கம். இதனை.. வாசித்து முடிப்பதற்கிடையில்.... எனது, காலம் கடந்து விடுமோ...? என்று, தலையை... சொறிந்து கொண்டு, வாசிக்க ஆரம்பித்தது.... புத்தகத்தை கீழே, வைக்க முடியாமல்... பல இரவுகள்... நடு இரவு ஒரு மணி வரை... வாசித்தேன். அந்த... இரண்டு புத்தகங்களையும், ஒரு கிழமையில்... வாசித்து முடித்தது, எனக்கே... அதிசயமாக உள்ளது. கவி அருணாசலம். யாழ். யாழ் களத்திற்கு... வந்த விதமே... மின்னல் போன்றது. "2018´ம் ஆண்டு... தை" …
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
"அப்பால் ஒரு நிலம்" நாவலை வாசிக்க தொடங்கும் போது வழமையான போர் பற்றிய வலியை பேசப்போகிறது என்னும் முன் சிந்தனையுடன் தான் தொடங்கியது வாசிப்பு ,ஏனெனில் குணா கவியழகன் அவர்களின் முதல் நாவல்கள் தந்து போன வலியை இது கொஞ்சம் கூடுதால கொடுக்கலாம் என்னும் எண்ணமும் இருந்தது, காரணம் அந்த போரோடு வாழ்த்த ஒவ்வெரு ஜீவனும் அறியும் அதன் உக்கிரம் அதிலும் அதில் தன்னை செலுத்தி நீந்திய இளையவர்களுக்கு அது இப்பொழுது பெரு வலி . வீரன் பற்றி ஆசிரியர் சொல்ல தொடங்கும் போது, எம் அருகில் இருந்த ஒரு வீரன் நினைவில் வருகிறான் ,அவன் தான் இளங்கீரன் இவன் பூநகரி மண்ணில் பிறந்த ஒருவன் அழகிய வெண்மை நிறமான அவனுது தேகம், ஒரு பெண்ணுக்குரிய அவனின்வசீகர முகம் எவரையும் இவன் பெ…
-
- 7 replies
- 2.3k views
-
-
வெண்முரசை என்ன செய்வது? சுரேஷ் பிரதீப் சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக 'கண்டெடுக்கப்பட்டு' கொடுக்கப்படும் எதையுமே நமக்கு - அதாவது தமிழர்களுக்கு - முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார். வெண்முரசின் இறுதி நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலையும் மாலையுமாக ஜெயமோகன் வெண்முரசு வாசகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதை ஒட்டி தமிழ் அறிவ…
-
- 7 replies
- 2.4k views
-
-
காவிரியின் பாதையில், மலைசார்ந்த பசிய கிராமம். வயல்கள், கோப்பி, காடு, மூங்கில் என பசுமையின் அனைத்து வகையறாக்களாலும் நிறைந்த கூர்க் என்ற பெயருடைய, மைசூரை அண்மித்த தென்னிந்தியக் கிராமம். 19ம் நூற்றாண்டின் இறுதி, ஆங்கில காலனித்துவ காலம். உள்ளுர் வெளியூர் என வந்த பல படையெடுப்புக்களை வென்று கூர்க் கிராமம் இன்னமும் சுதந்திரமாய் இருந்த காலம். ஏழு மாதக் கர்ப்பிணித் தாயொருத்தி வயலில் நிற்கிறாள். நூற்றுக்கணக்கான வெள்ளைக் கொக்குகள் படையணியென எங்கிருந்தோ வியூகமமைத்து வந்து, அக்கர்ப்பிணியைச் சுற்றி வட்டமடித்துத் திடீரெனக் குத்தியெழும்புகின்றன. அவற்றின் செட்டைகளில் ஒட்டிச்சென்று விழுந்த வயல்நீர் திடீர் மழையாகிய அதே கணத்தில், அந்தத் தாய் தனது கால்களினிடையே வெப்பமான நீரினை உணர்கிறாள். கொக…
-
- 7 replies
- 1k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், "காதலென்னும் சாம்பிராச்சியத்தின் தூண்களெல்லாம் தோல்விகள்தான் என் தேவதையும் என்னை அங்கே ஓர் தூணாக சேர்த்துவிட்டாள்..!" இது யாழ் இணையம் மூலம் அறிமுகமாகி "என் கல்லறைச் சினேகிதியே" எனும் கவிதைத்தொகுப்பை அண்மையில் படைத்த இளங்கவி அவர்களின் புலம்பல். அண்மையில் நான் வடலி வலைத்தளம் ஊடாக 'இளங்கவி' அவர்களின் மேற்கண்ட கவிதைத்தொகுப்பு நூலை பெற்று இருந்தேன். தாராளமாக உணவு இருந்தாலும் பசி வரும்போதுதானே விரும்பி உண்ணமுடியும்? இளங்கவியின் நூலை நான் கடந்தமாதம் பெற்று இருந்தாலும் கடந்த சில நாட்களாகவே கவிதைகளை வாசித்துப்பார்க்கவேண்டும் என்கின்ற தீவிரஆர்வம் - தாகம் எனக்குள் ஏற்பட்டது (இதை 'அகம் வெடித்தல்' என்று ஓர் யாழ் கள உறவு கூறுவார…
-
- 7 replies
- 2k views
-