Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெருமாள் முருகன் ஏற்படுத்தும் நம்பிக்கை நேற்று நண்பர் பௌத்த ஐயனாருடன் பெருமாள் முருகனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஜெய்ப்பூர் புத்தக விழாவில் பெருமாள் முருகனின் மொழியாக்க நாவல்களை வாங்கி அவரிடம் கையெழுத்துப் பெற (ஆங்கிலத்தில் மட்டும் வாசிக்கும்) வாசகர்களின் ஒரு நெடிய வரிசை நின்ற காட்சியைப் பற்றி ஐயனார் என்னிடம் குறிப்பிட்டார். இன்று பெருமாள் முருகனுக்கு உலகம் முழுக்க வாசகர்கள் தோன்றி விட்டார்கள். வாஷிங்டன் டைம்ஸில் அவருடைய நாவல்களுக்கு மதிப்புரை வருகிறது. இந்திய ஆங்கில படைப்பாளிகளான அருந்ததி ராய், அமிதாவ் கோஷ் கூட அடையாத இடத்தை ஒரு தமிழ் எழுத்தாளர் அடைந்திருப்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. நாம் இதை பொறாமையால் கவனிக்காததைப்…

  2. தமிழ்நதியின் 'மாயக்குதிரை' தமிழ்நதியின் ‘மாயக்குதிரை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பிலிருக்கும் கதைகள் அனைத்தையும் ஏற்கனவே அவை வெளிவந்த காலங்களில் வாசித்திருந்தாலும், இன்னொருமுறை தொகுப்பாக வாசித்தபோதும் அலுப்பில்லாது இருந்ததற்கு, தமிழ்நதியின் கதைகளுக்குள் இருக்கும் கவித்துவமான ஒரு நடை காரணமாயிருக்கக் கூடும். இதிலிருப்பவற்றில் முக்கிய கதைகளாக ‘நித்திலாவின் புத்தகங்கள்’, ‘மாயக்குதிரை’ மற்றும் ‘மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை’ என்பவற்றைச் சொல்வேன்.‘தாழம்பூ’வும், ‘தோற்றப்பிழை’யும் நூற்றாண்டுகள் தாண்டிய கதையைச் சொல்வதில் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசிக்கப்படவேண்டியவை. பெண்களான தாழம்பூவும், ஆயியும் வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து முளைத்துவருகின்றார்கள். காலத்தி…

    • 5 replies
    • 1.1k views
  3. தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை என்.செல்வராஜ் நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெரியவில்லை.2000 குமுதம் தீபாவளி மலரில் டாப் டென் நாவல் தலைப்பில் சிறந்த எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டுவெளியிட்டு இருந்தார்கள். அனைத்து எழுத்தாளர்களின் பார்வை வேறு வேறாக இருந்தன. எனவே நல்ல நாவல் எது என தேடினேன். ஆனந்த விகடன்படித்ததில் டாப் டென் என்ற தலைப்பில் 2006ல் பல எழுத்தாளர்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. குமுதம் டாப் 10 ல் சி. மோகன், வெங்கட் சாமினாதன், ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, கந்தர்வன் ஆகியோர் தங்களின் கருத்தை வெளியிட்டனர். சி மோகன் டாப் 10 நாவல்கள் 1.இடைவெளி 2. புயலிலே ஒரு தோணி 3. விஷ்ணுபுரம் 4. நினைவுப் பாதை 5. நாளை மற்றுமொ…

  4. வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்” ஆசான் ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன். குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம் மூன்று முறை செல்லும் தூதுகளையும், தம் மைந்தரையும், கொடிவழியினரையும் போரின் மூலமாக இழக்காமல் பாதுகாக்க முயலும் பாண்டவ, கெளரவ தரப்பு அரசியர்களின் முயற்சிகளையும் “குருதிச்சாரல்” நாவல் விரித்துச் செல்கின்றது. முன்னர் வெறும் பெயர்களாக அறியப்பட்ட அரசியர்களின் - தேவிகை (தருமர்), விஜயை (சகாதேவன்), பிந்துமதி (பீமன்), கரேணுமதி (நகுலன்), பலந்தரை (பீமன்), துச்சளை (கெளரவர்களின் ச…

  5. கதை நடக்கும் வருடம் 3612,எழுநூறு கோடியாக இருந்த சனத்தொகை உலகப்பேரழிவினால் 35 கோடியாக சுருங்கி விட்டது பேரழிவிலிருந்து எஞ்சியிருப்பது தென் இந்தியாவும் இன்னும் சில தீவுக்கூட்டங்களும் கிட்டத்தட்ட லெமூரியா கண்டம் அளவில் அதற்கு ஒரு அரசன் அரசனுக்கு கீழ் பிரபுக்கள், கிட்டத்தட்ட அடிமையான மக்கள்.அரசனுக்கு பின்இருந்து அவனை ஆட்டுவிக்கும் தொழில்நுட்பத்தினை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் சகலகலாவல்லவன். வெட்டாட்டம் நூலிற்கு பிறகு ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் இன்று காலையில் தான் கிண்டிலில் டவுன்லோடினன் .. இப்போது முடித்தாச்சு...:) நல்ல ஒரு இயக்குனர் கையில் கிடைத்தால் தமிழில் சுப்பரான ஒரு sci-fi படம் கிடைக்கும் வெட்டாட்டத்தினை நோட்டா ஆக்கி கொத்து பரோட்டா போட்டதை போல …

  6. ஆதிரை – கருவுற்ற பெண் நாவல். முன் குறிப்புக்கள் 01 நாடுகடத்தப்பட்ட ஆரிய குழுமத்தினரான விஜயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் இலங்கைக்கு வந்தபோது , இலங்கையில் இயக்கர் நாகர் முதலான தொல்குடிகள் செழித்த இலங்கை நிலத்தில் வாழ்ந்துகொண்இருந்தனர். ஸ்பானியர்களும் பிரிடிஷ்காரர்களும் அமெரிக்க கண்டங்களின் தொல்குடிகளை வலுக்குன்றச்செய்து தங்களுடைய குடியேற்றங்களை நிறுவ அவர்களிடம் ஆயுதங்களும் நரித்தந்திரமும் இருந்தன. நேரடியான போர் மூலம் அவர்களால் அது சாத்தியமானது .ஆனால் விஜயனுக்கு அது சாத்தியமில்லை. மிலேச்சத்தனம் காரணமாக நாடுகடத்தப்பட அவர்களிடம் வெறும் எழுநூறுபேரே காணப்பட்டனர். அவர்களால் ந…

    • 5 replies
    • 2.8k views
  7. ஈழம் - சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் Francis Harrison Francis Harrison பல ஆண்டுகள் பிபிசியின் அயல் செய்தியாளராக ஆசியாவில் பணியாற்றினார். 2000 - 2004 வரை பிபிசியின் இலங்கைச் செய்தியாளராக செயல்பட்டார். இவர் எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த Still Counting the Dead எனும் நூலின் தமிழாக்கமே இந்த நூல். புத்தகம் படிப்பதே தமிழர்களிடத்தில் குறைந்து வரும் நிலையில் இது போன்ற எமது வரலாற்றை தாங்கி நிற்கும் நூல்களை புலம்பெயர்ந்த இளம் சமூகம் வாசித்திருக்க சந்தர்ப்பங்கள் குறைவு என்றே நான் நினைக்கின்றேன். எமது கதையை எமக்காக வேறினத்தவர் ஒருவர் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலையில் தமிழினம் உள்ளது என்பது வருந்ததக்கது. இந்த கதைக்கு சொந்தக்காரர்கள் யாரையாவது நாம் சந்தித்தால் எம்மால் அவர்களி…

  8. கதைப்போம் வா. * பணிக்கர் பேத்தி* எழுத்தாளர் ஷர்மிளா செய்யத் எழுதிய நாவல் பற்றிய விமர்சனம். முஸ்லீம் சமூகத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்வினூடு இலங்கை அரசியலையும் பேசும் நாவல்.

  9. http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1369:2013-03-07-01-08-26&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29

  10. தமிழினப் படுகொலைகள்..1956.2008... என்கிற ஆவணப் புத்தகம்..சென்னை 33வது புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது..தமிழ்நாட்டு உறவுகள் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்...விரைவில் ஜரோப்பா மற்றும் கனடா அமெரிக்கா நாடுகளில் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது. அதற்கான விபரங்கள் வெளியிடப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்..நன்றி.. தொடர்புகளிற்கு Web : www.manitham.net/publishers Email : manitham@gmail.com Skype : tnc-tamilnadu Land Line : +91-44-28133969 Mobile : +91-9003027712 / +91-9443322543 Fax : +91-44-28133968 ஜரோப்பிய தொடர்புகளிற்கு சிறி. தொ.பே..0033611149470 mail..sathiri@gmail.com skype..go…

  11. இன்று (24-12-2023) என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நினைவு நாள். "பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எனும் கொள்கை வழி நின்றவர் தொ.ப. எனவேதான் தமிழூரில் என்னைப் போன்ற சாமானியரும் அவர் அருகில் செல்ல முடிந்தது; எங்கள் அறிவுக்கு எட்டிய வரை அவரிடம் திரட்ட முடிந்தது; என் குருநாதர் என்று அவரைச் சொல்லிக் கொள்ளும் அளவு தைரியம் வந்தது; ஏன், எழுத்தாணி பிடிக்கும் அளவு மனத்திடமே வந்தது ! எனது முதல் முயற்சி 'என் வானம் என் பூமி' என முகிழ்த்தது. இரண்டாம் முயற்சி 'அதே வானம் அதே பூமி' என விரிந்து நிற்கிறது; என் மனம் கவர்ந்த அதே காவ்யா பதிப்பகத்தில் - வாசகர் வட்டம் அதே என்றில்லாமல் மேலும் விரிந்து அமையும் எனும் ஆவலுடன். தம் சீடன் ஒருவன் தா…

  12. கனடா வந்தது முதல் கிறிகெற்றில் அதிகம் ஈடுபாடில்லை. எப்போவாவது சில தடவைகள் விளையாடியும் எப்போதாவது சில தடவை பார்;த்ததோடும் சரி. இந்நிலையில் இரு வாரங்களிற்கு முன்னர் புத்தகக் கடையில் எதேச்சையாக ஒரு நூல் கண்ணில் பட்டது. எழுதியது ஒரு சிங்கள எழுத்தாளன். புத்தகம் கிறிக்கற் சார்ந்தது. என்னிடம் வாசிப்பதற்கு எதுவும் இருக்கவிலலை. கின்டில் வேறு அமசோனின் மாற்றீட்டிற்காய்த் காத்திருந்தது. எனவே என்னதான் எழுதியிருக்கிறார்கள் பார்ப்போம் என்று வாங்கி வந்தேன். வாசித்து முடித்த நிலையில், உண்மையில் பாராட்டிற்குரிய நூல். பெரிதாய் ஆழமாக எதையும் பேசவில்லை. சில தரவுகளில் கூட தவறுண்டு (உதாரணம்: 83 கலவரம் புலிகள் ஒரு கடற்படைப் படகைக் கவிழ்;த்ததைத் தொடர்ந்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது). ஆனால் ஆ…

    • 5 replies
    • 2.2k views
  13. யேர்மனியில் தமிழ் நு}லகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்நூலகத்திற்கு நூல்கள் கோரப்படுகிறது. நீங்கள் எழுதிய அல்லது உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் எழுதிய நூல்களையும் நூலகத்திற்கு தந்துதவலாம். அல்லது உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் இருப்பின் தந்துதவவும். தமிழ் உட்பட யேர்மன் ஆங்கில நூல்களும் வரவேற்கப்படுகின்றது. நன்றி.

    • 5 replies
    • 3k views
  14. மேக்ஸ்மிலியன் ரொபேஷ்பியர் : வாசுதேவனின் பிரெஞ்சுப் புரட்சி Friday, 05 July 2013 20:42 - யமுனா ராஜேந்திரன் - நூல் அறிமுகம் வரலாறு எழுதுதல் எனும் செயல்பாடு கடந்த காலம் பற்றியதாயினும் அது எப்போதுமே எழுதுபவன் வாழும் நிகழ்காலம் குறித்ததாகவே இருக்கிறது. வாசுதேவன் தனது சமகால மனநெருக்கடியிலிருந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பிரெஞ்சுப் புரட்சி குறித்த அவரது வரலாற்று நூலை முன்வைத்து ரொபேஷ்பியர் முதல் பிரபாகரன் வரையிலான ஆயுதப் பேராட்டத்திற்குத் தலைமையேற்ற ஆளுமைகளின் நம்பிக்கைகள், நடைமுறைகள், அதீதங்கள் என ஒருவர் உரசிப் பார்த்துக் கொள்ளமுடியும். வாசுதேவனின் நூலுக்கு அறிமுகம் எழுதுகிற இந்த இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கு 225 ஆண்டுகள் நிறைகிறது…

  15. எனது யாழ்ப்பாணமே! http://issuu.com/tamilnool/docs/yenadhuyazhpaaname?mode=embed&documentId=081206055239-1e704a2f2ca04507a86c1728fba13135&layout=grey ஒருமுறை வாசிப்போம் பின்னர் பேசுவோம்.

    • 5 replies
    • 2.1k views
  16. சமீபத்தில் கி. ராஜநாராயணன், கழனியூரன் தொகுத்து வெளியிட்டிருந்த "மறைவாய்ச் சொன்ன கதைகள்" என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்தப் புத்தகத்தை ஊரிலிருந்து வரும் நண்பனிடம் வாங்கிவரச் சொல்லியிருந்தேன். வாங்கி வரச் சொல்லிவிட்டு ரொம்ப சங்கடப் பட்டுவிட்டேன். அவன் ஏதும் இதை ஆபாசப் புத்தகம் என்று நினைத்து விடுவானோ என்று. புத்தகத்தை படித்தவுடன் தான் தெரிந்தது ஒரு கெட்ட வார்த்தை கூட இந்தப் புத்தகத்தில் கிடையாது என்பது. புத்தகத்தில் பதியப்படிருந்த இந்த வார்த்தைகள் போதும் இந்த நூலை பற்றி அறிந்து கொள்வதற்கு "பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம் காலமாக கேட்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருபவை. இவை ஆபசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தே…

  17. கொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம். (நன்றி- விகடன்)

    • 5 replies
    • 951 views
  18. கனடா பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் ‘இடாவேணி’ நூல் யாழில் வெளியீடு! கனடாவில் வசிக்கும் பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் ‘இடாவேணி’ நூல் அறிமுகமும் உரையாடலும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகக் குவிவுமாடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நூல் பற்றிய அறிமுகத்தை சுரேகா பரம் என்பவர் நிகழ்த்தியதுடன் கருத்தியல் சார்ந்த பெண்ணிய அணுகுமுறையை மதுஷா மாதங்கியும் வாசிப்பு அனுபவத்தை பிறைநிலா கிருஷ் ஆகியோரும் நிகழ்த்தினர். இந்நிகழ்வில், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், புலம்பெயர் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். …

  19. பட்டமோடி (The Kite Runner) "மீண்டும் நல்வழிக்குத் திரும்ப ஒரு வழி இருக்கிறது!" "There's a way to be good again!" (இது பல ஆண்டுகளுக்கு முன்பு நாவலாக வெளிவந்து பின்னர் ஒரு திரைப்படமாகவும் வெளிவந்து விட்ட ஒரு படைப்பு. இதைப் பற்றி ஏற்கனவே யாழில் பகிரப் பட்டிருக்கக் கூடும், ஆனால் கொரனாவுக்கு முடங்கிய நாட்களில் வாசிக்கத் தகுந்த நல்ல புத்தகமாக இருப்பதால் இங்கே பகிர்கிறேன்) "யுத்தம் என்பது குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் மட்டும் நடக்கும் ஒன்றல்ல. இந்த உபகரணங்களுக்கு அப்பால் மக்களின் துன்பத்தினாலும் வாழ்க்கை மாற்றங்களாலும் கூட யுத்தம் பிரதிநிதித்துவம் செய்யப் படுகிறது". இப்படிச் சொன்னவர் வன்னியில் இறுதி யுத்த நாட்கள் வரை வாழ்ந்து மீண்ட தமிழ்க்கவி. …

  20. Product Description நூலின் பெயர் : வால்காவிலிருந்து கங்கை வரை ஆசிரியர் பெயர் : ராகுல சங்கிருத்தியாயன் தமிழில் மொழி பெயர்ப்பு : கண முத்தையா புத்தகம் பற்றி..., 1949 முதல் 27 பதிப்புகளை கண்ட அறிய அறிவுப் புதையலான இந்த புத்தகம் தமிழகத்தில் சிந்தனை புரட்சிக்கு வித்திட்ட சிறந்த புத்தகம் ஆகும் ராகுல் ஜி தமது சிறை வாசத்தில் 1942 ல் ஜெயிலில் இருந்து எழுதி மூல நூலான வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை எழுதி முடித்தார் வால்கா வெளிவந்த சில தினங்களுக்கு பின் அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலை பல்கலைகழக மாணவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் என்று சொன்னார் மனித நாகரிக வரலாற்றை…

  21. " தலைவரின் சிந்தனைகள் " என்ற இந்த நூல் முதற்பதிப்பாக 1995 இலும் இரண்டாவது பதிப்பாக 2005 இலும் 72 பக்கங்களைக் கொண்ட சிறியதொரு கையடக்க நூலாக வெளிவந்தது. இதனை தமிழினம் வாசிப்பதனூடாகப் பல்வேறு நடைமுறைகளையும் இன்றைய சூழலையும் புரிந்து கொள்ளலாம் என்பது எனது பார்வையாகும். குறிப்பாக எமது இளைய தலைமுறை வாசித்தல் அவசியமானது.

    • 4 replies
    • 3.8k views
  22. Posted inBook Review பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம் Posted byBookday02/09/20252Posted inBook Review எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) 1969 இல் ஆங்கிலத்தில் Red Tea என்னும் தலைப்பில் வெளிவந்தது இந்நவீனம்.. தேயிலை மலைகளில் பல்லாயிரம் உழைக்கும் மக்கள் பலியாக காரணமாகயிருந்த அடக்குமுறைக்கும், நோய்களுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை உழைக்கும் மக்களின் நண்பர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பது நம்பகத்தன்மையற்றது என்று மனித நேயம் கொஞ்சமும் இல்லாத ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தையும் தென்னிந்தியாவில் தேயிலைத் தோட்டத் தொழிலை உருவாக்குவதில் ஆயிரம் ஆயிரம் முகம் தெரியாத தொழிலாளர்களுக்கு நேர்ந்த விபரீதங்களை உலகிற்கு உணர்த்த …

  23. "நஞ்சுண்டகாடு" கருத்துப் பகிர்வும் குணா கவியழகனுடனான கலந்துரையாடலும். காலம்:21-03-2015 மாலை 4:30 மணி. இடம் :07 rue cail 75010 paris. (குளோபல் மொழி பெயர்ப்பு நிலையம்) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை, நன்றி .

    • 4 replies
    • 1.2k views
  24. Started by Justin,

    "தி அல்கெமிஸ்ற்" (தமிழ்: "ரசவாதி") அமெரிக்காவில் பிரபலமான "சிபோற்லே" (Chipotle) எனும் மெக்சிகோ நாட்டு உணவகம் கனடாவில் பரவலாக இல்லையென அண்மையில் விஜயம் செய்த கனேடிய உறவுகளிடமிருந்து அறிந்து கொண்டேன். சோறு, இறைச்சி, கறுப்பு பீன்ஸ், அவகாடோப் பழம் என்பவற்றைக் குழைத்து ஒரு ரோரிலாவில் சுற்றித் தரும் "புறிற்றோ" (Burrito) தான் இந்த உணவகங்களின் விசேட தயாரிப்பு. இந்த உணவகத்தில் எனக்குப் பிடித்த இன்னுமொரு விடயம், உணவை வாங்கி எடுத்துச் செல்லும் கடதாசிப் பைகளில் சுவாரசியமான தகவல்களைப் பதிப்பித்திருப்பார்கள். சில சமயங்களில் மனதுக்குப் புத்துயிர் தரும் கதைகளும் வந்து சேர்ந்து அந்த நாளைத் திசை மாற்றி விடும். அப்படி என் ஒரு நாளை வெளிச்சமாக்கிய கதை ஒன்று இதோ: "ஒரு கிராமவாசி தினம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.