மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
திரு சத்திய நாராயண் கோயன்கா அவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் பெர்னே நகரில் ஆற்றிய உரையிலிருந்து... நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்புகிறோம். ஏனெனில், இவற்றுக்குதான் நம் வாழ்வில் குறைபாடு உள்ளது. நாம் அனைவரும் அவ்வப்பொழுது மனக்கலக்கம், எரிச்சல், இணக்கமின்மை, துயரம் ஆகியவற்றை அனுபவிக்கிறோம். அவ்வாறு நாம் நிலையின்றி தவிக்கும்பொழுது, நாம் படும் துயரத்தை நம்மிடம் மட்டும் வைத்துக்கொள்ளாது அவற்றைப் பரப்பவும் செய்கிறோம். துயரப்படுபவரை சுற்றி எங்கும் சமநிலையின்மை சூழ்கிறது. அவரைச் சுற்றி இருப்பவர்களும் கலக்கம் அடைகிறார்கள்; சினம் அடைகிறார்கள். கண்டிப்பாக இது வாழ்வதற்கான சரியான முறை அன்று. ஒருவர் தனக்குள்ளே மன அமைதியுடன் வாழ வேண்டும்; மற்றவ…
-
- 1 reply
- 2.1k views
-
-
மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான். ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் …
-
- 7 replies
- 2.1k views
-
-
சிந்தனையை ஆன்மீகம் மழுங்கடித்துவிடும் நடிகர் கமலஹாசன் கருத்து சென்னை, மே 5- ஆன்மீகம் மனிதர்களின் சிந்தனையை மழுங்கடித்து விடுகிறது; அத்தகைய ஆன்மீகத்தை ஒரு போதும் தன் மனம் நாடாது என்று நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது. நான் ஆன்மீகத்தை வெறுக்கிறேன். கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மீகம் நம்மை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்துவிடுகிறது. ஆனால் நான் சாகும் வரை இயங்க விர…
-
- 6 replies
- 2k views
-
-
வரலட்சுமி விரதம் : 16.8.2013 *************** லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள்…
-
- 8 replies
- 2k views
-
-
கார்த்திகை தீபத் திருநாளில் பொரி பொரித்து வழிபடுவது ஏன்? #Tiruvannamalai தமிழ் மக்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் பிணைந்து, ஆதிகாலம் தொட்டே தமிழ்க் குடும்பங்களின் மங்கலப்பொருளாக கருதப்பட்டுவருவது தீபம் (விளக்கு). ஒளியோடு தொடர்புடைய இந்த விழாவை, திருஞானசம்பந்தர் `விளக்கீடு’ என்னும் பெயரால் சுட்டிக்காட்டுகிறார். தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற திருவிழாக்களுள் கார்த்திகை தீபம் ஒன்றாகும். முன்னோர்கள் ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் முதலிய இயற்கையை வழிபட்டதை தமிழ் இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. இதன் வளர்ச்சியாக, ஒளியைக் கண்டு வணங்குதல் என்பது பாரெங்கும் பரவலாகக் காணலாகும் வழக்கம். “நலமிகு கார்த்திகை நாட்டவரி…
-
- 2 replies
- 2k views
-
-
இராமாயணத்தோடு தொடர்புடைய இடங்கள் பற்றிய புனைகதைகள் இளவேனில் இராமாயண நிகழ்ச்சிகள் நடந்த இடங்களாகப் பல இடங்கள் தமிழ் நாட்டில் குறிப்பிடப்படுகின்றன. அல்லது இராமயணக் கதை மாந்தர்களோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. பல நாட்டு இலக்கிய ஆய்வாளர்களும், அகழ்வாராய்ச்சி அறிஞர் களும் இராமாயணம் குறிப்பிடும் இடங்கள் அனைத் தும் மத்தியப் பிரதேசத்திற்கு வடக்கில்தான் உள்ளன என்று முடிவு கூறியிருக்கிறார்கள். இலங்கைதான் இராமாயணம் குறிப்பிடும் இடங்களில் தென்கோடியிலுள்ளதாகச் சொல்லப்படுவது என்பது அனைவரும் அறிந்ததே. அதுகூட மத்தியப் பிரதேசத்தில் ஓர் ஏரியின் நடுவில் இருந்த தாக எச்.டி.சங்காலியா முதலிய ஆய்வாளர்கள் சான்றுகளோடு முடிவு கட்டியுள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பல தீர்த்தங…
-
- 0 replies
- 2k views
-
-
ஆபாசமா?: இந்துப் பெண் கடவுள்களை ஆபாசமாக சித்தரித்ததாக புகழ்பெற்ற ஓவியர் எஃப்.எம். உசேன்மீது தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது. இந்து மதத்தின் கடவுள்களே ஆபாசத்தில் பிறந்து, ஆபாசத்தில் திளைக்கக் கூடியவைதான். அகலிகையை நிர்வாணமாக வரவேண்டும் என்று மும்மூர்த்திகள் கேட்கவில்லையா? தன்முதுகில் இவ்வளவு அழுக்குப் பத்தைகளை வைத்துக்கொண்டு, ஓர் ஓவியர் இந்து மதக் கடவுள்களை ஆபாசமாக வரைந்துவிட்டார் என்று வழக்குத் தொடுப்பதில் அர்த்தம் உண்டா?
-
- 7 replies
- 2k views
-
-
இன்று புனித வெள்ளி. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் தினம்தான் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி. இந்த நாளில் இயேசு கிறிஸ்து யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டார். உலக மக்களுக்காக இந்த சிலுவைத் தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட தேவன் இயேசு கிறிஸ்து. வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்த போதும், அதை புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார் இயேசு நாதர். யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு நாதரை, பிலாத்து மன்னனிடம் கொண்டு சென்று நிறுத்தினர். பிலாத்து விசாரணை நடத்தினான். ஆனால் இயேசு நாதரிடம் ஒரு குற்றமும் இருப்பதாக தெரியவில்லையே என்றான் இறுதியில. ஆனால் கூடியிருந்த யூத கூட்டமோ, இயேசு நாதரை சிலுவையி…
-
- 2 replies
- 2k views
-
-
... சில வருடங்களுக்கு முன் ..... ஒரு வெள்ளிக்கிழமை ... ஈலிங் அம்மன் கோயிலுக்கு .... மாலை நேர பூஜை காண, மகனையும் அழைத்து சென்றிருந்தேன். பூஜை நேரத்து முன் போனதால், அம்மனுக்கு முன் சப்பாணி கட்டியபடி அமர்ந்து இருக்க, மடியில் மகன். ... பூஜைக்கு முன் அம்மனுக்கு பாலாபிசேகம் - பல குடங்கள், தயிர் - அதுவும் பல, அதற்கு முன் தேன், பழங்கள், அது, இது என்று அள்ளி தோய வார்த்துக் கொண்டிருந்தார், கோயில் பிரதமகுரு! ... நானோ பக்தி பரவசத்தில் கைகளை கூப்பியபடி உருகி இருக்க ... என் மடியில் அமர்ந்திருந்த மகனோ ...... "அப்பா, ஏன் இவ்வளவற்றையும் அநியாயமாக ஊத்துகிறார்கள்/கொட்டுகிறார்கள்?" என்றான். ... உண்மை! .. ... ஆண்டவனா/ஆண்டவளா கேட்கிறார்கள், எம்மை இவ்வளவற்றையும் ஊற்றி அநியாயப்படுத்தச் சொல்…
-
- 21 replies
- 2k views
-
-
இது சீரியசான திரி அல்ல கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு பேய் பிசாசு பற்றிய நம்பிக்கைகளும் இல்லை. ஆனால், அவை பற்றிய கதைகள், சினிமா மற்றும் அனுபவங்களை அறிவதில் ஒரு தனியின்பம். நேற்றும் ஈரம் எனும் ஒரு படத்தை மிக ரசித்து பார்த்தன். எப்பவுமே Myth போன்றவை சுவராசியம் நிரம்பியவை தான். என்னதான் இருந்தாலும், கடவுள் மீதோ, பேய்கள் மீதோ நம்பிக்கை இல்லாவிடினும், செத்த வீட்டில் இரவில் தங்க வேண்டி வரும் சந்தர்ப்பங்களில் அடிவளவு (வீட்டின் பின் பக்கம்) போய் ஒரு முறை 'சூ" பெய்துட்டு வர யோசிக்கும் போது லேசாக நடுக்கம் இருக்கத்தான் செய்யும். அதேபோல், எம் அறிவிற்கு அப்பால் ஒரு சில விடயங்கள் நடந்து குழப்பத்தை ஏற்படுத்தித் தான் இருக்கும். எனக்கும் ஒன்றிரண்டு இப்ப நினைத்தாலும் மெலிதாக விய…
-
- 6 replies
- 2k views
-
-
முனி-ரிஷி-சித்தர்-யோகி-குரு http://www.youtube.c...d&v=iln5FhPibbw http://www.youtube.c...d&v=WRwVJ_g4lG0
-
- 1 reply
- 2k views
-
-
ஒரு கிராமத்தில் வயதான ஏழைக்கிழவன் இருந்தான். அவனிடம் அழகான வெண் குதிரை ஒன்று இருந்தது. ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, “உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்” என்றனர். அந்த கிழவன், “அதிகம் பேச வேண்டாம். குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?” என்றான். மக்கள், “இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்றனர். அந்த கிழவன், “லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன்…
-
- 0 replies
- 2k views
-
-
http://view360.in/gallery.html தமிழ் நாட்டுக் கோவில்கள் http://swamysmusings.blogspot.com/2012/10/blog-post_21.html
-
- 14 replies
- 2k views
-
-
இன்றைய நிலையில் இரயகரன் முதல் தமிழச்சி வரை தமிழ்மணத்தில் எழும்பிய சிதாந்தங்கள் ,செயற்பாடுகள், எழுத்துக்கள் இவற்றிற்கிடையே ஆன ஊடாட்டங்கள் பற்றிய ஒரு நிதானமான மதிப்பீடாக இந்தப் பதிவு எழுதப்படுகிறது. நான் சொல்வதே முடிந்த முடிபு என்றோ, நான் சொல்வதே அறுதியும் இறுதியானது என்றோ எந்த விவாதமும் எனது அறிவை, அரசியல் நிலைப் பாடுகளைப் பரிசோதித்துக் கொள்ள அவசியம் அற்றது என்றோ நான் சொல்ல வரவில்லை.மாற்றாக அறிவு என்பதுவும் அரசியல் என்பதுவும் அதிலும் மார்க்சிய அரசியல் என்பதுவும் விவாதத்தில் இருந்தே பிறந்தது, வளர்கிறது என்பது மிகவும் அடிப்படையான ஒரு உண்மை.இதனை மறுதலிக்கும் எவருமே ஒன்றில் ஜன நாயகம் அற்றவர்கள் அல்லது மார்க்சியப் போலிகள் அல்லது வரட்டுச் சித்தாந்திகள் என்பதே எனது கருத்து.ஏ…
-
- 6 replies
- 2k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஏகபாதமூர்த்தி "வெய்யதிரி சூலம் விழைவோ டினிதேந்தும் கைகளொரு நான்குமலர் கண்களொரு மூன்றும் செய்யமலர் வென்றவொரு நாளுமுறு தேவை யொய்யென அமைத்தவர்கள் முத்தியுறுவாரே" - இலிங்க புராணம்
-
- 2 replies
- 2k views
-
-
[size=3][size=4]பிரான்சிலுள்ள புகழ்பெற்ற லூர்த்து மாதா தேவாலயத்தில் 68 வது அதிசம் நிகழ்ந்ததாக நேற்று அந்தத் தேவாலய குருமார் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதற்காக சிறப்பு பூசையும் அந்தத் தேவாலயத்தில் நேற்று நடத்தப்பட்டது. 1965ம் ஆண்டில் இருந்து முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழே இயங்காத நிலையில் இருந்த இத்தாலியைச் சொந்த லுவிகினா திறாவர்கோ என்ற கன்னியாஸ்த்திரி லூர்த்து மாதா தேவாலயத்திற்கு வந்து தொடாச்சியான பிராhத்தனையில் ஈடுபட்டு வந்ததாகவும் இதனால் அவர் தனது கால்களை அசைத்து தானே எழுந்து நின்றதாகவும் இது லூர்த்து மாதா தேவாலயத்தில் நடந்த 68 வது அதிசயம் என்றும் தேவாலய குருமார்கள் நேற்று அறிவித்தனர். 1965 ம் ஆண்டு யூலை மாதம் 26 ம்திகதி முடக்குவாத நோய் தா…
-
- 16 replies
- 2k views
-
-
கிருஷ்ணன் பெயர்க்காரணம் : "கிருஷ்ணன்' என்ற சொல்லுக்கு "கருப்பன்' எனப்பொருள். அவன் கரிய நிறம் கொண்டவன். அவனை "கார்வண்ணன்' என்று சொல்வார்கள். "கார்' என்றால் "மேகம்'. மேகம் எவ்வளவுக்கு எவ்வளவு கருப்பாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மழையைக் கொட்டும். அந்த மழைநீர் கருப்பாக இருப்பதில்லை. மிக சுத்தமாக அப்பழுக்கற்றதாக இருக்கிறது. கரிய நிற கிருஷ்ணனை வணங்குபவர்கள் அப்பழுக்கற்ற அவனது அருளை அடைவார்கள். கால் கட்டை விரலை வாயில் வைத்திருப்பது ஏன்? குழந்தைக் கண்ணன், கால் கட்டை விரலை வாயில் போட்டு சப்பிக் கொண்டிருக்கிறான். இது ஏன்தெரியுமா? ராமபிரானின் முன்னோர்களில் ஒருவரான மாந்தாதா என்ற மன்னர், தகப்பனாரிடமிருந்து தாயின் சம்பந்தமில்லாமல் நேரடியாகப் பிறந்தவர். …
-
- 2 replies
- 2k views
-
-
அடக்குதலால் ஆத்திரத்தை இல்லாமல் செய்துவிட முடியாது. அப்ப ஆத்திரம் வரும் போது என்ன செய்ய வேண்டும்? (***)
-
- 4 replies
- 2k views
-
-
சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி
-
- 21 replies
- 2k views
-
-
இரக்கத்தின் யுபிலி ஆண்டிலே நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இறைவனின் எல்லையற்ற இரக்கம் இயேசுவில் வெளிப் பட்டதை நாம் அறிவோம். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறைநிகழ்ச்சிகள் இறைவனுடைய இரக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. எனவே புனித வாரத்தின் மிகமுக்கிய நாட்களுக்குள் காலடி பதிக்கும் நாம், இறைவனின் இரக்கம் இயேசு வழியாக எப்படி வெளிப்பட்டது என்பதை இந்நாட்களில் சிறப்பாகச் சிந்திப்போம். புனித வியாழன் தினமாகிய இன்றைய நாள் இயேசுவின் வாழ்விலும் அவருடைய சீடர்களாகிய கிறிஸ்தவர்களின் வாழ்விலும் முக்கியமான நாள். இன்றுதான் உலகம் உள்ளளவும் தமது ஒப்பற்ற உடனிருப்பை உணர்த்தும் நற்கருணை என்ன…
-
- 0 replies
- 2k views
-
-
தேசிய தலைவரின் படத்தை அவரோடு கூட அவரின் தோற்றத்தில் இருந்த ஒருவருடன் ஒப்பிட்டு ஆராயும் சிங்கள இராணுவம். இது தேசிய தலைவரின் இல்லம் பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பெப் 2009 நடந்துள்ளது. தேசிய தலைவரின் முகத்தை ஒப்பீடு செய்வதன் நோக்கம்..???! இதில் தற்போது ஐநா அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் பெரும் போர் குற்றவாளி சமிந்திர சில்வா இடம்பெற்றிருக்கிறார். இது தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்காக அல்ல. சிங்களத்தின் நோக்கங்கள் எந்த வகையில் இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க உதவும் என்பதால் இணைக்கப்படுகிறது.
-
- 4 replies
- 2k views
-
-
நாய் வாலை நிமிர்த்த முடியுமா? முடியும்! நாய் வாலை நிமிர்த்த முடியுமா?” என்று கேட்பவர்களுக்கு, “முடியும்” என பதிலளிப்பதோடு, தனது வளர்ப்பு நாயின் வாலயும் நிமிர்த்தி காட்டுகிறார் சேலத்தை சேர்ந்த சத்யா. தமிழக அரசின் சாதனகளை விளக்கும் விளக்க கண்காட்சி, கடந்த 9 நாளாக சேலம் போஸ் மதானத்தில் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை நாய் கண்காட்சி நடந்தது. சேலம் மேயர் நகரை சேர்ந்த சத்யா என்பவர் தனது வளர்ப்பு நாயை காட்சிக்கு கொண்டு வந்திருந்தார். இந்த நாயின் வால் நிமிர்ந்திருந்த கண்டு பலரும் ஆச்சரியமடந்தனர். இது குறித்து சத்யா கூறியதாவது: நாய்கள பராமரிப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு இனத்த சேர்ந்த டால்மேஷியன் என்ற நாய் குட்டிய ரூ.6 ஆயிரம் கொட…
-
- 9 replies
- 2k views
-
-
Sydney Murugan Temple சிட்னி முருகன் முகப்புத்தகத்தில் பார்வையிடலாம் அத்துடன் நேற்று நடந்த வேட்டை திருவிழா படங்களையும் பார்க்கலாம் https://www.youtube.com/watch?v=nTx3D2c1q8I&feature=youtu.be இரவுத் திருவிழா
-
- 13 replies
- 2k views
-
-
[size=5]05 சித்தானைக்குட்டி சுவாமிகள் .[/size] http://www.karaitivu...am/100_5499.JPG ஈழத்துச் சித்தர்கள் பகுதி 4 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . [size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=105732[/size] பாரதக்கண்டத்தின் தென் பகுதியைச் சேர்ந்த இராமேஸ்வரத்தை அண்டிய இராமநாதபுரத்தின் “பெருநாளி” என்னும் இராசதானியின் சிற்றரசரின் மகன் தான் சித்தானைக்குட்டி சுவாமி தந்தையின் ஆட்சிக்காலத்தில் அவ்வூரில் ஏற்பட்ட கொள்ளை நோயினால் பாதிப்பிட்டு வீட்டுக்கு வீடு மறனஓலம் கேட்டுக் கொண்டுடிருந்த வேளை இரு மகான்கள் வந்து உணவு கேட்டுண்ட வீடுகளில் கௌ;ளை நோயி ஏற்படாததை அறிந்து அவரிடம் கவரப்பட்டு சென்றவரே சித்தானைக்குட்டி சாமியார். அந்த மகானே பிற்காலத்தில் பெரியான…
-
- 0 replies
- 1.9k views
-
-
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் இந்த கந்த சஷ்டி கவசத்தை சொல்லுங்கள் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வர…
-
- 18 replies
- 1.9k views
-