சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
வாழை மடல்களில் இருந்து பொருள்கள் தயாரிப்பு!! வாழை மடல்களில் இருந்து பொருள்கள் தயாரிப்பு!! நீர்வேலியில் அமைந்துள்ள வாழைச் சங்கத்தில் வாழை மடல்களில் இருந்து பைபர் (fiber) நார்கள் பிரித்தெடுக்கும் செயற்பாடு இடம்பெறுகிறது. மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை உபயோகித்து வாழை மடல்களில் இருந்து பைபரைப் பிரித்தெடுக்கிறார்கள். அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் பைபரில் தொப்பிகள், பொம்மைகள், அலங்காரப் பொருள்கள், புத்தக அட்டைகள்…
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கையில் ஆசிரியர் தொழிலுக்கான தகுதி என்ன.மற்றும் கலைப்பீடத்தில் பல்கலை முடித்து வரும் பட்டதாரிகளுக்குரிய வேலை வாய்ப்புகள் என்ன.இந்த பட்டதாரிகள் ஆசிரிய பயிற்ச்சிக்கு செல்லமலே கல்வி கற்பிக்கமுடியுமா.மற்றும் இந்த பல்கலை பட்டம் இருப்பதால் மட்டும் சம்பளத்தில் வித்தியாசம் இருக்குமா(கூட) உறவுகளே தெரிந்தவர்கள் விளக்கம் தாங்கோ. நனறி.
-
- 6 replies
- 2.2k views
-
-
மகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம் மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும். ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்ணெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் அளவிற்கு பெண்களின் சாதனைகளை அடுக்கிக்கொண்டேபோகலாம். சேமிப்பு என்று வந்து விட…
-
- 6 replies
- 2.6k views
-
-
தலைமைத்துவம் என்பது பிறப்பிலிருந்து ஒருவருக்குள் நிலைத்திருக்கும் ஆளுமைத் தன்மை என்றே நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் தலைமைத்துவம் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களாலும் நபர்களாலும் உருவாக்கப்படுகின்றது என்பதை அறிவதில்லை. இவ்வுருவாக்கலின்போது இனம், மதம், மொழி, பால், நிறம், நாடு, நகரம் என்கிற வேற்றுமைகள் களையப்பட்டு வேறுபாடுகளுக்குள் ஒரு இணைவைக் காண முடியுமாயிருக்கும். அந்த வகையில் பெண்களின் தலைøமத்துவம் என்பதும் இன்று உலகெங்கும் வியாபித்திருக்கின்றது என்பது நம் கண்கூடு. இந்தியாவின் ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, பிரித்தானியா எலிசபெத் மகாராணி, ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் திருமதி. நவநீதம்பிள்ளை என பலர் நாடுகளின் உயர் அதிகார மட்டத்தில் தம் தலைமைத…
-
- 6 replies
- 7.1k views
-
-
நா.முத்துக்குமார்: எளிய சொற்களின் காதலன் யுகபாரதி நா.முத்துக்குமார், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழசான பராமரிக்கப்படாத ஒரு மிதிவண்டியில் என்னை சந்திக்க வந்திருந்தான். பத்திரிகையில் வெளிவந்திருந்த என்னுடைய சிறிய கவிதை ஒன்று அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தக் கவிதையை பாராட்டி தேநீர் வாங்கிக்கொடுத்தான். தேநீரை மட்டுமே வாங்கித்தரும் வசதிதான் அப்போதிருந்தது. அந்தத் தேநீரில் நிறைவடையும் மனம்தான் எனக்கும் இருந்தது. முத்துக்குமார் என்னை சந்திக்க வந்தபோதே எழுத்தாளர் சுஜாதாவால் அவனுடைய தூர் கவிதை சிலாகிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், பரவலான கவனிப்பை பெற்றிருந்த கவிஞனாக அவன் இருந்தான். அவன் அளவுக்கு எழுதவோ அறிமுகமோ பெற்றிராத என்னை அவன் சந்திக்க வந்தது ஒருவிதத்தில் …
-
- 6 replies
- 5k views
-
-
வா. மணிகண்டன் http://www.nisaptham.com/ ஒரு பெரிய யானை. அதுவும் கிழட்டு யானை. வெகு நாட்களாக உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் இருக்கிறது. அது ஒன்றும் வருமானம் கொழிக்கும் மி.க.சாலை இல்லை. பஞ்சப்பாட்டு பாடத் துவங்கி ‘இனி வேலைக்கு ஆகாது’ என்று முடிவு செய்துவிடுகிறார்கள். காட்சிசாலையில் இருந்த பிற விலங்குகளை எல்லாம் விற்றுவிடுகிறார்கள். இந்த யானை மட்டும் மிச்சம் ஆகிவிடுகிறது. வாங்குவதற்கு ஆள் இல்லை. காலம் போன காலத்தில் யார் வாங்குவார்கள்? கிழட்டு யானையால் பயன் இல்லை என்று சீந்துவார் இல்லை. அதனால் ஊருக்குள் பெரிய விவாதம் நடக்கிறது. நகரசபையில் உறுப்பினர்கள் சண்டையெல்லாம் போடுகிறார்கள். பிறகு நகரமே யானையை தத்தெடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படுகிறது. யானையை வைத்திருப்…
-
- 6 replies
- 1.2k views
-
-
திருமண அமைப்பில் ஆண் ஒரு பலிகடா Abilash Chandran திருமண அமைப்பு பல ஆண்டுகளாய் ஆண்களுக்கு சாதகமாய் இருந்து வருகிறது என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் இன்று நிலைமை பெருமளவு மாறி விட்டது. அபிராமியைப் போன்று கொடூர குற்றங்களை இழைக்கும் பெண்கள், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்து பெற்றும் ஆணை தெருவில் விடும் பெண்கள் இன்னொரு பக்கம். இந்த அமைப்பினால் இன்று பெருமளவு வஞ்சிக்கபட்டவர்களாய் ஆண்களை மாற்றி உள்ளது. இன்று ஆண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்சி ஓடும் நிலை மெல்ல மெல்ல ஏற்பட்டு வருகிறது. லிவ்-இன் மட்டுமே பாதுகாப்பானது என ஆண்கள் நினைக்க துவங்கி உள்ளார்கள். ஏன் இந்த நிலை? பெண்களை விட சற்று குறைவாகவோ அல்லது அவர்களுக்கு இணையாகவோ ஆண்களும் இன்று இந்த அமைப்பி…
-
- 6 replies
- 1.4k views
-
-
Troy நகரைக் கிரேக்கப் படைகள் சூழ்ந்திருக்கின்றன. கொடியின் எதிரே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் களம். அன்றைய நாள் மோதல் வித்தியாசமானது, முக்கியமானது. அந்நாட்டின் மிகச்சிறந்த வீரனும் நாட்டின் பிரதான படைத்தளபதியுமான இளவரசன் ஹெக்டர் தன் மனைவியிடமும், குழந்தையிடமும் விடைபெற்றுக் கொள்கிறான். அவன் அக்கலிஸ் உடன் ஒற்றைக்கு ஒற்றையாக மோதப் போகிறான். அக்கலிஸ் வெல்லப்பட முடியாதவன் என எதிரிகளாலும் மதிக்கப்படும் பெரும்வீரன். ஒரு விடிகாலையில் அக்கலிஸ்சின் தலைக்கவசத்தை அணிந்துகொண்டு போரிடுகிறான் அனுபவமில்லாத இளவயதினனான அவன் உறவினன். அவனை அக்கலிஸ் எனத் தவறுதலாக நினைத்துக் கொன்றுவிடுகிறான் ஹெக்டர். அதற்குப் பழிவாங்கவே ஹெக்டரை ஒற்றைக்கு ஒற்றை அழைக்கிறான் அக்கலிஸ். யுத்தம் ஆரம்பி…
-
- 6 replies
- 1.3k views
-
-
தந்தையாகப் போகிறீர்களா? ஒரு குட்டி அட்வைஸ் தாயாக போகும் பெண்களை விட, தந்தையாக போகும் ஆண்களுக்கு தான் பயம் கலந்த சந்தோஷம் இருக்கும். ஏனெனில் பெண் என்பவள் ஒரு கருவை தனது வயிற்றில் சுமக்கிறாள். ஆனால், ஆண் மனைவியோடு சேர்த்து தனது குழந்தையையும் மனதில் சுமக்கிறார். இந்த இரண்டு உயிர்களையும் எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற அச்சம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் பயங்களை எல்லாம் போக்கி, ஒரு நல்ல தந்தையாக விளங்குவதற்கு தயார்படுத்திக்கொள்வது அவர்களின் கடமையாகும். 1. தந்தையாக போகும் ஆண்கள், தங்கள் குழந்தைக்காக பாதுகாப்பான முறையில் வீட்டினை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது. 2. அலுவலக வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமாளிப்பது என்பது ஒவ…
-
- 6 replies
- 828 views
-
-
விரதமிருப்பதை ஆன்மீகத்துடன் தொடர்புடைய விஷயமாகத்தான் பலரும் நினைத்துப் பின்பற்றுகிறhர்கள். ஆனால் அது உடல் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகள் செய்வது நிறைய பேருக்குத் தொpவதில்லை. விரதமிருக்கும் பழக்கமுள்ளவர்களுக்கும், இருக்கப் போகிறவர்களுக்கும் சில ஆலோசனைகள்... விரதம் என்றhல் பொதுவாகப் பலரும் வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பது என்று இருக்கிறhர்கள். முதல் முறையாக விரதமிருப்பவர்களுக்கு அது சாpப்படாது. விரதத்தில் காய்கறிகளை சாப்பிடுவது, பழங்களை சாப்பிடுவது, ஜூஸ் மட்டும் சாப்பிடுவது எனப் பல வகை உண்டு பழ விரதம்„ முதல் முறையாக விரதம் இருக்கத் தொடங்குபவர்களுக்கு இந்த வகை உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கும் இது பலனளிக்கும். பழ விரதத்தில் ஒவ்வொரு பழத்துண்டையும் நன…
-
- 6 replies
- 2.1k views
-
-
அடிக்கும் பெண்கள்... அலறும் ஆண்கள்! பெண்களை ஆண்கள் அடிக்கும் வீட்டு வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்தது போக, தற்போது பின்னியெடுக்கும் பெண்களிடமிருந்து ஆண்களை காப்பாற்ற குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. மற்ற நாடுகள் எப்படியோ...? ஆனால் இந்தியா ஆணாதிக்க சமூகத்தைக் கொண்ட தேசம் என்றே பெண்ணுரிமைவாதிகளாலும், முற்போக்குவாதிகளாலும் வர்ணிக்கப்படுவதுண்டு! ஆனால் அத்தகைய தேசத்திலும் சமீபகாலமாகவே பொய் புகார் கொடுத்து, கணவனை வரதட்சணை வழக்கில் உள்ளே தள்ளும் போக்கு ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் பெண்களை பாதுகாக்க நிறைவேற்றப்பட்ட வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டத்திலும், ஏராளமான அப்பாவி ஆண்கள் கம்பி எண்ண வைக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இது…
-
- 6 replies
- 1.5k views
-
-
Toughest Place to be a Bus Driver Documentary about a London Bus Driver who goes to Manila in the Philippines to experience what it is like to live and work as a Jeepney driver in Manila.
-
- 6 replies
- 1.3k views
-
-
ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெண் பக்குவமான மனநிலையை இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது. தெய்வத்தின் மறுஉருவமாகவே நடந்து கொள்கிறாள். ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அவளது கையில் தான் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் அரவணைத்துச் செல்வது தாய் தான். ஒரு தாய் தன் பிள்ளை என்னதான் தவறே செய்தாலும், அவளை அரவணைத்தே செல்வாள். எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாமல் இருக்கும் போது தான் அதன் அருமை தெரியும். அதே போல் தான் தாயின் அருமையும். பள்ளிக்குச் செல்லும் போது மகளை குளிப்பாட்டி, தலை முடித்து, சிங்காரித்து அனுப்புவாள். அவள் களைந்து போட்ட உடைகளை துவைப்பாள். அவளுக்கு தேவையான ருசியான உ…
-
- 6 replies
- 1.3k views
-
-
பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் கொள்ளை சமபவங்கள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளது என எச்சரித்துள்ளனர் போலீசார். சமீபத்தில் பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் தான் ஊருக்கு போக இருப்பதை பேஸ்புக்கில் தெரிவித்திருந்திருக்கிறார். இதை கண்காணித்துக் கொண்டே இருந்த கொள்ளை கும்பல் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாத போது அவர் வீட்டிற்குள் புகுந்து திருடியுள்ளனர். இது போன்ற திருட்டு வேலைகளுக்காகவே பீட்டர் ட்ரோவேர் , 22 , ஜோசப் மேச்லேன்னன் , 18, ஆகிய இருவர் சரியான சந்தர்ப்பத்திற்காகவே பல பெஸ்பூக் கணக்குகளை நோட்டம் விட்டு வந்துள்ளளனர். அந்த நேரத்தில் கேம்பிரிட்ஜ் ஷிரில் ஒரு…
-
- 6 replies
- 1.4k views
-
-
குருபிரசாத் அனுபமா ``ரொம்ப இயல்பா, குழந்தை முன்னிலையில் பாலூட்டும்போது, `பாப்பாவுக்கு பசிக்குது, அம்மா பால் கொடுக்குறாங்க அவ்ளோதான்...'னு குழந்தையும் அதை இயல்பா எடுத்துக்கும். மார்பு குறித்த அதன் குழப்பமும் ஆர்வமும் குறையும்." டிஜிட்டல் யுகம் என்று வீறுகொண்டு நடந்தாலும், நம் சமூகத்தில் இப்போதும் மூடநம்பிக்கைகள் குறைந்தபாடில்லை. அதிலும், கர்ப்பம், தாய்ப்பாலூட்டுதல் இரண்டிலும் மூடநம்பிக்கைகள் அதிகம் உலாவிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த கர்ப்பகால ஆலோசகர் அனுபமா, கர்ப்பம், தாய்ப்பாலூட்டலில் உள்ள ஸ்டீரியோடைப்களைத் தொடர்ந்து உடைத்து வருகிறார். `விருக்ஷம்' என்ற தனது அமைப்பின் மூலம் கோவை, திருப்பூரில் …
-
- 6 replies
- 3.4k views
-
-
கொரோனா வைரஸ்: சுய இன்ப பழக்கம் கோவிட் 19 வராமல் தடுக்குமா? - விரிவான தகவல்கள் வரலாறு தெரிந்த காலம் தொட்டு ஏற்பட்ட உலகளாவிய தொற்றுநோய்களிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது 1918ல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் இன்ஃபுளூயன்சா தொற்றுதான். உலக மக்கள் தொகையே 200 கோடியாக இருந்த அந்த காலகட்டத்தில் 50 கோடி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. பலகோடி பேர் உயிரிழந்தனர். அந்த காலத்தில் வெளியான விக்ஸ் வேபோரப் விளம்பரம் ஒன்றில் அமைதியாக இருக்கும்படியும், மலமிளக்கி சாப்பிடும்படியும், விக்ஸ் தடவும்படியும் ‘அறிவுரைகள்’ செய்யப்பட்டிருந்தது. விக்ஸ் மட்டுமல்ல, விக்சுக்குப் போட்டியாக பல ‘அற்புத சுகமளிக்கும்’ மருந்துகள் சந்தையில் தோன்றி வியாபாரம் செய்யத் தொடங்கின. மில்லர்ஸ் ஆன்டிசெப்ட…
-
- 6 replies
- 1.1k views
-
-
-
- 6 replies
- 755 views
-
-
உலகின் சிறந்த கல்வி முறை! பின்லாந்தின்! முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளிய பின்லாந்து... தரமான கல்வியில் முதலிடம்!... ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’(OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது... அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? ?பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது... ?ஒன்றரை வயதில் ப்ளே ஸ்…
-
- 6 replies
- 11.8k views
-
-
நான் கண்ட பெண்களில் மிகவும் அழகானவள் இந்த ஆயி. பார்த்த உடன் பிடித்துப் போகுமளவு இலட்சணமாக இருப்பாள். உழைத்துப் பிழைக்கும் ஒரு சிறு விவசாயி குடும்பத்தில் பிறந்தவள் இந்த ஆயி. (எங்க ஊரில் பெண் பிள்ளையை ஆயி என்று செல்லமாக அழைப்பார்கள்). ஆயியை சின்ன வயதிலிருந்தே எனக்கு தெரியும். மிகவும் கொழு கொழு குழந்தையாக, துறு துறுவென்று இருப்பாள். கருப்பா இருந்தாலும் களையாக இருக்கிறாள் என்று கிராமத்தில் ஆயியை தூக்கி கொஞ்சாதவர்கள் கிடையாது. ஆயியை கடந்து செல்லும் யாருக்கும், ஒரு நிமிசமாவது எடுத்து அணைக்கத் தூண்டும் வசீகரம் அவளிடம் இருக்கும். அவள் பழகுவதற்கு மிகவும் எளிமையானவள். ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு தட்டாமல் செய்வாள். அக்கம…
-
- 6 replies
- 1.5k views
-
-
பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம் - சே.க. அருண் குமார் அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்? உலக அளவில் ‘கல்வியின் உச்சம்’ படித்துப் பாருங்கள் உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை. ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நா…
-
- 6 replies
- 1.8k views
-
-
பெண்களிடம் சொல்லவேண்டியவை… - ஜெயமோகன் வணக்கம் ஜெயமோகன் சார் , உங்கள் வலைத்தளத்தைத் தொடர்ந்து வசித்து வருகிறேன் . முதலில் உங்கள் நடையை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. மிகச் செறிவான கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள கொஞ்ச காலம் தேவைப்பட்டது . உங்களின் நேர்மையையும் எளிமையையும் வியந்து கொண்டு இருக்கிறேன் . உங்களின் காடு , அறம் வரிசைக் கதைகளை வாசித்து இருக்கிறேன். பின் தொடரும் நிழலின் குரல் நாவலை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது இன்றைய காந்தி வாசித்து கொண்டு இருக்கிறேன். சில நாட்களாக உங்களின் சமீபத்திய வெண்கடல் சிறுகதையை அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன் நான் இப்பொழுது தொழில் நுட்பத் துறையில் இருக்கிறேன். என்னுடைய துறையில் திறமையாக வேலை செய…
-
- 6 replies
- 1.3k views
-
-
வழமையாக ஆணுக்கு செவ்வாய் குற்றம் எண்டால் பரிகாரங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். வாழைக்கு தாலிகட்டிப் பிறது அதனை வெட்டி எண்டெல்லாம். பெண்ணுக்கு செவ்வாய் குற்றம் உள்ள போது என்ன பரிகாரங்கள். அதாவது 7இல செவ்வாய் குற்றமுள்ள பெண் செவ்வாய் குற்றமில்லாத ஆணை திருமணம் செய்ய வேணும் எண்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
-
- 6 replies
- 3.7k views
-
-
இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாகமாறியிருக்கிறது.பதினோராம்நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப் பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.ஒவ்வொரு இழைகளும…
-
- 6 replies
- 3.4k views
-
-
எனக்குப்புரியவில்லை... இந்த மனிதர்கள்..உலகில் எவ்வளவு அசிங்கம்.. அக்கிரமம் பண்ணுபவர்கள் உள்ளனர்கள் .. அவர்களையெல்லாம் விட்டு நல்ல மனசுள்ள சில மனிதர் மனதை ஏன் காயப்படுத்துகின்றனர் என்று சிலர் வேலை அடுத்தவர் விடயங்களில் தலையிடுவதும் அவர்கள் மனதில் ரணம் ஏற்படுத்துவதுமாக இருக்கிறது.. அஜீவன் அண்ணா எனக்குத்தெரிந்த நல்ல மனிதர் அவரைக்கூட ஒருவர் அவதூறு பேசி இருக்கிறார்.. அது பொய்யான கருத்து என்பதே உண்மை.. சில ஜீவன்களுடைய வேலைப்பளு..வீட்டின் நிலவரம்..என்பன காரணமாக இங்கே அன்பாக உரையாடுகிறார்கள்.. ஏன் அவர்கள் மனதை புண்செய்கிறீர்கள்.. கண்டு கொள்ளாமல் செல்வது அவ்வளவு கடினமா.. கருத்துக்கள்.. அரட்டையாவதில் அவ்வளவு குற்றம் ஏன் காண்கிறீர்கள்..
-
- 6 replies
- 1.7k views
-
-
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்? ஆர். அபிலாஷ் ஒரு நண்பர் தனக்கு உரையாட தோழிகளே இல்லை. நெருங்கிப் பழக நினைக்கும் பெண்கள் ஏதாவது காரணம் சொல்லி விலகி விடுகிறார்கள். ஏன் அப்படி என கேட்டிருந்தார். அவருக்கான என் பதில் கீழ் வருவது: அன்புள்ள நண்பருக்கு ஒரு ஆண் தன் சமவயது பெண்ணுடன் தோழியாய் இருப்பது சிரமமான காரியமே. எந்த வகை நட்பிலும் ஒரு பாலியல் கோணம் இருந்தே தீரும். அதனால் தான் ஏற்கனவே காதலன் உள்ள பெண்கள் ஒரு புது ஆணின் நட்பு கோரலை ஏற்க தயங்குவார்கள். உங்களை விட வயது அதிகமான பெண்களிடம் இது சாத்தியமாகலாம். இன்றைய அலுவலகங்களில் ஆண் பெண் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருக்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் காஷுவல் நட்புறவுகள் இரு சாராருக்கும் இடையே…
-
- 6 replies
- 1.3k views
-