சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இந்த பூமியில் நம் வாழ்க்கை வித்தியாசமான ஒரு விஷயம்தான். ஏதோ ஒரு சில காலத்திற்காக இங்கே வருகிறோம்; எதற்கென்று தெரியாது; சில சமயங்களில் ஏதோ ஒரு (Perceive intuitively or through some inexplicable perceptive powers)உள்ளார்ந்த காரணமாகக் கூட இருக்கலாம். ஆனாலும் தினசரி வாழ்க்கையில் நமக்குத் தெளிவாகத் தெரிவது ஒன்றுதான்: மனிதன் இருப்பது இன்னொரு மனிதனுக்காக - அதுவும் யாருடைய சிரிப்பிலும் நலத்திலும் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளதோ அவர்களுக்காகவே. அல்பேட் ஐன்ஸ்டீன்
-
- 0 replies
- 1.5k views
-
-
-
ஜப்பான் ஒழித்த சாதி 100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது... கீழ் சாதியனர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் 'புராக்குமீன்' (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் "சேரி" களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர்... அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது..அவர்களுக்கு செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது... 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படு தோல்வியடைந்த பிறகு குறைவான மக்கள் தொகையில், பொருளாதாரமற்ற …
-
- 3 replies
- 1.8k views
-
-
சமுதாயக் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்ல வந்த சிசேரோ (Cicero) “திருமணம் சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்” என்றான். அன்று தொடங்கி இன்று வரை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியத் திருமணங்கள் வியக்கத்தக்க பல மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நமது நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களுக்கு ஈடுகட்டக் கூடிய வகையிலே மக்களின் மணவாழ்விலும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. இளைய சமுதாயத்தினரின் எண்ணச் சுழற்சியால் அவர்களது எதிர் பார்ப்புகள் மாறி வருகின்றன. உலகின் பல பகுதிகளிலும் நாள்தோறும் நிகழ்கின்ற வியத்தகு நிகழ்ச்சிகளும், எழுச்சிகளும் அவர்களது சிந்தனை ஓட்டத்தை பாதிக்கின்றன. தாங்கள் கற்ற கல…
-
- 1 reply
- 800 views
-
-
யாழ்கள உறவுகளே..... வணக்கம். இன்றைக்கு எனக்கு மனசில பட்ட விசயம் ஒன்றைப்பற்றி கருத்துகேட்கலாம் எண்டு நினைக்கிறன். என்னோட தோழர்களும் சரி.... தோழிகளும் சரி.... கலியாணத்துக்கு முதல் எதிர்கால கணவனைப்பற்றியோ இல்லை மனைவியைப் பற்றியோ கதைக்கும் போது ஒரு எதிர்பார்ப்பு, பாசம், காதல் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையா உணர்களை வெளிப்படுத்துவினம். ஆனா கலியாணம் கட்டி ஒரு இரண்டு அல்லது மூன்று வருஷம் ஆன பிறகு ஏன்டா கட்டினம்.... நிம்மதி எல்லாம் போச்சு எண்டு கதைக்க கேட்டிருக்கிறேன். சிலர் சுதந்திரம் போச்சு எண்டு சொல்லுவினம்..... சிலரோ எண்ட தலையில கட்டிப்போட்டினம்.... என்னத்தை கண்டன் எண்டு நொந்து கொள்ளுவினம். இந்த பிரச்சினை எதனால் ஏற்படுகிறது.... அல்லது இது ஒரு பிரச்சினை தானா? என்னைப…
-
- 30 replies
- 7k views
-
-
எச்.எம்.எம்.பர்ஸான் வெளியில் சென்று வந்த கணவன், வீட்டுக்குள் வரும் போது கைகளைக் கழுவிவிட்டு உள்ளே வரும்படி கூறிய மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி - மீராவோடை பகுதியிலுள்ள நபரொருவர், வெளியில் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டுக்குள் வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவி, நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதாகவும் கைகளைக் கழுவுமாறும் அறிவுறுத்துதல்கள் வழங்கியுள்ளார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மனைவி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு…
-
- 0 replies
- 711 views
-
-
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பாலியல் பிரச்சினை காலையில் பத்திரிகைகளை புரட்டினால் வன்முறைகள்,கொலைகள்,பாலியல் வல்லுறவுகள் சிறுவர்துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளை அதிகம் காணலாம் சாதரண குடிமகன் தொடக்கம் ,அரசியல் வாதிகள்,கல்லூரி அதிபர்கள் ஆசிரியர்கள் ,அலுவலகர்கள் ,மதகுருமார்கள் இவற்றில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் பெண்கள் ,சிறுவர்கள் , ,முதியவர்கள் என இப்பிரச்சினை பாதித்து கொண்டே வருகிறது. காரணம் பாலியல் பற்றிய அறிவு இல்லாததும், தொழிநுட்ப வளர்ச்சியும். தொழிநுட்ப வளர்ச்சி என்னும் போது படிக்கும் மாணவர்கள் கைகளில் இன்று புதிய புதிய கைதொலைபேசிகள் ,மடிக்கணணிகள்,இருப்பதனால் இதனை பயன் படுத்தி சில பாலியல் சார்ந்த இணையத்தளங்களுக்கு சென்று பலானா பலானா படங்களை பார்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
27.05.2011 வெள்ளிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 06.00 முதல் 08.30 வரை இந்திய-இலங்கை நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணிவரை பெண்களும் அரசியலும் : கனிமொழி எனும் ஆளுமையை முன்வைத்து ஒரு உரையாடல்; கனிமொழி எனும் ஆளுமையின் இன்றைய நிலையை நிலவி வரும் ஆண்மைய அரசியல் நிலைபாட்டில் இருந்து விளக்க முடியாது. கனிமொழி இயல்பில் கவிஞர். மனித உரிமை அரசியலிலும் பன்முகக் கருத்து வெளிப்பாட்டிலும் ஈடுபாடு காட்டியவர். கடந்த பத்தாண்டுகளில் அவரை அறிந்திராத தமிழக இலக்கியவாதிகள் என எவருமில்லை. நிலவும் தமிழக திராவிட அரசியல் ஊழலை நிறுவனமயமாக்கிய ஒரு நச்சுச் சுழல். இது குறித்த விமர்சன உணர்வுடன் கனிமொழி இருக்கவில்லை என்பதற்கான சான்றாகவே அவரது இந்த வீழ்ச்சி அமைகிறது. இது குறித்து தமிழகத்தின் …
-
- 22 replies
- 2.9k views
- 1 follower
-
-
படக்குறிப்பு, தனது குழந்தைகளுடன் பிரித்தேஷ் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய் சுக்லா பதவி, பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அரசாங்க வேலை இருந்தால்தான் பெண் கொடுப்போம் என்று தற்போதும் ஒருசிலர் சொல்லிவருவதை நாம் கேட்டிருப்போம். அதுபோன்ற நிலைதான் பிரித்தேஷ் தவேக்கு ஏற்பட்டது. அரசாங்க வேலைக்கு செல்லும் யோகம் கிடைக்காததால் திருமணமும் அவருக்கு ஆகவில்லை. ஆனாலும் குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. எனவே, என்ன செய்யலாம் என்று யோசித்த அவருக்கு வாடகைத் தாய் முறை நினைவுக்கு வந்தது. திருமணம் செய்துகொள்ளாமலேயே வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றுகொண்ட கடை…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
மாற்றம் ஒன்றே மாறாதது.. http://youtu.be/y2Dp-zEGIZE பெரும்பாலான வீடுகளில் நடப்பவற்றை நகைச்சுவையாக, அழகாக சொல்லியுள்ளார், திருமதி.பாரதி பாஸ்கர்.. தந்தையின் அருமையை உணர்கிறேன்!
-
- 5 replies
- 2.2k views
-
-
Am an atheist - சோம.அழகு தமிழ் வகுப்புகள் செம்மையாக நடந்து கொண்டிருந்தன. என் வகுப்பைச் சற்று சுவாரஸ்யமாக்கும் பொருட்டு பாடதிட்டத்தைத் தாண்டி சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தொடங்கினேன். தமிழின் தொன்மையைப் பற்றி, அத்தொன்மையைப் பறைசாற்றும் விதமாகக் கிடைத்திருக்கும் கீழடி, ஆதிச்சநல்லூர் சான்றுகள் பற்றி, பழமையானதாகக் கருதப்படும் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் மற்றும் கொரியன், ஆங்கிலம் போன்ற இன்ன பிற மொழிகளிலும் காணப்படும் தமிழ்ச்சொற்கள் பற்றி, பாவாணரின் சொல்லாராய்ச்சி மற்றும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி, தமிழர் நாகரிகம் பற்றி, பழைய சங்கப்பாடல்களில் மிக இயல்பாகத் தென்படும் அறிவியல் உண்மைகள் பற்றி…. என நீண்டது எங்கள் உரைய…
-
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 932 views
-
-
திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் பெண்களின் வாழ்க்கை: ருசிகரமான புதிய கருத்துக்கணிப்பு காதல், திருமணம் போன்றவைகளில் பெண்களின் கருத்துக்கள் முந்தைய தலைமுறை போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் அவர்களிடையே உருவாகியிருக்கிறது. அதை வெளிப்படுத்துகிறது இந்த புதிய கருத்துக்கணிப்பு. 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இதில் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். ‘நீங்கள் காதல்வசப்பட்டிருந்தால், என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற தைரியத்தோடு பெற்றோரிடம் காதலை வெளிப்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு பெண்கள் அளித்திருக்கும் பதில்! எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்திவிடுவோம் என்று 68 சதவீதத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். சூழ…
-
- 1 reply
- 481 views
-
-
பயனற்ற காரியங்களில் நாம் தடம் பதிக்கின்ற நாட்டத்திற்குத் தான் ஆசை என்று பெயர். பயனுள்ள செயல்களில் நாம் கொள்கின்ற நாட்டத்திற்குக் குறிக்கோள் என்று பெயர். இவ்வாறான ஒரு குறிக்கோளுடன் வாழும் ஒருவரையே இன்று நாம் சந்திக்கிறோம். “மாங்காய், அன்னாசி, அம்பரெல்லா, கொய்யாக்காய் ஆகிய அச்சாறு வகைகளுக்கு என்றும் நல்ல கிராக்கி உள்ளது. இதன் விசேடம், என்னவெனில் அச்சாறு வகைகளை சின்னஞ்சிறு வாண்டுகளில் இருந்து முதியோர் வரை வயது வித்தியாசமின்றி விருப்பத்துடன் வாங்கி சாப்பிடுவார்கள். வெளிநாடுகளிலிருந்து எமது நாட்டுக்கு வரும் உல்லாசப் பயணிகளும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக வெள்ளைக்கார பெண்களே எமது நாட்டு இவ் அ…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு - செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் மனிதாபிமானமிக்க அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. போர்ச் சூழல் ஓய்ந்த பின்னர் ஆயுத கலாசாரம், பஞ்சமா பாதக செயல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என எண்ணியிருந்த தமிழ் மக்கள் மத்தியில் இக்கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கலடி நகரம் சித்திரை புத்தாண்டு காலத்தில் களைகட்டுவது வழக்கம். அந்த பிரதேசத்தில் நாலாபுரத்திலுமிருந்தும் மக்கள் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்யவரும் வர்த்தக மையமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி - பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும் சோகத்துக்குள்ளாக்கியதோடு பெரும்…
-
- 6 replies
- 2.7k views
-
-
'பாராட்டுதல்' - என்பது மனித குணங்களில் உன்னதமானது! பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் - பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது! பாராட்டுரையைத் தலைசிறந்த 'கிரியா ஊக்கி' - என உளவியலாளர்கள் உறுதிபடச் சொல்லுவர். பாராட்டுதல் பலவகைப்படும். ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது முதுகில் தட்டிக் கொடுப்பது; கைகளைப் பிடித்துக் குலுக்குவது; வார்த்தைகள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழுவது - மெச்சுவது; இவை எல்லாமே பாராட்டின் பலவகைதானே!! படிப்பதில் இடறிவிடும் மாணவன் பின் முயன்று முதலிடம் பெறுவதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியில் சிறப்பதும் பாராட்டின் சாதனையாகும். ¬ வெற்றியாளர்கள் எவரை எங்கு, எப்போது பார்த்தாலும் தானாக …
-
- 14 replies
- 1.2k views
-
-
அம்மாவா , அப்பாவா ..... ஒவ்வொரு மனிதருக்கும் தாய் என்பது தெய்வத்திற்கு சமன் . தந்தை இரண்டாம் பட்சமே , என்றும் சொல்லும் உலகத்தில் ....... நான் எனது தந்தையை நேசிப்பதை விட தாயை அதிக நேசித்தேன் . அதற்காக தந்தை மீது வெறுப்பு என்று நீங்கள் யோசிக்கக் கூடாது . உங்கள் மனதில் யாரின் மீது அதிக அன்பை செலுத்தினீர்கள் .
-
- 40 replies
- 6.6k views
- 1 follower
-
-
திருமண உறவின் வரலாறு: 'தேன் நிலவு' என்பது என்ன? ஏன் அந்தப் பெயர் வந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதிதாகத் திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண நாளுக்குப் பிறகு தங்களை நெருக்கமாக்கிக் கொள்வதற்காக ஒருவரையொருவர் கவனத்தை ஈர்க்க விரும்புவது இயற்கையானது. இதற்காக திருமணத்தைத் தொடர்ந்து ஒரு குறுகிய பயணம் நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருக்கிறது. இது பெரும்பாலும் பணக்காரத் தம்பதிகளுக்கே உரியது. தொடக்க காலத்தில் திருமணத்திற்குப் பிந்தைய 'சுற்றுப்பயணத்தை' மேற்கொள்வது நண்பர்களையும் குடும்பத்தினரையும் சந்திக்க பணக்கார தம்பதிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்துகொள்ளவும் மு…
-
- 0 replies
- 634 views
- 1 follower
-
-
-
எனக்கு திடிரென ஒரு சந்தேகம் ஆண்கள் அழலாமா?...ஆண்கள் என்டால் சின்ன வயதில் தைரியசாலி,வீரர் என சொல்லித் தானே வளர்ப்பார்கள் ஆனால் அவர்களுக்கு ஏதாவது துன்பம்,துயரம் வந்தால் அவர்கள் வெளிப்படையாய் அழலாமோ ..சிரிக்கின்ற பெண்ணை எப்படி நம்பக் கூடாதோ அதே மாதிரி அழுகின்ற ஆணை நம்பக் கூடாது என நான் நினைக்கிறேன்.இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?
-
- 24 replies
- 3.8k views
-
-
ரகசியம் தற்போது....? எனக்குள் எழுந்த கேள்வியிது...? அணுஆயுதம் அல்லது அணுஆலைகள் என்பன மிகவும் ரகசியமான விடயமாக தற்போதுவரை இருந்தன. அவற்றின் இருப்பும் தன்மைகளும்மிகமிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது ஜப்பானின் பூகம்பத்தின்பின் ஜப்பானின் உலைகள் மாத்திரமன்றி உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளது உலைகளும் பகிரங்கத்துக்கு வந்துவிட்டன. இவை பற்றிய தகவல்கள் எல்லாநாடுகளுக்கும் ஏன் எல்லாவித தனிநபர்களுக்கும் கூட தெரிந்தவிடயமாகிவிட்டது. இதன் விளைவுகள்.....???
-
- 10 replies
- 1.7k views
-
-
காமக் கட்டுப்பாடு 14 காரட் தங்கத்தை விட உயர்ந்த தர தங்கத்தை நகை செய்து அணியாதே என்கிறது தங்கக் கட்டுப்பாட்டு விதி. அதிகமான பிள்ளைகளைப் பெறாதே என்கிறது குடும்பக் கட்டுப்பாட்டு விதி. 30 ஏக்கருக்கு மேல் விளைநிலம் வைத்துக் கொள்ளாதே என்கிறது உச்ச வரம்புக் கட்டுப்பாட்டு விதி. இன்னும்பல கட்டுப்பாட்டு விதிகளிருக்கலாம். அவ்விதிகளை மீறுபவருக்குத் தண்டனையும் உண்டு. அவற்றைச் சில பல அரசியற் கட்சிகளும் ஆதரிக்கின்றன. காமக்கட்டுப்பாடு என்பதொன்று. அதுவே மக்கள் மக்களராய் வாழ உதவுது, ஆகலின் அக்கட்டுப்பாடு ஏனைய கட்டுப்பாடுகளை விட மிகவும் அவசியமானது. காமம் கட்டுப்படுவதா? அன்றா? சாத்தன் ஒரு யெளவன புருஷன். அவனது குடும்பத்தில் அவனுக்குத் தங்கைமார், தமக்கைமார், புத்திர…
-
- 9 replies
- 2.6k views
-
-
பெண்களை வருணிப்பதில் சாண்டில்யனுக்கு இணை சாண்டில்யன்தான்..! அவருடைய படைப்புக்களில் அனேகமாக பெண்ணின் அங்கங்கள். அதன் அசைவுகள், அழகுபற்றியே பக்கம் பக்கமாக எழுதியிருப்பதை அவதானிக்க முடியும். அதேநேரம் பெண்ணுடைய குணாதிசயங்களையும் அவர் குறிப்பிடும்போது அது அவருடைய அறிவைக் கொண்டதா? அனுபவத்தால் வந்ததா? கற்பனையின் ஓட்டமா? என்பதுபற்றி அவரும் எழுதவில்லை, அவர் படைப்புகளுக்கு முகவுரை எழுதியவர்களும் குறிப்பிட்டதில்லை. யாழ்கள உறவுகளின் சிந்தனையில் பெண்பற்றி ஓடும் எண்ணங்கள் சாண்டில்யனை இவ்விடயத்தில் எங்கு வைத்துப் பார்க்க விரும்புகிறது என்பதை அறியும் ஆவலில் இதனை இங்கு பதிகிறேன். முதலில் உன் அபிப்பிராயத்தைக் கூறடா தடியா என்று அவனோ! அவளோ! அதட்டுவது கேட்கிறது.! 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொ…
-
- 4 replies
- 1.1k views
-
-
குறைந்த வருமானம் ஈட்டும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தகவல்! ஹைதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் குறைந்த வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபடும் பெண்களில் 80 சதவீதமானோர் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களில் பெரும்பாலானோர் அமைப்புசாரா துறையில் பணியாற்றுவதால் முறைப்பாடு அளிக்க அமைப்பு ஏதும் இல்லை என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ‘பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்’ குறித்து ஹைதராபாத்தில் உள்ள ஓல்டு சிட்டி பகுதியில் உள்ள பெண்களிடையே ஷாஹீன் மகளிர் நலச் சங்கத்தினால் ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் …
-
- 1 reply
- 411 views
-
-
பெண்ணாக பிறந்த நான் ஆணாக மாறியது ஏன்? - ஒரு குஜராத் மருத்துவரின் போராட்டம் பார்கவா பாரிக் பிபிசி குஜராத்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் "அன்பையோ, பரிதாபத்தையோ இந்த சமூகத்தில் கேட்டால், நீங்கள் வெறுப்புக்கு ஆளாவீர்கள். அதனால் தான் பெண்ணாக இருந்த நான் ஆணாக மாற முடிவு செய்தேன். நான் ஆணாக மாறிவிட்டேன். ஆனால் என்னை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை.'' பெண்ணாக இருந்து ஆணாக மாறியுள்ள அரசு மருத்துவரான பாவேஷ் பாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமூகத்தில் எதிர்கொள்ளும் போராட்டங்கள் பற்றி கூறிய சொ…
-
- 0 replies
- 450 views
- 1 follower
-