கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஜூலை 5.. கரும்புலிகள் நாள் நினைவாக.. மீள்பிரசுரம்..!! எமது ஆக்கத்தையும்.. ஆவணப்படுத்தி நிற்கும்.. தேசக்காற்றுக்கும் நன்றி. நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! http://thesakkaatu.co…
-
- 4 replies
- 1k views
-
-
மழை அடிக்கடி அழைக்காமலே எனக்குள் விஸ்வரூபம் எடுக்கும் உன்னைப் போல தூறலாகிக் கனக்கின்றது! குளிர்காற்று காதுமடல் தடவி தலைகோதும் போதெல்லாம் உன் உதடும் கைகளும் நினைவில் பாதங்கள் வெள்ளம் அழைகையில் உன் கால் கொலுசின் ஒலி! மழைத்துளி மண்ணில் மோதிச் சிதறித் தெறிக்கையில் மரணத்தின் வலி! மழை எல்லோருக்கும் பொதுவாய் கடவுள் எடுக்கும் பால பாடம்! புரிந்தவர்கள் ஞானம் பெறுகிறார்கள்!
-
- 4 replies
- 1.3k views
-
-
அப்பா என் அப்பா ஏழை தான்! ஆனாலும் என்னை எப்போதும் ஏழையாக வளர்க்க நினைத்தது இல்லை. என் தாய் என்னை இடுப்பில் வைத்திருக்கும் பொழது தனக்கு தனக்கு இணையாகத்தான் தந்தை யை காட்டினாள். ஆனால் என்தந்தையோ என்னை தோளில் ஏற்றித் தான் கான இயலாத ஒன்றையும் காணவைக்கிறார். அப்பா என்னும் பொக்கிசம் நாம் அருகில் இருக்கும் போது நமக்கு தெரிவதில்லை, தாயை இழக்கும்பாசத்தையும் . தந்தை இழக்கும் போது பாதுகாப்பையும் இழந்து விடுகின்றோம் . மரமாய் வளர்ந்து கிளை பரப்ப உரமாய் இருந்தவர் தந்தை, எந்த உறவு பக்கத்தில் இருந்து எதைசொன்னாலூம். அப்பாவின் ஒரு வார்த்தைக்கு இடாகுமா? அப்பா எப்பவும் எங்களுக்கு காவல் தெய்வம். முடிந்த வரை எமக…
-
- 4 replies
- 2.7k views
-
-
மலைப் பனியோடு மனதின் பனியும் உருக வான் நோக்கிக் கை பரப்பி சூரியன் கை வீணையாய் இசைக்கின்றாள். இது புலம் பெயர்ந்த பின்னாடி அவள் கோடைதொறும் நிகழ்த்துகின்ற கூத்துத்தான். பொன்னி நதி பண்டைப் பழசானாலும் மாரிப் புதுவெள்ளத்தில் கன்னிதானே. வாழிய தோழி வளர்க உன் பாடல் என்றேன். வாடா என் சூரியத் தோழனே வந்தென்னை அள்ளி அணைத்திடடா. கந்தல் வெண்பனிப் போர்வை வீசி வானவிற் சேலைகட்டி என்போல் குதூகலமாய் சூழும் துருவத்து மலை சிகரங்களே. கண் இறங்கும் பாதை எல்லாம் வண்ணக் கம்பளமாய் விரிகின்ற பள்ளத்தாக்கே. சாரல் பாறைகளிடையே துளிர்க்கின்ற திராட்சைகளே. போதை தருகின்ற புது வசந்தத் தேன் காற்றே. என்தேச விடியலின் பல்லியத்தை என்னுடைய சன்னலைத் தேடி இசைக்…
-
- 4 replies
- 1.3k views
-
-
வாராய் தைப்பாவாய்! வாராய் தைப்பாவாய்! வாராய்! வையம் தழைத்தோங்க வழிவகைகள் தனைக்கொண்டு வாராய் தைப்பாவாய்! வாராய்! உய்விக்கும் உழவர் குலம் உதயனுக்குப் படியளக்க, மையிட்ட விழியாளே!.. மலர்ந்து நீ வாராயோ! பெய்யும் மழை நின்று வெய்யோன் கரம் நீட்டக் கைகள் தனை அசைத்துக் கனிமயிலே! வாராயோ! செய்யுள் படித்திருக்கும் சேற்று வளர் நெல்லாகி சுந்தரமாய் நடமிட்டுச் செந்தமிழே! வாராயோ! பொய்மை ரதமேறிப் போரைப் பெரிதேவும் தூய்மை மறந்தோரைத் துடைத்தெறிய வாராயோ! தொய்யும் மெய்யரையும், துவளும் கொடியரையும் மெய்யாய் நிலை நிறுத்த மெல்லியளே வாராயோ! ஐயந்தனை நீக்கி அனைவர் வாழ்வினிற்கும் ஆதாரத் தோளாக ஆரணங்கே வாராயோ! தையலே!, தளிரே!, தங்கமணிக் கதிரே கேள்! வையம் …
-
- 4 replies
- 1.6k views
-
-
இந்த மண்ணின் மைந்தர் நீங்கள் ( காயப்பட்ட ஆமி சொல்லுறான்) என் கைகளில் இரண்டும் கட்டு.... வழியினால் கண்ணீர் சொட்டு.... உண்ணவே முடியல உணவு... கெஞ்சிறேன் உனை நான் கேட்டு.... புலியே வந்தெனக்கு ஊட்டு... எந்தன் கடமைகள் யாவையும் தொட்டு.... செய்கிறாய் இனப்பாகு விட்டு... மனிதத்தை நெஞ்சதில் கூட்டி.... செய்கிறாய் பணியதை சுட்டி.... உன்னையா வந்தேன் நான் கொல்ல....??? இந்த உணர்வதை எங்கே நான் சொல்ல....??? வெறியதை ஊட்டியே வளர்த்தார்.... உன்னை கொல்லவே எம்மையே வைத்தார்..... உம்மை பார்த்ததும் இன்றே அறிந்தேன்... மனிதத்தை இன்றே உணர்ந்தேன்.... …
-
- 4 replies
- 1.6k views
-
-
என் விரக்தியின் அத்திவாரம் கொத்துக் கொத்தாய் வீழும் குண்டுகளுமல்ல கும்பல் கும்பலாய் சாகும் குடும்பங்களுமல்ல இன அழிப்புக்காய் நடக்கும் யுத்தமுமல்ல ஆறாய்ப் பெருகி ஓடும் இரத்தமுமல்ல வெறிச்சோடிக் கிடக்கும் வயல் வெளிகளுமல்ல நிரம்பி வழியும் புதை குழிகளுமல்ல சோற்றுக்காய் ஏங்கும் தமிழ் மழலைகளுமல்ல தொற்றுநோய் பரவும் அகதி முகாம்களுமல்ல போரை வாழ்த்தும் சில நாடுகளுமல்ல மௌனம் காக்கும் பிற நாடுகளுமல்ல இத்தனை நடந்தும் மனம் கலங்காமல் இன்னமும் பிறர் துயர் விளங்காமல் கண்மூடி இருக்கும் சிலதமிழரின் குணம்தான் என்அடிமன விரக்தியின் அடிப்படைக் காரணம் http://gkanthan.wordpress.com/
-
- 4 replies
- 1.4k views
-
-
விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் எந்தத் தீர்வையும் ஈழத் தமிழனிடம் கேட்க்காமல் இந்தியா போட்ட பிச்சை இது இன்னும் கிடந்து இழுக்குது சேடம் ஆயிரம் தடவை இந்தியா சொல்லியும் இலங்கை இதுக்கு மசிவதாய் இல்லை ஏதோ புலி தான் மறுத்தினம் என்றால் இப்பவும் ஏன் தான் மறுக்கினம் கொடுக்க 13 ம் பெட்டியோடு வந்த பெரியண்ணை தலையில் பிறத்தாலே நின்று துவக்கால அடிச்சும் சிங்களம் சொன்னது இந்தத் தீவில் எந்தத் தீர்வும் எப்பவும் இல்லை என்று அப்பவே சொன்னது விக்கிரமாதித்தன் கதையைப் போல சற்றும் மனம் தளராத இந்தியா சந்திக்கும் பொழுதெல்லாம் 13 ம் கதையை பல தடவை சொல்லும் இதுக்கு மேலாய் கொடு…
-
- 4 replies
- 910 views
-
-
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்: மனுஷ்ய புத்திரன் நாம் ஏன் இப்படி இருக்கிறோம் சதா முணுமுணுத்துக்கொண்டு எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு எதையாவது சுத்தம் செய்துகொண்டு யாரையாவது சபித்துக்கொண்டு எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு கண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு …
-
- 4 replies
- 3.5k views
-
-
பாரே உந்தன் இதயம் உள்ள பக்கம் கையை வைத்துப் பார் வீட்டை விதியை எண்ணித் தினமும் விழிகள் கலங்கும் எம்மைப் பார் தனியாய் வாழ்ந்த தமிழரைச் சிங்களத் தலையினில் கட்டியே விட்டவர் நீர் உரிமை இழந்த இனமாய் நாங்கள் உலகம் முழுதும் உழல்வதைப் பார் மழையில் பனியில் மாக்களைப் போல மருளும் தமிழர் நிலையைப் பார் மண்ணைப் பிடிக்கும் மனிதப் பேயாம் மஹிந்த செயலை அடக்கப் பார் ஆண்டாய் ஆண்டாய் வாழ்ந்த மண்ணை அராஜகர் பறித்த கொடுமையைப் பார் அகதிகளாய்த் தினம் இருப்பிடம் தேடி அலைபவர் துயரைக் களையப் பார் காமுகர் வெறியால் ஆவியை இழந்து கிணற்றில் கிடக்கும் பெண்ணைப் பார் கன்னியர் தங்கள் சுதந்திரம் தேடிக் கருவியை எடுத்த காரணம் பார் பால்மணம் மாறாப் பாலகன் கூடப…
-
- 4 replies
- 1.4k views
-
-
மகிந்தவுக்கு ஒரு மடல் மகிந்தா கிளிநொச்சி இன்று உன் வசம் அதனால் நீ அடைந்திருக்கிறாய் பரவசம் நீ கொண்டாடிக் கொண்டிருக்கிறாய் பட்டாசு வெடித்து அப்பாவித் தமிழர்கள் கதறி அழுகிறார்கள் கண்ணீர் வடித்து சற்றே சிந்தித்துப் பார் ஆறேழு நாடுகளின் உதவி கொண்டு தமிழ்த் துரோகக் கும்பல்களையும் துணைக்குக் கொண்டு மனித உரிமை விதிகளை தட்டிக் கழித்து பத்திரிகைச் சுதந்திரத்தையும் முற்றாக மறுத்து மருத்துவ மனை, அகதி முகாம்களையும் தாக்கி அழித்து அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்து நீ அடைந்திருப்பதெல்லாம் ஒரு வெற்றியா நீ வெட்கமின்றிப் பிதற்றுகிறாய் இதைப் பற்றியா நீ இன்று போட்டிருகிறாய் போர்க் கோலம் அதனால் தமிழர் வீடுகளில் மரண ஓலம் …
-
- 4 replies
- 1.6k views
-
-
நாட்டுப் புதினம் - 1 நாலாண்டு(5) சமாதானம் நாவறண்டு நாசமாய் கிடக்குது- அரச அதிபர் அறைகூவல் விடுகிறார்- இது போர் அல்ல மக்காள் போர் அல்ல போர் என்று சொல்லாமலே தமிழ் மக்களை கொல்லுவம் சமாதானக் கதவுகளை இன்னும் திறந்து வைத்திருக்கிறதா சொல்லுவம் தமிழ் மக்களைக் கொல்வதால் எங்கட இலங்கையை பாதுகாக்கலாம் சிங்கள ராணுவத்தைக் இழப்பதால் அவங்கட புலிகளை வெல்லலாம் செஞ்சோலையில போய் குண்டுகளை கொட்டுவம் உலகத்துக் அங்க புலிகள் முகாம் எண்டு சொல்லுவம் திட்டம் தீட்டி படுகொலை செய்யவம் கண்ணை மூடிக்கொண்டு-அதை நியாயப் படுத்த நீங்க இருக்கீங்க தானே ரம்புக்வெல கண்காணிப்பு குழுவுக்கு மெல்ல காதில பூவை சுத்திட்டு ஐக்கிய நாடுகள் சபையில சொல்லுவம் …
-
- 4 replies
- 1.2k views
-
-
நான் கேட்காமல் கிடைத்த ஆலயம் என் தாய் நான் கேட்டதும் கிடைத்த தெய்வம் என் தாரம் * இறைவனிடம் வரம் கேட்டேன் அவன் தன்னை கேட்டதாய் நினைத்து தானே என் மனைவியானான் * எல்லோரும் ஆறுதல் தேடி ஆலயம் போவார்கள் நான் உன்னைத் தேடி வருவேன் * என் கவிதைக்குள் யாரும் இல்லை கிறுக்கல் ஆனது என் காதலுக்குள் நீ இருக்கிறாய் கவிதையானது என் வாழ்க்கை -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 770 views
-
-
எங்கே அந்த வெண்ணிலா ............... எங்கே அந்த வெண்ணிலா ..எங்கே அந்த முழுநிலா சலனம் அற்ற வானத்திலே பூரண சந்திரனாய் வெளி முழுக்க ஒளி பரப்பி விண்மீது நின்றாயே கரு முகில் மறைத்ததோ ,கயவர் கவர்ந்தாரோ நானா உன்னை அனுப்பினேன் நீயாக வந்தாய் நீயாக சென்று விட்டாய் ,தவிக்கிறேன் ,தேடுகிறேன் விழிநீர் சிந்துது இதயம் கனக்குது உலகம் வெறுக்குது மீண்டும் வந்து விடு என் இனிய பூரண சந்திரனே
-
- 4 replies
- 1.9k views
-
-
அம்மாவின் சேலை நினைவலைகள்.... அருமையான வரிகள். மறைந்து போன சிறப்பான குரல்... 😰 https://m.facebook.com/story.php?story_fbid=10220735760246759&id=1319608745&wa_logging_event=video_play_open
-
- 4 replies
- 1.8k views
-
-
ஓயுதல் தீருமடா புதியதோர் ஒளி பிறக்குமடா! பாயுதல் இன்றிப் பதுங்கியிருந்த புலி பாய்ந்தே சீறுமடா! சீயத்தின் பிடறி கிழித்து விளையாடி காயங்கள் ஆற்றுமடா! சிங்கத்தை கொடியில் தாங்கியதால் வீரம் வருமோடா? அடே மோடா... பாடங்கள் இன்னும் பல இருக்கு படிக்க! கூட்டங்கள் பல கூடி கூவிப் பிதற்றி நின்றோரெல்லாம் ஓட்டங்கள் விடுவர் ஆட்டங்களின்றி தலைவன் போடும் திட்டங்கள் கண்டு திசையெங்கும் வியந்தே நிற்குமடா! பயந்தே நடுங்கிப் பகை யோடுமடா விரைந்தே எமக்கொரு தனி ஈழம் உருவாகுமடா!
-
- 4 replies
- 1.3k views
-
-
என் .... கண்களில் உன்னை.... ஓவியமாய் சுமந்து செல்கிறேன் .... உதடுகளில் உன்னை ... மந்திரமாய் உச்சரிக்கிறேன்.... இதயத்தில் உன்னை .... தேவதையாய் வணங்குகிறேன் ....!!! என் ... ஆத்மாவில் மூலாதாரம் - நீ உயிரோட்டத்தின் மூச்சும் -நீ குருதி ஓட்டத்தின் குருதியும் -நீ சிந்தனைகளின் வடிவம் -நீ என் உடலும் நீயே..... என் உயிரும் நீயே அன்பே ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் உடலும் நீயே உயிரும் நீயே கவிதை தொடர் 01
-
- 4 replies
- 4.2k views
-
-
அக்காங்களா ! அண்ணனுங்களா ! இது என்னோட ரெண்ணாவது கவிதைங்க . உங்க மாற்றரில நான் கவிதை பாடுறது றைட்டானு எனக்கு கொன்பியூஸ்சுங்க . பட் என்னோட மெசேஜ் எப்பிடீன்னு , கவிதை களத்தில இருக்கிற என்னைய விட பெரீய ஆளுங்க எல்லாம் காமன்ற் தந்தீங்கன்னா , நான் என்னைய கறெக்ட் பண்ண ஹெல்ப்பா இருக்குங்க :) . ஓக்கேயா ? சொப்னா ஜூட்டடி :lol: :D . முறங்கொண்டே புலியை விரட்டிய தமிழிச்சி வயற்றில் பிந்தவர்களே அழலாமா??? துடையுங்கள் உங்கள் விழிநீரை ....... யார் சொன்னார்கள் நான் இறந்தேன் என்று?? துடைத்திடுவீர் உங்கள் விழிநீரை ........... காற்றோடு காற்றாய் நான் கலந்தாலும், உங்கள் நாடிநரம்பெல்லாம் பாடுகின்றேன் போர்பரணி.... என்றுமே எமக்கில்லை தலைக்குனிவு, மனப்பால் இருத்திடுவீ…
-
- 4 replies
- 1k views
-
-
எழுச்சி பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம்! போராட நாள் குறித்தோம்! எறிகுண்டு பாய்ந்தாலும் இருகைகொண்டேற்போம்! எதற்கும் நாம் துணிந்துவிட்டோம்! நெறிகெட்ட பகைவரின் முறைகெட்ட வாழ்வால் நெருப்பாக மாறிவிட்டோம்! வெறிகொண்டு தாவினோம்! வீரத்தின் மடியில் விளையாடத் தொடங்கிவிட்டோம்! திசையெட்டும் அதிரயாம் பறைகொட்டி நின்றோம்! தெய்வத்தை வணங்கி வந்தோம்! தசையெலாம் முறுக்கேறி நின்றோம்! எழுந்தோம்! தாயின் மேல் ஆணையிட்டோம்! வசைகெட்டு வாழாத வரலாறு கொண்டோம்! வல்லமை நூறு கொண்டோம்! இசை பெற்ற மிளிர்கின்ற எதிர்காலம் ஒன்றை இப்போதே செய்து வைப்போம்! கடல் பொங்கினாற்போல் உடல்பொங்கி வந்தோம் களத்திலே ஆட வந்தோம்! படைகொண்டு மானத்தின் நடைகொண்டு வந்தோம் பழி தீர்க்…
-
- 4 replies
- 5.7k views
-
-
மழை பின்னிப் பெருமழையெனப் பொழிகிறது மரங்களும் இலையுதிர்த்தலுக்காய் வண்ணம் பூசத் தொடங்கிவிட்ட இம்மண்ணில் இருத்தலுக்காய் இயந்திரமாகாவிடின் அன்னியமாகி தொலைந்தேவிடுவோம் என்னும் துயராய் வாழ்வு அசைகிறது சலனமின்றி மழையை ரசித்தலில் காற்றில் துகள்களாகி கரைந்துபோகும் தேசம் அது ஒரு கோடைத் துலம்பலில் பிரிந்துவந்த என் மண்ணில் இன்னமும் புதைந்திருக்கிறது மௌனத்துள் மழை தடுமாறிக் கருக்கொள்ளும் மேகங்களும் காற்றள்ளப் போய்த் தொலைகிறது... வெள்ளிகள் முளைக்காத இருண்ட இரவுகளில் கடந்துபோகிறது துயர நிலவு தடுமாறி உயிராகும் வார்த்தைகளை கண்களில் நீர் அள்ள, கடந்துபோகும் காலத்துடன் மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன். ஆழக்கடலில் கலந…
-
- 4 replies
- 646 views
-
-
தேசத்தின் குரல் பாலா அண்ணா புலிகளின் குகையில் வாழ்ந்த ஒருசிங்கம் பேராசான் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அழுகுரல் ?#8220;யவில்லை உலகம் எங்கும் அண்ணாவின் பிரிவினைத் தாங்கவில்லை நெஞ்சம் தனக்கென வாழாத தியாக உள்ளம் தமிழ்மண் வாழவேண்டும் என்பதே எண்ணம் இனத்தின்மேல் எப்போதும் அளவற்ற பாசம் இதனால்தான் தவிக்கின்றார் தேசமெல்லாம் சோகம் தேசத்தின் தியாகிகளை துதிக்கின்ற நாளில் திரள்திரளாய் தேடியே வந்திடுவார் கூடம் தேசத்தின்குரல் பேச்சில் வேடிக்கை இருக்கும் தேசியத்தின் கொள்கைகளும் கடமைகளும் நிறைக்கும் கற்றதினால் கூறிவைத்தார் கலாநிதி என்று மற்றவர்கள் கூறிவைத்தார் மதியுரைஞர் என்று சுற்றமெல்லாம் கூறுகின்றார் பிதாமகன் என்று பற்றுவைத்தோர் கூறுகின்றார் அவதா…
-
- 4 replies
- 1.4k views
-
-
பாலி ஆறு நகர்கிறது 1968ல் எழுதப்பட்ட எனது முதல் கவிதை. இதை எழுதியபோது மல்லாவி என்ற வன்னிக் கிராமத்தில் கலகக் காரனாகத் திரிந்தேன். எனது கவிதைகளை பிரசுரிக்கும் அனுமதி கேட்டு ஆர்வலர்கள் எழுதுகிறார்கள். ஒரே தடவையில் 10 மேற்படாத எனது கவிதைகளை அனுமதி இன்றிப் பிரசுரிக்கலாம். அன்புடன், வ.ஐ.ச.ஜெயபாலன் பாலி ஆறு நகர்கிறது - வ.ஐ.ச.ஜெயபாலன் அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். …
-
- 4 replies
- 2.3k views
-
-
எந்திரமான எண்ணங்களுக்கு தந்திரமாய் வண்ணங் கொடுக்கிறாய்! பத்திரமான மனசுக்குள்ளே சித்திரமாய் சிரிக்கிறாய்! சொல்ல வரும் சேதி... மெல்ல வந்து மோதி... வெள்ளமாய் மேவி... கள்ளமாய்த் தாவி... செல்லமாய் நுழைகிறாய்! வட்ட நிலா வானத்தில் உன் முகமாய்த் தெரியுதடி! கிட்டவந்து முற்றத்தில் வானவில்லும் மிளிருதடி! கதவடியில் நாய்க்குட்டி... காலடியில் பூனைக்குட்டி... அத்தனை தடையும் தாண்டிவந்து கனவுக் கண்ணிகளை என் கண்களுக்குள் புதைத்துவிட்டு... அப்பாவியாய்த் தப்பிக்கிறாய்! கொஞ்சம் நில்லடி கள்ளி..! உன்னிடம் ஒரு கேள்வி...!! என்னிடமிருந்து தூரமாய்... இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...???
-
- 4 replies
- 886 views
-
-
இன்று காலை புகையிரதத்துள் ஆங்கிலத்தில் எனக்குத் தோன்றியதொன்றைப் பகிர்கிறேன். தமிழாக்கம் கீளே உள்ளது. சொந்தமாய் எழுதியதைக் கூட மொழி பெயர்ப்பது எத்தனை சிரமாய் இருக்கிறது... If stuck in the depth of a jungle, without a compass anywhere in the jumble, one needs to walk, even if it’s dark, regardless of the hour shown on the clock. But…, you ask, how one gets to the depth of the jungle, without a compass in their jumble? Is this moment truly our own? Does this trail have a beginning dot? Where is that dot? Can I trace it? Who drew the line? Compass my ass! There is no plan! Only the terrain and I am commanded to walk. Humbug! Farce! Cheap! Lame! Lazy…
-
- 4 replies
- 668 views
-
-
ஆகாசவாணி... டெல்லியின் குரலாய் தமிழ் ஈழ மண்ணில் ஒளிவு மறைவு வாழ்வில் சந்துபொந்தில் நடந்த அந்த ஓரிரு நிகழ்வுகள் கூட ஒளிப்பு மறைப்பின்றிச் சொன்னது ஓர் காலம்..! காலை மதியம் மாலை என்று முறுக்கிவிட்ட வானொலிகள் மத்திய மாநிலச் செய்திகள் காவி வர களத்தில் நின்ற வீரனும் நிகழ்வின் விளைவறிவது அங்கு தான்..! அமைதிப் படை என்று அரக்கர் படை ஒன்று வந்து சேர ஆகாசவாணியும் அண்டப்புளுகிற்கு அடிபணிந்து கொண்டது. லங்காபுவத்தோடு காதலொடு கூடலும் கண்டு கொண்டது..! அன்று தொற்றிய வியாதி இன்றும் ஆறவில்லை. இத்தனை ஆயிரம்.. தமிழர் சாவுகள் கண்டும் இரங்கவில்லை... அண்டப்புளுகொடுதான் அதன் அந்தியக்காலம் என்று அடம்பிடிக்குது..! இந்தியாவின் இந்துக்கள் கட்சியாம் ஈழ ம…
-
- 4 replies
- 1k views
-