கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
ஊருக்கு நான் போகவேணும் ஊருக்கு நான் போகவேணும் என்ர கடலில காலை நனைக்கவேணும் வெள்ளை மணலில படுத்து கிடக்கவேணும் அம்மான்ர மடியில நித்திரை கொள்ளவேணும் தம்பியை தோளில தூக்கவேணும் தங்கச்சியை கைபிடிச்சு நடக்கவேணும் மாமியின்ர வீட்டையும் போகவேணும் என்ர மச்சாளையும் ஒருக்கா பாக்கவேணும் முருகன் கோயிலுக்கு திருவிழா செய்யவேணும் கடலைக்கொட்டை சோளம் வாங்கி தின்னவேணும் சைக்கிள்ள சுத்தி திரியவேணும் ஊரில கனபேரை சந்திக்கோணும் எங்கட பொடியளோட கும்மாளம் அடிக்கவேணும் எங்கினையும் அவங்களை கூட்டிக்கொண்டும் போகவேணும் பள்ளிக்கூடத்துக்கும் ஒருக்கா போகவேணும் எனக்கு படிப்பிச்ச ரீச்சரையும் சந்திக்கோணும் கொக்குப்பட்டம் கட்டி ஏத்தவேணும் நார் க…
-
- 12 replies
- 1.2k views
-
-
o ------------------------------------------------------------------ நாட்கள் சலித்துப்போன நாட்காட்டியில் குறித்து வைத்த திகதிகள் ஊட்டிய நிறத்தை இழந்துகொண்டிருக்கின்றன. வீடு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மா மீளவும் ஒரு திகதியை அறிவித்திருக்கிறாள். யரோ ஒருவருடைய வீட்டில் அவிந்துகொண்டிருக்கிறது எங்களுக்கான உணவு. வெளியேறி வருவதற்கான அம்மாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட முதல் நாள் மாலை அரிசியும் காய்கறிகளும் வாங்கி வைத்திருந்தேன். புழுதி படிந்து காலம் முடிந்த பேருந்துகள் வந்துகொண்டிருக்கும் வழியால் நகர மறுக்கிற பேரூந்தில் அம்மா வருகிறாள். இன்னும் வளராமல் இருக்கிற தலைமுடியை இழுத்துக்கட்டியபடி தங்கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
வைரஸாய் தொற்றிக் கொண்டு கன்னித் தமிழை கணணித் தமிழாய் கனிவிக்க கனவோடு வந்தவன்... தமிழ் பொடியாய் சிறக்க சில சிக்கல் சிலர் தர... சிறகு விரித்தான் குருவிகளாய் நட்புகளின் கூட்டுறவில்..! நீண்டு நிலைத்த காலமதில்... எண்ணற்ற எண்ணங்களுக்கு எழுத்துரு.. இலத்திரன்களால் ஒழுங்கமைத்து ஓவியம் தீட்டி பச்சை தீட்டிக் கொண்டவன் யாழது.. இயல்பாகினன். தொல்லையொன்றை இனம் மொழி இணைந்து காண.. மீண்டும் வெடித்த சொற் போரில் பிறந்தது நெடுக்கால போகும் காலம்... நீண்டது நிலைத்தது. இயல் இசை நாடகம் தமிழோசை அடங்கிய தமிழ் மூன்று.. யா…
-
- 10 replies
- 1.2k views
-
-
நான் அழுகிறேன் இன்று தோல்விகளின் முழு உருவமாய் பிறந்தேனே என்று...
-
- 2 replies
- 1.2k views
-
-
உன் தோள் சாய ஆசைதான்...... அன்பே... உன் தோள் சாய நான் தூங்காமல் கத்திருக்கிறேன் தூக்கத்தில் மட்டும்தான் நீ வருவயா? நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் நீ விழி மூடிக் கிடக்கிறாய் நான் விழி மூடும் நேரமெல்லாம் என் விழிகளுக்குள் நடக்கிறாய் இருவரும் சேர்ந்தே விழிப்பதும் சேர்ந்தே நடப்பதும் எப்போது? பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எம்மால் முடிகிறது உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள் மனதுக்கும் உண்டு முடிவே இல்லாத வாழ்வும் பிரிவே இல்லாத உறவும் என்றுமே இல்லை இருந்தும் ஏகாந்தத்தை ரசிப்பதுவும் நேசிப்பை ருசிப்பதுவும் எமக்குப் பழக்கமானவை ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
சுதந்திரம் வரும் ஒருநாள் நம் கௌரவமும் அன்று வரும் தமிழீழம் புதிய சூரியனாய் உலகுக்கு உதயம் தரும் அந்த நாள் காண நான் இருப்பேனா ஏங்குகிறேன் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை பிறப்பாராம் வீரத் தலைவர்கள் தமிழீழத் தலைவன் அவன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் என்ன விநோதம்! காலம் ஏன் இப்படி கடுகதியில் ஓடுகின்றது தம்பி என்று அழைத்தவர் இன்று அருகி உன்னை பலர் அண்ணன் என்று அழைப்பது எனக்கு அதிசயம் ஆம், அதுவும் பாசம் தான் ஆனால் எனக்கு நெஞ்சம் துடிக்கிறது மேலும் விரைந்து நடக்கிறேன் செய்ய முடிந்ததை நான் செய்தபின் தான் மடிவேன் மேலும் வேண்டும் உத்வேகம் புத்துணர்வு வாசலில் நிற்கும் புதிய சமுதாயம் அதன் கையில் பொறுப்புகளை அர்ப்பணித்துச் செல்வோமா பூமி அது காத…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடிவு தோன்றுமா? சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து சமத்துவம் என்றுவரும் - வெடிக் குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு கேளா நாள்வருமா? சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள் சிரித்திட வழிவருமா - உடல் தெருநடு வீதி தனில்விழும் அந்த ஓருநிலை மாறிடுமா? மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான் மண்ணில் வந்திடுமா? - மொழிச் சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச் செகத்தில் நாள் வருமா? அடக்கு முறையும் அசுரத் தனமும் அடியோடு ஓடிடுமா? - இனி நடக்கும் காலம் தனிலே தானும் நன்மை கூடிடுமா? அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து அகிம்சை நிலை பெறுமா? - புவி விடிவு என்று புலரும் பொழுதை விரைவில் ஏற்றிடுமா?
-
- 2 replies
- 1.2k views
-
-
My PayPal AC: visjayapalan@gmail.com தமிழகத்திலும் உலகிலும் பாலை இசைத் தொகுப்பைக் கேட்ட பலருக்கு இனித் தமிழர் என்கிற படல் மிகவும் பிடிதிருக்கிறது. எனது பாலை இசை தொகுப்பை கடனாக யாழ் இணையத்தில் தரவிறக்கம் செய்த 5000 பேரில் 10% ரசிகர்கள் விலைகொடுத்திருந்தாலே இப்படி முடக்கப்படாமல் எனது பணிகளைத் தொடர வாய்ப்புக் கிடைதிருக்கும். ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் எனது பணிகலைத் தொடர்வதோடு தொடர்ந்தும் கடன் அடிப்படையில் யாழ் இணையத்தில் அவற்றை பகிர்ந்துகொள்ள இயலும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=43413 இதுவரை ரஞ்சினி பிராங்பேர்ட், கோகிலா அவுஸ்திரேலியா, பறவைகள் கனடா மட்டுமே எனது நனம்பிக்கைக்கு வலுச் சேர்த்துள்ளனர். எனது பாலைக் கடன்களை அடைக்கவும் விடுதலைக்கான ஆய்வ…
-
- 3 replies
- 1.2k views
-
-
பனையடி வினை பாடலெல்லாம் சிதைந்திருந்த தெருவழியே தனித்திருந்த பனை மரங்களைக் கேட்டேன் இந்த வெறி எங்கே கொண்டு போகும்? என்று எந்தப்பனையும் எதுவும் பேசவில்லை நூற்றாண்டுகள் பலவும் வாய் மூடி மௌனமாக இருந்த பழக்கத்தை விடுவதில் ஏராளம் தயக்கங்கள் ஒவ்வொரு தளும்பாய் பனை நீளம் படர்ந்திருந்தது. நானறிய நூற்றாண்டுகளை விழுங்கி விழுங்கி எல்லா வெறிக்கும் வழிவிட்ட பனையே முறிகின்றாய் பெரும் பழி சூழ் வினையில். ஒவ்வொரு பனையாய் முறிகின்றாய் முறிந்த பனைகள் துளிர்ப்பதுண்டோ? தோப்பெல்லாம் பெருந்தீ மூண்டெரிந்தாலும் புதுக் குருத்தெறியும் வரமுடைய தாலமே கால நிழலின் குழியுள் இதோ உனது நாட்கள் செத்தழிகின்றன எல்லா வெறிக்கும் வழி விட்ட முந்தைப் பெரும் பழியெலாம் …
-
- 6 replies
- 1.2k views
-
-
எரியுது எங்கள் தேசம் நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம் அரசியல் வாதிகள் கோசம் அரைநொடியிலே கலைந்திடும் வேசம் மீனுக்கு தலையினை காட்டி-தினம் பாம்புக்கு வாலினை ஆட்டி கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி அதை சொல்லுது ‘அஸ்வரின்’ பேட்டி ‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்-நாம் அழிந்தபின் அலுத்கம விரைந்தார் பாராளுமன்றத்தில் கொதித்தார்-பின் பகைவனின் சேலைக்குள் ஒளித்தார். ‘ரிஸாத்தின்று’ நடிக்கின்ற நடிப்பு-அட சிவாஜியும் தோற்கிற நடிப்பு ‘அரசுக்கு தூக்குறார் செருப்பு’-அதை நினைக்கையில் வருகுது சிரிப்பு…! மாமி செருப்பால அடிச்சும் மாமா ‘ரவுசர’ உரிஞ்சும் மருமகன் தலைவர் ‘ஹக்கீம்’-அவ மகள்ட மடியிலே படுக்கார். கழுதைகள் எம்மை நெருக்க எம் கடைகளை அடித்து நொறுக்க உலகமே அதனை வெறுக்…
-
- 6 replies
- 1.2k views
-
-
வயல்காட்டில் ஒருநாள்...... ஊரின் ஒதுக்குப்புறம்-அமைதி உறங்கிக் கிடக்குமிடம் தென்றல் தழுவிச்செல்ல-பூக்கள் தெம்மாங்கு பாடுமிடம் ஆசை நோய்பிடித்த-உலகின் அசிங்கங்கள் தீண்டாமல் இயந்திர இரைச்சல்விட்டு-அமைதியாய் இயற்கை உறையுமிடம் போலி மனிதர்களின் -பெருமை போற்றும் உலகைவிட்டு நாடி நின்மதியை-ஒருநாள் தேடி இங்குவந்தேன் ஓடிக் கவலையெல்லாம்-எனைவிட்டு ஒருநொடியில் போகக்கண்டேன் மனிதர் தேடும்நின்மதியோ-இங்கே மலைபோல்க் குவிந்துகண்டேன் கானம் இசைத்தபடி-வண்டுகள் கவிதை படிக்கக்கண்டு நானும் ஒருவனாகி-இயற்கை நதியில் கரைந்துவிட்டேன் வானம் இறங்கிவந்து-இந்த வயற்காட்டில் நடக்கக்கண்டு ஞானம் பெற்றதைப்போல்-எனக்குள் மோனநிலை அடையக்கண்டேன் …
-
- 3 replies
- 1.2k views
-
-
'வாழ்தல் எனும் மரணிப்பு' எனும் இந்தக் கவிதை சரிநிகரில் என் சொந்தப் பெயரில் வெளியாகி இருந்தது. அந்தப் பெயரை மறைப்பு செய்து இதில் கவிதையை மட்டும் ஒட்டி உள்ளேன் அன்று சிங்களவர்களுக்கு மத்தியில் இருந்து சொந்தப் பெயரில் எழுதும் போது இருந்த அச்சமில்லா மனவுணர்வு, இன்று போலித் தமிழ் தேசியவாதிகள் மலிந்து போன காலத்தில் இல்லை என்பது ஒரு வெட்கப்படவேண்டிய முரண்நகை
-
- 9 replies
- 1.2k views
-
-
நிறுவைக்கோளாறு. -------------------------------------------------- தராசின் ஒரு பக்கத்தில் என் உறுதிப்பாடுகளை வைத்தேன் மறுபக்கத்தில் என் சந்தேகங்களை அவிழ்த்துக் கொட்டினேன் சந்தேகப் பக்கம் தாழ்ந்து நின்றது பின் உறுதிப்பாடுகளுடன் சிறிது விவாதங்களை அடுக்கினேன் அப்பாடா அதன்பின் தாழ்ந்து நின்றது உறுதிப்பாட்டின் பக்கம் உறுதிப்பாடுகளால் சந்தேகங்களை அளந்தேனா ? அல்லது சந்தேகங்களால் உறுதிப்பாடுகளை அளந்தேனா ? நிறுவைப் படிகள் எவை? நிறுக்கப்படுபவை எவை ? மீண்டும் மேலெழுந்தது உறுதிப்பாடுகளின் பக்கம் இவ்வாறாக இவ்வாறாக தமக்குள் ஏதோ நானறியா ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டவைபோல் எழுவதும் தாழ்வதுமாய் என்னை ஏளனம் செய்தவாறே தமத…
-
- 2 replies
- 1.2k views
-
-
கையில்லதவனும் கால் இல்லாதவனும் கண் இல்லாதவனும் சாதிக்கிறான் எல்லாம் இருப்பவன் காதல் தோல்வி என்ற பெயரை சொல்லி சாகிறான் சாவதற்க்கு ஒரு நொடி யோசித்தால் போதும் சாதிப்பதற்க்கு பல நொடி யோசிக்க வேண்டும் நீ சாகப்பிறக்கவில்லை சாதிக்க பிறந்திருக்கிறாய் சாதித்து காட்டு...
-
- 2 replies
- 1.2k views
-
-
இனி அழுவதற்கில்லை... கடல் சூழ்ந்த யாழ் நாட்டில் உப்புக்கே வழியில்லையாம்... சொல்லடி அபிராமி..தமிழ் இழைத்த தப்பென்ன தப்பு... வந்தாரை வாழவைத்து.. வயிராற விருந்து வைத்தோம்.. வரந் தரும் அபிராமி-என் பிள்ளைப்பசி தீர என்ன செய்ய மூலைக்கு ஒரு பொங்கல்.. முளை சுரந்த பசுவுக்கு ஒரு பொங்கல்.. முற்றத்தில் பொங்க அபிராமி-ஒரு சொநடதமில்லை எங்கு செல்ல.. அன்று வருடத்திற்கு இரண்டுதினம் பட்டாசு சத்தம் வரும்..இன்று நித்தம் நித்தம் அபிராமி.-எங்கள் இதயவறை அதிருதடி.. ஊருக்கு ஒன்று பறிபொடுத்தோம்.. வீட்டுக்கொன்று பறிகொடுத்தோம்.-என்.. தாயே அபிராமி..இப்ப வீட்டோடு சாகுதம்மா.. வாடி வதங்கி நின்று.. கூடி அழுததெல்லாம்..கூத்தாடி வேடமென்றோ அபி…
-
- 4 replies
- 1.2k views
-
-
குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கனடாவிலிருந்து பவித்திரா- குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கும்மாள மிட்டுக் கூக்குரலி டுதல்தான் வடுவினை மறைக்க வலுவற்றோர் புரிகின்ற வஞ்சனைச் செயல்களே வருத்தம் வேண்டாம் படுகுழியிற் தாம்வீழ்ந்த பரிதாப நிலைதனை பாரறியும் இழிவினை மறைத்திட வேண்டியே சடுதியாய் வகுத்த சூழ்ச்சியில் நின்றுமே தலைமைச் சிங்களம் தடுமாறி நிற்கிறது! மலைகள் பாறைகள் மருவிய நீர்நிலைகள் மலர்கள் மணம்வீசும் அடர்ந்த காடுகள் கலைகள் கழனிகள் கலப்பை பிடித்துழும் கண்ணியம் நிறைமாந்தர் கனிவுறை உழவர் தலைவன் கொள்கையே தமக்கெனக் கொண்ட தண்மைமிகு உளம்கொள் திராவிட மக்கள் நிலைபெற்ற…
-
- 10 replies
- 1.2k views
-
-
நண்பா! நீ இல்லை இருந்தும் கடிதம் எழுதுகிறேன் தமீழீழம் எங்கும் எம் சுவாசம் இருந்திருக்கிறது இன்று எங்கும் ஆக்கிரமிப்பு நண்பா ! உன் புதைகுழியில்க்கூட நீ இல்லை என் ஞாபகங்கள் கிளரும் மாவீரர் வீடுகள் முன் அவன் நிற்கிறான் இன்னும் கப்பல்கள் நிற்கின்றன கடல் இல்லை இருக்கிறோம்முகவரி அற்று உங்கள் இறுதி வாக்குமூலங்களை சேகரித்த நாம் இருக்கிறோம் வெற்றிடம் நிரப்ப காற்று வரும் நம்பிக்கையை விதைத்துவிதைத்து எம் உயிர் இழுபடுகிறது கண் மூடினால் உம் முகங்கள் வரும் இடைவேளை அற்று பார்க்க விரும்பினும் "குற்ற உணர்வு " ஏதோ செய்கிறது "இயலாமை " எமை சாகடிக்கிறது நண்பா! எதிலும் ஒன்றாய் இருந்…
-
- 11 replies
- 1.2k views
-
-
தன்மானம் இழந்து தலைகுனிந்து தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இன்று ....... என்று இனி நாம் நிமிர்வோம் ??????? ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில் எமக்கானவை எல்லாம் இழந்தோம் இன்னும் தான் வரவில்லை எவரும் செருக்கிழந்து உருக்குலைந்து செல்வமெல்லாம் இழந்தபின்னும் சேர்ந்திடாதிருக்கிறோம் நாம் கொலைக்களங்கள் பல கண்டு கொடுமைகள் நிதம்கொண்டு அடிமைகளாய் வாழ்கையிலும் கோபமின்றி குரலின்றி கோழைகளாய் வாழ்கின்றோம் செங்குருதி தோய்ந்து செத்தழிந்து போனவர்கள் கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள் அத்தனை பேரிடமும் மண்டியிட்டு மன்னிப்புக் கோருகிறேன் …
-
- 5 replies
- 1.2k views
-
-
மண்ணின் அந்தரங்க இருளில் புணர்ந்திருக்கும் மரத்தின் வேர்களைப்போல் ஆட்சிப்பீடம் சேர்ந்தே இருக்க காற்றின் உதைப்பில் முட்டுண்டு தான் முறிந்ததென்றால் மரம் அழியும் என எண்ணி தன்னை தானே முறிக்கும் கிளைகளைப் போல் மண்தின்னும் மலமாகுறான் தொண்டன்
-
- 5 replies
- 1.2k views
-
-
இனவெறி கொண்ட சிங்களவன் கொலைவெறிதாண்டி மதவெறி தாண்டி ஏதுமறியாப் பிஞ்சு பிறந்தபின் கொன்ற காலம் போய் கருவிலிருந்ததை மட்டும் கலைத்தழித்தது போய் தாயொடு சேய் சேர்த்துக் கொல்லும் காலமடா தண்ணீர்சிந்திய தேசத்தில் இன்றுகண்ணீர் சிந்தியே வெள்ளபெருக்கோடுதடா கொதிக்கும் சட்டிக்கும் தண்ணீர் படக்கூடாது வெடிக்கும் அடிக்கும் திண்ணையில் என்னை விடக்கூடாது ஒடிக்கும் அந்த நொடிக்கும் எனக்கும் இருக்கும் பந்தம் துடிக்கும் அப்போது வந்தவர் மனமெல்லாம் துடிக்கும் அதைப்பார்த்து நாலஞ்சு நன்றாக இங்கே நடிக்கும் என்றெண்ணி கொடிக்கும் வளரும் இடும்பை கூட மடிக்கும் தன் கொடி நிலம் நோக்கி வெடிக்கும் என் நெஞ்சு கொடுக்கும் அவர்களுக்கு விளக்கம் மூலப் பிரதியைக் காண இங்கே ச…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
இது சித்திரக் கவிகளில் நான்கரைச் சக்கரம் வகையைச் சேர்ந்தது. எனது முதல் முயற்சி... வேதியன் மகவே வேய்தோள் உருவே வேல்விழி கனிவே வேரிப்பூ நறவே வேட்டம் புகவே வேகுதடி நினைவே வேரில்லா வாழ்வே வேண்டும் விடிவே வேதியன் - வேதம் ஓதுபவன்; மகவே - மகளே; வேய்தோள் - மூங்கில் தோள்; வேரிப்பூ - மதுரை மகளிர் கற்காலத்தில் சூடும் ஒரு மலர் நறவே - நறு மணம்; வேட்டம் - வேட்கை; விளக்கம் : வேதியன் மகளே!! மூங்கில்போல் தோள் கொண்டவளே!! வேல் விழிகளில் கனிவைக் கொண்டவளே!! வேரிப்பூ நறுமணம் கொண்டவளே !! உன்னை நினைக்கவே என் மனதில் காதல் வேட்கை புகுகிறது. அந்த வேட்கையால் உடல் வேகிறது. வேரில்லாமல் இருக்கும் மரம்போல் உயிரில்லாமல் உள்ளதடி வாழ்க்கை. இதற்கு விடிவே கிடையாதா!!
-
- 13 replies
- 1.2k views
-
-
யாழ்தேவி அனுப்பட்டுமா கார்பட் வீதி போடட்டுமா சொல்லுங்கோ தமிழ்மக்களே யாழ்தேவியும் வேண்டாம் கார்பட் வீதியும் வேண்டாம் சாதாரண போக்குவரத்து போதும் மகிந்தரே போதும் மகிந்தரே சிங்கப்பூராக ஆக்கட்டுமா ஜப்பான் ஆக்கட்டுமா சொல்லுங்கோ தமிழ்மக்களே சிங்கப்பூரும் வேண்டாம் ஜப்பானும் வேண்டாம் யாழ்ப்பாணமே போதும் மகிந்தரே போதும் மகிந்தரே டக்கிளஸ் வேணுமா கேபி வேணுமா சொல்லுங்கோ தமிழ்மக்களே டக்கியும் வேண்டாம் கேபியும் வேண்டாம் விக்கி தான் வேணும் மகிந்தரே மகிந்தரே சிறிலங்காவில் சிங்களதேசியத்துடன் இணக்க அரசியல் செய்ய வாறீங்களா இராணுவ ஆட்சியில் இருக்க போறீங்களா தெமிளு மினுசு கியன்ட இணக்க அரசியலும் வேண்டாம் இராணுவமும் வேண்டாம் தமிழ்தே…
-
- 7 replies
- 1.2k views
-
-
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் உண்மை தானடா புத்தன் நிற்கின்ற பூமியில்தான் இந்தப் படுகொலைகள் போதிச் சாமிக்கு வீதியெங்கும் தமிழ் பலிகள் ஒருவன் புலம் பெயர்ந்தது சென்றாய் ஒரு இனத்தையே புலம் பெயர்ந்து ஒடூகிறது அன்பை போதித்த நீ அடக்குமுறையை போதித்தது எப்போது ஆசையின்றி வாழ சொன்னாய் ஒசையின்றி ஒரு இனத்தை அழிக்கிறார்கள் உன் பெயரால் அண்டத்தின் அனைத்துயிர் பிண்டத்தை உண்டபின்தான் அடங்குமா உன் பசி…
-
- 3 replies
- 1.2k views
-
-
தாமரை இலையின் நீர்த் திவலை...! எத்தனை முறை தான் நீர் நினைத்தாலும் ஒட்டிக்கொள்ள முடிவதில்லை - இலையுடன்; நீர் பலமுறை சினந்திருக்கின்றது இலைக்கு புரியவில்லையே என்று...! பாவம் இலை...! அதனால் என்ன செய்யமுடியும் அதன் நெஞ்சுக்குள்ளும் ஈரமுண்டு... அதைவிட அதிகமாய் வலிகளும் நிறையவே உண்டு தடாக நீருக்கும் நீர்த் திவலைக்குமிடையே தடுமாறுகின்றது - இலை எத்தனை முறைதான் நீர்த்திவலைதனை அணைத்துக்கொள்ள நினைத்தாலும்... அதன் ஸ்பரிசத்தை மட்டுமே இலையால் கைது செய்ய முடிகின்றது. இலை அழுதகண்ணீரில் தான் தாமரைக் குளமே நீர்பெறுகின்றதென்பது எத்தனை பூக்களுக்குத் தெரியும் இருந்தாலும் என்ன... நீர் இருக்கும் வரை அதனைத் தன்மீது தாங்கி..…
-
- 6 replies
- 1.2k views
-