கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
The Song of the Defeated v.i.s.jayapalan Translated by Meena Kandasamy The song of the victors rises from every direction. The song, reaching its cresendo, lands like a spit on our faces. And yet, they are afraid. Why? Because they lack the armour of justice. Like the shoots of grass growing from the ashes of burn pastures, we too have our songs. Our songs, which are like warriors in camouflage: the victors call them dirges, Many epic vows begin from laments. As they say, Tears caused by a tyrant’s rule Will wash away his royal wealth. There are songs like this in the epics, that begin with the defeat of justice. …
-
- 3 replies
- 726 views
-
-
-
உதட்டில் வழுக்கியதைக் கூட்டி விரல்களில் ஏந்திக் காற்றில் மிதந்ததில் ஏத்தினேன். மிதந்தது சுமந்ததன் நிறைவேறாத கனவோடு புணரமுயன்றதில் உருமாறிக்கொண்டது. மாறியதால் விழுந்திட மோகங்கொண்ட நட்சத்திரம் உடன் கட்டை ஏறியது, துகில் போர்த்தி வானம் அழுதது. கண்ணீரோடு கலந்து வேர்களால் நுழைந்து மலரொன்றில் உறங்கிட விளைகையில் ஒட்டிக்கொண்ட வாசனையால் வியாபிக்கத்தொடங்கியது எங்கும், யாரோ சிலரின் உரையாடலில் இதழ்களாய் பிரிபட இசையாகியது. இன்னும், சிலரின் சினத்துப்பலால் இறுகி உறைந்துபோனது. இப்போது உங்களிடம் வந்திருக்கிறது என்ன செய்யப்போகிறீர்கள்? * இது ஒரு முயற்சி. என்னனவில் நான் தோற்றுபோயும் இருக்கலாம். உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் நண்பர்களே..
-
- 3 replies
- 648 views
-
-
வருவாயா... ஈழ மண்ணின் குரலதுவும் போனது போனது தானா தமிழிழமின்று குருதியிலே தோய்வது..தோய்வது..முறைதானா...? மதியுரை மந்திரி மன்னவனே உனையிழந்தின்று தேசமே யழுகிறதே-நீ கூடியே வாழ்ந்த குருவியெல்லாம் கூடிட உன்னையே தேடுறதே... கடலம் அலையும் அலைகிறதே கடலினுள் அவையும் அழுகிறதே வெகுமதி உன்னை இழந்ததினால்- அந்த வெண்ணிலா கூட தேய்கிறதே... ஈழ மண்ணின் குரலதுவும் போனத போனது தானா தமிழிழமின்று குருதியிலே தோய்வது தோய்வது முறைதானா... நோயுடல் உன்னை வாட்டியதோ தமிழீழ விடுதலை புட்டியதோ போற்றியே வாழ்ந்த உலகமெல்லாம்- இன்று போதனை மறந்து வாழ்கிறதே... அண்ணனே அண்ணனே வருவாயா அகிலத்தில் மீண்டும் பிறப்பாயா வீழ்ந்தே நொருங்கிய வெண்புறாவை மீண்டும…
-
- 3 replies
- 969 views
-
-
நட்பை வளர்க்க வார்த்தைகள் தேவையில்லை. புன்னகை மட்டும் போதுமென்று புரிய வைத்த என் அன்பு நண்ப ! என் இதயப் பாலைவனத்தில் நீரூற்றிப் பூமரம் நட்டவனே வெறும் பனி மூட்டமாய் இருந்த என் இதயத்தில் மேக மூட்டம் தோன்றிப் பெருமழை பொழியக் காரணமானவனே கூட்டைப் பிரித்து றெக்கை விரிக்கும் பட்டுப் பூச்சியாய் கூட்டம் கூடிப் பறந்து திரியும் பட்டாம் பூச்சியாய் எத்தனை பரவசங்கள் நமக்குள் நடந்தேறின. என் ஆருயிர் நண்ப ! சிப்பிக்குள் பதுங்கிக் கொண்ட பனித்துளியாய் என் அன்புக்குள் உறங்கிக் கொள்ளும் முத்தானாய் நீ அந்தரத்தில் பறப்பது போல் ஆனந்த தாண்டவத்தைக் கற்றுத் தந்த என் வாலிப நண்பனே ! பனித்துளி தெளித்த ரோஜாவாய் முள்முடி தரித்த எண்ண…
-
- 3 replies
- 1.2k views
-
-
இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே வழி அனைத்தையும் காதல் செய் . காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல . அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!! + கவிதை " மனத்தால் உனக்கு அபிசேகம் செய்கிறேன் - என் இதயத்தில் தெய்வமாக நீ இருப்பதால் " இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!! தொடரும் ...........
-
- 3 replies
- 1.1k views
-
-
எப்போ சொல்வாய். கண்காணிப்பு குழு....??? பாதை திறப்பென்று பார்த்து போக வந்தவரே... பாவம் ஏனய்யா பங்கருள்ளே பதுங்குகிறாய்...??? உத்தரவு பெற்று வந்தே உள்ளுக்குள்ளே நீ நுழைந்தாய்..... இத்தனையும் அறிந்த பின்னே எறிகணைகள் ஏன் எறிந்தார்....??? கண் காணிக்க வந்த உந்தன் உயிர் காவெடுக்க ஏன் முனைந்தார்....??? உன் உயிர் நீ காக்க உள்ளுக்குள்ளே ஏன் ஒழிந்தாய்....??? உந்தனுக்கு பின்னாலே உலகமது நீ என்றாய்....??? ஈற்றில் வரை உந்தனுக்காய் இவ்வுலகம் என் உரைத்தார்....??? சமரசத்தை பேணிடவே சம்பந்தியாய் நீயும் வந்தாய்.... உன் உயிரை குடித்திடவே உந்தனுக்கு கணை எ…
-
- 3 replies
- 1.1k views
-
-
கண்கள் பூத்திருக்க கருவிழிகள் பார்த்திருக்க வெஞ்சமரில் விதையான வீரர்களின் வாழ்த்தொலியில் பொங்குதமிழால் பூரித்த மண்ணிலே வெந்து வெந்து நீறான சிங்களத்தினை வெற்றிகொண்டெழும் எம் வீரப்புலிக்கொடி நாட்கள் அதிகமில்லை நன்னாளும் தொலைவில் இல்லை பார்க்கும் இடமெங்கினும் பார்புகழும் வகைதன்னிலே பறந்திடும் எம்கொடி பார் தமிழே பார் வீரத்தமிழ்த்தலைவன் வெற்றியின் அரசனவன் வீறுகொண்டெழுந்திடுவான் வெற்றித்திலகத்தை பெற்றிடுவான் ஆற்றல் மிக்க அவனிடம் ஆயிரம் கலை உண்டு தோற்றோடும் பகைகண்டு தொடைதட்டி மகிழ்ந்திடான் விதையான தன்மக்களை மனதார நினைத்திடுவான் தாய்க்கு பிள்ளையாய் தமிழிற்கு தாயாய் வந்துதித்த எம்தலைவன் வெற்றி வாகை சூட வீறுகொண்டு நாம…
-
- 3 replies
- 1k views
-
-
பெரும்பாலும் கவிதை என எங்காவது தென்பட்டால், தலைதெறிக்க எதிர்புறம் ஓடும் வழக்கம் எனக்கு..! தற்செயலாக தினசரியில் படித்த இந்தக் க... வி... தை.... யை படித்தவுடன் குற்ற உணர்வால் மனம் சலனப்பட்டது. உங்களுக்காக இதோ..! யாரிடம் கொடுப்பது… மனு? கொல்லாமையை வலியுறுத்தி கொள்கைகள் பேசும் உங்கள் நாக்குகளால் – நான் வாரந்தோறும் புசிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. ஐந்தறிவு கொண்ட ஆடுகளைக் காட்டிலும் ஒரறிவு குறைவான என் இனத்தை அதிகமாக பலியிடுவது ஏன்? சுவையும் மிகுதி - விலையும் குறைவு ~ சுயநலம்தான் காரணம். நெற்பயிரை கொத்தவரும்போது என்னை நித்தமும் துரத்தியடிக்கும் மனிதர்களே… என் முட்டைகளைத் திருடும்போது மட்டும் உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? …
-
- 3 replies
- 652 views
-
-
கனவுகள் கற்பனைகள்! மனிதா கனவு கான் அது தான் உன்னால் முடியும். மனிதா கற்பனை செய் அதுவும் உன்னால் முடியும். எது எப்படியோ? இரண்டையும் கண்டுமட;டும் இருந்து விடாதே! அதனை செயற்படுத்து. அதுவும் உன்னால் தானே முடியும். விடியும் இரவு உள்ளவரை எதுவும் முடியும் முடியும்.
-
- 3 replies
- 1.4k views
-
-
பிரேமினி அமீரசிங்க எழுதிய ஒரு சிங்களக் கவிதையின் தமிழாக்கம் இது துவேஷம் தனது முகத்தைக்காட்டி பல்லிளித்ததில்லை பாடசாலை நாட்கள் இரட்டைச்சடைகள் பறக்க நான் மலைகளின்மேல் ஷாரினா, நெலியா, லட்சுமியுடன் மிதந்தேன் பள்ளியின் பின்னால் நீளும் இந்நெடும்பாதை எப்போதும் விரைவில் முடிந்துவிடுகின்றது ஷாரினா இவ்வுலகில் எதற்கும் கவலைப்பட்டதில்லை அவளது தந்தைக்கொரு சொந்தக்கடையிருந்தது திருமணஞ்செய்வதே அவளது ஒரேயொரு விருப்பாயிருந்தது அதைவிட வேறொன்றுமில்லை நெலியா அவளது ஐரிஷ் தந்தையை அறிந்தவளில்லை அடர்த்தியான கறுப்புக்கற்றைகள், மாதுளம்பழமான கன்னங்கள் எல்லாப் பெடியங்களும் விரும்பக்கூடிய அழகானவளாயிருந்தாள் லட்சுமி நானிதுவரை பார்த்திராத தடித்த கண்ண…
-
- 3 replies
- 740 views
-
-
நான் பட்ட -அவமானம் எனக்கு அதுதான் -வருமானம் உறுதியாக எடு -தீர்மானம் வெற்றி என்பது -அனுமானம் வாழ்க்கை என்பது -பிரமானம் உன் முடிவில் வாழ்வது -தன்மானம்
-
- 3 replies
- 4.1k views
-
-
தலைவர் இருக்கிறார் மீண்டும் வருவார்.. இது எம் முதல்வனைக் கொண்டாடும் தருணம் பகிருங்கள்.... என் தலைவனுக்கு ஒரு பக்தனின் வாழ்த்துப்பா!! --------------------------- காந்தள் மலர்க் காடுகளே! எனக்கொரு கடி மலர் வேண்டும் வெடிகளுக்குள் முளைத்தெழுந்த எம் வீரப் புதல்வன் பொன் அடிகளுக்கு அதைச் சாற்றவேண்டும் நீடூழி வாழ்கவெனப் போற்றவேண்டும் கதைகளிலே படித்துவந்த காவியத்து வேல் முருகன் சதை உடுத்தி வந்த நாள் இன்று போர்க் கதை உயர்த்தி வா!! போரில் வென்றுவா என மனம் பதை பதைக்கப் பிணமான எதிரிகளின் சிதைகளுக்கு தீ வைத்த தெய்வத் திரு வேந்தன் தமிழின வாதை துடைத்த வரலாற்று நாயகனை வாழ்த்த வேண்டும் வாருங்கள் …
-
- 3 replies
- 1.6k views
-
-
மரங்களும் மனிதர்கள் போலவே தாம் செய்த வினைப்பயனில் வேண்டுவது போல் வளராது விதைத்தலுடனும் விடைபெறுதலுடனும் மனிதர்கள் மரங்கள் மட்டுமல்ல அத்தனை உயிர்க்குமானது தாம் விதைத்த வினையின் வடிவில் வினையறுக்க நாதியற்று விடியலை நோக்கியபடி அழகாய் நீண்டு நெடிதுயர்ந்து கொள்ளை அழகுடன் கிளை பரப்பி காண்போரை வசீகரிக்கும் அழகற்ற இலைகளும் வளர்வதர்க்கை வளர்ந்தபடி முட்களோடு முசுட்டை இலைகளுடன் வண்ண மலர் கொண்டு மயக்கும் மனம் கொண்டு காய்கள் கனிகள் என கவர்ந்திழுக்க கவனிப்பும் அதற்கானதாய் காலங்கள் முழுதும் காட்சிகளாய் காண்போரை மயக்கிடும் நெட்டையாய் குட்டையாய் நிறையவே காண்கின்றேன் தினமும் ஆனாலும் மனிதர் போல் அவை மற்றவரைப் பார்த்து ஏங்கித் தவிப்பதில்லை பொறாமை கொண்டு பொழுதைக் …
-
- 3 replies
- 1k views
-
-
அணையாது விடுதலைத்தீ வஞ்சகர் சிங்களவர் வார்த்தையில் நம்பி-எங்கள் முந்தையர் முடங்கியதால்-எம் தந்தையும் தாயும்-எதிரி சிந்தையில் சிறியரானார் நெஞ்சிலே நெருப்பெடுத்து வஞ்சகர் இருப்பழிக்க குஞ்சுடன் குருமன்களும் வெஞ்சினம் கொண்டெழுந்து வேட்கையில் குதித்திருந்தால் அஞ்சக என்றெழுந்து அன்னையின் அடிமை நிலை இன்றுடன் தொலைந்ததென்று கன்றுடன் தாய்ப்பசுவும் களத்திலே குதித்திருந்தால் இன்று நாம் இவ்வுலகில் இறைமையுள்ள நாடாகி சந்திரன் தாண்டி-பல சாதனை புரிந்திருப்போம் கன்றுடன் தாயையும் கதறிய சேயையும் பிஞ்சுடன் பூவையும் கெஞ்சிய கிழடையும் நெஞ்சிலே ஈரமில்லா நெறிகெட்ட சிங்களம் கொன்றிடத் துடித்தது-முன் கொடி கொண்ட தமிழினம் என்…
-
- 3 replies
- 983 views
-
-
அழியதா சுவடு.....( லெப்கேணல் நீலன் ) புலன்களை நீ திரட்டி எடுத்த புலனாய்வால்; புறமுதுகிட்டோடிய படைகள் ஏராளம்... ''சாவுக்கே சவாலிட்டு சாவுக்குல் சாவாய் வாழ்ந்தவன் நீ...'' வேகமாய் நீயெடுத்த வேவினால் போனது எத்தனை உயிர் சாவு... விலை உயர்ந்த வீர தளபதி உன்னை விலை போனதொன்று வீழ்த்தியதோ....??? சதிகள் புரிய முனைந்தவனின் சதிகள் தறிக்க நினைத்தாயே... தமிழர் சேனை காக்க முனைந்தாயே... இரக்கம் கெட்ட இரணியன் உன்னை இழிவாய் கொன்றானே.. நினைக்கையிலே ஜயோகோ நெஞ்சு வலிக்குதய்யா... சாதனைகள் படைத்திட்ட சரித்திர புதல்வனே நீ இன்னும் சாகமால் எமக்குள்.... - வன்னி மைந்…
-
- 3 replies
- 1.2k views
-
-
உன்னை மனிதன் என்பதா.....??? தேசத்து மக்கள் தெருவில் நிக்கையிலே... தின்னையிலே உட்காந்து வேடிக்கை பார்த்தவரே.... வெட்டி பேச்சுரைத்து வெறும ;காலத்தை ஓட்டியவரே.... சுதந்திர தேசத்தை பகை சுடுகாடாய் ஆக்கையிலே.... எதுவும் அறியாதது போல் இங்கன்று இருந்தவரே.... இன்று வந்து என் உரைத்தாய்....??? பெண்ணவளை ஏன் இழித்தாய்....??? இன்னல்களை கண்டுயவள் இதயமது அழுகையிலே.... கவியாக்கி வந்துயவள் குமுறல்களை கொட்டுகிறாள்... அவள் ஆக்கமதை வந்துயிங்கு அவமானம் செய்கிறியே.... உன்னை எல்லாம் அறிஞன் என்று வந்து நீயும் உரைக்கலாமா...??? அட கவிஞன் என்று வேறு வந்து உன்னை நீயே …
-
- 3 replies
- 1.1k views
-
-
உலகம் இன்று நீதி தர்மம் அறம் அத்தனையும் தொலைந்து சுழல்கிறது எங்குமே யுத்த சத்தங்களும் மனிதப் பேரழிவுமாய் பசி பட்டினியுமாய் மனிதத் துன்பங்களுமாய் கிடக்கிறது. இனி பிறக்கும் வருடத்தில் எங்கும் மனிதாபிமானமும் அமைதியும் சமாதானமும் நிலவி இருள் கடந்து ஒளி பிறக்கட்டும். -பா.உதயன் செந்தமிழாய் எங்கும் இசை- காலை புலரும் நேரம் கடல் கரையில் ஒரு ஓரம் தானாய் வந்த பறவை எல்லாம் ஏதோ சொல்லிப் பாடுது ஏழு கடல் ஓடி வந்து எத்தனையோ வர்ணம் தீட்டும் காடு எல்லாம் ஆடி ஆடி கவிதை பல பேசும் ஆலமரம் செழித்து நிற்கும் அன்னைத் தமிழ் இசை பாடும் பாடி வரும் தென்றல் காற்று பண் இசைத்து ஓடி வரும் வசந்தம் எல்லாம் பூத்திருக்கும் வானம் எங்கும் கவி பாடும் பச்சை கிளி பறந்து …
-
-
- 3 replies
- 409 views
-
-
தன் அழகான வரிகளால்... தமிழை ஓவியமாய் தீட்டியவன்! தாய்த் தமிழுக்கு பெருமை ஈட்டியவன்! வண்ண வண்ணத் தமிழின்... இனிமை காட்டியவன்! வாலியென்றால் இப்படித்தான் என தனித்துவம் நிலை நாட்டியவன்! இந்த வண்ணத்தமிழ் வாலிபக் கவிஞனின் இழப்பால், தமிழும் கறுப்பு வெள்ளை ஆனதைப்போல் ஒரு பரிதவிக்கும் உணர்வு....
-
- 3 replies
- 827 views
-
-
ஈனப் பிறவிகளின் இழிசெயலைத் தாங்காமல் ஈழம் துறந்தெங்கோ இருக்கை அமைத்தவரே வேசப் பிறவிகளின் வெங்கொடுமை தாங்காமல் வேரை விட்டேங்கோ விழுதாய்ப் படர்ந்தவரே எங்கே சென்றாலும் எவ்விடத்தில் தரித்தாலும் எமக்காக நீரிருப்பீர் எப்போதும் நினைத்திருப்பீர் என்று நினைத்தோமே எண்ணிக் களித்தோமே எல்லாமே பொய்யாச்சே எம்நினைப்பும் மண்ணாச்சே உக்ரேய்ன் எல்லையிலே உருக்குலைந்து போனவர்க்காய் உருக்கத்தை பிழிகின்றீர் உரிமையுடன் கொதிக்கின்றீர் காசா மண்ணினிலே கண்மூடிப் போனவர்க்காய் கவலை கொள்கின்றீர் கண்ணீரை விடுகின்றீர் புலத்து மண்ணினிலே எம்தமிழர் சேர்ந்தாலும் புற்றீசல் போல்கிடக்கும் பத்திரிகை மேய்ந்தாலும் முகநூலில் நீர்பதியும் பதிவுகளைப் பார்த்தாலும் முகமனுக்காய்க் என்றாலும் எங்களுக…
-
- 3 replies
- 737 views
-
-
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தலைப்பில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ எழுதி வாருங்கள் என்று இரண்டாம் வகுப்பு ஆசிரியை சொல்வது அலுவலகத்தில் அமர்ந்திருந்த எனக்குக் காதில் விழுந்தது.. நான் இரண்டாம் வகுப்பு படிக்கவில்லையாயினும் எழுதி பல மாதங்கள் ஆனதால் ஏதேனும் எழுத எண்ணினேன்.. மரங்களைப் பாட வருகிறேன் நண்பர்களே.. மரமா? என்கிறீர்கள்.. மரம் மட்டமில்லை நண்பனே.. மரம் இல்லையேல் மனித இனமில்லை.. காற்றைச் சலவை செய்யும் இலவச இயந்திரம் மரம்.. மாசகற்றும் மாண்புள்ளது மரம்.. தாய்க்கு அடுத்து நம்மைத் தாலாட்டுவது மரம்.. உயிருண்டு மரத்திற்கு.. உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. இன்னொரு உண்மை சொல்லட்டுமா? ஆயுள் அதிகமுள்ள உயிரும் மரம்தான்.. அகழ்வாரைத் தாங்கும் ந…
-
- 3 replies
- 25.9k views
-
-
வல்லமைச் சூரியனாய் வழிகாட்டும் பேரொளி வீரத்திருவே எங்கள் வேரின் தணலே விடியாத வாழ்வுக்கு வெளிச்சம் தந்த ஈகப்பெரு நதியே.... அகவை ஐம்பத்து ஒன்பது காணும் அணையாச் சுடரே அன்பின் உருவே அலையாய் கரையாய் நிலவாய் நீராய் நெருப்பாய் நீயே எங்களின் நிச்சயம்.... ஏன்றென்றும் எங்களின் வழிகாட்டி ஒளிகாட்டி வுரலாற்றின் திசைகாட்டி எல்லாம் நீயே எங்களின் தலைவனே.... பெருமைமிகு தோழனே பெறுதற்கரிய பெருமையே தலைநிமிரும் வீரத்தையும் ஈகத்தையும் தந்த பேரூற்றே.... தளபதியே எங்களின் தந்தையே எல்லாமுமான வல்லமையே நீ பிறந்த பின்னாலே நாங்கள் வீரம் பெற்றோம் விடுதலையின் சுவையறிந்தோம்... நீயில்லாமலெங்களுக்கு நிமிர்வில்லை நண்பனே நீயே எங்களின் வல்…
-
- 3 replies
- 905 views
-
-
ஆடிவேல் ரதம்வந்த கொழும்புநகர் தமிழரில்லம் கூடிநின்று கொள்ளிவைத்தார் காவலரும் சேர்ந்துநின்றார் தேடித்தேடி வாக்காளர் இடாப்பினிலே தமிழர்பெயர் கோடிட்டுக் கொளுத்திவிட்டார் தமிழழிப்பின் ஒத்திகையாய். சரக்குக் கப்பலுடன் சிதம்பரமும் சேர்ந்துவர - தமிழுணர்வுச் சரக்கேற்றிக் காங்கேசன் துறை சேர்ந்தார். தலைநகர் தந்த தரக்குறைவுப் படிப்பினையில் உலையொன்று கொதித்தது விடுதலைத்தீ கொழுந்தது ஆடிப்புயலில் அடிபட்டுப் போனதனால் - சுயநல நாடித்துடிப்பின் அடி பட்டுப் போனதுவே. நாடிவந்தார் தமிழிளைஞர்: கூடிவிட்டார் விடுதலைக்காய் தேடிவென்ற ஆயுதங்கள் அகலக்கால் பதித்ததுவே. மிதித்தாலும் வாழ்தலுக்காய்த் துடித்தெழும்பும் மண்புழுவும் வெட்டவெட்டத் தழைத்தோங்கும் பூவரசும் கிளுவைகளும்…
-
- 3 replies
- 827 views
-
-
கடைசியாக எப்போது மழையை இரசித்தேன்? நினைவில்லை. கருநிறக் காளானென தெருவெங்கும் ஆங்காங்கே முளைத்திருக்கும் குடைகளின் விளிம்புகளிலிருந்து வெண்பனித் துகள்களாய்.. சரம் சரமாய்.. மழைநீர் கோர்த்துத் தொங்குவதை, தார்ச்சாலைகளில் விழுந்து தெறிப்பதை கடைசியாக எப்போது விழிவிரியப் பார்த்திருந்தேன்? அதுவும் நினைவில்லை. இன்றும் மழைபெய்தது. உச்சந்தலையில் தென்னைமரக் கொண்டையிட்டலைந்து, வீட்டுமுற்றத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் காகிதப் படகு விடவென கொப்பித்தாள்களைக் கிழித்து அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்களில் பெய்த அதே மழை.., மறுபடியும் இன்று. இப்போதெல்லாம்.., என் கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை எதிர்ப்படும் மனிதர்கள், தெருவில் கடந்து போ…
-
- 3 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=encZArh2wrY&NR=1 வாழ்க்கை இருளுக்குள் அடங்கி பரிதவித்து மடிகின்றது எங்கள் அவலக்குரல்கள் உலக ஜனநாயகத்துள் அமைதியாகின்றது வல்லவர்கள் வெல்வார்கள் என்பது இயல்பாகின்றது மனிதாபிமானம் வேடிக்கை பார்க்கின்றது வல்லரசுகளின் போட்டி இயந்திரத்தால் நாம் விழுங்கப்பட்டோம் இயந்திரத்தின் செமித்த கழிவுகளாய் எஞ்சி நிற்கின்றோம் கழிவுகளையும் மீள இரையாக்கும் புதிய உலக ஒழுங்கின் முன்னால் மண்டியிட்டு மெளனித்து நிற்கின்றோம் என்னை சாதி சொல்லி உதைத்த கால்களை இறுக்கப்பற்றிக்கொள்கின்றே
-
- 3 replies
- 755 views
-