Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செஞ்சோலை சொந்தங்களே ! என்சோலை பந்தங்களே !!! யார் கொடுத்தார் சாபம் எமை பிரிந்தீரே ஏன் கொடுத்தார் சோகம் புரியவில்லை நஞ்சாகி நீங்கள் எமை பிரிந்தீரே நெஞ்சோடு நீங்கள் தொடர்ந்தீரே பிஞ்சான நீங்கள் பினமாகிநீரே பிணமாலை கண்டு நீர் அழுதீரோ? மகிந்தாவின் சதியில் மாண்டு மடிந்தீரே மண்ணோடு மண்ணாகி எம்மை மறந்தீரே அந்நாளில் அநியாய சாவை அடைந்தீரே அப்பாவி உயிராக வாழ்வை துறந்தீரே கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே. வித்தான நீங்கள் மீண்டும் வளர்வீரே எம்மோடு ஒன்றாகி வாழ்வை பெறுவீரே எந்நாளும் உம்மை எண்ணி விழிநீரே எம் கண்கள் நீர் வந்து துடைப்பீரோ? கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே.

  2. வானம் இன்று வண்ணமிழந்து அழுகிறது மேகம் கூட நிறமிழந்து பொழிகிறது ஊசிக் காற்று உடலை வருத்த உணர்வுகள் எல்லாம் உடல் சுருக்கி ஒன்றுமற்று ஓடியே செல்கின்றன இளவேனில் மழை இதமாய் நனைத்திடும் கோடையில் மழை குதூகலம் தந்திடும் மாலை மழை மனதை மயக்கிடும் குளிர்கால மழையோ குலை நடுங்கிக் கூதல் ஓடக் கொட்டமடக்கிடும் கோடையை நனைக்க மழை வேண்டும் குழந்தைகள் நனைய மழை வேண்டும் காதலர்களுக்கும் மழை வேண்டும் கனவுகள் கடந்து காலம் காட்டவும் நினைவுகள் களைந்து நின்மதியுறவும் நினைந்து நினைந்து நீ வாராது மழையே நினைக்கும் பொழுதில் மட்டும் நீ வா

  3. உணர்ச்சியலைகள் அடித்தோய்ந்த பின்பும் உன் கரையில் மணலையள்ளி வருடியபடி வெண்ணிலா உன்னை ரசித்திருப்பேன்! கடல் மீண்டும் கரைதொடும்... நிலவு மீண்டும் வானம் வரும்... என்ற எதிர்பார்ப்புடன், வெற்று வானத்தை பார்த்தபடி... சுடுமணலில் நான்!

  4. ஒவ்வொன்றாய் மலர்கள் பூக்கும் அதத்தனையும் மண்ணில் கவிதையாகும்; வாசம் வானம் துளைக்கும் – அதைக் கடந்தும் தமிழ் இலக்கியமாய் காலத்தில் நிலைக்கும்; பாசமற உள்ளம் சேரும் பாட்டில் பாடம் தேடும் காடு கனக்கும் பொழுதில் – தமிழே நின்று தலைமேல் வாழும்; யாரும் பாடும் ராகம் எங்கும் ஒளிரும் தீபம் வாழ்வின் நகரும் தருணம் நாளை தமிழில் வரலாறாகும்; பேசும் உலகம் பேசும் மறந்து மறைந்துப் பேசும் கூசும் நாக்கை அறுக்கா துணிவில் தலையை ஆட்டும்; துடைத்த இனத்தின் மீதம் துளியேனும் நிலைக்க எழுவோம் துடித்து அழுத வலியை இனி திருப்பித் திருப்பித் தருவோம்; தடுக்க இயலா வேகம் – தமிழர் மரபிலிருக்கு அறிவோம்; திரட்டி திரட்டி சேர்த்து – நம் ஒற்றுமை பலத்தை உ…

    • 0 replies
    • 677 views
  5. தகுதி இல்லை விழுந்து விட்டேன் பதவி கிடைத்தது நான் பணக்காரன் பாலில் குளிப்பேன் சுவாமி சிலை நான் இரட்டை பிறவி உருவத்தில் வேறுபாடில்லை முன் கண்ணாடி சின்ன உரசல் உடல் சூடாகியது தீக்குச்சி அழகில் கிள்ளினேன் மயங்கி விழுத்தது மலர் நாம் பிரிந்து வாழ்கிறோம் இணைந்து வாழ்ந்தால் இறப்பீர் தண்டவாளம் தீயில் எரிகிறேன் சாம்பலகமாட்டேன் மெழுகுதிரி கண்ணீர் வருகிறது கவிதை வருகிறது வலி பிணியில் பணி செய்தவர் பிணியிலும் பணி செய்தவர் அன்னை திரேசா சிறகடித்து பறக்குறது சிறு கருவியால் பிறக்கிறது கற்பனை இல்லாவிட்டாலும் பிரச்சனை இருந்தாலும் பிரச்சனை பணம் உடல் சுத்தம் உள்ளச்சுத்தம்தியானம் மழலைகளிடம்மூட நம்பிக்கை விதைப்புசரஸ்வதி இலை படிப்பு தரும் பரவசம் அடைந்தனர்பார்க்கும் மனிதர்கள்கவலையில் கூ…

  6. Started by pakee,

    ஒவ்வொரு கணமும் உன்னை நினைத்திருக்க ஆசை ஓயாது கதை பேசி உன்னுடன் விழித்திருக்க ஆசை. செல்லமாக சீண்டி உன்னைச் சிணுங்க வைக்க ஆசை நீ சிரிக்கும் அழகினிலே சித்தம் பறிகொடுக்க ஆசை.. உறங்கும் போது உன்னைத் தாலாட்ட ஆசை.. ஊரெல்லாம் உன் பேரை சொல்லி வர ஆசை- உன் கோபப் பார்வையிலே குளிர் காய ஆசை. கொஞ்சும் குரல் இசையில் தினம் கூத்தாட ஆசை.. உன்னோடு கை கோர்த்து உலகம் சுற்றி வர ஆசை.. உயிர் பிரியும் போதும் உன் மடி சாய ஆசை...

  7. 'அகழ்' இணைய இதழில் ஹால் சிரோவிட்ஸின் கவிதைகள் சிலவற்றை க.மோகனரங்கன் மொழியாக்கம் செய்துள்ளார். நாங்கள் சாதாரணமாக சொல்லிக் கொள்ளும் சில பகிடிகளை கவிதையாக எழுதியது போன்றுள்ளது. இலகுவான வாசிப்புக்கு ஏற்ற இந்தக் கவிதைகள் வாசிக்கும் போது புன்னகைக்க வைக்கின்றன. அங்கிருந்த இரண்டு கவிதைகளை இங்கு இணைத்துள்ளேன். மிகுதிக்கான இணைய இணைப்பு அடியில் உள்ளது. ************************************************************************* 1. புகழ் விளையாட்டு ------------------- உங்களுக்கு பிரபலமாக இருக்க வேண்டும் என்கிற தேவை உள்ளது என் சிகிச்சையாளர் கூறினார், ஆனால் முதலில் உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன் எல்லா பிரபலமான நபர்களையும் நீங்கள் பார்த…

  8. ஞாபக சக்தி குறைவானவர்கள் ....காதலில் பொய்சொல்ல ....முயற்சிக்க கூட்டாது ....அதுவே சந்தேகமாக ....உருப்பெற்று விடும் ....!!!பெற்றோர் காதலித்து ....திருமணம் செய்தாலும் ...பிள்ளைகளின் காதலுக்கு ....தடையாகவே இருப்பார்கள் இல்லையேல் விருப்பம் ....இன்றி ஏற்கிறார்கள் ....!!!காதலின் பின்னால் ஓடாதீர் ....காதல் இல்லாமலும் வாழாதீர் ....காதல் பேச்சை கூட்டி ....மூச்சை நிறுத்தும் ,,,,,!!!+கவிப்புயல் இனியவன்ஈழக்கவிஞர் காதல் தத்துவ கவிதை

  9. தமிழீழ புலனாய்துறையினரின்வெளியீடு விழித்திருப்போம் கேட்டுப்பாருங்கள் http://www.esnips.com/doc/eab937d6-453d-48...et=documentIcon

    • 5 replies
    • 1.7k views
  10. அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒ…

      • Like
      • Thanks
    • 4 replies
    • 456 views
  11. uary 8, 2020 - Editor · இலக்கியம் / கவிதை பாய் பெஸ்டி என்பவன் கனவுகளால் ஆனவனல்ல கண்ணீரால் ஆனவன் ஒரு பாய் பெஸ்டி பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் வாழ்பவனல்ல; அவன் வாழ்வது பாதிக் கணவனாக பாதிக் காதலனாக ஒரு பாய் பெஸ்டி ஒரு பெண் உடுக்கை இழக்கும் ஒரு கணத்திற்காக இடுக்கண் களைய அவள் அருகிலேயே காத்திருக்கிறான் ஒரு நிழலாக அதுகூட அல்ல ஒரு நிழலின் நிழலாக ஒரு பாய் பெஸ்டிக்கு ஒரு பெண்ணின் கணவனின் முன் எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் அதே …

  12. [size=3] செஞ்சோற்றுக் கடன் அல்ல..![/size] [size=3] பசி பஞ்சம்[/size][size=3] பிணி[/size][size=3] எங்கு இருக்கிறது..?[/size][size=3] எங்கும் எல்லாம் நிறைந்திருக்கிறது[/size] [size=3] அவரவர் ஊழ் வினையாகக் கூட இருக்கலாம்[/size][size=3] உன் குடும்பத்தினர்[/size][size=3] இல்லையேல் உன் முதாதையர்[/size][size=3] பழி பாவங்களில் பங்கெடுத்து இருக்கலாம்[/size] [size=3] இல்லையென்றால் நீ ஏன்[/size][size=3] கொடுந் துயரங்களை சுமக்க வேண்டும்[/size][size=3] சுகமான நித்திரையை புறந்தள்ள வேண்டும்[/size][size=3] தனிமை முழுதும் துக்க விசயங்களில்[/size] [size=3] நீண்டு கொண்டே போகின்றன[/size][size=3] விடை தெரியாத புதிர்களில்[/size][size=3] கிளி பேசும் மொழி …

  13. Started by Jamuna,

    இவளும் இரவும்..!! விண்மினி வானை கண் சிமிட்டி தாலாட்டிட வான் மெல்ல கண்ணயர கனவில் நிலா வந்து செல்லமாக வானை அணைத்திட... இவள் மட்டும் மெழுகு விளக்கேற்றி சாரளம் வழியே வானை ரசித்தாள் தனிமையில்... நம் இரவுதான் மின்மினியின் பகலோ எவ்வளவு ஆனந்தமாக சுதந்திரமாக பறந்து இரவை அழகூட்டுகிறது என அதிசயித்தாள்.. மின்னி மின்னி ஒளிர்வதால் இவை மின்மினி ஆயினவா என் கேள்வி எழுப்பினாள்..!! விடைதெரியாது தோற்றுப்போய் கடைக்கண்ணால் நோக்கினாள் இவள் அழகை ரசித்த வானிலாவை பரந்த வானில் தவழும் வட்ட நிலாவை நினைத்து பெருமூச்சு விட்டாள் என்ன அழகு என்ன ஒளி எல்லாம் இயற்கையே என்று எண்ணியவள் நட்சத்திரங்களோடு கதைபேச எத்த…

  14. ஒன்பதாம் ஆண்டு.... சைவ சமய பரீட்சை குனிந்து கரிசனையோடு எழுதுகிறேன்..... என் கண்ணும் விடைத்தாளும் விளையாடிகொண்டிருக்கும் வேளை ஏதோ ஒன்று அந்நியமாய்... என் கண்ணில் இடர்ப்பட... என் மனதிலோ.. வெட்கம் பூரிப்பு...... ஓர் இனம் புரியாத மாற்றம்... இப்புவியை வென்றுவிட்ட நினைப்பு.. அது... என் மூக்கின் கீழோரம் ஆடவனின் வீரச்சின்னம் எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது.... பரீட்சை எழுதவில்லை... ரசித்திருந்தேன்.. அன்று தான் பிறந்திருந்த என் மீசையை..... வருவாயா வருவாயா என பார்த்து.. களைத்திருந்து... காத்திருந்து.. என் மூத்தோர்... மீசையை.... நான் பார்த்து அவாப்பட்டு.... இறுதியில் …

  15. ஆடியமாவாசை… பிண்டமாய் போன அப்பாவுக்கு கண்ணீரில் எள்ளுத் தண்ணி இறைத்த என் இடம் நிரப்ப வருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம் மழலையாய் உதிரும் இந்த வயதில் இவனுக்கு ஆடியமாவாசை எந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’ பிள்ளையின் எள்ளுத் தண்ணீராய் கண்ணீரைத் தந்தபடி கூட இருந்த தாய் விளக்கம்... ‘அவர் காணாமல் போகையில் இவன் வயிற்றில்… தேடுறம் தேடுறமெண்டு… இனித் தேட ஏலாதெண்டு’ திண்டவனைக் காப்பாற்றும் ஆணைக் குழுக்கள் முடிவாக்கும் இன்னும் எத்தனை வருஷங்கள் இவன் நோன்பு… இவன் போல் இன்னும் எத்தனை எத்தனை தகப்பன் தின்னிகளோ!... ஆடி …

  16. நள்ளிரவு கடக்கும் நேரம் "உறங்கப் போகிறேன்" என்கிறாய் குறுந்தகவல் வழியாக..! "கனவில் ஒரு நடை வந்து விட்டுப் போ..!" என்கிறேன். நிஜத்திற்கு ஆசைப்படும் நீயோ கனவில் வர மறுத்து சிணுங்குகிறாய்..! மயிலிறகால் வருடும் உன் நினைவுகளின் கூட்டம் மலையாய் கனக்கிறது..! நீ வந்து சேரும் வேளை மலைக்கும் நினைவுகள் மேகக்கூட்டமாய் மிதக்கிறது..! புயல் கடக்கும் போது பெய்யும் பெருமழையைப் போல தென்றல் தீண்டும் வேளை பொழிகிறது காதல் மழை..! ஆண் பெண் என்னும் வண்ணங்கள் கரைகிறது. அன்பை உடுத்திக் கொள்கின்றன நிர்வாணங்கள்..! ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மறுக்கப்பட்ட கனியை மன்மதன் திருடிச் செல்கின்றான்..! காதலிக்கப் படாமல் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்…

  17. கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர் தீபச்செல்வன் 01 நமது வாழ்வின் கனவு நகரமே படைகள் உன்னை மிதிக்கும் பொழுது நமது மனம் மிதிபடுகிறது. கிளிநொச்சிக்குளத்தில் கந்தசாமிகோயில் மூழ்கியது. அதிகாரத்தின் கைகளிற்குள் அடங்க முடியாத நகரம் நேற்றிரவு பின்வாங்கியது. ஆழமான கிணறுகள் வசந்தநகரை விட்டு பின்வாங்கின. நமது நகரம் வீழ்ந்தது என்று அறிவிக்கப்படுகையில் பெரும்துயர் சூழ்கிறது. மெல்ல மெல்ல படைகள் கடிக்கத்தொடங்கிய நாட்களில் வீடுகள் எங்கோ போயிருந்தன. கடைகள் கரடிப்போக்கைவிட்டு பின்வாங்கின. எனது வீடு முழுவதையும் தின்றுவிட்டு பெருமிதம் கொள்ளுகிற படைகள் நகரமெங்கும்; நுழைந்து கொடிகளை பறக்க விடுகையில் காயம் ஆறாதிருந்த கட்…

  18. இனியேனும் நாமிங்கு ஒன்றாகுவோமே ! -------------------------------------------------------------------- காலத் துயர் வலி தாக்கிடும் வேளையில் கைகளைக் கோர்த்தொரு உறுதியெடுப்போம் வீணிற் பொழுதுகள் போனது வேயென்று காணற் பேச் சொலி காதிற் கேட்குது போனது போனது விடுதலை போனதாம் ! எங்கே போனது விடுதலை என்று நாம் சற்றே சிந்தனை கொள்வதே நல்லது எப்போ விடுதலை வந்தது என்றே சற்றே சிந்தனை கொள்வதும் நல்லது ! நித்திரை போலவே நடித்தவர் சிலர் நித்திரை விட்டெழுந்தவர் போல் சிலர் நின்று பேசியே நிமிர்ந்து பார்க்கிறார் போனது போனது விடுதலை போனதாம் ! நேற்று வரைக்கும் தூங்கி யிருந்ததும் காற்று வாங்கக் கடற்கரை போனதும் கதவை மூடிக் கதைகள் சொன்னதும் காலத்துயரின்…

    • 0 replies
    • 703 views
  19. வேண்டாம் நண்பா விட்டுவிடு ...! விபரன் இனி நாம் சகோதரத்துவத்துடன் வாழலாம் எனவும், பிரச்சனைகள் எல்லாமே தீர்ந்து விட்டதாகவும்... நீயே முடிவு செய்கிறாய்...!! உனது தலதாவிலும், தலை நகரிலும், குண்டுகள் வெடித்ததையும்; தசாப்தங்கள் கடந்தும் மறக்கவியலாத நீ, எல்லாவற்றையும் மன்னித்ததாக… இப்போ பெருந்தன்மையுடன் எனது தோழிலே கை போடுகிறாய்..! உன்னுள்ளே பெருமைப்பட்டும் கொள்கிறாய்..!! தாலி... இன்னமும் சிங்களச்சிறைகளுக்குள் அடகு வைத்த தமது தாலிகளை மீட்க வேண்டி வீதிகளிலே பல பெண்கள் திரிவதை பார்த்தாயா..? அவர்கள் திருமணம் செய்ததெல்லாம் மனைவியாக வாழவே அன்றி விதவையாக மாழ்வதற்கல்ல.. உயர் பாதுகாப்பு வலயம்... உனது சுற்றுலா வண்டிகள் கவனித்திருக்க கூட…

    • 0 replies
    • 578 views
  20. 1 பாலி ஆறு நகர்கிறது அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ளி விழுந்து 'துழும்' என்னும் வரால்மீன்கள். என்றாலும் அமைதியை ஏதோ பராமரிக்கும் அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில் அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் ஒரு மருங்கம் ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும் மருத மர நிழலில் எங்கள் கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்குவேறு ஆணிவேறாய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து சிரித்து கேலி செய்து சினந்து வாய்…

  21. ஐந்திணை விக்ரமாதித்யன் குறிஞ்சி கண்ணில் தெரிவதெல்லாம் மலை முகடுகள் ஒரு நறுஞ்சுனை தொலை தூரத்தில் சிற்றாறு மரம் செடி கொடிகளில் கனி சுமந்த கிளைகள் உச்சியில் கொம்புத் தேன் கூடுகள் அதிசயமாய் துலங்கும் அருவிகள் மெளனமே இருப்பான சித்தர்கள் முன்னை பழங்குடிகள் வானம் தொடும் மஞ்சுக்கூட்டம் தண்ணீர் பட்டுத் தெறிக்கும் தேக்குகள் மூங்கில்கள் பக்கத்திலேயே பாக்குமரங்களும் ஏலக்கொடிகளில் எச்சமாய் மணம் சிந்திக் கிடக்கும் மலை முந்திரி படர்ந்து தழுவும் மிளகுக் கொடிகள் வேரில் பழுத்துக் கிடக்கும் பலாக்கள் தேன் கதலிகள் வேட்டுவ வள்ளியின் விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும் யாசித்து நிற்கும் வடிவேலன் …

  22. புரியாத புரிதல். புரிதல்கள் இரண்டு தமக்குள் சந்தித்துக்கொண்டன தமக்குள் புரிந்துணர்வில்லாமலே பேசிக்கொள்ள ஆரம்பித்ததன புரிதல்கள்; புரிதல் பற்றியே புரிதல்கள் பற்றிய சர்ச்சை புரிதல்கள் இல்லாததால் புரிதல்களுக்குள் முற்றிக்கொண்டிருந்தது ஒரு புரிதல் தன் பங்குக்கு புரிதல் பற்றிய தன் விளக்கத்தினை பல்வேறுவகையில் புரியவைக்க முயற்சித்தது இன்னொரு புரிதலிடம் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியாத இரண்டாம் புரிதல் முதலாம் புரிதலின் புரிதல் பற்றிய கொள்கைகளை புரிதல் இல்லாமலே விமர்சித்துக் கொண்டது. இந்த முறை புதிய கொள்கைகளோடு இரண்டாம் புரிதல் தன் பங்குக்கு ஆரம்பித்தது. முதலாம் புரிதலின் புரிதல் பற்றிய கொள்கைகள் எப்படி…

  23. பேய்கள் கூட்டத்தில் இரண்டு பெரிய பேய்கள் சுடுகாட்டை ஆழ்வதற்கு அதில் ஒரு பேயை தெரிவு செய்ய வேண்டும் ஒரு பேய்க்கு நல்லூர் கந்தன் துணை மற்றப் பேய்க்கு கதிர்காமக் கந்தன் துணை இரண்டு பேய்களின் வாய்களிலும் குருதியும் சதையும் பிரண்டுபோயுள்ளது இன்னும் வாயை கழுவக்கூட இல்லை சும்மா சொல்லக் கூடாது எங்கள் சனத்தை இரண்டுபேரும் நல்லாத் தின்றவங்கள் ஏவறை விட்டபடி வலம்வரும் பேய்களில் எமக்குப் பிடித்த பேய் எது? பேய்களில் என்னய்யா பிடிப்பும் வெறுப்பும்? இல்லை தமக்குப் பிடித்த பேய்களை சுட்டிக்காட்டுவது அவரவர் ஜனநாயக உரிமை தானே? நிச்சயமாக எங்கள் விருப்பப் படிதான் எங்களை தின்னவேண்டும் இந்த உரிமையை யாருக்காகவேனும் விட்டுக்கொடுக்க முடியா…

  24. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் -சினேகிதி- அளவில்லா ஆனந்தத்தோடு அண்ணன் படை சேர்ந்தாய் அண்ணாவே பூநகரி மணலாறு கிளிநொச்சி எனக்களம்பல கண்டாய் இன்று நீயும் மாவீரன் வீட்டருகில் நீ வெடித்துச் சிதறினாய் உள்ளம் வலிக்கத்தான் செய்தது உன் சோதரர்கள் உனக்குச் சொல்லவில்லையா அது இராணுவம் ரோந்து வரும் நேரமென்று யார்யாரோவெல்லாம் ஆறுதல் சொன்னார்கள் அம்மாவும் விசும்பல்களை நிறுத்திவிட்டாள் அழுது ஆற்றாமை தீர்த்தால் இராணுவ இராஜமரியாதையையும் ஏற்கவேண்டி இருக்குமே ஐயர் வந்து சாந்தி செய்தார் - நீ சிதறிப்போன சந்தில் எங்களுக்குத் தெரியும் தமிழீழம் ஒன்றுதான் உங்களுக்கு ஆத்ம சாந்தியென்று இரு தசாப்தங்கள் ஆகிவிட்டன ஆனாலும் உங்கள் கனவுகள் நனவாகவில்ல…

    • 32 replies
    • 5.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.