Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி - தீபச்செல்வன் பள்ளிக்கூடம் செல்ல ஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடியவில்லை எல்லா உறுப்புக்களையும் புணர்பவர்களை சூழ நிறுத்திவிட்டு காட்ட முடியாதிருந்தோம் ஒளியிருக்கும் திசையை ஈற்றில் வழங்கியிருக்கிறோம் ஆண்குறிகளை அடையாளம் காட்டுமொரு காலத்தை. 0 …

    • 1 reply
    • 948 views
  2. "வனத்தின் அழைப்பு" அஸ்வகோஸ்:' (சிறு குறிப்பு) '...என்னை ஒறுத்து ஒறுத்து அழித்துக் கொள்கையில் என் மகன் போயிருந்தான் தன்னை அர்த்தப் படுத்தவென்று என் கனவுகள் வீழவும் மண்ணின் குரலிற்கு செவியீந்து போயிருந்தான்...' ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன், நான் துயருற வேண்டி. சிலவேளைகளின் பொருட்டு இஃது மிகவும் சாதரணமாக நான் கொள்ளும் தியானம்! படித்து முடித்த'வனத்தின் அழைப்பு' கையிலிருக்க,மனம் மட்டும் கிளர்ச்சிக்குள்ளாகியபடி. 'இறுதியாக என்னிடம் வந்திருந்தான் அவனது தேகம் குளிர்ந்திருந்தது இரத்தமுறிஞ்ச நுளம்புகள் வரவில்லை ஈக்களை அண்ட நான் விடவில்லை' சதா செவிகளில் விழும் கனத்த அதிர்வுகள். என்னயிது? சவப்பெட்டி நட்டநடுவே. ஒன்றல்ல, பல.…

    • 1 reply
    • 869 views
  3. வருமானம் தருகின்ற உணவுகளில் செரிமானம் தராத பரோட்டாவே முதலிடம்! சிலர் பரோட்டா என்பர் சிலர் புரோட்டா என்பர் இதில் எது சரியென்று தெரியாது ஆனால் இவ்வுணவே சரியில்லை என்பதுதான் உண்மை! இது பண்டை காலத்து உணவல்ல... அண்டை நாட்டு உணவு! வயிற்றை நிரப்பி வாழ் நாளை குறைக்கும்! சுண்டி இழுக்கும் அண்டிப் போகாதே! இப்போதெல்லாம் எமதர்மன் மாடு மீது வராமல் மைதா மாவுமீது வருகிறான்... எச்சரிக்கை!!! 😋 😋.... 🙂 படித்ததில் பிடித்தது.

    • 1 reply
    • 283 views
  4. எனது கறுப்பு வானம் அகப்பை காம்பால் மாவு கிளறி அரிசிப் பேணியால் கொத்தி ஓலைப்பெட்டியில் அவியும் அம்மாவின் புட்டையும் பழங்கறிச்சட்டியையும் நான் ... பதம் பார்த்ததையும்... அக்காளும் தங்கச்சியும் மாத்துலைக்கை போட்டு கை வலித்த போது – விரல்களுக்கு நான் நல்லெண்ணை தடவியதையும்... ஒல்லித்தேங்காய்களை இணைத்து வாய்க்காலுக்குள் நீந்தப்பழகியபோது காற்சட்டை கழன்றதை பக்கத்துவீட்டு பார்வதி பார்த்து சிரித்ததையையும்... புத்து இடித்து கறையான் கொண்டுவந்து அப்பா வளர்த்த கோழி குஞ்சுகளை கீரியும் பிலாந்தும் சண்டை பிடித்து திண்றதையும்... வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் - அப்பா அப்பாவுக்கு பிடிக்கும் ஆடி அமாவாசை விரதத்தையும் ... ஓடியல் கூழும் ஒற்றை…

  5. அடிமைச் சங்கிலி அறுப்போம்...! -கவிஞர் தணிகைச்செல்வன் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், காவியக் கவிஞர் வாலி தலைமையில் "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்தை கவிஞர் மு.மேத்தா தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவிஞர்கள் பழனிபாரதி, பா.விஜய், தணிகைச் செல்வன், இளம்பிறை, உமாமகேஸ்வரி, தமிழ்தாசன் உள்ளிட்டோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர். ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு கோணத்தில் வாசித்த நிலையில், ஈழத்தைப் பற்றி அதிகம் பேசிய தணிகைச்செல்வனின் கவிதை வரிகள், திரண்டிருந்த மக்களிடம் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது கவிதையிலிருந்து... முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிம…

    • 1 reply
    • 1.5k views
  6. இறைவன் எங்குள்ளான் ? சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து, துதி பாடி, தோத்திரம் பாடி, கையால் ஜெபமாலை உருட்டி உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை நிறுத்தி விடு! கோயில் தனி மூலையில், கதவுகளை மூடி, கண்களை மூடிக் கொண்டு காரிருளில் நீ யாரைப் பூஜிக்கின்றாய்? கண்களைத் திறந்துபார், உன் இறைவன் முன்னில்லை என்பதை! மெய்வருந்தி இறுகிப் போன வயலை உழவன் எங்கே உழுது கொண்டு இருக்கிறானோ, வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன் எங்கே கல்லுடைத்து வருகிறானோ அங்கே உள்ளான் இறைவன்! வெட்ட வெயிலிலும் கொட்டும் மழையிலும் தூசி படிந்த ஆடையுடன், உழைப்பாளி உடன் குடியுள்ளான் இறைவன்! புனிதமான உன் காவி மேலங்கி உடையை எறிந்து விட்டு புழுதி நிரம்பிய பூமிக்கு இறங்…

  7. சர்வதேசமே! 1948இல் இலங்கைக்கு சுதந்திரம் தந்தாய் பத்து ஆண்டுகள் கூட தமிழனால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியவில்லை பேரினவாத சிங்களவனின் சுரண்டலுக்கு ஆளானோம் தமிழ்மண்ணில் சிங்களக் குடியேற்றம் செய்தான் பொறுத்தோம் எம் வளங்களைச் சுரண்டினான் பொறுத்தோம் எம் உயிரிலும் மேலான கல்வியைப் பறிக்க தரப்படுத்தல் சட்டம் அமுலாக்கினான் இனியும் பொறுக்க முடியாமல் அஹிம்சை வழியில் கேட்டோம் கிடைக்கவில்லை ஆயுதம் ஏந்திக்கேட்டோம் பயங்கரவாதிகள் என்றா(றீர்)ன் இலட்சக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து விட்டு இன்றும் கேட்கிறோம் நீ தானே சொன்னாய் எந்த ஒரு சமூகமும் தனித்துவமான மொழி கலை,பண்பாடு கொண்ட இனம் தனது சுயநிர்ணய …

  8. கவிஞர் வீரா அவர்களின் கவிதைகளில் ஒன்று..

      • Like
    • 1 reply
    • 1.6k views
  9. 2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! ------------------------------------------------------------------ அழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ..... ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!! இழப்புகளை ஏற்படுத்தாமல் .... இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் .... ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்.... உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் .... ஊர் செழிக்க ..வருக வருக .....!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் .... எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் .... ஏற்றங்களை தந்திட ..வருக வருக ...…

  10. இது கம்பன் பாடாத கவிதை.. தீக்குளிக்க சந்தர்ப்பம் இல்லாமலே தீயோடும்.. புதை குழியோடும் தீர்ந்துவிட்ட சீதைகளின் துயர் மறந்தோர் கவிதை இது. வேதனையின்.. கூக்குரல்..! இதுவும் ஒரு வதை தனக்குத் தானே செதுக்கிய.. சிம்மாசனத்தில் இவர்..! சிங்கள அமைச்சரவையில் அவர்...!! குத்தியரின் காசோலை அம்பு பாய்கிறது குடும்பிக்கார மறைவில் இருந்து. வாலி அங்கும் வீழ்கிறான்.. இராமன் இங்கும் வெல்கிறான்..!! அதர்மம் அழித்து தர்மம் வென்றதாய் காட்ட ஒரு காசோலை மட்டும் பரிமாறப்படுகிறது.. மீண்டும் வரலாறு திரித்து எழுதப்படுகிறது...! கம்பனுக்கு அன்று.. வாலி புகழ் திரித்து இராம புகழ் பாட கவி... பாட கள்ளிருந்தது தான் பெருங் கவி எனும் புகழ் விருப்பிருந்தது கூட அகத்தே …

    • 1 reply
    • 899 views
  11. காலமோ கண்ணீரோ வலிகளை போக்கவில்லை _மாறாக தாங்கவியலா வெறுமைகளை விதைத்துவிட்டது .... உருவான தேசத்தை உருக்குலைத்த உலகஒழுக்கு, உருவாக்கிய வரலாற்றை இரத்தக்கறைசுமந்தவதன் பக்கங்களை ஏதுமறியா அப்பாவிகளின் உயிர்எழுத்துக்களால் நிரப்பிக்கொண்டது ! குளங்களும் வாய்க்கால்களும் நெல்லாடும் வயல்களும் நெடுவென எழுந்த மரங்களும் புள்ளிக்குயில்களும் மயில்களும் புல்லினங்களும் இன்றில்லாமல்போக_ வன்னிமண் சுமந்துநிற்கிறது செத்தழிந்த செந்தமிழன் மேனியை ! வடுக்களை தடவிகொள்கிறோம்.......! அடுக்கடுக்காய் விழுந்த எறிகணைகளை, அடுத்தடுத்து விழுந்த உறவுகளை, அங்கங்கள் அறுந்துதொங்க அவலக்குரல்எழுப்பி மடியில் உயிர்நீத்த மகவுகளை, மீட்பென்று சொல்லிவந்…

  12. கறுப்பு ஆடியின் வலிகள் கருவிலே உரிமைக் குரல் கொடுத்து சாவிலும் வாழ்கிறோம் உலகத்தின் இதயத்தில் ஈழத் தீபம் ஏற்றுவோம்! திரும்பத் திரும்ப வந்து புன்னகைக்கும் துயரத்தில் உயிர் கொதிக்கவும் உதிரம் கொதிக்கவும் குளிர்க் கூட்டிலே வலிகள் சுடச் சுட வாழ்க்கை தொடர்கிறது! கண்ணீர்த் துளிகள் விழிகளில் வழிகிற காலம் போய்... கண்ணீர்க் கட்டிகளாய் உதிரம் கொட்டுகிற கலி காலமிது! கருவறையில் இருந்து கனத்த குரல் ஒலிக்கிறது. "அம்மா நான் தலையோடு பிறக்கவா? இல்லை... தலையில்லாமல் பிறக்கவா?" எப்படிப் பிறந்தாலும் என் இறப்பு என்னவோ தலையில்லா முண்டாமாகுமே! நான் வரவா கருவிலே கரைந்து போய்விடவா? இன்னும் இன்னும் மனிதக் குருதி நிரம்ப…

  13. Started by Tamizhvaanam,

    ஆணிவேர் உலக தரத்தில் உண்மை சொல்ல தமிழை உயர்த்தும் புதிய திரைப்படம்! வன்னி நிலத்தை விழிகள் பருக அகிலம் போற்றும் ஈழத் திரைப்படம்! உடல் சுமக்கும் உயிர் விறைக்க இதயம் கனக்கும் ஈழத்துக் காட்சிகள்! பெயரிலே உறுதியும் திரைத்துளி பார்க்க இமைகள் துடிக்கும் போரின் சாட்சிகள்! உறவை தூக்கி நெஞ்சில் அணைக்க நெருப்பகை; கிழிக்கும் நிமிர்ந்த வேகம்! எதிரியின் பிடியில் தங்கை தவிக்க மூச்சை உடைக்கும் எரிமலைத் தாகம்! வலைக் கூட்டிலே குழந்தை சிரிக்க வலியில் துளிர்க்கும் இனிய காதல்! குரல் வளையை சுடுகுழல் ருசிக்க எதிரியை எரிக்கும் மருத்துவர் மோதல்! முள்ளும் மலரும் நெஞ்சத்தைக் கிள்ள உதிரிப் பூக்களின் …

  14. முன் பின் தெரியா நகரில்... காலம் ஒரு பாம்பு போல் தன் ‘சட்டையைக்’ கழற்றும் இந்த மாலைப் பொழுதில் ஒரு கடற்கரை நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். இருள்வதும் பின் நீலம் பூசி மீள்வதுமாய் வானத்தின் வித்தைகள். சாலையெங்கும் இலைகளை வீழ்த்திக் கடக்கின்றது ஊசி விரல்களுடன் குளிர் காற்று. எதுவும் நிலையற்றதெனச் சொல்லக் காத்திருக்கின்றன மரங்கள். சூதாட்ட விடுதிகளும் கடைத் தெருவும் குளிர் மெழுகாய் உறைந்து போய்க் கிடக்கின்றன. நெடியவன் ஒருவன் தன் இடுப்பளவேயான சிறுமியைக் குனிந்து முத்தமிட்டவாறே தள்ளிக் கொண்டு செல்கின்றான். மதுப் புட்டிகளுடன் விரைகின்றனர் நகரவாசிகள். பொய்யின் ஏழுவர்ணங்களுடன் அகஸ்மாத்தாய் தோன்றுகிறது வடபுறத்தே ஒரு வானவில். முன் பின் அறியா அந்த …

  15. கடிதங்கள் எழுதுவதில் ஒரு இன்பம். வாழ்த்துமடல் வாங்கி அனுப்புவதிலும் ஆர்வம். பி யோனை எதிர்பார்ப்பதில் ஒரு சுகம். தந்தி வந்தால் ஒரு ஏக்கமும் பட படப்பும். கள்ளமாங்காயின் ருசிக்கு இன்னொரு உணவா? கள்ள இளனி ஒரு தேனாமிர்தம். கள்ள மரவெள்ளி சுட்டால் தனி இன்பம். புத்தகத்தினுள் சினிமா எக்ஸ்பிரஸ் படிப்பது. பள்ளிக்கூடம் கட் அடித்த சினிமா. ஊரின் தெருக்கள் கூட்ட பெல்பொட்டம். சோடாபெட்டி கூனிங்கிளாஸ் போட்டகாலம். 20 இஞ்சிக்குமேல் கீல்ஸ் போட்டு விழுந்தகாலம். கிப்பிதலைமயிர் வளர்த்து சடையுடன் திரிந்த காலம். நாவற்பழம் பெறுக்க ஒரு கூட்டம். படிப்பதில் போட்டி போட்ட காலங்கள். சுழட்டலுக்கு ஒவ்வொரு குழுக்களாய் செல்வது. பீடிக்கொம்பனி தொழிலில் ஒரு ஆர்வம். நெசவுசாலை பெண்களுக்கு என ஒரு …

  16. பெறுதல்: ஏதேனும் ஒரு கடவுள் சொர்க்கம் அனுப்புதல்: ஒரு மனிதன் பூமி. காது கேட்காத கடவுளுக்கு, காணவிரும்புபவன் எழுதுவது.... கோரிக்கைகள் பலவைத்தும் கணபொழுதும் செவிசாய்க்காமல் கல்லாய் நிற்பதனால் காது செவிடென நானே கொண்டேன்; பிறகு நான் என்ன செய்ய பரம்பொருளே? முதலில் நாமொரு முடிவுக்கு வருவோம்; நம்மில் சிறந்தவர் யார்? முன் ஆதியில் நீயொரு மனிதனை படைத்தாய் பின்பாதியில் நாங்கள் பலகடவுள்கள் படைத்தோம், உதடுகளை திறந்து உண்மைகளை சொல் நம்மில் சிறந்தவர் யார்? மறைந்திருக்கும் பொருளுக்கு மதிப்பதிகம் என்பதால் புலப்படாத உன்னை பெரியவனாக கொள்கிறேன். உலகத்தை படைத்தாய் சரி உடனே தூக்கிஎரிந்தோட உலகம் என்ன உனக்கு உசிலம்ப…

  17. எட்டுத் திக்கும் முட்டிப் பொங்கு! உறவுக் கொடியே உணர்வைப் பொங்கு! எழுந்தது ஈழக்கொடியது என்று எழுகைத் தமிழே உரத்துப் பொங்கு! இன்னல் தன்னை இடித்துப் பொங்கு! இமயம் கொண்ட தாகம் பொங்கு! இனிவரும் காலம் தமிழரின் கோலம் உயரும் உயரும் பொங்கு! அண்ணன் காட்டிய பாதையிலே - எங்கள் அன்னையைக் காக்கும் விதி செய்வோம். (எட்டுத் திக்கும்) கொற்றத் தமிழே கூவிப் பொங்கு! சுற்றம் கூடி ஆளப் பொங்கு! செங்களம் வந்த சிங்களத் திட்டம் வேங்கையின் முன்னால் வீழ்ந்திடப் பொங்கு! தாயகத் துயரெல்லாம் தீ விழும் தமிழரின் பூமியில் அழகேறும். (எட்டுத் திக்கும்) திக்குத் திக்காய் தமிழே பொங்கு! தேசப்பாடல் பாட…

  18. முள்ளிவாய் வீரத்தின் உள்ளக் குமுறல்கள் உண்ண உணவின்றி உறங்க இடமின்றி உடுக்க உடையின்றி ஊனுக்கு மருந்தின்றி உள்ளம் ஒன்றே உறுதியென்று உயிரை தம் உடலுள் புதைத்து வாழ்ந்தால் மானத்துடன் வாழ்ந்திடுவோம் அஃதின்றேல் அழிந்திடுவோம் அரக்கன் சிங்களவன் உலகத்துணைகொண்டு நெருங்கி வந்து தடைகொண்ட ஆயுதத்தால் போர்விதி மீறி அழித்தபோது மௌனித்த இவ்வுலகில் வாழ்வென்னும் வளம் ஒன்று தேவைதானா? ஈழமது எங்கள் தேசம் அதில் சுதந்திரமா வாழ்வது தான் எங்கள் தாகம் இன்றேல் நீதியற்ற உலகத்திலே இதுவே நீதியற்ற விதியென்றால் எம்முயிரை மாய்ப்பது எங்கள் திண்ணம் முள்ளிவாய்தனில் எழு அழுவோசை காப்பாற்று காப்பாற்று எனும் அபயக்குரலெல்லாம் வானெழுந்து உலகமெல்லாம் ஒலித்தபோது …

    • 1 reply
    • 1.3k views
  19. ஏய் சுதந்திரமே உன்னை எம்மால் தொட அகிம்சையாளும் முடியவில்லை ஆயுதத்தினாலும் முடியவில்லை ஆகவே வேண்டாம் நீ என ஒதுங்கிட முட்கம்பி அகதியல்ல புலம்பெயர் அகதி நாம்

  20. Started by BLUE BIRD,

    http://www.youtube.com/watch?v=OCsAMIe_kdY&NR=1 Thank you! for C S Baskaran

  21. Started by தமிழரசு,

    தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சுதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன் தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே அண்ணலின் வழியினில் வந்தவர் செய்கையால் ஆத்திரம் கொண்டவன் அஹிம்சையை நாடினான்…

  22. ஆடியமாவாசை… பிண்டமாய் போன அப்பாவுக்கு கண்ணீரில் எள்ளுத் தண்ணி இறைத்த என் இடம் நிரப்ப வருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம் மழலையாய் உதிரும் இந்த வயதில் இவனுக்கு ஆடியமாவாசை எந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’ பிள்ளையின் எள்ளுத் தண்ணீராய் கண்ணீரைத் தந்தபடி கூட இருந்த தாய் விளக்கம்... ‘அவர் காணாமல் போகையில் இவன் வயிற்றில்… தேடுறம் தேடுறமெண்டு… இனித் தேட ஏலாதெண்டு’ திண்டவனைக் காப்பாற்றும் ஆணைக் குழுக்கள் முடிவாக்கும் இன்னும் எத்தனை வருஷங்கள் இவன் நோன்பு… இவன் போல் இன்னும் எத்தனை எத்தனை தகப்பன் தின்னிகளோ!... ஆடி …

  23. கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர் தீபச்செல்வன் 01 நமது வாழ்வின் கனவு நகரமே படைகள் உன்னை மிதிக்கும் பொழுது நமது மனம் மிதிபடுகிறது. கிளிநொச்சிக்குளத்தில் கந்தசாமிகோயில் மூழ்கியது. அதிகாரத்தின் கைகளிற்குள் அடங்க முடியாத நகரம் நேற்றிரவு பின்வாங்கியது. ஆழமான கிணறுகள் வசந்தநகரை விட்டு பின்வாங்கின. நமது நகரம் வீழ்ந்தது என்று அறிவிக்கப்படுகையில் பெரும்துயர் சூழ்கிறது. மெல்ல மெல்ல படைகள் கடிக்கத்தொடங்கிய நாட்களில் வீடுகள் எங்கோ போயிருந்தன. கடைகள் கரடிப்போக்கைவிட்டு பின்வாங்கின. எனது வீடு முழுவதையும் தின்றுவிட்டு பெருமிதம் கொள்ளுகிற படைகள் நகரமெங்கும்; நுழைந்து கொடிகளை பறக்க விடுகையில் காயம் ஆறாதிருந்த கட்…

  24. 1 பாலி ஆறு நகர்கிறது அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ளி விழுந்து 'துழும்' என்னும் வரால்மீன்கள். என்றாலும் அமைதியை ஏதோ பராமரிக்கும் அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில் அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் ஒரு மருங்கம் ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும் மருத மர நிழலில் எங்கள் கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்குவேறு ஆணிவேறாய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து சிரித்து கேலி செய்து சினந்து வாய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.