கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அம்மா,, நான் உன் கருவறையில் உதைத்தது உன்னை நோகடிக்க அல்ல,, என்னை சுமக்கும் அன்பானவள் உன்னைக்கானவே.. பிஞ்சு வயதில் நான் கெஞ்சலாக அழுதது பசியினால் அல்ல,, பால் குடிக்கும் சாட்டில் உன் இதயத்தை முத்தமிட.. பள்ளிக்கு செல்லும் போதும் அழுதேன் அம்மா படிக்கும் கள்ளத்தால் அல்ல சில மணிநேரம் உன்னை பிரிகிரேனே என்ற துடிப்பால்.. திருமணத்தில் நான் அழுதேன் காதலில் தோற்றுப்போய் அல்ல,, கல்யாணம் உன்னிடத்தில் இருந்து என்னை பிரிக்குமோ என்ற பயத்தால்.. வெளிநாடு போகும்போதும் அம்மா நான் அழுதேன் உன்னை பிரிவதால் அல்ல பசியால் நான் அழுதபோது நீ பசிகிடந்து உன் கண்ணீர் மறைத்து என்னை காத்த தெய்வமே உன்னை நான் காக்கும் காலம் இதுவென்ற…
-
- 0 replies
- 795 views
-
-
அம்மாவுக்காய் சில வரிகள் ----------------------------------- அம்மா, சும்மா எல்லோரும் காணும் கடவுள், என் அம்மா, மனித உருவில் நான் கண்ட தெய்வம், என்னை சுமந்தபோது-அவள் கருவறை நிறைந்திருந்தது, வறுமையால்-அவள் வயிறுமட்டும் வெறுமை, ஒற்றை வயிற்ரை நிரப்ப முடியாதவள், பெற்ற என் வயிற்ரை போராடினாள், பற்றைக்குள் செத்த மரங்களின் குச்சிகளை-தன் வலிமைக்கேட்ப ஒடித்துக்கொண்டு உச்சி வெய்யிலில்-அவள் பாதணியில்லா பாதங்களை பதித்து வந்து-என் பசி போக்கினாள், சில நேரம்-அவள் விற்காத விறகுகளை விலையேதும் பேசாமல் அரைப்படி அரிசிக்காய் போட்டுவிட்டு, அறைவயிரேனும் எனக்கு நிரப்பி விட்டால். நிரந்தரமாய் தன் வயிற்ரை காயவிட்டு. அம்மாவின் கண்…
-
- 0 replies
- 437 views
-
-
அனைத்திற்கும் இணையானவள் தாய். ..! கோல்களனைத்தும் கொலை வெறியில் பூமியை மோதுவதற்கே சுற்றி வருகின்றன சூரிய குடும்பத்தில் காரணம் தங்களிடத்து அனைத்தும் இருந்தாலும் "தங்குவதற்கு" ஒரு நாதி இல்லையே என்ற பொறமை தான் இப்படி சிறப்புள்ள பூமிக்கு இணையானவள் "தாய்"... விண்வெளியில் விளையாடிகொண்டிருக்கும் தான் பிள்ளைகள் விண்ணிலிருந்து விழும் போது பிரிந்து தான் விழும் இதை எண்ணி விண்னெனும் தாய் கதறி அழும் அந்த கண்ணீர் தான் மண்ணில் மழையை ஒன்று சேர்க்கின்றன …
-
- 8 replies
- 1.4k views
-
-
கருவினில் அவள் வயிற்றினில் உதைந்தோம்..! வளர்கையில் அவள் மார்பினில் உதைந்தோம்..! பள்ளிப் பருவத்தில் அவள் ஆசைகளையே உதைந்தோம்..! வளர்ந்த பின் அவளையே உதைகிறோம் இறுதியில்.. தனிமையில் தள்ளுகிறோம்..! இருந்தும் அவள்.. இன்னும் எங்களையே நினைக்கிறாள்.. உருகிறாள் அழுகிறாள் அன்பைப் பொழிகிறாள்.. அவள் தான் அம்மா...! அன்பு மக்களாய் அவளுக்கு நாம் என்ன அளித்தோம்..???! வெறும்..ஏமாற்றங்களே...! பதிலுக்கு அவளோ இன்னும்.. அளிப்பது அனுதினம் அன்பும்.. ஊக்கமும்..! அன்னையை கடவுளாய் தொழ வேண்டாம் பூக்களால் பூஜிக்க வேண்டாம் பொன்னால் அலங்கரிக்க வேண்டாம் பட்டால் போர்க்க வேண்டாம் பரிசால் குவிக்க வேண்டாம்.. அவள் பேசும் ஒரு வார்த்தை…
-
- 8 replies
- 2.1k views
-
-
அம்மா............... இப்பூமியில் நான் விழும் முன்னே, உன் பாசத்தை அறிந்தவன் நானே....அம்மா...! இவ்வுலகம் காணும் முன்னே, என்னை முதலில் அறிந்தவள் நீயே......அம்மா...! உன் கரு அறையின் இருளில் என்னை, நிம்மதியாகவும்,சீறாகாவும், உறங்க வைத்தவள்........நீ அல்லவா.......! அக் கருவில் நான் உட்கி கிடந்தபோதும், எந்த வசதியும் இல்லாத போதும், அக் கருவிலே பாதுகத்தவள் .......நீ அல்லவா......! உன் உயிர் துடிப்பின் தொப்புல் கோடியிலிருந்து...என்னை, உயிரோடு இப்பூமியில் ஈன்றவளே.......என் அன்னயே.....! உன் தூக்கம் துறந்து, என் உறக்கம் தந்தவளே...........என் தாயே......! உன் மடியில் உறங்கும் தருணம், அந்த வானத்தை கொண்டும், இப்பூமியை கொண்டும், அந்த நிலவை கொண்டும், அந்…
-
- 4 replies
- 1.9k views
-
-
அன்னையர் தினம்..! அகிலத்தின் அன்னையர்களுக்கு…, இது ஒரு தினம் ! என் தேசத்து அன்னையருக்கு.., இது ஒரு செய்தி! எம்மை ஈன்றவளை ஒரு நிமிடம், நினைத்துப் பார்க்கையில்…! இதயத்தின் ஆழத்தில் …, எங்கோ ஒரு மூலையில், இலேசாக வலிக்கின்றது! அப்பா என்னும் ஆண் சிங்கம், பிடரி சிலிர்க்கும் போதெல்லாம்.., அடங்கிப் போன அம்மா! பிரசவங்களின் போதெல்லாம்,, மரணத்தைத் தரிசித்து…, மீண்டு வருகின்ற அம்மா! ஆண் என்றாலும். பெண் என்றாலும், ஆண்டவன் தானே தருகின்றான் என்று, ஆறுதல் கொள்ளும் அம்மா! அவளுக்கென ஆஸ்பத்திரியும் இல்லை, ஆறுதல் சொல்லத் தாதிகள் இல்ல…
-
- 12 replies
- 5.8k views
-
-
குருதிப்பெருவழியே வந்த என்னின் பெருகும் உதிரத்திரை விலக்கி - எனக்கு உவந்த முதல் முத்தம் என் கூடல்களின் உச்சங்களை விட இனிது. என் சிரிப்பில்,முறைப்பில்,களிப்ப
-
- 7 replies
- 2.6k views
-
-
நன்றி முகநூல்.
-
- 22 replies
- 2.8k views
-
-
அம்மாவாணை எனக்கொரு ஆசை அம்மாணை எனக்கொரு ஆசை ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல... ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள.. எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர.! சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்குள்ள வந்ததால.! கடல் தண்ணி குண்டி நனைக்க கக்காவுக்கு இருந்த சுகம் "ஏசிக்" கக்கூசுக்குள்ள ஒப்பனுக்கும் இல்லை. கரவலை மீனில ஒரு சொதியும்.. கறுத்தப்பச்சையரிசி சோறும்... கறுமொறெண்டு அப்பளப்பொரியலும்... சுட்ட பத்தாம்பட்டி கருவாடும்... உந்த "சைனீஸ்" காரண்ட "பிறைட் றைஸ்" பிச்சை வாங்கும். சாதுவா கோப்பிறேசன் கள்ளைப்போட்டு தென்னை மர நிழலில சாரத்தை…
-
- 21 replies
- 2.8k views
-
-
அம்மாவாம் அம்மா....! பத்து மாதங்கள் பகலையே காட்டாமல் இருட்டு வயிற்றில் படுக்க விட்டாள் புஷ்டியான ஆகாரம் தானுண்டு -- தனக்கு இஷ்டமான காரம் விட்டாள்....! பிரசவத்தில் அவள் பட்ட வலியை பிறசமயத்தில் ஊரார் நன்றாய் உளறுகின்றார் கருப்பையால் புவியேற நான்கொண்ட துன்பம் இங்கெவர் உரைப்பார் காண்....! பத்தியமென்று பகாசுரன் போல தின்று அறுத்த மீனெல்லாம் அரைத்த குழம்பாக்கி விருப்பமுடன் விழுங்கினாள் தன் பிள்ளை அருந்த பால் சுரக்கவே....! கொழுக் மொழுக்கென்று முட்ட முட்ட அணைத்து பால்தந்தாள் முப்பத்தாறு மாதம் அடுத்தென்னை மடியில் இருத்தி -- தந்தாள் வேப்பெண்ணை பூசியே முலையை.....! …
-
- 12 replies
- 2.4k views
-
-
TODAY IS MY LOVELY MOTHER'S 95TH BIRTH DAY. MISSING YOU AMMA. மறக்க வில்லை அம்மா நான் வண்டி இன்னும் வரவில்லை. மாறவும் இல்லை அம்மா நான் வளமைபோல் பயணக் காசோடு வாசலில் வந்து காத்திரம்மா 1 அம்மா * போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வலியது அம்மா நம்மண். கொலை பாதகரின் …
-
- 3 replies
- 946 views
-
-
முதுமை இரவுகள் களைப்பின் முடிவில் அடைபட்ட பின்னாலும் காத்திருந்து கனவை துணைக்கழைத்து பதறி விழிக்க வைத்துப் பறந்து விடுகின்றது பாதி இரவுகள் திறந்த கூடைக்குள் மாலை வந்தடையும் கோழிகள் போல் இனி என்றுதான் வசப்படுமோ இந்த உறக்கம் உயிரினும் மேலான சுகதையல்லவா இந்த முதுமை எடுத்து கொள்கின்றது வேண்டியபடி செல்லும் உடல் கேளாத செவிகள் பாராத விழிகளும் உடன்வராத கால்களும் ஒலிகாணாத குரல்களும் ஒடுங்கி சுமையாகும் எனில் முதுமை சுமைதனே .
-
- 21 replies
- 3.7k views
-
-
அம்மா நீ அழுதுவிடும் - உனது கண்ணீர் துளியால் எனது ! கல்லறையும் உருகுது - அம்மா! அன்று நான் மண்ணில் புரண்டு' விளையாடும் காலம் - என்னை ! மடியில் துக்கி அழகு பார்ப்பாய் - அம்மா ! இன்று நான் மண்ணுக்குள்ளேயே மடிந்து கிடப்பதைக்கண்டு-உனது மனம்படும் வேதனை எனக்கு புரிகின்றது அம்மா ! விடுதலை வீரனின் வித்துக்கள் ஒருபோதும் வீண்போகாது - அம்மா ! உனது விழிநீரை துடைத்து வீடு செல்லம்மா - மன்னிக்கவும் - அகதி முகாமில் உள்ள உனது ! கூடாரதுக்கு செல்லம்மா ! எமது வீடுசெல்லும் - காலம் விரைவில் வரும்,அம்மா !!!!!!!!!!
-
- 11 replies
- 1.2k views
-
-
அம்மாவின் கனவு தம்பிகளின் தங்கையின் நம்பிக்கை சுதர்சனா ! நீயெப்படி ? நெருப்பில் எரிந்து கரித்துண்டமானாய்….? எப்போதோ செய்தியாய் சந்தேகமாய் கேள்விப்பட்டது…. அது மறந்து போன ஒருநாளில் தோழனொருவன் ஊடாய் தொடர்பில் வந்த உன் அம்மாவின் கண்ணீர் இன்னும் நனைத்தபடியிருக்கிறது நினைவுகளை…. அம்மாக்களுக்கு நிரந்தர துயராய் பிள்ளைகளின் இழப்புகள் எங்களுக்கென்ன எழுதப்படாத விதியா சுதர்சனா…? உன் நினைவாய் நீ போன இடம் வரப்போவதாய் புலம்புகிற அம்மாவின் கனவுகளில் ஏன் தீமூட்டினாய்…..? அக்காவின் ஞாபகங்களில் தொலை தூரங்கள் வரையாகத் தங்கள் கனவுகளை எறிகிற உன் உடன்பிறந்தோரின் உள்ளெரியும் தீயில் அவர்கள் உயிர்வாழ்வையே வெறுப்பதை….! எந்த வா…
-
- 1 reply
- 865 views
-
-
அம்மாவின் டிரங்குப் பெட்டி - கவிதை லீலாதர் மண்டலோயி இந்தியிலிருந்து மொழிபெயர்ப்பு : மணிபாரதி, ஓவியம்: செந்தில் மூன்றாம் நாளுக்குப் பின் பொறுமையிழந்த வீட்டுப் பெண்டுகள் ஒன்றுகூடித் திறந்துவிட்டனர் அம்மாவின் டிரங்குப் பெட்டியை சற்றே விவாதத்தின் பின் பகிர்ந்து கொள்ளப்பட்டன நகைகள் பெரிய பூசல் ஏதுமின்றி பெண்கள் மூன்றுபேர் ஆனதால் சேலைகளின் பகிர்தல் எளிதாக இருக்கவில்லை பூச்சி அரித்துவிட்ட கல்யாணப் புடவை மூலையில் கிடக்க உடைந்த மூக்குக் கண்ணாடி இன்னொரு பக்கம் இளமை தொட்டு வயோதிகம் வரையிலும் அம்மா கண்ட ஈரம் நிறைந்த காட்சிகள் அதில் பதிந்திருந்தன ஆனால், அவர்களுடைய கண்களுக்குத் தெரியவில்லை ஒரு மடிச்சீலை இருந்தது ர…
-
- 1 reply
- 733 views
-
-
அம்மாவுக்கு - வ,ஐ,ச,ஜெயபாலன் (1985) . அம்மா தங்கக் கனவுகளை இழந்த என் அம்மா. எனக்கென வரலாற்று நதியின் படுக்கையில் நீ கட்டிய அரண்மனை யாவும் நீருடன் போனது. . இன்று கோவில்கள் தோறும் கைகளைக் கூப்பி "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என இறைவனை வேண்டும் என்னுடைய அம்மா. .. யாழ்ப்பாணத்து செம்மண் தெருக்களில் வன்னிக் காட்டின் வயல்வெளிப் புறங்களில் கீழ் மாகாணத்து ஏரிக்கரைகளில் முகம் அழிந்த பாதி எரிந்த பிணங்களைப் புரட்டி தங்கள் தங்கள் பிள்ளையைத் தேடும் அன்னையர் நடுவில் . தமிழகத்தில் இன்றுநான் உயிருடன் இருப்பதை அறிந்து பாக்கியம் செய்தவள் என மனசு நிறையும் என்னுடைய அம்மா! . இப்படியுமொரு காலம் வந்ததே நம்முடைய மண்ணில் . இன்று உனக்கு நான் கதைகள் சொல்வேன் மரணம் பற்றிய கதை…
-
- 0 replies
- 917 views
-
-
தமிழக ........ இறவாத தலைவியே...... உம்மை எனக்கு பிடிக்கும்..... காரணம் நீங்கள் அம்மா.......!!! அரசியல் ................. எனக்கு தேவையில்லை...... அம்மாவாக நீங்கள் எனக்கு ....... தேவை .....................!!! அம்மா என்றால் உருகாத........ உயிரினம் உண்டோ............. அம்மாவுக்கா கண்ணீர் விடாத...... மனிதன் உண்டோ........? தமிழகத்தின் தலைவியாகி...... தமிழ் மக்களின் மனதில்....... தலைவியாகிய தாயே.........!!! உலகெங்கும் இருந்து கண்ணீர்...... விடும் தமிழ் உள்ளங்களில்...... என் கண்ணீரும் கலந்திருக்கும்....... அம்மா என்றால் கண்ணீர் விடாத...... உயிரினம் உண்டோ...........??? & கவிப்புயல் ,கவி நாட்டியரசர் இனியவன்
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்மாவைத் தேடி.. அம்மா...அம்மா...அம்மா -உன் பிள்ளை அழைக்கிறேனம்மா.... கண்ணீர்ச்சுூட்டில் கரைந்து இமை கனக்குதே அம்மா... மடி தேடும் நான் அன்பு மகனல்லவோ... தலைமுடி கோதும் விரலெங்கு தூரத்திலோ.. தாயே நான் செய்த தவறென்ன சொல்லு.. ஜீவனிரண்டை சுமந்த தாயே எந்தன் நெஞ்சும் ஈரம்தானே.. அன்பு என்பது ஆதாரம் தாயினன்போ பெரிதாகும்.. கண்கள் கருணைக்கடலல்லவோ.. எந்தன் உருவம் தந்ததுன்னுடல்லவோ... கருவறை ஒளியும் தாய்நெஞ்சு வலியும் மனதுக்குத்தானே தெரியும் அன்னையினன்பைப் பிரித்திட நினைத்தால் புூலோகம் தீயினில் எரியும்... இடிஇடியென பல இன்னல்கள் நேரிலும் தாயின்நிழலின் கீழ் மனம் தாங்கும்.. வேரின்றி மரமில்லை தாயின்றி வாழ்வில்லை நீய…
-
- 26 replies
- 8.2k views
-
-
விரிந்து கிடக்கும் பூக்களில் தேன் குடிக்கும் வண்டினைப்போல்... திறந்து வைத்த ஜன்னலோரத்தில் நான்!!! அதிசயம் ஆனால் உண்மை...! பக்கத்து வீட்டில்தான் பால்நிலா வசிக்கிறது!!! நிலவுக்கும் எனக்குமான சில அடி தூரங்களும் பலகோடி ஒளியாண்டு இடைவெளியாய்த் தெரிகிறதே!!! இத்தனை நாளாய்ப் பார்க்காமல் எத்தனை அமாவாசைகளை கடந்திருப்பேன்!!! ஏய் நிலவே...!!! பறந்து போகும் என் எண்ணங்களுக்கு சிறகுகளை இலவசமாய்... நீதான் கொடுத்தாயோ??? மொத்தமாய் மறந்துபோகிறேன் என்னை நானே..!!! வீசுகின்ற பருவக் காற்றை நீதான் அனுப்பி வைத்தாயோ??? மெதுவாய் என் பக்கம் வந்து உன் பருவத்தின் வாசனையை பக்குவமாய்ச் சொல்லுதடி!!! அங்கே நீ எட்டிப் பார்த்துச் சிரிக்கையிலே இங்கே கூடுவிட்டு நழுவுதடி எ…
-
- 16 replies
- 1.3k views
-
-
http://3.bp.blogspot.com/_JwDEbzlHuBY/SRGYiNwz-JI/AAAAAAAAFAc/ft_g-a6Ut8Y/s1600-h/image001-728569.jpg http://3.bp.blogspot.com/_JwDEbzlHuBY/SRGYiWfivZI/AAAAAAAAFAk/d0PWZLF74GI/s1600-h/image002-729153.jpg
-
- 2 replies
- 1.1k views
-
-
வரலாற்றில் எங்களை அவர்கள் அரக்கன்கள்களாக சித்திரித்தனர் எங்கள் வரைபடத்திலும் எங்கள் கதைகளிலும் இருளை நிரப்பி தீபாவளி என்றனர் எங்களை அடக்கி எங்களை ஒடுக்கி எங்கள் அசுரர்கள் என்றழைத்து தாங்கள் செய்தனர் மாபெரும் அநீயை எங்கள் இனத்தை அழிக்க மகிந்த நடத்திய மனிதாபிமானப் போரைப்போலவே வீரன் என்றும் தர்மத்தின் தலைவன் என்றும் மகிந்த மார்தட்டுவதைப் போலவே வல்லமைகளைப் பயன்படுத்தி அதிகாரங்களை பயன்படுத்தி மக்களை கொடுமைப்படுத்துபவர்கள் கொல்பவர்கள்தான் அரக்கர்களாம்... அப்படி என்றால் எம்மை வதம் செய்து எம்மை கொன்று எம் இரத்தம் குடித்து சதை தின்று பேய்க் கூத்தாடுபவர்கள்தான் அரக்கர்கள் அந்த அரக்கர்கள் இன்னும் அழியவில்லை எங்கள் மண்ணில் இன்னும் எந்த ஒளியுமில்லை http://gl…
-
- 0 replies
- 612 views
-
-
அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை தீபச்செல்வன் ____________________ அரசனின் நகரம் இரவு முழுவதும் சிரித்துக்கொண்டிருக்கிறது. நண்பனே, உரையாடலின் பின்னர் கடற்கரையில் வெகு நேரமாய் காத்திருந்தேன். அங்கிருந்து அகற்றப்பட்டு தங்கியிருந்த வாடி வீட்டிற்கு முன்னால் கடற்கரையுடன் முடிந்தவற்றை உனக்கு சொல்லியனுப்பிக்கொண்டிருக்கிறேன். நான் இனி என்ன செய்வது என்பதை உன்னால் கூற முடியுமா? கடற்கரை எதையோ செல்லிக்கொண்டிருக்கிறது. அதிகாரத்தின் பெருஞ்சிரிப்பு கடலை கடந்து எல்லாத் திசைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது. கடல் மகிழ்ச்சியடையவில்லை. அது எல்லாப் பக்கங்களுக்கும் அலையை தள்ளி எதையோ பேசிக்கொண்டிருந்தது. விண்ணப்பங்கள் நிரம்பிய எல்லாக் கடிதங்…
-
- 3 replies
- 1.6k views
-
-
அரசன் கொண்டு வந்த பழங்களுக்காக நாம் வழங்கிய பூக்கள் அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான். யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான். நான் இப்பொழுதும் கேட்கிறேன் அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும் குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று. என் அன்பு மிகுந்த சனங்களே! எங்கள் பிடரிகளால் குருதி கசிந்துகொண்டிருக்க இந்த மைதானம் இழந்தவற்றைக் கோரிக்கொண்டிருக்கிறதை நீங்கள்தான் அமைத்து வைத்திருக்கிறீர்கள். எங்கள் கோரிக்கைகளும் அரசனின் தந்திரம் நிரம்பிய வாக்குறுதிகளும் நஞ்சுக் கனிகளில் மறைந்திருக்கின்றன. துக்கம் உறைந்த நாட்களை எண்ணி கவலைப்படும் எங்கள் தந்தையே! ஒரு நாள் குழந்தைகள் புதருக்கிடைய…
-
- 1 reply
- 708 views
-
-
அரசாங்கம் கொலை செய்தால் ........ சட்டம் ஒழுங்காம்......... உன் அப்பன் கைபிடித்து -நீ நடந்த ஒழுங்கையில் ... உன்னை சுட்டு யாரும் விழுத்தினால் .... துணிந்து .... உன் முகத்தில் ...... தீ மூட்டினால் ......... உன் அக்கா தங்கை கூட அது பற்றி பேசகூடாதாம்-பேசினால் சொல்கிறார்......... அது-யுத்த நிறுத்த மீறலாம்! புத்தூரில் - குடும்பத்தோடு உன்னை யாரும் எரித்தாலும் தவறில்லையாம்...! புத்த விகாரை பக்கம் வழி தவறி ஒரு தமிழன் -நீ போனாலும் அது பயங்கரவாதமாம்! தப்பி வந்தவரெல்லாம் ........ பிழைத்தோம் என்று - நினைத்தால் செத்துபோகவிடுவோம்...... நாம் தவழ்ந்த நிலத்தை! எத்தனை சந்ததி - இப்பிடி கிடந்தாலும்....... இருப்பது போ…
-
- 7 replies
- 1.4k views
-
-