கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வேலைக்காய் ஓடாதே விடியலுக்கு நேரமாச்சு... கவிதை.... என் உறவுகளே நிறுத்துங்கள் நீங்கள் ஓடுவதை நிறுத்துங்கள்...... உலகெங்கும் மக்கள் வெள்ளம் இருந்தும் நீங்கள் கொஞ்சம் வேலைக்காய் ஓடுகிறீர்...! வேண்டுமென்றா ஓடுகிறீர்...? உன் பெற்றோர் வன்னியிலே இருந்துவிட்டால் ஓடுவீரா...? உன் உறவு உயிர்பிரிந்து உருக்குலைந்தால் ஓடுவீரா...! எழுபது விழுக்காடு எழுச்சிகொண்டு எழுந்திருக்க முப்பது விழுக்காடு முயற்சியற்று தூங்குகிறீர்...! உன் உறவின் பாதுகாப்பை உறுதிசெய்ததாய் நினைத்துவிட்டு பணம்சேர்க்கும் முயற்சியிலே தமிழில் பாசமற்று ஓடுகிறீர்..... ஆனால் ஒன்றுமட்டும் மறக்காதே நீர் எல்லோரும் தமிழென்று என்றைக்கு இருந்த…
-
- 2 replies
- 878 views
-
-
தனித்த பெருவெளியில் வீரிட்டு அழுகின்றது வேலைக்காரனின் குழந்தைகள் அள்ளி அணைக்க முற்பட்டு தோற்றுப் போகின்றது புதையுண்ட கைகள் எலும்புகளில் இருந்து சதைகள் கரைந்து நரம்புகள் கரைந்து இத்து மக்கிவிட்டது கண்காணிகளே வாருங்கள் என் சடலக் குழிமேல் முருங்கை மரத்தை நடுங்கள் செழித்து வளர நான் உரமாக இருக்கின்றேன் காய்களை தின்று முறுகித் திரியுங்கள் முடியாது யாராவது பயிரிட்டு காய்களை மட்டும் அனுப்புங்கள் பணம் தருகின்றோம் யாரும் இல்லை இங்கே பறவாயில்லை நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் உங்களால் எழுந்து வந்து வாங்கித் தர முடியுமா? வேலை செய்ய விருப்பந்தான் ஆனால் முடியாது எலும்புகளும் இத்துப்போகும் நிலமைக்கு வந்துவிட்டது. …
-
- 3 replies
- 1.1k views
-
-
நீர் பகைஅருகில் போகும்போது பாம்புகளும் நடுங்கும் பாதைதனை விடும் .. கம்பி பட்டு முள்வேலிகள் பூமாலையாய் தெரியும் .. எதிரியின் மண்ணரன் சிறு புற்றாய் இருக்கும் . கந்தகப்பொதி புத்தக்பைபோல இருக்கும் சுடுகோல் எழுதுகோலாய் இருக்கும் கைக்குண்டு அழி ரப்பர் ஆகமுன் நிங்கள் அதிகாலை மீண்டும் வந்திடுவீர் ஓய்விடம் ... மச்சான் நீ எனக்கு பூசிவிட்ட கரி போகவில்லை நாளை உனக்கு பூசுறன் கரி எண்ணை கலந்து கழுவினாலும் போகாது காய்ந்தாலும் போகாது பருவாயில்லை மச்சான் வெடிவிளுந்தா போயிடும் ... டேய் நான் பக்கத்தில் உள்ளவரை ஒரு ரவை .. உன்னை நெருங்கா வேங்கையா கொக்கா .. என்று நீ கட்டி என்னை அணைத்த கணம் நினைவில் ... கண்கள் கண்ணீரை தூவுதடா உன் மேல் என் பாசக்கார தோழா..
-
- 3 replies
- 764 views
-
-
வேஷம்...! -எஸ். ஹமீத் **சிங்கார வதனந்தான் சிலிர்ப்பூட்டும் சிரிப்புந்தான் சேலைக்குள் இருக்கிறது எயிட்சும் இறப்பும்...! **பளபளக்கும் பாம்புதான் வழுவழுக்கும் உடலும்தான்... பற்களில் இருக்கிறது விஷமும் சாவும்...! **அழகான ஏரிதான் அன்னப் பறவையும்தான்... அடியில் இருக்கிறது முதலையும் முடிவும்...! **அடர்ந்த காடுதான் அறுசுவைக் கனிகள்தான் கூடவே இருக்கிறது மிருகமும் மரணமும்...! **தகதகக்கும் நெருப்புத்தான் தங்கத்தின் வண்ணம்தான் இறங்கினால் இருக்கிறது சூடும் சுடலையும்...! **வெண்ணிற ஆடைதான் செந்நிற சால்வைதான் சேர்ந்தே இருக்கிறது குருதியும் கொலையும்...!
-
- 1 reply
- 699 views
-
-
வைகாசி 18.......? எங்கள் முகவரியை முற்றாக தொலைத்த நாள். அகத்தினிலே தீராத வலியை புதைத்த நாள். யேகத்தினிலே எல்லோரும் விழிசொரிய சொந்த நிலத்தை இழந்த நாள். வைகாசி காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல் கண்ணீர் விட்டநாள்.......
-
- 9 replies
- 1.6k views
-
-
முள்ளிவாய்க்காலும், கொல்லிஅலைக் காலரும் ... அள்ளிய உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல!!! கடவுளரும் கண்மூடிப் பார்த்திருக்க ... கடலன்னைகூட இரக்கமற்றுப் போனாளே!!! போற்றித் துதித்த மரியன்னை கூட ... வேடிக்கைதான் பார்த்திருந்தாராம்! கடவுளர் மேல் நம்பிக்கை போய்.... ஏழு வயசாச்சு எனக்கு! - ஆனாலும், மீண்டும் சோதிச்சு ... மூன்று வருசமாகுது! ! முள் முடி தரித்த யேசு கூட.... செல்லடிக்கு பயந்து ஒளிந்து போனாரோ?! - இல்லை, புத்தரிடம் சரணடைந்து.... முள்வேலிக்குள்.... சிலுவை சுமந்தாரோ?! வைக்கோற் போருக்குள் பாலகன் பிறந்து மகிழ்ந்திருக்க... நம் பாலகர்களை ...பனை வட்டுக்குள்ளும் முள்வேலிக்குள்ளும் அல்லோ, பொறுக்கியெடுத்து... பொங்கியழுது ...பின் பொறுத்துக்கொண்டோம்!!! …
-
- 16 replies
- 1.8k views
-
-
படித்தவனும் இங்கே தான். படியாத மக்களும் இங்கே தான். பணம் சேர்த்தவனும் இங்கே தான். பரம ஏழையும் இங்கே தான். குடித்தவனும் இங்கே தான். புகைத்தவனும் இங்கே தான். நடித்தவனும் இங்கே தான் நல்லாய் இருந்தவனும் இங்கே தான். கடவுள் காப்பான் என்று இருந்து கடைசியில் வருபவனும் இங்கே தான். இனி கடவுள் தான் காக்க வேண்டும் என்று சிலருக்கு செல்வதும் இங்கே தான். சமரசம் உலாவும் இடமும் இங்கே தான். மனித வாழ்வில் இயற்கையின் இரண்டு நிலை ஐனனம் மரணம் இங்கே தான்.
-
- 0 replies
- 745 views
-
-
புன்னகைச் செல்வனை இழந்து நாமழும் கண்ணீர் ஓலமல்லயிது நெஞ்சில் விடுதலைக் கனவுகளோடு இலட்சியச் சிரிப்புடன் வாழ்ந்தமகன் கல்லான மனங்களையும் கனியவைக்கும் பிள்ளைனிலா வெளிச்சம் அவன்சிரிப்பு நடக்கும் பேச்சு வார்த்தைக்குள் இருக்கும் மனிதனேயக் கூட்டம் இயற்கும் விந்தையைக்காடடும் மாயவன் கனிவான வாயிதழ் திறந்ததும் சிந்தும்னகைத் தயக்கம் தீர்க்கும் எழிதான கவிதைவரிப் புயல் எதிரியின் முகத்தில் மோதும் மெதுவான வார்த்தை மின்னல் நாழுமவன் செய்தியாய்த் தெறிக்கும் நாடெங்கும் வாழும் தமிழரின் வீட்டிலும் குதுகலப்பாய் விரிக்கும்! எங்கள் இனத்தின் வலம்புரிச்சங்கை சாய்த்து விட்டானே தறுக்கன்! பாய்கின்ற புலிகள் வெற்றிக்குப் பகுப்பாய்வு விளக்கம் அளிப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
வைரமுத்துவின் கவிதைகள் 1. சங்க காலம் ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு குருகு பறக்கும் தீம்புனல் நாடன் கற்றை நிலவு காயும் காட்டிடை என்கை பற்றி இலங்குவளை நெகிழ்த்து மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து வாட்கண் மயங்க உண்டதை மீண்டும் பசலை உண்ணும் பாராய் தோழி 2. காவிய காலம் பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார் மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும் கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில் கரும்பிருக்கும் என்பார் கவி. 3. சமய காலம் வெண்ணிலவால் பொங்குதியோ விரக்தியால் பொங்குதியோ பெண்ணொருத்தி நான்விடுக்கும் பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால் விண்ணளந்து பொங்குதியோ விளம்பாய் பாற்கடலே! …
-
- 2 replies
- 6k views
-
-
வைரமுத்துவின் உதவியாளர் ஆர். அபிலாஷ் - எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் போது நான் கவிதை வெறியனாக இருந்தேன். அக்கட்டத்தில் நான் கல்கி, அகிலன் போன்றோரின் தலையணை நாவல்கள் வாசித்திருந்தாலும் கவிதை மட்டுமே என்னை உன்மத்தம் கொள்ள செய்தது. துரதிஷ்டவசமாய் என் வீட்டில் அவ்வளவாய் கவிதை நூல்கள் இல்லை. ஊரில் நல்ல நூலகங்கள் இல்லை. ஒரே புத்தகக் கடை நாகர்கோயிலில் இருந்தது. என்னால் அவ்வளவு தூரம் பயணிக்க முடியாது. பள்ளி முடிந்த வந்த பின் கணிசமான நேரம் இருக்கும். தனியாக கையில் கிடைத்த ஏதாவது காகிதங்களை திரும்ப திரும்ப வாசித்தபடி இருப்பேன். என் பிறந்த நாள் ஒன்றுக்கு அக்கா எனக்கு பாரதியார் கவிதைகள் தொகுப்பு வாங்கித் தந்தார். அதை நான் விவிலியம் போல மனனம் செய்தே…
-
- 0 replies
- 2.6k views
-
-
இந்த கவிதை 2016ம் ஆண்டு வைரமுத்து முள்ளிவாய்க்கால் போய் வந்து கவிதை எழுதிய நேரம், அதற்கு சாட்டையடி பதிலாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. மீண்டும் வைரமுத்துவுக்கு ஆதரவாக நமது மக்கள் கெம்பி திரியும் இந்நாட்களில் இதை மீள பதிவது சாலப்பொருத்தமாய் இருக்கும். எழுதியவர் யாரெனெத்தெரியவில்லை முள்ளிவாய்க்கால் போனவரே முள்ளிவாய்க்கால் போனவரே தமிழ் முத்து வைரக் கவியரசே இன்னல் நிறைந்த எம்வாழ்வை இரு கண் கொண்டு கண்டீராம் குலுக்கக் கையே இல்லையென கல்மனம் கலங்கி நிண்டீராம் தெள்ளுத் தமிழில் இனிதாக - நீர் தெளித்த கவிதை கண்ணுற்றேன். உம்மைப் பார்த்து ஒருவார்த்தை இளம் ஈழக்கவி நான் கேட்கின்றேன் கண்ணை மறைத்து இதுகாற…
-
- 4 replies
- 718 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
ஸ்ரீலஸ்ரீ (இரானிய) கிருஷ்ண பகவானுக்கும், திரு (தமிழ்) குளவிக்கும் இடையில் ஒரு உரையாடல். (நான் என்பாட்டில் பறந்து திரிந்த போது, எனக்கு முன்னாள் தமிழ் கடை காலண்டராக பார்சி கிருஷ்ணர் தோன்றினான்) "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது" 'அப்ப உண்ட 6 வயசு மகளை ஒம்பது காடையர் சேர்ந்து கற்பழித்தால் நல்லது எண்டு சொல்லுவியே?' "எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது" 'அப்ப உண்ட பேர்ல(ஸ்ரீ) சிங்களவன் நாற்பது இலட்சம் திராவிடரை அழிப்பது நல்லா நடக்கிறது என்று சொல்லுறியே?' "எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்" 'கெட்டது இருந்தால் தானே நல்லதும் இருக்கும்? எப்படி நல்லது மட்டும் எப்பவும் நடக்கும் எண்டு சொல்லுவாய்?' "உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழ…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஹலோவின் ஞாபகங்கள்..... சிவப்பும் மஞ்சளுமாய் காய்ந்து சிதறிக் கிடக்கிறது மேபிள் மரம் சொரிந்த உதிர்வுகளும் சருகுகளும் மழை விட்ட பின்னும் இலை சொட்டும் நீராய் ஞாபகத் தாலாட்டில் சாரல் அடிக்கிறது நினைவுத் தூறல்கள் சாளரத்தில் வழிகிறது கம்பிகளாய் மழைத்துளிகள் இதழ்கள் சிலிர்க்கின்றன ஈரமான ரோஜாக்கள் பேய் அலங்காரத்துடன் பிரியமாய் வாசல்களில் விதவிதமாய் மழலைகள் புத்தகப் பைகளுக்கு பதில் இன்று சொக்கிலட் பை இனிப்புப் பொதியுடன் இல்லம் திரும்பி வரவேற்பறையில் கடை விரித்து வகை வகையாய் பிரித்து பத்திரப் படுத்திய தம்பியைப் பார்த்து பெருமூச்சு விட்டான் பல்கலைக் கழகம் படிக்கும் அண்ணன் இன்னுமொரு முறை இப்படி இனிப்பு வாங்கி மகிழ மீண்டும் வருமா பள்ளிக் காலம்?
-
- 2 replies
- 780 views
-
-
'அகழ்' இணைய இதழில் ஹால் சிரோவிட்ஸின் கவிதைகள் சிலவற்றை க.மோகனரங்கன் மொழியாக்கம் செய்துள்ளார். நாங்கள் சாதாரணமாக சொல்லிக் கொள்ளும் சில பகிடிகளை கவிதையாக எழுதியது போன்றுள்ளது. இலகுவான வாசிப்புக்கு ஏற்ற இந்தக் கவிதைகள் வாசிக்கும் போது புன்னகைக்க வைக்கின்றன. அங்கிருந்த இரண்டு கவிதைகளை இங்கு இணைத்துள்ளேன். மிகுதிக்கான இணைய இணைப்பு அடியில் உள்ளது. ************************************************************************* 1. புகழ் விளையாட்டு ------------------- உங்களுக்கு பிரபலமாக இருக்க வேண்டும் என்கிற தேவை உள்ளது என் சிகிச்சையாளர் கூறினார், ஆனால் முதலில் உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன் எல்லா பிரபலமான நபர்களையும் நீங்கள் பார்த…
-
-
- 3 replies
- 682 views
-
-
ஹெர்மன் ஹஸ்ஸி- கவிதை தமிழில் மொழிபெயர்ப்பு : பேராசிரியர் மு. விஜயகுமார் ஜெர்மன் எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர். (1970) தலைப்பு: நிலைகள் நிலைகள் ஒவ்வொரு பூக்களும் தோன்றி மறைதல் போல இளமையும் மறைகிறது வாழ்வின் நிலைகளில். ஒவ்வொரு ஒழுக்கத்திலும் உண்மையை அறிகிறோம் மலரின் பருவங்கள் நிலையானதல்ல ஏனெனில் வாழ்க்கை ஒவ்வொரு வயதிலும் உள்ளது வருந்தாமல் தைரியமாக எதிர்கொள்ளுங்கள் பழைய உறவுகள் மறக்காமல் புதிய ஒளியைக் கண்டுபிடிங்கள் எல்லாத் தொடக்கமும் ஒரு மாயசக்தியாக வழிநடத்துகிறது. அதுவே நம்மைப் பாதுகாத்து உதவுகிறது அமைதியாக நெடுந்தூரப் பயணத்தைத் தொடங்குங்கள். வீட்டு நினைவுகள் நம்மைத் தடுக்கிற…
-
- 0 replies
- 323 views
-
-
ஹைகூக்கள் பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள் சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது சர்வதேசம் எட்டி எட்டி பறிக்கின்றாள் கனியை எட்டவில்லை ஏங்கியது கன்னிக்காய் மனது. கொடுத்துக்கொண்டிருக்கிறேன் தீரவில்லை திகட்டவில்லை முத்தங்கள். வைக்கோல் கன்று காட்டி ஏமாற்றிய பால்க்காரனுக்கு நிஜக் குழந்தை காட்டப்பட்டது சிக்னல் பிச்சைக்காரி. பிடியின் வழி வளைந்து வளர்கின்றன பானைகளும் குழந்தைகளும். பிடியின் வழி வளைந்து வளர்கின்றன பானைகளும் குழந்தைகளும். கிளறுகின்றது கோழி குப்பையோடு குடலையும் - பசி மனிதாபிமானம் அற்றவர்களெனப்பட்டவர்களுக்கு(???!!!) மனிதாபிமானம் உள்ளவர்களெனப்பட்டவர்கள்(???!!!) வழங்குவது மரணம்!!!. இடைவிடாத அடை மழை சுக…
-
- 2 replies
- 830 views
-
-
[size=1] சும்மா இருந்தாலும்[/size][size=1] இருக்க முடிவதில்லை[/size][size=1] இணையம்.[/size]
-
- 3 replies
- 529 views
-
-
ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே அந்தப் பொருளுக்கு ஏகக் கிராக்கி தான்.. ஹைக்கூ கவிதைக்கு மட்டும் இருக்காதா என்ன ஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய மண்ணில் தான். 1. ஹைக்கூவின் தோற்றம் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ், மற்றொன்று ப்ரெஞ்ச். தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள். ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலை நகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். பிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை) இக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த அடிகள் 5,7 என்ற அச…
-
- 10 replies
- 8.4k views
-
-
சிலமாதங்களுக்கு முன்னர் எழுதிய ஹைக்கூ பதிவு காட்டில் நிலாவான கதை தனிக்கதை! ஆனாலும் ஆசை யாரை விட்டது. கவிதை வடிவங்களில் ஓரளவுக்கேனும் சுமாராக எழுதுவேன் என்று நம்புவது இந்த ஹைக்கூவை தான். கேதாவின் National Geographic website இல் வந்த படத்தை பார்த்தவுடன் இதற்கு பொருத்தமான கவிதை ஒன்று எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த படத்தின் மூடுக்கு வெண்பாவோ, ஐந்து வரி புதுக்கவிதையோ குழப்பிவிடும்! ஹைக்கூ தான் சரிவரும் என்று தோன்றியது. ஹைக்கூ. ஜப்பானிய கவிதை வடிவம். அதற்கென்று ஒரு வரையறை இருக்கிறது. The essence of haiku is "cutting". This is often represented by the juxtaposition of two images or ideas and a cutting word between them, a kind of verbal punctuation mark which signals …
-
- 348 replies
- 30.3k views
-
-
காலைக் கடிக்கமுன் கையைபலமாகக்கடித்தது புதுச்செருப்பு @ நித்தம் போனபோதும் முகம் சுழிக்கவில்லை மணிமுள் @ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.3k views
-
-
01, ஒரே பத்திரிகையில் பிறந்த நாள் வாழ்த்தும் நினைவஞ்சலியும் வாழ்க்கை 02, வீடு எரிகிறது ஒளி கிடைக்கிறதாம் வடக்கில் வசந்தம் 03, நெற்றிக் குங்குமப்பொட்டுக்கள் அழிக்கப்படுகின்றன கிழக்கில் உதயம் 04, கள்ளர் நாடாளுமன்றில் நல்லவர் தெருவில் வீடும் நாயும் 05, தேர்தலில் ராஜ பக்சர்களின் நாகாஸ்திரம் கள்ள வாக்கு 06, புளியமரத்தடி முனியை கண்டதில்லை,பயமுமில்லை கண்டதும் பயமும் வெள்ளை வானுக்குத்தான் 07, நிலவு உறங்கும் இரவு ,நாய்கள் ஊளையிடும், கோழிகள் கூவாது ஏனெனில் களவாடப்பட்டிருக்கும் இந்திய அமைதிப்படைக்காலம் 08, என்னைப்போல்எப்படி நீ நடித்தாலும் என் உணர்வை உணராய் விம்பம் 09, அம்பு துப்பாக்கிரவை ஆயிற்று சேலையும் அப்படித்தான் உலக …
-
- 8 replies
- 21k views
-
-
-
ஐரோப்பியத் தடை தூக்கம் கலைக்க கூவிய சேவல் தடை ஹைக்கூ ஒன்று முயன்றிருக்கிறேன். கன்னி முயற்சியென்பதால் கட்டாயம் உங்கள் விமர்சனங்கள் தேவை. (இல்லாட்டிக் கோவம் போட்டிடுவன்) அன்புடன் மணிவாசகன்
-
- 10 replies
- 3.2k views
-
-
ஹைக்கூ இதுவென நம்பி நான் எப்போதோ எழுதிய சில ஹைக்கூக்கள் (?!) -------------------------------------------------------------------------------------------- செருப்பு சகிப்புத் தன்மைக்கு சரியான சாட்சி ----------------------------- சீச்... சீ... வெட்கப்பட்டது குடை! உள்ளே காதலர்கள் ------------------------------- தீக்குச்சி தலைக்கவசம் இருந்தும் தான் தப்ப வழியில்லை! ------------------------------- கறுப்பு மேகத்தை கழுவ இயற்கைச் சேவகன் அள்ளித் தெளிக்கும் நீர் மழை! --------------------------------------- நன்றி -------------------- http://kaviyarankam.blogspot.com/
-
- 8 replies
- 9k views
-