கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அம்மாவாணை எனக்கொரு ஆசை அம்மாணை எனக்கொரு ஆசை ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல... ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள.. எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர.! சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்குள்ள வந்ததால.! கடல் தண்ணி குண்டி நனைக்க கக்காவுக்கு இருந்த சுகம் "ஏசிக்" கக்கூசுக்குள்ள ஒப்பனுக்கும் இல்லை. கரவலை மீனில ஒரு சொதியும்.. கறுத்தப்பச்சையரிசி சோறும்... கறுமொறெண்டு அப்பளப்பொரியலும்... சுட்ட பத்தாம்பட்டி கருவாடும்... உந்த "சைனீஸ்" காரண்ட "பிறைட் றைஸ்" பிச்சை வாங்கும். சாதுவா கோப்பிறேசன் கள்ளைப்போட்டு தென்னை மர நிழலில சாரத்தை…
-
- 21 replies
- 2.8k views
-
-
வான் பரணி -வ.ஐ.ச.ஜெயபாலன் மழையே வா என்கிறது என் தாய் மண். வருணா வருணா என்ற பாடல்களுடன். ஓடைகள் வற்றி வரால் மீன்கள் மூக்குளிக்கும்போது எதிரி தாங்கிகளில் நுழைந்துவிட்டான். ஜாதிய அரக்கனுக்கெதிராக நானும் தோழர்களும் எழுந்த ஊர்களில் காவல் தெய்வங்களாய் எம் பிள்ளைகள், நாம் தரத் தவறிய இரத்ததுக்கு அவர்களிடம் கந்து வட்டியும் கேட்கிறது வரலாறு, கூந்தலுட் பேனாய் யானைகள் ஊருமென் வன்னிக் காட்டு வழிகளில் தூங்கும் மலைப்பாம்புகளாய் கிடக்கும் கோடை ஆறுகள் மீது அதிருது வானம், தட்டி எழுப்புது மின்னல். இனி பறங்கி, பாலி ஆறுகள்கூட விழித்திடும். போர்கள் வென்ற கும்பகர்ணனாய் வாகைகள் பூத்த கனகராயன் ஆறு சோம்பல் முறிப்பதை போருக்கெழுமென் பிள்ளைகள…
-
- 11 replies
- 2.8k views
-
-
காதல் கவிதைகள் செய்யத் தேவையான பொருட்கள்: ஒன்றிரண்டு இதயம் மூன்று நான்கு வேதனை ஒரு சிட்டிகை விழிகள் ஒரு தேக்கரண்டி அழகு ஒரு தேக்கரண்டி உயிர் உளறல் - தேவைக்கதிகமான அளவு இது இருந்தால் போதும். சுவையான காதல் கவிதைகள் தயார் எனது பெப்ரவரி 14 - காதலர் தின காதல் கவிதைகள் எழுத எனக்கு 5 நிமிடங்கள் கூட ஆகவில்லை. அவ்வளவு எளிது இந்தக் காதல் கவிதைக்ள். நீங்களும் ஒருமுறை முயற்சி செஞ்சு பாருங்க..
-
- 16 replies
- 2.8k views
-
-
மாவீரர்கள் காவியங்கள் பல படைத்திட வங்கக் கடல்தனிலே வேங்கைகளாகப் புறப்பட்ட மாசற்ற மறவர்கள் அண்ணன் வழி சென்றே அவன் ஆணையை நிறைவேற்றியவர்கள் தாய் தந்தை மறந்தார்கள் தாய் நாட்டை நேசித்தார்கள் தாய் நாட்டை தம் தாயாக கருதியவர்கள் தமிழ் மக்களையும் தாய் மண்ணையும் காத்திடவே கரும் புலியாய்! கடற் புலியாய்! பல்வேறு வடிவங்களில் புயலாகப் புறப்பட்டு - இன்று எல்லோர் மனதிலும் வாழுகின்ற உன்னதப் புருசர்கள் மாவீரர்கள்
-
- 14 replies
- 2.8k views
-
-
மாவீரம் குறள்: 1 மண்ணின் கண் மகிமை கொண்டோர் மாட்சிமை மேலுயிர் துறந்தவத்தார். (தொடர்ந்து நீங்களும் ஆக்குங்கள். ஆளுக்கு ஓர் குறள் மட்டுமே ஆக்கலாம்.) இக்குறள் மாவீரர்களின் வீரம்.. ஈகை.. கொடை.. தன்னலமற்ற பண்பு.. இலட்சிய வேட்கை.. வாழ்க்கை.. சாதனைகள்.. இனப் பற்று.. மண் பற்று.. அவர் தம் மக்கள் பற்று.. சக போராளிகள் மீதான பற்று.. மக்கள்.. மாவீரர் மீது கொண்ட மகிமை.. என்ற கருத்துக்கள் பட அமைவது நன்று. இந்த தன்னமலற்ற தியாகிகள் மீதான அவதூறுகள் வரவேற்கப்பட மாட்டாது. கள நிர்வாகம் அப்படியான ஆக்கல்களை அகற்றி உதவுதல் வேண்டும். திருத்தம்: ஆளுக்கு ஒரு குறள் மட்டுமே ஆக்கலாம் என்பது கீழ் வருமாறு தளர்வு செய்யப்பட்டுள்ளது.
-
- 42 replies
- 2.8k views
-
-
யாழ் உறவுகளே யாரும் இல்லாத் தனியனென்று யாரோ சொன்ன வார்த்தையினால் சோகம் கொண்ட எந்தனுக்குச் சுகமாய் வந்த யாழ்தளமே வாழப் பிடிப்பும் இல்லாமல் வெழும் வழியும் தெரியாமல் சோம்பிப் பொன எந்தனையும் சுறுசுறுப் பாக்கிய உறவுகளே அனைவருக்கும் வணக்கம் உங்கள் எல்லாரோடையும் கொஞ்சம் மனம்விட்டுக் கதைக்கோணும் போலக் கிடக்குது. என்ன சொல்ல வந்தனான் எண்டா நான் இந்த யாழ் குடும்பத்துக்குள்ளை சேந்து ஒரு கிழமைதான். ஆனா அதுக்கள்ளை எனக்குள்ளை நிறைய மாற்றங்கள். சத்தியமாச் சொல்லுறன் ஏதோ தனிமைப் பட்ட மாதிரி யாருமில்லாத மாதிரி ஒரு உசாரில்லாமை இருக்கேக்கைதான் தற்செயலா இந்தத் தளத்துக்குள்ளை புூந்தனான். ஆனா இப்ப தான் தெரியுது எனக்கு எத்தினை பேர் இருக்கிறியள் எண்டு.. என்ரை கதை கவி…
-
- 17 replies
- 2.8k views
-
-
1987 அதுவும் ஒரு மே மாதத்தின் திகதி தெரிந்திராத, அன்றைய நாளின் ஒரு காலைப்பொழுது....! ஏன் வந்தது என தெரியாத ஐந்தே வயசு, எனக்கு... எதுவும் புரியாத பிஞ்சு மனசு! ஓடிக்கொண்டிருந்த அம்மாவின் கைகளுக்குள், பதகளிப்போடு என் பயணத்தினை ஆரம்பித்தேன்! அப்பாவின் கைகளுக்குள் என் தங்கை, என் அழகான கூடு முதன்முதலாய்க் கலைகின்றது!!! மந்திகை ஆஸ்பத்திரிக்கான ஊரோடு ஒத்த அவர்களின் பயணத்தில்... ஐந்து வயதிலேயே, "அகதி" என்று பெயரெடுத்தேன்!!! - எங்கே போகின்றோம்? என்று, இன்றுவரை தெரியாத அதே கேள்விகளும் என்னோடு கூடவே பயணிக்கின்றன!!!! பாதி வழி தாண்டும்போது... யாரோ சொன்ன வார்த்தைகள்... எனக்குப் புதிதாய்... புரியாத வார்த்தைகளாய்.... "ஒபரேஷன் லிபரேஷன்" என காதில் …
-
- 30 replies
- 2.8k views
-
-
பத்து வயதில் பார்த்தேன் நண்பனின் பார்வை என்றால் தந்தையிடம்......... பதினாறில் பார்த்தேன் காதல் பார்வை என்றால் சிநேகிதியிடம்........ நாற்பதில் பார்த்தேன் காம பார்வை என்றால் கணவனிடம்........ அறுவதில் பார்த்தேன் கிழவனுக்கு பார்வை தெரியாது என்றால் பேரனிடம்.... அதே கண்கள் பார்வை வேறு அர்த்தம் வேறு பருவம் வேறு........
-
- 16 replies
- 2.8k views
-
-
பார்க்கும் கண்களே துடிக்கும் காட்சி பாலனின் மேனியில் பலதுளைகள் கொடுங்கோற் சிங்களம் செய்த கொடுமை கொலைக்களத்தின் அதி உச்சக்கட்டம் அவன் விழிகளில் தெரிகின்றது அவன் ஒரு வீரன் மகன் என்று அவன் விழிகளைக் கண்டு மிரண்டு அவன் மேனியில் துளைத்ததா குண்டு சிங்களம் செய்த கொலை வேள்வியில் எங்கள் குலவிளக்கை எரித்ததா ஈனம் இல்லாச் சிங்களம் ஆடிய கொலைவெறியில் தங்கள் இச்சையைத் தீர்த்ததா இச்சிறு வேங்கையின் பொற்திருவுருவில் பாரெங்கும் பரந்திருக்கும் நாமெல்லாம் கோர்த்திடுவோம் கரங்களைக் கொடுங் கோலனை ஒளித்திடக் கூடிடுவோம் ஒன்றாய் கொலைக்களத்தின் உச்சத்தைப் பரப்பிடுவோம் உலகமெங்கும் எடுத்த…
-
- 33 replies
- 2.8k views
-
-
காலம் எழுதியின் கவனப்பிழை தேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின் மூச்சு ஓசோன் ஓட்டையாக… காலம் எழுதியின் கவனப்பிழை கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்… தரித்த குளவியின் பாதி உடல் சீழ்கட்டிப் போய் சிகிலமாக… பிணவாடை, கொள்ளை கோமாரி ஐயோ…. பச்சை உடம்புக்காரி படுக்கையிலே…. காலம் எழுதியை அழைத்து வருவீர். வனையும் சூட்சுமத்தை வசீகரித்து கால் செருப்பாக்கி கொப்பளிக்கும் கானல் வெளியில் கிடந்துழலும் மனிதர்களின் வேதனையை உணர்த்த வேண்டும். பாழும் உலகிடையே வாழக் கேட்டு வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று. த்தூ….. மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து மணிக்கணக்காப் பேசுக. எங…
-
- 18 replies
- 2.8k views
-
-
Shine தமிழ் இளைஞர்களின் படைப்புகள்... கேட்டுப்பாருங்கள்.... பாடல்கள்(ஒலி வடிவம்) Right click and select "Save as.." to download http://www.roughrhythm.com/filestore/Shine...heendoftime.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...nwillwerise.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...meflywithme.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...swillchange.mp3 பாடல்(ஒளி வடிவம்) http://www.roughrhythm.com/Artister/Shine/Video/ மேலதிக தகவல் http://www.roughrhythm.com/Artister/Shine/ நன்றி சாணக்கியன்
-
- 12 replies
- 2.8k views
-
-
இன்று கிருபன் அண்ணாவின் புளொக்கை வாசித்தேன்...அதில் உள்ள நாட்கள் எனும் கவிதை எனது நினைவுகளையும் தட்டிவிட்டது...போருக்குள் ஊரில் வாழ்ந்த தொலைபேசி இல்லாத நாட்களில் அப்பாவின் கடிதங்களுக்காக காத்திருந்த நாட்கள் கண்களில் நிழல் ஆடின..அந்தக் காலங்களில் அதற்க்கு சற்றும் குறையாத பரிதவிப்புடன் ஊரில் உள்ள உறவுகளின் கடிதங்களுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் தனிமையில் உறவுகள் எவ்வளவு தவிப்புடன் இருந்திருப்பார்கள் என்பதை கிருபன் அண்ணாவின் இந்தக் கவிதை நெஞ்சைத்தொடும் வகையில் பேசுகிறது..... நாட்கள்.... கிருபன் குளிர் காலங்களிலும் கடும் கோடைகளிலும் உதிர்கின்றன நாட்கள். பிரசவிக்கும் காலைகளில் தூக்கக் கலக்கத்துடன் விழிகள் எதிர்பார்க்கும் தபாற்காரனை. கதவிடுக்…
-
- 28 replies
- 2.7k views
-
-
இரத்தக்களரியில் அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள் ஈழப் போர் எழுமென முரசறைகின்றன காசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்கு ஈழமண் எரிய எரிய தீப் பிளம்பாய் தீட்டிய வரிகள் நாற்பதாயிரம் இளையதலைமுறையை கருக்கிப்போட்டது கையறு நிலையில் கடல் நீர் ஏரியில் குண்டு பட்டுச் சிதைந்து மிச்சமும் வீழ்ந்ததே காசியண்ண நீங்கள் குந்தியிருக்கும் தேசத்து கோமகன்கள் தடாகத்தில் எங்கள் குருதிதிதான் ஈழப்போர் வெடிக்குமென தொட்டெழுதுக எஞ்சிய தலைமுறையின் மூளைக்குள் ஏன் வீழ்ந்தோமென சிந்திக்காதிருக்க காசியண்ணைக்குப் போர் வேண்டும் ஏய்த்துப் பிழைத்த அரசியல் கண்ணீரில் தள்ளிய சதிமறைக்கப் காசியண்ணைக்குப் போர் வேண்டும் ஆம் போரிடுவர் எம் தேசமக்களெலாம் சேர்ந்தெழும் உரிமைக்காய்…
-
- 17 replies
- 2.7k views
-
-
மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு ஆளரவமற்ற வனாந்தரத்துப் பெருமுகத்தில் அலைகிறது ஆன்மா. மீள் பொழுதின் வரவில் - உன் நினைவுகளைத் தெளித்துவிட்டுக் கனவாகிப் போனாய்.... நீயெழுதிய கடிதங்கள் மஞ்சள் கடதாசிப்பூக்கள் மறக்காமல் அனுப்பும் பிறந்தநாள் புத்தாண்டு வாழ்த்து மடல்கள் - உன் நினைவாய்க் கிடைத்தவைகள் எல்லாம் கண் முன்னால் உன்னை நினைவுபடுத்திபடி.... 'போய் வருகிறோம்' போர் நிறுத்த காலத்துச் சந்திப்பு முடிந்து பிரியும் நேரம் 'சந்திப்போம்' என்றாய் இன்று வந்த செய்தியுன்னை இழந்தோமென்கிறது. மாமாவின் மரணம் கேட்ட உன் மருமக்கள் சொல்கிறார்கள். 'கடிதம் மாமா' இனியெங்களுக்கு இல்லை... இதயம் நொருங்கிச் சி…
-
- 9 replies
- 2.7k views
- 1 follower
-
-
காமம் அரவணைத்துக் கொள்! அன்பே அரவணைத்துக் கொள்! புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன் அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன் ஆசைப்படு! அதிகாரத்தோடு கேட்டுக்கொள் மோகப் படு! முடிந்தவரை முத்தமிட்டுக்கொள் உன் கரம் மட்டும் அறிந்த என் நெஞ்சத்தை உன் மார்பு கொண்டு பழுது பார் விதைத்துக் கொள்! விளைய விடு! மேய்ந்து கொள்! மீதம் வைக்கதே! அங்கம் அனைத்தும் அடக்கி விடு! ஆண்மை கொள்! பெண்ணே ஆண்மை கொள் என் ஆயுள் முழுவதும் உன் அங்கம் மட்டும் பணி செய்ய! மோகப் புரட்சி செய்! நீயே தொடங்கு! நீயே முடி! சேர்த்துக் கொள்! செப்பனிடு! படர்ந்து கொள்! பறக்க விடு! என் விரல் கொண்டு உன் உடல் உழுது கொள்! என் உதட்டு வரிகளி…
-
- 3 replies
- 2.7k views
-
-
மருதப் பாட்டு வ.ஐ.ச.ஜெயபாலன் கருகும் நீரில் தலைகீழாக மருத மரங்களும் என் நினைவுகளும் நெளிய சிற்றாறு நடக்கிறது. பறக்கிற குறு மணலோடு பார்வையில் தென்படும் இராணுவத் தடங்கள் கண்ணை உறுத்தியபோதும் போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில் பாலியாற்றம் கரையில் இருந்தேன். இருந்தும் என்ன நம் வீர விந்துகள் இன்னும் சிறையில் என்பது நெருடும். தென்றலிலோ வரால் மீன்களின் இராப்போசனத்திலோ நாணல்கள் அசைகின்றன. வண்டின் பாடலில் மயங்கி மொட்டுகள் துகில் அவிழ்க்கிற மாலை. அழிக்கப்பட்ட காடுகளும் காடு மண்டிய வயல்களுமானதே நீர்ப் பறவைகளை இழந்த என் மருத வழி. எனினும் நீர் ஓடி நெல்தழைத்து நீர்ப்பறவை வான் நிறைய ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய் முட்டையாய் காத்திருக்கும…
-
- 30 replies
- 2.7k views
-
-
கண்ணீரே கதியென்றான இனமொன்று... தன் தண்ணீருக்கு போராடும் நிலைமை பாரேன்! செந்நீர் சிந்திய இனமன்று... அதே செந்நீரில் மூழ்கிப் போனது பாரேன்! மலையாள மாந்திரீகம் டெல்லிவரையென்ன... உன்னையும் ஆட்டிப்படைக்கும் பாரேன்! தமிழா!!!!!!!!!!!! கண்ணீரே கதியென்று கிடவாதே! செந்நீரில் குளித்தேனும்... செம்மொழியர் நாமென......... செயலில் காட்டுவோம்!! நீ எரியாதே... எரி! அடி வாங்காதே... அடி!! பணியாதே...... மிதி!!! மனிதச் சங்கிலிகளை... நாடகமேடைகளில் போடாதே! பட்டினிப் போரை மணிக்கணக்கில்..... நடிக்காதே!! நீ உனக்காகப் போராடு! இனிமேல் இல்லை....... எம் பொறுமைக்கும் எல்லை!! பொறுத்தது போதும்........! பொங்கியெழு தமிழா!! தமிழன் எங்கு அடிபட்…
-
- 2 replies
- 2.7k views
-
-
காலைச் சூரியனை கையெடுத்துக் கும்பிட்டு.. மாலைச் சந்திரனை வீழ்ந்து வணங்கி.. சுழன்றடிக்கும் சூறாவளிக்கு பயந்து நடுங்கி... மின்னலும் இடியும் மரணத்தின் தூதென்று ஓடி ஒளித்து.. தீயதும் சுடுவது முன்வினைப் பயனென்றும் பூமியது அதிர்ந்து பிளப்பது பாவிகள் அழிவென்றும் இயற்கைக்குள் உள்ளதை விளங்காமல் உளறிய கணங்களில்.. எதிர்வினை சொல்லி பகுத்தறிவென்று வாய் வீரம் பேசி வீண் பொழுது கழித்திடாமல் ஆயிரம் கதை கட்டி அலைந்து கொண்டிராமல்.. மூளையைக் கசக்கி விண்கலம் கட்டி விண்ணுக்கு அனுப்பி வீர சாதனை படைத்த திருநாள் இன்று..! "புட்னிக்" எனும் மனிதப்பட்சி ரஷ்சிய மண்ணிருந்து விண்ணேகி அரை நூற்றாண்டும் கடந்தாயிற்று. மனித வரலாற்றின் புது …
-
- 16 replies
- 2.7k views
-
-
கலைஞரே காலைப்பிடித்து கெஞ்சுகிறேன் கவிதையொன்று எழுதுங்கள் கறுப்புக்கண்ணடிடியுடன் கரகரத்த குரலால் கலைஞர் தொலைக்காட்சியில் கட்டுமரமாவேன் என்றதைப்போல கவிதையொன்று எழுதுங்கள் முத்துக்குளிக்கும் மண்ணிலிருந்து முத்துக்குமாரெனும் முத்தான உடன்பிறப்பொன்று முடியாட்சி முற்றத்தில் முடித்துக்கொண்ட மூச்சுக்காற்றில் மு. க. குடும்பத்திற்கு மூலதனம் தேடாமல் முடிந்தால் எழுதுங்கள்
-
- 15 replies
- 2.7k views
-
-
"""" தூக்கத்தை கலையுங்கள் புலிகளே..."""" உறங்கி கிடந்த புலிகளே நீங்கள் உறுமி இன்று எழுகவே.. கயவன் வந்து ஆடுறான்- எங்கள் தலையில் குண்டை போடுறான் களத்தில் உயிரை பறிக்கிறான் கதறி தமிழன் அழுகின்றான்... கண்ணீர் ஆறாய் ஓடுதே கடலெனவே பாயுதே குருதியிலே புலவுகளே குளியல் தினம் செய்யுதே... எங்கள் மனம் பதைக்கிறதே ஏக்கத்திலே தவிக்கிறதே சொந்த புமி அழிகையிலே எங்கள் வேங்கை தூங்குவதோ....??? காத்திருந்த போதும் இனி களத்தில் வித்தை காட்டுங்களேன் அன்னை மண்ணில் வாழும் - அந்த அந்நியரை கலையுங்களேன்..... தூங்கியது போதும் இனி - உங்கள் தூக்கங்களை கலையுங்களேன் துட்டமுனு படைவிரட்டி - எங்கள் ஈழமதை காணுங்களேன்....!!![/color] …
-
- 16 replies
- 2.7k views
-
-
எரி நட்சத்திரம் - கருணாநிதியின் பிறந்த நாள் கவிதை - இளங்கவி கலைஞரே வாழ்க வாழ்க தமிழின் காவியத்தலைவனே வாழ்க எண்பத்தாறு வருடங்களை தமிழருக்காய் அர்ப்பணித்த தமிழ் நாட்டுச் சிங்கமாம் நீ தமிழினத்தின் தங்கமாம்...? விடிவெள்ளியாய் நினைத்து விளக்கின்றிக் காத்திருந்தோம் எரி நட்சத்திரமாய் விழுந்து ஈழத்தின் குலையறுத்தாய் குடும்பப் பாசத்துக்காய் உன் குலத்துக்கே நெருப்பு வைத்தாய் எங்கள் இனத்துக்கோர் சாபக்கேடாய் இன்றுவரை உயிர் வாழ்வாய்.... ஈழத்தில் நிலத்தினிலே குரும்பையெல்லாம் கருகிவிழ வெற்றிக்கொடியோடு டெல்லி சென்றாய் நீயோ வேண்டுமந்த பதவியென்றாய் எதிரியின் தீயிலே நாமெரிய நீ வேண்டிய பதவிபெற்றாய் வேண்டியதை பெற்றதனால் பிறந்த நாள…
-
- 12 replies
- 2.7k views
-
-
சொல்வாயா...!!! உனை நான் பார்த்தேன் எனையே உடன் மறந்தேன் காளை உனை நினைத்து காதல் கொண்டு துடித்து நீ செல்லும் வழி மீது நிலா இவள் விழி வைத்து துடிதுடிக்கும் இதயத்தோடும் படபடக்கும் விழிகளோடும் கன்னி நான் காதலோடு உனை எண்ணிக் காத்திருக்கின்றேன் திருமகனே என் மனமகனே ஒருமுறையேனும் உன் உதட்டைக் குவித்து நெத்தியில் அன்பாக முத்தம் ஒன்று இட்டு சத்தமாக சொல் கன்னி இவளே உன் காதலி என்று...! சொல்வாயானால், வெண்ணிலா சிரிக்கும் விண்மீன் ஒளிரும் வானம் பூத்தூவும் வானவில் நிறம்கூடும் மின்னல் மின்னும் முகில்கள் நாணும் இவைக்காக என்றாலும் அவைமுன் காதலை சொல் கன்னி இவளே உன் காதலி என்று...!
-
- 15 replies
- 2.7k views
-
-
-
- 34 replies
- 2.7k views
-
-
பாடியவர்: 'தேனிசை" செல்லப்பா இசைத்தட்டு: காலம் எதிர்பார்த்த காலம் பாடலை கேட்க :arrow: சிங்களவன் குண்டுவீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்லை.. சிங்களவன் குண்டு வீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்ல.. எங்கள் காட்டில் ஒரு குருவி - அதன் கூட்டில் கண்ணீர் அருவி (2) (சிங்களவன் குண்டு வீச்சிலே) குச்சிகளும் சிறகுகளும் கொண்டு செய்த கூடு குருவிக்கல்லோ தெரியும் அதை கட்டப்பட்ட பாடு.. நாலுபக்கம் எரியுதம்மா நெருப்பு நெருப்பின் நடுவில் அல்லோ குருவிகளின் இருப்பு! (சிங்களவன் குண்டு வீச்சிலே) இன்னும் குஞ்சு பொரிக்கவில்லை இரண்டு மூன்று முட்டை.. இறக்கை கொட்டி ஏங்கி ஏங்கி துடிக்குது பார் பெட்டை..!…
-
- 6 replies
- 2.7k views
-
-
அப்பா என் அப்பா ஏழை தான்! ஆனாலும் என்னை எப்போதும் ஏழையாக வளர்க்க நினைத்தது இல்லை. என் தாய் என்னை இடுப்பில் வைத்திருக்கும் பொழது தனக்கு தனக்கு இணையாகத்தான் தந்தை யை காட்டினாள். ஆனால் என்தந்தையோ என்னை தோளில் ஏற்றித் தான் கான இயலாத ஒன்றையும் காணவைக்கிறார். அப்பா என்னும் பொக்கிசம் நாம் அருகில் இருக்கும் போது நமக்கு தெரிவதில்லை, தாயை இழக்கும்பாசத்தையும் . தந்தை இழக்கும் போது பாதுகாப்பையும் இழந்து விடுகின்றோம் . மரமாய் வளர்ந்து கிளை பரப்ப உரமாய் இருந்தவர் தந்தை, எந்த உறவு பக்கத்தில் இருந்து எதைசொன்னாலூம். அப்பாவின் ஒரு வார்த்தைக்கு இடாகுமா? அப்பா எப்பவும் எங்களுக்கு காவல் தெய்வம். முடிந்த வரை எமக…
-
- 4 replies
- 2.7k views
-