கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கேட்டேன் தந்தான்... கேட்டேன் அன்பை தந்தான் மறுக்காமல் என்னிடம் கேட்டான் பல கேள்விகள் குடுத்தேன் அனைத்திற்கும் அவன் எதிர்பார்த்த மாதிரியே பதில்கள் இருந்தான் உறவாய் நீண்ட உறவானது எமது உறவு...இன்று முடிக்க நினைக்கிறான் இதற்கும் பதில் என்ன தெரியுமா என்னிடம் ஆமாம் முடித்துவிடு உன் ஆசைக்கு நான் தடை நிற்பதில்லை... தொடங்கியவனும் நீ முடிக்க நினைப்பதும் நீ ஆனால் தொடங்கியதை முடிப்பதற்கு நான் தயார் இல்லை...உன் ஆசைக்கு நான் என்றும் மறுப்பு தெரிவிக்க போவதுமில்லை நீ முடிந்ததாய் நினை நான் நினைவுகளுடன் இருப்பேன் அது போதும்
-
- 13 replies
- 1.7k views
-
-
வெறிச்சோடிப்போன வீடுகளும் வீதிகளும்.... பசித்து பின் நொந்துபோன அனாதை நாய்களின் ஈனக் குரைப்புகளுடன் அடங்கிப்போயின! கோயில் திருவிழாக்கள் காணாத மக்கள் கூட்டத்தினை - அகதி மக்கள் நிரப்பி வழிக்க... செஞ்சிலுவை சுமந்த சாலைகளும் அப்படியே! வான் பறவைகளின் இரைச்சல்களில்.. அதைவிடச் சத்தமாய்... ஓலமிட்டது நாங்கள்தான்! இரண்டுமாடி கட்டிடத்தின் "உயரிய பாதுகாப்பில்" நாமிருந்தபோதும், பயத்தினில் பரித்தவித்து உயிரை... கையில்தான் வைத்திருந்தோம்! வெஞ்சினமோடு வந்த பகையை வெறியேற்ற எண்ணாத வரிப்புலிகள் , பக்குவமாய்ப் பதுங்கிப் போன பின்னும், வெறியாட்டம் ஆடிக்கொண்டே... உள்நுழைந்த "விஜயன்கள்" துணைநின்ற பறவைகளின் குறியிலிருந்து, இந்த ஐந்து வயது கவிக்குஞ்சு ஐந்தடி தூரத்தில்…
-
- 13 replies
- 1.8k views
-
-
-
- 13 replies
- 5.8k views
-
-
இழந்தேன் என்னவனை என் நெஞ்சில் நிறைந்தவனே என்றோ ஒரு நாள் எனைத் தேடி வருவாயென ஏங்கியே காத்திருந்தேன் கண்ணில் நீருடன் கவிகள் பல வரைந்தேனடா உனக்காக. என் மனதை உன்னிடத்தில் பறி கொடுத்தேன் இரவு பகல் கண் விழித்துத் தவித்திருந்தேன் என்னவனே நீ வருவாயென ஆனால் காதில் வந்து கேட்டதடா ஒரு செய்தி உனக்கு கல்யாணம் என்று உடைந்ததடா என் இதயம் இருண்டதடா என் வாழ்வும் என் வாழ்வின் வெளிச்ச விளக்காய் உனை நினைத்தேன் இருண்ட வாழ்வை ஏனடா எனக்களித்தாய் என் இனியவனே ஏனோ உனக்கிந்த இரக்கமற்ற இதயமடா இனியவனே உனை இழக்க என் மனதில் சக்தியில்லை இருப்பாய் நீ என்றைக்குமே என் இதயமெனும் கோயிலிலே!!!
-
- 13 replies
- 2k views
-
-
- கருணாநிதி, தி.மு.க. தலைவர் கடற்கரையோரம் நின்று கவிதைப் பயிர் விளைக்க கற்பனைக் கலப்பை பிடித்து கடல் அலையில் கவின் நிலவொளியில் ஏரோட்டிய பாராட்டுக்குரிய கவிஞர்களே! சீராட்டும் தமிழில் என்னை கொள்ளையழகு காட்டுகின்ற கோலப்பெண்ணால் என்றும்... அலைச் சிரிப்புக்காரி ஆடவர் பெண்டிர் மழலையர் அனைவரையும் நனைத்து மகிழும் நாட்டியக்காரி என்றும் கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பிக் குதிக்கும் குழந்தைகளின் கலகலப்புச் சிரிப்புக்குப் போட்டியாக கிளிஞ்சல்களால் ஒலியெழுப்பும் தரங்கம்பாடி யென்றும் தழுவிடுவீர் எனைத் தமிழ்க் கவியால்! கொஞ்சு மொழி இப்படி அந்த நாள் பேசியதெல்லாம் ஏடெடுத்துப் பாட்டெழுதி என் எழிலைப் புகழ்ந்ததெல்லாம் திடீரென ஒரு நாள் தீப்பிடித்த கற்பூரம் போல் …
-
- 13 replies
- 2.1k views
-
-
என் காதலை... சொல்லவிடாது.. என்.. கரிய வண்ணம்.. தடுக்கின்றதே... இதயமெல்லாம் நீ.. பரந்த பின்னும்.. என்.. ஆசையைச் சொல்ல பெண்ணே... பயமாக இருக்கிறதே.. கையை நீட்ட சொல்லி.. இந்த வண்ணம்.. எப்படி ஒத்துப்போகும்.. என நீ கேட்டுவிட்டால்.. என் மௌனத்தைத் தாங்கிக் கொள்வேன்.. உனக்காக என்றால்.. மரணத்தையும் வாங்கிக்கொள்வேன்.. ஆனால் நீ இல்லையென்று சொல்வதனை மட்டும் என்னால் உள் வாங்கிக் கொள்ள முடியவே முடியாது.. சொல்லாத காதல்.. செல்லாத காசாம்.. இருந்துவிட்டுப் போகட்டும்.. நிராகரிக்கப்பட்ட.. காசோலையாக.. என் காதல் மாற வேண்டாம்.. காதல் வங்கியில்.. அபராதம்.. பெற்று என்னிதயம்.. சுக்குநூறாய் உடைய வேண்டாம்.. இப்படியே.. உன் எ…
-
- 13 replies
- 2.4k views
-
-
தோழி காலை புலர்ந்தவுடன் - தோழி என் கண்ணில் நீ நிற்கின்றாயே! காதல் மயக்கமல்ல - தோழி என் இதயத்தின் நட்பு அன்றோ! வானில் தெரியும் நிலா - தோழி உன் குளிர் முகப் புன்னகையோ! பாலும் முக்கனியும் - தோழி உன் கனிவுப் பேச்சும் ஒன்றோ! தாயாய் அரவணைப்பாய் - தோழி உன் சேயாய் நான் மாறிடுவேன்! இனிதாய் பேசும் பேச்சை - தோழி நீ எங்கு கற்றுக்கொண்டாய்! கோபமும் வருவதில்லை - தோழி உன் நல் நட்புக் கிடைத்ததினால்! பாடும் குயில் தன் குரலை - தோழி உன்னிடம் கடன் வாங்கியதோ! கொட்டும் அருவி போலே - தோழி என்னிடம் பரிவை நீ காட்டுகின்றாய்! மாறாப் பற்றுக்கொண்ட - தோழி நீ என் நெஞ்சின் நீரூற்று! நன் செய் நிலம் விளையும் - தோழி நீ என் வாடா அன்புப் பயிர்! ஏதனால் ஈடு செய்…
-
- 13 replies
- 4.4k views
-
-
எல்லா இடங்களிலிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் நகரங்கள், பள்ளிகள், கிராமங்கள் எல்லா இடங்களிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் எல்லா இடங்களிலும் போர்களை நடத்துகின்றனர் குழந்தைகளை கொல்கின்றனர் சிறுவர்களை கொல்கின்றனர் பிறக்க இருக்கும் சிசுக்களைக் கொல்கின்றனர் குழந்தைகளின் தாய்மார்களை கொல்கின்றனர் கதறும் அப்பாக்களை கொல்கின்றனர் ஓடி ஒழியும் அப்பாவிகளைக் கொல்கின்றனர் அவர்கள் கூடிக் கூடிக் கதைக்கின்றனர் போர்களை நிறுத்துவதற்கு கூடுகின்றனர் பின் மீண்டும் போர்களை எப்படி திறமையாக நடத்துவது என்று கதைக்கின்றனர் போரால் சிதையும் மனிதர்கள் பற்றி கதைக்கின்றனர் பின் சிதையாது மிச்சமிருப்பவர்களை கொல்வது எப்படி என்று கதைக்கின்றனர் ஒருவர் இறப்பத…
-
- 13 replies
- 1.1k views
-
-
-
எனது தேசம் -------------- நீல விசும்பின் ஓரத்தில் உறைந்திருக்கும் நீரினாலும் குளிர்விக்கமுடியா இரணங்கள் ஒற்றைக் குருவியின் ஓலமாய் மனது விம்மித் தணிகிறது நேற்றைகளைத் தீயில் கருக்கி நாளைகளின் தடத்தினை தொலைத்து விட்ட தேசம் இன்னுமொரு பொழுதில் பசி சுமந்து துயர் சுமந்து வாழ்வதற்கான முகாந்திரமின்றி வாழ்கின்றது என்றோ வரப்போகும் ஒளிக்கீற்றுக்காய் இன்றும் நாளையும் நாட்களை எண்ணியபடி... -எல்லாள மஹாராஜா-
-
- 13 replies
- 12.6k views
-
-
நான் என்றுமே நேரம் தவறுவதில்லை எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டதுதான் பிந்திச் செல்வதால் நீங்கள் படும் அவஸ்தையை பக்கத்தில் இருந்து அடிக்கடி பார்ப்பவன் நான் ..... நீங்கள் தள்ளாடி நடந்ததாய் எந்த பதிவும் இல்லை என்னிடம் எத்தனை மணிக்கு வந்தாலும் ''எல்லாரும் சாப்பிட்டாச்சா'' என்று கேட்பதில் நீங்கள் தனிரகம்.... அதிகாரம் செய்வது உங்களுக்கு பிடித்தமானதொன்று ஆனால் பணியாட்களிடமும் அன்பு தான் அடிக்கடி பொறாமைப்படுவேன் உங்களைபார்த்து ''எப்பிடிதான் இவரால மட்டும் முடியுதோ ''என்று ஆனாலும் அருமையான அப்பா எனக்கு !!!!!!! ''செய்யமாட்டேன்'' என்று சொல்லி அதை செய்துமுடித்து செய்யாதது போல இருப்பது உங்கள் கை வந்த கலை அது தெரிந்த போதிலும் உங்களிடம…
-
- 13 replies
- 11.6k views
-
-
நீண்ட இரவின் முடிவில் காத்திருக்கின்றது நேற்றைய வாழ்வில் உதிர்ந்து போன ஒரு பூவின் இதழ் காட்டு வழிப் பயணத்தின் இறுதியில் கிடைக்கின்றது வற்றிப் போன நதியின் சுவடு தூரப் பயணம் ஒன்றின் கடைசித் தரிப்பிடத்தில் அழிந்து போனது ஆரம்பித்த இடமும் இறுதி புள்ளியும் எங்கு சென்று தேடுவேன் காணாமல் போன என் உயிர் தொங்கிய பெரு விருட்சத்தை அடர்ந்து பெரிதாக நின்றிருந்த பெரு விருட்சத்தின் கிளையில் தொங்கிய பறவைகள் அனைத்தையும் பெரும் பூதம் தின்றுகொழுத்த கதையையும் அந்த பூதத்தை என் தோழர்களே வளர்த்து பறவைகளை தின்னக் கொடுத்த கதையையும் எப்படிச் சொல்வேன் என் பிள்ளைக்கும் அவன் பேரனுக்கும் என் வரலாறு முழ…
-
- 13 replies
- 2.5k views
- 1 follower
-
-
எங்கே போனீர்கள் எம்மோடு நின்று எதிரியை துரோகியை எதிர்த்து எழுத்தாணியால் பகை விரட்டுவீர் என்று நாம் கணித்திருக்க எங்கே போனீர்கள்......... புலி அடிக்கையிலே புலி வெல்கையிலே புகழ்ந்து புனிதரின் புகழ் பாடியோர் தோல்வி என்றதும் எங்கே போனீர்கள்......... பகைவரும் பதுங்கியிருந்தோரும் புரளியில் புகழ் தேடுவோரும் புது வரலாற்றை எழுத புனிதரின் சாட்சிகள் எங்கே போனீர்கள்......... புலிகள் வெடிக்கையிலே புலிகள் எரிகையிலே நானும் வருவேன் உம்மை மறவோம் என சத்தியம் செய்தீர்களே எங்கே போனீர்கள்......... சிலரைக்கண்டோம் வேறு பெயரில் வேறு அணியில் நடுநிலை என்ற பித்தலாட்டத்தில் இவர்கள் இப்படித்தான் மாற்றத்தை அடைப்போர் என்ற அறிவுக்கொழுந்தாய் எங்கே போன…
-
- 13 replies
- 1.3k views
-
-
என் பேரு விடலை நிற்கிறதோ படலை - பெண்களை கண்டா போடுவேன் கடலை அண்டு பார்த்தன் ஒரு பிகரை கொடுத்தேன் என் உயிரை எழுதினேன் ஒரு மடலை அவளோ அதத் தொடலை பார்த்திட்டான் அவளண்ணன் முனி அண்டு பிடிச்சுது எனக்கு சனி படிச்ாான் என் மடலை உருவினான் என் குடலை அனுப்பினான் சுடலை என் பேரு விடலை இருப்பது சுடலை போடுவேன் மோகினிகள கண்டா கடலை ( குசா மட்டும் தான் கவிதை எழுதுவாரா நாமளும் பிச்சு உதறுவமில்்ல )
-
- 13 replies
- 1.7k views
-
-
நோயினை சொல்லுவார் நொடிகளை விரையமாக்குவர் நோக்கமின்றியே -பலர் ஊக்கத்தை கெடுப்பார்கள் வாதிடு என்பார் போதுமினி என்கண்டாய் என்பர் மேடையின் எறி முழக்கம் மடமையில் பல உளறல்கள் வாடையில் கூட இல்லை அவர் வாயில் வாய்மை எழு எழு என்றார் எழுந்த பின் மறைந்தார் மானத்தமிழராம் இவர்கள் மக்கள் தொண்டராம் இவர்கள் மண்ணுக்காய் மக்களுக்காய் மாய்த்திட தம் சொகுது மறுத்தே நிற்கும் ம(ா)ன தமிழர்கள் ஆனையிறவை மீட்க அதை வைத்து ஓடி வந்தார் அடுத்த முகாம் பிடிக்க அடுத்தடுத்து வந்தார் ஆனாலும் தடை கண்டு அடுப்படி சென்றார்.. ஆகுதியான வீராரின் நமத்தை சுமந்து அடிக்கடி வந்தார் தடைச் செய்தி கேட்டு தம் சுய நலத்திற்காய் தியாகச்சுடர்களை மறந்தா…
-
- 13 replies
- 1.6k views
-
-
கடவுள் ஓர் நாள்.. பார்ட்டிக்குப் போய் ஓவரா தண்ணி அடிச்சிட்டு கட்டிலில் வீழ்ந்தவர்.. காலையில் எழுந்து கண் விழிக்க சிந்தனை கொஞ்சம் சிக்கல்பட்டது. சரி போனாப் போகுது இப்படியே விட்டால் மூளை குழம்பிடும்.. பொழுதும் போகுதில்லை.. ஒரு மானிடப் பெண்ணைப் படைக்க சித்தம் கொண்டார்..! சித்தம் கொண்டவர் டிகிரி போல்டரை தூக்கினார். பெண்ணைப் படைக்க.. எனக்கு என்னென்ன தகுதி வேணும் செக் பண்ணத் தொடங்கினார்.. முதலில் நல்ல ஸ்கெச் போட ஒரு வரைகலை டிகிரி வேணும்.. சா.. அதுக்கு முன்னம் நல்ல மனோதத்துவ டிகிரி வேணும்.. நோ நோ.... அதுக்கும் முன்னம் நல்ல சமூகவியல் டிகிரி வேணும்.. ம்ம்ம்... இல்லையே இவை மட்டும் இருந்தால் வெறும் காட்டூன் தான் வரையலாம்.. உயிரை ஆக்க.. நல்ல…
-
- 13 replies
- 1.7k views
-
-
அடிமைக் கால பெரு நதி நீள்கின்றது யுகங்களுக்கு அப்பால் பெருக்கெடுத்த காலம் எம்மை அடிமையாக்கியே இன்னும் நீண்டு செல்கின்றது ஈழப் பெருங் கடலையும் கால நதி சப்பித் துப்பியது போர்ப் பரணி பாடி அணிவகுத்த ஆயிரமாயிரம் தோழர் போன திசை அழித்த காலம் பெரும் பசி கொண்டு அலையுது நெஞ்சில் கனல் கக்க தோழர்களை காத்த மக்கள் மீதும் நெருப்பு துகள்களை கொட்டி பெரும்பசியை தீர்த்தலைகின்றது காலத்தின் திசைகளை எமக்கு எதிரியாக்கியது யார் கொட்டும் குளவிகளின் நுகத்தடியில் எம் தலைவிதியை செருகியது யார் எதிரியின் கையில் காலத்தை ஒப்படைத்தது யார் எமக்கான காலத்தை நாமே எழுத முயன்ற ரட்சகனையும் கால ராட்சதனா கொன்றழித்தான் அடிமை…
-
- 13 replies
- 1.8k views
-
-
நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், நீங்கள் பயணம் செய்யாவிட்டால், நீங்கள் வாசிக்காவிட்டால், நீங்கள் வாழ்வின் ஓசைகளைக் கேட்காவிட்டால். உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்ளாவிட்டால். நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், நீங்கள் உங்கள் தன்மதிப்பைக் கொல்லும்போது, பிறர் உங்களுக்கு உதவி செய்ய அனுமதிக்காதபோது. நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், அதே பாதைகளில் தினமும் நடந்து… நீங்கள் உங்கள் பழக்கங்களுக்கு அடிமையாகும்போது, உங்களது வழக்கமான செயல்களை மாற்றாமல் இருக்கும்போது வெவ்வேறு வண்ணங்களை நீங்கள் உடுத்தாதிருக்கும்போது உங்களுக்குத் தெரியாதவர்களோடு நீங்கள் பேசாத…
-
- 13 replies
- 1.6k views
-
-
கானகம் வயல் வெளி நடந்து காரிருளில் கந்தகம் சுமந்து இளமை துறந்து கல்வி துறந்து வாழ்வின் வசந்தங்கள் தூக்கி தூரபோட்டு என் மண் என் மக்கள் என சுவாசித்து என் தலைவனை உயிரிலும் மேலாய் விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு தோழர்களுடன் சேர்ந்து பயணித்து மீண்டு வரும்போது அவர் உடல்கள் தூக்கிவந்து தாங்கி வந்து வலி சுமந்து இளைப்பாறும் போது விடுதலை தீக்கு ஒரு சுள்ளி ஏனும் முறித்து போடாதவர் எம்மை நிக்க வைத்து கேள்வி கேட்கிறார் நீ யார் எதுக்கு சாகவில்லை எப்படி வந்ததாய் தாங்கள் கெட்டித்தனமா முன்னமே வந்ததால் போராளிகள் நாங்கள் முட்டாள் தனமா கடைசியா வந்ததால் துரோகிகளாய் அனுப்பபட்டவர்கள் தேசியம் குழப்ப செயல்வீரரை பிடிக்க உண்மையை அறிய நிலைகளை கண்காணிக்க …
-
- 13 replies
- 1.4k views
-
-
ஆண்ட மண்ணில் நாம் அகதியாகிப் போனாலும் நீண்ட நெடுங்காலம் நிம்மதியை இழந்தாலும் கண்டபல காட்சிகளால் கண்கலங்கி நின்றாலும் மீண்டு வந்திடுவோம் இது உறுதி என்று விட்டீர் றோட்டுப் போட்டவரும் கோட்டுப் போட்டவரும் பாட்டுப் போட்டு அங்கே பப்ளிசிட்டி தேடிவிட்டு வோட்டுக் குவியும் என்று போட்டிட்ட கணக்கிற்கும் வேட்டு வைத்துவிட்டு விடியலுக்காய் ஏங்குகிறீர் கண்ணே மணியென்று உமைக் கவர முயன்றவரும் வண்ணப் படத்துடனே மதில்தன்னை நிறைத்தவரும் எண்ணிப் புழுங்குகின்றார் எரிச்சலிலே துடிக்கின்றார் விண்ணர்கள் உம் கடமை சிறப்புடனே செய்திட்டீர் திறந்திருக்கும் சிறையினிலே நிம்மதியை பறித்துவிட்டு சிறந்ததோர் வாழ்விற்காய் வாக்களியும் என்றவரும் பறந்தங்கே வந்துமக்கு பாசமுகம் போட்டவரும் ம…
-
- 13 replies
- 1.1k views
-
-
கோழியின் கால்களை பிடித்து தலையை சுவற்றில் ஓங்கி அடித்து பின் சுருக்கில் தொங்கவிட்டு உரித்து குழம்புவைப்பார்கள் அப்படித்தான் அவ்வப்போது ஆட்களையும் அடித்து தொங்கவிடுகின்றார்கள் ஆனால் ஏன் என்று தெரியவில்லை திருவிழாக்களில் பறவைக் காவடிகள் குறைந்துவிட்டதால் கடவுளின் கோபம் என்றும் பேசிக்கொள்கின்றார்கள் கடவுளை குளிப்பாட்டி பவுடர் போட்டு மசாஜ் செய்துவிட்டாலும் கோபம் குறைவதாக தெரியவில்லை கடவுளின் பொண்டாட்டிமார்களுக்கு மேக்கப்செய்து திருக்கலியாணம் நடத்தி முதலிரவுக்கு அனுப்பி வைத்தாலும் கோபம் குறைவதாக தெரியவில்லை கடவுளுக்கும் சரி காவடி தூக்கும் பக்தனுக்கும் சரி கோபம் ஒரு மார்க்கமாகத்தான் எப்போதும் வருகின்றது கண்ணகியம்மன் கோயில்க் கோடி…
-
- 13 replies
- 2.1k views
-
-
Feb 10 2005, 08:49 PM இதயத்து சேகங்களை இறக்கிவைத்து சுமக்கும் சுமைகளையும் சொல்லிட வார்த்தைதேடி கலைந்துபோகும் என் கனவுகளை கலைத்து பிடித்து கட்டிவைக்க விழையும் வாலிபன்நான் வசந்தத்தை அனுபவிக்கும் வயதில் வறுமையை தாங்கலாம் வெறுமையை...........?? முடியவில்லை வீதியில் வீசப்பட்டடோ விக்கப்பட்டவனே இல்லை சொந்தம் சுற்றம் எல்லாம் உண்டு உற்றாருக்கும் பெற்றாருக்கும் உதவி உதவியே உதிரிபாகங்கள் தேய்ந்துபோய் உடலும் மனமும் சோர்ந்து.....என் துக்கங்களை தூக்கம்மட்டும் அவ்வப்போது தத்தெடுத்து கொள்ளும் இதோ என்னை தத்து கொடுத்துவிட்டேன் நிதந்தரமாக (ஒரு நண்பனின்உண்மை கதையிது
-
- 13 replies
- 2.8k views
-
-
வெளி நாட்டு காற்றிலே கவிதைகள் அணல் பறக்கும் ஏராளாமாய்! ஆனாலும் ஏளனமாய் இன்றும் விடுதலை வெற்றி நமதென்று கூவியழைத்தார்! தோல்வி கண்டு துவண்டு அழுதார்! வெல்லும் போது; மட்டும் வாழ்த்து பாடினார் தோற்க்கும் போது மட்டும் சிலர் சோக கீதமிசைத்தார்!. அனுப்பிய பணங்கள் ஆயுதம் அணிந்ததாய் மட்டுமே இதுவரை இல்லை செய்தி! இதுவும் வரலாம் காலகிரமத்தில்! ஏனெனில் கவிதைகள் மட்டுமல்ல செய்திகளும் இங்கே கற்பனையில்! துன்பத்தின் மீதிலேறி பாடுவார்! துன்பத்தை வெல்ல துயர்துடைப்பு என்பர்! வெட்கத்தை விட்டு சொன்னால் வேற்று வேட்டுக்கள் தான் நாம்! வேற்றுவன் கேட்கிறான் எம்மை! வேதாந்தம் பேசவா முடியும் அவருடன்? கேட்கிறார் அறிவார்ந்த கேள்வியாய் சிலர்! வேதாந்தம் சித்தாந்த…
-
- 13 replies
- 1.7k views
-
-
நான் தான் அவன் ,ஆனால் இப்போ நீ என்னை அது என்று சொல்கிறாய். நான் இப்போ இந்த உலகிலில்லை இல்லை என்று சொல்கிறாய். ஆனால் என்னால் உன்னை காணமுடிகிறது .உன் ஒவ்வொரு நகர்வையும் அவதானிக்க முடிகிறது. நான் அன்று களத்தில் மாண்டதாக நீ பேசிக்கொள்வதை கேட்கிறேன்.ஆனால் நான் மாண்டதாய் எனக்கு நினைவில்லை . அன்று வெடியோசைக்குள்ளும்,நச்சுப்புகைக்குள்ளும் உறுதியாய் நகர்ந்தேன். இன்று உன் சதிவார்த்தைகளை கேட்டு ,நஞ்சுகலந்த செய்கைகளை பார்த்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் அந்தரித்து நிற்கிறேன். உன்மேல் கொண்ட அக்கறையினால் ,தாய்மண்ணின் மேல் கொண்ட பாசத்தினால் தான் கையில் கருவி எடுத்தேன் .இன்று நீ கூறும் வார்த்தைகள் என்னைக்கொல்லாமல் கொல்கிறது .........…
-
- 13 replies
- 1.5k views
-
-
இது சித்திரக் கவிகளில் நான்கரைச் சக்கரம் வகையைச் சேர்ந்தது. எனது முதல் முயற்சி... வேதியன் மகவே வேய்தோள் உருவே வேல்விழி கனிவே வேரிப்பூ நறவே வேட்டம் புகவே வேகுதடி நினைவே வேரில்லா வாழ்வே வேண்டும் விடிவே வேதியன் - வேதம் ஓதுபவன்; மகவே - மகளே; வேய்தோள் - மூங்கில் தோள்; வேரிப்பூ - மதுரை மகளிர் கற்காலத்தில் சூடும் ஒரு மலர் நறவே - நறு மணம்; வேட்டம் - வேட்கை; விளக்கம் : வேதியன் மகளே!! மூங்கில்போல் தோள் கொண்டவளே!! வேல் விழிகளில் கனிவைக் கொண்டவளே!! வேரிப்பூ நறுமணம் கொண்டவளே !! உன்னை நினைக்கவே என் மனதில் காதல் வேட்கை புகுகிறது. அந்த வேட்கையால் உடல் வேகிறது. வேரில்லாமல் இருக்கும் மரம்போல் உயிரில்லாமல் உள்ளதடி வாழ்க்கை. இதற்கு விடிவே கிடையாதா!!
-
- 13 replies
- 1.2k views
-