Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காணும் காட்சியெல்லாம் கறைபடிந்த சிறைச்சுவர்கள் .கனவில் வருவதெல்லாம் அம்மா உன் கண்ணீர் கன்னங்கள். இதழால் ஈரம்செய்து நான் இனிக்கத் தந்த முத்தங்களை கண்ணீர் ஓடி ஓடி கரைத்தே விட்டதாம்மா? குழந்தைப் பருவத்தேநீ கொஞ்சி மகிழ்ந்த தெல்லாம்நினைவில் வந்துவந்துநிதமும் வதைக்குதாம்மா? பாசம் காட்டி என்னை - நடைபழக்கிய இடங்களெல்லாம் தீயாய் நினைவில் நின்றுமனதை கருக்குதாம்மா? கண்ணீராலும் கரையாதகவலைகள் கூடிக்கூடி - உன்நெஞ்சம் புண்ணாகநிதமும் வதைக்குதாம்மா? என்னம்மா நான் செய்ய? இரும்புக்கம்பிகளின் விலகாத பூட்டுகளால் என்னை விடுதலைசெய்துவிடமுடியாமல் இருக்கிறதே. பந்தம் பாசமெல்லாம் தூரத்தில் கிடந்தாலும் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு நீ சிறைக்கு வருவதால்தான்உறவுகள் …

  2. Started by subytha,

    போலிக் காதல் மயக்கத்தில்_மது போதை வகுத்த ஒழுக்கத்தில் நீலிக்கண்ணீர் உறவுகளில் _பலர் நிகழ்காலங்கள் இறந்து போகின்றன இரை தேடி வந்து இரையாகும்_விதி எண்ணி சிரித்திருக்கலாம் சமுத்திரம் கடக்க முடிந்தும்_கண் கடக்க முடியவில்லை என்று கலங்கியிருந்திருக்கலாம் மேகத்தில் இரத்தம் பூக்களில் மாமிசம்_கத்தியில் கண்ணீர் விழிந்தன் கனவில் நியத்தைதான் சொல்கிறேன் மாற்றமில்லை_ காதல் நெருப்பொன்றே புதுப்பிக்கும் மானிடத்தை

    • 31 replies
    • 4.7k views
  3. வறுமையின் பிடியில் உயிர்கள் துடிக்க கடவுளுக்கு வேண்டுமா பாலாபிஷேகம்?????????? சிலைகள் விலைகள் கேட்பதில்லை கடவுளை மனிதன் பார்க்கவில்லை...... உதவும் உள்ளமே கடவுளடா,,,,,,,,,, உனக்கு மேலாக இருப்பது என்றும் உன்னுடயதில்லை பகிர்ந்து கொடு பட்டினிச்சாவு பறக்கட்டும்.............. ***** நன்றி முகநூல்

  4. கவிதையின் கவிதைகள் [size=5][/size] http://www.desicomme...9692/696921.gif இத்தனை சித்திரவதைகளின் பின்னரும்... நான் உயிருடன் இருக்கின்றேன்... ஆச்சரியந்தான்! நீ என்னிடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் என்னிடமில்லை... அவை உன்னிடந்தான்! நீ மறந்துபோனதாய்க் காட்டிக்கொள்ளும் எம் பழைய நினைவுகளை மீட்டிப்பார்... அனைத்துக்கும் விடை கிடைக்கும்! உன்னிடமும் நான் கேட்கவேண்டியவை, நிறையவே இருக்கின்றது... அதுவரையும், என்னுயிர் பிரியாது! உண்மையான நேர்மையான பதில்கள் உன்னிடமிருந்து வரும்வரைக்கும்... என்னுயிர் போனாலும் உனைத் தொடர்வேன்...! ஒரு கெட்டவனை நல்லவனாக்கவும் ஒரு பெண்ணால் முடிகிறது! ஒரு நல்லவனை கெட்டவனாக்கவும் அதே பெண்ணால் முடிகிறதே!! இ…

  5. எல்லாமே ... கடந்துபோகும் .... நீ மட்டும் ... விதிவிலக்கா ....? ஆயிரம் காலத்து .... பயிர் -திருமணம் .... காதலின் ஆயிரம் .... நினைவுகளை .... கொன்று நிறைவேறும் ...!!! வாழ்க்கை ஒரு .... நாடக மேடை .... காதலர் .... விட்டில் பூச்சிகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 A

  6. [size=5]எந்தன் வாழ்வு உங்கள் கையில்…[/size] முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதூகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். சுயநலம் காத்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார்கள். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடு…

  7. எல்லோரும் அவரவர் மனைவியைப் புரிந்து கொள்ள வேண்டும். உதவி செய்ய வேண்டும். பணத்தால்.. வசதியால் மட்டும் மனிதருக்கு மகிழ்ச்சி வந்து விடாது.. நம் செயல்களால்தான் இல்லறம் இனிக்கும்... பெண்களின உடல் சார்ந்த பலவீனங்கள்.. தொல்லைகள் எத்தனை ஆண்களுக்குத் தெரிகிறது...? “அனாசின் போட்டுக் கொண்டு வேலையைக் கவனி...” என்று சொல்லி விட்டு டி.வி பார்க்கும் என் அன்புக் கணவனே... மாத்திரை எதற்கு...? அலறும் டி.வி சப்தத்தைக் குறைத்து விட்டு நிறையப் போச்சா.. சோர்வா இருக்கா என்று அன்புடன் கேளேன்... உதடு கடித்து.. கண்மூடி சாய கொஞ்சம் உன் தோள் கொடேன்.. வயிறு வலியால் பெருகும் கண்ணீரைத் துடைத்து விடேன்... சுமை இறக்கும் குழந்தையை அலம்பி விட்டு..உடை மாற்றி தொட்டிலாட்டி கொஞ்சம் தூங்க …

  8. தியாகம்.. கார்த்திகை பூ எடுத்து வாடா.! கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் ஆணிவேரான ஆலமரங்களே..! வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... வீழ்ந்தாலும் விதையாக மாவீரன் மறைவதில்லை மாவீரம் அழிவதில்லை ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் இல்லை தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். கல்லறைக்கு வருக…

    • 0 replies
    • 2.1k views
  9. பாவிகளை மன்னிப்பாய். புலிக்குப் பிறந்தவனே, போர்க்களத்தில் சிறைபட்டு எலிக்கு கருவாடாய் இட்டதைத் தின்றாயோ? இனங்காத்த தந்தை இல்லாது போனதனால் பிணந்தின்னிப் பேய்தந்த பிஸ்கட்டை தின்றாயா? வஞ்சக உலகில் வாழ வேண்டாமென நெஞ்சிலே தோட்டாக்கள் நீ-வாங்கி னாயா? நீயுறங்க தாலாட்டு நின்அன்னை இசைப்பதற்கு பீரங்கி முழக்கங்கள் பின்னணியாய் கேட்டதடா வீட்டோரம் வெடிகுண்டு வேலியெல்லாம் துப்பாக்கி தோட்டாக்கள் எல்லாம்நீ தொட்டுவிளை யாடியவை ஒரு தோட்டா போதாதா உன்னைக் கொல்வதற்கு மறுபடியும் சுடடா வென மார்பைக் காட்டினாயா ? " அப்பா" வென அலறியதால் அச்சமுற்று சிங்களவன் அப்பாவி உன்னை ஐந்துமுறை சுட்டானோ ? வளர்ந்தால் தந்தைபோல் வரலாறு படைப்பாயென மலர்ந்ததும்…

  10. சிவப்பு ஒற்றை ரோஜாவை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் காதல் வரவில்லை என் அன்புத் தோழியே என்னினம் சிந்திய குருதியின் விம்பங்கள் பட்டுத் தெறிக்கும் இதை இனிமேல் காதல் சின்னம் என்று சொல்லாதீர்கள்

  11. நன்றி முகநூல். நன்றி முகநூல். (படத்தில் அழுத்தி.. பெரிதாக்கியும் வாசிக்கலாம்.)

  12. Started by கீதா,

    என் உயிரே அன்பே உன் Üட பழகிய நாட்களை வைத்து -எனை மறந்து ஊமை போல் மனசுக்குள் பேசினேன் உன்னிடம் சொல்ல காத்திருந்த -பல வாத்தைகளை சொல்லாமல் என் மனசுக்குள் புூட்டி வைத்து உள்ளே அழுதேன்- என் உயிரே ஆனால் நீ என்னிடம் பழகிய நாட்கள் சில எனக்குத் தெரியும் -நீ விரும்புவது என்னை அல்ல என் இசைகளைத்தான் என்று ஆக்கம் ...... கீதா :P

    • 11 replies
    • 2.5k views
  13. கடவுளுக்கோர் கடிதம் எல்லாம் வல்லவராம் எல்லாம் தெரிந்தவராம் எல்லாம் செய்பவராம் எங்கும் இருப்பவராம் அகிலத்தில் வாழ்பவர்கள் அப்படித்தான் சொல்லுகின்றார் ஆனாலும் என்னிடத்தில் அடுக்கடுக்காய் பலகேள்வி மனச்சிறையில் இதைப்போட்டு மறுவிக் கொள்ளாமல் மனந்திறந்து கேட்டுவிட மடலிதனை வரைகின்றேன் அண்டத்தை ஆள்கின்ற ஆண்டவன்உன் செயல்களுக்கு காரணத்தை அறியாத காரணத்தால் ஒருகடிதம் அடுக்காத செயல்செய்த அநியாயக் காரனைப்போல் தலைமறைவாய்ப் போயிருக்கும் தங்களுக்கே இக்கடிதம் முறையாக அனுப்பிவைக்க முகவரியும் தெரியாது இரகசியமாய் அனுப்பிவைக்க இருக்குமிடம் தெரியாது திருமுகத்தை அனுப்பிவைக்க திசைதெரியாக் காரணத்தால் திறந்த மடலாகத் த…

    • 34 replies
    • 4.5k views
  14. Started by இலக்கியன்,

    மொழிக்கு உயிர் எழுத்துப்போல என் உடலின் உயிர் நீ தான் பெண்ணே? நீ கண்களால் பேசும் அந்த மொழிக்கு இவ்வுலகில் வரிவடிவம் உண்டா பெண்ணே? உன்னுடய சிரிப்புக்கு நிகரான சொல் எந்த மொழியில் உண்டு பெண்ணே? நீ பேசுகின்ற குரலின் இனிமை எந்த இசைக்கருவியில் தோன்றும் பெண்ணே ? கருமுகில் போன்ற உன் கூந்தல் நறுமணம் எந்த மலரில் உண்டு பெண்ணே? உன் இதயதின் துடிப்பு என் பெயர்தான் சொல்கிறதா பெண்ணே? உன் சுவாசத்தின் பிரணவாயு நான் தானா பெண்ணே?

  15. சாவிலும் சுதந்திரம் இல்லை

    • 0 replies
    • 772 views
  16. பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே! நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே! கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்! காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார் மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை -கவிஞர் காசி ஆனந்தன்

  17. முள்ளிவாய்க்கால் பரணி! 01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமெ…

    • 0 replies
    • 915 views
  18. Started by Nathamuni,

    மனைவியை ஒய்ஃப் என்றோம். வாழ்க்கையை லைஃப் என்றோம். கத்தியை நைஃப் என்றோம். புத்தியை புதைத்தே நின்றோம் ! அத்தையை ஆன்ட்டி என்றோம். அவள் மகளை ஸ்வீட்டி என்றோம். கடமையை டுயூட்டி என்றோம். காதலியை பியூட்டி என்றோம்! காதலை லவ்வென்றோம். பசுவை கவ்வென்றோம். ரசிப்பதை வாவ் என்றோம். இதைதானே தமிழாய் சொன்னோம்! முத்தத்தை கிஸ் என்றோம். பேருந்தை பஸ் என்றோம். அளவை சைஸ் என்றோம். அழகை நைஸ் என்றோம் ! மன்னிப்பை சாரி என்றோம். புடவையை சேரி என்றோம். ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம். தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்! மடையனை லூசு என்றோம். வாய்ப்பை சான்சு என்றோம். மோகத்தை ரொமான்ஸ் என்றோம். தமிழை அறவே மறந்த…

    • 1 reply
    • 695 views
  19. எதிர்கொள்ளல் ஒன்றின் எதிர்பார்ப்புகள் சிதைந்துபோகாமலிருக்க நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை எரியூட்டியபின் , நினைக்கப்படுதல் நிகழாதிருக்க காலவோலையில் தடங்களை அழித்துக்கொண்டிருக்கிறேன், இயல்புகள் கடந்த இருத்தலுக்கான எழுச்சிதேடி இயங்குதல் தொடர்கையில் _சிந்தும் உணர்வுநீரில் உப்புக்கரிக்கிறது . எல்லாம் கடந்து புன்னகையோடு ஒரு பிரிதலை யாசிக்கிறேன் ............................... உள்ளுணர்வுகளின் முரண்களால் கிழிக்கப்படும் காலவாழ்வில் , எல்லாம் சாத்தியமாகாத சம்பவங்களாய் கடந்துபோகிறது . சடங்குகளாய் தொடர்ந்து நீழ்கிறது .

  20. காத்திருப்பு உன்னைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. உனது குரலில் அன்பை அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறது மனம். பாசம் நிறைந்த உன் பார்வைக்குள் நனையும் நாளின் நினைவுகளில் கழிகிறதென் நிகழ்காலம். கால நீட்சியில் உனது கோலத்தில் எழில் கூடியிருக்கும் என்று நினைக்கிறேன் இத்தனை காலப் பிரிவினால் நீயும் என்னைப் போலவே தவித்தபடி இருக்கலாம். நேரில் பேச வேண்டிய செய்திகளை சுமக்கின்ற எங்களின் மனங்களில் சுமைகளை மாற்றிக் கொள்கின்ற நாளின் வருகையை எதிர்பார்க்கின்ற கணங்களில் அழிவுகள் வருடங்களாக நகர்கின்ற பொழுதிலும் தொடர்கிறது உனக்கான எனது காத்திருப்பு. பேசிக்கொள்ள நேரமற்ற விதமாய் உணர்வுமிக்க பொழுதொன்றில் சந்திக்கனும் உனது கனிவான பார்வையே போதும் இன்னும் ஆய…

    • 15 replies
    • 22.4k views
  21. நிலைத்தாயே வாழ்க! -------------------------- வாழ்த்தும் வயதுமில்லை வார்த்தைகளும் வரவில்லை வாழும் காலத்தில் வாழும் வரம் பெற்றதனால் மானமுடைத் தமிழினமாய் இப் பூமியிலே நாம்! எங்கள் தலை நிமிர சோதனையும் வேதனையும் தாங்கிய வேந்தனே காலப் பெருவெளியில் கலையாத பெருமொளியே நீலவானத்தின் ஒளித்திரளே நினைத் திங்களென முடியாது தேயாத தெளிந்த நிலை ஓயாத உழைப்பு நிலை காயாத பொன் வதனம் மாறாத புன் சிரிப்பு மறுவற்ற உபசரிப்பு நீயே நிலைத்தாயே எம்மினத்தின் மாறாத பெரும் குறியீடாய்! தமிழினத்தின் வரலாற்றில் வாராது வந்துதித்து வரலாறாய் வாழ்பவரே ஒருநாளும் மறையாது நிலைத்துவிட்ட மாமணியே வாழ்க! வாழ்க! வாழ்க! 26.11.2011

  22. Started by nunavilan,

    மழை - கிரிதரன் ஊரே வேண்டி நிற்க எனக்குமட்டும் மழை விருப்பமில்லை ஏனென்றா கேட்டாய் தோழி? காலடியில் நீரோடையும் சுவரெல்லாம் நீர்வீழ்ச்சியும் அடுப்பில் எரியும் நீரும் பார்த்திருக்கிறாயா நீ? வா வந்துபார் எம் குடிசையில்!! அடுக்களையும் அடுக்குமிடமும் ஒன்றாயிருக்க படுக்கையும் கூரையும் பகலில் கைகோர்க்கும் ஒற்றையறைக் குடிசைக்குள் பார்! கொஞ்சம் முயன்றால் எண்ணிவிடலாம் வின்மீண்களையும் எம்குடில் கூரைக்கண்களிடம் பலிக்காது உன் திறமை! ஓட்டைக்கு ஒன்றாய் இறங்கினாலும்போதும் காலடியில் ஓடையென்ன, ஓராழியே ஓடும் தோழி! ஒருநாள் இல்லை ஒவ்வொரு நாளும் பிழைத்திருக்க இருட்டுமுதல் இருட்டும்வரை ஓடவேணும் நாங்கள் ஓரிடம் முடங்கினால் உண்டியேது? கையூன்றிக் கர…

    • 3 replies
    • 1.2k views
  23. நிச்சயதார்த்தம் முடிந்ததும்... புதுப் பெண்பிள்ளையும், புது ஆண்பிள்ளையும் செல்போனில் பேசிக்கொள்கிறார்கள்...   ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்! பெண்: நீ என்னைவிட்டு விலகிவிடுவாயா? ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன். பெண்: நீ என்னை விரும்புகிறாயா? ஆண்: ஆமாம். இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும். பெண்: நீ என்னை மறந்து விடுவாயா? ஆண்: அதைவிட நான் செத்துப் போயிடலாம்! பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா? ஆண்: கண்டிப்பாக... அதுதானே எனக்கு மிகப்பெரிய இன்பமான தருணம். பெண்: நீ என்னை அடிப்பாயா? ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன். பெண்: நீ என்னுடன் கடைசிவரை கை கோர்த்து வருவாயா? …

    • 3 replies
    • 1.2k views
  24. எனக்காக நீதான் உனக்காக நான் தான் இது தானே நீ சொன்ன முதல் வாக்கியம் இப்போது எங்கே உன் சொல் ஓவியம் கவி எழுத மறந்தேன் - உன் கதை தனை யாசித்தேன் -இப்போ காணாமல் நானும் பூஜித்தேன் ஆனாலும் உனக்காக காத்திருப்பேன்

  25. [size=3][size=4]உலகின் எந்த ஒரு இனமும்[/size][/size] [size=3][size=4]கருணைக்காக இவ்வளவு காலமும் ஏங்கி இருக்காது . உலகின் எந்த ஒரு இனமும் சுதந்திரத்திற்காக இவ்வளவு வாதைகளை தாங்கியிருக்காது.[/size] [/size] [size=3]உலகின் எந்த ஒரு இனமும் வாழ்தலின் பொருட்டு இவ்வளவு இழப்புகளை எதிர்கொண்டிருக்காது. [size=4]உலகின் எந்த ஒரு இனமும் சர்வதேசத்தால் இவ்வளவு தூரம் புறக்கணிக்கப் பட்டிருக்காது. உலகின் எந்த ஒரு இனமும் தன் இனத்துரோகிகளால் இவ்வளவு அபத்தமாக காட்டிக் கொடுக்கப்பட்டிருக்காது. உலகின் எந்த ஒரு இனமும் இறையாண்மையின் பெயரால் இவ்வளவு கொடூரமாக கொன்றொழிக்கப் பட்டிருக்காது. . பக்கத்தை வெளியிடு உலகின் எந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.