கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வரலாற்றில் புதையுண்டு போன நிலங்களில் இருந்து மீண்டும் குதிரைகள் வெளிக் கிளம்பும்.. நூற்றாண்டுகளாக சாம்பல் மூடிய வீதிகளில் அந்நிய பாதச் சுவடுகளை மேவி தம் கால்கள் பதிக்கும். இருண்ட கானகங்களில் மழையின் பின் மரங்கள் பொந்துகளுக்குள் பொத்தி வைத்த நீரை வாரி இறைக்க நுதல் வழி வழியும் நீர் படர்ந்து காய்ந்த மண்ணின் துகள்கள் ஒவ்வொன்றும் உயிர்த்து எழும். எம் கடற்கரைகளில் எங்கள் கூழைக்கிடாக்கள் சேர்த்து வைத்திருந்த மீன் குஞ்சுகளின் ஆரவாரங்களில் கடலின் மெளன வெளிகளில் தாண்டு போயிருந்த எம் படகுகள் மீண்டும் எம் கடல்களில் வலம் வரும் கால அசைவியக்க காற்றில் எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை எப்போதும் வானம் …
-
- 38 replies
- 3.5k views
-
-
ஊனத்தின் வலியறியா மானிடா ஓரே ஒரு பொழுது உன் காலையோ கையையோ கட்டிப் போட்டு கிடந்து பார் . ஊனத்தின் வலியறிவாய்....
-
- 38 replies
- 2.8k views
-
-
-
பல்லாயிரம் ஆண்டுகளாம் புகழ்பூத்த முற்குடியாம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் நற்குடியாம் தொல்தோன்றி மண்கண்டு மன்கண்டும் பயனில்லை சொல்கொண்டு இணைவர்தம் சிரமெடுப்பர் காலமிதில் ஒருவிரல் வெளிச்சுட்டி மூவிரல் தனைச்சுட்டி தரையினிலே உடல்பரப்பி உமிழ்கிறார் சிரம்நிமிர்த்தி வருவதுவும் பெயரல்ல தருவதுவும் புகழல்ல திரும்புவது உமிழதுவே மூவிரலும் குறிப்பதுவே களமதனில் உரையாடல் கனிகின்றார் தினம்தானும் தளம்மாறித் தடம்மாறிப் புனைவாரே வசையாடல் களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் மறுபோக்கு உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ எண்ணத்தில் வந்தவுடன் கிண்ணத்தில் தந்துவிட்டார் உண்மைநிலை உணர்வின்றி வசைபாடிச் சென்றுவிட்டார் திண்ணையதன்…
-
- 38 replies
- 3k views
-
-
எந்தன்குரல் கேட்கிறதா? அவனியிலே வித்தகனாய் அறிவுடனே நான்வாழ அனுதினமும் கனவுகண்ட அன்பான அம்மாக்கு என்னருகே இருக்கையிலே உன்னருமை தெரியவில்லை அருமையினை உணர்கையிலே அருகினிலே நீயில்லை மெழுகுவாத்தியாய் உருகி வெளிச்சத்தைத் தந்தவளே வெளிச்சத்தின் அருமையினை இருட்டில்தான் உணர்கின்றேன் உன்பேனா பிரசவித்த உரைகளைநான் மேடையேற்றி பேச்சாளன் ஆகியதை பெருமையுடன் நினைக்கின்றேன் பரீட்சைக்கு முதல்நாளும் படுக்கையிலே விழுந்திடுவேன் என்னருகே வந்திருந்து எனக்காக நீபடித்தாய் என்பாடம் தனைப்படித்து எனைஉயர்த்த முயன்றவளே உன்பாசம்தனை எந்த உலகத்தில் காண்பேனோ சிந்தையிலே எந்நாளும் எந்தனையே தாங்கியதால் உந்தனுக்கு எப்போதும் நிம்மதிய…
-
- 37 replies
- 5.1k views
-
-
தோல்வி எனைத் தொடும் முன்னே தோழமையுடன் தோள் கொடுப்பாயடி. கவலைகள், மனதை காயப்படுத்தும் முன்னே காயத்தை ஆற்றும், மருந்தாக, வருவாயடி,,,! ஒரு நாள் பேசாவிட்டால் ஒரு ஜென்மம் போனதடி - என நீ துடிப்பதை நான் நன்கு அறிவேனடி! நினைவினில் நிஜமானவளே - என் கனவிலும் கரைந்தாயடி.. என் தோழி என்ற உரிமையுடனே உன் தோளில் சாய்வேனடி.. உன் சிநேகிதி என்ற உரிமையுடனே உனை நான் அதிகாரமும் செய்வேனடி! என் ஒற்றை விழியாக என் தோழி ,- நீ என்னில், என்றுமே வாழ்வாயாடி.. !
-
- 37 replies
- 18k views
-
-
மறக்க முடியுமா..................? நாற்றிசையும் ஆலயமணி ஒலித்த நாற்புறமும் கடல் சூழ்ந்த ஞானியர் ஐவர் உதித்த நல்லதோர் ஊராம் எம் காவலூர் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட ஊர் - அதில் அழகிய கடற்கோட்டையையும் கொண்டது எம்மூர் கலை வளர்ந்து தலை சிறந்து தனித்துவமாய் இருந்தது எம்மூர் மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம் மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன் எம் மகிழ்வழிக்க வந்த மாற்றான் படை பறித்தது - பல உயிர்களை அழித்தது - உடமைகளை இழந்தோம் - நண்பர்களை பிரிந்தோம் - சொந்தங்களை அகதியானோம் -அந்நிய தேசத்தில் சிறப்பாக விளங்கிய எம்மூர் சீர்கெட்டுப்போனதேனோ சிறகுடைந்த பறவைகளாய் திக்கெட்டும் வாழ்வதேனோ பசுமை…
-
- 37 replies
- 4.6k views
-
-
மின்னலிடை தேடி பெண்களிடை நாடி பொருத்தமதின்றி பொறுமையிழந்தேன்..! (எதிர்பார்த்து.. சந்தித்த..முதலாவது பெருத்த ஏமாற்றம்) பிறை நுதல் தேடி வீதி வழி ஓடி கண்டதில்லை வானத்து மூன்றாம் பிறை..! (கிரமமான இயற்கை நிகழ்வைக் கூட ரசிக்க நேரமில்லாத தேடலின் தொடர்ச்சி) காந்தளது தேடி கரங்களது நாடி களைத்தேன் ஓவியமாய் காணும் வரை..! ( காந்தளைக் (அழகான மலர். அருகிய மலர்) காண வேண்டும் என்ற ஆசை.. ஓவியத்தில் நிறைவடைகிறது) கொவ்வையிதழ் தேடி கோதையிதழ் நாடி கேவலம் கண்டேன் மைப் பூச்சு..! (கொவ்வை தெரியும்.. கொவ்வை இதழ்.. தெரியாமல்.. தேடல் செய்து ஏமாற்றமடைதல்.. போலியை செயற்கையைக் கொண்டு.. மெரு கூட்டிய பெண்கள் வாழும் உலகு என்பது அர்த்தப்படுகிறது..!) பருவமும் …
-
- 37 replies
- 5k views
-
-
மின்னல்கள் கூட இடைபிரிந்து திசைவழியிறங்கி உனை தேடுகின்றன- என் தொலைந்து போன காதலை மீட்டுக்கொடுப்பதற்காய். - from my blog -
-
- 37 replies
- 4.5k views
-
-
அன்புடன் அனிதா இணையத்தில் யாழ்மீட்டி ரீங்காரம் செய்து - உங்கள் இதயத்தை பகிர்ந்துகொண்ட எம்வீட்டு குருவிகளே! எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்? இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை! உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்ஜோடி இன்றிலிருந்து என்றென்றும் உடலாலும் இணைகிறது! உள்ளத்தில் நீர் சுமந்த உண்மையான அன்பிற்காய் திருவிழா செய்கின்றோம்! திருமணமாம் உமக்கின்று! இதயத்தின் உரசல்களில் உருவான ஒளித் தீப்பிழம்பு விண்வெளியில் பயணித்து கண்மணிகள் கதைசொல்லும்! இணையத்தில் சுழியோடி முத்தான காதல் செய்த மணி ரசிகை ஓருயிராய் வாழ்க பல்லாண்டு! அன்புடன் கலைஞன் முகமூடிக் கருத்தாடல்.. …
-
- 37 replies
- 49.3k views
-
-
எங்குதான் கற்றாய் நீ பொய்.. இளமை சொல்கிறதா... ஆசை சொல்லத் தூண்டுகிறதா.. இதுவரை இல்லாமல்.. இப்போது.. பொருத்தம் இல்லாமல்.. பொய்சொல்கிறாயே.. நீ உரைப்பதை நம்பிவிடும்.. முட்டாளா நான் மாறிவிட்டேன் என்று எண்ணிவிட்டாயா..முட்டாள்க் காதலனே... நீ நிற்பது கடல் நடுவில்.. நான் நிற்பது கரைமணலில்.. நீதான் இங்கு வரவேண்டும் நானல்ல.. காதல் மனதைத் தொடும் கலை.. உடலைத் தொட அலைவது கொலை காமம் தாம்பத்யத்தை ஸ்திரப்படுத்த... காதலைப் பலவீனப்படுத்த அல்ல நீ நேசிப்பது என்னையென்றால்.. நான் என் இதயத்தை என்று எடுத்துக் கொண்டேன்.. நீ உடலை என்பதைக் காட்டிச்சென்றாய்.. உன் வேலையாகவில்லை என்று எரிகிறாய்.. என் காதலன் கண்ணியத்தை எண்ணி நான் அழுகிறேன்.. பரிபூரண இதயத்தைக் க…
-
- 37 replies
- 4.6k views
-
-
இன்னும் ஈரமாய் இதயத்தில்....! பூவரசம் இலையில் பீப்பி ஊதி.. லக்ஸ்பிறே பேணியில் மேளம் கொட்டி.. வாழைநாரில் தாலி கட்டி.. மண்சோறில் விருந்துவைத்து... ஆடிக்களித்த நாட்கள் அச்சச்சோ அழகே அழகு...! தேனீர் குவளையில் ஒலிபெருக்கி செய்து... பப்பாசி குழலில் ஒலிவாங்கி கட்டி... ஊர்முழுக்க கேட்குமென்று நினைத்து... உரத்து உரத்து பாடினது நினைச்சாலே.. இனிக்குது நெஞ்சை விட்டு போக மறுக்குது...! மாங்காய் சம்பல் போட்டதும்.. நெல்லிக்காய் பொறுக்கி தின்றதும்.. பொன்வண்டு பிடித்து தீ பெட்டியில் அடைத்து... குஞ்சு பொரித்திட்டுதா என்றே... நிமிடத்துக்கு ஒருதரம் பார்த்து பார்த்து... இருந்த காலம் கொல்லுதே மனசை கொல்லுதே..! தீ பெட்டியில் தொலைபேசி பேசி ம…
-
- 37 replies
- 5.4k views
-
-
இதமான முத்தம் இம்சையாகப் போனதேன் ? இனிமையான பொழுதுகள் இன்று இம்சையாகப் போனதேன் ? எத்தனை எதிர்ப்புகள் வந்தது எம்மை நோக்கி இலகுவாய் உடைத்தோமே ஒன்றாக நானும் நீயும் அப்போது இம்சை இல்லையே எம்மிடம் எதெற்கும் துணிந்த என்னை எண்ணையாக்கியவள் நீ இன்று சொல்லால் இறுக வைத்தாயே ஒருவேளை உன்னைக் கோர்க்க நான் தகுதி இல்லாத நூலோ ??????????????
-
- 36 replies
- 3.4k views
-
-
மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள் இவை. யாழ் வாசகர்களுக்காகத் தருகிறேன். நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க அரக்கன் பிடியில் அகப்படாத நாளில் அரைகுறை வயிறுதான் - ஆயினும் அழியவில்லை எங்கள் அழியாச் சின்னங்கள் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... வளம் கொழிக்கும் வன்னி மண்ணின் வாசல் வரை வந்தான் அன்று வாசமின்றி வாடுகின்றோம் நாமின்று நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... கடைசிவரை கலங்காத மக்கள் - தம் கச்சையும் இழந்து இன்று கயவன் பிடியில் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... பூசிக்க வேண்டியவர்களைப் பூவின்றிப் புதைத்தோம் பார் போற்றியவரை பாதையில் கைவிட்டோம் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... அழிந்து போன ஆத்மாக்களை அடக்…
-
- 36 replies
- 7.2k views
-
-
-
- 36 replies
- 4.3k views
-
-
ஒரு உண்மையான காதலின் வலிகள் - வரிகளாய்........!!! ஒரு "கவிதை"யின் கண்ணீரில் வரித்த வரிகள் இவை! எழுத்தும் பகிர்தலும் ஆறுதல் அளிக்கும் என்ற நம்பிக்கையில்..............! பெருந்தெருவில் விழுந்த பச்சைப் புழுவாக நான்! காய்ந்து வரண்ட எனக்குள், என் பச்சை இதயம்... படபடத்து பரிதவிக்கும் பரிதாபம்! என்னை நான் ஒருமுறை நினைத்துப் பார்க்கின்றேன்...! இன்னும் உயிரோடு இருப்பதே எனக்கு ஆச்சரியந்தான்!!! நான் புரளும் மண்ணின் வெட்பம் என் மெல்லிய மேனியைச் சுட்டு அவிக்கின்றது! அவிந்து போகையிலும்... உன் நினைவுகளில் பசுமையாய் ஈரமாகின்றேன்...! உப்புக் கரிக்கும் கண் வழி நீரில்...!!! கரைந்து போகும் உன் காதல் கரைகளில்... பெருகிவரும் கடலாய் என் காதல் ! உன் …
-
- 36 replies
- 7k views
-
-
எனது மரணம்: முதலாவது அறிக்கை இப்போதெல்லாம் மரணம் பற்றிய எண்ணங்கள் அடிக்கடி வருகின்றன பல தடவை மரணத்தின் கற்பூர வாசனை (இடையில் சாணி வாசனையும் வரும்) என்னருகே வந்தும் உள்ளது மரணம் நேற்று காபி கடையில் (Starbucks) நான் ஒடு cup காபிக்காக காத்திருக்கையில் என் பக்கம் வந்து அமர்ந்திருந்தது எதுவும் பேசாமல் அதன் கண்ணின் ஓரம் நீர் துளி இருந்தது திடீரென ஒரு Right turn இல் என் car திருப்புகையில் மரணம் என் பக்கத்து seat இல் அமர்ந்திருந்தது என்னை கேள்வி கேட்குமாய் அதன் முகம் இருந்தது பின் அந்த இரவில் சரியாக நடுச் சாமத்தில் மனைவியை தேடி கைகள் போகையில் அருகே மரணம் படுத்திருந்தது இம்முறையும் ஒற்றை வார்த்தையும்…
-
- 36 replies
- 7.1k views
-
-
கண்ணெதிரே கலையுமா கனவு? மண்ணெனவே உதிருமா மனது? நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம் ஒப்பேற முன்னரே உருகியா போகும்? இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை? இது காலச்சுழி சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது. சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும். தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும். நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும். மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும். மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும். உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும். இன்றைய பொழுதுகள் எமக்கானவை. ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர் முக்காற்சுற்று முடித்துவிட்டது. சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ள…
-
- 36 replies
- 3.3k views
-
-
ஒன்பதாவது அகவையில் யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு! ***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 02*** தலைப்பு: யாழ் கீதம்! - யாழ் இணையத்திற்கான ஒரு கீதம்! கவியரங்கின் நடுவர்கள் பண்டிதர் தமிழ்தங்கை குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்! குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு! குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007 மாண்புமிகு யாழ் கள கவிஞர் பெருமக்கள் கவியரங்கை ஆரம்பித்து வழி…
-
- 36 replies
- 6.7k views
-
-
உன் கள்ளம் பிடிபட்டது ..... கண்ணாடியில் நீயே.... உன்னைபார்த்து பேசுகிறாய் .... என்றுதான் இதுவரையும் .... நினைத்தேன் ....!!! இல்லை இல்லை ....!!! என் உருவத்தை நினைத்து .... என்னோடு பேசுகிறாய் .... என கண்டுகொண்டேன் .....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 01 #### ஏய் .... நீ தூங்கிவிட்டு எழுந்த ..... போர்வை கசங்கியிருக்கும் .... வடிவத்தை பார் ...... இதய வடிவத்திலேயே .... சுருண்டு கிடக்கிறது ..... அத்தனை நினைவகளுடன் .... கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 02
-
- 36 replies
- 37.3k views
-
-
ஒவ்வொரு நாளும் குடைந்துகொண்டிருக்கும் கேள்விதான்.. பிறந்த நாளில் இன்னும் சற்று அதிகமாகவே குடையும் கேள்வி.. நானென்பது யாதென்பேன்..? ------------------------------------------- நானென்பது யாதெனப் புரியவில்லை... தேடித் தேடிக் களைத்து முதிர்ந்த மனக்காலத்தின் ஒரு மூலையில் பெருங்கேள்விக்குறியுடன் விழித்துக் கிடக்கிறது அறிவு... நானென்பது யாதென்பேன்..? எனை வனைந்த அனுபவங்களா..? மூளைத்திரட்சிகள் எங்கும் நீந்திக்கொண்டிருக்கும் நினைவுகளின் தொகுப்புகளா..? படித்து முடித்த புத்தகங்களா..? நம்பும் நம்பிக்கைகளின் சாயைகளா..? ஜீன்களின் வழி புகுந்த காலப்படுக்கைகளில் புதைந்துகிடக்கும் மூதாதைகளின் கனவுகளா..? சொல்லற்று நிற்கிறேன்... விளங்க முடியாப் புதிராக வெளியிலிருந்து …
-
- 35 replies
- 2.1k views
-
-
பச்சை மண்ணாய் பால் குடியாய் யாழ் வந்த போது தமிழோ வா வா என்ற தமிழர்கள் சிலர்.. இது தமிழா இவன் எல்லாம் உருப்படுவானா என்று மொழிய.. தத்தெடுப்பின் அடையாளமாகி அவை அமைய.. இணையத் தமிழ் கொண்டு அரவணைத்த யாழ் இணைய சொந்தங்களே.. பச்சை பச்சையாய் திட்டினும் யதார்த்தமாய் ஏசினும் வாயாரப் புகழினும் வாஞ்சையோடு வருடினும் வஞ்சகமில்லா எம் மொழியை கண்டறிந்திட்டு சொந்தம் கொண்ட... உறவுகளே. காலத்தால் தனித்துவிட்ட போதும் கலங்கரை விளக்கமாக கூட நின்ற சொந்தங்களே.. அன்னை இன்றி தந்தை இன்றி உற்ற சகோதரங்கள் கூட இன்றி அரவணைக்க உறவுகள் இன்றி அந்நிய தேசத்தில் கண்கண்ட நேரத்துக்கு மட்டும்.. கூடி மகிழும் நண்பரைக் காட்டிலும் கூட வந்த உறவுகளாய் அன்னையாய் தந்தையாய் சகோதரனாய்…
-
- 35 replies
- 2.4k views
-
-
அழகாயிருப்பேனா..? காயாத ரணங்கள் கொண்ட மனது கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால் கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் அழகில் நான் கறுப்பி ஆகிவிட்டதால் நிலைக்கண்ணாடியும் என் நிறத்தின் நிஜமாய் நிதர்சனமாய் சொல்கிறதே அழகின் வரைவிலக்கணம் எது என்று அறியவில்லை இதுவரை சிலந்திவலையை கொண்டு விண்மினை பிடிப்பது போல் இருக்கின்றது வாழ்க்கை இறந்த பிறகாவது நான் அழகாயிருப்பேனா..?
-
- 35 replies
- 6.1k views
-
-
நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.
-
- 35 replies
- 9.4k views
-
-
மார்கழி மாதத்து மாலை நேரத்தில் மலர்விழி உன்னை மலர்த்தோட்டம்தனில் கண்டேன்..... மழைத்துளியில் நீயும் மயங்கி விளையாடி மலர்க்கூந்தல் கலைந்து மயங்கி நின்ற வேளையில் மலர்க்கூட்டங்களில் மறைந்திருந்து பார்த்தேன் மலர்போன்ற உன் அழகை மரகதமே உன்னையடி மறக்கவே முடியவில்லை மயில் போன்ற உன் நடையும் மல்லிகைக்கொடியிடையும் மன்மதன் அவன் உன் அழகில் மயங்கிய நின்று மதியென விழித்துவிட்டேன் மான்விழியாள் எனைக்கண்டு..... புள்ளிமான் போல நாணம் கொண்டு ஓடியே மறைந்துபோனாள் என் இதயம் திருடிக்கொண்டு தேடினேன் காணவில்லை மாரிசன் மாறிவந்த பொன்மான் அவள்தானே?
-
- 35 replies
- 4.8k views
-