கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நெஞ்சம் எங்கும்நினைவாலே நிலைத்தவள்நித்தம் என் நினைப்பினில்நீர்க்கமற நிறைந்தவள்உடல் முழுதும் தழுவிஉவகை தருபவள்உதடுகளின் இடை புகுந்துஉல்லாசமாய் நுழைந்தவள்நாசி வழி புகுந்துநாபிக் கமலத்தை நிறைப்பவள்துள்ளி ஓடும் குருதியிலும்தீர்க்கமாய் நிறைந்தவள்அள்ளி ஆசையோடு முத்தமிடும்அழகுச் செவ்வண்ண மேனியாள்நிகரில்லா அவள் வனப்பின்நினைவுகளைச் சுமக்கிறேன்நித்தமும் அவள் மடி துயிலவேதகிக்கிறேன் தவிக்கிறேன்நாடிச் சென்று அவள் மேனி தழுவநாதியற்று நிற்கிறேன்...#ஈழத்துப்பித்தன்06.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post.html
-
- 0 replies
- 1.7k views
-
-
முருங்கை ஏறும் வேதாளம் முத்துப் பல்லக்கில் ஏறிடுமா? காலப் புரவி காற்றாக கண்களை விட்டு நகர்கிறது. யுத்த நிறுத்த அமுலாக்கம் பித்தம் நிறைத்து நகைக்கிறது. முருங்கை ஏறும் வேதாளம் முத்துப்பல்லக்கில் ஏறிடுமா? எத்தனை சபைகள் சென்றாலும் புத்தக ஞானம் வென்றிடுமா? நடுவர் என்பவர் நலன்விரும்பி நட்பாய் நிற்போம் தலைவணங்கி அடிமை என்பது பொருளல்ல - எம் தேசியம் வெல்லும் திறன் சொல்ல. உலக வேதங்கள் எமக்குதவா.. ஊமையாக்கி எமை வாட்டும். உரிமை எவரும் தருவதில்லை. உன்னிப்பாக எண்ணிப்பார்! மெய்யதை வருத்திப் புண்பட்டோம். மேனியில் எத்தனை காயங்கள். பொய்யதுவாகிப் போய்விடுமோ? புூமிப்பந்தே கண்திறவாய்! வேளைகள் வந்தும் வெறுமையுற்றோம். வீரம் நிறைந்தும்…
-
- 7 replies
- 1.7k views
-
-
எந்த வெள்ளை புறா நடந்து சென்ற பாத சுவடுகள் இந்த நட்சத்திரங்கள்?! வானம் இரவு நேரங்களில் போர்த்திக் கொள்ளும் பொத்தல் நிறைந்த போர்வையா இந்த நட்சத்திரங்கள்?! பால் நிலா தோட்டத்தில் பூத்திருக்கும் தேன் மல்லிப் பூக்களா இந்த நட்சத்திரங்கள்?! வானம் சுத்தம் செய்யப்படுவதற்காய் தெளிக்கப்பட்ட சோப்பு நுரைகளா இந்த நட்சத்திரங்கள்?! மேக தேவதைகளின் உறக்கத்திற்காய் வான் மெத்தை மேல் தூவப்பட்ட வெள்ளிப் பூக்களா இந்த நட்சத்திரங்கள்?! நிலாவிற்கு வர்ணம் பூசினப்போது சிந்தின துளிகளா இந்த நட்சத்திரங்கள்?! விதியினை எழுதும் எழுதுகோலில் மை உள்ளதா என்று இறைவன் உதறிப் பார்த்த துளிகளா இந்த நட்சத்திரங்கள்?! வானம் …
-
- 6 replies
- 1.7k views
-
-
முரண்பாடுகள்!!! இரவும் பகலும் சிகப்புச் சிங்கமாய் இறுமிய எனகுள்ளே ஏதோ சில முரண்பாடுகள் தமக்குள்ளே அடிபட்டுக்கொள்கிறது என் மனதில் அய்யரை பேசி கோயிலை திட்டி சாத்திரங்களை எரித்து..வேதாந்தம் பல பேசிய பல பேரில் நானும் ஓருவன்! வீரமகன்! சிகப்புச்சிங்கம்! திருமணம் என்கிற பந்தம் வந்ததோ வந்தது! மாமாவின் புற்றுநோய்க்கு என் மனைவி கதிர்காம கந்தனிடம் வைத்த நேர்த்திக்கு நேரம் பார்த்து போய் வந்தோம்! மாமிக்கு வயசாகி கண் மங்கலாய்த் தெரிய என் மனைவி கனடா ஐயப்பனுக்கு நேர்த்தி வைத்தாள் "ஐயப்பனே என் அம்மாவின் கண்கள் சரியாக வர என் கணவர் இந்த முறை மாலை போடுவார்" நண்டு உயிரோடு இருந்தா…
-
- 11 replies
- 1.7k views
-
-
செல்லாதா எங்கள் பா...?? துடுப்பை பறித்து- நீ தூர எறிந்தால் கரைக்கு போகாதா எம் கவிதை படகு...?? இடுப்பை உடைத்து- எம்மை இருத்தி வைத்தால் நடந்து போகாதா- எங்கள் நறுக்கு வரிகள்...?? குப்பி விளக்கதில்- நாம் குத்தும் வரிகள் எட்டி பார்க்காதா எங்கள் தேசம்...? எழுது முனையை- பறித்து சிறையில் இட்டால் பறந்து போகாதா- எங்கள் பா வரிகள்...?? -வன்னி மைந்தன்-
-
- 8 replies
- 1.7k views
-
-
மலரே என்பான் அவன் வண்டே என்பாள் அவள் மலர் மீது வண்டு உறவாட மலரும் உறவுக்குள் விளையும் குண்டுமணிகள் விடப்படுவது குப்பையில்...! கடைசியில்.. தகாத உறவென்று பெயர் வைக்கும் சமூகம்... மனிதம் குப்பையில் சேர்வது அறிவதில்லை.!!!
-
- 1 reply
- 1.7k views
-
-
என் ஊரில் முற்றத்து நிலவு என்னைத் தேடித் தவிக்க, ஊரைவிட்டு வந்த நான்... நிலவைத்தேடி, கண்கூசும் மின் விளக்குகளோடு அலைகின்றேன்... முகவரியில்லாத தேசமொன்றில்!!! அம்மாவின் நிலாச்சோறும், மண்வாசனையும்... அடிக்கடி அனுப்பும்... அன்பான அழைப்பிதழ்களையும், என் சூழ்நிலைக் காவலர்கள்... என் மன குப்பைக் குழியில், அப்போதே போட்டுப் புதைக்க... இருட்டு மட்டுமே துணையாக!! இன்னும் நிலவைத் தேடியபடி.... நான் முகவரி தெரியாத பயணத்தில்... பசியோடு!
-
- 6 replies
- 1.7k views
-
-
புலிகளை துரோகி என்றேன். அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள். ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன். பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள். பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது, நான் புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன். எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள். போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன். சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன். என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள். வெளிப்படையாக வரவா என்றேன். இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான் எங்களுக்கு வசதி என்றார்கள். இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன். அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வானாந்தரங்களிலும் வீ…
-
- 11 replies
- 1.7k views
-
-
எழுதா மறையாக இருந்தவனை எழுதவைத்த நண்பிக்கு நன்றி குடத்துள் விளக்காக இருந்தவனை குன்றிலே ஏற்றிவைத்தீர் நன்றி நண்பனாக வந்த எனக்கு உன் இதயதில் அண்ணாவாக இடம்தந்தாய் நன்றி நம் நட்புக்கு பாலமாக இருந்த அந்த மலர்களுக்கும் நன்றி கூண்டுக்கிளிபோல இருந்த என் சிந்தனையை சிறகுகள் விரித்து பறக்க வைத்தாய் நன்றி வீணாக இருந்த என் பேனாவுக்கு ஒரு அர்த்தம் கொடுத்தாய் நன்றி உன்னுடய அன்புக்கு நன்றி சொல்ல என் கவி நயத்தில் வார்த்தைகள் இல்லை நன்றி
-
- 7 replies
- 1.7k views
-
-
பாலை நிலமாகி வரண்டுபோன என் வாழ்வில் ஒற்றைப் பூவாய் வந்து சோலையாகிப் போனவள் நீ விடியாத அந்த இரவுகளில் என் விசும்பல்களின் வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து மலர்மாலை தொடுத்தவள் நீ
-
- 20 replies
- 1.7k views
-
-
.... "நல்லூர் புத்தசாமி கோயில்" ... நாலு வரி எழுதுங்கள்
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
இருளுக்குள்ளும் நிழலை தேடியவர்கள் ... கண்ணி வெடிகள் விதைத்த வயலில் பாதை தேடியவர்கள் .. சன்னங்கள போகும் உயரம் அளத்தவர்கள் ... கந்தக பொதி சுமந்து வந்தோருக்கு பாதை காட்டியவர்கள் .. ஓடும் பாதையில் இருக்கும் தடைகள் அறிந்தவர்கள் ... கம்பி வேலியின் எண்ணிக்கை தெரிந்தவர்கள் ... பலமான இடத்தில் பலவீனம் தேடியவர்கள் .. தலைவன் சொல்லும் பாதையை எடுப்பவர்கள் .. வெடி விழுந்தாலும் கதறி அழாதவர் ... தோழனுக்கு சைகையால் ஓடிடு என்று சொன்னவர்கள் ... குண்டை கழட்டி தன்னுடன் அணைத்தவர் ... எதிரி நெருக்கி திருப்ப எமனாகி போனவர்கள் .. தங்களின் பணியை தரவுடன் தந்தவர்கள் ... தலைவன் சொல்லுக்கு தலைசாய்த்து நின்றவர்கள் .. தாக்கும் இறுதி கணம் வரை ரகசியம் காத்தவர் ... வெற்றி களிப்பிலும் இணையாது …
-
- 8 replies
- 1.7k views
-
-
காதல் அம்மாவின் மார்புக்குள் அப்பாவை தொட்டபடி விளையாட்டுப் பொம்மையுடன் தூங்குகிறேன். வெளியில் நான் இலைபோட்டுக் காப்பாற்றிய மழைவெள்ளத்தில் நனைந்த எறும்பு குளிருக்கு என்ன செய்யும்? ஐயோ பாவம்! எல்லாமே என் சொந்தம் சொந்தங்கள் எல்லாமே எனக்காக என்கிறது குழந்தை எனக்குப் பசித்திருக்கும் அவனுக்குப் பால் கொடுப்பேன். எனக்குத் தூக்கம் வரும் அவனைத் தாலாட்டுவேன். தந்தைக்குச் சேமித்த நேரத்தையும் அவனுக்குச் செலவு செய்வேன் என்கிறாள் தாய் என் வலிய தோள்களே வலிபெறுமளவுக்கு சுமப்பேன். முடமான கால்களால்கூட அவனைச் சுமந்து நடப்பேன். வீட்டுக்கொரு கொலுசுச் சத்தம் கூட்டி வந்த பின்பும் கண்ணை இமைபோல அவனை நான் காப்பேன். என்கிறார் தந்தை. …
-
- 3 replies
- 1.7k views
-
-
வாரஇறுதி விடுமுறைகூட வருடங்களின் பின்புதான் ஓய்வின்றிய உழைப்பில்.. தொலைந்து மறையும் தொலைதூர உறவுகள் தொலைபேசி அழைப்பில்.. முழுநாளும் வேலைக்குள் தடம்மாறும் நண்பர்கள் முகம்பார்க்க முடியாமல்.. தொலைவில் இருந்து தொலைபேசிக்குள்ளே குடும்பம் நடத்தி.. தூங்கியெழ மட்டும் வீடுவந்து செல்லும் குடும்பத்து உறவுகள்.. பம்பரமாய் உழைக்கும் பரதேசி வாழ்க்கையின் பாழாய்போன கொள்கை.. பசிக்கும்போது உணவு களைத்தபோது தூக்கம் கிடைத்தாலே போதும்.. வருஷங்களுடன் சேர்த்து வாழ்க்கையை தொலைக்கும் வலிமையான வட்டத்துள்.. முடிவற்ற பாதையில் தெளிவற்ற பயணமாய் புரிந்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
முதல் வசந்தப் பாடல் வ.ஐ.ச.ஜெயபாலன் சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில் மீனவ குப்பங்களில். பூத்த மரங்களின் எச்சங்களில் குயில்கள் பாட மாலைசூடிய குழந்தைகள் எசப்பாட்டுப் பாடியதை கண்ணீரூடு பார்த்தது போல இன்றும் கரைந்தபடி.. . மனிதனின் வாழும் ஆசையை எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும் பறித்து விட முடியாது என்றபடி வருடந் தோறும் கீரோசீமா நாகசாக்கியில் செறிகள் மலர்கிறதுபோல என் மண்ணிலும் முறிந்த வேம்புகள் மலர்கின்றன.. . . இற்றை வசந்த இப்பூந் தென்றலில் சுட்டெரிக்கப் பட்ட எங்கள் சோலைகளின் எச்சங்களில் பிள்ளைகளின் மதளைக் கூவலில் காமுற்று குயில்கள் பாடுகின்றன பாதைகளில் கால் மிதிக்க உயிர் கிழிகிறது. குலதெய்வங்களின் கல்லறைகளை உடைத்து …
-
- 7 replies
- 1.7k views
-
-
என் கல்லறைச் சினேகிதியே...... கவிதை....... என் கல்லறை சினேகிதியே உன்னை காணவென்று வந்தேன் உனை காக்க வரவில்லை....! நீ சொல்லிவிட்டுச் சென்ற என் கடமைகள் ஏராளம் அதிலும் சில நிமிடங்கள் உனக்காய் தருகிறேன்... அதுவே ஏராளம்....! பல வருங்களாய் நம் தேசத்துக்காய் போரிட உன் தூக்கம் இழந்தாய்.... உன் தாமரை விழியிரண்டும் செண்பக விழியானாய்.... உன் பஞ்சுப் பாதங்களால் பாறையிலும் நடந்தாய்.... எதிரியை எதிர்த்து மண் காக்கும் சமரில் விதையாக விழுந்து என் விழியையும் திறந்தாய்..... கல்லூரிக் காலத்தில் நீ என் கண்கவரும் காதலி நானோ உன்னைத் தேடுவேன் ; நீயோ விடுதலையைத் தேடிச்சென்றாய்... மூடிய சிறையில் உலவும் சுத…
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
விடியலின் பாதை அனு தினமானது. கொடியரின் பாதை அது மாதிரியே நாளும்,பொழுதும் கொலை,கடத்தல் இந்த சம்பவம் இல்லையெனில்-அது சிறீலங்காவே இல்லையென ஆச்சு. இணையத்தை பார்த்தால் ஆளாளிற்கு தனது கற்பனையால் இன்னமும் எரிகின்ற நெருப்பில் பிடுங்கிய வரை லாபமென ஏதேதோ எழுதுகின்றார். வீரம் மெளனித்தால் ஈரமுள்ள நெஞ்சகம் என் செய்யும்? நிலைமை ஒன்றும் சீராக இல்லை. இதற்குள் எத்தனை சீரழிவை இன்னமும் செருகுவர்? தூற்றுவதே சிலரது பொழுதாக தேற்றும் உள்ளகச் செழிப்பகற்ற ஊற்றுக் கண் இருந்தும் இல்லாததாய் இழவுகள் சேதி எழுதும். மாற்றம் தேடும் மனிதங்களை கறைப்படுத்தும் காகிதங்கள் வரையின்றி ---- குழப்பம் ஏற்படுத்துவதில் குறியாக சில துன் மார்க…
-
- 5 replies
- 1.7k views
-
-
பூத்திருந்த பாவையரும் காத்திருந்த காளையரும் கடிமணம் கொண்ட காலம் என்னவோ கம்பன் காலம் தான்_இன்று இருமனங்கள் இணைவதல்ல இருபணங்கள் இணைவதே திருமணம் அம்மிமிதித்து அருந்ததி பார்க்கும் திருமணத்தின் அரங்கேற்றம் என்னவோ அஞ்சாறு மில்லியனில் தான் மண்டபம் எடுத்து மணவறை கட்டி மாப்பிள்ளைக்கு பட்டுவேட்டி கொடுத்து மாற்று மோதிரம் கொடுத்து முப்பதுபவுண் தாலி கூறையுடன் மூக்குமின்னிவரை பெண்பெற்றவர் கொடுத்து முடிந்தால் மோட்டார் வண்டியும் கொடுத்து மாலையிட வேண்டும் மங்கைக்கு இத்தனையும் செய்திட பெற்றவர்கள் சிந்துவது வியர்வையல்ல ரத்தமே எத்தனை ஆண்களுக்கு தெரியும் திருமணச் சந்தையில் விலைபோகும் கடாக்கள் தான் நாம் என்று... அதிகம் படித்தால் அதிகம் சீ…
-
- 11 replies
- 1.7k views
-
-
கும்பாபிசேக மேளச்சத்தத்திலும் அமைதியாய் இருக்கும் சாமி போல அடக்கம் உனக்கு எப்படி நாதஸ்வர இசைபோல வாசித்தாய் உன் காதலை * அழும் குழந்தையைக்கூட அழகாய் சிரிக்கவைத்து புகைப்படம் எடுக்க தெரிந்த கலைஞன் நான் எப்படி உன் அழகான புன்னகை மட்டும் புரியாமல் போனது எனக்கு * பொறுக்கவே முடியவில்லை என் மறதிகளை நீ கொட்டித்தீர்த்த ஞாபகங்கள் அவ்வளவும் அளவில்ல பொக்கிசங்கள் * பிழையின்றி தமிழ் எழுத தெரியாத என்னை கவிஞனாக்கவே வந்து தொலைத்திருக்கிறது காதல் * வெக்கப்படுவதற்காகவே சேலை கட்டும் பெண்கள் மத்தியில் வெக்கத்தையே ஆடையாய் கட்டியிப்பவள் நீ -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 1.7k views
-
-
காதலோடு நான் . . .01 வானத்து நிலவோ வடித்தெடுத்த பொற்குடமோ கானமயிலோ கவர்ச்சிமிகு தேவதையோ தங்கப்பதுமை ஒன்று தரணியில் வந்ததுவோ கோபுரக் கலசமொன்று கோதையாய் மாறியதோ வானவில்லொன்று நிமிர்ந்து இன்று பெண்ணானதோ கம்பன் காணமறந்த காவியப் புதல்வியோ எண்ணிலடங்கா வார்த்தைகளால் இழைத்துப்பின்னிய கவிதையோ கோதை இவள் யாரோ ? கோமகன் மகள்தானோ ? கோவலனை கொள்ளை கொண்ட மாதவி இவள் தானோ ? கண்ணெதிரே தோன்றியதும் கவிதை மழை கொட்டுகின்றதே பனித்துளி வீழ்ந்து புல்நுனி மருகுவதுபோல் பவளக்கொடி பார்வையினால் பாவிமனம் பற்றுகின்றதே ! பிரம்மனின் கைவண்ணத்தில் பிறந்த பொற்கொடியை புவியிலே வடித்துவைத்த சிற்பிகள் யாரோ ? அந்தரத்தில் பறக்கவைத்து அற்ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
வீர வணக்கம் அண்ணனே.... இடியென வந்துன் செய்தி விழுந்தது இதயம் உடைந்தது விழிகள் கதறுது மொத்த தமிழினம் எங்கணும் கதறுது உன்னை இழந்தெம் தேசமே அலறுது.... ஈழ வானின் உதயம் மறைந்தது எங்கள் வானில் காரிருள் படர்ந்தது தாயை இழந்த சேயினை போல உன்னையிழந்து தமிழினம் கதறுது.... எங்களின் உரிமை வென்றிட வேண்டி எத்தனை செய்தாய் நீயே ஓடி நோயுடல் உன்னை வாட்டையில் கூட ஓய்வின்றி உழைத்த உத்தம வீரா.... எங்களை விட்டு ஏனின்று பிரிந்தாய்....??? காலதேவன் ஏன் உன்னை கடுகதியில் அழைத்தான்....??? ஓடியே வந்த பகைகள் எல்லாம் நீ ஏறிய களமதில் ஒழிந்தே போகும்..... உன் மதியுரை கேட்டு அரக்கன் கூட ஆடியே போவான் …
-
- 5 replies
- 1.7k views
-
-
மழைக்காலம் துவங்கும் மேய்ச்சல் நிலங்களை புற்கள் போர்த்தியிருக்கும் எல்லாம் எரிந்த சாம்பலிலிருந்து மூங்கில் துளிர்க்கும் நொண்டி நாய் தங்க நிறகுட்டிகள் நான்கை ஈனும் நீண்ட குரலெடுத்து பாடும் ஒற்றை வால்க்குருவி கூடடைந்திருக்கும் வண்ணத்து பூச்சியொன்றின் நிறங்கள் குலைந்திருக்கும் தூறல் நின்றபின் வெளிக்கிடும் தவளைக்காக நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும் குயவனின் கனவுகளுக்குள் தலைபிரட்டை நீந்த கற்றிருக்கும் சம்பா நாற்று நீரில் மிதந்திருக்கும் பெருங்கிழவன் உளம் விளைந்திருக்கும் செப்பனிடாத கூரைவழியோடும் மழையருவி சிலந்தியின் பின்னலில் சன்னல்களை வரைந்திருக்கும் விட்டில…
-
- 14 replies
- 1.7k views
-
-
கலி முத்திப் போச்சு இன்னும் மேலே மேலே எட்டாத உயரத்தைத் தொட்டுவிடும் துடிப்புடன் இறக்கைகளை அடித்து எழும்பிட முயல்கிறாய் ஆயினும் வாடையின் வேகம் உன் ஆடையை உரசி கட்டுக்குள் அடங்காத உன் கனத்த இறக்கைகளை முறித்திட முயல்கையில் ஏதிர்க் காற்றை முறியடித்து நீயோ எத்தனை தவிப்புடன் காற்றின் திசை நோக்கி வேகம் பிடிக்கிறாய் வேகம் அதைவிட வேகம் ஆனாலும் நீ பெட்டைக்குருவி பேதமை உன்னுடன் கூடப் பிறந்த புpறவிக் குணமா? ஏனோ தெரியவில்லை ஏகிறி எகிறி உன் சிதறிய கனவுகளுடன் கீழே கீழே இன்னும் கீழே மண்ணோக்கிய உன் மனச் சிதைவுகளுடன் வலியின் வேதனையை மிடறுக்குள் விழுங்கியபடி மனப் புதிருக்குள் மண்டிக் கிடக்கின்றாய் விதியின் கையிலோர் விளையாட்டு…
-
- 4 replies
- 1.7k views
-
-
நாங்கள் நடந்தது…….! நாங்கள் நடந்தது உங்கள் வாழ்வு தலைநிமிர தலைநிமிர்வுக்காகத் தலைதந்து களம் வீழ்ந்தோம் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து நிமிர்வதற்கே நிமிர்வதற்காய் நிமிருங்கள் நீதிக்காய் துணியுங்கள் துணிவுடைத்தோன் தலைவனவன் சொல்லியதை மறக்காதீர் மறக்காது மதிநுட்பம் தாங்கியோராய் மதிகொடெழுந்தலே எழுச்சியிலே பேரெழுச்சி காணுகின்ற நிலை தோன்றும் தோற்றத்தின் தொடராக மாற்றங்கள் நிகழ்ந்தேறும் ஏற்றமதை காண்பதற்கு எங்களுக்குள் எழுச்சிகொள்வோம் தன்னெழுச்சி கொள்ளாது மண்னெழுச்சி கொள்ளாது கொள்கையிலே உறுதிகொண்டோர் தோற்றதில்லை உலகினிலே …
-
- 1 reply
- 1.7k views
-
-
அங்கே பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன நாம் ‘எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன? என்று விசாரித்துக்கொண்டிருக்கின்றோம். அங்கே குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன நாம் பட்டாசு வெடித்துப் பரவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் வேட்டையாடப்பட்டுக் கதறிக்கொண்டிருக்கின்றார்கள் நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் நாம் ‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்று பட்டிமண்டபம் நடத்திக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் வெளிச்சத்தின் விளைச்சலுக்கு ரத்தம் சொரிந்துகொண்டிருக்கின்றார்கள் நாம் இருட்டுக்காடுகளுக்கு…
-
- 1 reply
- 1.7k views
-