கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மே 18....!!! எங்கள் தேசம் எரிந்து போனது.. எங்கள் உறவுகள் கருகிப்போனார்கள்.. எங்கள் கனவுகள் கலைந்து போயின... எங்கும் சாவீட்டு சத்தமே காதில் விழுந்தது. எத்தனை நாட்கள் வலி சுமந்தோம்! எத்தனை நாட்கள் உயிர் கருகினோம்! எத்தனை நாட்கள் பசியில் துடித்தோம்! எத்தனை நாட்கள் கதறி அழுதோம்! துண்டுதுண்டாய் சிதறிப்போனது சின்னப்பிஞ்சு கண்முன்னே பிள்ளையின் உயிர் பிரிய கட்டியணைக்க கையில்லா அம்மா குண்டு துளைத்து குடல் கிழிந்து தொங்கி குற்றுயிராய் குழறி அழுதாலும் கண்கள் பிதுங்கி விழுந்து மரண ஓலம் எழுப்பினாலும் நின்று துயர் தீர்க்க நேரம் இன்றி உயிரை மட்டும் கையில் கொண்டு ஓடினோமே!!! முலையில் பால் வற்றி குருதி வடியும் அதையும் பசியால் பிஞ்சு குடிக்க வலியால்…
-
- 2 replies
- 947 views
-
-
பாடலற்ற நிலம் .. நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள் இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள். எங்களுக்கு ஒரு கனவு இருந்தது எங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது எங்களுக்கு ஒரு நாடு இருந்தது அப்பொழுது எங்களுக்கு ஒரு கொடியும் பாடலும் இருந்தது. இன்று எங்கள் நகரத்தில் அந்நியக் கொடி பறக்கிறது எங்கள் நிலத்தில் அந்நியப் பாடல் ஒலிக்கிறது அன்று எங்கள் நகரத்தில் எங்கள் கொடிகள் பறந்தன எங்கள் நிலத்தில் எங்கள் பாடல் ஒலித்தது. அன்று எங்களுக்கு காவல் இருந்தது இன்று நாங்கள் காவல் இழந்திருக்கிறோம் அன்று எங்களுக்கொரு தலைவன் இருந்தான் இன்று எங்களுக்கு யாருமில்லை! தீபச்செல்வன் …
-
- 1 reply
- 714 views
-
-
கொள்ளை நோய் அகதிகள்- மனுஷ்ய புத்திரன் March 29, 2020 - மனுஷ்ய புத்திரன் · இலக்கியம் கவிதை கொரோனோ கொள்ளை நோய் அகதிகள் மனுஷ்ய புத்திரன் அங்கு கைவிடப்பட்டவர்களின் மிகப்பெரிய ஊர்வலமொன்று சென்றுகொண்டிருக்கிறது போர்கள் வருவதற்கு முன்பு அகதிகள் வந்து விடுகிறார்கள் கொள்ளை நோய் பரவுவதற்கு முன்பு கொள்ளை நோய் அகதிகள் புறப்பட்டு விட்டார்கள் பெரியவர்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் சுமந்துகொண்டு அவர்கள் கடக்க முடியாத விதியின் தொலைவொன்றைக் கடந்துகொண்டிருக்கிறார்கள் சிறுவர்களும் சிறுமிகளும் தட்டு முட்டுச் சாமான்களை சுமந்தபடி நடந்துகொண்டிருக்கிறார்கள் கால்முறிந்த மனைவியை சுமந்துகொண்டு …
-
- 0 replies
- 660 views
-
-
“அழகான கொலைகாரியே😷” அழகான கொலைகாரியே அடிவயிற்றை கலக்கிறியே வளமான எம் வாழ்வை வந்தேனோ அழிக்கிறியே பாழான பழக்கத்தால் உருவான அழகே-இன்று உலகெல்லாம் பரவிநீ-எம் வாழ்வில் செய்வதெல்லாம் இழவே உறவோடு நாமிங்கு உறவாட முடியாமல் எம் மிடைவந்த சதிரே இவ்வுலகையே உலுப்ப உருவான புதிரே சத்தமின்றி பெரும் யுத்தமின்றி கொத்துக்கொத்தாய் உயிர் அள்ளிபோறவளே சத்தியமாய் சொல்லு உனை ஏவியவன் எவனோடி உன்னை நாம் தொட்டதில்லை முத்தமிட்டதில்லை ஏன் பார்த்தது கூட இல்லை எப்படி எம் சுவாச அறைவரை வந்தாய் கண்கானா அழகே உனை கவிதையாய் வடிக்குமுன் எத்தனை முறை தும்மிவிடுகிறேன். ஒருவேளை என்னையும் நினைப்பதை உணர்த்தும் அறிகுறியாடி உனை தாங்கும் தைரிய…
-
- 5 replies
- 2k views
-
-
பாட்டி வீட்டுப் பழம் பானை பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா அந்தப் பானை ஒரு புறம் ஓட்டையடா ஓட்டைவழி ஒரு சுண்டெலியும் அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா உள்ளே புகுந்து நெல் தின்று தின்று வயிறு ஊதிப் புடைத்துப் பருத்தடா மெள்ள வெளியில் வருவதற்கும் ஓட்டை மெத்தச் சிறிதாக்கிப் போச்சுதடா பானையைக் காலை திறந்தவுடன் அந்தப் பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு பூனை எலியினைக் கண்டதடா அதை அப்படியே கௌவிச் சென்றதடா கள்ள வழியில் செல்பவரை எமன் காலடி பற்றித் தொடர்வானடா! நல்ல வழியில் செல்பவர்க்கு தெய்வம் நாளும் துணையாக நிற்குமடா! படித்ததில் பிடித்தது குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
-
- 9 replies
- 7.4k views
-
-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கவிதை இதோ! "உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே!" உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே! #coronavirusindia #CoronaVirusUpdate — வைரமுத்து (…
-
- 16 replies
- 2.5k views
-
-
uary 8, 2020 - Editor · இலக்கியம் / கவிதை பாய் பெஸ்டி என்பவன் கனவுகளால் ஆனவனல்ல கண்ணீரால் ஆனவன் ஒரு பாய் பெஸ்டி பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் வாழ்பவனல்ல; அவன் வாழ்வது பாதிக் கணவனாக பாதிக் காதலனாக ஒரு பாய் பெஸ்டி ஒரு பெண் உடுக்கை இழக்கும் ஒரு கணத்திற்காக இடுக்கண் களைய அவள் அருகிலேயே காத்திருக்கிறான் ஒரு நிழலாக அதுகூட அல்ல ஒரு நிழலின் நிழலாக ஒரு பாய் பெஸ்டிக்கு ஒரு பெண்ணின் கணவனின் முன் எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் அதே …
-
- 19 replies
- 5.3k views
-
-
முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு: ஆற்ற ஒண்ணா அஞர் சேரன் சில வாரங்களுக்கு முன்பு தொறொன்ரோ நகரின் மத்தியில், குளிரில் மெல்ல நடுங்கியவாறு, குளிராடையுமின்றிக் கோப்பிக் கடையொன்றின் வாசலருகே கோப்பியொன்று வாங்கித் தருமாறு போவோர் வருவோர் எல்லோரையும் இரந்த ஒரு தமிழரைக் கண்டேன். எனது வீட்டுக்கு அருகில் ஸ்கொட் மிஷன் நூறு ஆண்டுகளாக நடத்திவரும் வீடற்றவர்களுக்கான இரவுநேரத் தங்குமிட வாயிலில் அவரை அடிக்கடி கண்டிருந்தாலும் பேச வாய்ப்புக் கிடைத்ததில்லை. (ஒருமுறை இந்த மிஷனுக்குச் சாப்பாடு வழங்க என இடியப்பம் எடுத்துச் சென்றபோது, அங்கிருந்த அம்மணி, “இங்கு வருபவர்கள் இத்தகைய அந்நியச் சாப்பாடுகள் சாப்பிட மாட்டார்கள். வேறு ஏதாவது கொண்டு வாருங்கள் என்று சொன்னது நினைவு வந்தது”) …
-
- 6 replies
- 2.6k views
-
-
-
-
ஒளித்து வைக்கப்பட்ட நாடு என் கிராமத்தின் பெயரை திரித்தனர் மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை ஒளிக்க முடியுமென நினைத்தனர் என் நாட்டின் அடையாளமோ பாறைகளைப் போல உறுதியானது எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி என்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர் சூழச்சிகளால் மறைக்க முடியாத என் நெடு வரலாறோ நதிகளைப் போல நீண்டது எனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி என் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர் தந்திரங்களை கடந்து பிரகாசிக்கும் எனது உறுதியான அடையாளங்களோ தீயைப் போலப் பிரகாசமானது கண்ணுக்குப் புலப்படாமலெனை மிக மிக எளிதாக அழிக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
முள்ளிவாய்க்கால் பரணி! கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமென்றனர் …
-
- 0 replies
- 595 views
-
-
ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம் வரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் எல்லோருடைய அழுகையையும் துடைக்கும் அவர்களால்தான் இறுதிக் கணத்தில் புன்னகைக்க முடியும் எல்லோருடைய துயரையும் துடைக்கும் அவர்களால்தான் இறுதிக் கணத்தில் ஒளிமுகத்துடன் செல்ல முடியும் கழுத்தில் சைனைட் குப்பி தோளின் குறுக்கே சன்னங்களின் மாலை துப்பாக்கியை கையளித்து மாண்டுபோன தோழியின் நினைவில் மறந்தாள் களம் செல்லத் தடுக்கும் தாயின் குரலை துப்பாக்கியை ஏந்திக் கையசைக்கும் விழிகளில் தேசத்தி…
-
- 0 replies
- 699 views
-
-
வாழ்க்கை .................. தம்பிக்குக் கிரிக்கெட்மீது பைத்தியம் தனக்குப்பிடித்த நாடகத்தை தியாகம் செய்வாள் அக்கா ................. மகள் முள்ளை எடுக்கச் சிரமப்படுவாள் தலையை தான் எடுத்துவிட்டு வால் பகுதியை மகளுக்கு விட்டு வைப்பார் அப்பா ................... வளருகிற பெடியனுக்குச் சத்துத் தேவை கறியில் இருக்கும் தனக்குப்பிடித்த மீன் சினைகளை மகனுக்கு தெரிந்து எடுத்துக்கொடுப்பாள் அம்மா ........................... தங்கைக்குக் கல்யாணம் முடியட்டும் தன் காதலை கட்டுப்படுத்திக்கொள்வான் அண்ணன் .......................... அக்கா சொகுசாய் வாழவேண்டும் கடன்காரனாகிப்போவான் தம்பி ........................ அவள் நீண்டநாள…
-
- 6 replies
- 1.9k views
-
-
என்னா நான் உனக்கு ஆன்ட்டி இந்தியன்னா
-
- 2 replies
- 1.8k views
-
-
கடவுளின்_கைபேசி_எண்..? ஐந்துவேளை தொழும் முல்லாக்களே உங்கள் அல்லாவின் கைபேசி எண்ணைத் தாருங்களேன் என்னிடம் சில கேள்விகளுண்டு.. புனித இஸ்லாத்தின் பெயரில் பூவுலகெங்கும் நடக்கும் பயங்கரவாதங்களில் பொசுங்கிக் கருகும் பிஞ்சுக் குழந்தைகள் பெண்களின் கதறல்கள் உங்கள் காதுகளில் ஒருபோதும் விழுவதேயில்லையா..? அரை நூற்றாண்டு காலமாக ஒரு அந்திப் பொழுதுகூட அமைதியாகக் கண்ணுறங்க முடியாத காஷ்மீரத்து மக்களின் கண்ணீரைத் துடைக்க கருணையின் வடிவான உங்கள் கரங்கள் ஏன் ஒருபோதும் நீளவேயில்லை..? ஆறுகால பூஜை செய்யும் அம்பாளின் அர்ச்சகரே அம்பாளின் கைபேசி எண்ணைத் தாருங்களேன் அம்பாளிடம் ஒரு கேள்வி... ஆசிஃபா எனும் அப்பாவிக் குழந்தையை ஆறு …
-
- 8 replies
- 1.5k views
-
-
குர்து மலைகள்பெண் கொரில்லாக்கள்ஏந்தியிருக்கும் கொடியில்புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக யூப்ரட் நதியிருகே ஒலிவ் மரம்போல் காத்திருக்கும் பெண் ஒருத்தி இனி அவன் கல்லறைக்கு கண்ணீருடன் செல்லாள் ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல தலைமுறை தோறும் விடுதலை கனவை சுமந்து சுதந்திரத்தை வென்ற உம் இருதயங்களில் பூத்திருக்கும் பிரிட்டில்லா மலர்களின் வாசனையை நான் நுகர்கிறேன். குருதி ஊறிய குர்து மலைகளே உமது தேசம் போல் எமது தேசமும் ஒர்நாள் விடியும் எமது கைகளிலும் கொடி அசையும் கோணமலையிலிருந்து உமக்குக் கே…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
பிரசவ அறை வாசலில் "பெண் குழந்தை" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும் புன்னகையிலும் வரும் இசை போல இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசை அமைத்ததில்லை... வீட்டில் அதுவரை இருந்த என் அதிகாரம் குறைந்து போனது அவள் பேச ஆரம்பித்த பிறகு... "அப்பாவுக்கு முத்தம்" என நான் கெஞ்சும் தோரணையில் கேட்டால் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ எனக்கு சொத்தெழுதி வைத்த புன்னகை வீசி செல்வாள்... என்னுடன் தினமும் விளையாடிய என் ரோஜாப்பூ, பூப்பெய்த நாளில் கதவோரம் நின்று என்னை பார்த்த பார்வைய…
-
- 7 replies
- 1.4k views
-
-
"தட்டி வான்" ------------------- 'தட்டி வான்' எங்கள் ஊர் எல்லைகளை தொட்டுச் செல்லும் 'சிற்றி' வான் அச்சுவேலி தொடங்கி ஆவரங்கால் ஊடறுத்து 'குரும்பசிட்டி'க்கு கூடச் சென்று சில்லாலை, பண்டத்தரிப்பில் சிலிர்த்து நிற்கும் 'கொத்தியாலடி' ஆசுப்பத்திரிக்கும் 'கூத்தஞ்சிமா' சந்தைக்கும் அத்தனாசியாரின் 'சித்த' வைத்தியசாலைக்கும் சிறப்பான சேவை செய்யும் காலைப் பொழுது 'தெல்லிப்பளை'யில் 'கரிக்கோச்சி' இரயிலின் வருகைக்காய் 'படலை' ஓரம் பார்த்து நிற்கும் விவசாயிகளின் விளைச்சல்களை சலிக்காமல் சுமந்து செல்லும் இரயிலடி அம்மனையும் 'தவளக்கிரி'முத்துமாரியை…
-
- 4 replies
- 1.8k views
-
-
வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றனசிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல என்னுடைய மண்ணில்ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறதுமணிப்பூரில் ஒலிக்கும்இந்திய கீதம்போல என்னுடைய மண்ணில்ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறதுதிபெத்தில் பறக்கும்சீனக் கொடி போல என்னுடைய விரலில்நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறதுமியன்மாரியரின் கையில்தீயால் இடப்பட்ட காயத்தைப்போலதீபச்செல்வன் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…
-
- 6 replies
- 3.6k views
-
-
கவிதை ஜெயபாலன் விமர்சனமும்.- Na Ve Arul . . மா கவிதை ***************** ஒரு கவிதை நமக்குள் என்ன செய்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது வாசகர்களாக இருக்கிற மிக முக்கியமான வரையறை, எது கலை என்கிற கேள்விக்கு கலை என்கிற தனது புத்தகத்தில் சொல்வார்… “ஒரு மனிதன் உள்ளுறைபவனை மற்றொரு மனிதனின் உள்ளத்துக்குக் காட்டுவதுதான் கலை. அது ஒருவனின் உண்மையான பரிச்சயத்தை மற்றவனுக்குக் கொடுக்கிறது. ஒருவனின் மௌனச் செய்தியை மற்றவனுக்குத் தெரிவிக்கிறது. ஒருவனுடைய சுய துக்கங்களின் அனுபவத்தை இன்னொருவன் பெறும்படி செய்கிறது. ஒருவனுக்குரிய செல்வத்தை மற்றவனும் அனுபவிக்க உதவுகிறது.” இது கவிதைக்கு…
-
- 0 replies
- 929 views
-
-
தமிழ்க் குரலில் வாரவாரம் வரும் பொன்.காந்தனின் வெள்ளிப் பொழுது 02.08.2019 வெள்ளிப்பொழு 'கல்' எனும் தலைப்பில் சொற்களின் திருவிழா... பொன்.காந்தனுடன் தமிழகத்தில் இருந்து ஈழக்கவிஞர் சிவ.திவாகர் மற்றும் கவிஞர் செல்வா. 'மை' 16-08-2019 அன்று தமிழ்க் குரலில் ஒலிபரப்பாகிய பொன்.காந்தனின் வெள்ளிப் பொழுது
-
- 1 reply
- 652 views
-
-
-
- 0 replies
- 726 views
-