கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
மலர்களிலே குருதி மணக்கிறது, நாளை அவைகள் குண்டுகள் காய்க்கலாம் வன்டுகள் இப்பொழுதெல்லாம் தேன் குடிப்பதில்லை - அவை குருதி குடிக்கப் பழகியதால் துப்பாக்கிகளையல்லவா காதலிக்கின்றன. காற்றில் உயிர்கள் மிதக்கின்றன அவை பலாத்காரமாக பறிக்கப் பட்டதனால் உரிய இடம் சேராமல் காற்றில் மிதந்து அலைகின்றன. நாளைகளில் ஊர்கள் இருக்கும் புல் பூண்டு, மிருகம், பறவைகள் எல்லமே இருக்கும் மனிதனைத் தவிர..............
-
- 15 replies
- 2k views
-
-
குருதி படிந்த சுவடுகள் கல்லறைக்குள் அடங்காத கவிதை இவர் எவர் கண்களிலும் பொங்குகின்ற கவிதை இவர் கல்வாரியின் அன்புச் சுனையும் இவர் அன்புக் கடலினிலே சங்கமிக்கம் நதியும் இவர் பிறரன்பு புரியவைத்த பெருமை இவர் அன்று பிறருக்காய் உயிரீந்த வள்ளல் இவர் மனிதத்தை மலர வைத்த மாண்பும் இவர் மனித நேயத்தைத் தேடவைத்த தேடல் இவர் ஆற்றலாய் அறிவதுவாய் அருமருந்தாய் தேற்றரவாளனாய் தினம் உணவாய் நேற்றைய தினம் போல இன்றும் என்றும் மாற்றமே இல்லாத மகிமை இவர் மனிதனைப் புனிதனாய் மாற்றுதற்காய் புனிதனின் அவதார விந்தை இவர் துன்பத்தில் துவண்டுவிடும் எம்மவர்க்காய் துன்னையே அர்ப்பண்pத்த தியாகம் இவர் தூய மனத்தவர்கள் பேறுபெற்றோர் என்று துயருற்றோர் துயர் களைந்த சு…
-
- 1 reply
- 1.1k views
-
-
குருதி படிந்த சுவடுகள் கழுமரம் கூடப் பூத்தது புதுமை கவ்வாரியில் அன்பு பெருகிய மகிமை பகைவரின் மனமும் கனிந்திடும் இனிமை பார்த்தவர் கண்களும் பகர்ந்திடும் எளிமை சிந்திய குருதியால் சிவந்தது வானம் சிதறிய வார்த்தையால் பிறந்தது கானம் முந்திய மானிடம் இழந்தது ஊனம் முகவரி இழக்குமோ முதல்வனின் மானம் தனிமையின் வேளையில் துணையாக வருவார் தடுமாறும் வேளையில் தாங்கியே சுமப்பார் அவமான நேரத்தில் ஆறுதல் தருவார் அன்பினால் அனைத்தையும் ஆற்றியே மறப்பார் வருத்தங்கள் வாழ்வில் திருத்தங்கள் தரலாம் நெருக்கடிகள் எம்மை நெறிப்படுத்திடலாம் அழுகைகள் அகத்தில் அமைதியைத் தரலாம் வறுமைகள் வாழ்வில் திறமைகள் பெறலாம் குருதியில் குளித்து இக் குவலயம் சிறக்க இறுதிவரை இ…
-
- 8 replies
- 2.1k views
-
-
குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே! உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின் வேர்மடிக்கும் தாய்மடியே! உறுதி குலையாத உரம் அன்றுதந்து, விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே! ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக் காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே! எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ? வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம். ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும், பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும், கோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும், ஈர்ப்பு இருக்கிறது,.... எனினும் இப்போது முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க, உப்புக் க…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிவப்பு ஒற்றை ரோஜாவை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் காதல் வரவில்லை என் அன்புத் தோழியே என்னினம் சிந்திய குருதியின் விம்பங்கள் பட்டுத் தெறிக்கும் இதை இனிமேல் காதல் சின்னம் என்று சொல்லாதீர்கள்
-
- 2 replies
- 898 views
-
-
குருதியில் உறைந்த தேசம் -இதயச்சந்திரன் மே 18 ... தமிழின அழிப்பினைக் குறிக்கும் நாள். போர்க்குற்றங்களை உலகிற்கு உணர்த்தும் நாள். கொண்ட இலட்சியத்தினை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல் இறுதிவரை போராடிய மைந்தர்களை நினைவுகூரும் நாள். தமது விருப்பத்தின் வழியே அவர்கள் பயணித்திருக்கின்றார்கள். இறுதிக் கணத்திலும் , அசாத்தியமான மனவுறுதியோடு நின்று, ''நீ அழக்கூடாது'' என்கிற ஆறுதல் வார்த்தையை கூறிச் சென்றிருக்கின்றார்கள். இறப்பின் வலி புரிந்த, மனவிரிவுள்ள ஆளுமையின் சொந்தக்காரர்கள் அவர்கள். விழுப்புண் அடைந்த போராளிகளையும், பொதுமக்களையும் காப்பாற்ற, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்கள் வருமென்றுகாத்திருந்தார்கள். வரவில்லை. சிங்களப்…
-
- 0 replies
- 841 views
-
-
படத்தினைபெரிதாகப்பார்க்க இது புத்தர் ஞானம் பெற்ற சித்திரைநாளின் சிறப்புப்பரிசு. பாவப்பட்ட ஈழத்தமிழருக்கு பெளத்த தேசம் வழங்கிய விருது. அன்று விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன எங்கள் ஊர்களில் உயிர்கள் அணைந்தன. பாருங்கள் எல்லோரும் உற்றுப் பாருங்கள். ஈரம் நொதிக்கும் இதயங்களே! தீர்ப்பு வழங்கவரும் தேசங்களே! எங்கள் வாழ்வின் அவலத்தை வரைந்து கொள்ளுங்கள். ஏதும் அறியாமல், ஏன் சாகிறோமென்றும் தெரியாமல் குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு குடும்ப விருட்சம். பிஞ்ச அணைத்தபடி பூவும், பூவைப்பிணைத்தபடி காயும் தமிழருக்குக் காவலென்பதால் நாயும் ஏரியுண்டு போவதுதான் எமக்கெழுதிய விதியா? உலகமே! இதற்கும் உன் மெளனம் தான் பதிலா? …
-
- 1 reply
- 2.2k views
-
-
குருவி ஒன்று மரத்திலே கூடு ஒன்றைக் கட்டியே அருமைக் குஞ்சு மூன்றையும் அதில் வளர்த்து வந்தது நித்தம் நித்தம் குருவியும் நீண்ட தூரம் சென்றிடும் கொத்தி வந்த இரைதனை குஞ்சு தின்னக் கொடுத்திடும் குருவி தந்த இரையினால் குஞ்சு மெல்ல வளர்ந்தன சின்ன இறகு இரண்டுமே சிறப்பாய் வளரத் தொடங்கின தனது குஞ்சு பறப்பதை தானும் பார்க்க ஆவலாய் தந்தை குருவி சொன்னது தனயன் பறக்க வேண்டுமாம் இப்ப என்ன அவசரம் இறக்கை நன்கு வளரட்டும் இயல்பாய் குஞ்சு பறப்பதை இரசிக்கும் காலம் வந்திடும் சின்ன இறகு வளர்ந்தபின் சிறப்பாய் பறக்க முடியுமே இன்றே பறக்க விரும்பினால் இறப்பில் முடியக் கூடுமே தாய்க் குருவி சொன்னதை தடுத்தே தந்தை சொன்னது எனக்குப் புத்த…
-
- 8 replies
- 4.3k views
-
-
குருவிக்கு வேண்டுகோள் : ஞானக்கூத்தன் கூடுகட்ட விடமாட்டேன் சின்னக் குருவியே! என் வீட்டு சன்னல்கள் திறந்திருக்கக் காரணம் பருவக் காற்றுகள் உள்ளே வர எஞ்சிய உணவின் வாசம் மறையவும் துவைக்கப்படாத துணிகளின் வாடை போகவும் இன்னும் ஏதோ ஒன்று என்னவென்று தெரியாத ஒன்றின் சிறு நெடி போகவும் பருவக்காற்றுகள் உள்ளே வீசத் திறந்துள்ளன எனது சன்னல்கள் எனது வீட்டுக்குள் வருவோர் தனது வாசத்தோடு வந்து போகிறார் திரும்பிப் போகும் போது அதிலே கொஞ்சம் விட்டு விட்டே போகிறார் தெரியுமா? சன்னல் வழியே சிறகை மடக்கி வர முயலாத சின்னக் குருவியே கூடு கட்டப் பொருந்தி இடங்கள் இல்லை குருவியே எனது வீட்டில் நாட்டின் வளர்ந்த மரங்கள் எல்லாம் என்ன ஆயின? நீயேன் கூட்டை…
-
- 1 reply
- 823 views
-
-
வாழத் தெரிந்த வல்லவருக்கோ வாழ்க்கை என்பது வரமாகும் வழிதெரி யாமல் தவிப்பவருக்கோ வாழ்க்கை முழுதும் வலியாகும் தாழ்வும் உயர்வும் மனநிலை என்பது தரணியில் சிலர்க்கே தெளிவாகும் தாழ்ந்தால் தரிசன மாகும் குருவின் தாளில் புதைவதே வாழ்வாகும்! உடலுக் குள்ளே நம்மைத் தேடி உளுத்துக் களைத்து நின்றோமே உடலைத் தனது உயிருள் துகளாய் உடையவன் சன்னிதி சேர்ந்தோமே! கடலுக் குள்ளே கனலாய் நின்று கனவை நனவைக் கடைந்தானே! கட்டி வெண்ணையாய் மிதக்க விட்டுக் கைகள் கொட்டிச் சிரித்தானே! தோட்டம் முழுதும் பட்டாம் பூச்சி துரத்தத் துரத்தப் பறக்கிறது தொட்ட கணத்தின் துன்ப நிதர்சனம் தொல்லை யுகமாய்த் தொடர்கிறது வேட்டைக் கிறங்கும் வேங்கை தானே வேட்டை யாடப் படுகிறது! வீழும் கணத்தில் விடிந்த ஞானம்…
-
- 0 replies
- 495 views
-
-
குர்து மலைகள் – தீபச்செல்வன் பெண் கொரில்லாக்கள் பெண் கொரில்லாக்கள் ஏந்தியிருக்கும் கொடியில் புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக யூப்ரட் நதியிருகே ஒலீவ மரம்போல் காத்திருக்கும் பெண் ஒருத்தி இனி அவன் கல்லறைக்கு கண்ணீருடன் செல்லாள் …
-
- 2 replies
- 1.4k views
-
-
குர்து மலைகள்பெண் கொரில்லாக்கள்ஏந்தியிருக்கும் கொடியில்புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக யூப்ரட் நதியிருகே ஒலிவ் மரம்போல் காத்திருக்கும் பெண் ஒருத்தி இனி அவன் கல்லறைக்கு கண்ணீருடன் செல்லாள் ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல தலைமுறை தோறும் விடுதலை கனவை சுமந்து சுதந்திரத்தை வென்ற உம் இருதயங்களில் பூத்திருக்கும் பிரிட்டில்லா மலர்களின் வாசனையை நான் நுகர்கிறேன். குருதி ஊறிய குர்து மலைகளே உமது தேசம் போல் எமது தேசமும் ஒர்நாள் விடியும் எமது கைகளிலும் கொடி அசையும் கோணமலையிலிருந்து உமக்குக் கே…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
குரங்குகள் கழுத்தில் பூமாலையாக விழுவது தான் எமது புத்திஜீவித்தனத்தின் இறுதி எல்லை குரங்குகள் பிய்த்தெறியும்போது பூமாலைகளில் தான் பிழைகள் இருக்கவேண்டும் என்பதே சிந்தனையின் எல்லை இந்தச் சிந்தனை முறை உயிர்வாழ முற்படும் போதெல்லாம் எல்லோரும் எல்லாமும் அர்த்தமற்றதாக்கப்படுகின்றது மிகச் சுலபமாக இந்தச் சிந்தனை முறை வானுயர்ந்த வீரத்தையும் தியாகத்தையும் அர்த்தமற்றதாக்கிவிடும் எது குறித்து சிந்திக்கவேண்டுமோ எதையெல்லாம் நினைத்து உணர்வுகள் வளரவேண்டுமோ அதையெல்லாம் கத்தரித்து கப்பாத்து பண்ணிவிடும். அடிமைத்தனத்தால் கட்டப்பட்ட மேடைகளில் காட்டப்படும் குறளிவித்தைகளால் தொப்பிக்குள் இருந்து முயலை எடுப்பதுபோல் எமக்காக எதையும் எடுக்க முடியாது ஒருவேள…
-
- 1 reply
- 1.9k views
- 1 follower
-
-
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி பள்ளிக்கூடம் செல்ல ஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடி…
-
- 1 reply
- 1k views
-
-
குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி - தீபச்செல்வன் பள்ளிக்கூடம் செல்ல ஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடியவில்லை எல்லா உறுப்புக்களையும் புணர்பவர்களை சூழ நிறுத்திவிட்டு காட்ட முடியாதிருந்தோம் ஒளியிருக்கும் திசையை ஈற்றில் வழங்கியிருக்கிறோம் ஆண்குறிகளை அடையாளம் காட்டுமொரு காலத்தை. 0 …
-
- 1 reply
- 955 views
-
-
ஆமணக்கும் நெருஞ்சியும் பூவரசும் பனங்கூடல்களும் இயல்பிழந்து போக அரசமரங்கள் எழில் கொள்கின்றது, மின்குமிழ்களின் பின்னும் தொலைபேசிக் கோபுர அடிகளிலும் தொடரூந்து தண்டவாள இடைவெளிகளிலும் யாருமறியாமல் நிறைந்துகிடக்கிறது பேரிருள் சூழ்ந்த மௌனமொன்று.. வீதிகளும் விளம்பரத்தட்டிகளும் விடுதிகளும் வங்கிகளும் வடுக்களின் மேல் வர்ணம் பூசிப்போக, அடிப்பிளவுகளில் உயிரடங்கி வெதும்பிக் கிடக்கிறது தலைமுறைக்கனவு கிராமத்து முனைகளில், சுடுகுழல்களில் ஒளிந்திருக்கும் குறிகள் விரகம் தீர்க்கும் வன்மத்துடன் அலைகின்றன. நகரத்து ஒழுங்கைகளில் தேரவாத காவிகள் தம்மபததின் பக்கத்தில் இனவாதத்தை எழுதி ஓதுகின்றனர். அதிகாரங்களும் அடையாளங்களும். நிர்வாணிகள் மீது குறிகளைப் புதைத்துவிட…
-
- 2 replies
- 603 views
-
-
குறிஞ்சிப் பாடல் -வ.ஐ.ச.ஜெயபாலன் கரும் திரை அசையும் தோற்பாவைகளாய் நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல் முலை சிந்தச் சிந்த நிலா நட்சதிரக் கன்றுகளைத் தேடுது. சொட்டும் நிலாப் பாலில் கரையும் இருளில் பேய்களே கால்வைக்க அஞ்சும் வழுக்கு மலைப் பாதை பாம்பொடு பாம்பாய் நெளிகிறது. மின்மினிகள் துளை போடும் இருள் போர்த்த காட்டின் வழி நீழ கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு கரடிகள் அலையும் இரவில் பூத்துக் குலுங்குது முல்லை. ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில் வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும் இந்தக் கொடிய நள்ளிரவில் ஏன் பூத்தாய் காட்டு முல்லை. நான் மண்ணுக்கு பழசு கவிஞா பொறுத்திரு என்று நகைத்த முது முல்லை சுட்டும் திசையில் …
-
- 2 replies
- 627 views
-
-
குறுக்கால போனவங்கள் வேலை அவசரத்தில் வீட்டை போற வழியிலை நிக்கிறாங்கள் அறுவான்கள் கறுத்த துணியோடை மரங்களுக்கை உருவை மறைச்சு நிக்கிறாங்கள் அறுவான்கள் வண்டிகளை இளைகுழையாக்கி இரக்கமில்லாமல் நீட்டிப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறாங்கள் அறுவான்கள் சரி அந்தப் பக்கம் தானே ஆர் பெத்த பிள்ளையோ மாட்டக் கூடாதெண்டு கைகாட்டி அவனை மட்டாப்போடாப்பா மரத்துக்குள்ளை நிக்கிறாங்கள் அறுவான்கள் ஐரோப்பா முழுதும் அள்ளித் தெளிப்பான்கள் மக்கள் கட்டும் வரிப்பணத்தை கனவான்கள் கிரீசுக்கு இன்னும் காணாதாம் என்னத்தைச் செய்ய கிறுக்கர் நாங்கள் தான் இருக்கோமாம் போத்துக்கல்லும் போதாதாம் பொதுமகன் கையில் வைக்கிறாங்கள் சுமையை நிக்கிறாங்கள்அறுவான்கள் ஆழ்ந்த சிந்தனையில்…
-
- 31 replies
- 1.9k views
-
-
வாழ்க்கை அழகான வாழ்க்கையது கடவுளின் வரம் அழகுற மாற்றுவது மானிடத்திறம் துன்ப இன்பம் விதியின் திடம் நம்பிக்கைதான் வாழ்க்கையின் பலம் அன்பான மனைவி குழந்தை வாழ்க்கையில் சுகம் ஆனால் பணமே தேடுவது மானிட மனம் கடவுள்தான் வாழ்க்கையின் மூலம் இதை மறந்தால் நாமெல்லாம் மடம் காதல் பிரிவு காயானது கனியாகும் வேளைதனில் கருவண்டு துளைத்தால் போல் - என்மனது ஏங்குகிறேன் உன் நினைவால் ஒருமுறை தான் பேசிவிடு - - என்னோடு நண்பர்களே உங்களிடம் இருக்கும் இப்படியான குறுங்கவிதைகளை…
-
- 80 replies
- 8.8k views
-
-
கள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தத் திரியில் நான் என்னுடைய சில குறுங்கவிதைகளை( அது கவிதையா இல்லை மொக்கையா என்று நாங்கள்தானே சொல்லணும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. என்ன செய்யுறது எல்லாம் நானும் ஒரு கவிதை எழுதிடவேணும் என்ற ஆர்வக்கோளாறுதான். ) பதியலாம் என்றிருக்கிறேன். நீங்களும் உங்களுடைய குறுங்கவிதைகளைப் பதியுங்கள் (பார்ரா..சேர்ந்து அடிவாங்குறதுக்கு ஆட்கள் சேர்க்கிறான் என்று இன்னும் சிலர் முறைப்பது இப்பவே மனக்கண்ணில் தெரியுது.) எதுநடந்தாலும் நான் பின்வாங்கிறதா இல்லை.(அப்ப என்ன ஆணிவாங்கப்போறியா என்று யாரும் கடந்தநூற்றாண்டில் காலவதியான மொக்கையை போடாதீங்க.) இந்த திரியை நானே தைரியமாக தொடக்கி வைக்கிறேன்.(பயப்படுறது எழுத்தில தெரியலைதானே) அடைத்துச் சா…
-
- 25 replies
- 3.3k views
-
-
-
குறும்பு கலந்து எழுதப்படும் குறுகிய பாவாக இருப்பதால் இரட்டை அர்த்தம் தொனிக்க குறும்பா என்று பெயரிட்டார்கள். மறைந்த எமது ஈழக் கவிஞர் மகாகவியே இதற்கு முன்னோடி. வாழ்க்கையில் நடக்கும் சிறிய சம்பவங்களிலுள்ள நகைச்சுவையை அல்லது சாதாரண சம்பவங்களுக்கே நகைச்சுவையையூட்டி குறும்பாக்களை எழுதமுடியும். நமது தமிழில் அத்தகைய இலக்கியவகையிருக்கும்போது ஏன் நாம் லிமெரிக்கென்று பிறமொழிப் பெயர் கொடுத்து எமது தமிழின் ஆற்றலை இருட்டடிப்புச் செய்கிறோமென்று தெரியவில்லை. இதே வகையில் ஆத்திசூடி போன்ற குறுகிய கவிவரிகளையும் குறட்பாக்களையும் சேர்க்கலாம். தமிழில் போதிய பாவகைகளுண்டு. நாம் எதற்காக கைக்கூவை ஜப்பானிலிருந்து இறக்க வேண்டுமென்றும் தெரியவில்லை. இப்படியே போனால் ஒரு காலத்தில், தமிழ் தனது பாவ…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
குற்றம் ஏர்.... ஊருக்கு உண்மைகள் உரைப்பேன்- எனக்கறிந்த உண்மைகள் அத்தனை உரைப்பேன் பாருக்கெல்லாம் முதலாகுமென்ற பாரதியை வார்த்தையை உரைப்போம்... தாளப்பறந்த விமானம் தள்ளாடி விழ்வது முறையே கண்ணேதிர் முன்னே நின்ற கட்டிடம் காண பிழையே... உச்ச கதிரோன் தானெனவே உசந்ததாய் நினைத்தத பிழைதானே மதியதை மதியதை மறந்தாரே- இன்று மனிதமதையெ இழந்தாரே.... கூடு கட்டிய குருவிகளின் கூடது உடைத்தத பிழைதானே மாட மாளிகையில் தானெனவே மனிதா நினைத்தத பிழைதானே.... நீதிநெறியதை மறந்தாரே- இன்று நீதிகெட்டின்று விழந்தாரே தூக்கிட யாரின்று வருவாரோ...? துன்பத்தில் தவிப்பது முறைதானே... இகழ்வதும் புகழ்வதும் முறைதானே- தொடர் இகழ்வது இகழ்வது பிழைதானே மனிதன் போட…
-
- 3 replies
- 1k views
-