ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
பூநகரி வெற்றியை ஒரு வார விழாவாக கொண்டாடுகிறது சிறிலங்கா அரசு [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 11:08 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதற்கு தலைநகர் கொழும்பிலும் சிங்கள கிராமங்களிலும் தொடர் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது. மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பூநகரி ஊடாக செல்லும் ஏ-32 வீதியை படையினர் முழுமையாக கைப்பறிய செய்தியை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடாக இன்று சனிக்கிழமை இரவு அறிவித்ததுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சவால் விடுத்துள்ளார். இதனையடுத்து அரச தலைவர் செயலகத்தின் ஆலோசனையில் விழாவுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கொழும்பு தகவ…
-
- 15 replies
- 3k views
-
-
வடக்கில் கடந்த ஒரு வாரகாலத்துக்கு மேலாக கடும் சண்டை நடைபெற்றுவந்த முகமாலை, கிளாலிப் போர்முனைப் பகுதியில் சனிக்கிழமை காலை தொடக்கம் இனம் புரியாத மயான அமைதி நிலவுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்கு மேலாகப் பெரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல், பீரங்கித் தாக்குதல்களும் ஓய்ந்து போயுள்ளன. முகமாலை அடங்கலாக தென்மராட்சி போர் முனையில் அமைதி நீடிப்பதை படைத்தரப் பும் புலிகளின் வட்டாரங்களும் உறுதி செய்தன. இடையிடையே ஓரிரு ஷெல்கள் வெடித்தன. எனினும் அப்பிரதேசத்தில் சண்டை ஓய்ந்துள்ளது என்று கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை காலை முதல் இந்தப் பகுதிகளில் இருதரப்பினரிடையேயும் கடும் சண்…
-
- 15 replies
- 3.3k views
-
-
இரவோடு இரவாக கொழும்பிலிருந்து வவுனியா சென்ற 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொழும்பிலிருந்து 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் நேற்று மாலை வவுனியாவை சென்றடைந்துள்ளன. இலவச அம்பியூலன்ஸ் வண்டி சேவையை செயற்படுத்த வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திட்டமிட்டிருந்தார். அந்த வகையிலேயே குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. பின்னர் இரவு 8.00 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டன. யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் 21 அம்பியூ…
-
- 15 replies
- 3k views
-
-
2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன் சுபதா 193 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றுள்ளார். இந்தநிலையில், அகில இலங்கை ரீதியில் கண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கலஹா ராமகிருஸ்ண மத்திய கல்லூரி மாணவன் என்.எஸ்.என்.ஸபீர் 2 வது இடத்தை பெற்றுள்ளார். இவர் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதேவேளை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் 3 வது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் சித்தியடைவேன் என்று கன…
-
- 15 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசும் மேற்குலக நாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை அணுகாதபோது விடுதலைப்புலிகள் ஏன் இன்னும் சமாதானப்பேச்சு வார்த்தைகளில் அக்கறையாக இருக்கிறார்கள்? தமிழீழ விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துவிட்டார்களா? இராணுவ ரீதியாகப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? தமிழ்மக்கள் மீதான கொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் இன்னும் எத்தனை நாள்தான் பொறுத்திருந்து பார்ப்பது? விடுதலைப்புலிகளின் அடுத்தகட்ட நகர்வு எதுவாக இருக்கும்? என்று பலர் குழம்பிப்போய் இருக்கிறார்கள். சிலர் செய்திகள் பார்ப்பதினைத் தவிக்கிறார்கள். இவர்கள் மெல்பெர்ண் தமிழ்க் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய சபேசனின் ஆய்வு வடிவத்தினை ஒருமுறை வாசித்தால் சில விசயங்கள் புரியும். வாசிக்க http://www.tamilnaatham.com/ar…
-
- 15 replies
- 5.5k views
-
-
"தமிழ் மக்களின் வாக்குகள் எனக்கு கிடைக்காது என முன்னரே எனக்கு தெரிந்திருந்தது" ககானி வீரக்கோன் -- விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்செய்திகள்- தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை தான் முன்னரே உணர்ந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 30 வருடங்களாக தங்கள் தலைவர், தங்களை காப்பாற்றுபவர், தங்களின் பாதுகாவலன் என அவர்கள் நினைத்திருந்த ஓருவரை அழித்த பின்னர் நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? தங்களுக்கு விடுதலையை வழங்கும் என அவர்கள் எதிர்பார்த்த அமைப்பை அழித்த ஒருவர் தொடர்ந்தும் பதவியிலிருப்பதை அவர்கள் விரும்புவார்களா? என்றும் கேள்விஎழுப்பியுள்ளார். சிலோன் ருடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது …
-
- 15 replies
- 1.4k views
-
-
பாலேந்திரன் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மார்ச் 10 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமில் சுமார் ஒரு வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி கடந்த வாரம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று கொழும்பு நீதிவான நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிவரை சிறைச்சாலையில் தடுத்துவைத்திருப்பதற்கான உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார். - http://www.malarum.com/article/tam/2015/02/24/8796/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%A…
-
- 15 replies
- 861 views
-
-
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு: ஈழத் தமிழ் எம்.பி.க்களிடம் மோடி வலியுறுத்தல்! டெல்லி: ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று என்று தம்மை சந்தித்த இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டைத்தான் ஈழப் பிரச்சனையில் பாஜக அரசும் கடைபிடி…
-
- 15 replies
- 1.1k views
-
-
29,000 மேற்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துள்ளது - அமைச்சர் சம்பிக்க ரணவக்க செவ்வாய், 15 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] 1984 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில், தனது தந்திரோபாயத்திட்டம் காரணமாகவும், சிறி லங்கா அரசாங்கம் தனது காலில் விழவேண்டும் என்ற கபடநோக்கத்துடனும் இந்தியா 29 அயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பயிற்சிகளையும் ஆயுதங்களையும் தேவையான உதவிகளையும் வழங்கிவந்துள்ளது. இன்று எமது நாடு இப்படி ஒரு சிக்கலில் சிக்கித்தவிப்பதற்கு மூலாதாரணமான காரணமே இந்தியாதான் எனவும் சூழல்வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த நடவடிக்கைகளால் அப்போது 15000 படையினரைக்கொண்ட சிறி லங்கா படையினரால் தமிழீழ விடுதலைப…
-
- 15 replies
- 2.3k views
-
-
புலிகளின் இணக்கப்பாட்டுடன் இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு, போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராயும் அமெரிக்க பிரதிநிதி ஸ்டீபன் ராப் செயற்படுகின்றமை கேவலமான செயல் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். புலி ஆதரவுள்ள மதத் தலைவர்களையும், அரசியல் கட்சிகளையும் சார்ந்தோரையும் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ராப் தயாரித்துள்ள அறிக்கைகளை அவர்களைக் கொண்டே அதனை உறுதிப்படுத்திக் கொண் டுள்ளார் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. புலிகள் உபயோகித்த ஆயுதங்களையும் இலங்கை இராணுவம் தான் உபயோகித்தது என்றும் குற்றம்சாட்டியிருப்…
-
- 15 replies
- 1.6k views
-
-
யாழ். பல்கலைக்கு... அமெரிக்கத் தூதுவர், விஜயம்! யாழ்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நேற்று (புதன்கிழமை) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்க கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, யூ. எஸ் எயிட் அனுசரணையுடன், யாழ். பல்கலைக் கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்படும் சமாதானமும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்ற முதுமாணிக் கற்கை நெறிக்கான அனுசரணையாளர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தரும், யூ. எஸ் எயிட் நிறுவன அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதன் போது, பல்கலைக் கழகப் பதிவாளர், நிதியாளர், …
-
- 15 replies
- 1.2k views
-
-
புத்தரின் புனித தாதுப் பொருள்கள் முதல் தடவையாக யாழ்.வருகை!! புத்தரின் புனித தாதுப் பொருள்கள் முதல் தடவையாக யாழ்.வருகை!! புத்த பெருமானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்கள் யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாகக் கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுகின்றன என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் நடை…
-
- 15 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவை மிக விரைவில் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா [வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 07:01 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து முல்லைத்தீவையும் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரச தலைவர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கிளிநொச்சி நகர் படையினரால் கைப்பற்றப்பட்ட செய்தியை தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்த பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே ஆனையிறவு உள்ளது. ஐந்து கிலோமீற்றர் தொலைவில் முல்லைத்தீவு உள்ளது. எனவே மிக இலகுவாக கைப்பற்றி…
-
- 15 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார். தீர்க்கப்படாத இனப்பிரச்சினை இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தேர்தலின் பின்னர்…
-
-
- 15 replies
- 1.1k views
- 3 followers
-
-
https://www.dailymirror.lk/top_story/Fitch-downgrades-Sri-Lanka-as-default-fears-mount/155-227206 படம் - முகநூல்
-
- 15 replies
- 832 views
-
-
12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா? June 28, 2019 காடழிப்பு, சுற்றுசூழல் தொடர்பில் தேர்தல் மேடைகளில் மாத்திரம் பேசி செல்லும் மக்கள் பிரதிநிதிகளால் அதிகளவு காடழிப்பு இடம்பெறுகின்றது என்பதற்கு இந்த பகுதி சான்றாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது. சொந்த மண்ணிலேயே இவ்வாறு காட்டினை அழித்து சொத்தாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசாவின் செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு 12 ஏக்கர் வரையான காடு அழிக்கப்பட்டு நெற்செய்கை மெற்கொள…
-
- 15 replies
- 1.8k views
- 1 follower
-
-
அம்பாறையில் தாயும் மகளும் காடையர்களால் பாலியல் வல்லுறவு [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 06:31 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] அம்பாறை ஒலுவில் பகுதியில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்நாள் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது. தமிழ்ப் பெண்களான இந்த இருவரும் ஒலுவில் தென்னந்தோட்டப் பகுதி வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே அதிகாலை 1:00 மணியளவில் இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த இளம் தாயும் அவரது 13 வயது மகளும் மேற்படி வீட்டில் தங்கியிருந்த போது, அதிகாலை 1:00 மணியளவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த ஆறு பேரில் நான்கு பேர் இந்த இருவரையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்று…
-
- 15 replies
- 2.8k views
-
-
அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். புதிய அரசியல் யாப்பிலும் பழைய அரசியல் யாப்பில் உள்ளதைப்போல் பௌத்த மத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். கொழும்பு கொலன்னாவ பகுதியிலுள்ள விகாரையில் நேற்றிரவு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில், புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்…
-
- 15 replies
- 1.1k views
-
-
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரையில் தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: அணிகலன் ஆக்கும் வினையாற்றுபவன்; அந்த அணிகலன் இரும்பால் ஆனதா- அல்லது செம்பு பித்தளையா- பொன்னால் ஆன கரணைகள் கொண்டதா- வைர மணி மாலையா- எந்த ஒரு உலோகத்தினால் உருவாக்கப்படுவதாக இருப்பினும், அணிகலனின் வனப்பு வசீகரத்தை விட அதை நீண்ட சங்கிலியாக இணைத்திருக்கும் ஒவ்வொரு கரணையும் ஒன்றையொன்று வலிவு குறையாமல் விளங்கி இணைந்திருக்கிறதா என்பதை முதலில் ஆய்வு செய்வதையே வழக்கமாக கொள்வார்கள். அப்படி கண்ணீரிலும், செந்நீரிலும் தோய்த்தெடுத்த கரணைகளை இணைத்திட்டதும் வனப்பும் வலியும் மிகுந்ததுமான திராவிட இயக்கம் …
-
- 15 replies
- 2.8k views
-
-
மூதுர் பொலிஸ் நிலையம் முற்றுகை, இராணுவம் மூதூரில் இருந்து படிப்படியாக வெளியேற்றம். - கத்தோலிக்க தேவாலயம் இராணுவத்தால் தகர்ப்பு புதன்கிழமைஇ 2 ஆகஸ்ட் 2006 ஸ ஜ யோககுமார் ஸ மூதூர் நகரம் தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. இதேவேளை இலங்கை இராணுவத்தின் சிறு அச்சுறுத்தல்களும் காணப்படுகின்றன. மூதூர் பொலிஸ் நிலையம் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கபட்டு இருப்பதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூதூரில் இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் முடக்கபட்டுள்ளனர். பொலிசார் பொலிஸ் நிலையங்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் எவரும் வீதியில் நடமாடவில்லை மூதூர் நகரம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனினும் இராணு…
-
- 15 replies
- 2.6k views
-
-
ஜனாதிபதி செயலகத்திற்கு, முன்பாக... பதற்றம்! ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருளுக்கு தட்டுப்பாடு, எரிவாயுவிற்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து, குறித்த பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athava…
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழ்.மண் சாதாரண பூமி கிடையாது. அந்த மண்ணை சாதாரணமாக நாங்கள் கருதுவதில்லை. இதுவொரு புண்ணிய பூமி, இதுவொரு இலக்கிய பூமி. இதுவொரு சிந்தனை பூமி, இதுவொரு அறிவுடைய பூமி என இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவில் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலா வது அமைச்சர் கலாநிதி பி.ஆர். அம்பேத்கார் அவர்களது 125 ஆவது பிறந்த தினத்தினையும், தமிழ் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடும் முகமாகவும் யாழ். இந்திய துணைத்தூதரகம் மற்றும் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்வு நேற்று முன்தினம் யாழ். நல்லூர் சங்கிலியன் தோப்பில் யாழ். இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து…
-
- 15 replies
- 933 views
-
-
மயிலிட்டி மருதடி சித்தி விநாயகரைக் காணவில்லை! - ஆலய நிர்வாகசபை அதிர்ச்சி [saturday 2014-07-12 09:00] உயர்பாதுகாப்பு வலயமான மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தைக் காணவில்லையென ஆலய நிர்வாக சபையின் உபதலைவர் தெரிவித்தார். சென்ற வருடம் ஆலயத்திற்குச் செல்ல இராணுவத்தினரால் அனுமதியளிக்கப்பட்ட போது, மருதடி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு தானும், தனது மனைவி பிள்ளைகளும் சென்று பொங்கல் செய்து வழிபட்டதாகக் கூறினார். இந்நிலையில், நேற்று) மயிலிட்டிக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டு சென்று பார்த்த போது, மருதடிச் சித்தி விநாயகர் ஆலயம் முழுமையாக அழிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். ஆலயம் இருந்த இடத்தினை அருகில் நின்றிருந்த வேப்பமரம் ஒன்றினை வைத்தே அடையாளப்படுத்தியதா…
-
- 15 replies
- 1.3k views
-
-
நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு நல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். http://uthayandaily.com/story/13182.html
-
- 15 replies
- 1.2k views
- 1 follower
-
-
Published on 2022-01-15 16:25:06 (செய்திப்பிரிவு) ஆசிய கண்டத்தில் சுற்றுலாத்துறைக்கு பாதுகாப்பான நாடாக இலங்கை இருப்பதாக உலக சுற்றுலா தாபனம் தெரிவித்துள்ளது. இது எமது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த அங்கிகாரம் எக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அதிகாரி கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் , கொவிட் நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த நாடு முழுமையாக திறக்கப்பட்டதன் பின்பு மூன்று மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பாக மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது கடந்த 11 நாட்களில் மொத்தமாக 31,688 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த வர…
-
- 15 replies
- 1.2k views
-