ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தைமலை முருகனாலய வளாகத்தில் உள்ள அறிவித்தல்பலகையில் தமிழ் படும்பாட்டையறிந்து தமிழ் மக்கள் மனம் வருந்துகின்றனர். ஒரு சிங்களப் பிரதேசத்தில் அப்படி நடந்திருந்தால் ஓரளவாவது சில காரணங்களைக்கூறி தப்பிக்கலாம். ஆனால் முழுக்கமுழுக்க இது தமிழர் பிரதேசம் . ஆலய நிருவாகம் தமிழருடையது. அப்படிப்பட்ட உகந்தையில் இப்படியும் ஒரு தமிழ் அறிவித்தலா? பாவிப்போம் எப்படி பவிப்போம் ஆனது ? திருத்துவார்களா? திருந்துவார்களா? http://www.thinakkathir.com/?p=51566#sthash.JzCsN8kJ.dpuf
-
- 14 replies
- 936 views
-
-
தென் தமிழீத்தின் கல்முனை பகுதிகளில் இருந்த கருணா கும்பலின் முகாங்கள் சிறீலங்காவின் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மூடப்பட்டள்ளன. அம்பாறையில் பல பகுதிகளில் இந்த கருணா குழு உறுப்பினர்களுக்கு பச்சைமட்டை அடி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அதிரடிப்படையினரிடம் அடிவாங்கிய கருணா குழு உறுப்பினர்கள் 7 பேர் கஞ்சிகுடிச்சாறு பக்கமாக தப்பி ஓடியுள்ளதாகவும் இவர்களை கருணாகுழு உறுப்பினர்கள் தேடிவரவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழுத்தம் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ள போதிலும் சிறுவர் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கருணா குழுவிற்கும் சிறீலங்காவின் அரச படைகளுக்கும் இடையில் …
-
- 14 replies
- 3.8k views
-
-
40ற்கு மேற்பட்ட இராணுவம் பலியென சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன 10 SLA soldiers killed, 25 wounded in Madu [TamilNet, Wednesday, 25 April 2007, 12:38 GMT] Ten Sri Lanka Army soldiers were killed and more than 25 wounded in a explosion in Madu DS Division in Mannar Wednesday evening, according to initial reports. 25 wounded soldiers were admitted at Anurdhapura hospital, medical sources said. Further details are not available at the moment. Sri Lanka Army had stepped up artillery shelling towards Liberation Tigers of Tamileelam controlled area Wednesday morning.
-
- 14 replies
- 5.1k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும் காலம் கனிகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களின் மூலமாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமத்துவமானதும், சாத்தியதுமான தீர்வுகளை நோக்கி நகரும் கட்டத்திற்கு எம்மை புடம்போட்டுக் கொள்ளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் தரிசனம் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் இரத்தின சபாபதி பிரபாகனின் தரிசனம் நூல் வெளியீட்டுவிழா பேராசிரியர் சபாஜயராஜா தலைமையில் நேற்றைய தினம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் …
-
- 14 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இந்தியாவின் புதிய தலையீட்டு நடவக்கைகளால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி. அது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிப்பதற்கும், இவ்விடயத்தில் இலங்கை அரசை உறுதியான நடவடிககை எடுக்த் தூண்டுவதற்குமாக இன்று முதல் பெரும் பிரசாரப் போர் ஒன்றை மேற் கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றது என கூறப்படுகின்றது. இனப்பிரச்சினைத் தீர்விற்காகன அரசியல் யோசனையாக அரசைமைப்பின் 13 வது திருத்தத்தை இலங்கை அரசு இப்போது திடீரென முன் வைத்தமைக்கு இந்தியவின் வேண்டுகோளும் அழுத்தமுமே காரணம் எனக்குற்றம் சாட்டி வந்த ஜே.வி.பி புதுடில்லிக்கு எதிராக பகிரங்கப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. இலங்கையில் இந்தியாவின் புதிய நடவடிகககைளினால் ஏற்படக்கூட…
-
- 14 replies
- 3.5k views
-
-
17 JUN, 2025 | 02:06 PM வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து வாய்மொழி மூல உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை கார்பன் பரிசோதனைக்காக புளோரிடாஅனுப்பவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217712
-
-
- 14 replies
- 790 views
- 2 followers
-
-
நான் அமைச்சரல்ல; போராளி காரைதீவில் பட்டதாரிகளிடம் அமைச்சர் மனோ கணேசன் (காரைதீவு நிருபர்) நான் வெறுமனே வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போகவரவில்லை. சுற்றுலாவந்துபோகவும் வரவில்லை. நான்மனோகணேசன்நான்அமைச்சரல்ல. ஒருபோராளி. அமைச்சரவையிலும்சரிபாராளுமன்றத்திலும்சரிபோராடித்தான்காரியம்சாதிப்பேன். எனவே உங்களதுபிரச்சினைகளையும் உரியநேரத்தில் உரியவர்களுடன்பேசிதொழில்பெற்றுத்தருவேன் என்று தேசியசகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இவ்வாறுகாரைதீவில் 36வதுநா…
-
- 14 replies
- 1.1k views
-
-
யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது. மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசா…
-
- 14 replies
- 1.7k views
-
-
நாளை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். 1948ம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 1958, 1976, 1983 ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினம், ஈழப்போர் ஆரம்பிக்…
-
- 14 replies
- 496 views
- 1 follower
-
-
கிளிநொச்சி ஆனந்தபுரத்திலுள்ள முஸ்லீம் கடையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு வருகின்ற இளம்பெண்களிடம் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதோடு திருமணம் செய்யுமாறு அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேற்படி முஸ்லீம் கடையில் தங்கியுள்ள பணியாளர் கல்வி நிலையம் வருகின்ற இளம் பெண்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதோடு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக திருமணமாகி பிள்ளைகளின் தந்தையான முஸ்லீம் குடும்பத்தவர் ஒருவர் தாய் தந்தையர்களை இழந்த இளம் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்யுமாறு வற்புறத்தி வருவதோடு பயமுறுத்தியும் வருகின்றார். மேலும் இக்கடையில் பணி புரிகின்றவர்கள் கல்வி நிலையம் வருகின்ற பெண்களி…
-
- 14 replies
- 1.3k views
-
-
மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுங்கள் - கூட்டமைப்பினரிடம் மன்மோகன்சிங் எல்லாப் பாதைகளுமே மகிந்தவை நோக்கி - தமிழ்நெட் இந்திய விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுமாறு அறிவுரை கூறியதாக வெள்ளியன்று வந்த பத்திரிக்கைச் செய்திகள் கூறியுள்ளன. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தியின் கூற்றுப்படி , " முஸ்லீம்கள், மலையகத் தமிழர்களையும் சேர்த்து மகிந்தவுடன் ஒற்றுமையாக அரசியல் தீர்வைத் தேடுங்கள் என்று இந்தியப் பிரதமர் எமக்கு அறிவுரை கூறினார்.நாம் அதற்கு முயற்சிப்பதாகக் கூறினோம்" என்றும் அவர் சொன்னார். அவர் ம…
-
- 14 replies
- 1.3k views
-
-
இலங்கை நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான ஒரு சிறு பகுதியினர் இருக்கலாம். எனினும் இவர்கள் வந்து இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு- கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள் முன்னேற்ற செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு! சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் புதுப்பிக்கத்தக்க மி…
-
- 14 replies
- 803 views
-
-
புலத்தில் இருந்து ஈழத்துக்கு வந்த TTN,IBC அதிகாரிகள் பற்றிய கட்டுரை வாசித்து பாருங்கள் படங்கள் சில இவர்கள் ஆயுதங்களுடன் இருப்பது போல இக்கட்டுரையில் இணக்கப்பட்டுள்ளது அப்படங்களை பார்க்க கீளுள்ள இணைப்பை பாருங்க http://defence.lk/new.asp?fname=20060903_06
-
- 14 replies
- 3.8k views
-
-
காத்தான்குடி வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதியில் இறங்கி போதை வஸ்து பாவனைக்கு எதிராகவும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்திய பிரமாணத்திலும் ஈடுபட்டனர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மதனம் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சகல அமைப்புக்களுடனும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பாரிய ஆர்ப்பாட்டம் காத்தான்குடி முகைதீன் பெரிய மெத்தை ஜும்மா பள்ளிவாயல் மற்றும் புதிய காத்தான்குடி அக்சா ஜும்மா பள்ளிவாயல் ஆகியவற்றிலிருந்து ஆரம்பமான பாரிய கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்திற்கு வந்து அங்கு ஒன்று திரண்ட மக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் சத்திய பிரம…
-
- 14 replies
- 926 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரக்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக வெட்டப்படும் மரக்குற்றிகள் வெளிமாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்படுகின்றன. பெறுமதிமிக்க முதிரை, பாலை உள்ளிட்ட மரங்களே சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/articles/2015/04/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0…
-
- 14 replies
- 996 views
-
-
பிரபாவை நேரடியாக சந்தித்துப் பேச இப்போதும் தயார் என்கிறார் மஹிந்த! மாவீரர் தின உரை குறித்து தாம் அக்கறைப்படவே மாட்டாராம் இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சு மூலமாகவே தீர்வு காணப்படவேண்டும் என்றே தாம் நம்புகிறார் எனவும் அதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு இப்போதும் தாம் தயாராகவே இருக்கிறார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் சில தனியார் தொலைக் காட்சிகளுக்கு வழங்கிய செவ்வியில் தெரி வித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாகத் தமது செவ்வியில் கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி மஹிந்த இதனைக் கூறினார். ""பிரபாகரனின் உரையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவே மாட்டேன். இப் படிப் …
-
- 14 replies
- 2.8k views
-
-
கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்குமானால் மீண்டும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழம் உருவாக வழி வகுக்குமென முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்ஸ தெரிவித்துள்ளார். பத்திரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணி கட்சி தலைமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையில் செல்வாக்கு கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்று மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குவதற்கு திட்டமிட்…
-
- 14 replies
- 885 views
-
-
அந்த ஊழலின் மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளியே வரும்போது, நடிகையாக மாறிய அந்த நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா, தானாக முன்வந்து சி.ஐ.டி.க்குச் சென்றார். பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன். எனினும், பத்மேவை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். 2022 துபாய் புத்தாண்டு விழாவிற்கு என் சொந்த செலவில் என் குடும்பத்துடன் நான் சென்றேன். அன்று லட்சக்கணக்கான மக்கள் இருந்தனர். அந்த பெயர் கொண்ட நடிகைகளும் இருந்தனர். நான் பத்மேவுடன் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பத்மே என்று எனக்குத் தெரியவில்லை. துபாய் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. எனக்கு அங்கு ஒரு தொழில் உள்ளது. பத்மேவைச் சந்திக்க நான் துபாய் செல்லவில்லை. எனக்கு நிறைய பணம் இருக்கிறது. எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நான் கஷ்டப்பட்டு என…
-
-
- 14 replies
- 1.1k views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதி கிளை கூட்டம் பெரும் களேபரத்தின் மத்தியில் நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில் மாவை சேனாதிராசாவின் ஆதரவாளர்களிற்கும், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரனின் அணியினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு, பதற்றமான நிலைமை ஏற்பட்டது. காங்கேசன்துறையிலுள்ள கட்சி அலுவலகத்தில், காங்கேசன்துறை தொகுதி கிளை கூட்டம் நேற்று (27) மாலை இடம்பெற்றது. இதில் உரையாற்றிய மாவை சேனாதிராசா பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தினார். கட்சிக்குள்ளேயே தனக்கு எதிராக உறுப்பினர்கள் சதி செய்தார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். அத்துடன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் குழுவினர் தொடர்பாக காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். சுமந்திரன், சிறிதரன் மீது பல்வே…
-
- 14 replies
- 1k views
-
-
யாழ். மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல் Share on FacebookShare on Twitter நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. உடைந்து விழும் நிலையில் உள்ள அந்தக் கட்டடத்திற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நாடப்பட்டுள்ளமை காரணமாக அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2023/1326541
-
- 14 replies
- 1.3k views
-
-
TNAயின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக் கட்சியின் அமைச்சரவையே- நாளையஅமர்வை ஏனையகட்சிகள் பகிஸ்கரிக்குமா? http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97528/language/ta-IN/article.aspx அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு - சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ. - கடிதம் இணைப்பு GTMN Audio தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக்கட்சியின் அமைச்சரவையே. அதனை பங்காளிக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவு தொடர்பாக கூட்டமைப்பின் பேரினி விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பொய்யானது. …
-
- 14 replies
- 1.6k views
-
-
நாளுக்கு நாள் சிறிலங்கா படைகளினால் தமிழ் மக்கள் நூற்றுக்கணக்காக படுகொலை செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில், இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேசம் எங்கும் ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று, சர்வதேச சமூகத்தின் கண்டனங்கள் சிறிலங்கா அரசை நோக்கி திரும்பும் இவ்வேளையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பு ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பானை அனுப்பியுள்ளது. http://www.orunews.com/?p=3388#more-3388
-
- 14 replies
- 1.8k views
-
-
கொலன்னாவையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் அவரது உதவியாளர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் கூறினார். http://www.vanakkamnet.com/died/ துமிந்த சில்வா மீது துப்பாக்கிச் சூடு: வைத்தியசாலையில் அனுமதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் 10 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…
-
- 14 replies
- 1.8k views
-
-
குளவிகொட்டி 35 விமானப்படையினர் காயம் சிகிரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 86 பேர் காயமடைந்து சிகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டியவர்களில் 35 விமானப் படையினரும் அடங்குவர். - சங்கதி
-
- 14 replies
- 3.2k views
-
-
ராஜபக்ஷ ஆட்சியை மாற்றிய தேர்தலின் ஓராண்டு நிறைவு இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான புதிய ஆட்சிக்கு வழிவகுத்த ஜனாதிபதி தேர்தலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என்று பல தரப்பினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மகாத்மா காந்தியின் பேரனும் இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான கோபாலகிருஷ்ண காந்தி இன்றைய நிகழ்வில் முக்கிய பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். 'பிரபாகரனின் லட்சியம்' கோபாலக…
-
- 14 replies
- 907 views
-